RightClick

உங்களின் ஆளுமைத்திறன் மேம்பட நீங்கள் வாசிக்கவேண்டிய புத்தகங்கள்:


இந்த புத்தகங்களை ஒரே மூச்சில் வாசிப்பது தவறு;ஒரேயடியாக மொத்தமாக வாங்குவது தவறில்லை;இந்த புத்தகங்களின் வரிசைப்படி ஒவ்வொன்றாக வாங்குவதும்,அப்படி வாங்கிய புத்தகங்களை அடுத்த ஆறுமாதங்களுக்கு திரும்பத்திரும்ப வாசிப்பது நன்று;நிச்சயம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உங்களது மன பலவீனங்களும்,தேவையற்ற தயக்கங்களும் நீங்கிவிடும்.
இந்தப்புத்தகங்களை முதன்முதலில் வாசிக்கும்போது எந்தெந்த வரிகள் உங்களை ஈர்க்கின்றனவோ,அவற்றை உடனே கலர் ஸ்கெட்ச்சினால் கோடிட்டுக்கொள்ளவும்.

இரண்டாம் முறை வாசிக்கும்போது,கோடிட்டவற்றை வாசிக்கவும்;ஒவ்வொருமுறையும் இந்த புத்தகங்களை வாசிக்கும்போதும்,உங்கள் செல்போன்கள்,டிவி,இணையம்,வானெலி,பண்பலை வானொலி அதாங்க எஃப் எம் ரேடியோவை அணைத்துவிட்டு வாசிப்பது அவசியம்;முக்கியம்;ஏனெனில்,நீங்கள் உங்களை உங்கள் ஆளுமைத்திறனை மேம்படுத்த,மெருகூட்ட,உங்களை நீங்களே செதுக்கிடத்தான் இந்த புத்தங்களை வாசிக்கிறீர்கள்.

1.கர்மயோகம் - சுவாமி விவேகானந்தர் ரு.40/-

2.எண்ணங்கள் - எம்.எஸ்.உதயமூர்த்தி ரூ.35/-

3.ஆழ்மனதின் சக்திகள்-கண்ணதாசன் பதிப்பகம் ரூ.90/-
4.வந்தார்கள்,வென்றார்கள் - மதன்,விகடன் பிரசுரவெளியீடு ரூ.110/-

5.இஸ்ரேலின் வீர உதயம் - சக்தி புத்தக நிலையம் ரூ.30/-க்குள்

6.மனம் தரும் பணம் - நெப்போலியன் ஹில்,கண்ணதாசன் பதிப்பகம் ரூ.100/-


7.பாரதநாட்டின் வரலாற்றில் ஆறுபொன்னேடுகள் எழுதியவர் விநாயக தாமோதர சாவர்க்கர்,ஐந்து பாகங்கள்

8.வீரபாண்டியன் மனைவி எழுதியவர் அரு.இராமநாதன்,சரித்திரநாவல்.

9.தேசப்பிரிவினையின் சோக வரலாறு எழுதியவர் ஹெ.வே.சேஷாத்திரி ரூ.90/-

10.புராதன இந்துச்சாதனைகள் தொகுப்பு:இராம.கோபாலன் B.E., ரூ.25/-

11.திராவிடத்தால் வீழ்ந்தோம் வெளியீடு:குமரிப்பதிப்பகம்

12.நாதுராம் விநாயக் கோட்சே எழுதியவர் இஜட்.ஒய்.ஹிம்சாகர்,குமரிப்பதிப்பகம்,நாகப்பட்டிணம்

13.நான் ஏன் நாத்திகனானேன்? எழுதியவர் ஈ.வே.ராமசாமி

14.உங்களால் வெல்ல முடியும் எழுதியவர் ஷிவ் கெரா

15.மறைந்திருக்கும் உண்மைகள் எழுதியவர் ஓஷோ ரூ.100/-

16.ரொமான்ஸ் ரகசியங்கள் தொகுப்பு & வெளியீடு விகடன் பிரசுரம் வெளியீடு விலை ரூ.110/-(திருமணத்தம்பதிக்குப் பரிசளிக்க மிகவும் ஏற்ற நூல்)

17.மனசே,ரிலாக்ஸ்,ப்ளீஸ் எழுதியவர் சுவாமி சுகபோதானந்தா பாகங்கள் இரண்டு.(இரண்டாம் பாகம் மணமான தம்பதிகளின் பிரிவினை,மனக்கசப்பினைப் போக்கும்)

18.ஓம் சக்தியும் அணுசக்தியும்

19.ஞான கங்கை எழுதியவர் மாதவ சதாசிவ கோல்வல்கர் குருஜி எட்டுபாகங்கள்(நமது நாட்டின் நமது தர்மத்தின் பெருமைகளும் அதை மற்றவர்கள் எப்படி குலைத்தார்கள் அதன் விளைவுகள் எப்படியிருக்கிறது?அதை நாம் எப்படியெல்லாம் அனுபவிக்கிறோம்? என்பதை விபரமாக விவரிக்கும் நூல்)

20.விழிமின்;எழுமின் வெளியீடு விவேகானந்த கேந்திரம்,கன்னியாக்குமரி,விலை ரூ.50/-க்குள்(தன்னம்பிக்கையுடன் வாழ,சாதிக்க விரும்புவோர் அடிக்கடி வாசிக்கவேண்டிய புத்தகம்)

21.விவேகானந்தர் பாறை:நினைவுச்சின்னத்தின் வரலாறு எழுதியவர் ஏக்நாத் ரானடே,வெளியீடு:விவேகானந்தா கேந்திரம் .விலை ரூ.100/-க்குள்.
(நீங்கள் எவ்வளவு கஷ்டத்திலிருந்தாலும்,இந்த புத்தகத்தை ஒருமுறை வாசித்துவிட்டால்,டன் கணக்கில் தன்னம்பிக்கை உங்களுக்குக் கிடைக்கும்)

22.கூடு எழுதியவர் பாலகுமாரன்:ஆதிசங்கரரின் வாழ்க்கையில் நடந்த நிஜத்தை நமது கண்முன் நிறுத்தும் நாவல்

23.பணம் சம்பாதிக்கப் பலவழிகள் இரண்டு பாகங்கள் எழுதியவர் டாக்டர் பி.எஸ்.பி.அவர்கள்

24.இணையத்தின் வரலாறு

25.ஏழைபடும்பாடு எழுதியவர் விக்டர் ஹ்யூஹோ,தமிழில் சுத்தானந்த பாரதி

26.அக்னிச்சிறகுகள் எழுதியவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்