RightClick

உங்களது சிந்தனைக்கு


ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி?அந்த நாட்டு இளைஞர்கள் அவர்களுடைய தாய்மொழி இலக்கியங்களை படிக்காமல் பார்த்துக்கொள்;அதுபோதும்இந்த உரையாடல் நமது சுதந்திரத்துக்கு முன்பாக நடைபெற்றது.கேள்வி கேட்டவர் மான்மை தாங்கிய நமது மகாராஜாக்களில் ஒருவர்.பதிலளித்தவர் ஆங்கிலேயத் தளபதி.நாம் ஏன் ஜாதி ரீதியாகப் பிரிந்திருக்கிறோம்? நாம் ஏன் நமது கோவில் சொத்துக்கள் நமது அரசியல் வாதிகளால் சூறையாடப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்? நமது நகைச்சுவை நடிகர்கள் நமது பெருமதிப்புக்குரிய புராதனப்பண்பாட்டினை கேலி செய்தாலும்,அவமானப்படுத்தினாலும் சிரித்துவிட்டுப்போகிறோம்? என்று புரிகிறதா?நமது கல்வித்திட்டம் ஆங்கிலேயன் மெக்காலேயால் கொண்டுவரப்பட்ட சக்கையான கல்வித்திட்டம்.இந்த கல்வித்திட்டம் நம்மிடையே திமிர்பிடித்த,ஈகோ மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு நாட்டை உருவாக்கியிருக்கிறது.விளைவு?நம்மை ஆளுபவர்களில் ஒரு சிறந்த சுதேசத் தலைவர்கள் கூட இல்லை;?

விக்ருதி வருடத்தின்(14.4.2010 முதல் 13.4.2011) எஞ்சிய மைத்ர முகூர்த்த நாட்கள்

ஜோதிடத்தில் மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று உண்டு.இந்த நேரம் ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில்,ஒவ்வொரு நாளும் அதிக பட்சமாக இரண்டு மணிநேரம் வரை இந்த மைத்ரமுகூர்த்தம் இருக்கும்.இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பங்கினை,கடன் வாங்கியவரிடம் திருப்பி செலுத்த வேண்டும்.(வட்டியை இந்த நேரத்தில் கட்டக்கூடாது)அப்படி செலுத்தினால்,அதன்பிறகு,நமது கடன் எவ்வ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் வெகுவிரைவில் தீர்ந்துவிடும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மைத்ர முகூர்த்த நேரங்களை நமது ஆன்மீகக்கடல் வாசகர்கள் பயன்படுத்தி,அவர்களது மாபெரும் கடன்களை அடைத்துள்ளனர்.நமது தமிழ் வருடம் பிறக்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன.இந்த இரண்டு மாதங்களில் இருக்கும் மைத்ர முகூர்த்த நேரங்கள் வருமாறு:9.2.2011 புதன் காலை 10.45 முதல் 12.45 வரை24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் 1.39 வரை9.3.2011 புதன் காலை 9.01 முதல் 11.01 வரை24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் 11.45 வரை5.4.2011 செவ்வாய் காலை 6.46 முதல் 8.46 வரைஇந்த மைத்ர முகூர்த்த நேரங்கள் இந்தியா முழுவதற்கும்,இலங்கை,மாலத்தீவுகள்,அந்தமான் நிகோபார்,மொரிஷியஸ் தீவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

தை அமாவாசை 2.2.11 புதன்கிழமையைப் பயன்படுத்துங்கள்


ஜோதிடப்படி,அசுரர்களுக்குத் தெரியாமல் நான்கு வேதங்களை மகாவிஷ்ணு மறைத்துவைத்த ராசிகள் கடக ராசியும்,மகர ராசியும் ஆகும்.இங்கிருந்து இந்த ராசிகளுக்கு நாம் ராக்கெட்டில் பயணம் செய்தால் சுமார் 20,000 முதல் 90,000 வருடங்கள் ஆகும்.அதுவும் விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணித்தால்! இந்த விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் தூரம் என்பது ஒளி வேகம் ஆகும்.அவ்வளவு தூரத்தில் இந்த ராசிமண்டலங்கள் அமைந்திருக்கின்றன.

ஆடிமாதத்தில் நமது சூரியன் கடகராசியையும்,தை மாதத்தில் மகர ராசியையும் கடக்கும்.அப்படிக் கடக்கும்போது,ஆத்மாக்காரகனாகிய சூரியனும்,மனக்காரகனாகிய சந்திரனும் ஒன்று சேரும் நாட்களே ஆடி அமாவாசையும்,தை அமாவாசையும்.இந்த இரண்டு நாட்களிலும் நாம் நமது முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதால்,நாம் இந்தப்பிறவியில் நம்மையறியாமல் வர இருக்கும் பிரச்னைகள்,விபத்துக்கள்,அவமானங்களிலிருந்து தப்பிக்கலாம்.நம்மை அரூபமாக நமது முன்னோர்கள் (பித்ரு தர்ப்பணம் செய்வதால்)காப்பாற்றுவார்கள்.
எதிர்வரும் தை அமாவாசையானது 2.2.11 புதன் கிழமையன்று வருகிறது;அன்று நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்,சிவ மந்திரத்தின் பலனை முழுமையாகவும்,மிக அதிகமாகவும் பெறுவதற்கு முயல வேண்டும்.
ஒன்று:நமது ஊருக்கு அருகில் இருக்கும் கடலோரக் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.அது முருகன்,காளி,பெருமாள் என எந்தக் கோவிலாக இருந்தாலும் சரி;அதிகாலையிலேயே எழுந்து சூரியன் உதயமாகும் வேளையில் கடலில் நீராடியிருக்க வேண்டும்.சரியாக சூரியன் உதயமாகும் வேளையில் நாம் நமது மஞ்சள் துண்டு,ருத்ராட்சங்கள்,விபூதியோடு அந்த கடலோரக்கோவிலுக்குள் அமர்ந்து சிவமந்திரம் ஜபிக்க வேண்டும்.இதனால்,நமது ஜபத்தின் பலன் 1000 கோடி மடங்குகளாகப் பெருகும்.இந்த நாளில் நாம் காலை 5.45 முதல் 6.45 வரையிலும் கடலோர கோவிலுக்குள் அமர்ந்து ஜபிக்க வேண்டும்.(பலர் கோவிலுக்கு வருவார்களே? என்ன செய்வது?)கண்களை மூட வேண்டாம்.வேடிக்கை பார்ப்பது போல் கைகளுக்குள் ருத்ராட்சங்களை வைத்துக்கொண்டு,உதடு அசையாமல் ஜபித்துவருவது நல்லது.யாரிடமும் பேச வேண்டாம்.யாராவது பேசினால்,ஒரு புன்னகை செய்தால் போதுமானது.
ஒரு மணி நேரம் சிவமந்திரம் மந்திர ஜபம் முடிந்தப்பின்னர்,அந்த கோவில் மூலவரை வழிபட்டப்பின்னர்,கோவிலுக்கு வெளியே நம்மால் ஆன அன்னதானம் அல்லது உணவு(பழங்கள்/இனிப்பு)தானம் சிலருக்குச் செய்ய வேண்டும்.அதன் பிறகு,நாம் அங்கேயே நமது காலை உணவை முடிக்கலாம்;அல்லது நமது வீட்டிற்குத் திரும்பிவந்தும் காலை உணவை முடிக்கலாம்.

கடலோரக்கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள்,அருகிலிருக்கும் மலைக்கோவிலுக்குச் சென்று இதேபோல செய்யலாம்.(நமதுவீட்டில் குளித்துவிட்டுச் சென்று மலைக் கோவிலுக்குச் சென்று)ஒரு மணி நேரம் மந்திர ஜபம் செய்யலாம்.விடிகாலையில் இப்படி செய்ய முடியாதவர்கள்,அன்று 2.2.11 புதன் கிழமையன்று ஏதாவது ஒரு மணிநேரத்தில் மேற்கூறியதுபோல் சிவமந்திரம் ஜபிக்கவும்.

விடுமுறையும் எடுக்க முடிந்து,ஓரளவு பணமும் வைத்திருப்போர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் சித்தர்களின் வீடாகிய சதுரகிரிக்கு அல்லது சித்தர்களின் கோவிலாகிய (விழுப்புரம் அருகிலிருக்கும் திருவண்ணாமலை மாவட்டம்) திருவண்ணாமலைக்கு அல்லது சித்தர்களின் தவச்சாலையாகத் திகழும் வேலூர் அருகில் இருக்கும் பர்வத மலைக்கு செல்லுங்கள்.அங்கே இதேபோல் சிவமந்திரம் மந்திரஜபம் செய்யுங்கள்.முடிந்தால் மூன்று மணி நேரம் வரை சிவமந்திரம் ஜபிக்க அடுத்த சில நாட்கள் அல்லது சில வாரங்களில் உங்களது நீண்ட நாள் சிக்கலான பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும் என்பது உறுதி.

திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றுகொண்டே நமது ஓம்அருணாச்சலாய நமஹ ஜபிக்கலாம்.தை அமாவாசை என்பதால் அன்றிரவு திருஅண்ணாமலைக்கு உங்களது ருத்ராட்சங்களோடு வந்து இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு (ஐந்துமுக)ருத்ராட்சங்களை மடக்கியவாறு மாலை  6 மணிக்கு மேல் அண்ணாமலையின் கிழக்குக் கோபுரவாசலில் இருக்கும் தேரடி முனீஸ்வரர் கோவிலில் இருந்து,அவரைவணங்கி,அனுமதி கேட்டு கிரிவலம் புறப்படலாம்.ஒரு முறை கிரிவலம் முடிக்க ஆறு மணி நேரம் ஆகும்(இரவு என்பதால் ஐந்து மணி நேரம் ஆகும்)

ஆக,தை அமாவாசையில் திருஅண்ணாமலை கிரிவலம் ஓம்அருணாச்சலாய நமஹ என ஜபித்தவாறு செல்லுவதே
மிகவும் சுலபமானது;சிறப்பானது.திரு அண்ணாமலை கிரிவலத்தை பூதநாராயணப்பெருமாள் கோவிலில் முடிக்க வேண்டும்.

இவற்றில் எதுவும் செய்ய இயலாதவர்கள்,உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்துக்கு (காலையிலோ,மாலையிலோ,இரவிலோ)சென்று சிவமந்திரம் ஒரு மணிநேரம் ஜபித்துவரலாம்.இதுவும் முடியாதவர்கள்,உங்களின் வீட்டின் மாடியில் தை அமாவாசை அன்று இரவு ஏதாவது ஒரு மணிநேரத்துக்கு(மொட்டை மாடியாக இருந்தாலும்) சிவமந்திரம் ஜபித்துவருக!! அளவற்ற சிவ ஆசிர்வாதம் பெறுக!!!


பெண்களால் கெட்ட பெயர் வராமலிருக்க ஒரு சுலபப் பரிகாரம்

மிகச் சிறந்த மனைவி அமைய செய்ய வேண்டிய வழிபாடு


உங்கள் ஊரில் இருக்கும் ஆலயத்தில் கன்னிமார் சந்நிதி இருக்கும்.அந்த கன்னிமார்களுக்கு 27 வளர்பிறை ஏகாதசி திதிகளில் தொடர்ந்து நெய்விளக்கேற்றி வணங்கி வர வேண்டும்.இதனால்,மிகச்சிறந்த மற்றும் யோகமான மனைவி அமைவார்.கிராமங்களில் கன்னிமார் ஆலயம் காட்டுப்பகுதிகளில் இருக்கும்.நகரங்களில் உள்ள சிவாலயங்களில் கன்னிமார்கள் சந்நிதி இருக்கும்.


பெண்களால் எந்த நிலையிலும் கெட்ட பெயர் வராமலும்,அழிவுகள்,விரையங்கள் வராமலும் இருக்க நினைப்பவர்கள் 27 வளர்பிறை ஏகாதசி திதியில் கன்னிமார்கள் சந்நிதிக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி வணங்கி வழிபட்டு வரவேண்டும்.இதனால்,பெண்களால் கெட்டபெயர் வராது.அழிவுகளும் வராது.நன்றி;பால ஜோதிடம் பக்கம் 16,4.1.2010.

ஜனன ஜாதகத்தில் மாந்தி
உங்களுடைய ஜனன ஜாதகத்தில் (ஆண்,பெண் அனைவருக்கும்) லக்னத்துக்கு 2,5,8,11 போன்ற இடங்களில் மாந்தி இருந்தால்,நீங்கள் இந்தப்பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்களின் பலன்களை அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டும்.உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1,4,7,10 ஆம் இடங்களில் மாந்தி இருப்பின்,இப்பிறவியில் நீங்கள் பல சந்தர்ப்பத்தில் தெரிந்தே பல தவறுகள் செய்வீர்கள்;அதே சமயம் அப்படி செய்யும் தவறுகளுக்கான தண்டனையை உடனுக்குடன் அல்லது ஏழரைச்சனி அல்லது அஷ்டமச்சனி சமயத்தில் அனுபவிக்க வேண்டும்.கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கான பரிகாரம்

உங்களது பிறந்த ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் ராகு கேதுக்களுக்கு இடையில் சிக்கி,கடிகாரச் சுற்றுப்படி அனைத்துக்கிரகங்களும் கேதுவை நோக்கிச் சென்றால் அது கால சர்ப்ப தோஷம் ஆகும்.சிலருக்கு இப்படி இருந்தாலும் ஏதாவது ஒரே ஒரு கிரகம் சிக்காமல் இருக்கும்;ஜோதிட அனுபவத்தில்,இப்படி இருந்தாலும்,அது கால சர்ப்ப தோஷமே.இப்படிப்பட்ட கிரக நிலையில் பிறந்தவர்கள்,31 வயது வரையிலும் யாரிடம் எப்படிப் பேச வேண்டும்? எங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ற அணுகுமுறை தெரியாது.32 முதல் 36 வயதிலிருந்துதான் இந்த அணுகுமுறை வளரும்;அதன் பிறகே இவர்களுக்கு வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படத்துவங்கும்.லக்னத்துக்கு 2 இல் ராகு அல்லது கேது,லக்னத்துக்கு 8 இல் கேது அல்லது இராகு,இராகு திசை அல்லது கேது திசை இருப்பவர்களும் பின்வரும் பரிகார வழிபாடு செய்தால் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரில் கி.பி.1881 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட நாகநாத சிவன் கோவில் இருக்கிறது.இத்திருத்தலத்தில் சர்ப்ப தோஷப்பரிகாரத்திற்காக ரிஷபாருடராகக் காட்சி தருகின்றார்கள் ராகுவும் கேதுவும்.

புதுக்கோட்டையிலிருந்து நமன சமுத்திரம் வழியாக பொன்னமராவதி செல்லும் வழியில் பத்தாவது கிலோ மீட்டரில் பேரையூர் இருக்கிறது.இந்த திருத்தலத்திற்குச் சென்று அங்குள்ள குளத்தில் நீராட வேண்டும்.நீராடியபிறகு ஈர உடைகளை கால் வழியாக கழற்றி அங்கேயே போட வேண்டும்.தலைக்கு மேல் ஈர ஆடைகளைக் கொண்டு வரக்கூடாது;அதன்பிறகு அக்கோவிலில் காட்சி தரும் ரிஷபாரூடருக்கு அபிஷேகம் செய்து,பரிகாரம் செய்ய வேண்டும்.இதனால்,தோஷம் நீங்கிவிடும்.

முகவரி:நாக நாத சிவன் கோவில்,பேரையூர்,சிவபுரம் (வழி)622422.ஓதுவார் கமிட்டி செல்:9443999037.

போன்:04333 277497.நன்றி:பால ஜோதிடம் பக்கம் 3,13.4.2009.

சதுரகிரியில் இருக்கும் மூலிகைகள்


வெட்டுப்பட்ட காயங்களை உடனே சீர்படுத்த அடுகள்ளி,தொடுகள்ளி என்ற மூலிகைகள் சதுரகிரியில் மட்டுமே காணப்படுகின்றன.(கொல்லிமலையில் இருக்கலாம்).சர்ப்ப கந்தி என்ற மூலிகையும் இங்கு காணக்கிடக்கிறது.பாம்பின் விஷத்தை உடனே முறிக்கும் சக்தியுடைய இம்மூலிகையை நமது வீட்டின் புழக்கடையில் வளர்ப்பதால் அந்த இடத்துக்கு பாம்பு வராது.அலைபாயும் மனத்தை ஒருமுகப்படுத்திட சர்ப்ப கந்தி மூலிகையின் விதை,பழம்,இலை இவற்றில் ஏதாவது ஒன்றை உட்கொண்டு சமாதிநிலை வரை போகமுடியும்.இதைப் பயன்படுத்தும் ரகசியத்தை சித்தர்கள் தமது சீடர்களுக்கு உபதேசித்துள்ளனர்.முண்டக விருட்சம் என்ற மூலிகை மரமும் சதுரகிரி வனப்பகுதியில் இருக்கிறது.இதன் அடியில் நாம் அமர்ந்தால் நமக்கு எத்தனை நாள் ஆனாலும் பசி,தாகம் எதுவும் எப்போதும் ஏற்படாது.சித்தர்கள் இந்த உலகை விட்டு நீங்க உதவும் சூட்சும பாதையாக இந்த மரத்தை இன்றும் பயன்படுத்திவருகின்றனர்.ஜோதி விருட்சம் என்றொரு மரம் இங்கு இருக்கிறது.இதுபற்றி பல ஜோதிட இதழ்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.பகலில் சாதாரணமாகக் காட்சி தரும் இந்த மரம் இரவில் ஒளி வீசும் தன்மை உடையது.இதிலிருந்து வடியும் பாலுக்கும் ஒளிவிடும் தன்மையுள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறோம்.(குருபலம் இருந்தால் மட்டுமே இதை பார்க்க முடியும்).இந்த மரத்தின் பாலை ஒரு தேக்கரண்டி வீதம் 3 நாள் 3 வேளை உட்கொண்டால் இதன் வீர்யம் தாங்காமல் நம் உடல் மூர்ச்சை அடைந்து விடும்.அதேசமயம் பசுவின் பாலை புகட்டிவந்தால்,மயக்கம் தெளிந்துவிடும்.நன்றிகள்:சதுரகிரி இலவச மாத இதழ்,பக்கம் 12,13;தை2011.

ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்
ருத்ராட்சத்தை வாங்கும் மனிதர்கள் யாராக இருந்தாலும்,அதை கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும்;அணிந்தப்பின்னர்,அதை ஒரு போதும் கழற்றக்கூடாது.அப்படிக் கழற்றினால் அது பாவத்தைத் தரும்.சரி! ருத்ராட்சம் அணிந்துகொண்டு காம ரீதியான நடவடிக்கையில் ஈடுபடலாமா?அப்படி ஈடுபட்டால் அது பாவம் கிடையாதா?நிச்சயமாகக் கிடையாது.மனிதனது வழக்கமான நடவடிக்கைகளில் ஒரு பகுதியே காம நடவடிக்கைகளும்.காமமே தவறு எனில்,கடவுள் நம்மையெல்லாம் படைத்ததே தவறுதானே?ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவது மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.ஆண்கள் தொண்டைக்குழியில் ருத்ராட்சம் இருப்பதுபோல், கழுத்தில் ருத்ராட்சம் கட்டுவது நல்லது.இதனால்,ஆண்களின் ஆண்மை சக்தி அதிகரிக்கும்;ஆண்மைக்குறைவு குறைந்து விந்து கெட்டிப்படுதல் அதிகரிக்கும்;நினைவாற்றல் அதிகரிக்கும்.பிறந்த குழந்தை முதல் 100 வயது பாட்டி வரை யார் வேண்டுமானாலும்,எவர் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாம்.கர்ப்பிணிகள்,உடல் ஊனமுற்றோர்கள்,நோயாளிகள்,மன நிலை பாதித்தவர்கள் என யாரும் ருத்ராட்சம் அணியலாம்.அவர்களுக்கும் ருத்ராட்சம் வாங்கித் தாருங்கள்.வாங்கித் தருவது முக்கியமல்ல;அவர்கள் எக்காரணம் கொண்டும் அணிந்த ருத்ராட்சத்தைக் கழற்றக்கூடாது.இது ரொம்ப முக்கியம்.உங்கள் ஊரில் இருக்கும் காதி பவன்களில்/துறவிகள் வாழும் ஆசிரமங்களில்/மகான்களிடம் வாங்குங்கள்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

துவாதசி திதி வரும் நாட்களும்,அண்ணாமலை அன்னதானமும்
கலிகாலத்தில் வாழும் நாம் மற்றும் நமது முன்னோர்களின் புண்ணியங்களையும் பாவங்களையும் சேர்த்தேதான் நமது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கிறோம்.அதேசமயம்,பல வம்சவளியில் ஏதாவது ஒரு நோய் அல்லது கடன் அல்லது குடும்பப்பிரிவினை அல்லது திருமணம் ஆகாமலிருப்பது என ஏதாவது ஒரு கடுமையான கர்மம் நம்மை சோகத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது.இப்படிப்பட்ட கடுமையான கர்மங்களை இந்த கலியுகத்தில் நீக்கும் சக்தி அன்னதானத்திற்கும்,மந்திர ஜபத்திற்கும் மட்டுமே உண்டு..நமது சொந்த ஊரில் அன்னதானம் செய்தாலே நமது கர்ம வினைகள் படிப்படியாக குறையத்துவங்கும்;அன்னதானத்திலேயே மிகவும் உயர்வானது அண்ணாமலை அன்னதானம் ஆகும்.அந்த அண்ணாமலை அன்னதானத்தை துவாதசி திதி ஒரே ஒரு முறை செய்து நமது கர்மவினைகளை ஒரே தடவையில் நீக்கவே எனது தமிழ்மக்களுக்காக இந்த ஜோதிடக்கட்டுரை!காசியில் ஒருவருக்கு இடப்படும் அன்னதானமானது மற்ற இடங்களில் ஒரு லட்சம் பேர்களுக்கு அளிக்கப்படும் அன்னதானத்தை விட உயர்வானது;ஆனால்,திருஅண்ணாமலையில் ஏழை ஒருவனுக்கு (சாதாரண நாளில்) அளிக்கப்படும் அன்னதானமானது காசியில் ஒரு கோடி பேர்களுக்கு அளித்த அன்னதானத்தை விட உயர்வானது;அதிலும் துவாதசி திதியன்று திருஅண்ணாமலையில் ஒருவர் அன்னதானம் செய்தால்,அன்னதானம் செய்தவர் தனது வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறார்.இதனால்,அன்னதானம் செய்தவருக்கு மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும் என சிவமகாபுராணத்தின் வித்யாசார சம்ஹிதை விவரிக்கிறது.கர வருடத்தில்(14.4.2011 முதல் 13.4.2012 வரை) வர இருக்கும் துவாதசி திதி நாட்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.உங்களுக்கு வசதியான துவாதசி நாளில்,தமிழ்நாடு மாநிலம்,சென்னை அருகிலிருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரமாகிய திருஅண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரையும்,உண்ணாமலையம்மாளையும் தரிசித்து,கிரிவலம் சென்று,கிரிவலப்பாதையில் வாழும் துறவிகளுக்கு அன்னதானம் செய்து சுபிட்சம் பெறுக!!!


14.4.2011 வியாழன் மாலை6.27 முதல் 15.4.2011 வெள்ளி மாலை 4.10 வரை29.4.2011 வெள்ளி முழுவதும்13.5.2011 வெள்ளி நள்ளிரவு(சனி விடிகாலை) 2.38 முதல் 14.5.2011 சனி இரவு 12.13 வரை28.5.2011 சனி இரவு 9.58 முதல் 29.5.2011 ஞாயிறு இரவு 11.48 வரை12.6.2011 ஞாயிறு முழுவதும்27.6.2011 திங்கள் மதியம் 1 முதல் 28.6.2011 செவ்வாய் மதியம் 2.12 வரை11.7.2011 திங்கள் மாலை 5.28 முதல் 12.7.2011 செவ்வாய் மதியம் 3.42 வரை27.7.2011 புதன் முழுவதும்10.8.2011 புதன் முழுவதும்25.8.2011 வியாழன் மதியம் 2.22 முதல் 26.8.2011 வெள்ளி மதியம் 1.43 வரை8.9.2011 வியாழன் மதியம் 12.31 முதல் 9.9.2011 வெள்ளி மதியம் 12.27 வரை24.9.2011 சனி முழுவதும்8.10.2011 சனி முழுவதும்23.10.2011ஞாயிறு காலை 11.22 முதல் 24.10.2011 திங்கள் காலை 9.20 வரை6.11.2011 ஞாயிறு மாலை 6.19 முதல் 7.11.2011 திங்கள் இரவு 8.08 வரை22.11.2011 செவ்வாய் முழுவதும்6.12.2011 செவ்வாய் மதியம் 1.06 முதல் 7.12.2011 புதன் மதியம் 3.13 வரை21.12.2011 புதன் காலை 7.44 முதல் இன்று முழுவதும்5.1.2012 வியாழன் காலை 8.45 முதல் 6.1.2012 வெள்ளி காலை 10.28 வரை19.1.2012 வியாழன் மாலை 6.39 முதல் 20.1.2012 வெள்ளி மாலை 4.44 வரை4.2.2012 சனி முழுவதும்18.2.2012 சனி முழுவதும்4.3.2012 ஞாயிறு இரவு 7.25 முதல் 5.3.2012 திங்கள் இரவு 7.09 வரை18.3.2012 ஞாயிறு மாலை 6.46 முதல் 19.3.2012 திங்கள் மாலை 6.26 வரை3.4.2012 செவ்வாய் காலை 8.32 முதல் 4.4.2012 புதன் காலை 7.18 வரை

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

கிரகப்பெயர்ச்சியும் முன்னேற்பாடுகளும்


கடக மற்றும் மகர ராசி ஆன்மீகக்கடல் வாசகர்களே!உங்களுக்கு ஏழரைச்சனி(கடக ராசி),அஷ்டமச்சனி(மகர ராசி) முடிந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டன.இருந்தபோதிலும்,இதுவரை பெரும்பாலான கடகராசி மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நன்மையைச் செய்யவில்லை;ஆனால்,இன்னும் ஏழு மாதங்களில் சனிபகவான் கன்னிராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார்.சனிபகவானுக்கு மந்தன் என்றொரு பெயரும் உண்டு.ஆம்! மந்தமாக செயல்படுவதால் இவருக்கு இந்தப் பெயர் உண்டானது.ஒரு ராசியை இவர கடப்பதற்கு இரண்டரை ஆண்டுகள்(30 மாதங்கள்=900 நாட்கள்) எடுத்துக்கொள்ளுகிறார்.இன்று முதல் அடுத்த ஏழு மாதங்களுக்குள் கடகராசிக்காரர்கள் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலைப் பெறுவார்கள்.மகர ராசிக்காரர்களுக்கு கடந்த ஐந்துவருடங்களாக இருந்துவந்த மந்தமான நிலை மாறத்துவங்கும்;மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவரின் ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயிக்கும் பொறுப்பு சனி பகவானுக்கு மட்டுமே உண்டு.(நவக்கிரகங்கள் ஒருங்கிணைந்துதான் எந்த பலனையும் தருவார்கள் என்பது அனுபவம்)

இன்றுவரையிலும் எப்படித்தான் நாம் இந்த விலைவாசியில் உயிர்வாழ்வதோ? என்னுமளவுக்கு விரக்தியில் கடகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் இருந்துவருகின்றனர்.இந்த மந்த நிலை இன்று முதல் எந்த விநாடியும் மாறிவிடும்.உங்களது வயது,அனுபவம்,இருக்கும் திறமை,மன வலிமை,பிரச்னைகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம்,கையிலிருக்கும் பணம் இவற்றைப் பொறுத்து உங்களது வேலை அல்லது தொழில் அமையும் என்பது நிச்சயம்.குருபகவான் மீன ராசிக்குப் பெயர்ச்சியாகி சில மாதங்களாகியும்,ஒரு சில ராசிக்காரர்களுக்கு மட்டுமே நல்ல பலன்களைத் தந்துள்ளார்.சனிபகவானின் ஏழாம் பார்வையில் குருபகவான் சிக்கியுள்ளதால்,குருவால் சுபமானப் பலன்களைத் தரமுடியவில்லை என்பதே நிஜம்.

அதே சமயம்,குருபகவான் இந்த முறையும் ஒரு வருடம் வரை மீனராசியில் இருக்கமாட்டார்.மே மாதம் முதல் வாரம்,தமிழ் மாதப்படி சித்திரை மாதம் இரண்டாம் வாரம் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகப்போகிறார்.இதனால்,கடந்த ஐந்துவருடங்களாக நொந்து நூடுல்ஸாகிப்போன சிம்ம ராசிக்காரர்களுக்கு கடும் நெருக்கடி நிலை நீங்கத்துவங்கும்;துலாம் ராசிக்காரர்களுக்கு விரையச்சனியின் கடுமை ஓரளவு குறையும்.மிதுன ராசிக்காரர்களுக்கு லாப குருவாக மாறுவதால், எல்லா விதமான சிக்கல்களிலிருந்து நீங்கி நிம்மதியடைவர்.ரிஷபராசிக்காரர்களுக்கு சுப விரையம் உருவாகும்.குருவின் பார்வையில் இருந்துவந்த கடக ராசி,கன்னிராசி,விருச்சிக ராசிக்காரர்களில் விருச்சிகம்,கன்னி ராசிக்காரர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.பணப்புழக்கத்தில் இதுவரை இருக்கும் சரளமான நிலை, மே மாதம் முதல் இருக்காது.விருச்சிக ராசிக்காரர்களுக்கு இரண்டாமிட ராகு எதிர்பாராத அவமானத்தை தரும்;சிலர் காவல் நிலையம் வரை செல்ல வேண்டியிருக்கும்.(செல்லாமலிருக்க இன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு தினமும் ஏதாவது ஒரு அம்மனை வழிபட்டு வரவேண்டும்.இதனால்,பெரியளவு பிரச்னைகள் வராமல் சுருங்கிவிடும்)2007 முதல் 2014 வரை வருடக் கிரகங்களான குரு,சனி,இராகு கேது மற்றும் மற்ற மாதக்கிரகங்களின் செயல்பாடுகள் வழக்கத்துக்கு மாறாக அமைந்துள்ளன.இதனால்,உலக நில அமைப்பு அடியோடு மாறப்போவது நிச்சயம்.இதுவரை லஞ்சம்,ஊழல்,ஏமாற்றுதல்,வட்டார உணர்வுகளைத் தூண்டி சுயநலமாக வாழ்ந்தவர்களுக்கு பேரழிவு ஏற்படுவது உறுதி.அன்புக்கு ஏங்கியவர்கள்,எல்லோருக்கும் உதவும் எண்ணம் உடையவர்கள்,பிறருடைய மனைவியை நோக்காதவர்கள்,காமரீதியான குற்றம் செய்யாதவர்கள்,அப்படிப்பட்டக் குற்றங்களைத் தடுத்தவர்கள் என தர்மத்தின் பிரதிநிதிகளுக்கு பொற்காலம் ஆரம்பமாகப்போகிறது.ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

உங்களின் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை


மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.உதாரணமாக,நான் சிவக்குமார் என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியுள்ளேன் என்று வைத்துக்கொள்வோம்.கடன் வாங்கி நான்கு வருடங்களாகிவிட்டன;வட்டி மட்டுமே கட்ட முடிகிறது.அசலை எப்போதுதான் கட்டுவது? என்ற பயமே வந்துவிட்டது.கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரம் ஒன்றில் நான் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தர வேண்டும்.அதாவது சிவக்குமாரிடம் ரூ.5000/-ஐ ஒரு முறை அசலாக திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே ஒரு முறை திருப்பித் தந்தாலே,அதன்பிறகு,அந்தக் கடன் அடியோடு,முழுமையாக தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது ஆன்மீகக்கடலில் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தினை கணித்து வெளியிட்டுள்ளோம்.இதைப் பயன்படுத்தி,கடனிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 637.20.4.2011 புதன் இரவு 7.30 முதல் 9.3030.4.2011 காலை 6 முதல் 7,காலை 11 முதல் 1,மாலை 5 முதல் 7 வரையிலும்.1.5.2011 ஞாயிறு காலை 5.11 முதல் 7.1117.5.2011 செவ்வாய் இரவு 7.35 முதல் 8.00 வரை18.5.2011 புதன் மாலை 6.01 முதல் 6.40 வரை14.6.2011 செவ்வாய் மாலை 4.43 முதல் 6.43 வரை22.7.2011 வெள்ளி இரவு 11.36 முதல் நள்ளிரவு 1.36 வரை8.8.2011 திங்கள் மதியம் 12.45 முதல் 2.45 வரை19.8.2011 வெள்ளி இரவு 10 முதல் 12 வரை4.9.2011 ஞாயிறு காலை 11.05 முதல் 1.05 வரை16.9.2011 வெள்ளி இரவு 8.05 முதல் 10.05 வரை2.10.2011 ஞாயிறு காலை 9.09 முதல் 10.38 வரை12.10.2011 புதன் இரவு 7.57 முதல் 8.30 வரை29.10.2011 சனி காலை 7.02 முதல் 9.02 வரை9.11.2011 புதன் மாலை 4.12 முதல் 6.12 வரை25.11.2011 வெள்ளி மாலை 5.40 முதல் 7.40 வரை6.12.2011 செவ்வாய் மதியம் 2.40 முதல் 4.40 வரை23.12.2011 வெள்ளி காலை 5.50 முதல் 7.50 வரை3.1.2012 செவ்வாய் மதியம் 1.45 முதல் 3.45 வரை30.1.2012 திங்கள் காலை 11.05 முதல் மதியம் 1.05 வரை26.2.2012 ஞாயிறு காலை 9 முதல் 11 வரை27.2.2012 திங்கள் காலை 9.04 முதல் 10.04 வரை13.3.2012 செவ்வாய் இரவு 10.10 முதல் 12.10 வரை25.3.2012 ஞாயிறு காலை 7.10 முதல் 9.10 வரை9.4.2012 திங்கள் இரவு 8.30 முதல் 10.30 வரைஇந்த நேரங்கள் அனைத்தும் தென் இந்தியா மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டுமே பொருந்தும்.அட்லீஸ்ட்,நாம் வாங்கிய கடனை திருப்பித் தரப்படும் இடம் மேற்கூறிய பகுதிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும்.ஒரே நபர் பலரிடம் கடன் வாங்கியிருந்தால்,தனித்தனியாக அசலைத் தர முயல வேண்டும்.அப்படித் தரும்போது வட்டியைத் தரக்கூடாது.அசலில் பத்தில் ஒரு பங்கு அல்லது நூற்றில் ஒரு பங்கு அல்லது ஆயிரத்தில் ஒரு பங்கினைத் திருப்பித்தரவேண்டும்.அப்படி திருப்பித்தந்து,அசலில் வரவு வைக்க வேண்டும்.இது முக்கியம்.

முயலுங்கள்;கடன் இல்லாமல் நிம்மதியாக வாழுங்கள்;

உங்களுக்கு ஆன்மீகக்கடல் எப்போதும் துணை நிற்கும்.ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

மந்திரங்களை எப்போதெல்லாம் ஜபிக்கலாம்?
மந்திரங்கள் எதுவாக இருந்தாலும்,உடல் சுத்தத்துடன் ஜபிப்பது அவசியம்.வாய் விட்டுச் சொல்லுவதை விட, மனதுக்குள் சொல்லுவது/ ஜபிப்பதே நன்று.ஏனெனில்,மனதுக்குள் ஒரு மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்த உடனேயே மனமானது ஒரே கவனத்தில் குவிய ஆரம்பித்துவிடுகிறது.சரி மந்திரங்களை ஜபிக்கும் நாட்களில் தாம்பத்யம் கொள்ளலாமா?காம நடவடிக்கைகளில் ஈடுபடலாமா?தாராளமாக! ஆனால்,மந்திரம் ஜபிக்கும் நேரத்தில் மட்டும் உடல் சுத்தமாக இருக்க வேண்டும்.காம நடவடிக்கைகள் மனிதனின் வழக்கமான நடவடிக்கைகள்.உடல் சுத்தமில்லாமல் மந்திர ஜபம் செய்யும்போது பாவம் சேர்வதோடு,அந்த ஜப எண்ணிக்கை குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தொட்டதும் மாபெரும் விபத்து,காயம்,மன நிலை பாதித்தல் ஏற்படுகிறது.இதேபோலத்தான் அசைவம் சாப்பிடுவதும்.அசைவம் சாப்பிட்டப்பின்னர் அன்று முழுவதும் எந்த மந்திரமும் ஜபிக்காமல் இருப்பது கட்டாயம்.மீறினால்,ஏடாகூடமாக ஏதாவது நிகழும்.எச்சரிக்கை:மனிதர்கள் வாழும் இந்த பூமியில் ஏழு கோடி மந்திரங்கள் மனிதர்களின் மத்தியில் புழங்குகின்றன.இவற்றில் பல மந்திரங்களை ஒரே ஒரு முறை ஜபிப்பதற்கே ஆயுள் முழுவதும் (ஜபிப்பவர்) பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும்.இந்த மந்திரங்கள் தற்போது காட்டுக்குள் வாழும் மகான்களிடம் மட்டுமே இருக்கின்றன.ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

த‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: காஞ்சி காமாட்சி அம்மனை எந்த மாதிரியான சிக்கல்கள் தீர வழிபடலாம்?
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: காமாட்சி அம்மன் பொதுவாக குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்யம், ஒருத்த‌ர் ஒருத்தரு‌க்கு இடையே வேறுபாடுகளை மறப்பது, கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையை உண்டாக்கக் கூடிய அம்பாள் காமாட்சி அம்மன்.

எவ்வளவோ பேர்களை, பிரிந்திருந்தவர்களை காஞ்சி காமாட்சி அம்மனிடம் போய்விட்டு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன். விவாகரத்து ஆன கணவன், மனைவியைக் கூட காமாட்சி அம்மன் கோயிலிற்குப் போய் வாருங்கள் என்று சொன்னேன். விவாகரத்து வாங்கிவிட்ட பிறகு எப்படி ஒன்றாகப் போவது என்று கேட்டார்கள். ஆண்டவனுக்கு ஒரு வேண்டுதல் என்று சொல்லிவிட்டுப் போய் வணங்கிவிட்டு வாருங்கள் சில சாதகமான நிகழ்வுகள் நடக்கும் என்று சொன்னேன்.வணங்கிவிட்டு வெளியே வந்தபிறகு, நாம் ஏன் சேர்ந்து வாழக்கூடாது என்று கணவன் கேட்க, நானும் அதைத்தான் நினைத்தேன் என்று மனைவி சொல்ல, அம்பாள் ஏதோ சொன்ன மாதிரி இருந்தது. நமக்குள்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறதே என்று மனைவி சொல்ல, இல்லை அதையெல்லாம் நான் மறந்துவிட்டேன் கணவன் சொல்லியிருக்கிறேன். இதுபோன்றெல்லாம் பார்க்கிறோம். குடும்பம் அமைதியாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். அந்த குடும்ப அமைதிக்கு காஞ்சி காமாட்சி அம்மன் மாதிரி ஒரு சாத்வீகத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய ஒரு அம்மனே கிடையாது.அதற்கடுத்து தனதான்ய சமர்த்து. ஏனென்றால் ஸ்ரீசக்கரம் பிரதோஷ்டம் செய்திருக்கிறார்கள். ஆதிசங்கரர்தான் செய்து வைத்தார். ஸ்ரீ என்பது லட்சுமியின் அம்சம். அதனால் மிகவும் விசேஷமானது. வாராக் கடன்கள் வர ஆரம்பிக்கும். இந்த அம்மனுடைய கண்களில் தீட்சாயனம், தீர்க்கம் பார்க்கலாம். அவர் உட்கார்ந்திருக்கும் வடிவமே பத்மாசன வடிவம். ஆசனங்களிலேயே முக்கியமான ஆசனம் பத்மாசனம். அந்த பத்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதால்தான் கேட்டது கிடைக்கும். எது நியாயமானதே அதை உடனே கொடுக்கக் கூடிய அம்பாள்.அதற்கடுத்தது, அம்பாளுக்கு வலப்பக்கமாக இன்னொரு அம்பாள் தவக் கோலத்தில் இருக்கிறார்கள். நின்ற நிலையில், ஒன்றைக்காலில் ஒரு அம்மா தவம் செய்கிறார்கள். அதனால்தான் அந்த அம்பாளுக்கு எல்லா சக்தியும் உண்டு என்று சொன்னது. மற்றொரு பக்கம் இடப்பக்கத்தில் பார்த்தீர்களென்றால் அரூபமாக லட்சுமியும் இருக்கிறார்கள். பக்கத்தில் அன்னபூரணி, அதற்கும் மேலே சரஸ்வதி இருக்கிறார். இதுபோல பல சக்தி பீடங்கள் காமாட்சி அம்மனை சுற்றி இருக்கிறது.சிவாலயங்களில் பார்த்தீர்களானால், தில்லை நடராஜர் கோயிலிற்குப் போனால் எல்லா சிவாலயங்களுக்கும் போன நன்மை உங்களுக்கு கிடைக்கும். அதேபோல, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிற்குக் போனால் அனைத்து அம்பாள் சன்னதிக்கும் போன பலன் உங்களுக்குக் கிடைக்கும். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த ஒரு அம்மன்.காமாட்சி அம்மனுக்கு விருத்தம் இருக்கிறது. அதில் உருகி உருகி பாடியிருக்கிறார்கள். அந்த விருத்தத்தில் ஒரு பாடலையாவது பாடி வழிபட்டால் அது இன்னமும் விசேஷமாக இருக்கும். இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தாலும் விசேஷம். சகல நலன்களும் உண்டாகும்

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத் தடை!

உயிர்க் கொல்லியான கொடிய புற்று நோயை தோற்றுவிக்கக் கூடிய இரசாயனக் கலவை சேர்க்கப் பட்டிருப்பதை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஹெட் & ஷோல்டர் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு கத்தார் அரசாங்கம் தடைவிதித் துள்ளது. அத்துடன் இந்த தடை தற்காலிகமானதல்ல, அது நீடிக்கும் என்றும் கத்தார் சுற்றுச் சூழல் அமைச்சக ஆய்வுக் கூட பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ஸைஃப் அல் குவைரி தெளிவுபட கூறியுள்ளார்.
ப்ராக்டர் அண்டு கேம்பிள் நிறுவன தயாரிப்பான இருவகை ஹெட் & ஷோல்டர் ஷாம்பூக்களில் புற்று நோயை உண்டு பண்ணக் கூடிய “டயோக்சைடு” எனும் இரசாயனப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் கத்தார் நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது.அழகு சாதனங்களின் மீதான மக்களின் மோகத்தை மூலதன மாக்கி நுகர்வோரை ஈர்க்கும் நோக்கில், சகல விதமான தார்மீக நெறிமுறைகளையும் மீறி & அபாய கரமான பின்விளைவுகளை பற்றிக் கூட கிஞ்சிற்றும் கவலைப் படாமல்தான் பெரும்பாலான இத்தகைய உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை கவர்ச் சிகரமான விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தி வருகின்றன.விளக்கை நோக்கி பாய்ந்து வீழ் ந்து மடியும் விட்டில்களைப் போல, மக்கள் அழகு மோகத்தால் இயற்கை அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்து பாழ்படுத்திக் கொள்வதுடன் கொடிய நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர்.மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாங்கங்களும், அதிகாரிகளும் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற போக்கில் தங்களின் வருவாயில் மட்டுமே குறியாக உள்ளனர்.எதிர்பாராத வகையில் ஏதேனும் திடீர் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் ஒழிய இத்தகைய மென்விஷப் பொருட்களின் உற்பத்தி & வினியோகம் & பயன்பாடு பற்றியெல்லாம் எவரும் கவலைப்படுவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.எனவே, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், மக்களும் விழிப்படைய வேண்டும்.

நன்மை செய்பவர்களாகவே இருங்கள்
வயலில் தூவப்படும் சில விதைகளே,பல ஆயிரம் மடங்காக பயிர்களைத் திருப்பித்தரும்.அதைப் போலவே,ஒருவர் செய்யும் நன்மையும்,தீமையும் பல மடங்காகப் பெருகி அவரிடமே வந்து சேரும்.ஆகவே,எப்போதும் பிறருக்கு நன்மை செய்பவர்களாகவே இருங்கள்.சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும் கூட,நன்மை செய்வதிலிருந்து விலகாதீர்கள்.இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.

சொன்னவர்: திருமுருக கிருபானந்தவாரியார்.

நாத்திகவாதிகள் பற்றி ஓஷோவின் கருத்து
பார்வையற்ற ஒருவன் தத்துவவாதியாகவும்,வாதிடுபவனாகவும் இருந்தான்.

அவன் எல்லோரிடமும் ‘வெளிச்சம் என்பதே கிடையாது;என்னைப் போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள்தான்.நான் அதை அறிந்துகொண்டேன்.நீங்கள் அறிந்துகொள்ளவில்லை.அதுதான் வித்தியாசம்!வெளிச்சம் என்ற ஒன்று இருந்தால்,வெளிச்சத்தைக் கொண்டுவாருங்கள்.நான் அதை ருசித்துப்பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து பார்க்கிறேன்.இல்லை தொட்டாவது பார்க்கிறேன்.அதன்பின் தான் நம்ப முடியும்!’ என்று கூறினான்.அவனோடு வாதிட முடியாமல்,கிராமத்து மக்கள் புத்தரிடம் அவனை அழைத்து வந்தார்கள்.புத்தர் எதுவும் சொல்லாமல், “இவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்”என்றார்.மருத்துவர் அவனை விரைவில் குணப்படுத்தி பார்வை வரச் செய்தார்.அவன் புத்தருக்கு நன்றி சொல்ல வந்தான்.அப்போது புத்தார், “இப்போது நீ வெளிச்சத்தை நுகர வேண்டும்.தொட்டு ருசிக்க வேண்டும்;அதைத் தொட வேண்டும்;” என்றார்.அவன் புத்தரின் கால்களில் விழுந்தான். “தங்களால்தான் எனக்குப் பார்வை கிடைத்தது.இவ்வளவு நாள் நான் எனது அறியாமையில் வாதிட்டுக்கொண்டே இருந்துவிட்டேன்.என்னை மன்னித்துவிடுங்கள்” என்றான்.கருத்து:எதிர்மறையானவற்றை(நாத்திகம்,கம்யூனிசம்,போலி மதச்சார்பின்மை) மிக எளிதில் நிருபித்துவிடலாம்.ஆனால்,நேர்மறையானவற்றை நிருபித்தல் சாத்தியமில்லை.எனவேதான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும்,ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும் இருக்கிறான்.அவனால் கடவுள் இருப்பதை நிரூபிக்க முடிவதில்லை.

பரிகாரக்கோயில்களுக்கான சுலப விளக்கம்
பூமியில் எல்லா கனிம வளங்களும் இருப்பினும் எல்லாமும் எல்லா இடத்திலும் கிடைக்காது.எது எது எந்த இடத்தில் உள்ளது என தக்கவர்களைக்கொண்டு ஆராய்ந்து அவர்கள் சொல்லும் அந்தந்த இடங்களில்தான் அது அது கிடைக்கும்.

உதாரணமாக தங்கம் வேண்டுமானால் கோலாரிலும்,நிலக்கரி நெய்வேலியிலும்,பெட்ரோல் வேண்டுமானால் நரிமணத்திலும் தோண்ட வேண்டும்.

அதுபோல்,அவரவர் பிரச்னைகளுக்கு ஏற்ப திருவருள் விளங்கித் தோன்றும் திருக்கோயில்களைக் கண்டு நம் மெய்ஞானிகளாகிய நால்வர் பெருமக்கள் ஆய்வு செய்து அதற்குரிய தலங்களை தேர்வு செய்து பதிகங்கள் பாடி நமக்கு வழிகாட்டியுள்ளனர்.நமது ஆஸ்தான ஜோதிடர்களும் நமக்கு வழிகாட்டிவருகின்றனர்.

சிக்கலான தருணங்களில் பெண்கள் உச்சரிக்க ஒரு சொன்ன சுலோகம்:
ஐங்கார ஸ்ருஷ்டி ரூபாய

ஹ்ரீங்கார ப்ரதி பாலிகா

க்லீம் காளி கால ருபிண்யை

பீஜ ரூப நமோஸ்துதே!சாமுண்டா சண்ட ரூபாயை

யைங்காரி வரதாயிணி

விச்வேத்வம் பயதா நித்யம்

நமஸ்தே மந்த்ர ரூபிணி!

ஒரு ஆன்மீக சொற்பொழிவில் சொன்னவர்:சங்கரநாராயணன்.

தினமும் இருபத்தோரு முறை “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தைச் சொல்லி வருபவருக்கு,அவர் சொல்வதற்கான பலனை அவரது இருபத்தோரு தலைமுறையும் அனுபவிக்கும்.நாம் பெற்ற தாய்க்குச் சமம் பசு

நாராயணகுருவிடம் ஒருவர் கேட்டார்.


“குருஜி,நாம் ஏன் செத்த பசுவைச் சாப்பிடக்கூடாது?அதுதான் செத்துவிட்டதே?உயிரோடு இருக்கும்போதே அதன் பாலைக்குடிக்கிறோமே,அது பசுவின் ரத்தம் தானே!”“நியாயம்தான்” என்று சொன்ன நாராயணகுரு அவர்கள் சிறிதுநேரம் கழித்துக்கேட்டார்.

“உங்க அம்மா இருக்காங்களா?”“போனவருஷம் இறந்துட்டாங்க,குரு” என்றார் அவர்.“உங்க அம்மாவைத் தின்னுட்டீங்களா?” எனக் கேட்டார்.


டூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்கலாம்: மாணவரின் அரிய கண்டுபிடிப்புThanks:dinamalar 14.1.11

விருதுநகர்: விருதுநகரில் நடந்த, 37வது மாநில அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்ற மானாமதுரை மாணவர் மணிகண்டனின் புதிய கண்டுபிடிப்பான "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியால், 80 சதவீத விபத்துகளை குறைக்க முடியும்.
உலகில், ஆண்டுக்கு 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். டூவீலர்களால் 75 சதவீத விபத்துகள் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஓ.வி.சி., மெட்ரிக் பள்ளி மாணவர் வி.ஆர். மணிகண்டன், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான கருவி மூலம், "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டூவீலரை பதிவு செய்யும் போது, அதில் இந்த டிவைஸ் பொருத்தலாம். இதன் விலை 2,200 ரூபாய். இதை பொருத்திய பின், இதற்காக தனி எண் தரப்படும்.வாகனம் திருடு போனால் அதற்குரிய எண்ணை, மொபைல் போன் மூலம் அழைத்தால் வாகனம் நின்று விடும். அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பும். வாகனம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும். மேலும், "ஹெல்மெட்' அணிந்த பின்பே வாகனத்தை இயக்க முடியும். வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு இந்த இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது என எஸ்.எம்.எஸ்., தரும்.சைடு ஸ்டாண்ட் போட்டிருக்கும் போது, டூவீலரை இயக்க முடியாது. குறிப்பிட்ட இடங்களில் இத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும். "பிரேக் ஷூ' தேய்ந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.இரவு நேரங்களில் மட்டுமே முகப்பு விளக்குகள் எரியும். பகலில் "ஆன்' செய்தாலும் எரியாது. "எப்.சி.' எடுக்க வேண்டிய தேதியை, அறிவுறுத்தும். திருட்டு வாகனங்களோ, ரோடுகளில் தவறு செய்யும் வாகனங்கள் 200 மீட்டரில் வரும் போதே, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும். வாகன "பயோ டேட்டா' வழங்கும் விதமாக "3 ஜி' கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ள மணிகண்டனுக்கு, விருதுநகரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது: நான் கண்டுபிடித்துள்ள கருவிகளை டூவீலரில் பொருத்தும் போது, ஹெல்மெட் அணியாமல் ஏற்படும் பலியை 95 சதவீதம், விபத்து நடந்த இடத்தை தெரிவிப்பதன் மூலம் பலியை 75 சதவீதம், வேக கட்டுப்பாடு மூலம் 85 சதவீதம், பிரேக் ஷூ, இண்டிகேட்டர், முகப்பு விளக்கு கட்டுப்பாடு, சைடு ஸ்டாண்டு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளை 95 சதவீதம் குறைக்க முடியும். டூவீலர்களால் ஏற்படும் விபத்துகளில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்கான தொகை மிகக் குறைவு தான். ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பதிலாக ஜி.எஸ்.எம்., கருவிகளை பயன்படுத்தலாம்.இவ்வாறு மணிகண்டன் கூறினார்

கார், ஆட்டோ டயருக்கு விடிவு கிடைத்தது: மதுரைக்காரர் கண்டுபிடித்த "சேப்டி லாக்'thanks:dinamalar 14.1.2011

மதுரை: மதுரையில் அடிக்கடி கார், ஆட்டோ டயர்கள் திருடு போகாமல் இருக்க, 200 ரூபாய் செலவில் "சேப்டி லாக்' ஒன்றை கண்டுபிடித்துள்ளார் அப்துல்ரசாக். மதுரை பீபீகுளத்தைச் சேர்ந்த இவர், இதுவரை 22 புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதற்காக கடந்தாண்டு தேசிய விருதும் பெற்றார். இவரது பகுதியில், ஆட்டோ டயர்கள் அடிக்கடி திருடு போயின. "இதுவரை 100 டயர்கள் காணாமல் போய்விட்டன. இனி திருட்டு நடக்காமல் இருக்க ஏதாவது கண்டுபிடிங்க' என்று ஆட்டோ டிரைவர்கள் கூறினர்.
இதைதொடர்ந்து, "சேப்டி லாக்கை' கண்டுபிடித்த அப்துல்ரசாக் கூறியதாவது: "வீல்'லில் உள்ள நட்டுகள் எளிதாக கழற்றும் வகையில் இருப்பதால்தான் டயர்கள் திருடு போகின்றன. நான் கண்டுபிடித்துள்ள இந்த "சேப்டி லாக்' நட்டுகளை மறைப்பதோடு, புது டிஸைனாகவும் இருக்கும். எந்த சாவி போட்டாலும் திறக்க முடியாது. இதன் காரணமாக, டியூப் காற்றை இறக்கவும் முடியாது. இதற்கு காப்புரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கார் தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுகொண்டால், அவர்களிடமும் இதை செயல்படுத்தி காட்டுவேன், என்றார். இவரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் குமாரவேல் பாராட்டினர்.அன்னதானத்தின் மகிமைகள்:மறு விளக்கம்

எவ்வளவோ ஆன்மீகப்புதிர்கள் நமது இந்து தர்மத்தில் இருக்கின்றன.அவைகள் பெரும்பாலும் ஜோதிடக்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளன.அப்படி இணைக்கப்பட்டுள்ளவைகளை பாமர மக்களுக்கும் புரியும்விதமாக வெளிப்படுத்துவது நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் பொறுப்புக்களில் ஒன்று.நமது ஊரில் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் செய்தால்,எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் உத்திரப்பிரதேசமாநிலத்தில் இருக்கும் சிவபூமியான காசியில் ஒரே ஒரு நாள்(மூன்று வேளை) அன்னதானம் செய்தால்,கிடைத்துவிடும்.காசிக்கு நாம் சென்று,அங்கேயே ஒரு வருடம் வரை தங்கி,அந்த ஒரு வருடம் முழுவதும்(ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம்) அன்னதானம் செய்தால்,எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதே அளவு புண்ணியம்,நாம் நமது தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகில் இருக்கும் திரு அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.எனவே, வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளிலிருந்து வரும் அன்பர்கள் எப்போது அண்ணாமலைக்குச் சென்றாலும்,அங்கே ஒரு நாளுக்கு மூன்று முறை அன்னதானம் செய்வது அவசியம்.துவாதசி திதியன்று திரு அண்ணாமலையில் ஒரே ஒரு நாள் அன்னதானம் செய்தால்,காசியில் நாம் வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறோம்.மேலும்,அப்படி அன்னதானம் செய்தவர்,தனது வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்த புண்ணியத்தையும் அடைகிறார்.மற்றும் பிறாவத நிலை எனப்படும் முக்தியை அடைகிறார் என அருணாச்சல புராணம் தெரிவிக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு முறை துவாதசி திதி வருகிறது.பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்தவர்கள்,நேரம் கிடைக்கும்போதெல்லாம் துவாதசி திதி பார்த்து அண்ணாமலை சென்று அன்னதானம் செய்துவரலாம்.அன்று கிரிவலம் செல்லாமலும் கூட அன்னதானம் செய்யலாம்.16.1.2011 ஞாயிற்றுக்கிழமையன்று காலை மணி 8.06 முதல் மறுநாள் 17.1.2011 திங்கள் காலை மணி 8.00 வரையிலும் துவாதசி திதி வருகிறது.எனவே, விடுமுறையில் இருக்கும் ஆன்மீகக்கடல் வாசகர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு,உங்களது கர்மவினைகளை அழித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

எந்திரன் இயக்குநர் சங்கர் ஒரு பேட்டியில்:

பெரு நாட்டில் இருக்கிற எட்டாவது அதிசயமான மச்சுபிச்சுல கிளிமஞ்சாரோ பாடலை எடுத்தோம்.சம்பா நடனப்பள்ளியில் போய் அங்கு நடனமாடுபவர்களை வரவழைத்தோம்.இந்தப் பாடலை படப்பிடிப்பு செய்யும்போது,அந்த மலைல லைட் வைக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.அங்கே இருக்குற ஒவ்வொரு கல்லையும் அவங்க தெய்வமாக மதிக்கிறாங்க.

இந்துமதத்தை அழிக்க நினைக்கும் பத்திரிகைகள்

இந்துக்கள் எண்பது சதவீதத்துக்கும் மேலாக வாழும் ஒரே நாடு நமது பாரதம் மட்டுமே.பாரத தேசத்தில் இந்து தர்மத்தைச் சிதைப்பதிலும்,இந்து விரோத சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்களில் சிலரே களத்தில் இருக்கின்றார்கள்.விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இந்துவிரோத சக்திகள் இருந்தாலும்,இவர்களின் செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் வியாபித்துள்ளது.இந்த தீய சக்திகள் இந்து ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தங்களின் செயல்களை செய்து வருகிறார்கள்.


தங்களின் அதிகார பலத்தாலும்,வெளி உலக பலத்தாலும் கருத்துக்களையே மாற்றியமைக்கக்கூடிய சூழிநிலையை உருவாக்குகிறார்கள்.


உலகில் வலிமைமிக்க சக்தியாக விளங்குவது ஊடகங்கள் எனப்படும் மீடியாக்கள்.இந்து விரோத சக்திகள்,தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டு காரியங்களைச் செயல்படுத்த மீடியாக்கள் மூலம் முனைகிறார்கள்.


வெளிப்பார்வைக்கு இவர்களின் போக்கு இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிந்தாலும்,அந்நிய சக்திகளின் ஊக்குவிப்பால் தங்களின் ஊடகங்கள்(மீடியாக்கள்) மூலமாக இந்து விரோத செய்திகளை அதிக அளவில் வெளியிடுகிறார்கள்.


அடிமைத்தனத்தின் உச்சமான ஆங்கில மோகத்தின் காரணமாக பாரத நாட்டில் பெருவாரியான மக்கள் ஆங்கில நாளிதழ்களில் வரும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.


பெருவாரியான ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் அல்லது அந்நிய கிறிஸ்தவ மிஷனரிகளின் கையில் இருக்கின்றன.


இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றம் செய்யவேண்டும்.இந்து ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தெளிவான கொள்கையின் அடிப்படையில் ஊடகங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.


ஜனநாயகத்தின் நான்காவது தூண்,மூன்றாவது கண் என வர்ணிக்கப்படும் இதழ்கள் இரு சமுதாயத்திற்கு விரோதமான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் தவறான செய்திகளாக இருப்பினும் சிறிதும் வெட்கம்,கூச்சமின்றியும்,எவ்வித சமுதாயக்கண்ணோட்டம் இல்லாமலும் செயல்படுகின்றன.


ஆங்கிலப்பத்திரிகை என்பது அறிவுஜீவிகளின் பத்திரிகை,நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கலாம்.


ஆனால்,உலக நாடுகளுக்குப் பாரதத்தைப்பற்றியும்,பாரதத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் உணர்வுகளைப் பற்றியும் திசைதிருப்ப பெரும்பங்காற்றுவது ஆங்கிலப்பத்திரிகைகளே!!


அவை அப்படி செய்ய அதன் திரைமறைவு ரகசியங்களை ஆராய்வோம்:


தி ஹிந்து


125 ஆண்டுகள் பழமையான நாளிதழ் தி ஹிந்து.துவக்க காலங்களில் நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய இதழ்.


ஆனால்,தற்போது இந்து விரோத செய்திகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பதும்,இந்து விரோதசக்திகளுக்கு ஆதரவான கட்டுரைகள் அதிக அளவில் பிரசுரிப்பதும் தங்களின் தலையாய பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.


இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் விஜில் என்னும் அமைப்பின் சார்பில் நடந்த ஒரு ஆய்வரங்கில் 1992 இல் அயோத்தியில் நடந்த சம்பவத்தைக் காட்டுமிராண்டியின் செயல்பாடு என வர்ணித்தார்.


இன்று இந்து பத்திரிகையின் முழு நிர்வாக அமைப்பு சுவிஸ் நாட்டின் ஜோஷ்வா சொசைட்டி என்னும் நிறுவனத்தின் பிடியில் இருக்கிறது.(Joshuna Society,Beme).


என்.ராமின் முதல் மனைவி ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த சூசன் என்பவர்.இவர் ஆக்ஸ்போர்டு பிரஸ் வெளியீட்டின் பொறுப்பாளர்.இவரது மகள் வித்யாராம் ஒரு பத்திரிகையாளர்.


என்.ராமின் இரண்டாவது மனைவி மரியம்.சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி.இவரின் தூண்டுதலின் பலனாகவே கிறிஸ்தவ அமைப்பிடம் இந்து பத்திரிகையின் நிர்வாக அமைப்பு மாறிவிட்டது.


எக்ஸ்பிரஸ் பத்திரிகை


தேசபக்தி கொண்ட ராம்நாத் கோயங்காவால் துவக்கப்பட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை.இந்துப்பண்பாட்டிற்கும்,கலாச்சாரத்திற்கும் ஊறு விளைவிக்காமல் பத்திரிகை நடத்தியவர்.அவசர காலத்தில் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்.


ஆனால்,இன்று,தி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எனவும்,தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் எனவும் இரண்டாக பிரிந்துள்ளது.


இந்த இரண்டில் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிக பங்குகளை வாங்கியது ஏசிடிஎஸ் கிறிஸ்டியன் மினிஸ்டர்ஸ் என்ற(ACTS Christian Ministers)கிறிஸ்தவ நிறுவனமாகும்.


இரண்டு பிரிவுகளில் இந்துக்களுக்கு ஆதரவாக இயங்கும் பத்திரிகை தற்போது மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள தி நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாகும்.ஏனெனில்,இது கோயங்காவின் நேரடி வாரிசுகளின் கையில் இருக்கிறது.


டைம்ஸ் குருப் பத்திரிகைகள்


வடமாநிலங்களில் அதிக அளவில் வெளிவரும் பத்திரிகை டைம்ஸ் குரூப்பின் பத்திரிகைகளாகும்.இந்த நிறுவனத்திலிருந்து வரும் பத்திரிகைகள் டைம்ஸ் ஆப் இந்தியா,மிட்டே,நவபாரத் டைம்ஸ்,ஸ்டார் டஸ்ட்,பெமினா,விஜய் டைம்ஸ்,விஜய் கர்நாடகா


இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பென்னட் கோல்மேன் என்ற நிறுவனமாகும்.(Bennet & Coleman).இந்த நிறுவனத்தின் 80% பங்குகள் உலக கிறிஸ்தவ கவுன்சில்(World Christian Council)வசம் உள்ளது.ஏசியன் ஏஜ்,டெக்கான் கிரானிக்கல்


ஏசியன் ஏஜ்,டெக்கான் கிரானிக்கல் என்னும் இரண்டு ஆங்கிலப்பத்திரிகைகளும் சவுதி அரேபியாவின் நிறுவனத்தைச் சேர்ந்தவை.இந்த இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியர் எம்.ஜே.அக்பர்.இவர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக 1989 முதல் 1991 வரை இருந்தவர்.


பல பத்திரிகைகளில் இந்துக்களுக்கு எதிராகவும்,இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.


அமெரிக்காவில் இருக்கும் திரு புருக்கிங்(The Brookings Institution,Washington) நிறுவனத்தில் இஸ்லாமிய உலகின் அமெரிக்கக் கொள்கை பற்றிய வகுப்பு எடுக்கும் பகுதி நேர ஆசிரியர்.


2006 ஆம் ஆண்டு மக்கா அல் முக்கரமா என்னும் இடத்தில் நடந்த இஸ்லாமிய அறிஞர்களுக்கான அமைப்பின் உறுப்பினர்(Member of the Forum of Islamic Scholors and Intellectual held in Makka-al-Mukaramma).இவரின் துணைவியார் மல்லிகா ஜோசப் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணியாற்றுகிறார்.ஆகவே,இவர் எழுதும் எழுத்துக்கள் அனைத்தும் இந்துவிரோத கருத்துக்களாகவே இருக்கின்றன.நன்றி:பசுத்தாய்,பக்கம் 5,6.நவம்பர் 2010.

நமது இந்துதர்மம் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்


வேதங்களின் ஏதாவது ஒரு பகுதியை நான் படிக்கும்போது,தெய்வீகமான, இதுவரை அறிந்திராத ஒளி என்னுள் வெளிச்சம் தருவதை உணர்கிறேன்.வேதங்களின் ஒப்பற்ற போதனையில் பேதம் இல்லை.அது அனைத்து வயதினருக்கும், பிரதேசத்தினருக்கும்,நாட்டினருக்கும்,ஜாதிக்கும் உரியது.


அது பேரறிவை அடைவதற்கான பெருவழி.அந்த வழியில் செல்லும்போது,கோடைகால இரவில் நட்சத்திரங்கள் ஒளிரும் வானவெளியின் கீழ் இருப்பதைப் போல் உணர்கிறேன்.


ஹென்றி டேவிட் தோரா(1817 டூ 1862)அமெரிக்காவின் புகழ்பெற்ற தத்துவ அறிஞர்,எழுத்தாளர்,சமூக விமர்சகர்.


இந்த உலகின் மிகப்பெரிய நம்பிக்கைகளுள்,பிரபஞ்சக் கோட்பாட்டோடு பொருந்தி வரக்கூடிய காலக்கணக்கைக் கொண்டிருக்கும் ஒரே மதமும் அதுவே(இந்து மதம்)


கார்ல் சகன் (1934 டூ 1996) புகழ்பெற்ற நவீன வானியற்பியலாளர்.


பண்டைய காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் மூலமாக இறைவன்,அனைத்து புனித நூல்களையும் இந்துக்களுக்கு அளித்துள்ளான்.


பிரம்மா அந்த ரிஷிகளில் முதன்மையானவர்.படிப்படியான ஆய்வுகளுக்குப்பின் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.


ரிக்,யஜீர்,சாமம்,அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும்,பிரம்மாவின் மிகச்சிறந்த அறிவுநூல்களாகும்.


முகமது தாரா ஷீ கோ(1627 டூ 1658)


ஷாஜஹானின் மூத்த மகன்

இந்திராகாந்திக்கு நேரு அவர்கள் எழுதிய கடிதத்திலிருந்து மிக முக்கிய பகுதி
நான் படித்தவை அதிகமாக நம் நாட்டைப்பற்றி தவறான மற்றும் திரித்துவிடப்பட்ட செய்திகளே! கல்லூரியை விட்டு வெளியே வந்த பின்னர்தான் பல உண்மையான வரலாற்றைப் படித்தேன்.


நன்றி:தினமணி கொண்டாட்டம்.

படிப்பில் முதலிடம் பிடிக்கவும்,ஜோதிடர் வாக்கு பலிதமாகவும்

அகத்திய மாமுனிகள் அருளிய இந்த மந்திரத்தை காலை சூரிய உதயத்திற்கு முன்பு,அருணோதய காலத்தில் நெய் தீபம் ஏற்றி,ஜபம் செய்துவரவேண்டும்.இதனால்,கல்வியில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.குழந்தைகளின் படிப்பு சாதனைப் படிப்பாக மாறும்.ஜோதிடர்களின் வாக்குபலிதமாகவும் இந்த மந்திரஜபம் பயன்படுகிறது.


ஹரிஓம் கணபதி அங் கணபதி


சக்தி கணபதி ஐயும் கிலியும்


சவ்வும் வாக்கு கிலியும்


பாலா பரமேஸ்வரி என்


வாக்கிலும்,மனதிலும்,முகத்திலும்


வந்து நிற்க சுவாஹா.


நன்றி:ஜோதிடபூமி,பக்கம் 41,ஜனவரி 2011.

பலகோடி மடங்கு நன்மை தரும் கிரகணகால மந்திர ஜபம்
நேற்று சூரியக்கிரகணம் ஏற்பட்டது.இந்தியாவில் மதியம் 3.11 முதல் 3.52 வரையிலும் டெல்லியில் ஓரளவு சூரியக்கிரகணம் தெரிந்தது.இது செய்தி.


புராதன இந்துபுராண நூல்கள் தெரிவிப்பது என்னவெனில்,கிரகணகாலத்தில் எந்த மந்திரத்தையும் ஒருமுறை ஜபித்தாலும்,அந்த மந்திரத்தின் சக்தி நூறுகோடி மடங்கு ஜபித்ததற்கான பலனைத் தரும்.நமது வலைப்பூவை வாசிக்கும் ஒரு  வாசகி தெரிவித்த தகவல் இது.


இதனால்,அந்த வாசகி ஒரு பரீட்சார்த்தமாக தான் பணிபுரியும் அலுவலகத்தில் மதியம் விடுப்பு எடுத்துவிட்டு, மாலை மூன்று மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டார்.


மூன்று மணி முதல் நான்கு மணி வரையிலும்  மந்திரமான ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹஜபித்திருக்கிறார்.


அப்படி ஜபிக்கும்போது,இதற்கு முன்பு ஜபித்ததற்கும்,நேற்று சூரியக் கிரகணநேரத்தில் ஜபித்ததற்கும் பெரும்வேறுபாடு இருப்பதை உணர்ந்திருக்கிறார்.மற்ற நாட்களில் ஜபிப்பது மிகவும் சிரமமாகவும்,கவனம் அதிகம் சிதறும் விதமாகவும் இருக்கும்.ஆனால்,நேற்று மிகவும் எளிதாகவும்,சுலபமாகவும்,வேகமாகவும் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ மந்திரத்தை உச்சரிக்க முடிந்தது.மனதிற்குள் இனம்புரியாத ஒரு தெய்வீக உணர்வு ஏற்பட்டதாகவும்,அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.அவருக்கு ஆன்மீகக்கடல் வலைப்பூக்குழுமத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.

ஸ்கேட்டிங் பயணத்தின் மூலம் விழிப்புணர்வு!!!

வத்தலக்குண்டு : எதையுமே வித்தியாசமாக பார்த்து,சிந்திப்பது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதுவும் சவாலான விஷயங்களை செய்வது "அல்வா' சாப்பிடுவது மாதிரி. ஆந்திராவிலிருந்து சபரிமலைக்கு ரோடு வழியாக 1,500 கி.மீ.,"ஸ்கேட்டிங்'கில் வருவதென்பது சாதாரண காரியம் இல்லையே.ஆந்திரா ஐதராபாத் அருகே ஹூப்ளிஹில்ஸில் நவ., 6ல் மாலை அணிந்த கன்னிச்சாமி ரகுவீர் (25), டிச.,22ல் சபரிமலைக்கு புறப்பட்டார். கடுமையான விரதம் இருந்து வழக்கம்போல பஸ்சில் வராமல் "ரோலர் ஸ்கேட்டிங்' மூலம் செல்ல தயாரானார். முதன் முறையாக வருவதால் வழிகாட்டியாக குருசாமி சுரேஷ் (30) சைக்கிளில் வருவதற்கு ஒப்புக்கொள்ள பயணத்தை தொடர்ந்தனர். மெகபூப்நகர், கர்னூல், அனந்தாபூர்,பெங்களூரு, ஓசூர், சேலம், கரூர், திண்டுக்கல் வழியாக நேற்று பகல் 2க்கு சரணம் ஐயப்பா கோஷத்துடன் வத்தலக்குண்டை அடைந்தனர்.பயணம் குறித்து ரகுவீர் கூறும்போது, ""மாணவர்களுக்கு நடனம், கராத்தே கற்றுத் தருகிறேன். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் 700 கி.மீ., ஆந்திராவுக்குள் "ஸ்கேட்டிங்' கில் சுற்றி விருது வாங்கினேன். எனக்கு பிடித்த, ஐயப்பனை தரிசிக்க "ஸ்கேட்டிங்'கில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதனால் வந்தேன். இவ்வளவு தூரம் இதுவரை யாரும் "ஸ்கேட்டிங்'கில் வரவில்லை. கின்னஸ் சாதனைக்கு முயற்சி எடுத்து வருகிறேன்' என்றார்

இந்தியாவில் பிறந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்:விழிமின் எழுமின்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாடு மாநிலம்,கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்த கேந்திரம் ஹிந்து ராஷ்டிரத்திற்கு அறைகூவல் என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டது.அந்த புத்தகத்தை 1992 ஆம் ஆண்டில்  நூலகத்தில் படித்தேன்.ரொம்ப பழைய தாள்கள், படிக்க படிக்க நம்மை பிரித்தாளுவதற்காக ஆங்கிலேயன் என்னவெல்லாம் செய்தான்? அப்படிச் செய்வதற்காக அவன் செய்த பிராடுத்தனங்கள் என்னென்ன?அதை நமது முன்னோர்கள் எதிர்கொள்ள முடியாமல் எப்படியெல்லாம் தவித்தார்கள்? என்பதைப் பற்றி விரிவாகவே விவரிக்கிறது.இந்தபுத்தகத்தை இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவரும்,இஸ்லாமியரும்,இந்துவும்,சீக்கியரும்,புத்த மதத்தவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.ஒரு நல்ல புத்தகம் வெறும் மங்குணியைக் கூட சிறந்த சிந்தனையாளராக மாற்றிவிடும் என்பதை இந்த புத்தகத்தை வாசித்தப்பின்னர்தான் உணர்ந்தேன்.ஏனெனில்,நமது கல்வித்திட்டம் அப்படித்தான் நம்மை உருவாக்குகிறது.நமது அம்மா,அப்பா முட்டாள்கள்!! நமது தாத்தா பாட்டி ஒரு அப்பாவிகள்!!! நாம் இந்தியாவில் பிறந்ததே மகா பாவம் என்ற எண்ணம் நம் ஒவ்வொருவரின் மனதிலும் உருவாகுவதற்கு நாம் படிக்கும் பள்ளிக்கல்வியும்,பட்டப்படிப்புமே காரணம்.ஆனால்,நிஜத்தில் இது திட்டமிட்ட வடிகட்டின பொய் என்பதை உணரவே மூன்று வருடங்கள் ஆயின.இதை உணரவைத்த முதல் புத்தகம் இந்த புத்தகமே.பின்னர்,இந்தப் புத்தகத்தின் தலைப்பு ஹிந்து ராஷ்டிரத்திற்கு அறைகூவல் என்பதை விழிமின்;எழுமின் என்று மாற்றியமைப்பட்டது.இந்தப் புத்தகம் முழுவதுமே சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களின் தொகுப்பாக இருக்கிறது.இந்த தொகுப்புக்களை சுவாமி விவேகானந்தர் அவர்கள் உருவாக்கிய ஸ்ரீஇராமகிருஷ்ண மிஷன் மற்றும் அதன் வெளியீடுகள் பல ஆண்டுகளாக வெளியிட வில்லை என்பது தெரிந்தது.இந்தபுத்தகத்தை ஒரு முறை வாசித்தால்,நமது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.நமது முன்னோர்கள் மாபெரும் சாதனையாளர்கள்,நாம் அதை விட சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் நமக்குள் உருவாகும்.தற்போது இந்த புத்தகத்தின் விலை ரூ.45/-

கிடைக்குமிடம் விவேகானந்த கேந்திரம்,விவேகானந்தபுரம்,கன்னியாக்குமரி.

வேறு இடங்களில் இது கிடைப்பதில்லை.இதன் இணையதளத்தின் முகவரி மூலமாகவும் வாங்கலாம்.

wikkileaks-2 thanks to tamilwebdunia

“ஆட்சியமைப்புகளின் போக்கை தற்போதுள்ள போக்கிற்கு மாறாக மாற்றியமைக்க வேண்டுமென்று நாம் நினைப்போமானால், அவைகள் மாற்றத்திற்கு தங்களை சற்றும் உட்படுத்திக்கொள்ள தாயாரக இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் துணிவாக செயலாற்ற வேண்டும்” என்றும் அசான்ஞ் கூறியதாக ராஃப்பி தெரிவிக்கிறார்.
இப்போது புரிகிறதா, விக்கிலீக்ஸ் வெளியீடுகளின் நோக்கம் என்னவென்பதை? அமெரிக்காவின் செனட்டரும், அவரை வழிமொழிந்த அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவரும், ஜூலியன் அசான்ஞ் ஒரு உயர்தொழில்நுட்ப பயங்கரவாதி என்று கூறியது சற்றும் பொருந்தாக விமரிசனம் என்பது?அசான்ஞ் மொழியில் தெளிவாக கூறுதெனின், அமெரிக்காவோ அல்லது இன்றைய உலக நாடுகளின் அரசுகளோ இப்போது எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவோ அந்த போக்கில் இருந்து சற்றும் மாறப்போவதில்லை. இவைகளின் செயல்பாட்டை தலைகீழாக மாற்ற வேண்டுமெனில், அவைகளின் தன்மையைப் புரிந்துகொண்டு துணிச்சலுடன் போராட வேண்டும் என்கிறார். அதற்கு தற்போதுள்ள அதன் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும். அதற்குத்தான் இப்படிப்பட்ட வெளியீடுகள். அவைகள் அதன் பிடிமானத்தை பலமிழக்கச் செய்கின்றன.இந்த முடிவிற்கு ஜூலியன் அசான்ஞ் வரக் காரணமேதுமுண்டோ? தான் மாற்ற நினைக்கும் இன்றுள்ள அரசியலை ஆங்கல மொழிக் கவிஞர் ஜார்ஜ் ஆர்வெல்லின் பாடலை மேற்கோள் காட்டி புரிய வைக்கிறார் அசான்ஞ்.

“பொய்யை உண்மையைப் போல் ஒலிக்கவும், கொலையை மரியாதைக்குரியதாகக் காட்டவும், தூய காற்றிற்குக் கூட நிலைத்தன்மை உண்டு என்று நிரூபிக்கவுமே அரசியல் மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்கிற ஜார்ஜ் ஆர்வெல்லின் மொழியை இன்றைய அரசியலின் போக்கை சித்தரிப்பதாக அப்பாச்சி வீடியோவிற்கு அளித்த பேட்டியில் அசான்ஞ் கூறியுள்ளார்.எவ்வளவு ஆழமான உண்மை! விடுதலைப் போராளிகை ‘பயங்கரவாதிகள்’ என்பது, பழங்குடிகளுக்காக போராடுவோரை, அந்த மக்களின் போராட்டங்களை ஆதரிப்போரை, அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுப்போரை ‘உள்நாட்டு அச்சுறுத்தல்’ என்பது, தங்களின் அன்றாட வாழ்விற்காக கடலுக்குச் சென்று மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அண்டை நாட்டு கடற்படையினரால் அத்துமீறி வந்து தாக்கப்படும் போது, அவர்கள் ‘சில பேராசை பிடித்த மீனவர்களால் பிரச்சனை ஏற்படுகிறது’ என்று பேசுவது என்று இவை யாவும் ஜார்ஜ் ஆர்வெல் சொல்லும் அந்த அரசியல் மொழிகள்தானே?இதனை புரிந்துகொண்ட காரணத்தினால்தான் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்களை உலகின் தலைசிறந்த நாளிதழ்களான தி கார்டியன், நியூ யார்க் டைம்ஸ், லீ மாண்ட், எல் பாரிஸ், டெர் ஸ்பீகல் ஆகியன முன்னுரிமை கொடுத்து வெளியிடுகின்றன! இந்த ஏடுகளின் வரிசையில் ஒரு இந்திய நாளிதழ் கூட இடம்பெறவில்லையே என்பது வருத்தம்தான். ஆனால் இங்குதான், அரசின் குரல்களாக இருந்து பத்ம ஸ்ரீ முதல் சிறிலங்க ரத்னா வரை பட்டங்கள் பெற்ற முதன்மை இதழாளர்களை ஆசிரியர்களாக கொண்ட ஊடகங்களும் நாளிதழ்களும் அல்லவா கோலேச்சுகின்றன? அதனால் அந்தப் பட்டியலில் இந்தியா நாளிதழ் ஒன்று இடம்பெறாததில் ஆச்சரியமேது்மில்லை.ஒரு தனி மனிதராய், உறுதியுடன் நிற்கும் சில தொழில் திறமை கொண்ட இளைஞர்களுடன் இணைந்து இன்றுள்ள அரசுகளுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்ட ஜூலியன் அசான்ஞ், உண்மையான ஜனநாயகத்திற்கு வழிகோலுகிறார். எனவே, எவ்வித ஐயமுமின்றி, அவரே இந்த ஆண்டின் மிகச் சிறந்த மனிதரே.விக்கிலீக்ஸ் இணையத் தளம் செய்துவரும் தகவல் புரட்சி தொடரட்டும்... 2011இலும்.

wikkileaks-1: thanks to tamilwebdunia

2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் முதல் பங்குச் சந்தை வரை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியபோது கூட, அதனை தாங்கள் கடைபிடித்துவரும் சந்தை பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத அதிர்ச்சியாக எடுத்துக் கொண்ட அமெரிக்க அரசுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் உண்மைகள் அடி வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம், உலகத்திற்கு அது காட்டிக்கொண்டிருக்கும் தூய்மை முகம், எந்தனை கொடூரமானது என்பதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் ஆவணங்கள் வெட்ட வெளிச்சமாக்குவதேயாகும்.உலகின் மாபெரும் ஆட்சி பீடத்தின் மையமாகக் கருதப்படும் வெள்ளை மாளிகைக்கு அமெரிக்காவின் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அந்தந்த நாடுகளில் இருந்து ‘திரட்டி’ அனுப்பிய இரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டதன் விளைவாக அந்நாட்டின் உண்மையான நட்பு முகத்தின் யோக்கிதை மட்டுமின்றி, தான் பெற்ற இரகசிய விவரங்களின் மீது நேரிடையாக வினையாற்றாமல், அதனை மறைத்து, அந்தந்த நாடுகளின் அரசுகளை மிரட்ட அந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை விக்கிலீக்ஸ் வெளியீடுகள் மூலம் அரசியல் உலகம் புரிந்துகொள்ள வைத்துவிட்டது. அதுதான் அமெரிக்காவிற்கு சங்கடம்.


அமெரிக்காவிற்கு எதிரான இரகசிய பரிமாற்ற அறிக்கைகளை மட்டுமே விக்கிலீக்ஸ் வெளியிட்டவில்லை. மாறாக, அது பல நாடுகள் தொடர்புடைய ஆவணங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் அது பெரும் அளவில் பாதித்தது அமெரிக்காவையே.


இப்போது கூட, உலகமே நாளை பிறக்கப்போகும் 2011 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க முற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அரசும், பேங்க் ஆஃப் அமெரிக்காவும் விக்கிலீக்ஸ் புத்தாண்டில் வெளியிடப்போகும் ஆவணம் என்னவென்பதை நினைத்து அச்சத்தில் உழன்றுக்கொண்டிருக்கின்றன.


இதற்குக் காரணம், கடந்த திங்கட்கிழமை, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிணைய விடுதலையளித்த பிறகு, டைம்ஸ் ஆஃப் லண்டன் நாளிதழிற்கு பேட்டியளித்த விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ், ஒரு மிகப் பெரிய வங்கியின் நிர்வாகிகள் அனைவரும் விலக வேண்டிய அளவிற்கு முக்கிய தகவல்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை தான வெளியிடப்போவதாக கூறியதுதான்.


பேங்க் ஆஃப் அமெரிக்கா என்று பெயரை ஜூலியன் அசான்ஞ் கூறவில்லை. ஆனால், அந்த வங்கியின் நிர்வாகிகள் ஜூரத்தில் உறைந்துள்ளார்கள். எது தொடர்பான ஆவணம் அது? என்கிற யோசனையில் வாஷிங்டனில் ஆளுக்கு ஆள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் நிலை. அவர்கள் இந்த அளவிற்கு அச்சமுற மற்றொரு காரணமும் உள்ளது. அது, 2009ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரை ஒன்றில், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை நிர்வாகி ஒருவரின் கணினி அமைப்பின் ஹார்ட் டிரைவ் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அசான்ஞ் கூறியிருந்ததுதான்.


மெர்ரி லின்ஞ் நிதி நிறுவனத்தை கையகப்படுத்தியதில் உள்ள வில்லங்கத்தை விக்கிலீக்ஸ் வெளியிடுமோ என்று மற்றொரு கவலை. இது எல்லாவற்றி்ற்கும் மேலாக அப்படி ஏதேனும் வெளியிடப்பட்டால் அதனால் அமெரிக்காவின் பொருளாதார நிலை என்ன ஆகும் என்ற கவலையும் அமெரிக்க அரசிற்கு ஏற்பட்டுள்ளது.


இப்படி அமெரிக்காவும், அதன் நிறுவனங்களும் திரை மறைவில் நிகழ்த்திய திருவிளையாடல்களின் ஆதாரங்களை வெளியிட்டு, அந்நாட்டு அரசியலில் ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்துவதற்கு என்ன அவசியம் உள்ளது? விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்-ன் நோக்கமென்ன? என்கிற வினாக்களும் எழுகிறதல்லவா?


அமெரிக்காவின் அழுத்தத்தால் சர்வதேச காவல் துறை தனக்கு எதிராக சிகப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில் மறைந்து வாழ்ந்துவந்த ஜூலியன் அசான்ஞ்ஞை, நியூ யார்க்கர் எனும் இதழின் செய்தியாளர் ராஃப்பி காட்சாடெளரியன் என்பவர் சந்தித்துப் பேசியுள்ளார். ஜூலியன் அசான்ஞ் உடன், அவர் பதுங்கியிருந்த சிறு அறையில் (பங்கர்) ராஃப்பியுன் இருந்துள்ளார். அப்போது அசான்ஞ் நோக்கம் குறித்து வினா எழுப்பியுள்ளார்.


அநீதிகளை வெளிப்படுத்தவதே தனது இணையத் தளத்தின் நோக்கம் என்று அசான்ஞ் அழுத்தமாக கூறியதாக தெரிவிக்கும் ராஃப்பி, “இன்றுள்ள நிலையில் மனிதனின் போராட்டங்கள் அனைத்தும் வலதுக்கு எதிரான இடது போராட்டமோ அல்லது நம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவின் போராட்டோ அன்று, அது தனி மனிதனுக்கும் அவன் வாழ்வைப் பாதிக்கம் (அரசு) அமைப்புகளுக்கும் எதிரானதே” என்று அசான்ஞ் கூறியதாக தெரிவிக்கிறார்.

நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்?

இந்தக் கேள்விக்கு விடை ஏற்கனவே இருக்கிறது.நாம்தான் நமது பேச்சினைக் கட்டுப்படுத்திட வேண்டும்.


நமது தினசரி,வார,மாத இதழ்கள் சினிமா கிசுகிசு என தனிப்பக்கமே போடுகின்றன.அதில் இருக்கும் நமது நடிகர்கள்,நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையைப்பற்றிய பெரும்பாலான பொய்களை நமது நட்புவட்டத்தில் பரப்புவதையே நமது ‘கடமையாக’ செய்கிறோம்.இதுதான் நாம் கஷ்டப்படக்காரணம்.சார்! புரியும்படி சொல்லுங்க. . . புரியல என்கிறீர்களா?


எண்ணினை தனது பெயரில் கொண்டிருக்கும் நடிகையின் கால்ஷீட் வேண்டுமா?அவரது மேனேஜரைத் தொடர்புகொண்டால் மட்டும் கிடைத்துவிடாது.அவருடன் நடித்த வெட்டி நடிகரை நேரில் சந்தித்து,கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்,கால்ஷீட் கிடைக்கும்.காரணம் வெட்டி நடிகருக்கும்,எண்ணின் நடிகையின் ---------------க்கும் இருக்கும் நெருக்கமே காரணம்.


இந்த கிசுகிசு ஒரு உதாரணம்.இந்தத் தகவலை இப்போது நாம் படிக்கிறோம்.இதில் ஒரு காமரீதியான கிக் இருக்கிறது.இதை மாய்ந்து,மாய்ந்து நமது நெருங்கிய நட்பு வட்டத்தில் பெருமையாக சொல்லுகிறோம்.இப்படிச் சொல்லுவதால்,சொல்லும் நாளன்று நாம் செய்த புண்ணியங்கள் நம்மை வந்து சேராமல்,இந்த எண்ணின் நடிகைக்குப் போய்ச்சேர்ந்துவிடும்.இதேபோல்,நாம் யாரிடமெல்லாம் சொல்லுகிறோமோ,அவர்கள் அவர்களது நட்புவட்டத்தில் இந்த காமகிசுகிசுவைப் பரப்புவார்கள்.அப்படிப் பரப்புபவர்களின் புண்ணியங்களும் எண்ணின் நடிகையைப் போய்ச்சேரும்.


சரி! நம்மில் பலர் தினசரி,வார,மாத இதழ்களைப்படிப்பதில்லை;அவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?


அவர்கள் தாம் வசிக்கும் தெருவில் இதுபோல் கேள்விப்படும் காமரீதியான கிசுகிசு(அது பெரும்பாலும் பாதி அல்லது நூற்றில் ஒரு பங்கு பொய்யாகத்தான் இருக்கும்)க்களை தனது நட்புவட்டத்தில் பரப்ப,பரப்ப அவர்கள் செய்யும் புண்ணியங்கள் அவர்களுக்குக் கிடைக்காது.


அவளைப்பத்தி தெரியாதாக்கும்;அவள் இப்படித் தானே! என்று ஆரம்பித்து ஒரு வருடம் முழுக்க எல்லோரின் காம ரீதியான அவமானங்களையும் பேசிப்பேசி நம்மைச் சுற்றியிருப்பவர்களின் ஒழுக்கத்தையும் நாம் அழித்துவிடலாம்.நாமும் யாரோ சிலருக்காக புண்ணியத்தைச் சேர்த்து,புரணி பேசி அவர்களை ‘வாழ’ வைத்து,நாம் எப்போதும் கஷ்டப்படுவோம்.சரியா?

இந்தியாவால் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உருவாகிறது: நாஸ்காம் தலைவர்

திங்கள், 3 ஜனவரி 2011( 14:44 IST )


அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் இந்தியாதான் உதவுகிறதே தவிர, அமெரிக்காவால் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாவதில்லை என்று மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமின் தலைவர் சோம் மிட்டல் கூறியுள்ளார்.


அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து வெளியாகும் சியாட்டில் டைம்ஸ் எனும் நாளிதழின் கருத்துப் பக்கத்தில் எழுதியுள்ள சோம் மிட்டல், “இந்தியாவால்தான் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உருவாகிறது, அமெரிக்காவால் இந்தியர்கள் பயனடையவில்லை. இந்திய - அமெரிக்க பொருளாதார உறவால் அமெரிக்காவின் பொருளாதாரமும், வேலைச் சந்தையும் மிக முக்கியமாக பலன் பெறுகின்றன” என்று எழுதியுள்ளார்.


\


“இந்தியர்களின் முதன்மையான முதலீட்டு நாடாகவும் அமெரிக்கா ஆகியுள்ளது. உண்மையைக் கூறுவதெனில், அமெரிக்காவில் முதலீடு செய்யும் நாடுகளில் ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது” என்றும் சோம் மிட்டல் எழுதியுள்ளார். thanks:www.tamilwebdunia.com

கலியுக முடிவின் அடையாளங்கள்

கேள்வி:மகா விஷ்ணுவின் கல்கி அவதாரம்,குதிரையில் அமர்ந்து வருவது குறித்து புராணங்கள் கூறும் தாத்பரியம் என்ன?பதிலளிப்பவர் திரு.சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்:(நன்றி:சக்திவிகடன் 11.1.11,பக்கம் 84)


சமுதாயம் முற்றிலும் சீரழிந்து,இனி சீர்திருத்த இயலாது என்கிற சூழலில்,கல்கி அவதாரம் நிகழும்.உலக வெப்பம் படிப்படியாக உயர்ந்து,தாவரங்களைத் தோற்றுவிக்கும் தகுதியை பூமி இழந்துவிடும்.உணவின்றி விலங்குகளும் மடிந்துவிடும்.மனிதர்கள் சக மனிதரையே உணவாக்க முயற்சிப்பர்.அப்போது கல்கி அவதாரம் நிகழும்.


வேகமாக செயல்படும் வாகனம் குதிரை.தனியொருவராக போர் புரியக் கிளம்பும் கல்கிக்கு அந்தக்குதிரை உதவும்.எல்லாம் அற்றுப்போன அந்த வேளையில்,நமது பண்பாட்டில் ஊறிய ஒரு குடும்பத்தில்(திருநெல்வேலி மாவட்டம் என்று ஒரு கருத்து பேசப்படுகிறது)தோன்றுவார்.அந்தக்குடும்பத்தின் பராமரிப்பில் இருக்கும் குதிரை,அவருக்கு வாகனமாக செயல்படும்.


வெப்பம் அதிகமாக,அதிகமாக வாழ்க்கைக்குத் தேவையான நீர்வளம் குறையும்.உயிரினங்களில் வாழ்வு ஸ்தம்பிக்கும்.புதுப்படைப்புக்குத் தோதாக வெப்பத்தில் எல்லாமும் மூழ்கிவிடும்.இதையே பிரளயம் என்கின்றன புராணங்கள்.அதன் பிறகு படைப்பு தொடரும்.படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகியன பரம்பொருளின் பொறுப்பில் இருப்பதால்,படைப்பதற்காக அழிக்க முற்படுகிறார் கல்கி என்பது புராணத்தகவல்.

சிவபெருமான் பற்றி ரகசியம்
சிவன் அவதாரம் எடுத்ததில்லை;தனது அம்சத்தை அனுப்பி அண்டங்களையும் பேரண்டங்களையும் பரிபாலனம் செய்பவர்.அவர் ஆணும் அல்ல;பெண்ணும் அல்ல;அலியும் அல்ல;சர்வ வியாபி.அணுவுக்கும் அணுவாக இருப்பவர்.அவர் ரூபம்,அரூபாரூபம்.அரூபம் என்ற மூன்று நிலைகளிலும் பக்தனின் பரிபக்குவத்திற்குத் தக்கபடி அருளுகிறார்.ஆனால்,அனைத்து மதங்களிலும் அவர் அருட்பெர்ருஞ்சோதி வடிவில் வணங்கப்படுகின்றார்.அவர் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர்.அவரைப் பற்றிய அறிவைப்பெற இந்த சாதாரண மூளையால் சாத்தியப்படாது.யோகிகளும் பக்தர்களும் கூட அவரைப் பார்த்ததில்லை.அவரைச் சுற்ரி கோடிக்கணக்கான சிவபூத கணங்கள் அவர் ஏவலுக்காகக் காத்து நிற்கின்றன.அப்பூத கணங்கள் மூலமாகத்தான் பூமியில் வாழும் 84 லட்சம் ஜீவ ராசிகளுக்கும் ஆகாரம் அளிக்கிறார்.அவரது எளிய வடிவமே பைரவர்.வீட்டில் வைத்து வழிபட ஏற்றவர் சொர்ண பைரவர் தான்.