RightClick

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி தானம்

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி
ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் தெரிந்து செய்த பாவங்கள்,
தெரியாமல் செய்தபாவங்கள்,அறிந்து செய்த பாவங்கள்,அறியாமல் செய்த பாவங்கள்,வாயால் பேசிய பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று
சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி)

உலகின் நிஜமான ஹீரோ:நாராயணன் கிருஷ்ணன்,மதுரை:நன்றி தினமலர் 31.10.2010


மதுரை : ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 "ரியல் ஹீரோக்களில்' ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக "அக்ஷயா டிரஸ்ட்' என்ற அமைப்பையும் "ஸ்பான்சர்கள்' உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா எப்படி திவாலாகும் ?மறு பதிப்பு :

சுதேசிச் சிந்தனைகள்:1.அமெரிக்கா எப்படி திவாலாகும்?

அமெரிக்க மக்களின் சேமிப்பு சதவீதம் கீழே தரப்பட்டுள்ளது:
1970 ஆம் ஆண்டில் 9.4%
1975 ஆம் ஆண்டில் 10.6%
1980 ஆம் ஆண்டில் 10.0%
1985 ஆம் ஆண்டில் 9.0%
1990 ஆம் ஆண்டில் 7.0%
1995 ஆம் ஆண்டில் 4.6%
2000 ஆம் ஆண்டில் 2.3%
2005 ஆம் ஆண்டில் -0.04%
2006 ஆம் ஆண்டில் -1.00%
2008 ஆம் ஆண்டில் -116.00%

அதாகப்பட்டது 30 கோடி அமெரிக்கர்களிடம் 120 கோடி கடன் அட்டைகள்(க்ரடிட் கார்டுகள்) புழக்கத்தில் இருக்கின்றன.சராசரியாக ஒரு அமெரிக்கனுக்கு 4 கடன் அட்டைகள் வைத்திருக்கிறான்.இந்த கடன் அட்டைகள் மூலமாக கி.பி.2011 முதல் கி.பி 2012 வரையிலான நிதி ஆண்டில் ஒரு அமெரிக்கன் எவ்வளவு சம்பாதிப்பானோ, அவ்வளவையும் இந்த 2010 ஆம் ஆண்டிலேயே செலவழித்து விட்டான்.இது அமெரிக்க சமுதாயத்தின் வண்டவாளம்.

அமெரிக்க அரசாங்கம் எப்படி செயல்படுகிறது? தினமும் 10,000 கோடி டாலர்கள் உலக நாடுகளிடம் கடன் வாங்கி ஒபாமா அரசாங்கம் செயல்பட்டுவருகிறது.இவ்வளவு பெருமை வாய்ந்த அமெரிக்கா நம்மை(இந்தியாவை)யும், நமது சேமிக்கும் பழக்கத்தையும் எப்படி புகழ்ந்தார்கள் தெரியுமா?

இந்தியர்கள் தலைவிதியில் நம்பிக்கை உள்ளவர்கள்.எனவே,அவர்களுக்கு சுயச்சார்பு,எதிர்காலம் இவற்றில் நம்பிக்கை கிடையாது.தன்னம்பிக்கையோடு செயல்படுவது கிடையாது.தலைமைப்பண்பு(லீடர்ஷிப்)அதனால் அவர்கள் சேமிக்கிறார்கள்.
ஆனால்,இன்று அமெரிக்காவின் பள்ளிகளில் சேமிப்பைப்பற்றி பாடத்திட்டமாக வைக்க கொள்கையளவில் முடிவெடுத்துள்ளனர்.ஆதாரம்:டிசம்பர் 2009 தினமலர்.

அமெரிக்க வங்கிகள் திவாலானது எப்படி? இதே பாணிதான்!
ஒரு வங்கியின் ரொக்க இருப்பு ரூ.1000 கோடிகள் என வைத்துக்கொள்வோம்.அந்த வங்கி வேறு வங்கி அல்லது தனிமனிதன் அல்லது அமெரிக்க அரசிடம் வாங்கும் கடன் ரூ.10,000 கோடிகள்தான்.ரூ.11,000 கோடிகளை வைத்து கடன்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தது.வராக்கடன் ரூ.7000 கோடிகள்.இப்போது அந்த வங்கியை நமது ப.சிதம்பரத்தாலோ,மான் டேக்சிங் அலுவாலியாவாலேயோ,மன்மோகன்சிங்காலேயே காப்பாற்ற முடியுமா?

இந்தியாவின் சேமிப்பு சதவீதத்தைப் பார்ப்போம்:

கி.பி.1975 ஆம் ஆண்டில் 13.8%

கி.பி.1998 ஆம் ஆண்டில் 22.8%

கி.பி.2009 ஆம் ஆண்டில் 38.0%

அமெரிக்கா நினைத்தது;இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்தை பரவச்செய்தால், இந்திய மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிளஸ் டூ அல்லது பட்டம் முடித்த இந்திய ஆண்,பெண்கள் கால் சென் டர்,பி.பீ.ஓ.,சாப்ட்வேர் நிறுவனங்களில் மாதம் ரூ10,000/-, மாதம் ரூ50,000/-, மாதம் ரூ.1,00,000/- வாங்கினால், நம்மைப்போலவே (அமெரிக்கர்களைப் போலவே) அவர்களும் வெட்டியாகச் செலவழிப்பார்கள்.நம்மைப்போலவே, இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என கற்பனை செய்தது.இதில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை பார்த்தால் அது பெரிய கவுரவம் என்ற பில்ட் அப் வேறு.ஏ யப்ப்ப்பா!
அமெரிக்காவிற்கு பறப்பது பெரிய்ய கவுரவம் என பி.ஈ., எம்.சி.ஏ., படிப்பவர்கள் கலர் கலராக கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள்.


அமெரிக்காவின் இந்த சரிவை முன்கூட்டியே உணர்ந்துதான், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சொன்னார்:தற்போது இருப்பது போல, எதிர்காலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் அபரித சம்பளம் கிடைப்பது சந்தேகமே!

அவர் சொன்னதன் உள்ளார்த்தம் இதுதான்.

எட்டாம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? மறுபதிப்பு :ஆண்மிகக்கடலின் மறுபதிப்பு
எட்டாம் தேதியில் பிறந்து இந்த உலகத்தில் தலையெழுத்தை மாற்றிக்கொண்டிருப்பவர்கள் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த தேதி ஜனவரி 17. நடிகை ரோஜாவின் பிறந்த தேதி நவம்பர் 17. கடவுள் இல்லை;இல்லவே இல்லை என சத்தியம் செய்து இந்துமதத்தினை புதுப்பித்தவர் ராமசாமி நாயக்கர் எனப்படும் ஈ.வே.ரா.அவர்கள் பிறந்ததும் ஒரு 17 ஆம் தேதியில் தான். தமிழ்நாடு அரசின் பாரன்சிக் துறையில் பணிபுரிந்து கொண்டே அரசியல்கட்சி ஆரம்பித்த அரசியல்வாதி தொல்.திருமாவளவன் பிறந்தது ஆகஸ்டு 17. இலங்கைத் தமிழர்களின் துருவநட்சத்திரம், மகா சரித்திரம் வே.பிரபாகரன் பிறந்தது டிசம்பர் 26. கேரளக்கிளி அசின் பிறந்தது 8 ஆம் தேதியில்.பெங்களூரில் பிறந்து தென் இந்திய நாட்டையே மயக்கும் அரபுக்கடல் அப்சரஸ் நயன் தாரா பிறந்தது 26 ஆம் தேதியில்! பிரும்மாண்ட இயக்குநர் என்ற பெயர் எடுத்திருக்கும் ஷங்கர் பிறந்தது ஒரு 26 ஆம் தேதியில்! சரி! இவர்களின் விபரத்தால் என்ன பயன் எனக் கேட்கிறீர்களா? கர்மவீரர் காமராஜர் அவர்களால் மதிய உணவுத்திட்டம் பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதை தமிழ்நாடு முழுக்கப்பரவலாக்கியவர் எம்.ஜீ.ஆர்.அநேகமாக 1979 ஆம் வருடம் இந்த முழுமையான சத்துணவுத்திட்டம் தமிழகம் முழுக்க அறிமுகப்படுத்தப்பட்டது என நினைக்கிறேன்.(சில வருடங்கள் முன்பு அல்லது பின்பு இருக்கலாம்) இன்று வரை இந்தத் திட்டத்தை யாராலும் ரத்து செய்ய இயலாது.இந்தத் திட்டத்தால் எத்தனை கோடி தமிழ்க்குழந்தைகள் உயிர் பிழைத்தது என்பது கடவுளுக்கே தெரியும். (ஆக,பலரின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி 8,17,26 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு உண்டு.இந்த மூன்று தேதிகளும் சனியின் முழு அம்சத்துடன் இயங்குவதால் இந்த தேதியில் பிறப்பவர்கள் பலரது தலையெழுத்தையே அடியோடு மாற்றப்பிறந்தவர்கள்!) நடிகை ரோஜா ஆணைப்போல வேட்டி சட்டை போட்டு தமிழ்ப்படங்களில் நடித்தார்.இன்றும் இந்த நடைமுறைப் பின்பற்றப்படுகிறது. பிராமணர்கள் கடவுளின் பெயரைச் சொல்லி கோயிலிலும்,ஆன்மீகத்திலும் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.பிராமணர்களை எதிர்த்தால் ஜாதி வெறியன் என்ற பெயர் வரும்.ஆகவே,இந்த பிராமணர்கள் யாரைச் சொல்லி ஏமாற்றிவருகிறார்களோ,அந்த யாரையே இல்லை எனக்கூறிவிட்டால் தமிழன் சிந்திக்கத்துவங்குவான் .சுயமரியாதையுடன் திகழுவான்.அதனால்தான் கடவுள் இல்லை என நான் பிரச்சாரம் செய்கிறேன் என ஈ.வே.ரா. தனது கருத்தை ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பது, ‘கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற வெளிநாட்டு மதங்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை.எனது இந்து மதம் இந்த மூடநம்பிக்கைகளால் அழிந்துபோய்விடக்கூடாது.அதற்காக என்னால் முடிந்த சீர்திருத்தம் செய்கிறேன்’ என அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.அவர் இந்த பிரச்சாரம் செய்து 30 வருடங்கள் ஓடிவிட்டன. இன்று?! நான் கோவிலுக்கெல்லாம் போவதில்லை என சும்மா சாதாரணமாக ஒருவர் சொன்னாலே அவரிடம் , ‘ஏன்பா நீ நாத்திகவாதியா?’ என கேட்குமளவுக்கு ஈ.வே.ரா.வின் பிரச்சாரம் அமைந்துள்ளது. (17 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அனைவரும் சீர்திருத்தவாதிகள்.இவர்கள் மதவிஷயங்களில் ஈடுபாடு கொண்டால் அளவற்ற எதிர்ப்பை சம்பாதிப்பார்கள்.ஆனால்,இவர்களது சீர்திருத்தம் பல நூற்றாண்டுகள் கடந்தும் பரவிக்கொண்டே இருக்கும்) இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்தியாவை இலங்கைக்கு ஆதரவாகவும்,தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய அரசை திருப்பியது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருக்கும் எம்.கே.நாராயணன் என்ற அதிகாரிதான்.அந்த அதிகாரியின் நயவஞ்சகத்தை அரசியல் அரங்கில் தோலுரித்துக்காட்டியவர் தொல்.திருமாவளவன்.அதற்காக மத்திய அரசின் மிரட்டலுக்கும் ஆளானார்.ஆதாரம்:1.1.2009 முதல் 1.9.2009 வரை வெளிவந்த தமிழ்நாட்டு தினசரிப்பத்திரிகைகள்.ஆக அவரது பிறந்த தேதியான ஆகஸ்டு 17 இங்கு செயல்படுவது தெரிகின்றது. கி.பி.1970 முதல் இலங்கைத் தமிழ்இனத்தை அழித்துக்கொண்டே இருக்கும் இலங்கை அரசு பிரபாகரனின் அசுரப்பாய்ச்சலுக்குப் பின்னர் தான் சிங்கள ராணுவத்தின் கொட்டம் அடங்கியது.இலங்கைத் தமிழ்மக்களின் தலையெழுத்தை மட்டுமல்ல,இலங்கை அரசு, இந்திய அரசு இவைகளின் தலையெழுத்தையே மாற்றும் சர்வ வல்லமை சனியின் அம்சத்தில் பிறந்த பிரபாகரனுக்கு உண்டு என்பதை இதுவரை நாம் படித்த செய்திகள் சொல்லும்.பிரபாகரனின் வரலாற்றை எழுதவே 20 லட்சம் பக்கங்கள் தேவைப்படும்.அவர் பிறந்தது டிசம்பர் 26. பிரபாகரனிடம் சீனா பல முறை ரகசியப்பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றது. சீனா பிரபாகரனுக்கு தமிழ் ஈழம் வாங்கித் தருமாம்.அதற்குப் பரிசாக திரு கோணமலையை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு தரவேண்டுமாம்.(இயற்கையாக அமைந்துள்ள திருகோணமலைத் துறைமுகத்தின் மீது அமெரிக்காவுக்கு நீண்டநாட்களாக காதல் உண்டு) பிரபாகரன் இந்தியா மீதும்,தமிழ்நாட்டின் மீதும்,தமிழ் சகோதர்கள் மீதும் உள்ள பாசத்தால் இதைச் செய்யவில்லை;(இதைச் செய்திருந்தால் இந்தியாவின் தலையெழுத்தோடு உலக வரலாறே மாறிப் போயிருக்கும்) இப்போது, சீனா இலங்கை அரசிடம் இதே கோரிக்கையோடுதான் கொஞ்சிக்குலாவுகிறது. ஆதாரங்கள்:தமிழ்நாட்டில் வெளிவரும் அனைத்து தமிழ்ப்பத்திரிகைகளும். கி.பி.2006,2007,2008,2009. தமிழ்சினிமாவில் பிரம்மாண்டம் என்பதை நவீனமயமாக அறிமுகப்படுத்தியவர் ஷங்கர்.ஒரு பாடலுக்கு ஒரு கோடி ரூபாயைச் செலவிடும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்.இவரது ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்தாலே 10 பி.எச்.டி.பட்டம் வாங்கலாம். எம்.ஜி.ஆர்.(17) அவர்கள் பிரபாகரன்(26) மீது பாசம் வைத்திருந்தார்.தற்போது திருமாவளவன்(17), பிரபாகரன் மீது அக்கறை கொண்டுள்ளார். 8 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் தான் ஒரு அனாதை என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.எனக்கென இந்த பூமியில் யார் இருக்கிறார்கள் என ஏக்கத்துடன் இருப்பர். இவர்கள் நண்பர்களை பாதிப்பார்கள்.அதாவது,இவர்களது சில ஆளுமைத்திறனை இவருடன் பழகுபவர்கள் பின்பற்றத்துவங்கி மள மளவென முன்னேறிக்கொண்டே இருப்பர்.இவர்கள் மிக மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுவர்.இவர்களுக்கு சுய தம்பட்டம் அடிப்பதில் விருப்பம் அதிகம். இவர்களுக்கு 1 ஆம் எண்காரர்கள் போல வேறு யாரும் உதவ முடியாது.

உங்களின் குழந்தை டீன் ஏஜில் இருக்கிறதா ?மறு பதிப்பு

குழந்தையின் வயது 12 முதல் 19க்குள் இருக்கிறதா?இந்தக் கட்டுரை உங்களுக்காக . . .

கி.பி.1999 ஆம் ஆண்டில் நம் தமிழ்நாட்டில் பருவ வயது எனப்படும் டீன் ஏஜ்களின் தற்கொலை முயற்சி எண்ணிக்கை ஒரு நாளுக்கு சராசரியாக 400 ஆக இருந்தது.
இன்று கி.பி.2009 இன் விளிம்பில் இருக்கிறோம்.உலக மயமாக்கலின் வேகத்தால் உலகமே அமெரிக்க மயமாகிவிட்டது.பணத்துக்காக என்னவேண்டுமானாலும் செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் சிறு நகரங்களிலும் பரவிவருகிறது.இந்த நிலையில் டீன் ஏஜ்கள் எனப்படும் பருவ வயதுகளில் இருப்பவர்களின் தற்கொலை முயற்சி ஒரு நாளுக்கு சராசரியாக 2500!

நீங்கள் வீட்டைவிட்டு வேலை அல்லது தொழில் நிமித்தமாகக் கிளம்புவீர்கள்.உங்கள் மகன் அல்லது மகள் தூங்கிக்கொண்டிருப்பான்/ள்.
நீங்கள் வேலை அல்லது தொழிலை விட்டு வீட்டுக்குள் களைத்துப்போய் வருவீர்கள்.உங்கள் மகன் அல்லது மகள் தூங்க ஆரம்பித்துஇருப்பர்.
சரி நாளைக்குப் பேசிக்கலாம் என பேசுவதற்குக்கூட நேரமில்லை.(அதான் செல் இருக்கே என உங்களை நீங்களே ஏமாற்றாதீர்கள்)

பாசமோ,வியாபாரமோ நேரில் பேசுவது போன்ற பரிசு அல்லது வரம் எதுவும் கிடையாது.

நீங்கள் யாருக்காக பணத்தைத் தேடி ஓடுகிறீர்கள்?அவர்களின் நற்பண்புகளை உருவாக்குவதில் 50% நீங்களும் உங்களின் வாழ்க்கைத்துணையும்தான் என்பதை அறிவீர்களா?
அவர்களிடம் நீங்கள் வாரம் ஒரு முறையாவது மனம்விட்டு பேசுகிறீர்களா?
அவர்களின்(உங்கள் பருவ வயது மகன் அல்லது மகள்) தினசரி வாழ்க்கையில் என்ன நடந்துவருகிறது என தினமும் உங்களால் நேரடியாகக் கேட்கமுடிகிறதா?
அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?(ஆம் எனில் அந்த 2500 தற்கொலை முயற்சியில் நிச்சயம் உங்களின் குழந்தை இருக்காது)
சாப்பிடும் முன்பும்,சாப்பிட்டப்பின்பும் கை கழுவ கற்றுத் தருகிறோம்.காதல்,காமம்,ஏமாற்றுதல்,செல் போன் வழியே உருவாகும் பிரச்னைகள் இவற்றினை எப்படி எதிர்கொள்வது என்பதை உங்கள் மகன் அல்லது மகளுக்கு ஒரு நாளாவது சொல்லிக்கொடுத்ததுண்டா?(உங்களது அனைத்து செல் போன்களையும் அணைத்துவைத்துவிட்டு)


இதையெல்லாம் செய்யாமல் என் மகள் என் பேச்சைக் கேட்க மாட்டேங்குறா? சார் நீங்கதான் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க என டியூசன் ஆசிரியர்களிடம் கெஞ்சாதீர்கள்.
(உங்கள் மகளின் 5 வயது முதல் 15 வயது வரை அவள் கேட்கும் சந்தேகத்தை அவளின் கண்களை நோக்கிப்பார்த்து பொறுமையாகக் கேட்டிருந்தால் யாரோ ஒரு டியூசன் ஆசிரியரிடம் நீங்கள் கெஞ்ச வேண்டாம்)
ஆனால் உங்கள் மகள் உங்களது டியூசன் ஆசிரியர் வார்த்தைகளைக் கேட்பாள்.உங்களை மதிக்க மாட்டாள்.ஏனெனில் டியூசன் வாத்தியாரின் வேலையே மாணவியின் (மகளின் அல்ல) பேச்சுக்களைக் கூர்ந்து கவனிப்பதுதான்.
அதே மகளிடன் அந்தரங்கப் பிரச்னைகளை (பெற்றோராகிய)நீங்கள் பகிர்ந்ததுண்டா?
ஏன் டியூசன் ஆசிரியரை மகன் மற்றும் மகள்கள் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறார்கள்.?
சில இடங்களில் டியூசன் ஆசிரியரே தனது மாணவியைத் திருமணம் செய்யுமளவுக்கு வளர்ந்துவிட்டது .ஏன்?

உங்கள் மகன் அல்லது மகள் அல்லது இருவரும் இன்று முதல் உங்களை அதிசயமாகத் தான் பார்ப்பார்கள்.இன்றே மனம் திறந்து பேசமாட்டார்கள்.
பொறுப்புள்ள எதிர்காலத்தை எதிர்காலத் தலைமுறையை உருவாக்கிட உங்கள் குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் விளையாடுங்கள் அல்லது அரட்டையடியுங்கள்.

காதி வாழ வைக்கும் :நம்மையும் நமது ஆரோக்கியத்தையும்

அத்தியாவசியப பொருள்களின் விலைகள் நம்பமுடியாத உயரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சென்னையில் வசிப்பவர்கள் ஒரு மாறுதலுக்கு அண்ணாசாலை காதி கிராமோத்யக் பவனை முயற்சி செய்து பார்க்கலாம். வெளிச் சந்தையில் எந்தப் பொருள் என்ன விலையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். காதியில் அந்த விலையில் குறைந்தது பதினைந்து சதவீதமாவது குறைவாக உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், கடுகு, சீரகம், மிளகு போன்ற பொருள்கள், குளிக்க, துவைக்க சோப்புகள், தைலங்கள், வாசனை திரவியங்கள், குழம்புப் பொடி, ரசப்பொடி, மிளகாய்ப்பொடி ரகங்கள், மூலிகை மருந்துகள், பினாயில் போன்ற பொருள்கள் – இதுதான் என்றில்லை. எதுவும் கிடைக்கிறது. கண்டிப்பாக, மிகத் தரமான பொருள்கள். சற்றும் சந்தேகமே வேண்டாம்.
அரசு இயக்கும் அமுதம் அங்காடிகளிலும் மளிகைப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் பொருள்களின் தரத்தைப் பொருத்த அளவில் காதி எட்ட முடியாத உயரத்தில் உள்ளது என்பது அநேகமாகப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் காதிக்குச் செல்லும்போதெல்லாம் அநேகமாக அந்தப் பெரிய மாளிகையினுள் கொள்முதலுக்குச் செல்லும் ஒரே மனிதன் நாந்தான் என்னும் உணர்வு ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது. மக்கள் பெரும்பாலும் அந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. காதி என்றால் கதர் ஜிப்பா மட்டும் என்னும் எண்ணம் எப்படியோ மனத்தில் படிந்துவிட்டிருக்கிறது. இது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.கொஞ்சகாலம் முன்பு – சரியாகச் சொல்வதென்றால், காந்தியின் சில கட்டுரைகளைப் படித்துவிட்டு, கிராமப் பொருளாதார மேம்பாடு எப்படி ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். காந்தி முப்பதுகளில் எழுதிய கட்டுரைகள் அவை. கிராமப் பொருளாதார மேம்பாடு என்பது முன்னொரு காலத்தில் சரோஜ் நாராயண் சுவாமி மற்றும் ஜெயா பாலாஜியின் குரல்களில் உதித்து, அதிலேயே மரணமடைந்துகொண்டிருந்த ஒரு விஷயம் என்பது நினைவுக்கு வந்தது. இப்போதெல்லாம் செய்திகளில்கூட இந்தப் பிரயோகத்தைக் காணமுடிவதில்லை.
கடந்தவாரம் புதிய தலைமுறை வார இதழில் மாலன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தியாவின் மக்கள் தொகை முப்பது கோடியாக இருந்தபோது இங்கே எத்தனை பருப்பு உற்பத்தி செய்யப்பட்டதோ, அதே அளவுதான் இன்றைய நூற்று முப்பது கோடி அளவுக்கும் உற்பத்தியாகிறது. தேவை அதிகமாகவும் உற்பத்தி மிகக் குறைவாகவும் உள்ள நிலையில் இறக்குமதி தவிர நாம் செய்யக்கூடியது வேறில்லை. எனவே அதைச் செய்கிறோம். தேவையான அளவில் நாம் சமரசம் செய்வதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிடுகிற பட்சத்தில் இறக்குமதி செய்யும் பொருள்களின் விலை கணிசமாக உயரத் தொடங்கிவிடுகிறது. துவரம் பருப்பு கிலோ நூறு ரூபாயைத் தொடும்போது அது செய்தியாகிறது. சாம்பார் காய்ச்சி, கலந்து அடித்தகையோடு அது மறந்தும் விடுகிறது. விலையேற்றத்துக்கு ஒருவாறு பழகிவிடுகிறோம்.
ஆனால் எந்தளவுக்கு இந்தப் ‘பழகிவிடுதல்’ சாத்தியம்? இதே நூறு ரூபாய் என்பது இருநூறாக ஆகும்போது என்ன செய்வோம்? அப்போது நமது வருமானமும் நூறு சதவீதம் அதிகரித்திருக்குமானால் ஒன்றும் செய்யத் தோன்றாது. ஆனால் நூறு சதவீத வருமான அதிகரிப்பு சாத்தியமா? நூறு சத வருமான அதிகரிப்பு என்பதுதான் சாத்தியமில்லையே தவிர நூறு ரூபாய் துவரம்பருப்பு, இருநூறு ஆகாது என்று சத்தியமாகச் சொல்ல முடியாது. ஆகும். ஏனெனில் நமக்குத் தேவை இருக்கிறது. அதற்கேற்ற அளவு உற்பத்திப் பெருக்கம் இங்கே இல்லை.
காரணம் விவசாயிகளுக்குத் தரப்படும் கொள்முதல் விலை மிகக் குறைவாக இருக்கிறது என்பது தொடங்கி, கிராமப்புற மக்கள் விவசாயத்தை விடுத்து மாற்றுத் தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து வருவதுவரை பல உண்டு. கிராமப்புற மேம்பாடு என்பது பேச்சளவிலேயே பெரும்பாலும் தேங்கிவிடுவதால் கிராமப்புற மக்கள் வெறுத்துப் போய் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விடுவது அதிகரித்து வருகிறது. செய்வதற்கு ஆளில்லாமல் விவசாயம் குன்றுவதால், வேறு வழியில்லாமல் இறக்குமதி செய்கிறோம். எனவே சொல்லும் விலையைக் கொடுத்தாக வேண்டியுள்ளது. பெட்ரோல் ஆனாலென்ன, பருப்பானால் என்ன? இறக்குமதி என்றால் கண்டிப்பாக ப்ரீமியம் விலைதான்.
இது மட்டும்தான் காரணம் என்றில்லை. செலவுகளைக் கொஞ்சம் குறைப்பதற்காகவாவது கொஞ்சநாள் சுதேசிச் சரக்குகளை மட்டும் உபயோகித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. தவிரவும் அவசியமே என்றாலும் ஆடம்பரமாகத் தோற்றமளிக்கக்கூடிய எதையும் பயன்படுத்தாதிருந்து பார்க்கலாம் என்றும் நினைத்தேன். அதன் முதல் படியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என் காரை விற்றேன். வாரத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தேன். மாதம் எப்படியும் ஐந்து முதல் ஆறாயிரம் ரூபாய் அதற்குச் செலவாகிக்கொண்டிருந்தது. தவிர ஓட்டுநர் சம்பளம் ஆறாயிரம் ரூபாய். [நானே ஓட்டுவதென்றால் தினசரி ஒரு கொலை வழக்குக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும்.]
ஆனால் கார் எனக்கு அவசியமாக இருந்தது. என் புறநகர் வீட்டிலிருந்து சென்னைக்குள் பேருந்து அல்லது ரயிலில் வந்து செல்வது என்பது மிகுந்த அயற்சியை அளிக்கக்கூடிய விஷயம். வந்து போகலாம். பெரிய விஷயமில்லை. ஆனால் வீடு திரும்பினால் சாப்பிட்டுவிட்டுப் படுக்கத்தான் தோன்றும். இரவெல்லாம் வேலை பார்க்க முடியாது. அதனால்தான் கார் வாங்கினேன்.
காரும் கூடாது, என் வேலையும் கெடக்கூடாது என்று தீர்மானித்தபோதுதான் சென்னைக்குள்ளே குடிமாறி வந்து, காரை விற்று ஸ்கூட்டர் வாங்கினேன். இப்போது என் மாத பெட்ரோல் செலவு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டுமே.
இந்தச் சிக்கனம் மூலம் சாத்தியமான சேமிப்பு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. கார் இல்லாததால் நான் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. மாறாக என் கையிருப்பு அதிகரித்தது. எனில், இன்னும் சில விதங்களிலும் இதனைப் பிரயோகம் செய்து பார்க்கலாமே?
காதியில் நான் முதல் முதலில் வாங்கிய பொருள் சோப்பு. அதுநாள் வரை டெட்டால் சோப் தவிர வேறெதையும் பயன்படுத்த விரும்பாதவன் நான். ஒரு சோப் எனக்கு ஐந்து அல்லது ஆறு நாள்களுக்கு மட்டுமே வரும். மாதம் 150 ரூபாய் சோப்புக்கே போய்க்கொண்டிருந்தது. காதிக்குச் சென்றபோது அபரஞ்சி என்றொரு சோப்பைப் பார்த்தேன். நல்ல கோவிந்தா மஞ்சள் நிற அட்டைப்பெட்டி. உள்ளே டேபிள் வெயிட் மாதிரி கனமாக, பச்சை நிறத்தில் ஓவல் வடிவ அபரஞ்சி. துளசியின் மணம், நிறம், குணம் கொண்டது. விலை ரூபாய் இருபது மட்டுமே. சரி ஒன்று வாங்கி உபயோகித்துப் பார்க்கலாம் என்று வாங்கினேன்.
உண்மையிலேயே அபரஞ்சி உள்ளம் கொள்ளை கொள்ளக்கூடிய சோப்பாக இருந்தது. அபாரமான வாசனை கொண்ட ஆரோக்கிய சோப் அது. தவிரவும் ட்யூராசெல் பேட்டரி முயல் மாதிரி அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். குறைந்தது ஒரு சோப் ஒன்றரை மாதங்களுக்கு வருகிறது. ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட சோப் அது.
அடுத்தது வாசனாதி திரவியங்கள். நான் நாலாயிரம் ரூபாய் வீட்டுக்குச் சம்பளமாக எடுத்துவந்த காலத்திலிருந்தே பாடி ஸ்ப்ரே, பர்ஃப்யூம் வகையறாக்கள் இல்லாமல் வெளியே கிளம்பாத ஜில்பான்ஸ் பேர்வழி. விதவிதமான ஸ்பிரேக்கள், அபாரமான விலையில் மட்டுமே கிடைக்கும். ஒரு போதும் அது பற்றிய விமரிசனம் எனக்கு இருந்ததில்லை. யாராவது சுட்டிக்காட்டினாலும் பொருட்படுத்த மாட்டேன். கொசு மருந்துக்காரன் பீய்ச்சிவிட்டுப் போவதுபோல தினமும் குளித்துவிட்டு தேகமெங்கும் பாடி ஸ்பிரேவால் மறுகுளியல் போடாமல் வெளியே கிளம்பமாட்டேன். எனக்கு எப்போதும் வாசனையாக இருந்தாக வேண்டும். அப்போதுதான் எழுத மூட் வரும்.
காதியில் எனக்கு ஜவ்வாது அறிமுகமானது. வெறும் முப்பது ரூபாய். ஒரு சிறிய பாட்டில் ஜவ்வாது [பொடி, க்ரீம் இரு விதமாகவும் கிடைக்கும்.] ஊரைக்கூட்டும் நறுமணம் கமழ்வது. இதுவும் ஒரு மாதம் வரக்கூடியது. தவிரவும் இயற்கையான பொருள். ரசாயன சேர்மானம் இல்லாதது. எனக்கு ஜவ்வாது வாசனை ரொம்பப் பிடித்துவிட்டது. அலுவலகத்தில் முகில் எனக்கு மதன சுந்தர ஜவ்வாது பாகவதர் என்று பட்டப்பெயர் வைத்தான். அந்தக் கிண்டலும் கமகமவென்றே இருப்பதாகப் பட்டது.
அந்தக் காலத்து பாகவதர்கள் உபயோகித்தார்கள் என்பதனாலேயே ஜவ்வாதை நாம் நிராகரிப்பதும், அது பழம்பெருச்சாளிகளின் வாசனைப்பொருள் என்று ஒதுக்கிவைப்பதும் அபத்தம் என்று தோன்றியது. பாகவதர் கிராப்பும் ஜெமினி கணேசன் பேண்ட்டும் மறுஃபேஷனாகிவிட்ட காலத்தில் பாடி ஸ்ப்ரேக்களின் இடத்தில் ஜவ்வாதைத் திரும்பக் கொண்டுவைப்பதில் என்ன பிழை? எனக்குத் தெரிந்து ஒன்றுமில்லை. எனவே ஜவ்வாதுக்கு மாறினேன். இருநூறு ரூபாய் பாடி ஸ்ப்ரே இடத்துக்கு முப்பது ரூபாய் ஜவ்வாது.
இது கொடுத்த பரவசம் கொஞ்சநஞ்சமல்ல. நான் காதியின் காதலனாகிப் போனேன். அங்கே வேறென்னென்ன கிடைக்கின்றன என்று கவனமாக ஆராயத் தொடங்கினேன்.
எதுவும் கிடைக்கும். அண்ணாசாலை காதி பவன் என்பது ஸ்பென்சர் ப்ளாசா, சிடி செண்டர் போலவே ஒரு நல்ல ஷாப்பிங் மால். ஆனால் சுதேசி ஷாப்பிங் மால். உள்ளே நுழையும்போதே நன்னாரி, எலுமிச்சை ஜூஸ்கள், பதநீர்க் கடைகள் இருக்கின்றன. ஆறு ரூபாய் நன்னாரி ஜூஸுக்கு இன்னொரு பெயர் அமிர்தம். ஜில்லென்று அருந்திவிட்டு உள்ளே போகலாம். நிதானமாக எடை பார்த்துவிட்டு, ரத்த அழுத்தம் பரிசோதித்துக்கொண்டு[பத்து ரூபாய்.] கடை கடையாக ஆராயலாம். மளிகைப் பொருள்கள் கிடைக்கும் விசாலமான ஹால் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. எளிதாகப் பார்த்து வாங்க வசதியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எடுத்துப் போட்டுக்கொண்டு போனால் வினாடிகளில் கம்ப்யூட்டர் பில்லிங். கடன் அட்டை வாங்கிக்கொள்கிறார்கள். இந்த வளாகத்துக்குள்ளேயே சித்த மருத்துவப் பொடிகள், லேகியங்கள், தைலங்கள் போன்றவையும் இருக்கின்றன. விற்பனைப் பிரதிநிதிகள் ஒவ்வொன்றையும் எடுத்து மிக அழகாக விளக்குகிறார்கள்.
உங்களுக்கு ‘பிராண்ட்’ மாயை மட்டும் இல்லை என்றால் காதியில் இன்னதுதான் கிடைக்கும் என்றில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம். விதவிதமான செருப்புகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பைகள், பர்ஸ்கள், பெல்ட்கள், முத்து, பவழம், மணி மாலைகள், ஸ்படிகம், ருத்திராட்ச மாலைகள், வேட்டி, துண்டு, சேலைகள், படுக்கைகள், படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், சிற்பங்கள், சிலைகள், இருக்கவே இருக்கிறது ஜிப்பாக்கள்.
முற்றிலும் உள்நாட்டில், கிராமப்புறங்களில், பெரும்பாலும் பெண்களால் கைத்தொழிலாக மேற்கொள்ளப்படும் இந்தத் தயாரிப்புகள் நம்பமுடியாத அளவுக்குத் தரமாகவும் விலை மலிவாகவும் உள்ளன. இவை பரவலாகாததற்குக் காதியும் ஒரு காரணம். அவர்கள் முழு வர்த்தகமாக இதனைச் செய்யவில்லை என்பதனால் பல இடங்களில் கிளைகள் இருந்தும் எல்லா இடங்களிலும் இதே அளவுக்கு எல்லா பொருள்களும் கிடைக்கும்படி வைப்பதில்லை. சென்னை நகரில் உள்ள பல காதி பவன்களில் வெறும் ஜிப்பாக்களும் சபரிமலை சீசன் வேஷ்டிகளும் மட்டும்தான் இருக்கின்றன. அற்புத சோப் அபரஞ்சி அண்ணாசாலை காதி தவிர வேறு எங்குமே இருப்பதில்லை. [லாயிட்ஸ் சாலை காதி பவனில் ஒருவேளை இருக்கலாம். நான் போகவில்லை.]
எனவே புறநகர்வாசிகளுக்கு இது பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை. சென்னைக்குள்ளே குடியிருப்பவர்கள் மட்டுமாவது இந்த இடத்துக்கு முடிந்தபோது போய்வரலாம். மாதம் ஒருமுறை மளிகைப் பொருள் வாங்கவாவது போவது என்னும் வழக்கத்தை வைத்துக்கொண்டால், அந்தக் குறிப்பிட்ட வகையில் கணிசமான சேமிப்பு நிச்சயம் சாத்தியமாகும். தமிழகத்தின் ஒவ்வொரு பெருநகரத்திலும் அநேகமாக இம்மாதிரி ஒரு பெரிய காதி அங்காடியாவது நிச்சயம் இருக்குமென்று நம்புகிறேன்.
தொலைக்காட்சி திணிக்கும் பிராண்ட் போதையிலிருந்து விடுபட்டு சுதேசித் தயாரிப்புகளை உபயோகிக்கத் தொடங்குவது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
நன்றி:www.writerpara.com/paper/

கடவுளர்களும் பிரயோகித்த வர்மக்கலை

முருகக்கடவுள் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் போதும்,ராமன் ராவணனை வதம் செய்யும்போது வர்மக்கலையை பயன்படுத்தியுள்ளனர்.அப்பேர்ப்பட்ட தெய்வீகக்கலையே வர்மக்கலையாகும்.
வர்மக்கலை பயின்றவர்கள் மிகமிகக் குறைவாகவே பேச வேண்டும்.அது அவர்களின் சக்தியை அதிகரிக்கும்.வர்மக்கலையானது போர்க்கலை அல்ல;அது மருத்துவக்கலை;அதன் நவீன வடிவமே நியூரோதெரபி ஆகும்.

முற்பிறவிவாழ்க்கையை சரி செய்யும் பயிற்சி

-->
முற்பிறவி வாழ்க்கையை சரிசெய்யும் பயிற்சி
அமெரிக்காவில் டாக்டர் ப்ரெய்ன்வேய்ஸ் என்ற மனநல மருத்துவ நிபுணர் Past Life Regrssion என்றசிகிச்சை முறையைக் கையாண்டு பற்பல உண்மைகளை கண்டறிந்துள்ளார்.அப்படிக் கண்டறிந்தவைகளைத் தொகுத்து Many Life,Many Masters என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளார்.அவர் இந்த சிகிச்சை வகுப்புக்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்.இப்போது நாம் அவரது வகுப்பில் முன்பதிவு செய்தால், கி.பி.2015 ஆம் ஆண்டில் தான் கலந்துகொள்ளமுடியும்.
இந்த முறை சிகிச்சையில் ஒரு மனோதத்துவ நிபுணர்,வகுப்பில் கலந்துகொள்பவரின் மனதை ஆழ்நிலைக்குக் கொண்டு சென்று,பழைய பிறவிகளை நினைவு கூர வைக்கிறார்.அந்தப்பிறவி அனுபவத்தில் மீண்டும் வாழ வைக்கிறார்.
பழைய நிலைக்குத்திரும்பியதும்,அவர் மனம் மற்றும் உடல்நோய்களிலிருந்து முழுமையாக விடுபடுகிறார்.இந்த சிகிச்சை மூலம் பல தீராத நோய்கள் குணமாகின்றன.
ஆதாரம்:ஆன்மீக விஞ்ஞான வழிகாட்டி,பக்கம் 70
டாக்டர் டிக்சட்ஃபன் என்ற மனசக்திப்பயிற்சியாளர் இதே பயிற்சியை வழங்கிவருகிறார்.இவருடையப்பாடங்கள் குறுந்தகடாகவும் விற்பனையாகிவருகிறது.Sylvia Brown என்பவரும் இதை தொழில்ரீதியாகச் செய்து வருகிறார்.இப்பிறவியில் ஒருவருடைய குணங்களுக்கும் முற்பிறவி அனுபவங்களுக்கும் தொடர்பு இருப்பதை இவருடைய Tools for Life என்னும் டி.வி.டி.யில் ஆதாரங்களுடன் விவரித்துள்ளார்.ஒரு பிறவிக்கும் இன்னொருபிறவிக்கும் இடையே உள்ள வாழ்வையும் இந்தமுறைகளில் ஆய்வுசெய்து பல்வேறு புத்தகங்கள் வெளிவந்துள்ளன.நன்றி:பி.எஸ்.பி.யின் விடியல் பக்கம் 19,டிசம்பர் 2008

நீங்கள் தலைசிறந்த ஜோதிடராக வேண்டுமா?

நீங்கள் தலைசிறந்த ஜோதிடராக வேண்டுமா?

சாஸ்திரம் பிந்தியது;அனுபவம் முந்தையது.அதன்படி,முறைப்படி அடிப்படை ஜோதிடம் கற்றுக்கொண்டப்பின்னர்,பின்வரும் புத்தகங்களை நீங்கள் உங்களது வீட்டில்,குடும்ப நூலகத்தில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.இவற்றை அடிக்கடி வாசிப்பதால்,உங்களது ஜோதிடத்திறன் மெருகு பெறும்.

1978,1979,1980 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த வித்வான் வே.லட்சுமணன் அவர்களின் பால ஜோதிடம் வார இதழ்கள் அனைத்தும்

மு.மாதேஸ்வரன் அவர்கள் எழுதிய ஜோதிடப் புத்தகங்கள் அனைத்தும்

முருகு ராஜேந்திரன் எழுதிய ஜோதிட அனுபவக் கட்டுரைகள்

சிவா மேகநாதன் எழுதிய அனுபவ ஜோதிடக் கட்டுரைகள்

புலியூர்பாலு எழுதிய ஜோதிடக் கட்டுரைகள்

கடலங்குடி கே.சரஸ்வதி எழுதிய சில ஜோதிடப்புத்தகங்கள்

மயிலை பூபதி ராஜன் என்ற ஏ.எம்.பிள்ளை எழுதிய சில ஜோதிடப்புத்தகங்கள்

மகரிஷி தயானந்த சரஸ்வதி எழுதிய கோள்களின் கோலாட்டங்கள்

வித்வான் வே.லட்சுமணன் எழுதிய ஜோதிடப்புத்தகங்கள்

பி.எஸ்.பி.அவர்கள் எழுதியுள்ளஜோதிடப்புத்தகங்கள்

ஆவிகள் உலகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு

ஆவிகள் உலகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு

ஆவிகள் உலகத்தை மூன்று அடிப்படை உலகங்களாகப் பிரிக்கலாம்.1.பாவ உலகம்,2.மத்திய உலகம்,3.புண்ணிய உலகம்.

பாவ உலகம்:

பூமியில் அதிகபாவம் செய்தவர்கள் அனைவரும் இறந்த பிறகு செல்லும் இடம் இது.இங்கு தீய ஆவிகள் மட்டுமே இருக்கும்.இங்கு இருப்பவர்களுக்கு எந்த வித உதவியும் புண்ணிய உலகத்திலிருந்தும்,பூமியிலிருந்தும் கிடைப்பதில்லை;

இங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் துர்மரணம் அடைந்தவர்கள்,தற்கொலை செய்தவர்கள்,வாழும் போது பஞ்சமாப்பாதகங்களை மகிழ்ச்சியாகச் செய்தவர்கள்,பிறரைத் துன்புறுத்தி வாழ்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

குறிப்பிட்ட காலம் வரை இங்கு வாழ்ந்துவிட்டு,மீண்டும் பூமியில் பிறக்கவேண்டும்.அப்படிவாழும் காலம் இருள் மிகுந்ததாக அல்லது வெயில் மிக்கதாக இருக்கும்.

2.மத்திய உலகம்:

பாவ உலகத்தை விட கொஞ்சம் உயர்ந்த நிலையைக் கொண்டது மத்திய உலகம்.பாவ உலகத்தில் போதுமான தண்டனையை அனுபவித்தவர்கள்,பூமியில் வாழும் போது தவறுகள் செய்தாலும் அதிகமான தான தருமங்கள் செய்தவர்கள்,செய்த தவறுக்காக இறக்கும்போது மனம் வருந்தியவர்கள்,பெரிய அளவில் பாவமோ அல்லது புண்ணியமோ வாழும்போது செய்யாதவர்கள்,முற்பிறவியில் செய்த தவறுகளை ஓரளவுஎடுத்த பிறப்பில் நன்மைகளைச் செய்து கழித்தவர்கள் மரணத்திற்குப் பின் செல்லும் இடம் மத்திய உலகம்.

இந்தப் பகுதியில் இருக்கும் ஆவிகளின் நோக்கம் உயர்நிலையை அடைவது மட்டுமே.இதற்காக இவர்களுக்கு மறுபிறவிதவிர,வேறு சிலவாய்ப்புக்களும் தரப்படுகின்றன.

மரணத்தருவாயில் இருப்பவர்களுக்கு மரணமடைந்தவுடன் என்ன நடந்தது?என்றுபுரியாமல் தவிக்கும் ஆன்மாக்களுக்கும் இறப்பினை உணரவைத்தல் இவர்களது முக்கியப் பணி.

மத்திய உலகத்தில் இருப்பவர்களுக்கு தாம் விரும்பும் தாய் தந்தையரிடம் பிறக்கும் அனுமதி உண்டு.


புண்ணிய உலகம்:

எந்தமதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்,பிரார்த்தனைகள்,தான தருமங்கள்,தெய்வீக அறப்பணிகள் செய்து பாவக்கணக்குகளையும்,கருமக்கணக்குகளையும் அழித்தவர்கள்,பற்றில்லாதவர்கள்,பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மிக்கவர்கள்,பக்தி நிறைந்தவர்கள் செல்லும் உலகம் இது.

சில விதிமுறைகளுக்கு உட்பட்டு,மத்திய உலக ஆவிகளுக்கும்,பூமியில் இருப்பவர்களுக்கும் உதவி செய்ய அனுமதி உண்டு.தாங்கள் வாழும்போது பூமியில் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாரோ,அந்தத்துறையைச் சேர்ந்த பூமியில் வாழும் மனிதர்களுக்கு இவர்களால் உதவி செய்ய முடியும்.

புண்ணிய உலகங்களையும் தாண்டி பிறவியற்றநிலையான முக்தியை அடைவதே இவர்களின் நோக்கம்.ஆழ்மனதியானம் செய்யக்கூடியவர்களுக்கு மட்டுமே இந்த உலகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்.சித்தர்கள்,ஞானிகள்,மகான்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.ஆன்மீக நிலையில் உயர்வு பெற விரும்பும் அனைவருக்கும் இவர்களது உதவி கிடைக்கும்.
நன்றி:பி.எஸ்.பி.யின் விடியல் பக்கம்19,20,21,வெளியீடு பிப்ரவரி 2009.

21.12.2012அன்று பூமியில் என்ன நடைபெறும்?

2012 ஆம் ஆண்டில் என்ன நடக்கும்?

நமது பூமியை சந்திரன் ஒரு சுற்று சுற்றிவர 28 1 / 4 நாட்கள் ஆகின்றன.நமது சூரியனை நாம் வாழும் பூமி சுற்றிவர 365 1/4 நாட்கள் ஆகின்றன.நமது சூரியன் ஒரு மையத்தை சுற்றிவருகிறது.அந்த மையத்தின் பெயர் அல்சியோன் ஆகும்.இந்த அல்சியோனை நமது சூரியன் சுற்றி வர 26,000 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த அல்சியோன் பிரபஞ்ச மையத்திலிருந்து வெளிவரும் போட்டான் பேண்டில் பொருந்தியுள்ளது.இந்த போட்டான் பேண்டின் அகலத்தைக் கடக்க நமது பூமிக்கு 2000 ஆண்டுகள் ஆகும்.

கி.பி.1987 ஆம் ஆண்டில் இந்த போட்டான் பேண்டிற்குள் பிரவேசித்துள்ளது.நமது பூமி இந்த போட்டான் பேண்டிற்குள் கி.பி.1998 ஆம் ஆண்டில் பிரவேசித்துள்ளது.இந்த சக்தி மெல்ல மெல்ல வலுவடைந்து,14 ஆவது ஆண்டு,கி.பி.2012 இல் அதி உச்சமடையப்போகிறது.இந்த சமயத்தைப்பயன்படுத்தி,நாம் தியானம் செய்தால்,பிரபஞ்ச சக்தி எனப்படும் காஸ்மிக் சக்தி நமக்குப் பெருமளவில் கிடைக்கும்.இதனால்,நாம் ஏராளமான நன்மைகளையும்,முக்தி எனப்படும் மறுபிறப்பற்ற நிலையையும் அடையமுடியும்.

இப்படிப்பட்ட ஒரு காலகட்டம் 11,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏற்படும்.

அதேசமயம்,இந்த அபார சக்தியால் பூமியின் அச்சாணி சற்றேவிலகுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு.இதனால்,இயற்கைசீற்றங்கள்,ஆழிப்பேரலை,ஓயாத மழை உண்டாக வாய்ப்புக்கள் அதிகம்.பூமியில் பல தீயசக்திகள் வலுப்பெற்று,பூமியில் கஷ்டநஷ்டங்கள் ஏற்படலாம்.

ஆனால்,கி.பி.2012 க்குள் இந்த நிலைமாறி உலகெங்கும் தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால்,தீயசக்திகள் அழிந்து உலகமேஒரு அமைதி நிலைக்கு வந்துவிடும்.

அல்சியோன் என்ற பிரம்மாண்ட நட்சத்திரம்,பிரபஞ்சமையத்தைச் சுற்றி வர 2,25,000 ஆண்டுகள் ஆகின்றன.வரும் 21.12.2012 அன்று அல்சியோன் தனது முதல் சுற்றை முழுமையாக்குகின்றது.அதாவது பிரபஞ்சமையத்தை ஒரு முறை வலம் வந்திருக்கும்.

அதேபோல்,நமது சூரியனும் தனது 8 வது சுற்றை முடித்துக்கொள்ளும் நாள் அதுதான்.பிரபஞ்சத்துக்கே இந்த நாள் மிக முக்கியமான நாள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

புத்தர்,விவேகானந்தர்,ஈசா எனப்படும் ஏசு,முகமது நபி முதலான தெய்வீக சக்திகள் நமது பூமிக்கு வருகைதருவார்கள் என்பது நம்பிக்கை.அதற்குள் நாம் தினமும் தியானம் செய்து நமது மூன்றாவது கண்ணைத்திறந்துவிட்டால், இந்த மகான்கள் அனைவரையும் ஒருசேர தரிசிக்கும் பாக்கியம்நமக்குக் கிடைக்கும்.ஆதாரம்:BRINGERS OF THE DAWN BY BARBARA MARCINIAK

நன்றி:ஆன்மீக விஞ்ஞானவழிகாட்டி,பக்கம் 88.கிடைக்குமிடம்:கோவைபிரமிட் ஆன்மீக மன்றம்,

“அகஸ்தியர்” 6,பிரமிட் காம்ப்ளக்ஸ்,வடவள்ளி,கோவை41.

செல்:94424 93327,தொலைபேசி:0422 2401023.

செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்:ஆன்மீகக்கடலின் மறுபதிப்புஆன்மீகக் கடல்-6 அறிவியல்பூர்வமான இந்து மதம்-1

இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.

கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.

எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா வின்நானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.
இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.
இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை...

அகத்தியரின் மைந்தன் ஹனுமத்தாசன் சிவனடி சேர்ந்தார்

 

அகத்திய மகரிஷியின் மைந்தன் ஹனுமத்தாசன் சிவனடி சேர்ந்தார்.ஜீவ நாடி பார்த்து பல மக்களின் வாழ்க்கையில் ஆன்மீக ஒளியேற்றிய ஹனுமத்தாசன் நேற்று(26.10.2010) சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.அவருக்கு வயது 66.சென்னை துறைமுகத்தில் பணிபுரிந்துவந்த அவர்,பிரபல ஜோதிடராகவும் பணியாற்றினார்.

 

தினத்தந்தியில் அகத்தியரின் ஜீவ நாடி என்ற தொடரை சுமார் 300 வாரங்களுக்கு எழுதி அகத்தியரின் பெருமையை பரப்பினார்;தினத்தந்தி ஆன்மீக மலரில் அதிசய சித்தர்கள் என்ற தொடரின் மூலம் சதுரகிரியின் பெருமைகளை உலகம் அறியச் செய்தவர்.

 

அவரது இயற்பெயர் த.கி.இராமசாமி.அவரது மனைவியின் பெயர் சூடாமணி.அவருக்கு ஒரு மகனும்,ஒருமகளும் இருக்கின்றனர்.

 

அவரது குடும்பத்தாருக்கு நமது ஆன்மீகக்கடலின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்..

பெண்ணினத்துக்கு எதிராக செயல்படும் விஞ்ஞான வளர்ச்சி:நன்றி தினமலர்27.10.10

மதுரை : ""தமிழகத்தில் ஸ்கேன் மையங்கள் பெருக, பெருக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது,'' என, மதுரையில் நடந்த கருத்தரங்கில், பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரத்தின் மையக்குழு உறுப்பினர் ஜீவா தெரிவித்தார். ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி வரவேற்றார்.


உறுப்பினர் ஜீவா பேசியதாவது : இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மொத்தமே மூன்று சதவீதம் தான். ஆனால் தமிழகத்தில் 3675 ஸ்கேன் மையங்கள் உள்ளன. இவையனைத்தும் கருவில் இருக்கும் குழந்தையின் ஊனத்தை கண்டறிவதற்கு பதிலாக, கருவின் பாலினத்தை தெரிவித்து, பெண் கருக்கொலைக்கு வழிவகுக்கிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், தர்மபுரி மாவட்டங்களில் கடந்த பத்தாண்டுகளாக, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.கடந்த மூன்றாண்டுகளாக விருதுநகர், கோவை, தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் 677 ஆரம்ப சுகாதார மையங்களில் எடுத்த புள்ளி விவரங்களின் படி, மூன்றில் ஒரு பங்கு மையங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, மிகவும் குறைவாக உள்ளது. பெண் கருக்கொலைக்கு எதிரான தடுப்புச் சட்டத்தின் கீழ் (பி.சி.பி.என்.டி.டி.,) 1994 லிருந்து, இன்று வரை 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவேடுகள், ஆவணங்கள் பராமரிக்கவில்லை என சாதாரண காரணங்களுக்காக வழக்கு பதியப்பட்டுள்ளன. ஆனால் கருவின் பாலினத்தை தெரிவித்ததாக எந்த ஒரு ஸ்கேன் மையமும், டாக்டரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. ஈரோட்டில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவால், கேரளத் திருமண மையங்கள் பெருகிவருகின்றன. அங்கிருந்து பெண் எடுப்பதும் தொடர்கிறது, என்றார்.மையக்குழு உறுப்பினர் காந்திமதி பேசுகையில்,"" பெண் குழந்தைகள் குறைந்தால், எதிர்காலத்தில் அவர்கள் மீதான பாலின வன்முறை அதிகரிக்கும். 35 ஆண்டுகளுக்கு மேலாக பெண் சிசுக்கொலை, கருக்கொலை பிரச்னை தொடர்ந்து வருகிறது. கருமுட்டை தானம், கருப்பை வாடகை, கட்டாய கருக்கலைப்பு... என விஞ்ஞான தொழில்நுட்பங்கள் அனைத்தும், பெண்ணினத்திற்கு எதிராக செயல்படுகிறது,'' என்றார். மாநில அமைப்பாளர் பாலசுந்தரி, டாக்டர் தில்ஷாத், வக்கீல் ரமணி ஆகியோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் ரூபா நன்றி கூறினார்.

எந்த ராசிக்காரர்கள் எந்தக் கல்லை அணியக்கூடாது?1.மேஷம் - நீலம்

2.ரிஷபம் - நீலம்

3.மிதுனம் - புஷ்பராகம்

4.கடகம் - வைரம்

5.சிம்மம் - பவளம்

6.கன்னி - புஷ்பராகம்

7.துலாம் - மாணிக்கம்

8.விருச்சிகம் - முத்து

9.தனுசு - பவளம்

10.கும்பம் - பவளம்

12.மீனம் - மரகதம்

நன்றி:பி.எஸ்.பி.யின் விடியல்,பக்கம் 52-53,செப்டம்பர் 2008

பிரம்மஹத்தி தோஷத்தின் முழுப்பரிமாணம்

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?

1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து செய்யாமல் இருத்தல்

2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது

3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது

4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது

5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது

6.உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது(ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்

2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்

3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்

4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்

5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது

6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்


பரிகாரம்:தமிழ்நாடு,கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல்,அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல்

அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் எதனால் அழியும்?
.

என்னால் ஒரு பெண் ஏக்கப்பட்டால்,நான் தங்கியிருக்கும் அல்லது வாழும் இடத்தில் சிறு கருப்பு எறும்புகள் நடமாட்டம் திடீரென வரும்.இப்படிப்பட்ட பாவத்தைப் போக்கிட அருகிலிருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்று நான் சர்க்கரை தானம் செய்ய வேண்டும்.இதனால்,இந்த பாவம்நீங்கும்.

தோலில் மட்டும் வெளுப்பாகவும்,மனதிற்குள் நயவஞ்சகத்தோடும்,அளவற்ற சுயநலத்தோடும் இருக்கும் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள்,அரசுகள்,அரசாங்கங்கள்,மக்கள்,அமைப்புக்கள் செய்வது என்னவெனில்,.உலக வர்த்தக அமைப்பு என்ற பெயரில் இந்தியா போன்ற நேர்மையாக உழைக்கும் நாடுகளை நவீன கொத்தடிமைகளாக்கிவிட்டன;மரபணுவிதை,மரபணு உணவு என்ற பெயரில் நம்மை அடுத்த வேளை சோத்துக்கும் அவர்களின் நிரந்தரமான அடிமைகளாக்கிட முயலுகின்றன;அதற்காக ஆக்ஸ்போர்டு,நியூயார்க் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை அந்தந்த நாட்டு மந்திரிகளாக,பிரதமர்களாக,அதிபர்களாக,ஜனாதிபதிகளாக,ராணுவச் செயலாளகளாக ஆக்குகின்றன.


இணையம் என்ற வலைப்பின்னலை உருவாக்கி,இதுதான் நவீனத் தொழில்நுட்பம்.இதைப்பற்றி அறியாதவர்கள் காட்டுவாசிகள் என தம்பட்டம் அடிக்கின்றன.இதுசார்ந்த படிப்புப்படிக்காதவர்களை இழிவாக நினைக்க வைக்கின்றன.


நாமும் புதுமைகளை ஏற்கும் மனோபாவத்தினால்,மேல்நாடுகள் சொல்வதை குருட்டுத்தனமாகப்பின்பற்றுகிறோம்.

இணையத்தினால் வசதிகள் கிடைப்பது உண்மையாக இருந்தாலும்,இணையத்தினால் விதவிதமான,முறையற்ற,சிறிதும் பொருந்தாத காம தகவல்தளங்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றன.இவைகளெல்லாம் அமெரிக்க,கனடிய,ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவை.
இதனால்,தனிமனித ஒழுக்கம் சிதைந்து,குடும்ப அமைப்பு நாசமாகி,சமுதாயம் சர்வநாசமடைந்துகொண்டே இருக்கிறது.

ஒரு பெண்ணை நிர்வாணமாக ஒரு ஆண் யதார்த்தமாகப் பார்த்துவிட்டாலே,அந்தப் பெண் அவனையே தனது கணவனாக ஏற்றுக்கொள்கிறாள்.இதுவே,இந்துதர்மத்தின் காமக் கோட்பாடு.இணையத்தின் பரவல் என்பது இந்துதர்மத்தை சிதைக்கும் மேல்நாட்டுத்தந்திரமே இது என்பது உண்மையாகிவிட்டது.


இப்படி உலகமக்களின் 3 இல் இரண்டரை பங்கு மக்களை காமவெறிபிடித்த உலகமாக மாற்றிய அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் வெகுவிரைவில் நீரால் அழியும்.தனது உலக வல்லரசுத்தன்மையை இழக்கும்.ருவாண்டா,காங்கோவை விட ஏழைநாடாக மாறும்.

ஜோதிடர்களின் வாழ்நாள் கவனத்திற்குநீங்கள் ஜோதிடத்தை தொழில்முறையாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ பார்க்கிறீர்களா?

ஆம் எனில் உங்களுக்காகத்தான் இந்தக்கட்டுரை!!!

நாம் ஜோதிடத்தால் பெரும்புகழ் அடைகிறோம்.நியாயமாக ஜோதிடத்தைக் கணித்துச் சொன்னால்! நம்மிடம் தனது எதிர்காலத்தை பார்க்கும் மனித ஆத்மாக்கள் நமது ஜோதிட ஆலோசனையைப்பின்பற்றி வளமாகவும்,நிம்மதியாகவும் வாழ்கிறார்கள்.சில பல பரிகாரங்கள் செய்கிறார்கள்.உரிய பரிகாரங்கள் செய்ததும்,சில நாட்கள் அல்லது மாதங்கள் கழிந்தபிறகு அபரிதமான நற்பலன்களை அடைகின்றனர்.நம்மை நன்றியோடு நினைத்துக்கொண்டிருப்பார்கள்;ஆனால்,நவக்கிரகங்கள் கோபத்தோடும் சாபத்தோடும் நம்மை நோக்கும்;அதனால்,நமது வாழ்வில் ஏதாவது ஒரு மாபெரும் குறை இருக்கத்தான் செய்யும்.

இந்த நவக்கிரகங்களின் கோபமும் சாபமும் நீங்கிட ஜோதிடர்களாகிய நமக்கு இரண்டுவிதமான சாப நிவர்த்தி இருக்கின்றன.
ஒன்று மாதம் ஒரு நாள்,அதுவும் ஜோதிடரின் பிறந்த நட்சத்திரத்தன்று திருச்செந்தூரில் இருக்க வேண்டும்.முதலில் நாழிக்கிணற்றில் குளிக்க வேண்டும்;இரண்டாவதாக கடலில் குளிக்க வேண்டும்;மூன்றாவதாக முருகக்கடவுள் கோவிலை உருவாக்கிய மூன்று துறவிகளின் கோவில் கடற்கரையிலிருக்கின்றது.அவர்களை வழிபட வேண்டும்.நான்காவதாக திருச்செந்தூர் முருகக்கடவுளை தரிசிக்க வேண்டும்.இப்படி ஜோதிடத்தொழில் பார்க்கும் காலம் வரை செய்ய வேண்டும்.இதை எனக்கு உபதேசித்தவர்  எனது ஆன்மீக குரு திரு.புளியங்குடி சிவ மாரியப்பன் ஐயா அவர்கள்.

இரண்டாவதான பரிகாரம் என்னவெனில்,மாதம் ஒருமுறை அமாவாசை அல்லது மாத சிவராத்திரியன்று திருஅண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்.

பெரும்பாலான ஜோதிடர்கள் பரிகாரத்தை நானே செய்து தருகிறேன் என ஜாதகம் பார்க்க வருபவர்களிடம் பரிகாரக்கட்டணம் வாங்குகின்றனர்.வாங்கும் கட்டணம் ஆயிரக்கணக்கில்,லட்சக்கணக்கில் இருக்கின்றது.ஆனால்,வாங்கும் பணத்தினை முறையாகவும் முழுமையாகவும் பரிகாரத்துக்குச் செலவழிப்பதில்லை;ஏன் பெரும்பாலான ஜோதிடர்கள் 1% கூட பரிகாரத்துக்குச் செலவழிப்பதில்லை;(பல தமிழ்நாட்டு ஜோதிடர்கள் இந்த பரிகாரப்பணத்தினால்தான் திருமண மண்டபம் கட்டியிருக்கின்றனர்)
விளைவு அப்படிப்பட்ட ஜோதிடரின் வாழ்க்கையில் மாபெரும் சாபம் பலித்துவிடுகிறது.உரிய ஜோதிடரின் குடும்பப்பெண்கள் திசைமாறிப்போய்விடுகின்றனர்;அல்லது அந்த ஜோதிடரின் பாசத்துக்குரிய ரத்த உறவு திடீரென மறைந்துவிடுகிறது.எனவே,பரிகாரத்துக்கு பணம் வாங்குவது மகா பாவம்.


புளியங்குடி சிவமாரியப்பன் ஐயா அவர்களின் 30 ஆண்டுகால ஆன்மீக ஆராய்ச்சி மற்றும் பல துறவிகள்,சித்தர்களை சந்தித்து ஆலோசித்துமுடிவாக சொன்னபடி, சித்தர்கள்,துறவிகளாலேயே அவர்களின் கர்மவினையை அழிக்க முடியவில்லை;அவர்கள் நம்மை ஆசிர்வாதித்தாலும் நமது கர்மவினைகளை முழுமையாக அனுபவிக்க முடியாது;எனவே,மேலும் மேலும் பரிகாரத்தை நான் செய்கிறேன் என கூறி அடுத்தடுத்தபிறவிகளில் மிக இழிவானமனிதனாக பிறக்க வழிதேட வேண்டாம்.(மந்திரவாதிகளே உங்களுக்கும் சேர்த்துத்தான்!)

மஞ்சளின் மகிமைகள்;நன்றி தினமலர் 26.10.2010

பெங்களூரு : மஞ்சள் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் "குர்குமின்' மாத்திரை கேன்சர் நோயாளிகளுக்கு உற்ற நண்பன் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
உலகளவில், புற்றுநோய் மருத்துவர்களும், பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களும் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் கேன்சர் நோய்க்கு மஞ்சள் சார்ந்த பொருட்களின் பயன்பாடு குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு மஜும்தார் ஷா கேன்சர் சென்டரின் பயோ-டெக்னாலஜி துறை மருத்துவர்கள், வாய்ப்புற கேன்சர் நோயாளிகளுக்கு, "குர்குமின்' மாத்திரையால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த ஆய்வு விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. வாய்ப்புற கேன்சர் உள்ள நோயாளிகள் 220 பேர், ஆய்வில் கலந்து கொண்டனர்.அனைவருக்கும், மஞ்சள் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட, "குர்குமின்' மாத்திரை (1.2 கிராம்), பல வேளைகளில் சிகிச்சை காலம் முழுவதும் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே பலருக்கு வியத்தகு முன்னேற்றங்கள் இருந்தாலும், சிகிச்சை தொடர்ந்து நடந்தது.""முதலில், வெறும் மஞ்சளை குழைத்து நோயாளிகள் வாயில் தடவப்பட்டது. இதற்கு நல்ல பலன் இருந்தாலும், பற்களில் கறை ஏற்பட்டு பெரும் பிரச்னையாகி விட்டது. பின், "குர்குமின்' மாத்திரை கொடுக்கப்பட்டது.
இதுகுறித்த முழுமையான விவரங்கள் டிசம்பர் மாதத்தில் தான் தெரிய வரும்,'' என, ஆராய்ச்சித் தலைவர் மோனி ஆபிரகாம் தெரிவித்தார்."குர்குமின்' மாத்திரையின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்த பிரிட்டன் விஞ்ஞானிகளும், கேன்சர் செல்களை அழிப்பதில், "குர்குமின்' மாத்திரை தீவிரமாக செயலாற்றுவதாகக் கூறியுள்ளனர்.தற்போது, அமெரிக்க மற்றும் ஜப்பான் நாட்டு மக்களும், "குர்குமின்' மாத்திரைகளை, பாலில் கலந்து உட்கொள்கின்றனர். இந்தியாவில் அதிக ஆய்வுகள் நடந்ததில்லை என்றாலும், இப்போதைய ஆய்வுகளின் முன்னேற்றம் காரணமாக, "குர்குமின்' மாத்திரைகள் கேன்சர் நோய்க்கு பரிந்துரைக்கப்படுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.அரை டீ ஸ்பூன் அளவு சாதாரண மஞ்சள் தூளை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடித்தால், கேன்சர் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏன் தியானம் செய்ய வேண்டும்?

தியானம் என்றால் என்ன?

பூஜைக்கோடி சமம் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரக்கோடி சமோ ஜெப:

ஜெபக்கோடி சமம் தியானம்

தியானக்கோடி சமோ யை:

இப்படிக்கு உத்திர கீதை:

விளக்கம்:கோடி பூஜைகள் ஒரு ஸ்தோத்திரத்திற்குச் சமம்!
கோடிஸ்தோத்திரங்கள் ஒரு ஜெபத்திற்குச் சமம்!!
கோடி ஜெபங்கள் ஒரு தியானத்திற்குச் சமம்!!!
கோடிதியானங்கள் ஒரு லயத்திற்கு(மோட்சம்) சமம்!!!
எனவே,நாம் அனைவரும் தினமும் தியானம் செய்வோம்!!!

ஆன்மீகப்பிரியாணி:அகஸ்திய விஜயம் மாத இதழ்

ஆன்மீகத்தேடல் உள்ளவர்கள் படிக்க வேண்டிய மாத இதழ் அகஸ்திய விஜயம்

சுமார் 10 வருடங்களாக சென்னையிலிருந்து வெளிவரும் ஆன்மீக,ஆத்மப்பசியுடனிருப்பவர்களுக்கு வழிகாட்டும் அற்புத மாத இதழ்:அகஸ்திய விஜயம்.

கலிகாலத்தில் என்ன விதமான மாற்றங்கள் நடைபெறும்?நாம் அதற்கேற்றாற்போல்,நமது வழிபாடுகள் என்னென்ன செய்ய வேண்டும்?நமது கடன் தீர,நாம் முக்தி பெற, குடும்பம் ஒற்றுமையாக வாழ,சித்தர்களைப்பற்றிய ஏராளமான ரகசியங்கள்,சித்தத் தன்மையை அடைவது எப்படி? திருஅண்ணாமலையின் மகிமைகள்,தமிழ்நாட்டின் பழமையான கோவில்களின் ஆன்மீக சூட்சும ரகசியங்களை வெளியிட்டுவரும் அகஸ்திய விஜயம் நாம் மாதம் தோறும் வாசிக்கவேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வெளிவரும் அகஸ்திய விஜயத்தை மொத்தமாக நமது ஆன்மீகக்கடலில் பதிவேற்ற விருப்பம்தான்;நேரமும் இல்லை;இணையதள மையத்துக்குச் (ஓரளவுக்குமேல்)செலவழிக்கவும்
முடியவில்லை;எனவே,விருப்பமுள்ள ஆன்மீகக்கடல் வாசகர்கள் ரூ.240/- மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் அனுப்பி ஓராண்டுவரை அகஸ்திய விஜயம் பெற்றிடுங்கள்.
முகவரி:ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயா

சேம்பர் எண்:7,சாகாஸ் காம்ப்ளக்ஸ்,
போஸ்ட் பாக்ஸ் எண்:6303,
4,ஸ்ரீகபாலீஸ்வரர் தெற்கு மாடவீதி,மயிலாப்பூர்,சென்னை -600 004.
போன்:044 24957276,24613818.

குறிப்பு:ஆன்மீகத்தில் மலர விரும்புவோர்க்காக இந்த பதிவு வெளியிடப்படுகிறது.

ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி

தெய்வீக சக்தியில் உயர்ந்த சக்தியை தரிசிப்பது எப்படி?

இந்திய அரசு அமைப்பின் படி வி.ஏ.ஓ.தான் ஆணிவேர்;அவருக்கு மேல் வருவாய் ஆய்வாளர் எனப்படும் ஆர்.ஐ.அவருக்கு மேல் மாவட்ட துணை ஆட்சியாளர்;அவருக்கும் மேல் மாவட்ட ஆட்சியாளர்;ஆளுநர்,ஜனாதிபதி;ஐநா சபை என மிகப்பெரிய நிர்வாக இயந்திரம் செயல்பட்டுவருகிறது.


அதே போல்,நம்மை இயக்குவது நவக்கிரகங்கள்.நாம் முற்பிறவி அல்லது முற்பிறவிகளில் செய்த பாவபுண்ணியங்களுக்கேற்ப நாம்பிறக்கும் நேரத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட ராசியில் நின்று நமது வாழ்க்கைப் பயணத்தை இயக்கும்.அனுபவமுள்ள ஜோதிடர்களுக்கு இது புரியும்.

இந்த நவக்கிரகங்களை இயக்குவது 27 நட்சத்திரங்கள்.(நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதே வேத ஜோதிடம்!)இந்த 27 நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்தி இயக்குபவை பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு.(நட்சத்திரங்களுக்கும் பஞ்சபூதங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குவதே பஞ்சபட்சி சாஸ்திரம்)

இந்த பஞ்சபூதங்களை இயக்கும் மண்டல நிர்வாகிகளே மும்மூர்த்திகள் எனப்படும் பிரம்மா,விஷ்ணு,சிவன்.

பிரம்மா ஒரு உயிரைப் படைத்தால்,அந்த உயிருக்குத் தேவையான கல்வியைத் தரும்பொறுப்பு பிரம்மாவின் துணைவியான கலைவாணிக்குத் தரப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணு ஒரு உயிரைக் காத்தால்,அப்படிக் காக்கும்பொறுப்பு அவரது துணைவியான மகாலட்சுமிக்குத் தரப்பட்டுள்ளது.

சிவன் ஒரு உயிரை அழித்தால்,ஒருவரது பிறப்பு இறப்பை நிர்ணயிப்பவராக இருப்பதால்,அந்த உயிருக்கு முக்திஎனப்படும் இறவா நிலையைத் தருவது சிவனின் துணையாகிய பார்வதிக்குத் தரப்பட்டுள்ளது.

இந்த மூவருக்கும் மேலே சதாசிவம் இருக்கிறார்.அவரைப் பற்றி யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
சதாசிவத்திற்கும்மேலே இருப்பவள்,இந்த மும்மூர்த்திகளை இயக்குபவள் ஆதி பரப்பிம்ம சக்தி என்ற மனோன்மணி ஆவாள்.
அவளின் வடிவம் வாலை எனப்படும் 12 வயதுச்சிறுமியைப் போன்றது.அவளை நாம் ஒவ்வொருவரும் தரிசிக்கலாம்.

தினமும் ஒரு மணிநேரம் தனிமையில்,சப்தமில்லாத இடத்தில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்துகொண்டு,நமது காதுகளுக்குப் பஞ்சுவைத்து அடைத்துக்கொள்ள வேண்டும்.மனதுக்குள் இம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.எவ்வளவு உரத்து(ஆனால் மனதுக்குள்,வாய்விட்டுச் சொல்லாமல்)க்கூறுகிறோமோ,அவ்வளவு நல்லது.இப்படி இரண்டு ஆண்டுகள் ஜபித்துவந்தால்,மனோன்மணியைத் தரிசிக்கலாம்.

இன்னொரு வழிமுறை உண்டு.இங்கு அதை விரிவாக வார்த்தைகளால் விவரிக்க இயலாது.ஒரு குறிப்பிட்ட தியான முறையினால்,மூக்குக்கும் நுரையீரலுக்கும் இடையில் செய்யும் பிராணயாமத்தை,நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையில் மாற்றிட வேண்டும்.அப்படிச் செய்தவாறு,ஒரு வரி மந்திரம் உண்டு.அதை எந்த குருவும் வாயால் நமக்கு உபதேசிக்க மாட்டார்;மனதால் உபதேசிப்பார்;அதை ஒருமுறை சொன்னாலே மனோன்மணி நேரில் காட்சியளிப்பாள்.
காட்சியளித்து,நம்மை தன்னுடன் கைபிடித்து அழைத்துச் செல்லுவாள்;இந்த பிரபஞ்சத்தில் அவள் படைத்துள்ள அத்தனைப் படைப்புகளையும் நமக்குக் காட்டுவாள்;காட்டியப்பின்னர்,அவள் தன்னுடைய இருப்பிடத்துக்கு நம்மை அழைத்துச் செல்லுவாள்.அப்படிச் சென்றதும்,எதற்காக என்னைத் தேடினாய்? எனக் கேட்பாள்.நம்மால் அவளைப் பார்த்தப்பின்னர் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது.


சக்தி திருஅண்ணாமலை எனப்படும் பர்வதமலை


தென்கையிலாயம் எனப்படும் பர்வதமலை

பருவ விடுமுறை கிடைத்ததால் ஐப்பசி மாத பவுர்ணமிக்கு திருஅண்ணாமலைக்கு நண்பர்களுடன் சென்றுவந்தேன்.நண்பர்களின் அழைப்பின் பேரில் திருஅண்ணாமலையின் அருகில் இருக்கும் பர்வதமலைக்குச் சென்றுவரலாம் என முடிவெடுத்தேன்.ஐப்பசிமாத பவுர்ணமி 22.10.2010 வெள்ளிக்கிழமையன்று வந்தது.கிரிவலம் செல்லும்போது ஓம்சிவசிவஓம் என்ற மந்திரத்தை ஜபித்தவாறு சென்றுவந்ததில் பரம சந்தோஷம்.

24.10.2010 ஞாயிற்றுக்கிழமையன்று நண்பர்களின் இருசக்கர வாகனத்தில் பர்வத மலையைச் சென்றடைந்தோம்.வாசலில் பச்சையம்மாள் காவல் தெய்வமாக இருந்தாள்.அவளது கோவிலின் வாசலில் ஏழு முனிகள் அமர்ந்திருந்தனர்.(சிலைகள் அப்படியே முனீஸ்வரனை அடையாளப்படுத்தின).ஒரே இடத்தில் ஏழு முனீஸ்வரர்கள் இருக்க மாட்டார்களே? என மனதில் தோன்றியது.

பச்சையம்மாளின் ஆசியோடு,மலையடிவாரத்தில் இருக்கும் வீரபத்திரரையும் வழிபட்டு மலையேறத்துவங்கினால் பாதி தூரத்திற்கு அழகாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன.ஆனாலும் அந்த படிக்கட்டுகளைக் கடப்பதற்கே மூச்சு வாங்கியது;காரணம் மலையின் அமைப்பு அப்படி!!!நெட்டுக்குத்தாக மலை அமைந்திருக்கிறது.
பாதிதூரம் கடந்ததும்,கரடுமுரடான மலைக்காட்டுப்பாதை துவங்குகிறது.அதில் பாதிதூரம் சென்றதும்,வெறும் மொட்டைமலை நெடுநெடுவென செங்குத்தாக உயர்ந்ந்ந்து நிற்கிறது.மாபெரும் திரிசூலங்களும்,ஆணிகளும்,தண்டுக்கால் கம்பிகளுமே நம்மை மேலேபயணிக்க உதவுகின்றன.

ஒவ்வொரு வளைவிலும் மலையடிவாரம் விதவிதமான கோணத்தில் கண்கொள்ளாக் காட்சியாக தெரிகிறது.

கடப்பாறைப்படி,தண்டவாளப்படி,ஏணிப்படி,ஆகாயப்படி என விதவிதமான பெயர்கள் அந்த வளைந்த பாதைகளுக்குப் பெயராக அமைந்திருக்கின்றன.

கோவிலைச் சென்றடைந்தால் பூசாரியே இல்லை;நாமாகத் தான் பூஜை செய்ய வேண்டுமாம்.அட!
ஒரு புராணக்கதையை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.நமது அம்மா அப்பாக்களுக்கு இந்தக்கதைதெரிந்திருக்கும்.

ஒருமுறை சிவபெருமானின் கண்களை பார்வதி விளையாட்டாக பொத்தினாள்.அப்படி பொத்தியது சில நொடிகள்தான்.அதற்குள் பூமியில் பலகோடி வருடங்கள் ஓடிவிட்டன.விஷயமறிந்த சிவபெருமான் உடனேதனது நெற்றிக்கண்ணைத் திறந்துவைத்து பூமிக்கும்,பிரபஞ்சத்துக்கும் ஒளி கொடுத்து காப்பாற்றிவிட்டார்.அதனால்,சிவபெருமான் பார்வதியை நீ பூமிக்குப்போய் என்னை நினைத்து கடும்தவம் செய்;அதுதான் உனக்குத் தண்டனை! என அனுப்பியிருக்கிறார்.
அதற்குப் பார்வதி , “உங்களை விட்டுப்பிரிந்து என்னால் ஒரு கணம் கூட இருக்க முடியாது.நான் எப்படி?”எனக்கேட்டிட,பார்வதியின் துணைக்கு ஏழு சித்தர்களைஅனுப்பி வைத்திருக்கிறார்.அவர்களின் அகத்தியர்,பராசாசர் உள்ளிட்டோர்தான் பச்சையம்மனின் வாசலில்முனியாக அமர்ந்திருக்கின்றனர்.

முன்பே,பூ,பழங்கள்,பத்தி,கற்பூரம்,மஞ்சள் வாங்கியே சென்றதில்,வழியில் ஆஞ்சநேயர்களின் மிரட்டலால் பழங்களைகொடுத்துவிட்டே மேலேபயணிக்க முடிந்தது.

மேலே மூலஸ்தனத்தைப் பார்த்தால்,ஸ்ரீமல்லிகார்ஜீனசுவாமியாக சிவபெருமானும்,ஸ்ரீபிரம்மராம்பிகைதாயாராகபார்வதியும் காட்சியளிக்கின்றனர்.

மேலே வந்ததும்,ஏன் தாயே! சிவபெருமான் தான் சோதிப்பதில் நிகரற்றவர்.நீயுமா? சதுரகிரிமலைப்பயணத்தில்கூட நான் இப்படி மலைத்தது இல்லை; இவ்வளவு உயரத்தில் இத்தனை ஆண்டுகளாக இருக்கிறாயே!? உனக்கு பயமே இல்லையா?என்றே அவளிடம் கேட்டேன்.அப்புறமாக சொந்த வேதனைகளை சொல்லி நிறைய வரம் வாங்கிவிட்டுத் திரும்பினோம்.

ஆரோக்கியமும் இளமையும் நிறைந்த எங்களுக்கே மலையுச்சியை அடைய 3 மணிநேரம் ஆனது.
மலையை விட்டு இறங்கும்போதும் வேகமாக ஓடி வர முடியவில்லை;மெதுவாகத்தான் வர முடிந்தது.இறங்குவதற்கும் அதே 3மணி நேரம் ஆனது.

கடல் மட்டத்திலிருந்து 4560 அடிகள் உயரத்தில் கோவில் அமைந்திருக்கிறது.இந்தக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது என விளம்பரப்படுத்துகிறார்கள்.எனக்கென்னவோ,20,000 ஆண்டுகள் பழமையானது;பார்வதி இங்கே தவம் செய்ய வந்து 2,00,000 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றே தோன்றுகிறது.பலசித்தர்கள் வாழுமிடம் இது.

சித்தர்களின் வீடு சதுரகிரி; சித்தர்கள் சிவனை வழிபடும் இடம் திரு அண்ணாமலை;சித்தர்கள் பார்வதியான ஆதி பரப்பிரம்ம சக்தியை வழிபடுமிடம் இந்த பர்வத மலை;என்பது எனது தாழ்மையான கருத்து.பல சந்தர்ப்பங்களில் பல மனிதர்கள் இங்கே சித்தர்களை தரிசித்திருக்கின்றனர்;இனியும் தரிசிப்பார்கள்.நமக்குத் தகுதியிருந்தால் நாமும் சித்தர்களை/ஏதாவது ஒரு சித்தரை தரிசிக்கமுடியும்.
திரு அண்ணாமலையைப்போல,இந்த பர்வதமலைக்கும் கிரிவலம் உண்டு.கிரிவலதூரம் 26 கிலோமீட்டர்கள் ஆகும்.

600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன.இப்போது மீண்டும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அனுமதியுடன் திருவல்லிக்கேணி ஸ்ரீபருவதமலை அடியார்கள் திருப்பணிசங்கம் சார்பாக திருப்பணிகள் நடைபெற இருக்கிறது.
இந்தத் திருப்பணி சங்கம் 36 அடி உயரமும்,1000கிலோ எடையுடன் கூடிய நவீன இடி தாங்கிக்கோபுரத்தை(super conductor Lightning Diverter) இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அனுமதியுடன் பர்வதமலையின் மேலே 13.2.2010 அன்று நிறுவியுள்ளனர்.

குறிப்பு:திருஅண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் போளூர் அருகில் தென்பாதிமங்கலம் என்றகிராமத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கிறது.மலையின் அமைப்பு கிட்டத்தட்ட சதுரகிரியின் அமைப்புப்போலவே அமைந்திருக்கிறது.சதுரகிரிக்கு வேகமாக மலையேறமுடியும்.இங்கு அப்படி முடியாது.

உலகாளும் நாயகியே பார்வதி வாழ்க !!!

நோய்களைத் தீர்க்க அருளும் தன்வந்திரிபகவானின் மந்திரங்கள்

தந்வந்தரி பகவான்தந்வந்தரி பகவான் ஸ்ரீ விஷ்ணூவின் அம்சம். பகவானுக்கும், தேவர்களுக்கும் நமக்கும் வைத்தியர். ஆயுர் வேத சிருஷ்டி கர்த்தா நமக்கும் நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க வல்லவர். அவரை தியானித்தால் சகல வியாதிகளும் நீங்கும்.

நோய்களை தீர்க்கும் மந்திரம்:

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய
ஸர்வாமய நாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:

த்யான ஸ்லோகம்

சங்கம் சக்ர முபர்யதஸ்சக்ரயோர்
திவ்யௌஷதம் தக்ஷிணே
வாமேநாத்யகரேண ஸம்ப்ருத
ஸுதா கும்பம் ஜலுகாவளிம் /

பிப்ராண: கருணாம்ருத ஸூகசுர:
ஸர்வாமய த்வம் ஸக:
க்ஷிப்ரம் மே துரிதம் சிநந்து
பகவான் தந்வந்தரி : பாது ந :

.நமது முயற்ச்சியின் வெற்றி, .நம் குழ.ந்தைகள் படிப்பில் முன்னேற்றம், வேலையில் முன்னேற்றம் மற்றும் எடுத்த காரியம் வெற்றியடைய ஹயக்ரீவ பகவான் எப்போதும்.நமக்கு அருள் பாரிப்பார்.

ஸ்ரீ:

ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே //

வ்யாக்யாமுத்ராம் கரஸரஸிஜை: புஸ்தகம் ஸங்கசக்ரே
பிப்ரத் பிந்நஸ்படிகருசிரேபுண்டரீகே நிஷண்ண : /
அம்லாநஸ்ரீ அம்ருத விஸதை: அம்ஸூபி: ப்லாவயந்மாம்
ஆவிர்பூயாதநக மஹிமா மாநஸேவாகதீஸ :
ஜோதிடரீதியாக நாம் எப்போது விநாயகரை வழிபட வேண்டும்?

1. மேடம், கடகம், துலாம், மகரம் ஆகிய சரலக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க சித்திரை, உத்திராடம், ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறையில் வரும் சனிக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு பின்னர் வரும் 1மணி 30 நிமிடத்திற்குள் அண்ணளவாக காலை 6.00 மணி முதல் 7.30 இற்குள் தேங்காய் பலி கொடுத்து (தேங்காய் உடைத்து), அருகம்புல்லினால் வினாயகரை அர்ச்சனை செய்து சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேனும் பாலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோதகமும், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாசிப்பயறும் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். மேற்கூறிய லக்னங்கள் உதிக்க மற்றய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறை செவ்வாய், சனிக் கிழமைகளில் தேங்காய் பலி கொடுத்து, செவ்வரலி புட்பத்தினால் வினாயகரை அர்ச்சனை செய்து, பசும்பால், அப்பம், வடை, அவல், பொரிகடலை நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.


2. ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது காலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையான காலத்தில் தேங்காய் பலி கொடுத்து(தேங்காய் உடைத்து), வெள்ளெருக்கு மலர் அல்லது வெள்ளரலி மலர் அல்லது வெண்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து, பசும் பால், அவல், கொண்டக்கடலை சுண்டல், பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.


3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய உபய லக்னங்களில் ஒரு லக்னம் உதிக்க எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் வளர்பிறை செவ்வாய், சனிக்கிழமைகளில் சந்தியா காலத்தில் அதாவது காலை 5.15மணி முதல் 6.45மணி வரையிலான காலத்தில் தேங்காய் பலி கொடுத்து(தேங்காய் உடைத்து), மல்லகைப் பூ அல்லது முல்லைப் பூ அல்லது செந்தாமரை மலரினால் அர்ச்சனை செய்து பசும் பால், பால்ப்பாயாசம், பானகம் நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் இடர் நீங்கி காரிய சித்தி உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
துங்கக்கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

வினாயகனே வௌ;வினையை வேரறுக்க வல்லான்
வினாயகனே வேற்கை தணிவிப்பான்
வினாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து

அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரும் போம் நல்ல
குணம் அதிகமாம அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கை தொழுதற்க்கால்
T

பிரதோஷத்தின் வரலாறும் வகைகளும்


பாவங்கள் போக்கும் பிரதோச வழிபாடு பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச்சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி – 6 மணி வரையான காலமாகும். திங்கட்கிழமைப் பிரதோசம் சோமவாரப் பிரதோசம் என்றும் சனிக்கிழமைப் பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படும். பிரதோச காலம் தோன்றிய கதை என்ன என்பதை பார்ப்பபோம். அமிர்தத்தைப் பெற வேண்டி திருபாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்த போது ஆலகால விசம் அதிலிருந்து வெளிப்பட்டது. பாற்கடலை கடையத்தொடங்கியது தசமித் திதியாகும். ஆலகால விசம் வெளிப்பட்ட நாள் ஏகாதசித் திதியாகும். ஆலகால விசத்தின் கடுமை தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட சிவனும் அந்த விசத்தை அப்படியே எடுத்து உண்டார். விசம் முழுமையாக இறைவனின் வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ என அஞ்சிய அன்னை பார்வதி தேவி இறைவனின் கண்டத்தை அழுத்த விசமானது கழுத்திலேயே தங்கிவிட்டது. அன்று முதல் இறைவனும் திருநீலகண்டர் என்று ஒரு திருநாமமும் பெற்று அழைக்கப்பட்டு வரலானார். அதன் பின்பு சிவனின் கட்டளைப்படி தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்த போது துவாதசியன்று அமிர்தம் தோன்றியது. அமிர்தத்தை உண்ட தேவர்கள் அந்த சந்தோசத்தில் இறைவனை மறந்து இறைவனை வழிபடாமல் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர். மறுநாள் திரயோதசி அன்று தங்கள் தவறினை உணர்ந்து சிவபொருமானிடம் தங்களை மன்னிக்கும் படி மனமுருகி வேண்டினார்கள். பரம கருணா மூர்த்தியான சிவபெருமானும் மனம் இரங்கி, மனம் மகிழ்ந்து தம்முன் இருந்த ரிசப தேவரின் கொம்புகளிற்கிடையில் நின்று அன்னை பார்வதி தேவி காண திருநடனம் புரிந்தார். இது பிரதோச வேளையாகும். அன்று முதல் திரயோதசி திதியன்று மாலை 4 - 6 பிரதோச காலம் என வழங்கலாயிற்று. அமாவாசையிலிருந்து 13 ம் நாளும் பொர்ணமியிலிருந்து 13 ம் நாளும் திரயோதசி திதியாகும். மாதத்தில் இரண்டு பிரதோசமாகும். பிரதோசத்தில் பத்து வகையுண்டு:- 1. நித்திய பிரதோசம்:- தினமும் 4 மணி முதல் 6 மணி வரையிலான நேரம். 2. நட்சத்திர பிரதோசம்:- திரயோதசி திதி எந்த நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திர உருவமாக சிவனை வழிபடுவது. 3. பட்ச பிரதோசம்:- சுக்ல பட்ச அதாவது வளர்பிறையில் வரும் திரயோதசி திதியில் பட்ச லிங்க வழிபாடு செய்வது. 4. மாதப் பிரதோசம்:- கிருஸ்ண பட்ச அதாவது தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் சந்திர கலையில் நின்று சிவனை வழிபடுவது. 5. பூர்ண பிரதோசம்:- திரயோதசி திதியும் சதுர்த்தி திதியும் பின்னப்படாமல் இருக்கும் போது சிவனை வழிபாடு செய்வது. சுயம்பு லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும். 6. திவ்ய பிரதோசம்.:- துவாதசியும் திரயோதசியும் அல்லது திரயோதசியும் சதுர்த்தசியும் ஆக இரட்டைத் திதிகள் சேர்ந்து வருவது. மரகத லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும். 7. அபய பிரதோசம்.:- ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும் திரயோதசி திதியில் சப்தரிசி மண்டலத்தை வழிபடுவது. 8. தீபப் பிரதோசம்:- திரயோதசி திதியில் தீபத் தானங்கள் செய்து வழிபடுவது. சிவாலயங்களில் தீப அலங்காரங்கள் செய்வது. பஞ்சாடசர தீப ஆராதனை முறைப்படி செய்து சிவனை வழிபடுவது. 9. சப்த பிரதோசம்:- திரயோதசி திதியில் ஒள~ன நடனங்கள் காட்டி சாகா கலையை விளக்குவது. இது யோகிகளிற்குரிய முறையாகும். 10. மகா பிரதோசம்.:- ஈசன் விசமுண்டது கார்த்திகை மாதம் திரயோதசி திதி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமை திரயோதசி திதி வரும் பிரதோச வழிபாடே மகா பிரதோச வழிபாடாகும். சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில் அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான நந்தி தேவர்தான். தட்சனின் சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் சாப விமோசனத்திற்காக சிவனை வேண்ட சிவனும் சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார். ஆனால் அந்த சாபம் சிவனை வந்தடைந்து சிவன் தேய ஆரம்பித்தார். இது கண்டு மனம் வருந்திய நந்தி தேவர் அன்னை சக்தியை சிவலிங்க பீடத்தில் அமரச்செய்து முறைப்படி பிரதோச பூசை செய்தார். இதன் பலனாக சிவனும் சாபவிமோசனம் பெற்றார். நந்திதேவர் செய்த பூசையானது கொடிமரத்தையும், பலிபீடத்தையும் இடது புறமாக கடந்து நந்திக்கு முதற் பூசை செய்து பின் பிரதட்சணமாக தட்சிணாமூர்த்தி வரை சென்று பின் அப்பிரதட்சணமாக நந்திக்கு பின்புறமாக சண்டிகேசர்வரை சென்று பின் மீண்டும் பிரதட்சணமாக நந்தி தேவர் வரை வந்து நந்தி தேவரிற்கு வலதுபுறம் நின்று கொம்புகளிற்கிடையில் பார்வையை மட்டும் செலுத்தி “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் சௌம் நமோ பகவதே” என்ற சக்தித் தாயின் வசிய மந்திரத்தை ஜெபித்து பூசை செய்தார். நந்தி தேவர் வழிபட்ட பாதையை கவனித்தோமானால் ஒரு திரிசூலம் அமையும். தேய்பிறை பிரதோசம் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும்போது ராகு காலமும் பிரதோச வேளையும் கூடி வரும் 4.30 – 6.00 மணி வரையிலான காலத்தில் மேலே குறிப்பிட்ட வழிமுறையில் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தபடி சிவனை வழிபடுபவரிற்கு முனிவர் சாபம், முன்னோர் சாபம், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. 13 பிரதோசங்கள் தொடர்ந்து முறைப்படி பிரதோச வழிபாடு செய்பவர்களிற்கு வாழ்வில் சகல நலமும், வளமும் கிடைக்கும். 108 பிரதோச பூசை செய்து அவர்கள் செய்த சகல பாவங்களும் நீங்கி சிவனின் திருவடியில் வசிக்கும் பலன் கிட்டும். சகல பாவங்களையும் போக்கும் பிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக

கடும் நோய்கள்விலக ஜபிக்க வேண்டிய சூரிய மந்திரம்

கடும் நோய்கள் விலக கடும் நோய்கள், விலகி துன்பங்கள் ஓடிட தினமும் காலையில் 24 முறை சூரிய பகவானை நினைத்து வணங்க வேண்டிய ஸ்லோகம்.கடும் நோய்கள், விலகி துன்பங்கள் ஓடிட தினமும் காலையில் 24 முறை சூரிய பகவானை நினைத்து வணங்க வேண்டிய ஸ்லோகம்.

சூர்யம் சுந்தர லோக நாதம்
அம்ருதம் வேதாந்த சாரம் சிவம்
சுரேஷம், அமலம் லோகைக சிந்தஸ்வயம்
இந்திராதித்ய நரதீபம் சமகுரும்
த்ரைலோக்ய சூடாமணிம்
ப்ரம்ம விஷ்ணு சிவ ஸ்வருப
ஹ்ருதயம் வந்தே சதா பாஸ்கரம்

Related Posts with Thumbnails

மழலைச் செல்வம் தரும் ஸ்ரீசந்தானலட்சுமி ஸ்தோத்திரம்

ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
ஸ்ரீ சந்தானலட்சுமி தேவி தனது கரங்களில் பூரண கும்பமும் கங்கணமும் அபய முத்திரையும் உடையவள். தன் மடியில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்து, இருபுறமும் தீபமும் சாமரமும் ஏந்திய பெண்களால் வணங்கப்படுகிறாள்.

தியான சுலோகம்:-

ஜடாமகுட சம்யுக்தாம்
ஸ்த்தி தாசந சமந்விதாம்
அபயம் கடகஞ் சைவ
பூர்ணகும்பம் புஜத்வயே
கஞ்சுகம் ச்சந்த வீரஞ்ச
மெளக்திகம் சாபிதாரீணீம்
தீபசாமர நாரீபி:சேவிதாம்
பார்ச்வ யோர்த்வயோ
பாலே சேநாநி சங்காசே
கருணாபூரி தாநநாம்
மஹாராஞ் ஞீஞ்ச சந்தான
லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே


பலன்கள்:-

மேற்கூறிய சுலோகத்தை தினசரி 108
முறை உச்சரித்து வந்தால் நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ரதோஷத்தையும் ஸ்ரீசந்தான லட்சுமி நீக்கி அருள்புரிவாள்.