RightClick

கிரகப்பெயர்ச்சியும் முன்னேற்பாடுகளும்


கடக மற்றும் மகர ராசி ஆன்மீகக்கடல் வாசகர்களே!உங்களுக்கு ஏழரைச்சனி(கடக ராசி),அஷ்டமச்சனி(மகர ராசி) முடிந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டன.இருந்தபோதிலும்,இதுவரை பெரும்பாலான கடகராசி மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நன்மையைச் செய்யவில்லை;ஆனால்,இன்னும் ஏழு மாதங்களில் சனிபகவான் கன்னிராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார்.சனிபகவானுக்கு மந்தன் என்றொரு பெயரும் உண்டு.ஆம்! மந்தமாக செயல்படுவதால் இவருக்கு இந்தப் பெயர் உண்டானது.ஒரு ராசியை இவர கடப்பதற்கு இரண்டரை ஆண்டுகள்(30 மாதங்கள்=900 நாட்கள்) எடுத்துக்கொள்ளுகிறார்.இன்று முதல் அடுத்த ஏழு மாதங்களுக்குள் கடகராசிக்காரர்கள் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலைப் பெறுவார்கள்.மகர ராசிக்காரர்களுக்கு கடந்த ஐந்துவருடங்களாக இருந்துவந்த மந்தமான நிலை மாறத்துவங்கும்;மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவரின் ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயிக்கும் பொறுப்பு சனி பகவானுக்கு மட்டுமே உண்டு.(நவக்கிரகங்கள் ஒருங்கிணைந்துதான் எந்த பலனையும் தருவார்கள் என்பது அனுபவம்)

இன்றுவரையிலும் எப்படித்தான் நாம் இந்த விலைவாசியில் உயிர்வாழ்வதோ? என்னுமளவுக்கு விரக்தியில் கடகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் இருந்துவருகின்றனர்.இந்த மந்த நிலை இன்று முதல் எந்த விநாடியும் மாறிவிடும்.உங்களது வயது,அனுபவம்,இருக்கும் திறமை,மன வலிமை,பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம்,கையிலிருக்கும் பணம் இவற்றைப் பொறுத்து உங்களது வேலை அல்லது தொழில் அமையும் என்பது நிச்சயம்.குருபகவான் மீன ராசிக்குப் பெயர்ச்சியாகி சில மாதங்களாகியும்,ஒரு சில ராசிக்காரர்களுக்கு மட்டுமே நல்ல பலன்களைத் தந்துள்ளார்.சனிபகவானின் ஏழாம் பார்வையில் குருபகவான் சிக்கியுள்ளதால்,குருவால் சுபமானப் பலன்களைத் தரமுடியவில்லை என்பதே நிஜம்.

அதே சமயம்,குருபகவான் இந்த முறையும் ஒரு வருடம் வரை மீனராசியில் இருக்கமாட்டார்.மே மாதம் முதல் வாரம்,தமிழ் மாதப்படி சித்திரை மாதம் இரண்டாம் வாரம் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகப்போகிறார்.இதனால்,கடந்த ஐந்துவருடங்களாக நொந்து நூடுல்ஸாகிப்போன சிம்ம ராசிக்காரர்களுக்கு கடும் நெருக்கடி நிலை நீங்கத்துவங்கும்;துலாம் ராசிக்காரர்களுக்கு விரையச்சனியின் கடுமை ஓரளவு குறையும்.மிதுன ராசிக்காரர்களுக்கு லாப குருவாக மாறுவதால், எல்லா விதமான சிக்கல்களிலிருந்து நீங்கி நிம்மதியடைவர்.ரிஷபராசிக்காரர்களுக்கு சுப விரையம் உருவாகும்.குருவின் பார்வையில் இருந்துவந்த கடக ராசி,கன்னிராசி,விருச்சிக ராசிக்காரர்களில் விருச்சிகம்,கன்னி ராசிக்காரர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.பணப்புழக்கத்தில் இதுவரை இருக்கும் சரளமான நிலை, மே மாதம் முதல் இருக்காது.விருச்சிக ராசிக்காரர்களுக்கு இரண்டாமிட ராகு எதிர்பாராத அவமானத்தை தரும்;சிலர் காவல் நிலையம் வரை செல்ல வேண்டியிருக்கும்.(செல்லாமலிருக்க இன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு தினமும் ஏதாவது ஒரு அம்மனை வழிபட்டு வரவேண்டும்.இதனால்,பெரியளவு பிரச்னைகள் வராமல் சுருங்கிவிடும்)2007 முதல் 2014 வரை வருடக் கிரகங்களான குரு,சனி,இராகு கேது மற்றும் மற்ற மாதக்கிரகங்களின் செயல்பாடுகள் வழக்கத்துக்கு மாறாக அமைந்துள்ளன.இதனால்,உலக நில அமைப்பு அடியோடு மாறப்போவது நிச்சயம்.இதுவரை லஞ்சம்,ஊழல்,ஏமாற்றுதல்,வட்டார உணர்வுகளைத் தூண்டி சுயநலமாக வாழ்ந்தவர்களுக்கு பேரழிவு ஏற்படுவது உறுதி.அன்புக்கு ஏங்கியவர்கள்,எல்லோருக்கும் உதவும் எண்ணம் உடையவர்கள்,பிறருடைய மனைவியை நோக்காதவர்கள்,காமரீதியான குற்றம் செய்யாதவர்கள்,அப்படிப்பட்டக் குற்றங்களைத் தடுத்தவர்கள் என தர்மத்தின் பிரதிநிதிகளுக்கு பொற்காலம் ஆரம்பமாகப்போகிறது.ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ