RightClick

நேர்மையானவர்கள் பின்பற்ற வேண்டிய முனீஸ்வரர் வழிபாடு


நம்மில் பலர் முன் ஜன்மங்களில் செய்த கர்மவினைகளின் காரணமாக,இந்த பிறவியில் ஏதாவது ஒரு குறையோடு அல்லது கடுமையான வறுமை/ஏக்கம்/நோய்/பிரச்னையோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.ஆனால், அதே சமயம் முன் ஜன்மங்களில் செய்த ஒருசில புண்ணியங்களின் விளைவாக நல்ல ஆத்மாவாகப் பிறந்து,தன்னை சுற்றியிருக்கும் அனைவரையும் வழிநடத்திக்கொண்டிருப்பர்;அல்லது தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுபாவங்களை பழகி புரிந்துகொண்டும்கூட, அவர்களுக்கு அவர்கள்  கேட்காமலேயே உதவி செய்துகொண்டே இருப்பார்கள்.(ஆனால்,இவருக்கு எவருமே உதவமாட்டார்கள்)இருப்பினும் இவர்களின் வாழ்க்கை ரொம்ப சாதாரணமாக இருக்கும்.

இவர்களில் பலரது குலதெய்வமாக முனீஸ்வரர் இருப்பார்;அல்லது இவரது பெயரிலேயே முனீஸ்வரன் இருக்கும்.உதாரணம்:முனிராஜ்,முனிரத்தினம்,ஜடா முனி,                                             ராஜ முனி, வடுகமுனி,முனீஸ்வரி,சுந்தரமஹாமுனிலட்சுமி,  பட்டுமுனீஸ்வரி,பாண்டி முனீஸ்வரி,குருமுனி,முனிகுமார், முனிலட்சுமணன்,
முனீஸ்வரப்பாண்டியன்,இமயமுனி,முனிராணி,முனிமகேஸ்வரி,
மகேஸ்வரமுனி . . .


இவர்களுக்கு ஒரு சூட்சுமவழிபாட்டுமுறையை நமது ஆன்மீக குரு  திரு.சகஸ்ரவடுகர்,புளியங்குடி அவர்களின் வழிகாட்டுதலாலும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

ஒவ்வொரு ஊரிலும் தேரடி முனீஸ்வரர் கோவில்கள் இருக்கின்றன.பல இடங்களில் கரையடி முனியாண்டி கோயில்களும்,மக்கள் வாழும் தெருக்களுக்குள்ளேயே முனீஸ்வரர் கோயில்களும் இருக்கின்றன.இந்த முனீஸ்வரர்களின் அருளால் அந்தந்தப்பகுதியில் மாந்திரீகப்பாதிப்பு இல்லாமல் மக்கள் சுகமாக வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மை!


நெல்லை மாவட்டம் சிவகிரி$ என்னும் ஊரில் பேருந்து நிலையத்துக்கு மிக அருகே தேரடி முனீஸ்வரர் கோவில் ,பன்னீர் மரத்தடியில் அமைந்திருக்கிறது.பார்க்க படம்:


ஒவ்வொரு வாரமும்(வெகுதூரத்தில் இருந்து வருபவர்கள் மாதம் ஒரு) வெள்ளிக்கிழமையன்று காலை 10.30முதல் 12 மணிக்குள் அல்லது மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இந்த கோவிலுக்கு வந்துவிட வேண்டும்.அப்படி வரும்போது பின்வரும் பொருட்களைக் கொண்டு வர வேண்டும்.


1.சிகப்பு ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை(வேறு எந்த பூவும் இதில் ஒன்று கூட இருக்கக் கூடாது)
2.ஒரு பத்திப் பெட்டி
3.நான்கு வாழைப்பழங்கள்(எந்த ரகமாக இருந்தாலும் பரவாயில்லை)
4.கொட்டைப்பாக்கு ரூ.3/-க்கு
5.வெற்றிலை ரூ.3/-க்கு
6.ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு
7.தேங்காய் (திருமணமானவர்கள் மட்டும்)
8.வெஜிடபிள் பிரியாணி(வீட்டில் சமைத்திருக்க வேண்டும்)
9.கோதுமை மாவால் செய்யப்பட்ட பாயாசம்


இவைகளைக் கொண்டு வந்து,முதலில் ரோஜாப்பூ மாலையை இந்த தேரடி முனீஸ்வரருக்கு  அணிவிக்க வேண்டும்;நான்கு வாழைப்பழங்களில் மொத்தபத்தியையும் கொளுத்தி வைக்கவேண்டும்;வெஜிடபிள் பிரியாணியையும்,பாயாசத்தையும் படைக்க வேண்டும்;கற்பூரத்தை கொளுத்திவிட்டு,இவரது சன்னிதியில் சில நிமிடங்கள் அமர்ந்து வேண்டிக்கொள்ள வேண்டும்.நமக்கு என்ன தேவையோ அதைத் தான் கேட்க வேண்டும்.பிறகு,இந்த சன்னிதியில் விழுந்து வணங்கிக்கொள்ள வேண்டும்.இது அவசியம்.


பிறகு,வெஜிடபிள் பிரியாணியை இந்தக் கோவிலின் வாசலில் நின்று கொண்டு வருபவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்;கொஞ்சத்தை வீட்டுக்கொண்டு போகவும் வேண்டும்;டயமண்டு கல்கண்டினையும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்;இவ்வாறு  தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகள் செய்து வர வேண்டும்.

இந்த 8 வெள்ளிக்கிழமைகளிலும் தாம்பத்திய உறவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.அதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமையும் கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம்.இந்த 8 வெள்ளிக்கிழமைகளும் அசைவம் சாப்பிடுவது;யாருடனாவது சண்டையிடுவது;ஆபாசப்படங்கள் பார்ப்பது;அனாவசியமான கெட்ட வார்த்தைகள் பேசுவதை கண்டிப்பாக செய்யக்கூடாது.இந்த 8 வெள்ளிக்கிழமைகளும் இந்த வழிபாடு செய்பவர்கள் அன்றிரவு மட்டும் தனியறையில் தூங்க வேண்டும்.
இந்த 8 வெள்ளிக்கிழமைகளுக்குப் பிறகு ஆண்டுக்கு* நான்கு வெள்ளிக்கிழமைகளுக்கு இதேபோல வழிபாட்டை இந்தக் கோவிலுக்கு வருகை தந்து செய்தால் போதும்;


 * 8 வது வெள்ளிக்கிழமையிலிருந்து ஓராண்டு கணக்கு வைத்துக் கொள்ளவும்.


இந்த முனீஸ்வரர் வழிபாட்டை நேர்மையாகவும்,ஒழுக்கமாகவும் இருப்பவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். மற்றவர்களால் இந்தக் கோவிலுக்கு சுற்றுலாவாக மட்டுமே வரமுடியும்.வீம்புக்குச் செய்ய நினைப்பவர்கள் தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.ஜாக்கிரதை!!!


இந்த வழிபாடு 8 வெள்ளிக்கிழமைகள் செய்தபின்னர்,அவர்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் (அது நேர்மையாக இருந்தால் மட்டும்) நிறைவேறும்.முனீ என்ற பெயருடைய பெண்களும் இதைச் செய்யலாம்.அவர்களின் தீட்டுநாட்களில் வெள்ளிக்கிழமை வந்தால்,அதைத் தவிர்த்து விட்டுச் செய்யலாம்.இதைச் செய்பவர்களுக்கு யாராவது மாந்தீரீக ஏவல் வைத்திருந்தால்  அது விலகிவிடும்;மாத விலக்குப் பிரச்னைகள் இருந்தாலும் அது குணமாகிவிடும்;மிகவும் சக்திவாய்ந்த அதே சமயம் சூட்சும வழிபாடு இது.இதைச் செய்து வருபவர்களுக்கு அஷ்டமச்சனி,ஜன்மச்சனி தொல்லை தீர்ந்துவிடும்.


$ விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.இங்கிருந்து தென்காசி,செங்கோட்டை,குற்றாலம் செல்லும் அனைத்துப்பேருந்துகளும் சிவகிரிவழியாக செல்பவை;


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹசெல்வ வளம் பெருக நாம் பின்பற்றவேண்டிய மரபுகள்செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.


செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.


ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; நாசமாகப் போச்சு; முடியாது;விளங்காது  = இதுமாதிரியான  அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.


பிரதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.


குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.


எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.
ஒரு போதும் வீட்டில் பெண்கள் அழக்கூடாது.அவர்கள் அழுதால்,வீட்டில் செல்வ வளம் தங்காது.


கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாட இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.


மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும் என்பது அனுபவ உண்மை!
தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.

தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.

இது எப்படி சாத்தியம்?

பெருமாள்,குபேரன்,மஹாலட்சுமியை வழிபட்டால் நமக்கு செல்வ வளம் கிடைக்கும்.ஆனால்,அப்படி செல்வ வளம் கிடைக்க வாரம் ஒரு நாள் வீதம் குறைந்தது பத்தாண்டுகளுக்கு உரிய கோவில்களுக்குச் செல்ல வேண்டும்; சிவபெருமானை வழிபட்டால்,நமது பாவங்கள் தீரும்.இதே மாதிரி பத்தாண்டுகள் வரையிலும் தினமும் ஏதாவது ஒரு சிவாலயம் சென்றால் ,நமது கர்மவினைகள் நீங்கும்.சரி! யார் 20 ஆண்டுகள் வரை காத்திருப்பது?

ஒரே ஒரு வழிபாட்டின் மூலமாக நமது கர்மவினைகள் குறைய வேண்டும்;அப்படி கர்ம வினைகள் குறையும்போதே நமது வருமானம்/சம்பளம் அதிகரிக்க வேண்டும்.செல்வச் செழிப்போடு வாழ வேண்டும்.அதே சமயம்,புதுப் பணக்காரனாகும் போது,நாம் பணத்திமிரைக் காட்டிடக் கூடாது என விரும்பினால்,நாம் வழிபட வேண்டிய தெய்வம்  ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரே!( வைஷ்ணவ வழிபாட்டில் சக்கரத்தாழ்வார் வழிபாடு என்பது ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடுதான்!!! யாரிடமும் இதைச் சொல்லிராதீங்க.ஓ.கே!)

இந்த தெய்வீக ரகசியங்களை நமக்கு ஆன்மீகரீதியில் ஆராய்ந்து சொன்னவர் எனது ஆன்மீக குருவுமாகிய திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்!!!


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹகேரள செண்டை மேளத்திற்கு தடை


சிவகங்கை: முல்லை பெரியாறு அணை பிரச்னையால், தென் மாவட்டங்களில் நடக்கும் ஐயப்பன் மண்டல பூஜைக்கு, கேரள செண்டை மேளத்திற்கு தமிழக பக்தர்கள் தடை விதித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கார்த்திகையில் மாலை அணிந்து, மார்கழியில் மண்டலாபிஷேகம் நடத்தி, ஜனவரி முதல் வாரத்தில் மகர ஜோதியை காண சபரிமலைக்கு சென்று வருவர். இதற்காக, சிவகங்கை, மானாமதுரை, ராமேஸ்வரம், மேலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், அந்தந்த நகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம் நடத்தி வருகின்றனர். இக்கால கட்டத்தில், கேரளாவினரின் செண்டை மேளத்திற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும். தடை: தற்போது தமிழக, கேரளா மாநிலங்களுக்கிடையே முல்லை பெரியாறு அணை பிரச்னை வலுத்துள்ள நிலையில், தமிழகத்தினர், கேரளாவிலும், கேரளாவினர் தமிழகத்திலும் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். கேரளாவை கண்டிக்கும் வகையில், தமிழக ஐயப்ப பக்தர்கள் இந்த ஆண்டு மண்டலாபிஷேக பூஜைக்கென அழைக்கப்படும், கேரளா செண்டை மேளத்திற்கு தடை விதித்துள்ளனர். இந்த ஆண்டு பெரும்பாலான கோயில்களில் மேளங்கள் ஒலிப்பது குறைந்துவிட்டது. சிவகங்கை ஐயப்ப பக்த சபை தலைவர் முத்துப்பாண்டி கூறியதாவது: முல்லை பெரியாறு அணை பிரச்னையால், கேரளா செண்டை மேளத்தினருக்கு வழங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப பெற்றுள்ளோம். அவர்களும் மனரீதியாக இங்கு வர அஞ்சுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் கொண்ட குழுவிற்கு 25,000 ரூபாய் வரை கொடுத்து அழைத்து வருவோம். இந்த ஆண்டு நாகர்கோவில் பகுதியில் செண்டை மேள பிரசித்தி பெற்றவர்களை அழைத்து வந்து ஐயப்பன் மண்டாலாபிஷேக பூஜையை நடத்துகிறோம், என்றார்.
நன்றி: தினமலர் 27.12.11                                                                                                                        

நமது அடிமைத்தனம் மாறிவிட்டதா? உங்கள் சிந்தனைக்கு இந்த பதிவு


1910 ஆம் ஆண்டு முதல் 1916 ஆண்டு வரைக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய வேலையாட்களை, ஆங்கில கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு அப்போது வைசிராயாக இருந்த ஹார்டிங் பிரபு தேர்ந்தெடுத்த இடம் எப்படிப்பட்டது தெரியுமா?

14 ஆம் நூற்றாண்டில் கொடூரமான தைமூர் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் மண்டை ஓடுகளைக் கொண்டு அந்த இடத்தில் ஒரு பிரமீடைக் கட்டியதாக சொல்லப்படுவதுண்டு. இந்த இடத்தில் மொகலாயச் சக்கரவர்த்திகள் சிவப்பு பாறைக் கற்களைக் கொண்டு தங்களுடைய ஆட்சிக்கு நினைவுச் சின்னங்களான செங்கோட்டை, ஜும்மா மசூதியையும் கட்டினார்கள். ஆனால் ஹார்டிங் பிரபுக்கு இது போன்ற வரலாற்று பின்புலம் பற்றி எதுவும் தெரியாமல் நிர்மாணித்த கட்டிடம் தான் இன்று வரைக்கும் இந்தியாவை ஆட்சி செய்ய உதவிக் கொண்டிருக்கின்றது.

சாம்ராஜ்யங்கள் சாம்பலாகிப் போவதும், மீண்டும் வேறொரு வகையில் உயிர்தெழுவதுமான இந்த நிகழ்வுகள் கால வரலாற்றில் வந்து போய்க் கொண்டேதான் இருக்கிறது.

வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் வந்து போன சுவடே இல்லாமல் அழிந்தும் போய்விட்டது. பழங்காலத்தில் தோன்றிய வட ஆப்பிரிக்காவில் தோன்றிய பேரரசுகள், மத்திய கிழக்கு ஆசியா, பாரசீகம், கீரிஸ்,ரோம், சிலுவைப் போர்கள், கொலம்பஸ்க்கு பிறகு வந்த ஐரோப்பிய பேரரசுகள் போன்றவற்றின் ஏகாதிப்பத்திய வளர்ச்சியே பெரும்பாலான போர்களுக்கும், உலகில் பசி, பட்டினி, பஞ்சம் போன்றவை உருவாக காரணமாக இருந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் கலாச்சாரம், பண்பாடுகளையும் காணாமல் போகவும் வைத்தது. உலகில் அமைதியற்ற சமூகங்களை உருவாக்கிய பேரரசுகள் தங்கள் நாடுகளில் அதிக அளவு போதைப் பழக்கத்தையும் மனோ ரீதியான பிரச்சனைகளும் உடைய நாகரிக மனிதர்களையும் தான் வளர்க்க முடிந்துள்ளது.

ஆனால் இன்று வரைக்கும் அமெரிக்கா தனது ஏகாபத்திய வாழ்க்கையை இழந்துவிட தயாராய் இல்லை என்பதை இங்கே குறிப்பிடலாம். பிரிட்டன் வரலாற்றை உற்றுக் கவனித்துப் பாருங்கள்.

எந்த இடத்திலும் ஒரு துளி கூட கருணை, காருண்யம், மனிதாபிமானம் என்பதை மருந்துக்குகூட பார்க்கமுடியாது. வெறிகொண்ட வேங்கை போலத்தான் வேட்டையாடி தங்களை வளர்த்துக் கொண்டே வந்துள்ளார்கள். ஆனால் அமெரிக்காவை ஆண்டவர்கள் இன்று அமெரிக்காவை அண்டிப் பிழைப்பவர்களாக மாறியுள்ளது காலத்தின் கோலம் தானே?

உலக வரலாற்று சரித்திரத்தில் எந்த பேரரசும் நீடித்து இருந்ததாக சரித்திரமே இல்லை. இன்று வியப்பை தந்து கொண்டிருக்கின்ற அமெரிக்காவின் நிலையும் இதுவே. எந்த நாடும், தனி மனிதனும் மற்றவர்களை சுரண்டி நீண்ட காலம் வாழ்ந்ததாக இல்லை.

ஆனால் இந்தியா கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஏராளமான பஞ்சம், பசி, பட்டினிகளைத் தாண்டி வந்தபோதிலும் இன்று வரையும் அடிப்படை கட்டுமானம் சிதையாமல் தானே இருக்கிறது? எப்படி?

இந்தியா இப்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட உயர்ந்திருக்கிறது. உண்மை தான். முழுமையான கல்வியறிவு தேசம் என்று இல்லாவிட்டாலும் கூட நடுத்தர வர்க்கத்தின் மூளை அறிவு இன்று உலகம் முழுக்க மென்பொருள் துறை முதல் பல்வேறு துறைகளிலும் கொடி கட்டி பறக்கின்றது. இந்தியர்கள் உலகம் முழுக்க பரவ காரணமாகவும் இருக்கிறது.. இதை மற்றொரு வகையில் பார்க்கப் போனால் நவீன அடிமைகளை உருவாக்கி உலகம் முழுக்க அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்..

இந்தியர்களின் திறமையை உள்நாட்டில் பயன்படுத்த ஆளில்லாத காரணத்தால் எவர் வந்து நம்மை கொத்திக் கொண்டு போகமாட்டாரோ என்று ஏக்கத்தில் தான் ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நிறுவன வர்க்கமும் அதிகார வர்க்கமும் உருவாக்கும் கூட்டணியின் மூலம் இந்த பரந்த உலகம் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரப்படுகின்றது. மேல்தட்டு மக்களை அவர்களின் வாழ்க்கையை விளம்பரங்களும், ஊடகங்களும் முன்னிறுத்துகின்றது. நடுத்தர வர்க்கத்தையம் அவ்வாறு ஒருவிதமான வாழ்க்கை வாழ் வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.

உலகமயமாக்கல், தராளமயமக்கல், பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் எல்லாவிதமான வசதிகளையும் பெறுவதும் பின்னால் உள்ளவர்களை சுரண்டலுக்கு உட்படுத்திக் கொண்டிருப்பதுமே ஆகும்.

இதன் காரணமாகவே எனக்கு என்ன லாபம்? என்ற பேராசை என்பது அடித்தட்டு மக்கள் முதல் அதிகாரவர்க்கம் வரைக்கும் ஊடுருவிப் போனதால் எவரிடம் சேவை மனப்பான்மையை எப்படி எதிர்பார்கக முடியும். மாற்றம் என்பது தனிமனிதனில் இருந்து தொடங்குவது என்பதையே நாம் உணராமல் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இங்கு மதம் முக்கியம். அதற்குள் பிரியும் ஜாதிக்கூறுகள் அதைவிட முக்கியம். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தாலும் பள்ளர் எவரும் பறையரை திருமணம் செய்ய விரும்பதில்லை. செட்டியார் எவரும் நாடாரை நினைத்துப் பார்ப்பதில்லை. இதைவிட முக்கியம் அவரவரின் கடவுள் நம்பிக்கை.

இந்தியர்களின் பெரும்பாலனோருக்கு இருக்கும் மறுபிறவி நம்பிக்கை ஒன்று தான், நிகழ்கால அவலத்தை பொறுத்துக் கொள்ள வைக்கின்றது. விலங்குகள் போல நின்று கொண்டே மூத்திரம் போய்க்கொண்டிருக்கும் சந்தை கடந்து போய் தெரு முனையில் இருக்கும் கோவில் தரிசனத்தை பயபக்தியுடன் வணங்குவது நம்முடைய பண்பாடு..

ஒழுக்கத்தை விட நமக்கு பயமே முக்கியம். 

அந்த பயம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்து கொண்டேயிருப்பதால் இவ்வளவு பெரிய நாட்டை மிகக்குறைவான கண்காணிப்பு மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகின்றது. 

அவரவர் மத நம்பிக்கைகளின் காரணமாகவே மதத்தால், மொழியால், ஜாதியில், குணத்தால் பிரிந்து வாழும் இந்த அகண்ட தேசம் பலவீனமாகாமல் தொடர்ந்து சிறிதளவேனும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ..           நன்றி: 

                                                                 

பாரதத்தின் பொருளாதார முதுகெலும்பை ஒடித்த ராபர்ட் க்ளைவ்


இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிறுவியவர் என்றழைக்கப்படும் இராபர்ட் கிளைவ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

குறிப்பாக நமது அரசியல்வாதிகள் அத்தனை பேர்களும் மோசம் என்று கருதிக் கொள்பவர்கள் இராபட் கிளைவ்பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் இவரைப்பற்றி வானாளவ புகழ்ந்து எழுதித் தள்ளியிருக்கிறார்கள். வரலாறு என்பது எப்போதும் ஜெயித்தவர்களை கொண்டாடுவது வாடிக்கை என்றாலும் ஒழிந்திருக்கும் உண்மைகளை ஒரு நாள் வெளியே வரத் தானே செய்யும். .

கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் வர்க்கத்தை தொடங்குவதற்காக 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முகலாய சக்ரவர்த்தியின் அனுமதியை பெற்றுருந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் நிறுவியது தான் தற்போது தமிழ்நாட்டு மாநில முதலமைச்சரின் அலுவலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை. இந்த கோட்டையை அடிப்படையாகக் கொண்டு இப்போது சென்னை என்றழைக்கப்படும் நகரம் வளர்ச்சியடைந்தது. ஏறக்குறைய இந்த கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் மேல்மட்டத்தினர் உலாவும் பகுதியாகவே இருந்தது.


இந்த கோட்டைக்கு சாதாரண எழுத்தராக 1743ம் வருடம் வேலைக்கு வந்தவர் தான் இராபட் கிளைவ். அப்போது இவருடைய வருட சம்பளம் 15 பவுண்ட். ஆனால் இவர் சில வருடங்களிலேயே ஜெனரலாக பிற்காலத்தில் பிரபுவாக (பிலாஸி) தன்னை உயர்த்திக் கொண்டார். இவரைப்பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் மிகச் சிறந்த மதிநுட்பமும், இராணுவ திறமையும் மிக்கவர்.

இதன் காரணமாகவே வாழ்வில் உயர்ந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் ஆழமாக வேறூன்ற உதவினார் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவரிடம் இருந்த ராணுவ பலம் என்பது வெகு சொற்பமே. மேலும் இவருடன் இருந்த முக்கால்வாசிப் பேர்கள் பொறுக்கிகளும், காலிகள், சமூகக் கழிசடைகள் போன்றவர்களும் தான் இருந்தனர்.

முகலாயர்களின் வழிவந்த நிலப்பிரபுத்துவ அரசர்கள் தமக்குள் இடைவிடாது சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். தன்னிடம் இருந்த விசுவாசமான போக்கிரிகளை துணை கொண்டு, இராபர்ட் கிளைவ் தந்திரத்தாலும், வஞ்சகம், சூதுக்களாலும் முறியடித்து படிப்பயாக இங்கே சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார்.

இந்தியாவின் முதல் தலைமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இன்றைய அரசியல்தலைவர்களின் முன்னோடியாக திகழ்ந்தனர். லஞ்சம், ஊழல், பொறாமை, பேராசை, காட்டுமிராண்டித்தனம், எது குறித்தும் அஞ்சாமை போன்றவற்றை குணாதிசியமாக வைத்து இந்தியாவை முடிந்தவரைக்கும் சூறையாடினர்.

இராபட் கிளைவ் கவர்னராக இருந்த போது மற்றொரு காரியத்திலும் கவனமாக இருந்தார். இந்தியாவின் கல்வி முறை, விவசாய முறையையும் நீண்ட ஆராய்ச்சியாக எடுத்துக் கொண்டு முடிவாக இரண்டு தீர்மானத்திற்கு வந்தார். கல்வியை மெக்காலே என்ற புண்ணியவான் எடுத்துக்கொள்ள இவர் விவசாயத்தில் கை வைத்தார்

கால்நடைகள், மற்றும் பசுக்கள் இந்திய விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பதை அழிக்க வேண்டுமென்று கணக்கில் எடுத்துக் கொண்டு 1760 முதல் பசுவதைக்கூடம் நிறுவி நாள்தோறும் கறிக்காக என்ற நோக்கில் 50,000 கால்நடைகளை கொல்லும் புனிதப்பணியை துவங்கினார்.

ஒரு ஆண்டில் மட்டும் கொல்லப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு கோடியாகும்.

காரணம் அப்போது இந்தியாவில் இருந்த விவசாயம் நம்முடைய கால்நடைகளின் சாணம், மூத்திரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு ஏக்கரின் மூலம் 54 குவிண்டால் அரிசியை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. 1910 வரைக்கும் இரவு பகலாக இந்த பசுவதைக் கூடம் இயங்கிக் கொண்டேயிருந்தது. இன்று வரைக்கும் நவீணமாக்கப்பட்டு இந்த தொழில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதன் பலன் இன்று கோடிக்கணக்கான பணத்தை இறக்குமதி ரசாயன உரத்திற்கு கொண்டு போய் கொட்டி மானிய விலையில் உழவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பழங்கதை பேசாதே என்று எளிதாக பலவற்றை புறந்தள்ளி விடுகின்றோம்.

நமது விவசாயத்தில் இருந்த ஏராளமான சாத்தியக்கூறுகள் இன்று இருந்த சுவடே தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டது.

ஒரு சின்ன உதாரணத்தை பார்த்து விடலாம்.

விதை நெல் கோட்டை என்பது கீழ் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு நன்றாக தெரிந்த வார்த்தை இது. தங்களுக்கு தேவைப்படும் விதை நெல்லை சேகரிக்கும் முறையைத்தான் இப்படி குறிப்பிடுவார்கள். அறுவடை முடிந்ததும் விதை நெல்லை நன்றாக வெயிலில் காய வைத்து சுத்தமான வைக்கோலைக் கொண்டு பிரி (கயிறு போன்று திரித்து) செய்து அதன் மேல் வைக்கோல் பரப்பி அதில் 18 மரக்கால் (55 கிலோ) விதை நெல்லை வைத்து பந்து போல இறுக்கி சுற்றி வைத்து விடுவார்கள். இதற்கு பெயர் தான் விதை நெல் கோட்டை.

இந்த கோட்டையின் மேல் காற்றுப் புகாதவாறு பசு மாட்டு சாணத்தை பூசி நன்றாக காய்ந்த பிறகு தனியாக ஒரு பகுதியில் அடுக்கி வைத்து விடுவார்கள். இது போன்று செய்வதால் உள்ளே உள்ள நெல் ஒரே தட்பவெப்ப நிலையில் இருக்கும். எந்த பூச்சி புழுவும் அண்டாது. தேவைப்படும் போது இதை தனியாக எடுத்து அப்படியே 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்கள் முட்டம் போட வைத்து அப்படியே நாற்றாங்காலில் தெளிக்க பயிர்கள் ஜம்மென்று பச்சையாய் சிரிக்கும்.

ஆனால் சணல் பைக்கு மாறி ப்ளாஸ்டிக் பைக்கு மாறி இன்று இன்னும் பல நவீன வசதிகளுடன் வந்து விட்டது. இன்று பச்சையாய் பயிர் சிரிக்கவில்லை. விவசாயிகளுக்குத் தான் பயிர் பலன் தருவதற்குள் இரத்தம் சிவப்பாய் வருகின்றது.

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு சென்று கொண்டிருந்த செல்வம் அங்கே தொழிற்துறையை வெகு சீக்கிரமே முன்னேற்ற உதவியது. இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொண்டிருந்த பிரிட்டன் தொழிலதிபர்களுக்கு கிடைத்த அபரிமிதமான லாபத்தைப் போலுள்ள உதாரணத்தை உலக பொருளாதார உறவுகளின் வரலாற்றிலேயே பார்க்க முடியாது.

உலகத்தின் தொழிற்சாலையாக பிரிட்டன் மாறுவதற்கு இராபட் கிளைவ் உதவினார்.


அத்துடன் தனக்காக சேர்த்த சொத்துக்களும் கணக்கில் அடங்காது. நகையாக, பணமாக, பண்ணை வீடுகளாக என்று சேர்த்து குவித்தார். இதையே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் " இந்தியர்கள் தங்களுடைய பாதாள அறைகளிலிருந்த தங்கத்தையும் மாணிக்கங்களை எனக்கு முன்னால் குவியலாகக் கொட்ட அந்த குவியல்களுக்கிடைய நான் உலாவுவதுண்டு " என்று ஆணவமாக பேசினார்.

இதைத்தான் நேரு பின்வருமாறு எழுதினார்.

"அது பகற்கொள்ளையே. அவர்கள் "பண மரத்தை" ஆட்டினார்கள். பயங்கரமான பஞ்சங்கள் வங்காளத்தை அழிக்கும் வரை அந்த மரத்தை திரும்பத்திரும்ப ஆட்டினார்கள்."

ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடத்திக் காட்டிய இந்த அரசியல் அயோக்கியனுக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் என்ன பெரிதான வித்யாசம்?

அப்போதும் இப்போதும் எப்போதும் அரசியல் என்பது தந்திரம், சமார்த்தியம், சுயநலம் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு தான் இயங்குகின்றது. அன்று நம்முடைய வளங்கள் பிரிட்டனுக்கு மட்டுமே சென்றது. இப்போது கருப்பு பணமாக பல நாட்டு வங்கிகளுக்கும் சென்று கொண்டுருக்கிறது.

தற்போது ஸ்விஸ் வங்கியில் மட்டும் இருக்கும் இந்தியர்களிள் பணம் 25 லட்சம் கோடி. மற்ற வங்கிக் கணக்குத் தொகை எத்தனையோ?. .

இந்தியக் கறுப்புப் பணத்தின் அளவு, இந்தியாவின் மொத்தக் கடன் தொகையிலும் அதிகம் என்கிறார்கள்.
நன்றி::தேவியர் இல்லம்

மல்லபுரத்தில் மீண்டும் நரசிம்ம கர்ஜனை!!!


 திப்பு சுல்தான் காலத்தில், தற்போது கேரளத்தில் உள்ள, அன்றைய மலபார் பகுதியில் நூற்றுக்கணக்கான கோயில்கள் முஸ்லீம் வெறியர்களால் தகர்க்கப்பட்டன;கோவிலின் விலைமதிப்பற்ற நகைகளும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன;அவற்றில் இரண்டு கோவில்கள் குறிப்பிடத்தக்கவை: தளி சிவன் கோவில் மற்றும் மல்லபரம்பா நரசிம்ம மூர்த்தி கோவில்.இவை இரண்டுமே தற்போதைய மல்லபுரம் மாவட்டத்தில் இருக்கின்றன.


ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு முதல்வராக இருந்த கம்யூனிஸ்டு ஆட்சியின்போது,நடத்தப்பட்ட பிரம்மாண்டமான கிளர்ச்சிக்குப்பின்னர், தளியில் இருந்த சிவன் கோவில் மீண்டும் கட்டப்ப்பட்டு,குடமுழுக்கு செய்யப்பட்டது.பழையபடி,வழிபாட்டு ஸ்தலமாயிற்று.


இரண்டாவது கோவில், 350 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு தனியார் கோவில்.அதை நிர்வகித்து வந்த  குடும்பத்தினரின் அக்கறையின்மையின் காரணமாக ஸ்ரீநரசிம்மமூர்த்தி குடிகொண்டிருந்த அந்தக் கோவில் சிதிலமடைந்தது.1779 இல் திப்பு சுல்தான் மலபார் பகுதிக்கு வந்த போது அது நாசமாக்கப்பட்டது.

கோவிலைச் சுற்றியுள்ள 100 ஏக்கர்நிலத்தை, அந்த இடத்தில் ரப்பர் மரங்களைப் பயிரிடும் நோக்கில் உன்னியன் சாகேப் என்பவர் குத்தகைக்கு எடுத்தார்.1947 ஆம் ஆண்டில் ஓர் இரவு அவர் கனவில் ஒரு காட்சி கண்டார்.பயங்கர முகம் கொண்ட ஓர் உருவம் தன்னை நோக்கி கூச்சலிடுவதைப் போல, அந்த கனவு அவருக்கு பல இரவுகள் தொடர்ந்து வந்தது.மிகவும் பயந்து நடுங்கிப்போன சாகேப், இது குறித்து தனது இந்து நண்பர்களிடம் கூறினார்.அவர்களது ஆலோசனைப்படி,உன்னியன் சாகேப் ஒரு ஜோதிடரை அணுகினார்.அந்த ஜோதிடர் சொன்னார்: “உங்கள் கனவில் தோன்றுவது சாட்சாத் நரசிம்ம மூர்த்திதான்! தனது பழைய இடத்தில் தன்னை மீண்டும் ஸ்தாபனம் செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்!!!”
அவ்வாறே செய்து முடிப்பதாக, உடனே தன் மனதில் முடிவெடுத்தார் அந்த முஸ்லீம்(உன்னியன் சாகேப்).என்ன ஆச்சரியம்! அன்று முதல் ,இரவில் அவருக்கு அந்த பயங்கர கனவு வருவது நின்று விட்டது.


தீவிரமாக வேலையில் இறங்கினார் உன்னியன் சாகேப்!!! நம்பூதிரி பிராமணர்களை சிற்பங்கள் வடிக்கும் கலைஞர்களை கோயில் கட்டுமானப்பணிக்குத் தேவையான அனைத்துத் தொழில்களைச் சார்ந்தவர்களையும் சந்தித்தார்.திருப்பணி துவங்கி கோவில் கட்டி முடிக்கப்பட்டு,குடமுழுக்கு நடைபெறும் நிலையில் இருந்தது.
கோவில் கட்டுமானத்தின் போது காணப்பட்ட சூழ்நிலை,அங்கு ஒலிக்கப்பட்ட வேத மந்திரங்கள் காரணமாக ஒரு தாக்கம் ஏற்பட்டு,உன்னியன் சாகேப் தான் ஒரு இந்துவாக மாற விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார்.
மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட இந்து சமுதாயத் தலைவர்கள் அவரை 45 மைல்கள் தொலைவில் உள்ள கோழிக்கோடுக்கு அழைத்துச் சென்றார்கள்.அங்கு புத்தாசிங் என்பவரது தலைமையில் இயங்கிய ஆரிய சமாஜ அமைப்பு மூலம் சாகேப் தாய்மதம் திரும்பினார்.தன் மகன்கள் மற்றும் சகோதரருடன் உன்னியன் சாகேப் ராஜசிம்மன் என்றும்,அவரது தம்பி தயாசிம்மன் என்றும், சிறுவர்கள் இருவரும் பதேசிங்,ஜோராவர் சிங்( குரு கோவிந்தசிங்கின் புதல்வர்களின் பெயர்கள்) என்றும் பெயர்கள் சூட்டப்பட்டனர்.சில மாதங்கள் கழிந்தன.ராஜசிம்மனாகிய உன்னியன் சாகேப்
தன் தம்பிக்கு ஒரு நம்பூதிரி பிராமணப்பெண்ணை திருமணம் செய்து வைக்க விரும்பினார்.நம்பூதிரி சமூகம்,அவரது விருப்பத்தை ஏற்று,பூர்த்தி செய்தது.சிறுவர்கள் இருவரும் டில்லியில் உள்ள ஆர்ய சமாஜப் பள்ளி ஒன்றில் கல்வி பயில அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி எல்லாம் அங்கிருந்த முஸ்லீம்களிடம் அதிர்ச்சியையும்,ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.3.8.1947 அன்று இரண்டு லாரிகளில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த முஸ்லீம் முரடர்கள், ராஜசிம்மனையும் இதரர்களையும் படுகொலை செய்தனர்.புதிதாகக் கட்டப்பட்ட கோயிலையும் நாசப்படுத்தினர்.டில்லியில் இருந்ததால் சிறுவர்கள் உயிர் தப்பினர்.


இந்தப் படுகொலையை எதிர்க்க எந்த இந்துவும் முன்வரவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.பயத்தால் நடுங்கிப்போன இந்துக்கள்,தங்கள் வீட்டுக் கதவுகளை உட்பக்கமாக பூட்டிக்கொண்டனர்.இறந்த உடல்களைக் கோர எவரும் முன் வரவில்லை;காவல்துறையினரே அவற்றை எந்த சடங்கும் இன்றி,மலையடிவாரத்தில் புதைத்தனர்.அந்த காலகட்டத்தில் ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கம் அங்கே வலுப்பெற்றிருக்கவில்லை;
ஒரு பெரிய செல்வந்தரான ராஜசிம்மனின் மாமனார்,சிறுவர்களை தன் பொறுப்பில் வைத்துக்கொண்டார்.இன்று 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ்.அந்தப்பகுதியில் வலுவாக உள்ளது.1947இல் சிறுவர்களாக இருந்தவர்கள்,அந்த கொடூரத்தை அன்று நேரில் கண்டவர்கள்,அறிந்தவர்கள்,தங்களது அந்த காலத்திய இயலாமையைக் குறித்து வருந்தியவர்கள் அனைவரும் 1947இல் செய்ய முடியாததை இன்று சாதிக்க முடிவெடுத்தனர்.


‘நரசிம்ம மூர்த்தி கோவில் டிரஸ்ட்’ அமைக்கப்பட்டது.அதன் மூலம் நீதி மன்றத்தை நாடி அந்த கோவில் நிலங்களை மீட்டு,ராஜசிம்மனின் சந்ததியினர் பொறுப்பில் விடப்பட்டு,அந்த இடத்தில் மீண்டும் கோவில் கட்ட நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டது.
தீவிர,கடுமையான உழைப்புக்குப் பின்,அந்த இடத்தில் ஒரு பிரம்மாண்டமான ஆலயம் எழுந்தது.கோவிலைக் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆயிற்று.நரசிம்மர் கோவிலில் விநாயகர்,சுப்ரமணியர்,ஐயப்பன்,துர்கை விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.குடமுழுக்கு மிகப்பெரிய திருவிழா போல சிறப்பாக செய்யப்பட்டது.இந்து விரோதிகள் மனதில் கிலி ஏற்படுத்தும் விதமாக, மல்லபுரம் இந்துக்கள் நரசிம்மரைப் போல கர்ஜனை செய்யத் துவங்கியுள்ளனர்.இந்த இடத்தில் நரசிம்மர் கோவில் கட்டப்பட்டிருப்பது 5 வது தடவையாகும்.
நவக்கிரகங்களில் சந்திரபகவானால் கட்டப்பட்டது சோமநாதபுரம் சிவாலயம்.பூசாரிகள் மட்டுமே 2000 பேர்களுக்கு மேல் எனில் ,இந்த கோவிலின் பிரம்மாண்டத்தை கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்பேர்ப்பட்ட சோமநாதபுரம் கோவிலை முஸ்லீம்கள் 17 முறை நாசமாக்கினர்.அதை மீண்டும் கட்டிட அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல்,முயற்சி செய்தார்.அவருடன் இந்த கோவில் புனர்நிர்மாணத்திற்கு கே.எம்.முன்ஷி போன்றவர்களும் உறுதுணையாக இருந்தனர்.கோவில் குடமுழுக்கு விழாவிற்குச் செல்வதை அன்றைய பிரதமர் நேரு எதிர்த்தாலும்,அதையும் மீறி அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டதையும் நாம் மறக்கக் கூடாது.


கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்,நரசிம்மரின் விக்கிரகம் திருவுலாவாக மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.அனைத்து ஊர்களிலும் இந்துக்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்று வணங்கினர்.மல்லபுரம் இந்துக்களுக்கு ஒரு புதிய தன்னம்பிக்கை உணர்வு ஏற்படுத்தியது.அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4 கி.மீ.வரை ஒரு இந்துவீடு கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனாலும்,நரசிம்மரை தரிசிக்க தினமும் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றனர் .
நன்றி:விஜயபாரதம் பக்கம் 18,19; 30.12.11


   

தேசபக்திநிறைந்த ஒரு நுகர்வோர் நலன் அமைப்பு(இது ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு)
மத்திய அரசின் தவறான பொருளாதார,தாராளமயமாக்கல்,உலகமயமாக்கல்(அமெரிக்கமயமாக்கல்) கொள்கைகளால் விலைவாசி தினமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.இதைக் கண்டித்தும்,உலகமயமாக்கலை இந்தியாவில் தடுத்து நிறுத்தக்கோரியும் பேரணி நடத்தி ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் கோரிக்கை மனு அளித்தது அகில பாரத க்ரஹாக் பஞ்சாயத்து.(ஏ.பி.ஜி.பி)!
இதன் சாதனைகள்:
·       சென்னை எழும்பூர் சேலம் இடையே இரவு ரயிலினை அதிவேக ரயில் என்ற நிலையிலிருந்து(சூப்பர் பாஸ்ட்),விரைவு ரயில்(எக்ஸ்பிரஸ்) என மாற்றக்கோரி, பயணிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி ரயில்வே நிர்வாகத்திடம் அளித்தது.இதன் மூலம் மேல்வகுப்பு பயணிக்கு ரூ.30/-ம்,இதர பயணிகளுக்கு ரூ.20/-ம் பயணக்கட்டணம் குறைக்கப்பட்டது. சூப்பர் பாஸ்ட் என்ற பெயரில் வேகம் குறைந்த ரயிலுக்கு அதிக கட்டணம் பெற்றது இதன் மூலம் தடுக்கப்பட்டது.மேலும் பயண நேரமும்,புறப்படும் நேரமும் பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது.
·       திருச்சி சென்னை இடையே இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் 1.5.11  லிருந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது எனக்கூறி தாம்பரத்திற்கு முன்பதிவு செய்வதை நிறுத்திவிட்டது.
நுகர்வோரின் கோரிக்கையை ஏற்று திருச்சி,தஞ்சை,தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளிடம் கையெழுத்து பெற்று,தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் அளித்ததன் விளைவாக,1.5.11 லிருந்து எப்போதும் போல் தாம்பரத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் நின்று செல்கிறது.இது ஏ.பி.ஜி.பி.யின் இரண்டாவது சாதனை ஆகும்.

·       ஒரே தடத்தில் பலவித தடப்பலகை பேருந்துகள், ஒரே தூரப் பயணத்திற்கு பலவகை பயணக்கட்டணங்களை வசூலித்து வந்தது சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்.
 இந்த அவலநிலையை அகற்றுவதற்காக சென்னை ஏ.பி.ஜி.பி. தொண்டர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி,ஆயிரக்கணக்கான பயணிகளிடம் கையெழுத்துக்களைப் பெற்று,தமிழக அரசின் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்ததன் பேரில் ஏ.பி.ஜி.பி.யின் கோரிக்கை நிறைவேறியது.
அதன் காரணமாக,சாதாரண பேருந்துகளாக ஓடிக்கொண்டிருந்த 698 பேருந்துகளுடன் மேலும் 610 சாதாரண பேருந்துகளை இணைத்து,மொத்தம் 1308 சாதாரணக் கட்டணப்பேருந்துகளை இயக்கத் துவங்கியுள்ளது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்.

·       சங்கடத்தையும்,குழப்பத்தையும் ஏற்படுத்திய பலவகை பேருந்து கட்டணம்,திருத்தி அமைக்கப்பட்டு நான்கே நான்கு வகை பேருந்து கட்டணமுறையை நடைமுறைக்குக் கொண்டுவந்தது தமிழக அரசு.இது நுகர்வோர் நலனுக்காக ஏ.பி.ஜி.பி. செயல்பட்டதற்கு கிடைத்த இன்னொரு வெற்றி!!
·        தரநிர்ணயம் செய்யப்படாத தராசுகளும்,எடைக்கற்களும் கொண்டு தி.நகர்,மாம்பலம் காய்கறி மார்க்கெட்டுகளில் நுகர்வோர் ஏமாற்றப்பட்டு வந்தனர்.ஏ.பி.ஜி.பி.யின் தொண்டர் கோதண்டபாணியின் சீரிய முயற்சியால்,முறைகேடாக வியாபாரம் செய்து வந்தவர்களிடம் இருந்து 62 எடைக்கருவிகளையும்,பலப்பல எடைக்கற்களையும் அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தனியொரு நுகர்வோரின் விழிப்புணர்வுக்குக் கிடைத்த வெற்றியாகும்.


நுகர்வோரின் நலனுக்காக துவக்கப்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்பு அகில பாரத க்ரஹாக் பஞ்சாயத்து ஆகும்.இது 1974 இல் பதிவு செய்யப்பட்டது.
30 மாநிலங்களில்,153 மாவட்டங்களில், 486 மையங்களுடன் கிளைபரப்பியுள்ள ஏ.பி.ஜி.பி.,1986 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் அமலாக்கத்திற்கு மூலகாரணமாக இருந்து வருகிறது.தமிழ்நாட்டிலும் இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது.இந்த அமைப்பினை தங்கள் பகுதியில் துவக்கிட விரும்புவோர்,பின்வரும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
90435 17840, 99527 47525
மின் அஞ்சல்:grahakh.tnadu@gmail.com

நமஸ்தே!!

நாகப்பட்டிணத்தில் மூன்று சித்தர்களின் ஜீவசமாதிகள்


டெல்டா மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டிணம் மாவட்டத்து ஆன்மீகவாதிகளுக்கு ஒரே ஊரில் 3 சித்தர்கள் இருந்து அருள்பாலித்து வருவது தெரிந்த விஷயமே! இனி இந்த விஷயம் உலகம் முழுவதும் பரவவே இந்தப் பதிவு.
நாகப்பட்டிணம் மாநகரில் நீலாய தாட்சிணியம்மன் கோவிலுக்குள்ளே அழுகண்ணி சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது.


நாகப்பட்டிணம் சுனாமிப்பாலத்தைக் கடந்து சுமார் 3 கி.மீ.தூரத்தில் வடக்குப் பொய்கை நல்லூர் என்னும் கிராமம் இருக்கிறது.இங்கே கோரக்கரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.நாகப்பட்டிணத்து அன்பர்களின் முயற்சியால் அருமையான பராமரிப்பும்,தினமும் மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.விருப்பமுள்ள பக்தர்கள்,சித்தர்களைத் தேடி ஆன்மீகப்பயணம் செல்பவர்களுக்கு கோரக்கர் சூட்சுமமாக வழிகாட்டுவார்;அன்னதானத்தில் பங்கேற்கவிரும்புவோர் இந்த கோரக்கரின் ஜீவசமாதியைத் தொடர்புகொள்ளலாம்.

பெரும்பாலான சித்தர்களின் ஜீவசமாதிகள் சிவாலயங்களில் இருக்கும்போது கோரக்கர் மட்டும் இங்கே இருந்து அருள என்ன காரணம்? சில வருடங்களில் இந்த தெய்வீக ரகசியம் வெளிப்பட்டுவிடும்.ஏனெனில்,சித்தர்கள் இந்தியாவை மையமாகக் கொண்டு 72,000 ஆண்டுகள் பூமியை ஆளப்போகிறார்கள்.எனவே,சித்த சக்திகள் வெளிப்படும் காலம் கனிந்துவிட்டது.

அங்கிருந்து சுமார் 10 கி.மீ.தூரம் சென்றால் எட்டுக்குடி என்னும் கிராமத்தை அடையலாம்.அங்கே வான்மீகி சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு அமாவாசையன்று மதியம் 11.30 முதல் 12.30 வரையிலான நேரத்தை அபிஜித் நேரம் என்பர்;இந்த நேரத்தில் இந்த ஜீவசமாதிகளில் ஏதாவது ஒரு இடத்திற்கு விரதத்தோடு செல்ல வேண்டும்;அவ்வாறு சென்று,மஞ்சள் துண்டினை இந்த ஜீவசமாதிகளின் முன்பாக விரித்து,நெற்றியில் விபூதி பூசி,இரு கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்து,ஓம்(சித்தரின் பெயர்)நமஹ ஜபித்து வருவோம்;


சித்தர்கள் அடிக்கடி வழிபடும் கழுகாசலமூர்த்தி,கழுகுமலை


1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை முதன்மை சித்தர்கள் எனப்படும் 18 சித்தர்களும் 24.12.11 அன்று மாலை நெல்லை மாவட்டம் கழுகுமலையில் இருந்து அருள்புரிந்து வரும் கழுகாசலமூர்த்தி முருகக்கடவுளை வழிபட சூட்சுமமாக வர இருப்பதை ஆன்மீக ஆராய்ச்சியாளரும் எனது ஆன்மீக குருவுமாகிய திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியோடு தெரிவித்திருந்தோம்.

24.12.11 சனிக்கிழமையும்,அமாவாசையும் சேர்ந்திருந்த இந்த தெய்வீகமான நன்னாளில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரையிலும் கழுகுமலைக்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள்,சித்தர்களை தரிசிக்க ஆர்வமுள்ள ஆன்மீக தாகமுள்ளவர்கள்,முருக பக்தர்கள் சுமார் 300 பேர்கள் வந்திருந்தனர்.
கழுகாசலமூர்த்தியை பத்தி,தேங்காய்,டயமண்டு கல்கண்டு,ரோஜாப்பூ மாலை,வெற்றிலை பாக்குடன் வந்து வழிபட்டனர்.வழிபட்டப் பின்னர்,திரு.சிவமாரியப்பன்,புளியங்குடி அவர்கள் தலைமையில் கழுகுமலையை  சிவமந்திரம் ஜபித்தவாறு கிரிவலம்  சென்றார்கள்.ஒரு சில பக்தர்களுக்கு கழுகாசலமூர்த்தி கோவிலிலேயே  ஒளிவடிவ சித்தர்கள் தரிசனம் கிடைத்தது;மேலும் பல பக்தைகளுக்கு கிரிவலப்பாதையில் அவர்களின் முன்னோர்களாகிய சித்தர்களின் தரிசனம் கிடைத்ததை,கிரிவலம் நிறைவடைந்ததும் தெரிவித்தனர்.சற்றும் எதிர்பாராமல்,கிரிவலம் நிறைவடைந்ததும்,கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அன்னதானம் கிடைத்தது;கி.பி.2012 க்கான காலண்டர்களும் ஒரு அன்பர் விநியோகித்தார்;அந்த காலண்டரின் பதிணெண் சித்தர்களின் படங்கள் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது.
கிரிவலப்பாதையில் மிளகாய்ப்பழ சித்தரின் ஜீவ சமாதியை அனைவரும் தரிசனம் செய்தனர்.இந்த சித்தருக்கும் சென்னையில் இருக்கும் பாம்பன் சுவாமிகளுக்கும் சித்தத் தொடர்பு இருப்பதை திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் தெரிவித்தார்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

கோவில் பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் சிவகாசிக்கும் நடுவே கழுகுமலை அமைந்திருக்கிறது.கோவில் பட்டியிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் அதிகமாக உள்ளன.கோவில்பட்டியிலிருந்து வெறும் 21 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கிறது.அடுத்த படியாக சங்கரன்கோவிலில் இருந்தும் வரலாம்;சிவகாசியிலிருந்து மிகக்குறைவான பேருந்துவசதிகள் இருக்கின்றன.ஓம் அருணாச்சலாய நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் நந்தீசாய நமஹ
ஓம் திருமூலதேவாய நமஹ
ஓம் கருவூர் தேவாய நமஹ
ஓம் ராமலிங்க தேவாய நமஹ