RightClick

வேர்களைக் காட்டும் வரலாறு:ஆராய்ந்து எழுதியவர் ஈரோடு டாக்டர் எம்.எல்.ராஜா அவர்கள்

-->

நமது புனிதமான பாரதத் தாய்திருநாட்டின் வரலாற்றில் ஐரோப்பியர்கள் புகுத்திய தவறுகள் கணக்கில் அடங்கா.
நம்நாட்டின் தொன்மையான ஓலைச்சுவடிகளைப்படித்து பிரதிஎடுக்கும்போதும்,கல்வெட்டுக்களைப்பிரதி யெடுத்துப் பொருள் கொள்ளும்போதும்,அவற்றில் பொய்களைப் புனைந்துரைத்தல்,தவறுகளைப் புகுத்துதல்,தவறாகப்பொருள் உரைத்தல்,இடைச்செருகல்களை நுழைத்தல்,தவறாகத்திருத்திக்கூறல்,உண்மைகளைஅழித்தல்மற்றும் மறைத்தல்,பொய்யான ஆதாரங்களைச் செயற்கையாக உருவாக்குதல் போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத அநீதிகளைச் செய்தார்கள்.அவர்களின் நோக்கம் நமக்குள் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்.மேலும் நமக்குள் செயற்கையாகப் பிரிவினையை உருவாக்க வேண்டும்.இவற்றின்மூலம் நம்மை அவர்கள் என்றென்றும் ஆட்சி செய்து சுரண்டி,தாம் கொழுக்க வேண்டும் என்பதே!
இதற்காக அவர்கள் புரிந்த,சிறிதும் நியாயமற்ற செயல்களில் மிக முக்கியமானவை.1.ஆதாரபூர்வம் ஏதுமற்ற கிரேக்க நாட்டுக்குறிப்புக்களை,உறுதியான மற்றும் முடிந்த முடிவான ஆதாரமாகக்கொண்டு(sheet anchor) நம் நாட்டு வரலாற்றின் கால வரிசைக்கிரமத்தை முற்றிலும் தவறாக நிர்ணயித்து,நமது தொன்மையை செயற்கையாகக் குறைத்தது.2.அலெக்ஸாண்டரை மிகப்பெரிய வீரனாகப் பொய்யாக உயர்த்திக்கூறியது.புருஷோத்தமன் தோற்றுப்போனதாகப் புனைந்துரைத்தது. 3.நமது பாரத தேசத்தில் செயற்கையாகப்பிரிவினையை ஏற்படுத்தி, அதன்மூலம் நம்மை என்றென்றும் ஆட்சி செய்து சுரண்டுவதற்கு ஐரோப்பியர் திட்டமிட்டது.இதற்கு ஏதுவாக மொழி,சமூக,பிராந்திய மற்றும் சமுதாயப் பழக்க வழக்க ரீதியில் நம்மவருக்குள் மனத்தளவில் பிரிவினை மற்றும்துவேசத்தை விதைத்தது.இதுவே அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி ஆகும்.
இதற்காக நமது நாட்டின் வரலாற்றில் எண்ணற்ற,முற்றிலும் தவறான கருத்துக்களைச் செயற்கையாகப் புகுத்தினர்.இதற்கு ஒரு உதாரணமாக,ஐரோப்பியரும் அவர்களது அடிவருடிகளும் புனைந்துரைத்த,ஆரிய திராவிட இனவாதகட்டுக்கதையைக் கூறலாம்.
4.உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு,முழு பாரதத்தையும் ஆண்ட வீரதீரம் பொருந்திய மாபெரும் மன்னர்களான விக்ரமாதித்ய மற்றும் சாலிவாஹன மன்னர்களை,வரலாற்று நாயகர்களாக ஏற்றுக்கொள்ளாது,மக்களின் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று வரலாற்றைத் தமது நோக்கத்திற்கு ஏற்ப தவறாகமாற்றிஎழுதியது.
5.கனிஷ்கர் (கி.மு.1294முதல் கி.பி.1234 வரை) என்ற காஷ்மீரத்தின் க்ஷ்த்ரிய குல மன்னனை ஹீணமன்னனாக மாற்றி , அவரின் காலத்தை நவீன காலத்தை நோக்கி மாற்றியது.
6.மிகிரகுல (காஷ்மீரத்து க்ஷத்திரிய மன்னர் கி.மு.704 முதல் கி.மு.634 வரை)மற்றும் தோரமாணா (காஷ்மீரத்து க்ஷத்திரிய இளவரசர் கி.மு.16) ஆகியோரை ஹீண மன்னர்களாக தவறாகக் கூறி,618 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகிர குலனை,அவருக்கு மிகவும் பிற்காலத்தில் வாழ்ந்த தோரமாணாவின் மகனாக வரலாற்றை தவறுபட எழுதியது.
7.நம்நாட்டின் பண்டைய விஞ்ஞான மற்றும் பிற நூல்கள்,அவற்றின் ஆசிரியர்களின் கால நிர்ணயத்தில்,நீதிக்குப்புறம்பாகத் தொன்மையை வெகுவாகக் குறைப்பதற்குச் செய்த மாற்றங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இவற்றை ஒவ்வொன்றாக சிந்திக்கலாம்.

மெகஸ்தனிஸின் சண்ட்ரகோட்டோஸ்
பாரத நாட்டின் வரலாற்றைத் தவறாக எழுத முயற்சித்த ஐரோப்பியர்களுக்கு,கிரேக்க நாட்டின் அலெக்ஸாண்டர் மற்றும் செல்யூகஸீடன் பாரதம் வந்த மெகஸ்தனிஸ் என்பவர் நமது நாட்டைப் பற்றி எழுதிய குறிப்புக்களைப்பற்றிய சிலவிபரங்கள் கிடைத்தன.அவற்றில் மெகஸ்தனிஸ் காலத்தில் ப்ராஸி என்ற பகுதியின் பாலிபோத்ரா நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னனின் பெயர் சண்ட்ரகோட்டோஸ் என்று ஓரிரு இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.(Ref.Ancient India as described by Megasthenes and Arrian,John W.Mc Crindle,Munishiram,New Delhi (1926)2000,page 5,19,66)வெறும் இந்தப்பெயரை மட்டும் ஆதாரமாக எடுத்துக்கொண்டு, அவசரம் அவசரமாக இந்த சண்ட்ரகோட்டோஸ் என்பது சந்த்ர குப்தா: என்றும்,இந்த சந்த்ர குப்தர் மவுரிய வம்சத்தில் மகதத்தை ஆண்ட
சந்த்ர கும்பதர் என்றும் ஐரோப்பியர் முடிவு கட்டினர்.சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் பிரிட்டிஷ் நாட்டுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நீதிப்பிரிவில்,பாரதத்தில் கி.பி.1780 களில் பணிபுரிந்து வந்தார்.1784 இல் கொல்கத்தாவில் ராயல் ஆசியாடிக் சொசைட்டியை (Royal Asiatic Society)ஏற்படுத்தி,நம் நாட்டின் வரலாற்றை,ஐரோப்பியருக்குச் சாதகமாக எழுத ஆரம்பித்தார்.நம் நாட்டின் ராதாகண்ட்(Radhakant)என்ற ஸமஸ்க்ருத நிபுணர்,இந்த துரோகத்திற்கு உதவியாய் இருந்தார்.நம் நாட்டின் பாகவதபுராணம் உட்பட பற்பல புராணங்களைப் புரட்டிப் பார்த்த வில்லியம் ஜோன்ஸீக்கு அந்த புராணங்கள் விவரித்த நம் நாட்டின் மிகமிகத் தொன்மையான வரலாற்றை ஏற்றுக்கொள்வதில் எண்ணற்ற சிரமங்கள் இருந்தன.உதாரணமாக,அவரது மத நம்பிக்கையின்படி,உலகம் இன்றைக்கு 6014 ஆண்டுகளுக்கு முன்புதான் (கி.மு.23.10.4004 காலை 9 மணிக்கு) படைக்கப்பட்டது.ஆகவே,பத்தாயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான நம்நாட்டின் பழமையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.நம் நாட்டினைத் தாழ்வாக சித்தரிக்கும் அவரது நோக்கத்திற்கு இது முற்றிலும் எதிராக இருந்தது.ஆகவே,கிரேக்க நாட்டவரான மெகஸ்தனிஸின் குறிப்புகள் மற்றும் தான் அரைகுறையாகப் படித்திருந்த நமது புராணங்கள் இவற்றை வைத்துக்கொண்டு,அவசர கதியில்,மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புக்களில் காணப்பட்ட பாலிபோத்ராநகரமானது,பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா) என்றும்,இதனைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னனின் பெயரான ‘சண்ட்ரகோட்டோஸ்’என்பது சந்திரகுப்தர் என்பதன் உருமாற்றம் எனவும்,இந்த சந்த்ர குப்தர் மவுரிய வம்சத்தில் மகதத்தை ஆண்ட சந்த்ரகுப்தர் என்றும் அரைகுறையாக 28.02.1793இல் முடிவுகட்டினார். இதைப்பற்றி வில்லியம் ஜோன்ஸ், “இது முடிந்த முடிவு அல்ல;இது பற்றிய தனது ஆய்வுகள் மற்றும் முடிவுகள் அடுத்த கட்டுரையில் தான் முழுமையாக முடிவாகும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால்,அடுத்த கட்டுரை எழுத,காலம் அவருக்கு அவகாசம் தரவில்லை.வில்லியம் ஜோன்ஸ் 27.4.1794இல் காலமாகிவிட்டார்.(ஆதாரம் 1. “The work of Sir WilliamJones” in 13 Volumes,Volume 4,1807 Edition,pages 1,2,6,36 to 40,42 to 46 by Lord TEignmouth and 2.”Is Sandrakottas Chandragupta Mauraya)” by Sree Shriram Sathe,1985 Edition,Pages 1 to 9)நன்றி:சுதேசிச் செய்தி மாத இதழ்