RightClick

ஊழ்வினை என்றால் என்ன?
பாதாள உலகம்,நாக உலகம்,பேய் உலகம்,பிசாசு உலகம் என பூமிக்குக் கீழே ஏழுவிதமான உலகங்கள் இருக்கின்றன.அநியாயம்,அக்கிரமம்,திமிர்த்தனம்,விபச்சாரம்,போதைப்பொருட்கள் கடத்துதல்,குடும்பங்களளப் பிரித்தல்,தற்கொலை செய்தவர்கள்,நிறைய்ய கொலை செய்தவர்கள்-  போன்ற காரியங்களை மட்டும் செய்தவர்கள் இறப்புக்குப் பிறகு இங்குதான் பல ஆண்டுகளாக கிடக்க வேண்டும். பல ஆண்டுகளாக இருட்டு,அல்லது பல ஆண்டுகளாக வெளிச்சமும் கடும் வெப்பமும் இங்கு இருக்கும்.இன்றைய நவீன விஞ்ஞானத்தால் அவற்றை ஒரு போதும் நாம் காணமுடியாது.
அதேபோல்,பூமிக்கு மேலே ஏழு நல்ல உலகங்கள் இருக்கின்றன.அவற்றில் முதல் உலகத்தில் இருப்பவர்கள்,இந்த பூமியில் பிறருக்கு உதவியும்,வழிகாட்டியாகவும் இருந்தவர்கள் சில நூற்றாண்டுகள் வரை இருப்பர்.தேவைப் படும்போது மீண்டும் மீண்டும் பிறப்பர்.அதற்கு மேல் இருக்கும் உலகில் துறவியாகவும் நேர்மையாகவும் வாழ்ந்த நல்ல ஆத்மாக்கள் இருக்கின்றன.இவை விரும்பும் நேரத்தில்,விரும்பும் பூமி இடத்தில் பிறக்கும்.
இதற்கும் மேல் ஒரு உலகம் இருக்கின்றது.அங்குதான் சுவாமி விவேகானந்தர்,ராம கிருஷ்ணபரமஹம்ஸர்,யோகி ராம் சுரத்குமார்,ரமண மகரிஷி மற்றும் பல புண்ணியம் நிறைந்த ஆத்மாக்கள் வாழ்ந்துவருகின்றன.இவர்கள் கலியுகத்தின் முடிவில் கலியை முடித்துவைப்பதற்காக பிறப்பார்கள்.இந்த உலகத்துடன் தொடர்புகொள்ள நாம் தினமும் ஆழ்நிலைதியானம் செய்துவரவேண்டும்.அப்படி செய்து வந்தால் நமது முன்னோர்களில் ஒரு சிலர் மட்டுமாவது இங்கு வசித்துவருவார்கள்.அவர்களில் ஒருவர் அல்லது சிலர் நம்மை தொடர்புகொள்ளுவர்.

இந்த அறையில் செல்போன் சேவை நிறுவனங்களின் அலைகள் இருப்பதை நாம் நம்புகிறோம்;அவற்றைப் பார்த்தால்தான் நான் நம்புவேன் என சொன்னால் அது முட்டாள்த்தனம்.அதேபோல்,இந்த உலகங்கள் இருப்பது நிஜம்.அவற்றை நம்பாத ஆத்மாக்களும்,இறப்புக்குப் பின்னர் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு உலகிற்குச் செல்வது உறுதி.

ஆன்மீக வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறுதி லட்சியமே முக்தி எனப்படும் பிறக்காத நிலைதான்.இந்த நிலையை அடைய ஒரு மனிதப்பிறவி எவருக்கும் போதாது;
இந்து தர்மநீதி நூல்களினை ஓரளவு வாசித்துக் கிடைத்த தகவல்களின் படி,3000 மனிதப்பிறவிகள் பிறந்தப்பின்னர்தான் ஒருவன்/ஒருத்தி தகுந்த குருவை அடைகிறான்/ள்.அதற்குப் பிறகு  புண்ணிய ஆத்மாவாகப் பிறந்து,ஜோதிடம்,யோகா,ரெய்கி,மனவளக்கலை,சிற்பசாஸ்திரம்,மாந்திரீகம் இவற்றில் ஏதாவது ஒன்றில் திறமைசாலியாகிறார்கள்.இந்தக் கலையில் ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.
மரணமடையும்போது எந்த ஆசையுமில்லாமல் இறப்பவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை;அப்படிப் பட்ட பக்குவநிலையை ஒரு அனுபவம் மிக்க ஜோதிடரால் மட்டுமே கண்டறிய முடியும்.இதற்கு ஒரே ஒரு ஜோதிட குறிப்பு சொல்லலாம்.யாரது பிறந்த ஜாதகத்தில்,லக்னத்துக்கு 12 ஆம் இடத்தில் கேது மட்டும் தனியாக இருக்கிறாரோ,அவருக்கு இந்தப் பிறவி இறுதியான மனிதப்பிறவி என சொல்லலாம்.

அந்த 12ஆம் இடம் எந்த ராசி என்பதையும் அடுத்து ஆராய வேண்டியிருக்கிறது.
சரி,3000 மனிதப்பிறவிகள் பிறப்பதற்குப்பதிலாக இந்த மனிதப்பிறவியோடு,அல்லது இன்னும் ஓரிரு மனிதப்பிறவியோடு முக்தியை அடைய என்ன வழி? எனக் கேட்பவர்களுக்குத்தான் இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவே நடத்தப்படுகிறது.
பின்வரும் காரியங்கள் நாம் அடிக்கடி செய்வதால்தான் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.அவற்றை தவிர்க்கப் பாருங்கள்:

1.பிறரது சொத்துக்களை தனது அதிகாரம்,ஆளுமை,ஆளும் திறன்,தனித்திறமை,நயவஞ்சகம் இவற்றால் அபகரித்தல்

2.சொன்ன சொல்லைத் தவறுதல்
3.காம உணர்ச்சியைத் தூண்டுதல்;அப்படித் தூண்டிவிட்டு அதற்கு வடிகால் இல்லாமல் செய்வது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும்.(திரைப்படங்களை இயக்குபவர்கள்,கவர்ச்சியாக நடிப்பவர்கள்,நீலத்திரைப்படங்களை எடுப்பவர்கள்,நடிப்பவர்கள்,விநியோகிப்பவர்கள்,ஒளிபரப்புபவர்கள்,சேமித்து வைத்து விற்பவர்கள்)
4.அநியாயமான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல்/சேவை செய்தல்
5.அடைக்கலம் தேடி வருபவர்களை விரட்டுதல்; அடைக்கலம் தருகிறேன் எனக் கூறி அவர்களை அழித்தல்(இலங்கையின் தற்போதைய அதிபரின் பெயர் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)
6.வழிபாட்டுக்குரிய சொத்துக்களை திருடுதல்;அபகரித்தல்;அழித்தல்;சூறையாடுதல்;மோசம் செய்தல்
7.தன்னைப் பெற்றவர்களுக்கு அவர்களது இயலாத காலத்தில் அவர்களை பராமரிக்காமலிருத்தல்;அவர்களை சபித்தல்;அவர்களை கண்டுகொள்ளாமலிருத்தல்
8.தனது வாழ்க்கைத் துணையின் காம ஆசையை நிறைவேற்றாமலிருத்தல்;தனது வாழ்க்கைத்துணையைப் பற்றி இழிவாகப் பேசுதல்;தனது வாழ்க்கைத்துணையை தனது பெற்றோர்கள்/உடன்பிறந்தோருடன் சேர்ந்து இம்சித்தல்/சித்திரவதை செய்தல்/கொலை செய்தல்

9.தனது குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலிருத்தல்
10.தன்னை நம்பிவந்த தொழில் கூட்டாளிகள், நண்பனை கழுத்தறுத்து ஏமாற்றுதல்
11.அன்னதானம் செய்கிறேன் எனக்கூறி வசூல் செய்து அதை சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்துதல்
12.ஆன்மீகத்தின் பெயரால் யோகாசனம் மற்றும் தியானத்தை (நியாயமான குரு தட்சிணை வாங்காமல்) வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தல்
13.பிற மதங்களை இழிவாகப் பேசுதல்;பிற மதத்தைச் சேர்ந்தவர்களை குறுக்கு வழியில் தனது மதத்திற்கு மாற்றுதல்
14.அடுத்தவர்களின் காம ரீதியான அவமானங்களை தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி மகிழுதல்(புறங்கூறுதல்)
15. மாமியார் மருமகள் ஒற்றுமையை கெடுத்தல்

16.குடும்ப ஒற்றுமையைக் கெடுத்தல்
17.ஜாதிகள் அல்லது இனங்களுக்கிடையே தீராதப் பகையை அரசியல் ரீதியாகவோ,வெறுமனயோ தூண்டுதல்
18.தவறான மருத்துவ சிகிச்சை
19.தவறான ஜோதிட ஆலோசனை
20.மாந்திரீகத்தின் உதவியால் கெடுதிகள் செய்தல்;இது 16 தலைமுறைகளைப் பாதிக்கும்.
21.இறைவழிபாடு செய்யாமல் தடுத்தல்,இறைவழிபாடு,ஜோதிடம்,ஆன்மீகச் சேவைகளை இழிவுபடுத்துதல்(.விஜய் டிவி, சன் டிவி ஞாபத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல)
22.முறையற்ற உறவுகளை ஊக்குவித்தல்;உருவாக்குதல்;பரப்புதல்;உருவாகக் காரணமாக இருத்தல்( தொலைக் காட்சியின் மெகாத்தொடர்கள்?!)
23.எதற்கெடுத்தால்  கோபப்படுதல்;பொறாமைப் படுதல்; சந்தேகப்படுதல்.
இது தவிர,இன்னும் சில பாவங்கள் இருக்கின்றன.வார்த்தைகளால் அச்சிட முடியாத பாவங்கள் அவை.

இவற்றைத்தவிர்த்து நிம்மதியாக வாழ்ந்தால் மறுபிறவி நல்ல பிறவியாக அமையும்.வாழ்க வளமுடன்!!!