RightClick

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்புசுமார் 20 வருட ஜோதிட அனுபவத்தை நேரடியாக கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பினை ஆன்மீகக்கடல் வழங்குகிறது.
ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரே மாதத்தில் நீங்கள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளமுடியும்.
காலை 90 நிமிடங்கள்,மாலை 90 நிமிடங்கள் வீதம் 30 நாட்களுக்குள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.
இதற்கு உங்களுக்குத் தேவையான தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரையிலும் உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம் வந்து தங்கவேண்டும்.அவ்வளவே!
தொழில்முறை ஜோதிடம் கற்க கட்டணம் உண்டு.

தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஜோதிட பயிற்சி வகுப்புகளில் நடைபெறுகின்றன.அவை வார இறுதிநாட்கள் வகுப்பை நடத்துகின்றன.அது நமது வேகமான வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்கின்றதா?
தொழில் முறையாகப் பார்க்க விரும்பாதவர்கள்,பொழுதுபோக்கிற்காகவும் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம்,கோவை அவினாசிப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஜோதிட டிப்ளமோ,ஜோதிட டிகிரிகள் படிப்பவர்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் திறனை மெருகுபடுத்திக்கொள்ளலாம்.

பெண்களுக்குத் தனி வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

நமது எதிர்கால வாழ்க்கையையும்,நம்மைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்தையும் கணிக்கவும்,ஜோதிடப்படி வழிகாட்டவும்,நமது நட்புவட்டத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையை மதிப்பிடவும் ஜோதிடம் பயன்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!!!
சில ஜோதிட ரகசிங்களினால் நமது ஜாதகத்தில் இருக்கும் பிரச்னைகளையும்,பாவங்களையும் சரி செய்யமுடியும்.நமது சராசரி வாழ்க்கையை அசாதாரணவாழ்க்கையாகவும் மாற்றிட முடியும்.

தொழில்முறை ஜோதிடம் கற்க விரும்புவோர்,உங்களது பிறந்த ஜாதகம்,செல் எண்ணுடன் மின் அஞ்சல் அனுப்பவும்.அடுத்த பேட்ச் வகுப்புக்கள் 7.10.2010 அன்று ஆரம்பாக இருக்கின்றன.

ஒரே நேரத்தில் 9 நதிகளில் புனித நீராட வேண்டுமா? திருச்சிக்கு வருக!!!பஞ்சபூதத்தலங்களில் அப்புத்தலம் என்னும் நீருக்குரிய கோயிலாக விளங்குவது திருவானைக் காவல். திருச்சி அருகில் இவ் வூர் உள்ளது. இத்தலத்துசுவாமி சன்னதிக்குள் யானை செல்ல முடியாது என்பதால் "தந்திபுகாவாயில்' என்ற சிறப்புப் பெயர் உண்டு. மேற்கு நோக்கிய நிலையில் சுயம்புமூர்த்தியாக மூலவர் ஜம்புகேஸ்வரர் காட்சி தருகிறார். பஞ்ச
பூதத் தலங்களில் இது நீர் அம்சமாகப் போற்றப்படுகிறது. சுவாமி சன்னதியில் ஒன்பது வாயில் கொண்ட சாளரம் (ஜன்னல்) ஒன்று அமைந் துள்ளது. இதன் வழியாக இறைவனைத் தரிசித்தால் ஒரே நேரத்தில் கங்கை, காவிரி போன்ற ஒன்பது புனித தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் உண்டாகும். கோச்செங்கட்சோழன் கட்டிய 70 மாடக்கோயில்களில் திருவானைக்காவலே முதன்மையானது. இறைவனே
சித்தரைப் போல வந்து திருநீறை கூலியாகக் கொடுத்து கட்டிய மதில் ஒன்று இங்குள் ளது. இம்மதில் "திருநீற்றுமதில்' என்று அழைக்கப்படுகிறது. சோழமன்னன் காவிரியில் நீராடிய போது கழன்று விழுந்த முத்தாரம் ஒன்று, அங்கு நீர் மொண்டு வருவதற்காக கொண்டு செல்லப்பட்ட அபிஷேக குடத்துக்குள் கிடந்தது. நீரை அபிஷேகம் செய்யும்போது, அந்த மாலை இறைவனின் கழுத்தில் விழுந்தது.
நாள் தோறும் கோபூஜை நடைபெறுவதும், சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகம் நடப்பதும், உச்சிக்கால பூஜையின் போது அர்ச்சகர் புடவை அணிந்து இறைவனைப் பூஜிப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சங்கள்.ஆதிசங்கரர் அகிலாண்டேஸ்வரி அம்மனை வழிபாடு செய்து தாடங்கப் பிரதிஷ்டை(அம்மனின் காதணியான கம்மலில் சக்கரப்பிரதிஷ்டை) செய்துள்ளார்.

கடன் தொல்லை தீர ருண் விமோசன லிங்க வழிபாடு
சிவபெருமானின் அனுமதியின்றி, தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரிய பகவான், தன் பாவத்தைப் போக்குவதற்காக 126 சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். அதில் திருவாரூர் அருகிலுள்ள திருச் சேறை கோயிலும் ஒன்றாகும். இங்கு சாரபரமேஸ்வரரும், ஞானவல்லியம்மையும் வீற்றிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் லிங்கத்தின் மீதும், அம்பிகை ஞானவல்லியின் திருவடிகளிலும், சூரியன் தன் செங்கதிர்களை பரப்பும் விதமாக கருவறைகள் அமைந்துள்ளன. இந்த சமயத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். இச்சன்னதிக்குப் பின்புறம் ருணவிமோசன லிங்கேஸ்வரருக்கு சன்னதி அமைந்துள்ளது. கடன்தொல்லைகளில் இருந்து நம்மைக் காப்பவராக இப்பெருமான் விளங்குகிறார். ஒவ்வொரு திங்கட்
கிழமையும் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. ருணவிமோசன லிங்கேஸ்வரரை வழிபாடு செய்தபின், கஜலட்சுமியை தரிசிக்க வேண்டும். கஜலட்சுமி சன்னதி எதிரே சிவதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று மூன்று துர்க்கைகள் வீற்றிருக்கின்றனர். ஒரே கோயிலில் மூன்று துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளது வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இத்தல இறைவன் மீது பதிகம் பாடியுள்ளனர். மனிதனுக்கு தேவையான அடிப்படை
குணங்களைத் தந்து செந்நெறிக்கு வழிகாட்டும் இறைவன் என்னும் பொருளில் இத்தலத்து சிவபெருமானை "செந்நெறியப்பர்' என்கின்றனர்.

சகல கடாட்சம் தரும் ருத்ராட்சம்:நன்றி தினமலர் இணையதளம்

மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ""ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,'' என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இதனை அணிபவர்கள் "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.

இந்தியா சீனா இடையே மோதல் வருமா?:நன்றி தமிழ் வெப்துனியா

இந்தியா-சீனா இடையே மோதல் வருமா?


த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: கொஞ்ச காலமாக இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவு பலவீனப்பட்டு எதிரி மனப்பான்மை வளர்ந்து வருகிறது. இந்தியாவிற்கு எதிரான ரகசிய வேலையில் சீனா ஈடுபடுவது. விசா கொடுப்பதில் இருக்கும் பிரச்சனை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்படுத்தும் பிரச்சனை என்று எல்லாவற்றையும் பார்த்தால் ஒரு மோதலை நோக்கி இந்தியாவும், சீனாவும் போவது போல் தெரிகிறது. இது எந்த அளவிற்கு இந்த நாடுகளுக்கு இடையிலான உறவு அல்லது எதிர்ப்பு, பகைமை எப்படி இருக்கும்? ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: எப்படிப் பார்த்தாலும், இந்திய ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போது சீனாவால் நமக்கு நிறைய தொந்தரவுகள் உண்டு. அதை உறுதியாகச் சொல்லலாம். ஆனால், தற்பொழுது இந்தியாவினுடைய கிரக அமைப்புகள் சாதமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அடுத்த வருடம் முடிவு, அதாவது 27.12.2011க்குப் பிறகு சனி மாறுகிறார். அப்படி சனி மாறும் போது இந்தியாவிற்கு சில நெருக்கடிகள் உண்டாகும். இந்தியா சனியோட ஆதிக்கம் பெற்ற நாடு. சனி எதிரான கிரகம் என்பது செவ்வாய். இந்த செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாடுதான் சீனா. செவ்வாய்தான் கம்யூனிஸத்திற்கும், செம்மை நிறத்திற்கும் உரிய கிரகம். சனிக்கும் செவ்வாய்க்கும் எப்போதுமே ஆகாது. இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது எதிர்காலத்தில் சீனாவால் இந்தியாவிற்கு பிரச்சனைகள் வரும். குறிப்பாக 2012, 2013, 2014 காலகட்டங்கள் கொஞ்சம் கடுமையான காலகட்டங்களாக இருக்கும். அதில் இந்தியாவிற்குள்ளேயே சில உள்நாட்டுக் குழப்பங்கள், நக்சலைட்டுகள் தூண்டுவிடப்படுதல் போன்றதெல்லாம் நடக்கும். கிட்டத்தட்ட இந்தியாவிற்கு சீனாவால் மிகப்பெரிய ஆபத்துகள் காத்துக் கிடக்கிறது. இந்தியாவினுடைய அண்டை அயல்நாடுகள் அனைத்தையுமே சீனா தனக்கு கையடக்கமாக வைத்துக் கொண்டு ராஜதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவை இயக்கக் கூடிய கிரகங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த நிலை இருக்கிறது. சீனா முழுக்க முழுக்க செவ்வாயினுடைய ஆதிக்கம் பெற்ற நாடாக இருந்தாலும் அதனுடைய யோகாதிபதியாக வருவது புதன். புதன் எப்படியென்றால், பதுங்கியிருந்து பாய்தல், பசுத்தோல் போர்த்திய புலி என்று சொல்வார்களே அந்த மாதிரியான சில வேலைகளையெல்லாம் சீனா செய்து வருகிறது. ஏனென்றால் புதனுடைய அமைப்பு அந்த மாதிரியானது. சந்தையில் ஒரு தரமான பொருள் வந்தால் அதேபோன்ற பொருளை உருவாக்குவார்கள். இதனை இமிடேஷன் என்று சொல்வார்கள். இதற்கெல்லாம் உரிய கிரகம் புதன்தான். இதுபோன்ற பல சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் எப்படிப் பார்த்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து இருக்கிறது. ஆள்பவர்கள் விட்டுக் கொடுக்காமல் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது மிகவும் நல்லது.

ஊழ்வினை என்றால் என்ன?
பாதாள உலகம்,நாக உலகம்,பேய் உலகம்,பிசாசு உலகம் என பூமிக்குக் கீழே ஏழுவிதமான உலகங்கள் இருக்கின்றன.அநியாயம்,அக்கிரமம்,திமிர்த்தனம்,விபச்சாரம்,போதைப்பொருட்கள் கடத்துதல்,குடும்பங்களளப் பிரித்தல்,தற்கொலை செய்தவர்கள்,நிறைய்ய கொலை செய்தவர்கள்-  போன்ற காரியங்களை மட்டும் செய்தவர்கள் இறப்புக்குப் பிறகு இங்குதான் பல ஆண்டுகளாக கிடக்க வேண்டும். பல ஆண்டுகளாக இருட்டு,அல்லது பல ஆண்டுகளாக வெளிச்சமும் கடும் வெப்பமும் இங்கு இருக்கும்.இன்றைய நவீன விஞ்ஞானத்தால் அவற்றை ஒரு போதும் நாம் காணமுடியாது.
அதேபோல்,பூமிக்கு மேலே ஏழு நல்ல உலகங்கள் இருக்கின்றன.அவற்றில் முதல் உலகத்தில் இருப்பவர்கள்,இந்த பூமியில் பிறருக்கு உதவியும்,வழிகாட்டியாகவும் இருந்தவர்கள் சில நூற்றாண்டுகள் வரை இருப்பர்.தேவைப் படும்போது மீண்டும் மீண்டும் பிறப்பர்.அதற்கு மேல் இருக்கும் உலகில் துறவியாகவும் நேர்மையாகவும் வாழ்ந்த நல்ல ஆத்மாக்கள் இருக்கின்றன.இவை விரும்பும் நேரத்தில்,விரும்பும் பூமி இடத்தில் பிறக்கும்.
இதற்கும் மேல் ஒரு உலகம் இருக்கின்றது.அங்குதான் சுவாமி விவேகானந்தர்,ராம கிருஷ்ணபரமஹம்ஸர்,யோகி ராம் சுரத்குமார்,ரமண மகரிஷி மற்றும் பல புண்ணியம் நிறைந்த ஆத்மாக்கள் வாழ்ந்துவருகின்றன.இவர்கள் கலியுகத்தின் முடிவில் கலியை முடித்துவைப்பதற்காக பிறப்பார்கள்.இந்த உலகத்துடன் தொடர்புகொள்ள நாம் தினமும் ஆழ்நிலைதியானம் செய்துவரவேண்டும்.அப்படி செய்து வந்தால் நமது முன்னோர்களில் ஒரு சிலர் மட்டுமாவது இங்கு வசித்துவருவார்கள்.அவர்களில் ஒருவர் அல்லது சிலர் நம்மை தொடர்புகொள்ளுவர்.

இந்த அறையில் செல்போன் சேவை நிறுவனங்களின் அலைகள் இருப்பதை நாம் நம்புகிறோம்;அவற்றைப் பார்த்தால்தான் நான் நம்புவேன் என சொன்னால் அது முட்டாள்த்தனம்.அதேபோல்,இந்த உலகங்கள் இருப்பது நிஜம்.அவற்றை நம்பாத ஆத்மாக்களும்,இறப்புக்குப் பின்னர் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு உலகிற்குச் செல்வது உறுதி.

ஆன்மீக வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறுதி லட்சியமே முக்தி எனப்படும் பிறக்காத நிலைதான்.இந்த நிலையை அடைய ஒரு மனிதப்பிறவி எவருக்கும் போதாது;
இந்து தர்மநீதி நூல்களினை ஓரளவு வாசித்துக் கிடைத்த தகவல்களின் படி,3000 மனிதப்பிறவிகள் பிறந்தப்பின்னர்தான் ஒருவன்/ஒருத்தி தகுந்த குருவை அடைகிறான்/ள்.அதற்குப் பிறகு  புண்ணிய ஆத்மாவாகப் பிறந்து,ஜோதிடம்,யோகா,ரெய்கி,மனவளக்கலை,சிற்பசாஸ்திரம்,மாந்திரீகம் இவற்றில் ஏதாவது ஒன்றில் திறமைசாலியாகிறார்கள்.இந்தக் கலையில் ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.
மரணமடையும்போது எந்த ஆசையுமில்லாமல் இறப்பவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை;அப்படிப் பட்ட பக்குவநிலையை ஒரு அனுபவம் மிக்க ஜோதிடரால் மட்டுமே கண்டறிய முடியும்.இதற்கு ஒரே ஒரு ஜோதிட குறிப்பு சொல்லலாம்.யாரது பிறந்த ஜாதகத்தில்,லக்னத்துக்கு 12 ஆம் இடத்தில் கேது மட்டும் தனியாக இருக்கிறாரோ,அவருக்கு இந்தப் பிறவி இறுதியான மனிதப்பிறவி என சொல்லலாம்.

அந்த 12ஆம் இடம் எந்த ராசி என்பதையும் அடுத்து ஆராய வேண்டியிருக்கிறது.
சரி,3000 மனிதப்பிறவிகள் பிறப்பதற்குப்பதிலாக இந்த மனிதப்பிறவியோடு,அல்லது இன்னும் ஓரிரு மனிதப்பிறவியோடு முக்தியை அடைய என்ன வழி? எனக் கேட்பவர்களுக்குத்தான் இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவே நடத்தப்படுகிறது.
பின்வரும் காரியங்கள் நாம் அடிக்கடி செய்வதால்தான் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.அவற்றை தவிர்க்கப் பாருங்கள்:

1.பிறரது சொத்துக்களை தனது அதிகாரம்,ஆளுமை,ஆளும் திறன்,தனித்திறமை,நயவஞ்சகம் இவற்றால் அபகரித்தல்

2.சொன்ன சொல்லைத் தவறுதல்
3.காம உணர்ச்சியைத் தூண்டுதல்;அப்படித் தூண்டிவிட்டு அதற்கு வடிகால் இல்லாமல் செய்வது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும்.(திரைப்படங்களை இயக்குபவர்கள்,கவர்ச்சியாக நடிப்பவர்கள்,நீலத்திரைப்படங்களை எடுப்பவர்கள்,நடிப்பவர்கள்,விநியோகிப்பவர்கள்,ஒளிபரப்புபவர்கள்,சேமித்து வைத்து விற்பவர்கள்)
4.அநியாயமான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல்/சேவை செய்தல்
5.அடைக்கலம் தேடி வருபவர்களை விரட்டுதல்; அடைக்கலம் தருகிறேன் எனக் கூறி அவர்களை அழித்தல்(இலங்கையின் தற்போதைய அதிபரின் பெயர் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)
6.வழிபாட்டுக்குரிய சொத்துக்களை திருடுதல்;அபகரித்தல்;அழித்தல்;சூறையாடுதல்;மோசம் செய்தல்
7.தன்னைப் பெற்றவர்களுக்கு அவர்களது இயலாத காலத்தில் அவர்களை பராமரிக்காமலிருத்தல்;அவர்களை சபித்தல்;அவர்களை கண்டுகொள்ளாமலிருத்தல்
8.தனது வாழ்க்கைத் துணையின் காம ஆசையை நிறைவேற்றாமலிருத்தல்;தனது வாழ்க்கைத்துணையைப் பற்றி இழிவாகப் பேசுதல்;தனது வாழ்க்கைத்துணையை தனது பெற்றோர்கள்/உடன்பிறந்தோருடன் சேர்ந்து இம்சித்தல்/சித்திரவதை செய்தல்/கொலை செய்தல்

9.தனது குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலிருத்தல்
10.தன்னை நம்பிவந்த தொழில் கூட்டாளிகள், நண்பனை கழுத்தறுத்து ஏமாற்றுதல்
11.அன்னதானம் செய்கிறேன் எனக்கூறி வசூல் செய்து அதை சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்துதல்
12.ஆன்மீகத்தின் பெயரால் யோகாசனம் மற்றும் தியானத்தை (நியாயமான குரு தட்சிணை வாங்காமல்) வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தல்
13.பிற மதங்களை இழிவாகப் பேசுதல்;பிற மதத்தைச் சேர்ந்தவர்களை குறுக்கு வழியில் தனது மதத்திற்கு மாற்றுதல்
14.அடுத்தவர்களின் காம ரீதியான அவமானங்களை தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி மகிழுதல்(புறங்கூறுதல்)
15. மாமியார் மருமகள் ஒற்றுமையை கெடுத்தல்

16.குடும்ப ஒற்றுமையைக் கெடுத்தல்
17.ஜாதிகள் அல்லது இனங்களுக்கிடையே தீராதப் பகையை அரசியல் ரீதியாகவோ,வெறுமனயோ தூண்டுதல்
18.தவறான மருத்துவ சிகிச்சை
19.தவறான ஜோதிட ஆலோசனை
20.மாந்திரீகத்தின் உதவியால் கெடுதிகள் செய்தல்;இது 16 தலைமுறைகளைப் பாதிக்கும்.
21.இறைவழிபாடு செய்யாமல் தடுத்தல்,இறைவழிபாடு,ஜோதிடம்,ஆன்மீகச் சேவைகளை இழிவுபடுத்துதல்(.விஜய் டிவி, சன் டிவி ஞாபத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல)
22.முறையற்ற உறவுகளை ஊக்குவித்தல்;உருவாக்குதல்;பரப்புதல்;உருவாகக் காரணமாக இருத்தல்( தொலைக் காட்சியின் மெகாத்தொடர்கள்?!)
23.எதற்கெடுத்தால்  கோபப்படுதல்;பொறாமைப் படுதல்; சந்தேகப்படுதல்.
இது தவிர,இன்னும் சில பாவங்கள் இருக்கின்றன.வார்த்தைகளால் அச்சிட முடியாத பாவங்கள் அவை.

இவற்றைத்தவிர்த்து நிம்மதியாக வாழ்ந்தால் மறுபிறவி நல்ல பிறவியாக அமையும்.வாழ்க வளமுடன்!!!
                   

                                       

மலர் மருத்துவம் என்றால் என்ன?

இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் MBBS,IRCP,MRCS முடித்துவிட்டு,சில காலம் ஆங்கில மருத்துவச் சேவை புரிந்தார்.ஆங்கில மருத்துவமான அலோபதி ஏராளமான பக்கவிளைவை உருவாக்கியதால்,அவர் ஓமியோபதி மருத்துவப்பட்டம் பெற்றார்.


பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் மனமே என்பதை உணர்ந்ததால்,அவர் மலர் மருத்துவத்தைக் கண்டறிந்தார்.எந்த நோய்க்கும் மனமே மூலகாரணம்.மனதிலிருந்தே நோய்கள் ஆரம்பிக்கின்றன.எனவே,மனதைச் சரிபடுத்தினால்,உடல் சுகமடைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.மனமகிழ்ச்சியானது உடலின் அனைத்துசெல்களுக்கும் பரவி,நோயாளி பரிபூரணகுணமடைகிறார் என்பதை தமது அனுபவத்தில் கண்டறிந்தார்.


இதனால்,மனதைச் சரிபடுத்தினால்,உடல் சுகமாகும் என்பதைக் கண்டறிந்தார்.மனதில் வேலை செய்து அதனைக் குணப்படுத்தும் மருந்து எது என்பதை கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.காடுகளில் கிடைக்கும் மரப்பட்டைகள்,இலைகள்,கனிகள்,காய்கள்,பூக்களை ஆராய்ந்து பார்த்தார்.டாக்டர் பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய பல நூல்களையும் வாசித்துப் பார்த்தார்.மலர்கள் மனிதமனங்களில் மாபெரும் மாற்றத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார்.மனித மனத்தை ஒழுங்குபடுத்தும் மலர்களைத் தேர்ந்தெடுத்தார்.38 வகையான மருந்துகளைத் தயாரித்தார்.இம்மருந்துகள் மனதைச் சீராக்கும்போது உடல் நலம் மேம்படுகிறது.


நன்றி:ஹோமியோபதி ஒரு அறிமுகம் தொடர் ,எழுதியவர் டாக்டர் ஏ.ராஜகோபால்,வியாசர்பாடி,சென்னை.செல்:9444163153.


நன்றி:டாக்டர் பி.எஸ்.பி.யின் விடியல் மாத இதழ் பக்கம் 31,மார்ச் 2008.

மரணத்திற்குப் பின் மனித வாழ்வு:புத்தக ஆதாரங்கள்

ஆவிகள் உலகத்தினைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனில்,சில அதீத உளவியல் சம்பந்தப்பட்ட ஆழ்மனப்பயிற்சிகளை செய்துவரவேண்டும்.ஆவியுலகத் தொடர்பு,சூட்சும உடல் பயணம்,ஞான திருஷ்டி பயிற்சிகள் இதற்கு உதவும்.இதற்குத் தேவை மிகுந்த பொறுமையும் கடினப் பயிற்சியும் தான்.


இதற்குமுன் இப்படிப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்:


டாக்டர் வெல் ஓவன் என்பவர் உயர் நிலை ஆவிகளைத் தொடர்புகொண்டு The Life Beyond The veil என்ற பெயரில் நான்கு பாகங்களில் புத்தகம் வெளியிட்டுள்ளார்.


கரோலின் லார்சன்(Caroline D.Larsen) எழுதிய Travels in the Spirit World என்ற புத்தகமும்,தியோசபிகல் சொசட்டியைச் சேர்ந்த சார்லஸ் லெட்பீட்டர் என்பவர் எழுதிய Astral Planes என்ற நூலும் அன்னிபெசன் ட் அம்மையார் எழுதிய Death and After என்ற நூலும் சூட்சும உடல் பயண அனுவங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது.


இதேபோல்,சூட்சும உடல் பயணம் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்த ஜார்ஜ் W மீக் என்பவர் After Death then What என்ற நூலும்,மறைமலையடிகள் எழுதிய மரணத்திற்குப்பின் மனிதர் நிலை என்ற புத்தகமும்,தம்மண்ணச் செட்டியார் அவர்கள் சூட்சும உடல் பயணம் என்ற புத்தகமும் ஏராளமான தகவல்களை தெரிவிக்கின்றன.


கி.பி.1996 வரை தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலைப் பாடத்திட்டத்தில் சூட்சும உடல் பயணம் ஒரு பாடப்பகுதியாகவே இருந்தது.பிற்காலத்தில் பல்வேறுகாரணங்களால் அது நீக்கப்பட்டுவிட்டது.


நன்றி:மரணத்திற்குப் பின் மனித வாழ்வு தொடர்,பக்கம் 18,19,பி.எஸ்.பியின் விடியல் ஜோதிட விழிப்புணர்வு மாத இதழ்,பிப்ரவரி 2009.

சுதேசிச் சாதனை:மண்ணாலான குளிர்சாதனப்பெட்டி

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மன்சுபாய் ப்ரஜாபதி என்பவர் மிட்டி கூல் என்ற குளிர்சாதனப்பெட்டியை களிமண்ணால் கண்டுபிடித்துள்ளார்.இதற்கு மின்சாரம் தேவையில்லை;காயகறிகள் தம் இயற்கை சுவை மாறாமலிருக்கின்றன.விலை மிகக் குறைவு.இதைப் பார்வையிட உலகெங்குமிருந்து விஞ்ஞானிகள்,பத்திரிக்கையாளர்கள் பார்வையிட வந்துகொண்டே யிருக்கின்றனர்.


இவரை நமது மானசீக நிரந்தர ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் “உண்மையான விஞ்ஞானி” என பாராட்டுகிறார்.


ஒரேநாளில் மண்ணால் செய்த தோசை சுடும் தவாக்கள் 600 ஐ தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும்போது இவருக்கு வயது 18.


தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி,தோசை சுடும் தவா,குக்கர்,குளிர்சாதனப் பெட்டி என இவரின் கண்டுபிடிப்புப் பட்டியல் நீள்கிறது.மேலும் பல பொருட்களைக் கண்டுபிடிக்கும் ஆவலும் திறனும் படைத்தவர்.


இவரதுபெரிய மகன் ‘’மண்பாண்டப்பொறியியலை”ப் பாடமாக எடுத்து பொறியியல் கல்லூரியில் படித்துவருகிறார்.


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 19,செப்டம்பர் 2010.

சுதேசிச் செய்தி செப்டம்பர் 2010 கேள்விபதில்கள்


ஹாலிவுட் நடிகை ஜீலியா ராபர்ட்ஸ் இந்துமதத்தைப் பின்பற்றுவது பற்றி?


மேற்கத்தியர்கள் கிழக்கு முகமாகத் திரும்புகிறார்கள்.நாம் நமது பாரம்பரியத்தை உணரவிடாமல் தடுப்பதை தனது அரசியல் கொள்கையாகவே காங்கிரஸீம் மேலும் சில கட்சிகளும் வைத்திருக்கிறது.அதன் நயவஞ்சகத்தை நாம் இன்னும் கூட உணரவில்லை;நம்மை இழிவுபடுத்துவதில் சன் டிவிக்கு அவ்வளவு சந்தோஷம்.


ஐ,டி.பொறியாளர்களில் 18% தான் பணிபுரிய லாயக்கானவர்கள் என்று கருத்துக்கணிப்பு ஒன்று கூறியுள்ளதே?


அரசாங்கத்தை இழுத்து மூடு,ஆட்குறைப்பு செய் என தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கத்துவதற்கு இந்த ஆய்வு உதவலாம்.இது ஒரு பக்கமே.ஆனால் நமது பொறியியல் கல்வி நிறுவனங்களின் தரம் மட்டமாக உள்ளது என்பதும் பொறியாளர்களின் தரம் மட்டமாக உள்ளது என்பதும் உண்மையே.அவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டியவையே!!!


பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திவிட்டதே சீனா?


அமைதியாக நடந்துள்ளது இந்த மாற்றம்.(சீனா பற்றிய புள்ளிவிவரங்கள் உண்மையானால்?)


இதே நிலையை இந்தியா செய்திருக்குமானால் இங்கே என்னென்ன அல்லாகலம் நடந்திருக்கும். . . கற்பனையை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் அமெரிக்க ராணுவம் பற்றி வெளியிட்டத் தகவல்களைப் படித்தீரா?


விக்கிலீக்ஸின் செய்திக்கசிவு கூட நல்லதுதான் செய்துள்ளது.ஆனாலும் அமெரிக்க இந்திய ஆட்சியாளர்களின் கண்களை இது திறந்துவிடாது.

சொந்தமாக சிறுதொழில் துவங்கிட

நீங்கள் சொந்தமாக சிறுதொழில் செய்ய விரும்புகிறீர்களா?ஆம் எனில்,பின்வரும் பொருட்களைத் தயாரிப்பதற்கும்,அதற்குத் தேவையான மூலப்பொருட்கள்,தயாரிப்புப் பயிற்சியும்,தொழில்நுட்ப விபரங்களையும் தர சென்னையைச் சேர்ந்த அஸ்ட்ரோ ட்ரேட் பிரைவேட் லிமிடெட் தரத் தயாராக இருக்கிறது.


இந்த நிறுவனம் பாரிமுனையில் தம்புச்செட்டித்தெருவில் காளிகாம்பாள் கோவில் அருகில் எண்:232 இல் செயல்பட்டுவருகிறது.தொலைபேசி:044 – 43412222 செல் எண்கள்: 98845 13369,96770 56804.


சலவை சோப்,குளிக்கும்போது பயன்படுத்தும் ஷாம்பு,தரையை சுத்தப்படுத்தும் க்ளீனிங் திரவங்கள்,பற்பசை,தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்,முகப்பூச்சு க்ரீம்,குங்குமம்,ஊதுபத்தி,சூடக்கட்டி,ப்ளீச்சிங் பவுடர்,அழுக்கு நீக்கியான ஹைட்ரோகுளோரிக் ஆசிட்,சலவைப் பவுடர்,கழிப்பிடத்தை சுத்தப்படுத்தும் சாதனங்கள்,பல் தேய்க்கும் ப்ரஷ்,குளியல் சோப்,முகப்பூச்சு பவுடர்,பாத்திரம் துலக்கும் பவுடர்,சோப்பு,கம்யூட்டர் சாம்பிராணி, தரை


துடைப்பான்,பினாயில்,சானிடரி நாப்கின்.


இந்தியா வல்லரசாகிட,நாம் சுயச்சார்பான நாடாக மாற வேண்டும்.அதற்கு பக்கபலமாக இருப்பது சிறுதொழில்கள்தான்.


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 2, செப்டம்பர் 2010.

இராஜபாளையம் குருசாமிகோவிலில் இருக்கும் குருசாமி அவர்களின் அதிசயம்

குருசாமி கோவிலுக்கு எதிரே ஒரு தெரு செல்கிறது.அந்தத் தெருவில் அமைந்திருப்பது சிவகாமி ஞானியார் ஜீவ சமாதி.


இங்கு தோப்புப்பட்டி சாலியர் தெருவில் ஆறுமுகச்சாமி என்ற அருளாளர் தோன்றினார்.அவர் கைத்தறி நெசவுத்தொழிலை மேற்கொண்டு இறைபக்தியில் சிறந்து விளங்கினார்.வேலை செய்யும்போது இறைவனின் திருவருளை பற்றிச் சுயமாகப் பாடும் திறன் பெற்றிருந்தார்.ஓதாமல் உணர்ந்த உத்தம ஞானியாவார்.


ஒரு முறை ஆறுமுகச்சாமி அவர்கள் அருள்மிகு குருசாமி கோவிலில் அமர்ந்து இனிய அருள்பொழியும் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.திடீரென குருநாதர் மீதே அறம்பாடத் துவங்கினார்.


உடனே,குருசாமி அவர்முன் தோன்றி, “நீ எனது திருவருளைப் பாடினாய்;கேட்டு மகிழ்ந்தேன்.ஆனால் என்னையே சாபமிடும் விதத்தில் அறம் பாட ஆரம்பித்துவிட்டாயே! பிறருக்கு நல்வழி கூறிப்பாடு.அகங்காரம் கொள்ளாதே.யாரையும் சபிக்கும்படி பாடாதே.இனிமேல் நான் இருக்கும் திருக்கோவிலுக்கு வராதே!!!” என்று அறிவுரை கூறினார்.


குற்றத்தை உணர்ந்த ஆறுமுகச்சாமி குருசாமி கோவிலுக்குக் கிழக்கே சாலியர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட பிள்ளையார் கோவிலில் தங்கி அருள்மிகு குருசாமி திருவருள் திறத்தை உணர்ந்து மகிழ்ந்து குருவருள் புகழ் என்னும் நூலை இயற்றினார்.அந்நூல் குருசாமியின் சிறப்புக்களையும்,பெருமைகளையும்,அருட்திறத்தையும் வெளிப்படுத்தும் செய்யுள் நூலாகும்.


ஆறுமுகச்சாமி ஞானம் பெற்றப்பின் வடதிசை சென்று ஆற்காட்டில் ஜீவசமாதி ஆனார்.குருநாதர் குருசாமியின் அறிவுரையால் மேல்நிலைக்கு உயர்ந்தார்.குருசாமியின் அருளாற்றலினை வெளிப்படுத்தும் சான்றில் இதுவும் ஒன்று.

இராஜபாளையம் குருசாமி கோவிலின் ஸ்தல வரலாறு

குருசாமி கோவில்,இராஜபாளையம் அம்பலபுளிபஜாரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கிறது.
குருசாமி அவர்களின் பூர்விகம்,பெற்றோர்களைப்பற்றிய தகவல் இதுவரை இல்லை.
இவர் பல்லாண்டுகளாக பழனிமலையில் தவம் செய்துவந்தார்;ஒருநாள் முருகக் கடவுள் இவருக்குக் காட்சியளித்தார்.
"நீ குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு இல்லத்தில் பிச்சை ஏற்று உண்பாய்! பிச்சையளித்த பெண் உன்னிடம் பிள்ளை வரம் கேட்பாள்;நீயும் பெண் குழந்தை பிறக்க வரம் அளிப்பாய்; அப்பெண் குழந்தை உன் வளர்ப்புமகளாகி உனக்கு பணிவிடை செய்யும்.அக்குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் நீயே தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்வாய்.

நீ ஜீவ ஐக்கிய சமாதி அடைந்தபின் உன் வளர்ப்பு மகளும் அவர் தம் கணவரும் உன் சமாதியைப் பராமரித்து வருவார்கள்.அவர்கல் காலத்திற்குப் பின் அவர்கல் பிள்ளைகள் வழிவழியாகப் பராமரித்து வருவார்கள்.

நீ ஜீவ சமாதி அடையும் இடம் சிறப்புற்று விளங்கும்.நாள் தோறும் உச்சிக்கால பூஜையில் உனக்குக் காட்சியளிப்பேன்.தென் அழகாபுரி நோக்கிச் செல்" என வரம் அளித்தார்.
குருசாமி காசியிலும் பழனி மலையிலும்பல காலம் தவம் மேற்கொண்டார் என்பதற்கு அக்கால ஒயில் கும்மியே சான்று!!!

காசியில் கன கோடி காலம்
ஆற்றங்கரையில் அநேக கோடி காலம்
பன்னிரெண்டாயிரம் வருஷம் பழனிமலையில்
நேர்த்தியதாகவே சாலியர்
கோத்திரம் நிலை நிறுத்த வந்த குருநாதன். . .

குருசாமிகளின் வளர்ப்புமகளின் பெயர் 'அன்னை பழனியம்மாள்'ஆகும்.அவரது கணவரின் பெயர் 'அய்யா அனஞ்சனேய பெருமாள்' ஆகும்.இவர்களின் வாரிசுகள் மூன்றுபேர்கள் ஆவர்.சி.சிவகுருநாதன் பூசாரி வகையறா; ரெ.சிவஞானம் பூசாரி வகையறா;சி.குருவாரெட்டியார் பூசாரி வகையறா இந்த மூன்று வம்சாவளியினர் இன்றும் குருசாமி கோவிலின் பூசாரியாக தொண்டுபுரிந்துவருகின்றனர்.

குருசாமி அவர்கள் ஆனிமாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜீவ ஐக்கியம் ஆனார்கள்.இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரம் நின்ற நாளில் பிற்பகல் 3 மணியளவில் சுவாமிக்கு ஆண்டுகுருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது.அன்றும் ஒவ்வொரு கார்த்திகைக்கும் அன்னதானம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.

குருபூஜை முடிந்து ஒரு மண்டலம் கடந்து(40 நாட்கள் கழித்து) ஒவ்வொரு  தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் 7 ஆம் தேதியில் குருநாதரின் சீடர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியே சாலியர்களின் தெருக்கள் வழியே நகர்வலம் வந்து  குருசாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டுவருகின்றனர்.

ஏனெனில்,குருசாமி ஜீவ ஐக்கியமான 40 நாளில் லிங்கம் அமைக்கப்பட்டது;அதனால் 40 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றது.எனவே,ஆவணி 7 ஆம் தேதியானது பாலாபிஷேக நாளாகவும் இருந்து கொண்டாடி வருகின்றனர்.

தினமும் குருசாமி கோயிலுக்கு வந்து வழிபடுபவர்க்கு பணக்கஷ்டம் நீங்குகிறது;ஓராண்டுக்கு மேல் தினமும் குருசாமி கோவிலுக்கு வருபவர்களுக்கு அவர்களின் குடும்பக்குறைகள்,நீண்ட கால ஆசைகள் பூர்த்தியாகின்றன என்பது அனுபவ உண்மை.

‌பி‌த்ரு‌க்களு‌க்கு தொட‌ர்‌ந்து ‌தி‌தி கொடு‌ப்பது அவ‌சியமா?தமிழ்.வெப்துனியா.காம்: பித்ருக்களுக்கு திதி கொடுத்தல் என்பது நமது நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. என்றைக்கோ இறந்தவர்களுக்கு இன்றைக்கும் திதியா என்ற கேள்வி பகுத்தறிவு மட்டத்தில் மட்டுமல்ல, சாமி கும்பிடுபவர்களுக்கும் ஏற்படுகிறது. இறந்த எவர் ஒருவரின் ஆத்மனும் அடுத்த 3 ஆண்டுகளில் பிறப்பு எய்திவிடுகிறது என்ற ஆழமான ஆன்மிக ஞானமும் இந்த நாட்டில் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்தர் இதனை சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும் போது பித்ருக்களுக்கு திதி கொடுப்பது என்பது எத்தனை ஆண்டுகளுக்குச் செய்யலாம் ஏன்?


ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பித்ருக்களுக்கு திதி கொடுப்பது என்பது மிக மிக முக்கியமான விடயம் என்று வேதங்கள் சொல்கின்றன. வேதங்கள் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சாதாரணமாக யோசிப்போம். நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள். பிறகு நமக்கு ஒரு பாதையை தெரிந்தோ, தெரியாமலோ அமைத்துத் தந்தவர்கள். இன்றைக்கும் பலர் பாட்டன் சொத்துக்களில் வாழக்கூடியவர்களை பார்க்கிறோம். அவர் மட்டும் அப்ப கஷ்டப்பட்டு கடையை ஆரம்பிக்காமல் போயிருந்தால் இவர் இன்றைக்கு காலாட்டிக்கிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லக்கூடிய விஷயங்களெல்லாம் இதில் வருகிறது. அதனால்தான் பித்ருக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் திதி கொடுக்கிறோம்.


பொதுவாக பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அமாவாசை அன்று. வானவியல் படி அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறது. சூரியனை பிதுர்காரகன், சந்திரனை மாதுக்காரகன் என்று சொல்கிறோம். பிதுர் என்றால் பிதா, மாது என்றால் மாதா. இதேபோல சூரியனை ஆத்மக்காரகன் என்றும், சந்திரனை மனோக்காரகன் என்றும் சொல்கிறோம். ஆத்மாவும், மனதும், இந்த இரண்டிற்கும் உரிய கிரங்கங்கள் ஒன்று சேரக்கூடிய நாட்களில் முன்னோர்களை நினைத்து வழிபடும் போது நமக்கு ஒருவித சக்தி கிடைக்கும். முடித்துவிட்டு வந்தார் திடீரென்று முடிவெடுத்துவிட்டார் என்று சொல்வார்கள். இதெல்லாம் நம் மனதை ஒருமுகப்படுத்துவதற்கான வழிமுறைகள்.


நல்ல முன்னுதாரணமாக இருந்த பாட்டன், பாட்டியை நினைத்து உட்கார்ந்து பிதுர்க்கு வேண்டிய கர்மாவெல்லாம் செய்யும் போது, அவர்களுக்குள் ஒரு இன்டீயூஷன் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குழப்பத்தில் இருந்தால் தெளிவு பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு தற்காலிக ரிலீஃப் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் கருமாதி போன்றதையெல்லாம் பெரும்பாலும் நதியோரமாக செய்வார்கள். அந்த நதியில் நீராடும் போதும் எனர்ஜி கிடைக்கும். அதனால் இதெல்லாம் ஒரு சாதகமான செயல்கள்தான். அதனை தவிர்க்க வேண்டிய தேவையில்லை. ஆனால், அதற்காக ஆடம்பரமாக செய்யக்கூடியது. நன்றிக்காக அவர்களை நினைத்துச் செய்ய வேண்டியது. அந்த நினைவுகளில் 10 நிமிடமோ, 15 நிமிடமோ இருப்பது. அவர்கள் சொன்ன நல்ல விஷயங்களைச் செயல்படுத்துவதற்கு முயற்சிப்பது. இதற்கெல்லாம் அது உதவிகரமாக இருக்கும்.

அஷ்டலிங்கங்களும் உரிய ராசிகளும்(அண்ணாமலையில்)

திருஅண்ணாமலை:நமக்கு மறுபிறவியில்லாத முக்தி தருமிடம்

அண்ணாமலை கோவிலும் அஷ்டலிங்கங்களும்

திரு அண்ணாமலையும் அஷ்ட லிங்கங்களும்

பைக் திருட்டைத் தடுக்க உதவும் கருவியைக் கண்டுபிடித்த இளந்தமிழ் விஞ்ஞானி:

பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர்
மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாணவர் மணிகண்டன் (18), பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.


இங்குள்ள ஒ.வெ.செ., மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் இவர் கண்டுபிடித்துள்ள கருவியின் பெயர் "3 ஜி வெய்கிள் கன்ட்ரோலர்'. இக்கருவியில் மொபைல் போன் பொருத்தப்பட்டுள்ளது. பைக் திருடு போகும் பட்சத்தில், அந்த மொபைல் போனை தொடர்பு கொண்டவுடன், அதே இடத்திலேயே இன்ஜின் நின்று விடும்; அலாரம் அடிக்கும், ஸ்டார்ட் ஆகாது. பைக் இருக்கும் இடம் குறித்து, நமது மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., வரும். (மொபைல் நிறுவனத்தின் டவர் அமைந்துள்ள இடத்தை சுட்டிக்காட்டும்). "சைடு ஸ்டாண்ட்' போட்டு நிறுத்தி விட்டு, மறதியாக அதே நிலையில் பைக்கை எடுத்தால், ஸ்டார்ட் ஆகாது. பகலில் முகப்பு விளக்கை "ஆன்' செய்து பைக் ஓட்டினாலும், எரியாது; இரவில் தானாகவே விளக்குகள் ஒளிரும். ஹெல்மெட் அணிந்தால் தான் ஸ்டார்ட் ஆகும். செல்லும் போது ஹெல்மெட்டின் கிளிப்பை கழற்றினால் கூட, பைக் நின்றுவிடும். பிரேக் ஷூ தேய்ந்திருந்தால், அதுகுறித்து ஒலி எழுப்பும். விபத்து ஏற்படும் போது "108' ஆம்புலன்ஸ், போலீஸ், உறவினர் ஒருவருக்கும் தானாகவே எஸ்.எம்.எஸ்., செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மணிகண்டன் கூறுகையில், ""சிறுவயதில் இருந்தே கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் துறையில் ஆர்வம் அதிகம். ஆசிரியர்கள், உறவினர் ஒருவரும் இக்கருவியை தயாரிக்க ஊக்கம் அளித்தனர். இதன்மதிப்பு 3,000 ரூபாய்,'' என்றார். இவரது தந்தை டீ கடையில் வேலை செய்கிறார். படிப்பில் முதலிடத்தில் வரும் மணிகண்டனுக்கு பொதுநல அமைப்புகள் உதவினால், இன்னும் பல கருவிகளை கண்டுபிடிப்பார்.

இவரைப் போன்ற பல கண்டுபிடிப்பாளர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்.இப்படிச் செய்வதாலும் நமது பாரதம் வல்லரசாகவும்,நல்லரசாகவும் மாறும். இவரது கண்டுபிடிப்புத்திறனுக்கு நமது ஆன்மீகக்கடல் தலை வணங்குகிறது.
நன்றி;தினமலர் 3.9.2010

இந்திரியங்களை இயக்குவது எது? நன்றி தமிழ்வெப்துனியா

இ‌ந்‌தி‌ரிய‌ங்களை இய‌க்குவது எது?செவ்வாய், 31 ஆகஸ்ட் 2010( 15:19 IST )


தமிழ்.வெப்துனியா.காம்: சமீபத்தில் படித்தேன், இந்திரியங்களை வெள்ளி இயக்குகிறது. துக்கம், நரம்பு, தசை, மரணம் ஆகியவற்றை சனி தீர்மானிக்கிறது என்று பார்த்தேன். இது எந்த அளவிற்கு உண்மை? எப்படி?


ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: விந்தணுக்கள் இருக்கிறதல்லவா, சுக்கிலம். சுக்கிலத்திற்கு சுக்ரன்தான். இந்த சுக்கிலத்தோட வீரியத்தை நிர்ணயிப்பது சுக்ரன் கையில்தான் இருக்கிறது. ஆனால், கருவுறத் தகுதியில்லாத ஆண்களெல்லாம் உண்டு. அதனை நாம் ஜாதகத்தில் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதை சுக்ரனை மட்டுமே பிரதானமாக வைத்துச் சொல்லிவிட முடியாது. செவ்வாய் மஜ்ஜைக்குரிய கிரகம். எலும்பு மஜ்ஜைகளில் இருந்துதான் ரத்த அணுக்கள் உருவாகிறது. 10 சொட்டு ரத்தம் சேர்ந்துதான் ஒரு விந்தணு உருவாகிறது என்பது ஒரு கணக்கு. எனவே, ரத்தத்தினுடைய அணுக்கள் எல்லாம் விகிதாச்சாரப்படி விந்தணு உருவானால், அந்த விந்தணுவிற்கு எல்லா விதத்திலும் கருவுறும் தன்மை இருக்கிறது.


பிரதானமாக பார்த்தால் செவ்வாய். ஏனென்றால், செவ்வாய்தான் ரத்தம் எப்படி இருக்கும், வீரியம் உண்டா என்பதையெல்லாம் நிர்ணயிக்கும். ஆண்களுக்கான எழுச்சி இதையெல்லாம் செவ்வாயை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். அதற்கடுத்துதான் சுக்ரன் வருகிறார். இந்த சுக்ரன்தான் விந்தணுக்களுடைய நிறம், அதனுடைய தன்மை, பிறகு அதனுடைய வேகம் - வேகமாகப் போய் கரு முட்டையுடன் மோதி கலக்க வேண்டும் - இந்தப் பகுதியை சுக்ரன் எடுத்துக் கொள்கிறார். விந்தணுவினுடைய உருவாக்கம் செவ்வாய். விந்தணுவினுடைய செயல்பாடு சுக்ரன். எனவே விந்தணுவினுடைய பங்களிப்பில் செவ்வாய், சுக்ரனுடைய பங்களிப்பு அதிமாக உள்ளது. சுக்ரன் ஸ்லோகிதம் கலப்பது இதெல்லாம் சுக்ரன்தான்.


நரம்பெல்லா‌ம் சனி பகவான்தான். ஏனென்றால் சனி வலுவாக இருந்தால்தான் பக்கவாதமெல்லாம் வராமல் இருக்கும். சனி கெட்டுப் போயிருந்தால் பக்கவாதம், மூளைக் காய்ச்சல், சனி கெட்டிருந்து குரு பார்த்தாரென்றால் இடது கையைத் தாக்கும். மூளை வேறு விதத்தில் செயல்படுவதை நாம் பார்க்கிறோம்.

இந்துதர்மத்தின் வேர்களில் ஒன்று

இந்து தர்மத்தின் வேர்களில் ஒன்று:தமிழ்நாடு மாநிலம்,கல்லுப்பட்டி அருகில் அமைந்திருக்கும்முனியாண்டி கோவிலில் ஒரு சிறப்பு உண்டு.இந்த முனியாண்டியை குல தெய்வமாகக் கொண்டுள்ள இந்த பகுதி மக்கள் இந்தியா முழுக்கவும் பரவியுள்ளனர்.


இவர்கள் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் உணவகங்களை தமிழ்நாடு,இந்தியா முழுக்கவும் நடத்தி வருகின்றனர்.இவர்களது உணவகத்தில் ஒவ்வொருநாளும் முதலில் யார் சாப்பிட வருகிறார்களோ,அவர்கள் தரும் பணத்தை தினமும் சேமித்து,ஆண்டுக்கு ஒரு முறை ஐந்துநாட்கள் வரை கடைக்கு விடுப்பு விட்டு விட்டு கல்லுப்பட்டிக்கு வருகின்றனர்.


முனியாண்டி கோவிலில் அன்னதானம்,கொடைவிழா நடத்துகின்றனர்.


அந்தத் திருவிழாவில் கூடும் மக்களில் பெரும்பாலானவர்களின் பெயர்கள் முனி என்று துவங்கும்;அல்லது பெயரிலேயே முனி இருக்கும்.
நாம் அனைவரும் நிம்மதியாக இருப்பதற்கு பின்வரும் மந்திரத்தை தினமும் காலையில் 9 முறையும் மாலை அல்லது தூங்கும் முன்பு 9 முறையும் ஜபித்துவந்தால் ,எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும் என்பது அனுபவ உண்மை.ஓம் அருணாச்சலாய நமக


ஓம் அகத்தீசாய நமக


ஓம் நந்தீசாய நமக


ஓம் திருமூலதேவாய நமக


ஓம் கருவூர்தேவாய நமக


ஓம் ராமலிங்கதேவாயநமக

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம் 3

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்3இனி வரக்கூடிய காலமானது பிரம்மாவிடமிருந்து ஆஞ்சநேயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆஞ்சநேயர்தான் இப்போதைய பிரம்மா.ஆஞ்சநேயருடைய செயலை பூவாக எடுத்துக்கொள்கிறார் இறைவன்.ஆஞ்சநேயர் மேலே இருக்கிறார்.அவருடைய சூட்சும சக்தியோ ஞான சித்தரின் சரீரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதையாராலும் உணர முடியாது.2006 இல்தான் ஞான சித்தரை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளும்.


தமிழ்நாடுதான் உலகத்திற்கே வல்லரசு ஆகப்போகிறது.உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது.இதனை ஞானத்தினால் மட்டுமே உணர முடியும்.விஞ்ஞானத்தினால் ஒருபோதும் உணர முடியாது.ஆனால்,உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா தனது பாதத்தால் மிதித்துக் கொண்டு ஆட்சிபுரியப் போகிறது.2006 லிருந்து உலகமே இந்தியாவிற்கு அடிமையாகப் போகிறது.இதனை எல்லோரும் உணரப்போகிறார்கள்.


ஏனெனில் மேலைநாட்டில் எல்லாம் பணவெறி பிடித்தும்,அகந்தையினாலும் மதம் என்ற கர்வத்தினாலும் ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.இவை அனைத்திற்கும் சவாலாக இந்தியா சிலிர்த்தெழப்போகிறது என விவேகானந்தர் அன்றே சொல்லிவிட்டார்.உலகிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு ஜோதி சென்னையிலிருந்துதான் புறப்படப்போகிறது என்றும் தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டார்.ஆம்,சென்னையிலிருந்து அந்த ஞான சித்தர் உலகிற்கு வழிகாட்டப்போகிறார்.படிப்படியாக கடல் அலைகள் மோதப்போகின்றன.பல மேலைநாடுகள் காணாமல் போகப்போகின்றன.இதுதான் உண்மை.18 சித்தர்களும் பிறந்துள்ளனர்.அவர்கள் அனைவரும் இந்த ஞான சித்தரிடம் வந்து பேசுவார்கள்.


உலகத்திலுள்ள அத்தனை சக்திகளும் 2006க்குப் பிறகு அந்த சித்தரிடம் ஆவாஹனம் ஆகிவிடும்.உலகம் இதை எதிர்காலத்தில் உணரப்போகிறது.வரக்கூடிய காலகட்டங்கள்,வரக்கூடிய தத்துவங்களில் எல்லாம் அவர் பெயர் காலத்தால் அழியாமல் இருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன்.


2006க்குப்பிறகு அவரால்தான் தமிழ்நாடே உலகிற்கு வழிகாட்டப் போகிறது.அவர் யார் என்பதை பரஞ்சோதி சுவாமிகளுக்கு அகத்தியர் காட்டியுள்ளார்.நான் கமலமுனி நாடி மூலமாகத் தெரிந்துள்ளேன்.2006க்குப்பிறகு நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.எனவே, உலகெங்கும் பெரும் அழிவு ஏற்பட்டப்பிறகே தமிழ்நாடு உலகிற்கு வழிகாட்டப்போகிறது.கி.பி.2006 லிருந்து 82,000 ஆண்டுகளுக்கு சித்தர்கள் பரம்பரைதான் இந்த பூமியை உலகத்தை ஆளப்போகின்றனர்.பக்கம் 99,100,101.


பழனி,திருஅண்ணாமலை,திருப்பதி இந்த மூன்று கோவில்கள்தான் இந்த உலகிற்கே வழிகாட்டப்போகின்றன.அதற்கு தகுந்தாற்போல், இந்த மூன்று கோவில்களிலும் பல நடைமுறைகள் அடியோடு மாறப்போகின்றன.


தகவல்:சித்தர்களின் மகிமை,பக்கம்24பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்குகிறது பாகம் 2

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்2நமது பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்கும் முன்பு,சித்தர்கள் ஒவ்வொருவராக நீண்ட கால தவத்திலிருந்து எழுந்து வரத்துவங்கியுள்ளனர்.2004 ஆம் ஆண்டில் உண்டான மாபெரும் ஆழிப்பேரலை(சுனாமி) காகபுஜண்டர் சித்தரின் தவம் கலைந்து எழுந்ததற்கான ஆதாரமாக தினத்தந்தியில் ஒருவர் முழுப்பக்க கட்டுரையே எழுதினார்.அது உண்மைதான்.இந்தியா,மலேஷியா,சிங்கப்பூர்,இந்தோனோஷியா முதலான நாடுகளில் கடலோரங்களில் மனிதத் தன்மையற்ற குலைநடுங்கச் செய்யும் பல குற்றங்களின் விளைவாக கடலுக்குள் பல்லாயிரமாண்டுகளாக தவத்தில் ஈடுபட்டிருந்த காகபுஜண்டர் தவம் கலைந்து சீற்றத்துடன் எழுந்தார்.


இதே போல்,போகர் தவம் கலைந்து எழும்போது,சென்னை மாநகரம் கடல் அலைகளில் கடுமையாகப் பாதிக்கப்படும்.தென்னிந்தியா இரண்டு தீவுகளாக மாறும்.கடற்கரையிலிருந்து 5 கி.மீ.தூரம் 3 கி.மீ.உயரே எழும்பி நகரங்களை நாற்றக்கோலமாக்கிவிடும்.700 கி.மீ.தூரத்திற்கு புயல் வீசும்.புயல் என்பது பூமிக்குள் தவம் செய்யும் சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் மேலே வரும்போது பூமிப்பிரளயம்,அவர்களின் சக்தியின் வேகங்களைக் கொண்டுவரும்.யானையின் தும்பிக்கை போல் மழை பெய்யும்.புதுப்புது வியாதிகள் மனிதனைத் தாக்கும்.


கங்கையும் காவிரியும் இணைந்து பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஓடும்.பல கிராமங்கள்,நகரங்கள் அழியும்;விஞ்ஞானம் தலைகீழாக மாறும்.இந்த மாற்றங்கள் 2002 லிருந்து 2010க்குள் நடந்துவிடும். அணைக்கட்டுக்கள் உடைந்து மின்சாரம் அறவே இருக்காது;இயற்கையின் சீற்றத்தால் மக்கள்தொகை குறைந்துவிடும்.


நெருப்பில் அழிவு ஏற்படும்போது கொங்கணவர் தோன்றுவார்!120 வருடம் வரை கொங்கணவர் ஆட்சி ஏற்படும்.நேர்மையும் சத்தியமும் பெருகும்.தெய்வீகம் பெருகும்.காகித நோட்டுக்கள் இருக்காது.தங்க நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துவிடும்.பக்கம் 92


பல மேலைநாடுகள் அனைத்தும் பொசுங்கிப்போய்விடும்.அசுர சக்திகளை கல்கத்தா காளி அப்படியே அடக்கி மாய்த்து தின்றுவிடுவாள்.பிறகு இந்த பிரபஞ்சத்திலிருக்கக்கூடிய பிரத்திங்கரா தேவியினுடைய சக்தியானது ஞானசித்தருடைய ஆத்ம சக்தியின் ஒளிப்பிழம்பாகத் தெரியும்.இதனை கமலமுனி நாடி சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளது.ஏனென்றால்,வெளியுலகுக்கு இப்போது காட்டக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.


தகவல்:சித்தர்களின் மகிமை,பக்கம்24,

பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்1


கி.பி.2002 முதல் கி.பி.2020க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப்போகிறார்கள்.பழனி மலையில் இருக்கும் நவபாஷாணமுருகன் சிலை சிதைந்துவிட்டது நம் அனைவருக்கும் தெரியும்.இந்த சிலையை போகர் நிறுவினார்.அவர் இதே போல் ஒன்பது நவபாஷாணசிலைகளை உருவாக்கி பழனிமலையிலும்,அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார்.அதில் ஒன்று பழனி மலையிலிருந்து சபரி மலைக்குச் செல்லும் ஒரு இடத்தில் இருக்கிறது.அதை ஒரு நாகம் காவல் காக்கிறது.கிபி 2006 முதல் கிபி 2020 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறொரு சித்தரால் பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவிவிடுவார்.அவ்வாறு நிறுவப்பட்டதும்,பாரதம் உலக வல்லரசு நாடாக மாறிவிடும்.


ஆதாரம்:பல ஜீவ நாடிகள்


தகவள்:சித்தர்களின் மகிமை,பக்கம்24,