RightClick

ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி

தெய்வீக சக்தியில் உயர்ந்த சக்தியை தரிசிப்பது எப்படி?

இந்திய அரசு அமைப்பின் படி வி.ஏ.ஓ.தான் ஆணிவேர்;அவருக்கு மேல் வருவாய் ஆய்வாளர் எனப்படும் ஆர்.ஐ.அவருக்கு மேல் மாவட்ட துணை ஆட்சியாளர்;அவருக்கும் மேல் மாவட்ட ஆட்சியாளர்;ஆளுநர்,ஜனாதிபதி;ஐநா சபை என மிகப்பெரிய நிர்வாக இயந்திரம் செயல்பட்டுவருகிறது.


அதே போல்,நம்மை இயக்குவது நவக்கிரகங்கள்.நாம் முற்பிறவி அல்லது முற்பிறவிகளில் செய்த பாவபுண்ணியங்களுக்கேற்ப நாம்பிறக்கும் நேரத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட ராசியில் நின்று நமது வாழ்க்கைப் பயணத்தை இயக்கும்.அனுபவமுள்ள ஜோதிடர்களுக்கு இது புரியும்.

இந்த நவக்கிரகங்களை இயக்குவது 27 நட்சத்திரங்கள்.(நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதே வேத ஜோதிடம்!)இந்த 27 நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்தி இயக்குபவை பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு.(நட்சத்திரங்களுக்கும் பஞ்சபூதங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குவதே பஞ்சபட்சி சாஸ்திரம்)

இந்த பஞ்சபூதங்களை இயக்கும் மண்டல நிர்வாகிகளே மும்மூர்த்திகள் எனப்படும் பிரம்மா,விஷ்ணு,சிவன்.

பிரம்மா ஒரு உயிரைப் படைத்தால்,அந்த உயிருக்குத் தேவையான கல்வியைத் தரும்பொறுப்பு பிரம்மாவின் துணைவியான கலைவாணிக்குத் தரப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணு ஒரு உயிரைக் காத்தால்,அப்படிக் காக்கும்பொறுப்பு அவரது துணைவியான மகாலட்சுமிக்குத் தரப்பட்டுள்ளது.

சிவன் ஒரு உயிரை அழித்தால்,ஒருவரது பிறப்பு இறப்பை நிர்ணயிப்பவராக இருப்பதால்,அந்த உயிருக்கு முக்திஎனப்படும் இறவா நிலையைத் தருவது சிவனின் துணையாகிய பார்வதிக்குத் தரப்பட்டுள்ளது.

இந்த மூவருக்கும் மேலே சதாசிவம் இருக்கிறார்.அவரைப் பற்றி யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
சதாசிவத்திற்கும்மேலே இருப்பவள்,இந்த மும்மூர்த்திகளை இயக்குபவள் ஆதி பரப்பிம்ம சக்தி என்ற மனோன்மணி ஆவாள்.
அவளின் வடிவம் வாலை எனப்படும் 12 வயதுச்சிறுமியைப் போன்றது.அவளை நாம் ஒவ்வொருவரும் தரிசிக்கலாம்.

தினமும் ஒரு மணிநேரம் தனிமையில்,சப்தமில்லாத இடத்தில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்துகொண்டு,நமது காதுகளுக்குப் பஞ்சுவைத்து அடைத்துக்கொள்ள வேண்டும்.மனதுக்குள் இம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.எவ்வளவு உரத்து(ஆனால் மனதுக்குள்,வாய்விட்டுச் சொல்லாமல்)க்கூறுகிறோமோ,அவ்வளவு நல்லது.இப்படி இரண்டு ஆண்டுகள் ஜபித்துவந்தால்,மனோன்மணியைத் தரிசிக்கலாம்.

இன்னொரு வழிமுறை உண்டு.இங்கு அதை விரிவாக வார்த்தைகளால் விவரிக்க இயலாது.ஒரு குறிப்பிட்ட தியான முறையினால்,மூக்குக்கும் நுரையீரலுக்கும் இடையில் செய்யும் பிராணயாமத்தை,நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையில் மாற்றிட வேண்டும்.அப்படிச் செய்தவாறு,ஒரு வரி மந்திரம் உண்டு.அதை எந்த குருவும் வாயால் நமக்கு உபதேசிக்க மாட்டார்;மனதால் உபதேசிப்பார்;அதை ஒருமுறை சொன்னாலே மனோன்மணி நேரில் காட்சியளிப்பாள்.
காட்சியளித்து,நம்மை தன்னுடன் கைபிடித்து அழைத்துச் செல்லுவாள்;இந்த பிரபஞ்சத்தில் அவள் படைத்துள்ள அத்தனைப் படைப்புகளையும் நமக்குக் காட்டுவாள்;காட்டியப்பின்னர்,அவள் தன்னுடைய இருப்பிடத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுவாள்.அப்படிச் சென்றதும்,எதற்காக என்னைத் தேடினாய்? எனக் கேட்பாள்.நம்மால் அவளைப் பார்த்தப்பின்னர் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது.