RightClick

நவபாஷாணங்களின் சுபாவங்கள்

-->
நவபாஷாணங்களின் சுபாவங்கள்
பாஷாணம் என்றால் விஷம் என்று பெயர்.ஒன்பது விதமான பாஷாணங்களைக் கட்டுவது சித்தர்களுக்கே சிரமமான காரியம் ஆகும்.ஏனெனில்,ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான சுபாவத்தைக் கொண்டது.ஒவ்வொரு பாஷாணமும் கட்டும்போதும் கட்டுபவருக்கு ஒவ்வொருவிதமான மனநிலையை உருவாக்கும்;தவிர,பாஷாணத்திலிருந்து உருவாகும் சூட்சுமமான கதிர்வீச்சு,கட்டுபவர்,அவரது அருகில் இருப்பவரின் உடல்களுக்குள் புகுந்து உடல் நலம்,மனநலத்தை அதிகரிக்கும்.
நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது;நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.ஏனெனில்,பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.இதை உணர்ந்தே போகர் பழனிமலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார்.இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால்/சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
பழனிமலையில் இருக்கும் தண்டாயுதபாணியினை உருவாக்கிய நேரப்படி,அவரது முக்கியத்துவம் தற்போது குறையத்துவங்கிவிட்டது.ஆனால்,பல லட்சம் வருடங்கள் ஆயுளைக் கொண்டவர் நவபாஷாணமுருகர் பழனி தண்டாயுதபாணி.
வெகு விரைவில் பழனிமலையில் வேறொரு முருகக்கடவுள் ஸ்தாபனம் ஆகப்போகிறார்.இவர் மின்சாரக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் நவபாஷாணமுருகர் ஆவார்.இவரை ஸ்தாபித்ததும்,உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மின் சாதனங்களும் செயலிழந்துபோகும்;ஆக,இந்த வலைப்பூ உள்பட எல்லாமோ அம்போதான்.இதை இன்னும் சில வருடங்களில் நாம் உணரப்போகிறோம்.அதே சமயம்,இப்படி கதிரியக்க நவபாஷாண முருகர் பழனிமலையில் நிறுவப்பட்ட உடனே,நமது பாரதம் வல்லரசாகிவிடும்.

வேர்களைக் காட்டும் வரலாறு:ஆராய்ந்து எழுதியவர் ஈரோடு டாக்டர் எம்.எல்.ராஜா அவர்கள்

-->

நமது புனிதமான பாரதத் தாய்திருநாட்டின் வரலாற்றில் ஐரோப்பியர்கள் புகுத்திய தவறுகள் கணக்கில் அடங்கா.
நம்நாட்டின் தொன்மையான ஓலைச்சுவடிகளைப்படித்து பிரதிஎடுக்கும்போதும்,கல்வெட்டுக்களைப்பிரதி யெடுத்துப் பொருள் கொள்ளும்போதும்,அவற்றில் பொய்களைப் புனைந்துரைத்தல்,தவறுகளைப் புகுத்துதல்,தவறாகப்பொருள் உரைத்தல்,இடைச்செருகல்களை நுழைத்தல்,தவறாகத்திருத்திக்கூறல்,உண்மைகளைஅழித்தல்மற்றும் மறைத்தல்,பொய்யான ஆதாரங்களைச் செயற்கையாக உருவாக்குதல் போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத அநீதிகளைச் செய்தார்கள்.அவர்களின் நோக்கம் நமக்குள் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்.மேலும் நமக்குள் செயற்கையாகப் பிரிவினையை உருவாக்க வேண்டும்.இவற்றின்மூலம் நம்மை அவர்கள் என்றென்றும் ஆட்சி செய்து சுரண்டி,தாம் கொழுக்க வேண்டும் என்பதே!
இதற்காக அவர்கள் புரிந்த,சிறிதும் நியாயமற்ற செயல்களில் மிக முக்கியமானவை.1.ஆதாரபூர்வம் ஏதுமற்ற கிரேக்க நாட்டுக்குறிப்புக்களை,உறுதியான மற்றும் முடிந்த முடிவான ஆதாரமாகக்கொண்டு(sheet anchor) நம் நாட்டு வரலாற்றின் கால வரிசைக்கிரமத்தை முற்றிலும் தவறாக நிர்ணயித்து,நமது தொன்மையை செயற்கையாகக் குறைத்தது.2.அலெக்ஸாண்டரை மிகப்பெரிய வீரனாகப் பொய்யாக உயர்த்திக்கூறியது.புருஷோத்தமன் தோற்றுப்போனதாகப் புனைந்துரைத்தது. 3.நமது பாரத தேசத்தில் செயற்கையாகப்பிரிவினையை ஏற்படுத்தி, அதன்மூலம் நம்மை என்றென்றும் ஆட்சி செய்து சுரண்டுவதற்கு ஐரோப்பியர் திட்டமிட்டது.இதற்கு ஏதுவாக மொழி,சமூக,பிராந்திய மற்றும் சமுதாயப் பழக்க வழக்க ரீதியில் நம்மவருக்குள் மனத்தளவில் பிரிவினை மற்றும்துவேசத்தை விதைத்தது.இதுவே அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி ஆகும்.
இதற்காக நமது நாட்டின் வரலாற்றில் எண்ணற்ற,முற்றிலும் தவறான கருத்துக்களைச் செயற்கையாகப் புகுத்தினர்.இதற்கு ஒரு உதாரணமாக,ஐரோப்பியரும் அவர்களது அடிவருடிகளும் புனைந்துரைத்த,ஆரிய திராவிட இனவாதகட்டுக்கதையைக் கூறலாம்.
4.உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு,முழு பாரதத்தையும் ஆண்ட வீரதீரம் பொருந்திய மாபெரும் மன்னர்களான விக்ரமாதித்ய மற்றும் சாலிவாஹன மன்னர்களை,வரலாற்று நாயகர்களாக ஏற்றுக்கொள்ளாது,மக்களின் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று வரலாற்றைத் தமது நோக்கத்திற்கு ஏற்ப தவறாகமாற்றிஎழுதியது.
5.கனிஷ்கர் (கி.மு.1294முதல் கி.பி.1234 வரை) என்ற காஷ்மீரத்தின் க்ஷ்த்ரிய குல மன்னனை ஹீணமன்னனாக மாற்றி , அவரின் காலத்தை நவீன காலத்தை நோக்கி மாற்றியது.
6.மிகிரகுல (காஷ்மீரத்து க்ஷத்திரிய மன்னர் கி.மு.704 முதல் கி.மு.634 வரை)மற்றும் தோரமாணா (காஷ்மீரத்து க்ஷத்திரிய இளவரசர் கி.மு.16) ஆகியோரை ஹீண மன்னர்களாக தவறாகக் கூறி,618 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகிர குலனை,அவருக்கு மிகவும் பிற்காலத்தில் வாழ்ந்த தோரமாணாவின் மகனாக வரலாற்றை தவறுபட எழுதியது.
7.நம்நாட்டின் பண்டைய விஞ்ஞான மற்றும் பிற நூல்கள்,அவற்றின் ஆசிரியர்களின் கால நிர்ணயத்தில்,நீதிக்குப்புறம்பாகத் தொன்மையை வெகுவாகக் குறைப்பதற்குச் செய்த மாற்றங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இவற்றை ஒவ்வொன்றாக சிந்திக்கலாம்.

மெகஸ்தனிஸின் சண்ட்ரகோட்டோஸ்
பாரத நாட்டின் வரலாற்றைத் தவறாக எழுத முயற்சித்த ஐரோப்பியர்களுக்கு,கிரேக்க நாட்டின் அலெக்ஸாண்டர் மற்றும் செல்யூகஸீடன் பாரதம் வந்த மெகஸ்தனிஸ் என்பவர் நமது நாட்டைப் பற்றி எழுதிய குறிப்புக்களைப்பற்றிய சிலவிபரங்கள் கிடைத்தன.அவற்றில் மெகஸ்தனிஸ் காலத்தில் ப்ராஸி என்ற பகுதியின் பாலிபோத்ரா நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னனின் பெயர் சண்ட்ரகோட்டோஸ் என்று ஓரிரு இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.(Ref.Ancient India as described by Megasthenes and Arrian,John W.Mc Crindle,Munishiram,New Delhi (1926)2000,page 5,19,66)வெறும் இந்தப்பெயரை மட்டும் ஆதாரமாக எடுத்துக்கொண்டு, அவசரம் அவசரமாக இந்த சண்ட்ரகோட்டோஸ் என்பது சந்த்ர குப்தா: என்றும்,இந்த சந்த்ர குப்தர் மவுரிய வம்சத்தில் மகதத்தை ஆண்ட
சந்த்ர கும்பதர் என்றும் ஐரோப்பியர் முடிவு கட்டினர்.சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் பிரிட்டிஷ் நாட்டுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நீதிப்பிரிவில்,பாரதத்தில் கி.பி.1780 களில் பணிபுரிந்து வந்தார்.1784 இல் கொல்கத்தாவில் ராயல் ஆசியாடிக் சொசைட்டியை (Royal Asiatic Society)ஏற்படுத்தி,நம் நாட்டின் வரலாற்றை,ஐரோப்பியருக்குச் சாதகமாக எழுத ஆரம்பித்தார்.நம் நாட்டின் ராதாகண்ட்(Radhakant)என்ற ஸமஸ்க்ருத நிபுணர்,இந்த துரோகத்திற்கு உதவியாய் இருந்தார்.நம் நாட்டின் பாகவதபுராணம் உட்பட பற்பல புராணங்களைப் புரட்டிப் பார்த்த வில்லியம் ஜோன்ஸீக்கு அந்த புராணங்கள் விவரித்த நம் நாட்டின் மிகமிகத் தொன்மையான வரலாற்றை ஏற்றுக்கொள்வதில் எண்ணற்ற சிரமங்கள் இருந்தன.உதாரணமாக,அவரது மத நம்பிக்கையின்படி,உலகம் இன்றைக்கு 6014 ஆண்டுகளுக்கு முன்புதான் (கி.மு.23.10.4004 காலை 9 மணிக்கு) படைக்கப்பட்டது.ஆகவே,பத்தாயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான நம்நாட்டின் பழமையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.நம் நாட்டினைத் தாழ்வாக சித்தரிக்கும் அவரது நோக்கத்திற்கு இது முற்றிலும் எதிராக இருந்தது.ஆகவே,கிரேக்க நாட்டவரான மெகஸ்தனிஸின் குறிப்புகள் மற்றும் தான் அரைகுறையாகப் படித்திருந்த நமது புராணங்கள் இவற்றை வைத்துக்கொண்டு,அவசர கதியில்,மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புக்களில் காணப்பட்ட பாலிபோத்ராநகரமானது,பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா) என்றும்,இதனைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னனின் பெயரான ‘சண்ட்ரகோட்டோஸ்’என்பது சந்திரகுப்தர் என்பதன் உருமாற்றம் எனவும்,இந்த சந்த்ர குப்தர் மவுரிய வம்சத்தில் மகதத்தை ஆண்ட சந்த்ரகுப்தர் என்றும் அரைகுறையாக 28.02.1793இல் முடிவுகட்டினார். இதைப்பற்றி வில்லியம் ஜோன்ஸ், “இது முடிந்த முடிவு அல்ல;இது பற்றிய தனது ஆய்வுகள் மற்றும் முடிவுகள் அடுத்த கட்டுரையில் தான் முழுமையாக முடிவாகும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால்,அடுத்த கட்டுரை எழுத,காலம் அவருக்கு அவகாசம் தரவில்லை.வில்லியம் ஜோன்ஸ் 27.4.1794இல் காலமாகிவிட்டார்.(ஆதாரம் 1. “The work of Sir WilliamJones” in 13 Volumes,Volume 4,1807 Edition,pages 1,2,6,36 to 40,42 to 46 by Lord TEignmouth and 2.”Is Sandrakottas Chandragupta Mauraya)” by Sree Shriram Sathe,1985 Edition,Pages 1 to 9)நன்றி:சுதேசிச் செய்தி மாத இதழ்

சித்தர்களின் எண்ணிக்கைஆயிரக்கணக்கான சித்தர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் 18 பேர்கள்.

விஷ்ணுபுராணம் கூறும் கருத்துப்படி சித்தர்களின் எண்ணிக்கை 88,000பேர்கள் ஆவார்கள்.

காரை சித்தர் கருத்தின்படி,நூறு கோடி சித்தர்கள் இருக்கிறார்கள்.அதாவது சத கோடிபேர்கள்!!!!

கபீர்தாசர் கருத்துப்படி சித்தர்களின் எண்ணிக்கை 84 தான்!
சித்தர்கள் மூன்று மரபுகளில் ஏதாவது ஒரு மரபைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.முதல் மரபு கைலாய வர்க்கம்.இவர்களுக்கு ஆத்மகடவுள் கைலாய நாதன்.
இரண்டாவது மூலவர்க்கம்.இவர்களுக்கு அவரவர் இஷ்ட தெய்வம் யாராவது ஒருவர் இருப்பர்.மூன்றாவது பால வர்க்கம்.இவர்களுக்கு ஆத்மகடவுள் முருகக்கடவுள் ஆவார்.

கவுதமர்,அகத்தியர்,சங்கரர்,வைரவர்,மார்க்கண்டர்,வன்மீகர்,உரோமர்,புசண்டர்,சட்டைமுனி,நந்தீசர்,
திருமூலர்,காலாங்கிநாதர்,மச்சமுனி,புலத்தியர்,கருவூரார்,
கொங்கணர்,போகர்,புலிப்பாணி என்பது பதினெட்டு சித்தர்களில் ஒரு வரிசை.

திருமூலர்,ராமதேவர்,கும்பமுனி,இடைக்காடர்,தன்வந்திரி,வான்மீகி,கமலமுனி,போகநாதர்,மச்சமுனி,கொங்கணர்,
பதஞ்சலி,நந்திதேவர்,போதகுரு,பாம்பாட்டிசித்தர், சட்டைமுனி,சுந்தரானந்தர்,குதம்பையர்,கோரக்கர் என்பது பதினெண் சித்தர்களில் இதுவும் ஒரு வரிசையாகும்.

பசி,தூக்கம்,முதுமையை தடுக்கும் அமிர்தமணிப்பழம்

-->அமிர்தமணிப்பழம் என்றொரு பழம் இருக்கிறது.இந்தப்பழங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சாப்பிட்டால்,சாப்பிட்டவர் அப்போது என்ன வயதில் இருந்தாரோ,அதே வயதில் எப்போதும் இருப்பார்;அவருக்கு ஒரு போதும் பசிக்காது;தாகம் ஏற்படாது:இந்தப் பழமானது சதுரகிரியில் காணப்படுகிறது.சித்தர்களுக்கும் தகுதியுள்ள மனிதர்களுக்கும் மட்டுமே இது தென்படும்

சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்
ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி


ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்

ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி


ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்ஸ்ரீபதஞ்சலி காயத்ரி


ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி


ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி


ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி
ப்ரசோதயாத்ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி


ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி


ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் 


ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி


ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்ஸ்ரீதன்வந்திரி காயத்ரி


ஓம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்

நமது பாரதத்தின் இன்னும் இரு பெருமைகள்டாக்கா நகர் மஸ்லீம் துணிகள் உலகப்புகழ் பெற்றவை என நாம் பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம்.
அவ்வளவுதான்.அதென்ன உலகப்புகழ்? எனப்பார்த்தால் அந்த மஸ்லீம் துணி பெரும்பாலும் பெண்கள் அணியும் சேலைதான்.அந்த சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.

தீப்பெட்டி அக்காலத்தில் எவ்வளவு சிறியதாக அல்லது பெரியதாக இருந்தது எனத் தெரியாது நமக்கு.ஆனால் அந்த சேலைகளானது அவ்வளவு மெல்லிசானது என நம்மில் சிலர் கேள்விப்பட்டிருப்போம்.
வியாபாரம் செய்ய வந்த கிறிஸ்தவ ஆங்கிலேயனுக்கு இந்த சேலையின் தரம் எரிச்சலைத் தந்தது. பார்த்தான். இந்த சேலை நெய்பவர்களின் விரல்களை வெட்டிவிட்டான்.
மஸ்லீம் துணிகளுக்கான உலகச்சந்தையை இங்கிலாந்து கைப்பற்றி விட்டது.

இதே போல களரி என்ற வீரக்கலை சேரநாடு எனப் போற்றப்படும் கேரளத்தில் இருந்தது.மிகவும் உன்னதமான கலையாகும்.
எப்படி நம் தமிழ்நாட்டில் சிலம்பம் ஒரு வீரக்கலையோ அந்தளவுக்கு களரி இருந்தது.
களரி பயில 7 வயதில் குரு குலத்தில் சேரவேண்டும். 22 வயதில் தலைசிறந்த களரி ஆசானாக முடியும்.
சுதந்திரத்துக்கு முன்பு, ஒரு ஆங்கிலேயத் தளபதி இதைப் பற்றி அறிய விரும்பினான். அவன் ஒரு களரி குருகுலத்துக்கு வந்தான்.
ஒரு பெரிய மைதானத்தில் வட்டமாக 300 இளைஞர்கள் குனிந்தவாறு நிறுத்தப்பட்டனர். களரி ஆசான் தனது குறுவாளின் முனையில் சுண்ணாம்பைத் தடவி, எம்பிக் குதித்தார். சில விநாடிகளில் 300 பேர்களின் முதுகையும் தனது குறுவாளால் லேசாக தொட்டுவிட்டு தனது இடத்தில் இறங்கினார்.
ஆங்கிலேயத் தளபதி அந்த 300 இளைஞர்களின் முதுகையும் பார்த்தான்.எல்லோரது முதுகிலும் சுண்ணாம்பு முதுகின் மையத்தில் சிறிது பதிந்திருந்தது.
அந்த கிறிஸ்தவ ஆங்கிலேயத் தளபதி களரி ஆசான்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றான்.நாம் மானங்கெட்டுப்போய் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறோம்.

எவையெல்லாம் நமது பெருமைகளோ அவைகளை கிறிஸ்தவ ஆங்கிலேயன் அழித்தான்.எவற்றையெல்லாம் அழிக்க முடியாதோ அவற்றை நாமும் நமது சந்ததியினரும் படிக்க முடியாமல் தடுத்தான். பெருமையும் சிறப்பான வாழ்வும் தரும் நமது பாரம்பரிய வேர்களை இழந்தோம். எதற்கெடுத்தாலும் பயப்படுகிறோம்.
இதை எப்போது நாம் மாற்றப்போகிறோம்?

பிரசன்னத்தில் தெரிந்த ரகசியங்கள்


கி.பி.2010 முடிவிலிருந்து பெட்ரோல் தனது மதிப்பை இழக்கத்துவங்கும்.கி.பி.2030க்குள் தங்கம் தனது மதிப்பை இழந்துவிடும்.கி.பி.2016க்குள் அயோத்தியில் இராமர் கோவில் கட்டத்துவங்கிவிடுவர்.அந்தக்கோவிலை கட்டி முடிக்க 14 ஆண்டுகள் ஆகும்.உலகிலேயே ஏராளமான மக்களால் கட்டப்பட்ட ஒரே கோவில் இதுதான் என்ற புகழைப் பெறத்துவங்கும்.இதனால்,சனாதன தர்மம் சுனாமி போல உலகம் முழுக்கப்பரவத்துவங்கும்.

ராஜயோகத்தின் நான்கு வகைகள்


ராஜயோகம் நான்கு வகைப்படும்.அவை மந்திர யோகம்,லய யோகம்,ஹடயோகம்,ராஜயோகம் எனப்படும்.
பீஜாட்சரமந்திரங்களால் ஆன மந்திரத்தை 12 வருடங்களுக்கு தொடர்ந்து விதிப்படி ஜபித்துக்கொண்டே வருவதால்,சித்துக்கள் கைகூடும்.இதற்கு மந்திரயோகம் என்று பெயர்.
தினசரி நமது வேலைகளுக்கு நடுவே எப்போதும் இறைவனை நினைத்துக்கொண்டே தியானிப்பதற்கு லயயோகம் என்றுபெயர்.
சின்முத்திரைகளாலும்,யோகாசனம்,பிராணயாமப்பயிற்சியாலும் உடலை சுத்தப்படுத்தி,மனத்தை ஒருநிலைப்படுத்துவதற்கு ஹடயோகம் என்று பெயர்.
இயமம் மற்றும் நியமப்பயிற்சிகளால் சித்தம் எனப்படும் மனத்தை பரிசுத்தப்படுத்தி,சமாதி அனுபவத்தை அடைவதற்கு ராஜயோகம் என்றுபெயர்.

சாப்பிடுவது எப்படி?நன்றி:தினமலர் வாரமலர் 31.10.2010

சமைப்பது எப்படி?' படித்திருக்கிறோம். "சாப்பிடுவது எப்படி?' அதற்கும் சாஸ்திரம் இருக்கிறது.
* பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் மட்டுமே போஜனம் செய்ய வேண்டும். சந்தியா காலம், விடியற்பொழுது, நடுநிசி ஆகிய வேளைகளில் எதையும் புசிக்கலாகாது.
* தாமரை இலை தவிர, வேறு எந்த இலையிலும் பின்புறத்தில் சாப்பிடக் கூடாது.
* போஜன காலத்தில் பேசினால், ஆயுள் குறையும்.
* ஈர வஸ்திரத்துடனும், ஒற்றை வஸ்திரத்துடனும் சாப்பிடக் கூடாது.
* மனைவி சாப்பிடும் போது, கணவன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
* பந்தி போஜனம் பண்ணும்போது, முன்னதாக எழுந்து விடலாகாது. அப்படி எழுந்து விட்டால், அந்தப் பந்தியைச் சேர்ந்த மற்றவர்களின் பாவத்தை அவன் அடைய வேண்டும்.
* பழம், பட்சணம் இவைகளைக் குழந்தைகளுக்கு முதலிலும், மற்ற பதார்த்தங் களைப் பெரியவர்களுக்கு முதலிலும் பரிமாற வேண்டும்.
***

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஓர் அன்பானவேண்டுகோள்

நமது கர்மங்களை அழிப்பதற்கும்,நமது எதிர்காலம் பற்றி அறிந்து அதன் மூலமாக நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழவும் ஜோதிடம் வழிகாட்டுகிறது.
ஏராளமான ஜோதிட வாசகர்கள் தமது பிறந்த தேதி,பிறந்த ஊர்,பிறந்த நேரம் இவற்றை நமக்கு அனுப்புகிறார்கள்.அப்படி அனுப்புவதற்குப்பதிலாக,உங்களுடைய பிறந்த ஜாதகத்தின் நகலை ஸ்கேன் செய்து அனுப்பினால்,வெகு விரைவாகவும்,துல்லியமாகவும் பலன்களை கணித்துக்கூற இயலும்.
உங்கள் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் இராசிச்சக்கரம்,அம்சம் சக்கரம்,கிரகங்கள் நிற்கும் நட்சத்திர பாதசாரங்கள்,பிறக்கும்போது இருக்கும் ஜனன கால திசா புக்தி இருப்பு இவைகளை அனுப்பினாலே போதுமானது.உடன் உங்களது ஜோதிடக்கேள்விகளை அனுப்பவும்.
நேரில் சந்திக்க விரும்புவோர் செல் எண்ணுடன் மின் அஞ்சல் அனுப்பவும்.பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திக்கலாம்.
ஒரு ஜாதகத்தினை முழுமையாக பலன் சொல்ல இரண்டு மணி நேரம் ஆகும் என்பதை மனதில் கொண்டு நேரில் சந்திப்பது அவசியம்.எந்த வாழ்க்கை அம்சம் முக்கியமோ,அந்த விஷயம் சார்பாக மட்டும் முன் தயாரிப்புடன் வருக!!! மேலும் விபரமறிய aanmigakkadal@gmail.com

சதுரகிரி மலைப்பயணத்தில் பின்பற்ற வேண்டிய விதிகள்


சதுரகிரி மலைப்பயணத்தின் போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள்
தாணிப்பாறையிலிருந்து எண்ணெய்க்குடம் பாறை,அத்தி ஊற்று,காமதேனு கால் தடம்,கோரக்குண்டா,இரட்டைலிங்கம்,சின்னப்பசுக்கடை,நாவல் ஊற்று,பெரிய பசுக்கடை,பலாவடி கருப்பசாமி கோவில்,சுந்தரமகாலிங்கம் என செல்லும்போது எக்காரணம் கொண்டும் செடி கொடிகளை ஒடிக்கக் கூடாது;ஆடிப்பாடிக்கொண்டும் கத்திக்கொண்டும் செல்லக்கூடாது;சதுரகிரிமலைப்பிராந்தியம் முழுக்கவுமே சித்தர்கள் தவம் செய்துகொண்டும்,ஜீவசமாதியாகி அந்த ஜீவ உடலைக்கொண்டே பல மரங்கள் வளர்ந்தும் இருக்கும்.ஒரு சிறு கல் கூட ஏதாவது ஒரு சித்தரை சுமந்துகொண்டு இருக்கும்.அதற்கும் ஒரு வரலாறு இருக்கும்.
நமது வீட்டில்,தெருவில்,ஏரியாவில் இருப்பதுபோல்,குரங்குச்சேஷ்டைகள் செய்தால் அந்தப்பாவத்தை வேறு எங்கும் அழிக்க முடியாது;
சதுரகிரி என்பதில் சதுரம் என்பது கிரி என்பது சேர்ந்தே இருக்கிறது.சதுரம் என்பது நான்கு என்பதன் சுருக்கம்.நான்கு வேதங்களே இங்கு மலையாக இருப்பதாக ஐதீகம்;சிவம்,சக்தி,நாதம்,விந்து ஆகிய நான்கும் இங்கு மலைக்குள் கருப்பொருளாக பொதிந்து கிடக்கிறது என்பது பரவலான நம்பிக்கையாகும்.
நமது பூமியில் வேறெங்குமே இல்லாத அபூர்வ மூலிகைகள் இங்குதான் வளருகின்றன.அழுகணி,உதிர வேங்கை,கருநொச்சி,கருங்கொடி வேலி,கையாந்தகரை,கல்தாமரை,கானற்பலா,சாயா விருட்சம்,தில்லை விருட்சம்,சஞ்சீவி என பல மனித நல மூலிகைகள் இருக்கின்றன.

சதுரகிரியின் பெருமைகளை விளக்கும் பாடல்நிலவும் பதினெண் சித்தரெனும் நீர்மைக் கும்பன் முதலாகக்
குலவும் பெருமைக் கோரக்கர் ஈறாக் குறிக்குன் தவமுனிவர்
உலவும் மேன்மை தனைக் கொண்டே உமைதன் பாகன்
கலவும் சதுரகிரிப் பெருமை கனிய உரைப்போம் காசினிக்கே!