RightClick

விலைவாசி உயர்வும் குடும்ப அமைப்பு சீர்குலைவும்

விலைவாசி உயர்வும் குடும்ப அமைப்பு சீர்குலைவும்


                     கி.பி.2005 ஆம் ஆண்டு வரையிலும் மாதம் ஒரு முறைதான் அரிசிவிலை,பலசரக்குப் பொருட்கள் விலை உயரும்.ஆன் லைன் வர்த்தகத்தில் அரிசி,பலசரக்குகளை நமது மத்திய அரசு அனுமதித்தது முதல்,தினம் தோறும் விலைவாசி உயர்ந்து வருகிறது.இதுபற்றி எந்த அரசியல் கட்சியும் மனப்பூர்வமான அக்கறை எடுப்பதில்லை;

                  நமது இந்தியா மிகப்பெரிய நாடு;மக்கள் தொகையோ உலகிலேயே இரண்டாவது இடம்;இளைஞர்களோ அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம்; தொழில்நுட்பப் படிப்புகளான ஐ.டி.ஐ., பி.ஈ., படித்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் பின்லாந்து நாட்டு மக்கள் தொகையை விட அதிகம்.

                    எல்லாம் சரி! ஆனால்,ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 110 கோடியில் சரிபாதி! அதாகப்பட்டது 55 கோடிகள்!!!

                 ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான வித்தியாசம் மிகவும் பெரிதாகிக் கொண்டே செல்லுகிறது.

                  தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுவோம்: எந்த ஒரு தொழிற்சாலை அது அன்னியநாட்டு ஆலையாக இருந்தாலும், இந்தியா நாட்டு தொழிற்சாலையாக இருந்தாலும் சரி!!! சென்னையிலும் அதைச் சுற்றிலுமுள்ள பகுதியிலும் மட்டுமே வந்து கொண்டே இருக்கிறது.இதனால்,திருச்சி முதல் சென்னை வரை வாழும் தமிழ் மக்கள் மாதச் சம்பளம் ரூ.40,000/-க்குக் குறையாமல் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

                திருச்சிக்கு தெற்கே கன்னியாகுமரி வரை சொல்லிக்கொள்ளும்படி தொழிற்சாலைகள் கடந்த 45 ஆண்டுகளாக வரவே யில்லை;மாதம் ரூ.10,000/-சம்பாதிப்பதே அதிசயமாக இருக்கிறது.

              திருச்சி முதல் சென்னை வரை வாழ்ந்து வரும் தமிழர்கள் மாதம் ரூ.10,000/-சம்பாதித்தால் அவரை ஏழையாகக் கருதும் மனநிலை வந்துவிட்டது;திருச்சி முதல் கன்னியாக்குமரி வரை மாதம் ரூ.10,000/- சம்பாதிப்பவரை ஓரளவு சம்பாதிக்கிறார் என்றே எண்ணுகின்றனர். இதனால்,ஏமாற்றிப்பிழைப்பதை தென் தமிழகத்து மக்களின் சுபாவமாக மாறிவருகிறது.தவிர, கட்டைப் பஞ்சாயத்து,அரசியல்வாதியின் பின்னால் இருந்து கொண்டு கூலிக்கு கொலை செய்வது முதலான தொழில்கள்தான் வளர்ந்து வருகின்றன.

           மறுபுறம் மாதம் ரூ.10,000/- சம்பாதிப்பதைக் கொண்டு ஒரு கணவன்,ஒரு மனைவி,ஒரு குழந்தையுடன் கூடிய குடும்பம் மட்டும் நிம்மதியாக வாழ முடியும்.எதிர்பாராத விபத்து,திருமணச் செய்முறை,குடும்ப இயற்கை மரணங்கள் வந்து விட்டால் இந்த சிறு குடும்பம் கடன் வாங்கியே ஆக வேண்டும்.இதுதான் தென் தமிழ்நாட்டின் நிலை.

                பி.ஈ., டாக்டர்,வக்கீல்,கேட்டரிங்,படிப்பு படித்து அதிலும் 70%க்கு மேல் மதிப்பெண்கள் வாங்கும் தென் தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் அனைவரும் குவிவது சென்னையில்தான்; இதில் வெறும் 7% பேர்கள் தான் பெங்களூரு முதலான பிற மாநிலங்களுக்கு இடம் பெயருகின்றனர்.

             பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்,கரஸ்பாண்டன் டில் பட்டம் படித்தவர்கள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்கில் 60%க்குக் கீழ் மார்க்கு வாங்கியவர்களின் நிலை அந்தோ பரிதாபம்.இதன் விளைவு சமுதாயத்திற்குள் மிகக் கேவலமான நிலையை உருவாக்கியுள்ளது.

               தனது ஒரே மகளை தனது தெருவிலேயே வாழ்ந்து வரும் வசதியான வீட்டுப்பையனுடன் காதலிக்க வைக்கும் அம்மாக்களை நான் தற்போது பார்த்து வருகிறேன்;

           அதே போல்,தனது மகன்களை வசதியான வீட்டு கன்னிப்பெண்களைக் காதலிக்க வைக்கும் அம்மா/அப்பா/அக்காக்களையும் நான் நேரில் பார்க்கிறேன்.இப்படிச் செய்வது வெளியில் கண்டுபிடிக்க முடியாது.இந்த மனநிலை இன்று தமிழ்நாடு முழுவதுமே பரவி விட்டது.என்ன செய்ய வசதியாக வாழ இதுவும் ஒரு வழிதான்!!

            ஆண்களில் 96% பேர்கள் குடிக்கு அடிமையாகிவிட்டனர். இதனால்,அந்த ஆண்களின் குடும்பங்கள் சிதையத்துவங்கியிருக்கின்றன. ஆமாம்! எனக்குத் தெரிந்தே பல குடும்பப் பெண்கள் தமது குழந்தைகளைக் காக்கவும்,படிக்க வைக்கவும்,மூன்றுவேளை வேண்டாம் ஒரு வேளை நிம்மதியாகச் சாப்பிடவும் விபச்சாரத்திற்கு இறங்கிவிட்டனர்;பலர் தமது பருவ மகள்களையும் இதற்குச் சம்மதிக்கவைத்து,ஒஹோவென சம்பாதிக்கின்றனர்.

               போன செப்டம்பர் 2009 ஆம் மாதத்தில் வெளிவந்த ஜீனியர் விகடன் இதழ் ஒன்றில் வாடகை மனைவி என்ற நிஜத்தொடரைப் படித்தால் நான் சொல்வதன் யதார்த்தம் புரியும்.திருச்சி மாநகரில் 25 முதல் 45 வயது வரையிலான இல்லத்தரசிகள் தமது கணவன்மார்களின் முழுச்சம்மதத்தோடு மாதம் ஒரு ஆணுக்கு தன்னையே வாடகைக்கு விடுகின்றனர்.இது ஒரு கார்பரேட் தொழிலாக வளர்ந்து வருகிறது.

         மறுபுறம் எய்ட்ஸ் நோயால் மரணமடையும் எண்ணிக்கை லட்சங்களை தொடத்துவங்கியுள்ளது.இது பற்றி யாருக்கும் கவலையில்லை;

            அரசியல் வாதிகள் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். விபச்சாரத்தை போலீஸே வளர்க்கும் நிலையை தடுக்க வேண்டும்.விலைவாசி உயர்வை தடுக்க பலவிதமான கூட்டு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.இவ்வளவும் செய்தால் சில வருடங்களில் அமைதியான சிறந்த தமிழகம் உருவாகும்.

                 உலக நாடுகளெல்லாம் இந்தியாவின் குடும்ப முறையைப் பார்த்து அதிசயப்படுகின்றன. அதனுள் பொதிந்திருக்கும் விஞ்ஞான, பொருளாதார, சமுதாய நலன்களை ஆராய்ந்து அதன்படி தமது நாட்டை மாற்றிட ஆரம்பித்திருக்கின்றன.அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வஷ்னேகர் சொல்லியிருக்கிறார்:

            எனது மகள்களுக்கு தற்போது பருவவயது (டீன் ஏஜ்) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அவர்களை திருமணமாகும் வரை டேட்டிங் செல்லக்கூடாது என போதித்து வளர்த்து வருகிறேன்.அப்படி இருந்தால் தான் எனது ஒவ்வொரு மகளும் தனது கணவனோடு ஒழுக்கமாக வாழமுடியும்:

ஆதாரம் போன வாரம் தினமலர் வாரமலர்.

             ஆக, அமெரிக்கச் சதியாலும்,நமது அசட்டையாலும்,லஞ்ச லாவண்யத்தில் மூழ்கினாலும் குடும்பம் என்ற அமைப்பை பாதுகாக்க அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், ஆன்மீக அமைப்புக்கள், அறக்கட்டளைகள் இப்போதிருந்தே முயற்சிக்க வேண்டும்.ப்ளீஸ் இதை ஒரு தேசிய இயக்கமாக மாற்றிட வேண்டுவது அவசியம்;அவசரம்!!!