RightClick

குருசாமி சமாதிகோவில்,ராஜபாளையம்

கடந்த 300 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரின் மையப்பகுதியான அம்பலபுளிபஜாரில் அமைந்துள்ளது குருசாமி சமாது எனப்படும் குருசாமி சமாதி கோவில்.சாலியர் எனப்படும் நெசவுத்தொழிலை குலத் தொழிலாகக் கொண்டிருக்கும் பிற்பட்ட ஜாதிமக்களின் குல தெய்வமாக குருசாமி தாத்தா இங்கே ஜீவ சமாதி ஆகியிருக்கிறார்.சுமார் 1000 சாலிய குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருக்கிறார்.ஆனி மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று குருசாமி ஜீவசமாதி ஆனார்.

ராஜபாளையம்,சத்திரப்பட்டி,ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வாழும் சாலியர்களில் குரு என்ற பெயரை முதலிலோ அல்லது கடைசியிலோ தாங்கி இருப்பவர்கள் பெரும்பாலும் குருசாமி தாத்தாவை குல தெய்வமாகக் கொண்டவர்கள்.
உதாரணம்:ரமேஷ்குரு,குருதேவ்,குருநந்தினி,பழனிகுரு,குரு மகேஸ்வரன்,குருசாமி

ஒவ்வொரு தமிழ்மாதமும் கார்த்திகை அன்று இந்தக் கோவிலில் அன்னதானம் நடைபெறுகிறது.இந்தக் கோவிலின் நிர்வாகம் சாலியர் சமுதாயத்திற்குச் சொந்தமானது ஆகும்.

இந்த குருசாமி சமாதிக்கு ஒரு முறை வந்து வழிபட்டாலே மன நிம்மதி, செல்வ வளம் பெருகுகிறது என்பது அனுபவ உண்மை.


உங்கள் பெயரை செவ்வாய்க்கிரகத்துக்கு இலவசமாகக் கொண்டு செல்ல:நன்றி விண்மணி.வேர்டுபிரஸ்.காம்

செவ்வாய் கிரகத்திற்கு அடுத்த ஆண்டு 2011 அக்டோபர் மாதம் செல்லவிருக்கும் ரோபோட் உங்கள் பெயரையும் சுமந்து செல்லும் எப்படி நம்


பெயரை செவ்வாய் கிரகத்திற்கு இலவசமாக அனுப்பலாம், பங்கு


பெற்றதற்கான சான்றிதழை எப்படிப் பெறலாம் என்பதைப் பற்றித்தான்


இந்தப்பதிவு.


நாசாவிடம் இருந்து அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்தைப்பற்றி


ஆராய்ச்சி செய்வதற்காக புதிய வகை ரோபோட் ஒன்று தயாராகி


வருகிறது. இதில் இருக்கும் மைக்ரோ சிப் மூலம் நம் பெயரை


பதிவு செய்து அதை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு சேர்கிறது.


நாசாவின் இணையதளத்திற்கு சென்று நாம் நம் பெயர், நாடு


மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் போன்றவை கொடுத்தால்


போதும் உடனடியாக இலவசமாக நம் பெயரை பதிவு செய்து


நமக்கு இதில் பங்கு பெற்றதற்கான சான்றிதழையும், சான்றிதழ்


எண்ணையும் கொடுத்து விடுகின்றனர். அடுத்த ஆண்டு செவ்வாய்


கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக செல்லும் நவீன ரோபோட்


நம் பெயரையும் சுமந்து செல்லும். பல கோடி செலவு செய்து


தயாராகும் ரோபோட் நம் பெயரை செவ்வாய் கிரகம் வரை


கொண்டு செல்லும். வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்ற


ஆசை உள்ள் அனைவரும் உங்கள் பெயரை மறக்காமல் பதிவு


செய்யுங்கள். பதிவு செய்ய வேண்டிய முகவரி :


http://marsparticipate.jpl.nasa.gov/msl/participate/sendyourname/நமபுங்கள் நாராயணன்:ஈ.எஸ்.பி.+ ஜோதிடர்

நம்புங்கள் நாராயணன் ! - எஸ்.ரஜத்

,ராமநாதபுரத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு, அவரது சொந்த ரைஸ் மில்லில் இயந்திரத்தை ரிப்பேர் செய்யும் போது, சுவரில் தலை மோதி பலத்த அடிபட்டது. மூன்று நாட்கள் நினைவின்றி, கிட்டத்தட்ட கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டார்.


மருத்துவமனையில் இவரது படுக்கை அருகே, பேசிக் கொண்டிருந்த டாக்டர், "நாளைக்கு இவருக்கு தலையில் ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்...' என்று சொன்னார். அவர்கள் பேசுவதைக் கேட்ட அந்த இளைஞர், "நாளைக்கு எனக்கு ஆபரேஷன் நடக்காது...' என்றார். "ஏன்?' என்று கேட்டதற்கு, "இன்று இரவு இரண்டு மணிக்கு நீங்கள் இறந்து விடுவீர்கள்!' என்றார். ஏதோ உளறுகிறார் என்று சட்டை செய்யாமல் டாக்டர் சென்று விட்டார்.


ஆனால், இளைஞர் குறிப்பிட்டபடி, இரவு இரண்டு மணிக்கு அந்த டாக்டர் இறந்துவிட்டார். கோமா நிலையிலிருந்து உடல் குணமான அந்த இளைஞருக்கு, இ.எஸ்.பி., அதாவது, எக்ஸ்ட்ரா சென்சரி பர்செப்ஷன் என்ற அதிசய சக்தி வந்தது.


அந்த இளைஞர் தான் பின்னர் ஜோதிடம், நியூமராலஜி இரண்டிலும் சிறப்பு பெற்று, 1971 முதல் 2010ம் ஆண்டு வரை புகழ் பெற்ற எண் கணித மேதையாக, பல லட்சம் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தினராலும் நன்கு அறியப்பட்ட, "நம்புங்கள் நாராயணன்' ஆக சிறப்பாக வாழ்ந்தவர்.


கடந்த ஜூன் 8ம் தேதி காலமான நம்புங்கள் நாராயணன் பற்றி, அவரது மனைவி நாராயணியும், அவரது மூன்று மகள்களில் இளையவரான காயத்ரியும் நினைவு கூர்கின்றனர்...


இவரது தந்தை என்.ராமகிருஷ்ணய்யர், ராமநாதபுரம் சுவார்ட்ஸ் ஹைஸ்கூலில் கணித ஆசிரியர். டாக்டர் அப்துல் கலாம் எழுதிய, "அக்னி சிறகுகள்' புத்தகத்தில், ராமகிருஷ்ணய்யரின் கணித திறமை பற்றியும், அவர் பயிற்றுவிக்கும் விதம், கண்டிப்பு போன்றவைகளைப் பற்றி பாராட்டி எழுதி, அவர் புகைப்படத்தையும் வெளியிட்டு, தன் ஆசிரியரை கவுரவித் திருக்கிறார் அப்துல் கலாம்.


படிப்பு முடித்ததும், சென்ட்ரல் மரைன் பிஷெரிஸ் இன்ஸ்டிடியூட் என்ற மத்திய அரசு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, தன் 58 வயது வரை தொடர்ந்து அங்கு பணியாற்றி, அங்கேயே கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார் நம்புங்கள் நாராயணன். நிறுவனத்திடமிருந்து முறைப்படி அனுமதி பெற்று மும்பை, சென்னை உட்பட பல நகரங்களில் அப்போதே ஜோசியம் பார்த்து வந்தார்.


கடந்த 1990ல் ஓய்வுபெற்ற பிறகு, ரொம்ப ரொம்ப பிசி ஆகிவிட்டார்.


நிறுவனங்களுக்குப் பெயர் வைக்கவோ, பெயரை மாற்றவோ பல தொழிலதிபர்கள் இவரை கன்சல்ட் செய்வர். ஜோதிடம், நியூமராலஜி இரண்டின் அடிப்படையில் பெயர் குறித்துக் கொடுப்பார். நியூக்ளியஸ் சாப்ட்வேர் என்ற நிறுவனம், "போலாரிஸ்' என்ற பெயர் பெற்று, வெற்றிகரமான நிறுவனமானது. அதன் மானேஜங் டைரக்டர் அருண் ஜெயின், இவரை அடிக்கடி கன்சல்ட் செய்வார். விவேக் அண்ட் கோவிற்கு புதிய எம்பளம் (லோகோ) இவர் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது. பெஸ்ட் ஹாஸ்பிடல், தங்கபாலுவின் மெகா, "டிவி' போன்று, பல நிறுவனங்களுக்கு பெயர் சூட்டியுள்ளார்.


தனி நபர்களுக்கு பெயர் மாற்றம் செய்ய இவர் சொல்வதில்லை. வீட்டில் பெற்றோர், பெரியவர்கள் வைத்த பெயரை மாற்றாமல், அந்தப் பெயரிலே ஸ்பெல்லிங், எழுத்து சேர்த்து, குறைத்து வைக்க ஆலோசனை சொல்வார். 240 நாட்களுக்கு புதுப்பெயரை எழுதிப் பார்க்கச் சொல்லுவார்.


கடந்த நாற்பது வருடங்களாக இவர் ஈடுபட்ட ஹாபி, தபால் தலைகளை சேகரிப்பது. வெளிநாட்டு நாணயங்கள், கரன்சி நோட்டுகளை சேகரிப்பது.


தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., மந்திரி சபை கவிழ்வது உறுதி என்று பிப்., 7, 1980ல் நடைபெற்ற லயன்ஸ் கிளப் கூட்டத்தில், நாராயணன் கூறினார். அதை அலை ஓசை நாளிதழ் வெளியிட்டது. பிப்., 17ம் தேதி, எம்.ஜி.ஆர்., மந்திரி சபை கலைக்கப் பட்டது.


பின்னர், நாராயணனை அழைத்து, "எப்படி சொன்னீர்கள்?' என்று விளக்கம் கேட்டார் எம்.ஜி.ஆர்., எந்த அடிப்படையில் தான் அந்த முடிவுக்கு வந்தேன் என்பதை விளக்கமாக சொன்னதும், எம்.ஜி.ஆர்., பாராட்டி, "இனி நாராயணன் சொல்லுவதை நம்பலாம்!' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.


பிறகு, "தாய்' பத்திரிகையில் வாரா வாரம் ஜோதிட பலன்களை எழுத ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர்., பாராட்டியதை நினைவில் கொண்டு ஆசிரியர் வலம்புரி ஜான், "நம்புங்கள் நாராயணன் எழுதும் வார பலன்!' என்று வெளியிட்டார். அப்போதிலிருந்து இவரது பெயர், "நம்புங்கள் நாராயணன்' என்றே பிரபலமானது. பத்து வருடங்கள் வாரா வாரம் வந்தது.


"முக்கிய அரசியல் தலைவர்கள், அவர்கள் பதவி பற்றியெல்லாம் இவர் பலன்கள், ஆரூடம் கூறும் போது, எனக்கு ரொம்ப பயமாக இருக்கும்; ஒரே டென்ஷன், கவலை. ஆனால், இவருக்கோ சற்றும் பதட்டம் இருக்காது. "நீ ஏம்மா கவலைப்படறே... நான் சொல்வது எல்லாம் கண்டிப்பாக நடக்கும்; சரியாக இருக்கும்...' என்று தைரியமாக சொல்வார்!' என்கிறார் அவரது மனைவி நாராயணி.


இந்திய அரசியல் மற்றும் உலக அரசியலில் பல முக்கிய நிகழ்வுகளை அவை நடப்பதற்கு முன்பாகவே, இவர் கணித்து சரியாக சொல்லியிருக்கிறார். அவற்றை பிரபல பத்திரிகை கள், "டிவி' சேனல்கள் வெளியிட்டுள்ளன.


* அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் தன் பதவியை ராஜினாமா செய்வார் என்று ஜூலை 17, 1974ல் இவர் சொன்னார்; ஆக., 8, 1974ல் நிக்சன் ராஜினாமா செய்தார்.


* ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதி யாகவும், மார்க்கரெட் தாட்சர் இங்கிலாந்து பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று


மே 31, 1976ல் கன்னிமாரா ஓட்டலில், ரோட்டரி கிளப்பில் பேசினார்; அப்படியே நடந்தது. மார்க்கரெட் தாட்சர் இவரை பாராட்டி கடிதம் எழுதினார்.


* முன்பு 1977ல் நெருக்கடி நிலைமை நடந்து கொண்டிருந்த சமயம், ஜனவரி 26 முதல் மார்ச் 27ம் தேதிக்குள் பொதுத் தேர்தல் நடத்தி, இந்திரா காந்தி தோல்வி அடைவார் என்று கூறினார்; அப்படியே நடந்தது.


* கடந்த 2001 தேர்தலில், அ.தி.மு.க., 196 சீட் வாங்கி, வெற்றி பெறும் என்று ஜெயா, "டிவி'யில் இவர் சொன்னது அப்படியே பலித்தது.


* விரைவில் பெரிய பூகம்பம் வரும், நிறைய உயிர்ச்சேதம் ஏற்படும் என்று ஜன., 8, 1980ல்


தி மெயில் நாளிதழில் எழுதினார். இவர் கூறி, நான்கு தினங்களில் அல்ஜீரியாவில் ஏற்பட்ட பூகம் பத்தில் இருபதாயிரம் பேர் மரணம் என்று இந்து நாளிதழ், தலைப்புச் செய்தி வெளியிட்டது.


*அமெரிக்கா, ஈராக் இடையே 2002ல் போர் மூளும் என்று கூறினார்; அதன்படியே, போர் ஆரம்பமானது.


*கடந்த 2004ம் ஆண்டு சுனாமி வருவதை, ஜெயா, "டிவி'யில் வருட ஆரம்பத்திலேயே இவர் குறிப்பிட்டுச் சொன்னார்.


ஜெயா, "டிவி'யில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக எண் கணித பலன்களும், விண் வெளியில் நடக்கும் அதிசயங்கள் பற்றியும் இவர் தொடர்ந்து கூறியிருக்கிறார்.


எம்.ஜி.ஆரின் அழைப்பை அடுத்து, இரண்டு முறை ராமாவரத் தோட்டத்திற்குச் சென்று, எம்.ஜி.ஆரை சந்தித்து பேசியிருக்கிறார். அதே போல, போயஸ் கார்டன் வீட்டிற்கும் வரச்சொல்லி வந்த அழைப்பை ஏற்று, ஜெயலலிதாவை சந்தித்து பேசியிருக்கிறார்.


இவர் வீட்டிற்கு வந்து சாப்பிடும் அளவு நெருக்கமானவர்கள் சுப்ரமணிய சாமி, ஜெமினி கணேசன் போன்றவர்கள். தொழிலதிபர் டி.டி.வாசு, ஜேசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, சரத்குமார், தங்கபாலு, அரங்கநாயகம் உள்பட பலர் இவரிடம் ஆலோசனை கேட்பர்.


"நீங்க மந்திரி ஆவீங்க...' என்று, தங்கபாலு விடம் சொன்னார். மந்திரி ஆனதும், இவரை வீட்டில் வந்து சந்தித்து, வாழ்த்து பெற்றார்.


சென்னை விமான நிலையத்தில், பயணத்திற்கு சென்றிருந்த இவர், அப்போது புறப்படவிருந்த மற்றொரு சஹாரா விமானத்தைப் பார்த்து, "அந்த ப்ளைட் போகாது; அப்படியே போனாலும் திரும்பி இங்கேயே வந்துவிடும்...' என்று விமான போக்குவரத்துத்துறை நண்பரிடம் சொன்னார். அதே போல குறிப்பிட்ட சஹாரா விமானம், கிளம்பிய சில நிமிடங்களில் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்துவிட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சஹாரா ஏர்வேசின் அதிபர் சுபர்தோ ராய், இவருக்கு நல்ல நண்பராகி விட்டார்.


சிவசேனா தலைவர் பால் தாக்கரே, இவரை மும்பையில் தன் வீட்டுக்கு அழைத்து ஆலோசனை பெற்றிருக்கிறார். மத்திய அமைச்சர் சரத் பவாரும் இவரை சந்தித்து ஆலோசனை பெற்றிருக்கிறார்.


கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, தன் திருமணம் பற்றி இவரிடம் ஆலோசனை பெற்றார்.


கடந்த 1980ல் துபாயைச் சேர்ந்த ஒரு பணக்கார ஷேக், தன் ஏற்பாட்டில், இவரை துபாய்க்கு நான்கு நாட்கள் தன் பிரத்யேக விருந்தாளியாக வரவழைத்து, தன் எதிர்காலம் பற்றி, ஆலோசனை பெற்றார்.


பல முஸ்லிம் நண்பர்களுக்கு இவர் ஜாதகம் பார்த்து, பலன்கள் சொல்லியிருக்கிறார். பிறந்த தேதி, இடம் இவற்றை வைத்து, ஜாதகம் கணித்து கொடுத்திருக்கிறார்.


தமிழகத்தில் உள்ள பல பிரபல ஜோதிடர்களின் குடும்பத்தினர், தங்கள் எதிர்காலம், பிள்ளை, பெண்களுக்கு திருமணம் பற்றியெல்லாம் இவரை சந்தித்து பேசி, தீர்வு பெற்றுள்ளனர்.


நம்புங்கள் நாராயணன் - நாராயணி தம்பதியினருக்கு மூன்று பெண்கள். சாந்தி கண்ணன், தி இந்துவில் ஸ்பெஷல் கரஸ்பான்டென்ட்; சித்ரா, காயத்ரி இருவரும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். மூவருமே ஐ.டி., துறை. இவர்கள் மூவரும் சேர்ந்து, தங்கள் தந்தையின் வரலாறு, அவர் சொன்ன கணிப்புகள் ஆகியவற்றை சுவாரசியமான புத்தகமாக வெளியிடும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.


பிரபல இதய நிபுணர் சாலமன் விக்டர், இவருடைய நெருங்கிய நண்பர். இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறினார் நாராயணன். அதே போல, மூன்று ஆண்டுகள் கழித்து, திருமணமான பதிமூன்றாவது ஆண்டில் அவருக்கு குழந்தை பிறந்தது.


ராஜிவ் - சோனியா மகள் பிரியங்கா, பிரதமராக வருவார் என்று கூறியுள்ளார்; பொறுத்திருந்து பார்ப்போம்.


அவர் இறந்து இரண்டு மாதங்களாகியும் இன்றும் தினமும் பலர் அவரைக் கேட்டு போன் செய்கின்றனர். "இரண்டு, மூன்று மாதம் கழித்து வாங்கன்னு சொன்னாரே...' என்று வருத்தப்படுகின்றனர்.


இவரிடம் வருபவர்களுக்கு எதிர்கால பலன்களுடன், தன்னம்பிக்கை, தைரியம், மனதில் தெளிவு போன்றவைகளை இன்முகத்தோடு அளித்ததாலும், ஜோவியலாக பேசுவதில் வல்லுனராக இருந்தது அவருடைய தனிச் சிறப்பு.சிலிர்த்தெழும் இந்தியா:சம்பவம் 2

ராணுவ அதிகாரிக்கு விசா தர மறுத்த சீனாவுக்கு இந்தியா பதிலடி
புதுடில்லி : இந்திய ராணுவத்தின் வட பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ஜாஸ்வாலுக்கு விசா வழங்க, சீன அரசு மறுத்துவிட்டது. அவர் காஷ்மீரில் சர்ச்சைக்குரிய பகுதியில் பணியாற்றுவதால், தங்கள் நாட்டிற்கு வரக்கூடாது என தெரிவித்துள்ளது. சீன அரசின் இந்தச் செயல், இந்திய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக, சீன அதிகாரிகள் இருவரின் இந்திய விஜயத்திற்கு அனுமதி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.


கடந்த ஜனவரி மாதம் இந்திய- சீன ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, ராணுவ ரீதியான பரிமாற்றங்களின் அடிப்படையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பரஸ்பரம் மற்ற நாட்டிற்குச் செல்வது என, சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய ராணுவத்தின் வட பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ஜாஸ்வாலை சீனாவுக்கு அனுப்ப, ராணுவத் துறை முடிவு செய்தது. ஆனால், அவருக்கு விசா வழங்க சீன அரசு மறுத்துவிட்டது. "பதட்டம் நிறைந்த, சர்ச்சைக்குரிய ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஜாஸ்வால் வருவதால், அவருக்கு வழக்கமான விசா வழங்க முடியாது. காஷ்மீரில் இருந்து வருவோருக்கு மாறுபட்ட விசா தான் வழங்க வேண்டும்' என, தெரிவித்துள் ளது. மேலும், ஜாஸ்வாலுக்குப் பதிலாக வேறு ராணுவ அதிகாரியை அனுப்புங்கள் என்றும் கூறியுள்ளது.


சீன அரசின் இந்த மறுப்பால், ஜாஸ்வால் அங்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. சீன அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ள இந்திய அதிகாரிகள், சீன ராணுவ அதிகாரிகள் இருவரின் இந்திய விஜயத்திற்கு அனுமதி தருவதை நிறுத்தி வைத்துள்ளனர். தேசிய ராணுவக் கல்லூரியில் சில பயிற்சிகளை மேற்கொள்வதற்காக அவர்கள் வருவதாக இருந்தது.


இந்த விவகாரம் பற்றி இந்திய வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறுகையில், ""சில காரணங்களால் ஜாஸ்வால் சீன பயணம் மேற்கொள்ள முடியவில்லை; அது பற்றி விரிவாக சொல்ல முடியாது. இருந்தாலும், இந்த விஷயத்தில் இந்தியாவின் கவலையை சீன அரசு உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த விவகாரம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன,'' என்றார். ஜெனரல் ஜாஸ்வால் இது பற்றி பேசுகையில், ""எனது சீன பயணம் தற்போதைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது; அதற்கான காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை,'' என்றார்.


அந்தோணி பதில்: இந்நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியதாவது: ராணுவ அதிகாரியின் சீன விஜயத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அந்நாட்டுடனான ராணுவ உறவுகளை துண்டித்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. சீனாவுடன் நாம் மிக நெருங்கிய வகையில் செயல்பட்டு வருகிறோம். இருந்தாலும், அவ்வப்போது சில பிரச்னைகள் தோன்றுகின்றன. இந்த குறுகிய கால பிரச்னைகள் எல்லாம் சீனாவுடனான ஒட்டு மொத்த அணுகுமுறையில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அந்தோணி கூறினார். இந்திய ராணுவ அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்ததை, அரசியல் கட்சிகள் பல கடுமையாக விமர்சித்துள்ளன. "இது இந்தியாவுக்கு அவமானம். இந்தப் பிரச்னையில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசின் அதிருப்தியை சீனாவிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளன.இந்துக்களின் கணிதத்திறமையை மதிப்பிட முடியாமல் திணறும் மேல்நாட்டினர்:நன்றி தினமலர் 26.8.2010

பெரிய எண்களை பயன்படுத்திய இந்தியர்கள்: குழம்பும் வெளிநாட்டவர்கள்ஐதராபாத் : பண்டைய இந்தியாவில் மிகப்பெரிய எண்களை இந்தியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த எண்களை அவர்கள் எப்படி, எதற்காக பயன்படுத்தினர் என்பது குறித்து, வெளிநாட்டு கணித வல்லுனர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.சமீபத்தில், ஆந்திர பிரதேச தலைநகர் ஐதராபாத்தில், சர்வதேச கணித வல்லுனர்கள் மாநாடு நடந்தது. அதில் பல்வேறு வெளிநாட்டுக் கணித வல்லுனர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் நியூயார்க் நகர யூனியன் கல்லூரியில், கணித வரலாற்றுத் துறை அறிஞராக பணியாற்றும் கிம் ப்ளோப்கெர் என்பவரும் அதில் கலந்து கொண்டார்.இவர், சமஸ்கிருத நூல்கள், பவுத்தம் மற்றும் ஜைன மதத்தைச் சார்ந்த நூல்களில் உள்ள எண்ணியல் சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இவர், அம்மாநாட்டில் பண்டைய இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட எண்கள் சம்பந்தமான ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.அதில் இவர் கூறியிருப்பதாவது:கி.மு., 1400ல் இயற்றப்பட்டிருப்பதாக வரலாற்று அறிஞர்களால் கருதப்படும் யஜுர் வேதத்தில், 10 மடங்கிலிருந்து ஒரு லட்சம் கோடி எனப்படும் டிரில்லியன் வரையிலான எண்களை பற்றிய குறிப்பு உள்ளது. இந்த மிகப்பெரிய எண்கள், வேத கால வாழ்க்கை நடைமுறையில் எதற்கும் பயன்பட்டிருக்க வாய்ப்பில்லை.அதேபோல், மகாபாரதத்தில், பிரபஞ்ச காலமாக கணக்கிடப்பட்ட 400 கோடி ஆண்டுகள், 360 ஆண்டு கணக்காக பகுக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற மிகப்பெரிய எண்கள், பவுத்தம் மற்றும் ஜைன மத நூல்களிலும் காணப்படுகின்றன.கி.பி., 1650ல் ஜெர்மனி நாட்டு கணித வல்லுனர் ஜார்ஜ் கேன்டர் என்பவர், "இன்பினிடி' எனப்படும் "முடிவிலி' எண்ணைக் கண்டறிந்தார். ஆனால், பல முந்தைய பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஜைன மத நூல்களில் "முடிவிலி' பற்றிக் கூறப்பட்டுள்ளது.கி.பி., 1ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பவுத்த மத நூலில் ஆற்றின் கரையிலுள்ள நுண் மணல்களோடு எண்கள் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தைச் சேர்ந்த ஜைன மத நூல் ஒன்றில், இரண்டின் 588 மடங்காக ஒரு காலக் கணக்கு கூறப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா ஆய்வு மையத்தின் கணித வல்லுனர் ஸ்ரீகிருஷ்ண தானி கூறுகையில், "இத்தகைய எண்கள், உலகின் வேறு எந்த கலாசாரத்திலும் பயன்படுத்தப்பட்டதாக ஆதாரம் இல்லை. இயற்கையை உன்னிப்பாக ஆராயும் சில முயற்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை சில சமயம் குழப்பத்தை உருவாக்கியுள்ளன' என்றார்.அம்மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்த, பெங்களூரிலுள்ள நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவகர்லால் நேரு மையத்தின் மூத்த விஞ்ஞானி ரொட்டம் நரசிம்மா கூறுகையில், "மிகப்பெரிய எண்களும், மிகச்சிறிய எண்களும் இயற்கையில் உள்ள நுணுக்கமான முரண்பாடுகளோடு தொடர்புடையவை. பொருட்கள் எவ்வளவு பெரியவை, எவ்வளவு சிறியவை என்று காட்ட அந்த எண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்' என்றார்.

இந்திய நீர்வளத்தை கெடுத்த அமெரிக்கா/ஐரோப்பா;உபயம் சீமைக்கருவேலமரம்

மரங்களை வெட்டுங்கள்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியது நிஜம்.

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

அறியாமைநமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வுநமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!

நேரடி ஜோதிடப் பயிற்சி

இந்துதர்மத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்று ஜோதிடக் கலையாகும்.


வேதத்தின் கண் எனப்போற்றப்படும் இந்த ஜோதிடக்கலையைக் கற்றவர்கள் ,தனது ஜோதிடத்திறமையால் எதிர்காலத்தையும் ஊடுருவிப் பார்க்க முடியும்.இதனால்,தன்னையும்,தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் மாற்றியமைக்க முடியும் என்பது உண்மை.


குரு முகமாக(மூலமாக) விரைவாகவும்,தெளிவாகவும்,முழுமையாகவும் ஒருவர் ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியும்.


ஒரு நாளுக்கு இரண்டு மணிநேரம் வீதம் வெறும் 30 நாட்களில் அல்லது 60 நாட்களில் ஜோதிடக்கலையைக் கற்று நீங்களும் ஜோதிடர் ஆகமுடியும்.


அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், 30 / 60 நாட்கள் வரை ராஜபாளையம் வந்து தங்கிட வேண்டியதுதான்.அதற்கு உங்களைத் தயார் படுத்திக்கொண்டு,எமக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.


ஜோதிடக்கலையை பயில கட்டணம் உண்டு.ராஜபாளையத்தில் தங்கிட ஏற்பாடு செய்து தரப்படும்.


பெண்களுக்கு தனி வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன;


ஜோதிடக்கலையை பயில குறைந்த பட்சக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.


ஓரளவாவது ஞாபக சக்தி இருப்பவர்களால் விரைவாக தொழில் முறை ஜோதிடர் ஆக முடியும்.


எனவே, ஜோதிடம் நேரடியாகக் கற்றுக்கொள்ள விரும்புவோர் தமது பிறந்த ஜாதகத்தை மின் அஞ்சலில் அனுப்பிவைக்கவும்.


(குறிப்பு:எத்தனன மாணவ மாணவிகள் வந்தாலும்,ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் தனிக்கவனம் செலுத்துவது எமது பொறுப்பு)


எனது ஆன்மீகக்கடல் வாசகர்களை ஜோதிடம் கற்றுக்கொள்ள நான் அன்போடு அழைக்கிறேன்.
இப்படிக்கு
கை.வீரமுனி
ஆன்மீகக்கடல்

விலைவாசி உயர்வும் குடும்ப அமைப்பு சீர்குலைவும்

விலைவாசி உயர்வும் குடும்ப அமைப்பு சீர்குலைவும்


                     கி.பி.2005 ஆம் ஆண்டு வரையிலும் மாதம் ஒரு முறைதான் அரிசிவிலை,பலசரக்குப் பொருட்கள் விலை உயரும்.ஆன் லைன் வர்த்தகத்தில் அரிசி,பலசரக்குகளை நமது மத்திய அரசு அனுமதித்தது முதல்,தினம் தோறும் விலைவாசி உயர்ந்து வருகிறது.இதுபற்றி எந்த அரசியல் கட்சியும் மனப்பூர்வமான அக்கறை எடுப்பதில்லை;

                  நமது இந்தியா மிகப்பெரிய நாடு;மக்கள் தொகையோ உலகிலேயே இரண்டாவது இடம்;இளைஞர்களோ அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம்; தொழில்நுட்பப் படிப்புகளான ஐ.டி.ஐ., பி.ஈ., படித்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் பின்லாந்து நாட்டு மக்கள் தொகையை விட அதிகம்.

                    எல்லாம் சரி! ஆனால்,ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 110 கோடியில் சரிபாதி! அதாகப்பட்டது 55 கோடிகள்!!!

                 ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான வித்தியாசம் மிகவும் பெரிதாகிக் கொண்டே செல்லுகிறது.

                  தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுவோம்: எந்த ஒரு தொழிற்சாலை அது அன்னியநாட்டு ஆலையாக இருந்தாலும், இந்தியா நாட்டு தொழிற்சாலையாக இருந்தாலும் சரி!!! சென்னையிலும் அதைச் சுற்றிலுமுள்ள பகுதியிலும் மட்டுமே வந்து கொண்டே இருக்கிறது.இதனால்,திருச்சி முதல் சென்னை வரை வாழும் தமிழ் மக்கள் மாதச் சம்பளம் ரூ.40,000/-க்குக் குறையாமல் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

                திருச்சிக்கு தெற்கே கன்னியாகுமரி வரை சொல்லிக்கொள்ளும்படி தொழிற்சாலைகள் கடந்த 45 ஆண்டுகளாக வரவே யில்லை;மாதம் ரூ.10,000/-சம்பாதிப்பதே அதிசயமாக இருக்கிறது.

              திருச்சி முதல் சென்னை வரை வாழ்ந்து வரும் தமிழர்கள் மாதம் ரூ.10,000/-சம்பாதித்தால் அவரை ஏழையாகக் கருதும் மனநிலை வந்துவிட்டது;திருச்சி முதல் கன்னியாக்குமரி வரை மாதம் ரூ.10,000/- சம்பாதிப்பவரை ஓரளவு சம்பாதிக்கிறார் என்றே எண்ணுகின்றனர். இதனால்,ஏமாற்றிப்பிழைப்பதை தென் தமிழகத்து மக்களின் சுபாவமாக மாறிவருகிறது.தவிர, கட்டைப் பஞ்சாயத்து,அரசியல்வாதியின் பின்னால் இருந்து கொண்டு கூலிக்கு கொலை செய்வது முதலான தொழில்கள்தான் வளர்ந்து வருகின்றன.

           மறுபுறம் மாதம் ரூ.10,000/- சம்பாதிப்பதைக் கொண்டு ஒரு கணவன்,ஒரு மனைவி,ஒரு குழந்தையுடன் கூடிய குடும்பம் மட்டும் நிம்மதியாக வாழ முடியும்.எதிர்பாராத விபத்து,திருமணச் செய்முறை,குடும்ப இயற்கை மரணங்கள் வந்து விட்டால் இந்த சிறு குடும்பம் கடன் வாங்கியே ஆக வேண்டும்.இதுதான் தென் தமிழ்நாட்டின் நிலை.

                பி.ஈ., டாக்டர்,வக்கீல்,கேட்டரிங்,படிப்பு படித்து அதிலும் 70%க்கு மேல் மதிப்பெண்கள் வாங்கும் தென் தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் அனைவரும் குவிவது சென்னையில்தான்; இதில் வெறும் 7% பேர்கள் தான் பெங்களூரு முதலான பிற மாநிலங்களுக்கு இடம் பெயருகின்றனர்.

             பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்,கரஸ்பாண்டன் டில் பட்டம் படித்தவர்கள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்கில் 60%க்குக் கீழ் மார்க்கு வாங்கியவர்களின் நிலை அந்தோ பரிதாபம்.இதன் விளைவு சமுதாயத்திற்குள் மிகக் கேவலமான நிலையை உருவாக்கியுள்ளது.

               தனது ஒரே மகளை தனது தெருவிலேயே வாழ்ந்து வரும் வசதியான வீட்டுப்பையனுடன் காதலிக்க வைக்கும் அம்மாக்களை நான் தற்போது பார்த்து வருகிறேன்;

           அதே போல்,தனது மகன்களை வசதியான வீட்டு கன்னிப்பெண்களைக் காதலிக்க வைக்கும் அம்மா/அப்பா/அக்காக்களையும் நான் நேரில் பார்க்கிறேன்.இப்படிச் செய்வது வெளியில் கண்டுபிடிக்க முடியாது.இந்த மனநிலை இன்று தமிழ்நாடு முழுவதுமே பரவி விட்டது.என்ன செய்ய வசதியாக வாழ இதுவும் ஒரு வழிதான்!!

            ஆண்களில் 96% பேர்கள் குடிக்கு அடிமையாகிவிட்டனர். இதனால்,அந்த ஆண்களின் குடும்பங்கள் சிதையத்துவங்கியிருக்கின்றன. ஆமாம்! எனக்குத் தெரிந்தே பல குடும்பப் பெண்கள் தமது குழந்தைகளைக் காக்கவும்,படிக்க வைக்கவும்,மூன்றுவேளை வேண்டாம் ஒரு வேளை நிம்மதியாகச் சாப்பிடவும் விபச்சாரத்திற்கு இறங்கிவிட்டனர்;பலர் தமது பருவ மகள்களையும் இதற்குச் சம்மதிக்கவைத்து,ஒஹோவென சம்பாதிக்கின்றனர்.

               போன செப்டம்பர் 2009 ஆம் மாதத்தில் வெளிவந்த ஜீனியர் விகடன் இதழ் ஒன்றில் வாடகை மனைவி என்ற நிஜத்தொடரைப் படித்தால் நான் சொல்வதன் யதார்த்தம் புரியும்.திருச்சி மாநகரில் 25 முதல் 45 வயது வரையிலான இல்லத்தரசிகள் தமது கணவன்மார்களின் முழுச்சம்மதத்தோடு மாதம் ஒரு ஆணுக்கு தன்னையே வாடகைக்கு விடுகின்றனர்.இது ஒரு கார்பரேட் தொழிலாக வளர்ந்து வருகிறது.

         மறுபுறம் எய்ட்ஸ் நோயால் மரணமடையும் எண்ணிக்கை லட்சங்களை தொடத்துவங்கியுள்ளது.இது பற்றி யாருக்கும் கவலையில்லை;

            அரசியல் வாதிகள் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். விபச்சாரத்தை போலீஸே வளர்க்கும் நிலையை தடுக்க வேண்டும்.விலைவாசி உயர்வை தடுக்க பலவிதமான கூட்டு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.இவ்வளவும் செய்தால் சில வருடங்களில் அமைதியான சிறந்த தமிழகம் உருவாகும்.

                 உலக நாடுகளெல்லாம் இந்தியாவின் குடும்ப முறையைப் பார்த்து அதிசயப்படுகின்றன. அதனுள் பொதிந்திருக்கும் விஞ்ஞான, பொருளாதார, சமுதாய நலன்களை ஆராய்ந்து அதன்படி தமது நாட்டை மாற்றிட ஆரம்பித்திருக்கின்றன.அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வஷ்னேகர் சொல்லியிருக்கிறார்:

            எனது மகள்களுக்கு தற்போது பருவவயது (டீன் ஏஜ்) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அவர்களை திருமணமாகும் வரை டேட்டிங் செல்லக்கூடாது என போதித்து வளர்த்து வருகிறேன்.அப்படி இருந்தால் தான் எனது ஒவ்வொரு மகளும் தனது கணவனோடு ஒழுக்கமாக வாழமுடியும்:

ஆதாரம் போன வாரம் தினமலர் வாரமலர்.

             ஆக, அமெரிக்கச் சதியாலும்,நமது அசட்டையாலும்,லஞ்ச லாவண்யத்தில் மூழ்கினாலும் குடும்பம் என்ற அமைப்பை பாதுகாக்க அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், ஆன்மீக அமைப்புக்கள், அறக்கட்டளைகள் இப்போதிருந்தே முயற்சிக்க வேண்டும்.ப்ளீஸ் இதை ஒரு தேசிய இயக்கமாக மாற்றிட வேண்டுவது அவசியம்;அவசரம்!!!

இந்தியா சிலிர்த்தெழுகிறது சம்பவம் 1

ஹெச்1 பி விசா கட்டண உயர்வு:அமெரிக்காவுக்கு எதிராக வரிந்துகட்டுகிறது இந்தியா!

வாஷிங்டன், செவ்வாய், 17 ஆகஸ்ட் 2010:தமிழ்வெப்துனியாவிலிருந்து

                        அமெரிக்காவில் செயல்படும் இந்திய நிறுவனங்களை பாதிக்கச் செய்யும் வகையில், ஹெச் 1 பி வேலை விசாவுக்கான கட்டணத்தை உயர்த்திய பிரச்சனையை, உலக வர்த்தக அமைப்பிடம் (World Trade Organisation - WTO) கொண்டு செல்ல இந்தியா முடிவு செய்துள்ளது.

                         அமெரிக்காவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள்தான், ஹெச் 1 பி வேலை விசாக்களை அதிக அளவில் பெறுவதாகவும், இவற்றின் மூலம் இந்தியர்களை அதிக அளவில் வரவழைத்து தங்களது நிறுவனங்களில் பணியில் அமர்த்துவதாகவும், இதனால் அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிபோவதாகவும் அமெரிக்கர்களில் ஒருதரப்பினர் குற்றம்சாற்றி வருகின்றனர்.

                          இந்நிலையில் அமெரிக்காவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள், ஹெச் 1 பி வேலை விசா மூலம் தங்கள் நாட்டவரை வரவழைத்து பணிக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையில், ஹெச் 1 பி வேலை விசாவுக்கான கட்டணத்தை அமெரிக்கா சமீபத்தில் உயத்தியது.

                      ஆனால் அந்த காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்காமல், " எல்லை பாதுகாப்பு நடவடிக்கை" என்ற பெயரில் இந்த கட்டண உயர்வை அமல்படுத்தியது அமெரிக்கா.

                     இந்த கட்டண உயர்வு காரணமாக இந்திய நிறுவனங்களுக்கு, குறிப்பாக ஐடி அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 200 மில்லியன் டாலர்கள் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

                   இந்நிலையில், அமெரிக்காவின் இந்த செயல் உலக வர்த்தக அமைப்பு விதிமுறைகளுக்கு மாறானது என்பதால், இவ்விவகாரத்தை அங்கு கொண்டு செல்வது குறித்து இந்தியா தீவிரமாக பரிசீலித்து வருவதாக இந்திய வர்த்தக துறை அமைச்சக செயலர் ராகுல் குல்லார் இன்று தெரிவித்தார்.

                       அவர் மேலும் கூறுகையில்,தனது வர்த்தக நலன்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனையை,இந்தியாவால் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றார்.

                        இதனிடையே அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை இந்தியா தட்டிப்பறிக்கவில்லை என்றும், அமெரிக்காவில் இயங்கும் இந்திய நிறுவனங்களுக்கு எதிரான இத்தகைய குற்றச்சாற்றுக்கள் மிகையானது என்றும் அமெரிக்க வர்த்தக சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சனியும் செவ்வாயும் தற்போது கன்னிராசியில்:

சனியும் செவ்வாயும் தற்போது கன்னிராசியில்


                          20.7.2010 முதல் 6.9.2010 வரையிலும் கன்னிராசியினை செவ்வாய் பகவான் கடந்து செல்கிறார்.ஒரு ராசியை செவ்வாய் பகவான் கடக்க ஆகும் காலம் 45 நாட்கள் ஆகும்.

                          கன்னிராசிக்குள் 20.7.2010 அன்று நுழைந்தது முதல் உலகம் முழுவதும்,இந்தியாவில் பெரும்பகுதியிலும்,தமிழ்நாட்டில் ஏராளமான பகுதிகளிலும் திடீரென போராட்டங்கள், கலவரம், ஜாதி மோதல், பதற்றமான மன நிலை,எதிலும் நிதானமற்ற தன்மை காணப்படுகிறது. இந்த நிலை 6.9.2010 வரையிலும் தொடரும். . .

             ஏற்கனவே கன்னிராசியில் சனிபகவான் அமர்ந்திருக்கிறார். அவருடன் செவ்வாய் பகவானும் சேருகிறார்.இந்தச் சேர்க்கையானது மேற்கூறிய சம்பவங்களை 12 ராசிக்காரர்களுக்கும் ஒரு முறையாவது தரும்.

           தொடர்ந்து ஒரே கடவுள்/ குலதெய்வத்தை வழிபட்டுவருபவர்களுக்கும்; தான் உண்டு தன்னுடைய வேலையுண்டு என்று இருப்பவர்களுக்கும் இந்த பாதிப்பு வராது.

                    இந்தக் கிரகச் சேர்க்கையானது கன்னிராசி, மீனராசிக்காரர்களுக்கு அதிகமான பாதிப்பை உருவாக்க வாய்ப்புக்கள் உண்டு.

                    சனியின் பார்வையும்,செவ்வாயின் பார்வையும் கொடூரமானவை. சனியானது தான் இருக்கும் ராசியிலிருந்து 3,7,10 ஆம் ராசிகளையும்,செவ்வாயானவர் தான் இருக்கும் ராசியிலிருந்து 4,7,8 ஆம் ராசிகளையும் பார்ப்பார்.

                    ஆக, சனியும் செவ்வாயும் தற்போது மீன ராசியைப் பார்ப்பதால்,மீனராசியானது அதிகப் பாதிப்பை அனுபவிக்கும்.குருபகவான் மீனத்தில் தற்போது ஆட்சியாக இருந்தாலும்,அவர் வக்ரமடைந்து பலமிழந்திருக்கிறார்.

                   மீனராசி, கன்னிராசிகளைத் தவிர, மற்ற 10 ராசிகளும் ஓரளவு பாதிப்பை அடையும்.


எனவே,

                  எனது ஆன்மீகக்கடல் வாசகர்களே! தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குப் போவதை ஒரு வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்;நிம்மதியாக வாழ்வீர்கள்.

சுயச்சார்பு என்றால் என்ன?

சுயச்சார்பு என்றால் என்ன?

                  யாரையும் எப்போதும் எதற்காகவும் சார்ந்திருக்காமல் தன்னை மட்டும் சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு சுயச்சார்பு என்று பெயர். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? என்பது ஒரு தமிழ்க்கவிஞரின் பாடல்வரிகள்.

                 ஆனால், நடைமுறையில் அப்படி வாழ்வது மிகவும் கடினம்தான். சிறுவயது முதலே நாம் கஷ்டங்களுக்கும் அவமானங்களுக்கும் நம்மை பழக்கப்படுத்திவிட்டால்,நடுவயதான 30 ஐத்தாண்டும் போது யாரிடமும் கடன் வாங்காமலும்,கைமாற்று வாங்காமலும் நிம்மதியாக வாழ்ந்துவிடலாம்.

               எனக்குத் தெரிந்து, உலக அரசியலில் சுயச்சார்புள்ள நாடுஎது எனக் கேட்டால்,முதலிடம் வகிப்பது இஸ்ரேல்தான்! இரண்டாமிடம் வகிப்பது ஜப்பானைச் சொல்லலாம்.

               இஸ்ரேலின் வீர உதயம் என்ற பெயரில் சுமார் 100 பக்கங்களுக்குள் புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது.அதை வாசித்தால்,இப்படியெல்லாமா ஒரு நாட்டுக்கு சிரமங்கள் வரும்? அப்படி வந்தாலும் அதை கடந்த 60 வருடங்களாக சமாளிக்கும் இஸ்ரேலின் சுயச்சார்புக்கு நான் தலைவணங்குகிறேன்.

            இஸ்ரேலின் வீர உதயத்தை இந்த வலைப்பூவுக்குள் அடக்குவது கடினம். (அதற்கான மென்பொருள் நகாசுவேலை எனக்குத் தெரியாது).

             நமது ஆன்மீகக்கடலில் 2008 2009 ஆம் வலைப்பூப் பதிவுகளை வாசித்தால் ,நாம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய தமிழ்ப்புத்தகங்களின் பட்டியலை கொடுத்திருக்கிறேன். அவற்றை அவசியம் வாங்கிப் படிக்கவும்.அவற்றை வாங்கிப்படிக்கவே இரண்டு ஆண்டுகளாகும். வெறுமனே படிப்பதல்ல;வாசித்து அவற்றின் கருத்துக்களை உள்வாங்குவது!

            அதன் பிறகுதான், சேமிப்பும், தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்திக்கொண்டே இருப்பதும்,கடுமையாக உழைப்பதும் சுயச்சார்பினை வளர்க்கும் காரணிகள் என்பது புலனாகும்
.

மூலிகைகள் பற்றிய யதார்த்தங்கள்

மூலிகைகளைப் பொறுத்தவரையிலும் வில்வம்,துளசி இவைகள் பொடிகளாகவே கதர்க்கடைகளில் கிடைக்கின்றன.அவற்றை தினமும் காலையில் பல்துலக்கிவிட்டு,வெறும்வயிற்றில் சாப்பிட்டுவருவது மிகுந்த நன்மையளிக்கும்.அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும்,சாப்பிட்டு அரைமணிநேரம் வரையிலும் காபி டீ,குளிர்பானங்கள்,ஹார்லிக்ஸ் முதலான சூடான பானங்கள் சாப்பிடாமலிருப்பதும் அவசியம்.

சில மூலிகைப்பொடிகளை தேனிலும்,சிலற்றை சூடான பாலிலும் கலந்து அருந்தவேண்டியிருக்கும்.வில்வம்,துளசி முதலானவற்றைச் சாப்பிடும்முன்பு,உங்களுக்கு நீண்டநாட்கள் தெரிந்த சித்த அல்லது ஆயுர்வேத வைத்தியரிடம் ஆலோசனை கேட்டுச் சாப்பிடுவது அவசியம்
.

தமிழில் வெளிவரும் தலைசிறந்த கணினி தொழில்நுட்ப வலைப்பூக்கள்

ஐயம் தீர்க்கும் ஐம்பது கணினி வலைப்பூக்கள் - ஆகஸ்ட் 2010
இது பதினைந்தாவது 'முதல் பத்து' தரவரிசை பதிவு.


ஃபோட்டோஷாப் பிரியர்களுக்கு இனிப்பான செய்தி.


திரு. கான் அவர்கள் தன் http://tamilpctraining.blogspot.com/ வலைப்பூ வழியாக ஃபோட்டோஷாப் பாடங்களை சிறந்த முறையில் கற்பிக்கிறார். படித்து பயனடையுங்கள்.
1. சூர்யா கண்ணன்                              

 2. புதுவை                                                  Alexa Rank 136,355

3. வின்மணி                                             Alexa Rank 211,569

4. Cybersimman's Blog                                 Alexa Rank 243,568

5. வேலன்                                                  Alexa Rank 244,526

6. Saran R - Learning never ends                 Alexa Rank 277,299

7. PKP                                                             Alexa Rank 290,739


8. உபுண்டு                                                  Alexa Rank 321,034

9. Browse All                                                   Alexa Rank 342,495

10. தமிழ் லினக்ஸ்                                  Alexa Rank 460,135

11. பொன்மலர் பக்கம்                           Alexa Rank 593,478

12. சின்ன பையன்                                    Alexa Rank 602,324

13. Tamil Fa                                                      Alexa Rank 692,987

14. கணினி மென்பொருட்களின் கூடம்   Alexa Rank 697,631

15. கிருஷ்ணா (Krishna)                           Alexa Rank 802,775

16. தமிழ்நுட்பம்                                        Alexa Rank 818,444

17. கட்டற்ற மென்பொருள் - லினக்ஸ் 
     - தமிழன் வெல்வான்                      Alexa Rank 889,284

18. தகவல் தொழில்நுட்பப்பூங்கா Alexa Rank 893,502

19. தமிழ்கம்ப்யூட்டர்                             Alexa Rank 982,986

20. எங்கும் தொழில்நுட்பம் 
      எதிலும் தொழில்நுட்பம்              Alexa Rank 1,062,604

21. உபுண்டு இயங்குதளம்                  Alexa Rank 1,066,404

22. தொழில்நுட்ப உலகம்                    Alexa Rank 1,090,826

23. Vino's Cafe                                                 Alexa Rank 1,112,584       

24. சுடுதண்ணி                                           Alexa Rank 1,565,216

25. தமிழ் CPU                                                 Alexa Rank 1,753,858

26. அதே கண்கள்                                       Alexa Rank 1,784,626

27. லினக்ஸ்                                                 Alexa Rank 1,930,011

28. Ivan's Blog                                                   Alexa Rank 2,050,329

29. PC Tricks & Tips தமிழில் ...          Alexa Rank 2,053,068

30. TamilTech.info                                              Alexa Rank 2,103,454

31. கணினி அறிவியல் மாணவர்களுக்காக  Alexa Rank 2,143,223

32. தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்   Alexa Rank 2,728,673

33. தமிழ் வெஃப்                                           Alexa Rank 2,823,763

34. தமிழில் போட்டோசாப் பாடம் (MD Khan)  Alexa Rank 2,846,651

35. தகவல் மலர்                                          Alexa Rank 2,967,870

36. பிலாக்கர் டிப்ஸ்                                   Alexa Rank 3,050,191

37. Tamil Blogging Tips                                      Alexa Rank 3,264,984

38. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் (MD Khan)  Alexa Rank 3,803,995

39. உலவு (ulavu blog)                                      Alexa Rank 4,352,220

40. கிராமத்து பையன்                                Alexa Rank 4,596,364

41. தமிழ் கணினியகம்                              Alexa Rank 4,645,561

42. Tamilhackx                                                     Alexa Rank 4,829,061

43. Vinoth Infotek                                                Alexa Rank 5,052,981

44. அனூப்புடன் ஒரு ஐடி வலம்           Alexa Rank 5,449,613

45. சில விஷயங்கள் – கணிப்பொறியியலில்   Alexa Rank 6,084,729

46. K. Menan                                                        Alexa Rank 7,391,227

47. கணிநுட்பம்                                              Alexa Rank 7,739,560

48. கம்ப்யூட்டர் மெக்கானிக்                   Alexa Rank 7,825,000

49. தமிழ் கணினி                                           Alexa Rank 8,028,064

50. தமிழ் Fedora                                                 Alexa Rank 10,839,981

51. கற்றது Excel                                               Alexa Rank 12,353,712

52. AutoCad                                                           Alexa Rank இல்லை.

தமிழ்வலைப்பூக்களின் வரலாறு:யூத்புல் விகடனில் வெளிவந்த கட்டுரை

வலைப்பூ! அமிதாப்பச்சன் முதல் ஆண்டிபட்டி முருகேசன் வரையில் உற்சாகமாக

உலவும் தளம். உலகளாவிய இணையதளத்தில் தனக்கென ஒரு தளம். அதில் உங்கள் படைப்புத் திறமையை, எழுத்துக்களாக, புகைப்படங்களாக, திரைப்படங்களாக இன்னும் உங்கள் கற்பனை எல்லையின் பரப்புக்கு ஏற்ப உலகத்தின் பார்வைக்கு முன்வைக்கலாம்.


வலைப்பூ... ஆங்கிலத்தில் 'பிளாக்' (blog) என்பார்கள். 'வலைப்பதிவர்கள்' என்றொரு தனி சமூகமே இன்று இயங்கிக்கொண்டு இருக்கிறது. தன் மனதில் தோன்றும் கருத்துக்களை உடனடியாகத் தெரிவிப்பதற்கும் அதற்கான விமர்சனங்களைப் பெறுவதற்கும் உதவும் ஊடகமாக வலைப்பூக்கள் விளங்குகின்றன. தங்கள் வலைதளத்தையே விசிட்டிங் கார்டாகக்கொண்டு தங்கள் எதிர்காலத்தைச் செதுக்கிக்கொண்டவர்கள் பலர். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பிறர் உதவி இல்லாமல் இணைய இணைப்புகொண்ட ஒற்றைக் கணினி மூலம் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இதை எப்படி நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது? அலசுகிறார்கள் சில வலைப்பதிவர்கள்!

"பிளாக் எழுதுவதால் நேரம் வீணாவதைத் தவிர ஏதும் உபயோகம் இல்லை என்றுதான் என்னிடம் ஆரம்பத்தில் எல்லோரும் கூறினார்கள். ஆனால், 'கேபிள் சங்கர்' என்ற பெயரில் வலைப்பூ எழுதி வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் என் வாழ்க்கையில் அபார வளர்ச்சி!" என்கிறார் சங்கர் நாராயணன். "கேபிள் டி.வி தொழிலுடன், சினிமாவிலும் பணிபுரிந்துகொண்டு, திரைப்பட இயக்குநர் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த வேளையில்தான், எனக்கு அறிமுகமானது வலைப்பூ. ஆரம்பத்தில் படிக்க சுவாரஸ்யமாக இருந்த வலைப்பூ, போகப் போக என்னையும் 'வலை'யில் சிக்கவைத்துவிட்டது. கதை, கட்டுரை, சினிமா விமர்சனங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்த என் முதல் கதையை ஆனந்த விகடன் வெளியிட்டு என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. இப்போது 'லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்', 'சினிமா வியாபாரம்' என இரண்டு புத்தகங்களை வெளியிட உதவியது என் வலைப்பூ மூலம் கிடைத்த வெளிச்சமும் அறிமுகங்களும்தான். சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் என் நீண்ட காலக் கனவு. என் வலைப்பூ எழுத்துக்கள் என் கனவினை நிறைவேற்ற ஒரு தயாரிப்பாளரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அடுத்த இன்னிங் ஸைத் துவக்கியிருக்கிறேன்!" என்கிறார் உற்சாகமாக!

பிற எந்த ஊடகங்களிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் வலைப்பூக்களில் உண்டு. அது பின்னூட்டங்கள். உங்கள் கருத்துக்களுக்கு ஆதரவாகவும் எதிர£கவும் வந்து குவியும் கருத்துக்கள்... உங்களை உற்சாகமூட்டும், திருத்தும், செதுக்கும். டெல்லியில் பணிபுரிந்துகொண்டே தமிழில் வலைப்பதிவு எழுதும் விக்னேஷ்வரிக்கு டெல்லிக்கும் தமிழகத்துக்குமான இடைவெளியைக் குறைப்பது அவரது வலைப்பூவே.

"காகிதங்களில் எழுதிக் கிறுக்கிக் கசக்கி எறிந்து, இறுதியில் எழுதியதைப் பலமுறை அடித்துத் திருத்திப் பொக்கிஷமாக வீட்டு அலமாரியில் நிரப்பி வந்த நாட்களைக் கடந்துவிட்டோம். மனதில் தோன்றுவதைக் கணினியில் தட்டத் தட்ட வார்த்தைகள் உயிர்ப்பிக்கின்றன. மறுபடி... மறுபடி வாசிக்கிறோம். திருத்துகிறோம். ஒரு சொடுக்கலில் வலைப்பூக்களின் மூலம் நண்பர்களுடன் பகிர்கிறோம். உடன் வரும் ஊக்கங்களையும், தோள் தட்டுதல்களையும், தவறுகளுக்குக் குட்டும் கரங்களையும் நம் கணினித் திரையில் பெறுகிறோம். இது படைப்பாளிகளுக்கு உள்ளபடியே உற்சாகமான சங்கதி!" என்கிறார்.

ஓர் இலக்கியப் பத்திரிகையில் எழுதினால், அதை வாசித்தவர்களின் எண்ணிக்கையை நாம் கணிக்கக்கூட முடியாது. ஆனால், பிளாக்கில் எழுதிய சில மணி நேரங்களில் உடனுக்குடன் எதிர்வினைகள். பாராட்டு, திட்டு, விமர்சனம் என்று பலவாறாகக் குவியும். அவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதும் எளிது. அப்படி பிளாக் மூலம் தொடங்கும் உறவுகள் நட்பாகத் தொடர்வது வலையுலகத்தின் பாசிட்டிவ் பக்க விளைவு.

ஆரம்பத்தில் வலைப்பூக்களில் விளையாட்டாக எழுதத் தொடங்குபவர்கள், பிறகு மற்ற வலைப்பூக்களைத் தேடித் தேடிப் படிக்கப் பழகுகிறார்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்றைய தலைமுறையினரிடம் குறைந்து வருகிற நிலையில், அந்த இடைவெளியை நிரப்புகின்றன வலைப்பூக்கள்.

அன்றாட நிகழ்வுகள்பற்றிய லைட்டான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது, நகைச்சுவை இழையோட எழுதுவது திருப்பூரைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணகுமாருக்குக் கைவந்த கலை.

'பரிசல்காரன்' என்ற பெயரில் எழுதும் கிருஷ்ணகுமார் தமிழின் பிரபல பதிவர்களுள் ஒருவர். "வலைப்பூ எழுதுவதன் மூலம் கிடைக்கும் நட்பு வட்டாரம் மிகப் பெரிய பலம். நல்ல எழுத்தைத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருவதால், உங்களுக்கு கிடைக்கும் உலகளாவிய நட்பு வட்டாரம் மூலம், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் குறைந்தது ஒரு வலைப் பதிவரையேனும் கண்டுகொண்டு நட்பு பாராட்டலாம்.

தமிழை நேசித்து வாசிக்க, எழுத ஆசைப்படுபவர்களுக்கு ஒரு களம் அமைத்துக்கொடுக்கிறது வலைப்பூக்கள். பதிவர்களே வலைப்பதிவர் பட்டறை நடத்தி எழுத்தார்வம் மிக்கவர்களுக்கு இணையத்தில் எழுதப் பயிற்சியும் ஊக்கமும் வழங்குகிறார்கள். திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் 'சேர்தளம்' என்ற அமைப்பின் மூலம் மாதம் ஓர் எழுத்தாளரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம். இதனால், இளைய தலைமுறையின் வாசிப்பு அனுபவம் விரிவடைகிறது!" என்கிறார் கே.பி.கிருஷ்ணகுமார்.


பெண்களின் பங்களிப்பும் நிறையவே உண்டு. அரசியல், சட்டம், இலக்கியம், சினிமா, சமையல், குழந்தை வளர்ப்பு என்று எல்லாம் எழுதுகிறார்கள், விவாதிக்கிறார்கள். "பொதுவாக, நாம் எழுதியதை நண்பர்களிடமோ குடும்பத்தினரிடமோ காட்டுவதற்குக் கூச்சப்படுவோம். அன்புக்குரியவர்கள் என்பதால் நமது எழுத்தை அவர்கள் பாரபட்சம் இல்லாமல் விமர்சிக்க மாட்டார்கள். தயக்கம் இல்லாமல் நமது எழுத்தைப் படைக்கவும், நேர்மையான‌ விமர்சனம் பெறவும் உகந்த‌ இடம் வலைப்பூக்கள்தான்!" என்கிறார் பதிவர் தீபா. "சமூக ‌சிந்தனை உள்ள பல கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்படுவது பதிவுலகில்தான் அதிகம் அரங்கேறுகிறது. எவ்வித‌ நிர்ப்பந்தமும் இல்லாமல் உண்மைகளை எழுதக்கூடிய‌ களம் இது.

அரசாங்கத்துக்கும் சட்டத்துக்கும் கலாசார ஒழுங்குக்கும் பயந்து பொதுவெளியில் பேசத் தயங்கும் பல விஷயங்கள் வலைப்பூக்களில் வெளிப்படையாகவும் விரிவாகவும் விவாதிக்கப்படுகின்றன. பெண்கள், குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு இணையமும் வலைப்பூக்களும் ஒரு வரப்பிரசாதம். புலம்பெயர்ந்த பெண்கள் பலரும் தங்கள் வேர்களோடு உறவாடிக்கொள்வதற்கு வலைப்பூக்கள் வெகுவாக உதவுகின்றன. சமையல் குறிப்பு, குழந்தை வளர்ப்பு, வீட்டில் இருந்தபடியே செய்யக் கூடிய தொழில்கள் குறித்து ஏராளமானோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறார்கள். கவிதை, கதை, ஓவியம், கைவினைப் பொருட்கள் என்று தங்கள் தனித்திறமைகளை மெருகேற்றி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் பெண்கள் வெகு அழுத்தமாகத் தங்கள் தடங்களைப் பதித்து வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தை, சமையல் இது தவிர, வேறு உலகமே இல்லை என்று வருந்திய காலம் போய், இப்போது தங்களுக்கான எல்லைகளையும் நட்பு வட்டத்தையும் வலைப்பூக்கள் மூலம் விரிவுபடுத்தி வருகிறார்கள்!" என்பது தீபாவின் கருத்து.

'மக்கள் சட்டம்' என்ற பெயரில் வலைப்பூவைத் தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருபவர் வழக்கறிஞர் சுந்தர்ராஜன். "சட்டத்தையும் நீதிமன்ற நடைமுறைகளையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகும் கருத்துக்களைப் பதிவுசெய்ய 'மெயின் ஸ்ட்ரீம்' ஊடகங்களும், பல இணையதளங்களும் தயக்கம் காட்டின. உடனே நான் 'மக்கள் சட்டம்' என்ற வலைப்பூ தொடங்கினேன். காவல் நிலைய சித்ரவதைகளுக்கு எதிரான கட்டுரையுடன் தொடங்கிய மக்கள் சட்டம், என்கவுன்ட்டர் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் படுகொலைகள், அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் களவாடப்படும் மக்களின் அறிவு சார்ந்த சமூக உரிமைகள், கிரெடிட் கார்டு நிறுவனங்களின் வணிக அறமற்ற செயல்கள் உள்ளிட்ட ஏராளமான மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தினேன். தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுப்பிய சில விவகாரங்களும் பரவலான வாசகர்களைச் சென்று அடைந்தது. ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு வாசகர்கள் தனிப்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தேடி தொடர்புகொண்டனர். அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் இயன்ற வரையில் ஆலோசனை கூறப்பட்டது. பொதுத் தன்மை வாய்ந்த சில கேள்விகள், யாரையும் குறிப்பிடாவண்ணம் புதிய கட்டுரைகளாக வெளியிடப்பட்டன. மன நிறைவளிக்கும் பணி!" என்று மனம் நெகிழ்கிறார் சுந்தர்ராஜன்.


ஆனால், ஒரு வலைப்பதிவு எழுதத் துவங்கிய உடனேயே எல்லோரும் எழுத்தாளர் ஆகிவிடுவது இல்லை. அதற்குத் தொடர்ச்சியான முயற்சியும் இடைவிடாத பயிற்சியும் அவசியம். "புதிதாக‌ எழுத வருபவர்கள் பிற வலைப்பூக்களைப் படித்து ரசிக்கலாம் என்றாலும், அதேபோல் எழுத வேண்டும் என்று முயல்வதைவிட, தங்களுக்குப் பிடித்ததை, தங்களைப் பாதித்த விஷயங்களை உண்மையாக, நேர்த்தியாக எழுதத் தொடங்குவது நல்லது.

தொடக்கத்தில் சிறு இடுகைகளாகக்கூட ஆரம்பிக்கலாம். நம் பதிவு பிரபலம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஆனால், அயராமல் முயன்று எழுத்தின் தரத்தைக் கூட்டுவதில்தான் ஆர்வம் காட்ட வேண்டும். விமர்சனங்களை நேர்மையாக வெளிப்படுத்தவும் வரவேற்கவுமான சூழல் வேண்டும். இல்லாவிட்டால் பதிவுலகம் வெறும் அரட்டைக் கச்சேரி நடக்கும் இடமாகிவிடும்!" என்று எச்சரிக்கிறார் தீபா.

எழுத்து ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு, பிரபலங்களுடன் நட்பு, வணிகரீதியான வருமானம், பளிச் சமூக அந்தஸ்து... எல்லாம் உள்ளங்கைக்குள் ஒளிந்திருக்கிறது. பிறகென்ன தயக்கம்... பிரபல வலைப்பதிவர் ஆக வாழ்த்துக்கள்!


வலைப்பூ ஒன்று உருவாக்குவது எப்படி? நன்றியூத்புல் விகடன்

வலைப்பூ... சில கேள்விகள் - சில விளக்கங்கள்!
வலைப்பூ பற்றிய சில அடிப்படை சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் கோவையின் 'ஓசை' செல்லா.


"பிளாக் துவக்குவது எப்படி?"

"ஒரு பிளாக் துவக்க, முதலில் நீங்கள் ஜி-மெயிலில் கணக்கு தொடங்க வேண்டும். பிறகு, பிளாக்கர்.காம் (Blogger.com) சென்று உங்களுக்கான பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல்லைத் (Password) தேர்ந்தெடுக்கலாம். அவ்வளவுதான் உங்களுக்கான தளம் தயார். அதில் நீங்கள் யுனிகோட் எழுத்துரு மூலம் உங்கள் கட்டுரைகளைப் பதியலாம். புகை - திரைப்படங்களைக் காட்சிக்கு வைக்கலாம். உங்கள் கட்டுரைகளுக்கு வரும் பின்னூட்டங்களை (Comments) நீங்களே தணிக்கை செய்யலாம். இப்போது பிளாக்கர்.காம் போலவே வேர்ட்பிரஸ்.காமும் (Wordpress.com) வலைப்பூ தொடங்கும் வாய்ப்பை அளிக்கிறது!"

"என் கட்டுரைகளை யார் படிப்பார்கள் அல்லது வாசகர்களை எப்படித் தேடிப் பிடிப்பது?"

"அந்தக் கவலையே உங்களுக்குத் தேவை இல்லை. ஏனெனில், ஆயிரக்கணக்கான வலைப்பூக்களைத் திரட்டும் திரட்டிகள் (Aggregator) ஏராளமாக இணையத்தில் இயங்குகின்றன. தமிழ்மணம், தமிழிஷ், தமிழ்வெளி ஆகியவை குறிப்பிடத்தக்க வலைப்பூ திரட்டிகள் ஆகும். உங்கள் வலைப்பூவைத் திரட்டியில் இணைத்துவிட்டால், ஆயிரக்கணக்கான வாசகர்கள் உங்கள் வலைப்பூக்களைப் படிக்கவும் செய்வார்கள். ஆயிரக்கணக்கான வலைப்பூக்களை நீங்கள் படிக்கவும் முடியும்!"

"வலைப்பூ எழுதுவதன் மூலம் வருமானம் ஈட்ட முடியுமா?"

"நிச்சயமாக. எழுத்தின் தரம் மேம்பட மேம்பட, உங்கள் வலைப்பூவின் ஹிட்ஸ் (வருகையாளர்கள்) அதிகரிக்கும். ஹிட்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, விளம்பரங்களும் வரும். உங்கள் வலைப்பூவில் உள்ள விளம்பரத்தை ஒருவர் கிளிக் செய்தாலே உங்களுக்கு வருமானம் உண்டு. கூகுள் அட்சென்ஸ் என்ற நிறுவனமும் ஏராளமான விளம்பரங்களை அளித்து ஊக்குவிக்கிறது. இப்போதைய ட்ரெண்டில் பிரபல பதிவர் அந்தஸ்தை எட்டும் ஒருவருக்குக் குறைந்தபட்சம் மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் விளம்பர வருமானம் கிடைக்கும்!"

"வலைப்பூவில் கட்டுரைகள் மட்டும்தான் பதிய முடியுமா?"

"அது உங்கள் இடம்... நீங்கள் எதுவும் செய்யலாம். சமீபமாக 'விளாக்' (vlog) என்னும் வலைப்பூக்கள் பிரபலமடைந்து வருகின்றன. விளாக் என்பது வீடியோ ஏற்றக்கூடிய பிளாக் ஆகும். ஒலி-ஒளி வலைப்பூக்களுக்கு ஏராளமாக விளம்பரங்கள் குவிகின்றன. நான் என் வலைப்பூவில் பயன்படுத்தும் புகைப்படங்களை ஸ்டாக் ஏஜென்சி எனப்படும் புகைப்பட நிறுவனம் காப்புரிமைக்காகக் காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறது!"

"வலையுலகின் எதிர்காலம் எப்படி இருக்கும்?"

"மிகவும் பிரகாசமாக இருக்கும். கோவை செம்மொழி மாநாட்டில் இணைய மாநாடும் ஒரு பகுதி. வலைப் பதிவர்களையும் எழுத்தாளர்களாக அங்கீகரித்து இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடத்தினார்கள். எனவே, பிரபல பதிவரே 'பிரபல எழுத்தாளர்' ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை!"

இணையத்தில் எழுதுவதன் மிகப் பெரிய பலம் அதன் ரகசியத் தன்மை. நீங்கள் உங்கள் சொந்தப் பெயரில்தான் எழுத வேண்டும் என்றில்லை. எந்தப் பெயரில் வேண்டுமானாலும் வலைப்பதிவு தொடங்கி எழுதலாம்.
பின்னூட்டங்களில் யார் பெயரையும் குறிப்பிடாமல் அனானிமஸாகக் குறிப்பிடப்படும் வசதி உண்டு. ஒருவேளை அத்தகைய கமென்ட்களை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், அதை அனுமதிக்காமல் இருப்பதற்கான வசதி உண்டு.
உங்களது மின்னஞ்சல் முகவரியை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை உள்ள நபர்களிடம் மட்டும் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிப்பதால், தேவையற்ற மின்னஞ்சல்களைத் தடுக்கலாம்.
வலைப்பதிவு எழுதும் பெண்கள் தங்கள் புகைப்படங்களை வலையில் ஏற்றும் முன், யோசித்து ஏற்றுவது நல்லது. ஏனெனில், இணையம் என்பது எல்லோராலும் எந்த அனுமதியும் இன்றி பயன்படுத்தப்படும் தளம் ஆகும்.
உங்களது எழுத்துக்களில் உச்சபட்ச நாகரிகம் அமையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களது பதிவுகளை வலைப்பதிவில் ஏற்றும்போது புகைப்படம், வீடியோ ஆகியவற்றை ஏற்றினால், அது படிப்பவர்களுக்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டும்.
புகைப்படம், வீடியோ ஏற்றுவது மட்டுமல்லாது கருத்துக்கணிப்பு நடத்துவது, டிவிட்டர் அப்டேட்ஸ்களை ஏற்றுவது என்று பல வசதிகள் இப்போது வலைப்பூக்களில் வந்துவிட்டன!

பாரதத்தின் பெருமையைப் பறைசாற்றும் மாவட்ட ஆட்சியாளர்


நம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்

இந்தியாவின் சுதந்திர தின இந்நாளில் நம் தேசத்தின் விடுதலைக்காகபாடுபட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அனைத்து தமிழ்மக்களின்சார்பில் என்றும் மறவாத நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்திய சுதந்திர போராட்டத்துக்காக பாடுபட்ட அத்தனை நல்லஉள்ளங்களையும் நினைவு கொள்ளும் இந்த நாளில் பெற்ற சுதந்திரத்தைசத்தியமான வழியிலும் நேர்மையான வழியிலும் கொண்டு செல்லும்ஒரு மனிதரைப்பற்றிய சிறப்புப்பதிவு.
மக்களுக்கு அரசாங்கத்தால் கிடைக்கும் பலன்கள் இடைத்தரகர்கள்யாரும் இல்லாமல் நேரடியாக செல்ல வேண்டும் என்பதில் இவருடையமுயற்சி தெரிகிறது. ஆங்கிலம் பேசிக்கொண்டு வருபவரிடம் தான்பேசுவோம் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் ஒரு விவசாயிகூட மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக பேசலாம் என்றபாதையை வகுத்தவர். லஞ்சம் என்ற ஒன்று தன் மாவட்டத்தில்எங்குமே காணமல் செய்ய வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாகதிகழ்பவர். ஒரு மாவட்டத்தில் நடக்கும் அத்தனை புகார்களையும்ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தன் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் இணையதளம் மூலம் புகார் செய்யும்முறையை அறிமுகப்படுத்தி புதுமைக்கு வித்திட்டவர் மட்டும்அல்லாமல் 1450 புகார்களுக்கு தீர்வும் அளித்துள்ளார்.நாமக்கல் மாவட்ட மக்கள் ஆன்லைன் -ல் புகார் அளிக்கவேண்டிய இணையதள முகவரி :
http://namakkalcollector.netதன் வங்கி சேமிப்பு 7,172 ரூபாய் என்பதை வெட்ட வெளிச்சமாகஅனைவருக்கும் காட்டியவர். விவசாயிகளிடம் சென்று அவர்களிடம்நேரடியாக பேசி பிரச்சினைகளை தீர்க்க வழி செய்வது இன்னும்சொல்லிக்கொண்டே போகலாம் இத்தனை புகழுக்கும் சொந்தகாரர்நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சகாயம் அவர்கள், எளிமை,அன்பு ,பணிவு , கனிவு என்ற மூன்றும் நாம் இவரிடம் இருந்துகற்றுக்கொள்ள வேண்டியது. இந்த சுதந்திர தின நாளில் சத்தியத்தையும்,நேர்மையையும், தேசப்பக்தியையும் வாழ்வின் ஆதாரமாக கொண்டுவாழும் இந்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வின்மணியின் சார்பிலும்நம் அனைத்து நண்பர்களின் சார்பிலும் சல்யூட். நன்றி ஐயா என்றும்நாங்கள் உங்களோடு வேராக இருந்து உங்களின் அனைத்துமுயற்சிக்கும் பக்கபலமாக இருப்போம்.

யாருடைய ராசிக்கு எந்த ராசிக்காரர்கள் பொருந்துவார்கள்?

பொருந்தக் கூடிய ஜாதகங்கள் எவைக்கு எவை?

பொருந்தக் கூடிய ஜாதகங்கள் எவைக்கு எவை? தொழில் செய்ய, பங்குதாரராக ஆகியவற்றுக்கு கூறுங்கள். ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்எந்த ஒருவர் ஜாதகத்திலும் அந்த ஜாதகத்தில் எந்தக் கிரகம் பலம் பெற்றுள்ளது என்பதை அடையாளம் காண வேண்டும். அறிவியிலில் இயங்கு தசை, இயக்கு தசை என்று இருப்பது போல, கிரகங்களிலும் ஒருவருடைய ஜாதகத்தில் இயங்கும் கிரகம், இயக்கும் கிரகம் என இரு பிரிவுகள் காணப்படும்.உதாரணத்திற்கு ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். அதனை இயக்கும் உரிமையாளர் சுக்கிரன் அவருடைய ஜாதகத்தில் பலவீனமாக காணப்பட்டாலோ அல்லது சுக்கிரன் வலிமையாக இருந்து அதை விட வலிமையாக அதன் எதிர் கிரகமான குரு காணப்பட்டாலோ அவரிடம் ரிஷப ராசிக்கான குணங்கள் குறைவாகக் காணப்படும்.இயக்கும் கிரகம் எந்த ராசிக்கு உரிமையானதோ அந்தக் குணம் அவரிடம் காணப்படும். எனவே பொருத்தங்களை மிக துல்லியமாகப் பார்க்க வேண்டும். மேலோட்டமாக மேஷத்திற்கு, கடகம் நட்பு, ரிஷபம் - கன்னி நட்பு, மிதுனம் - சிம்மம் நட்பு என்று பார்த்து பங்குதாரர்களையோ வாழ்க்கைத் துணையையோ அமைத்துக் கொள்ளாமல் அவரவர்கள் பிறந்த ராசிநாதனின் பலம், லக்னாதிபதியின் பலம் என ஆராய்ந்து வியாபார பங்குதாரர்களையோ, வாழ்க்கைத் துணையையோ அமைத்துக் கொண்டால் அது நீடித்து நிலைக்கும்
.

அறுவை சிகிச்சைக்கு ஏற்ற நாள் எது?

அறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?ஜோ‌திட ர‌த்னா க.ப. ‌வி‌த்யாதர‌ன் ப‌தி‌ல் : அவசரத்திற்கு கால, நேரம் கிடையாது. அது விதி விலக்கு.அந்த காலத்தில் மருந்தை உட்கொள்ளத் துவங்குவது அமாவாசை அன்றுதான். அப்பொழுது ஆத்மகாரகன் சூரியனுடன், உடல்-மனோகாரகன் சந்திரன் ஒரு புள்ளியில் மையம் கொள்ளும், இணையும் நாள். நமது உடலும் இரு பாகமாகத்தான் இருக்கிறது. உலகே ஆண், பெண் என்றும், நாசியிலும் சூரிய நாடி, சந்திர நாடி என்று எல்லாமே இரண்டுதான். எனவே இந்த இரண்டும் இணையக் கூடிய நாள் அமாவாசை என்பதால் அந்த நாளில் சிகிச்சையை துவக்கினால் நோய் முற்றிலும் குணமடையும்.பொதுவாக சிகிச்சைக்கு உகந்தது என்பதற்கு "காக்கையர் நாடி" என்ற நூல் என்ன கூறுகிறது என்றால், பெளர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை நாட்களில் சிகிச்சை மேற்கொண்டால் நோய் வளராமல் தேய்ந்துவிடும் என்கிறது.அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்க, அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப திதி, நட்சத்திரத்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக லக்னாதிபதி, ராசிநாதன் இவர்கள் இருவரின் அஸ்தட்சம், வக்கிரம், பகைக்கோள் சேர்க்கை, பாவக் கோள் பார்வை இல்லாமல் இருக்கும் நாளை தேர்ந்தெடுக்க வேண்டும்.சந்திராஷ்டமம் குறிக்கிடாமல் இருப்பது மிக முக்கியம். ஜென்ம தாரை, விபத்துத் தாரை, பகைத் தாரை, வதைத் தாரை நட்சத்திரங்களை தவிர்க்க வேண்டும்.

கடனாளியாகாமல் தப்பிக்க சிறந்த ஜோதிட வழி என்ன?

கடனாளியாவதில் இருந்து தப்பிக்க வழி?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:


ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:கடனாளி என்பது ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்தது. ஒரு சிலருக்கு கடன் வாங்குங்கள் என்று நாங்களே கூறுகிறோம்.


லக்னத்திற்கு 6க்குரியவனின் தசை என்று வைத்துக் கொண்டால் அவன் சத்ரு, ரோபம், விபத்து, கடன் இவற்றைக் கொடுப்பான். 6க்குரியவன்தான் இவற்றுக்குக் காரணம். எனவே முதலிலேயே நாம் கடனை வாங்கி விட்டால் மற்றவைகளில் இருந்து தப்பிக்கலாம்.கிரகங்கள் எல்லாம் ஒன்றைக் கொடுத்துவிட்டால் மற்றவற்றை கொடுக்காது. எனவே 6க்குரிய தசையா, கடன் வாங்கி விடுங்கள். அதுவும் சுபக் கடனாக வாங்கி விட்டால் மற்றவற்றில் இருந்து தப்பி விடலாம்.வீடு, வாகனம் போன்றவை தவணை முறையில் பணம் கட்டுவது போல் கடன் வாங்கி விடுவதும் நல்லது. மாதா மாதம் பணம் கட்டும்போதெல்லாம் கஷ்டப்பட்டு கட்டுவது இந்த கிரகத்தின் அமைப்பாக இருக்கும்.அதேப்போல அஷ்டமத்து சனி, ஏழரை சனி போன்றவை நடக்கும்போது பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.


அதாவது லி·ப்ட் கேட்டு ஏறியவன், கொஞ்ச தூரம் போனதும் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை, நகைகளை கொள்ளை அடிப்பது போன்றவை நடந்துள்ளது. சில நேரங்களில் வண்டியையே தள்ளிக் கொண்டு போனதும் உண்டு.எனவேதான் லி·ப்ட் தராதீர்கள், ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள் என்று சொல்கிறோம். குறிப்பிட்ட ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு காலக்கட்டம்தான் நெருக்கடியானது. அந்த காலத்தில்தான் இதுபோன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறோம்.


ஒருவர் இருக்கிறார். அவருக்கு நெருங்கிய நண்பர். ஒன்றாக படித்து வளர்ந்தவர்கள். ரொம்ப யோக்கியமானவர். அவரது நண்பருக்கு கேரண்டர் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்தார். இவரது போராத காலம் அவரால் கடனைக் கட்டாமல் போக இவர் கட்ட வேண்டியதாகி, அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு துணைவியார் பிரிந்து போக ஒரு குடும்பமே சின்னாபின்னமாகிவிட்டது.எனவேதான் சில நேரங்களில் இதுபோன்ற காரண்டர் கையெழுத்துக்களை போடாதீர்கள், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று சொல்கிறோம். யாருடனும் வம்பு தும்புக்குப் போகாமல் வாயைக் கிளறினாலும் பேசாமல் இருக்க வேண்டும் என்று கூறி அனுப்புகிறோம்.


சிலருக்கு அவர்களது நேரத்தின்படி, வந்தவர்களுக்கு உதவுங்கள். நண்பர்களுக்கு எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறுகிறோம். சின்ன வயதில் உங்களுக்கு உதவியவர்களுக்கு கைமாறு செய்யுங்கள் என்றும் கூறுகிறோம்.

ஏழரைச்சனிக்கு சரியான பரிகாரம் வில்வ இலை அர்ச்சனையே!!!

ஏழரை சனிக்கு சரியான பரிகாரம் வில்வ இலை!
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்:

ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்:வில்வ இலைக்கு அதிக சக்தி உண்டு. மருத்துவ ரீதியாக பார்க்கப் போனால் ஆண்களின் விந்தணு நீர்த்த தன்மையை போக்கும். விந்தணு நீர்த்த தன்மை பிரச்சினை இருப்பவர்கள் வில்வ இலையை சாப்பிட்டாலே போதும்.அதற்காகத்தான், அந்த காலத்தில் பெருமாள் கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஏனென்றால் பெருமாள் கோயிலில் கொடுப்பது துளசி, சிவன் கோயிலில் கொடுப்பது வில்வம். இவை இரண்டுக்குமே அதீத சக்தி உண்டு.பிரசாதங்கள் என்று கோயிலில் கொடுப்பவை அனைத்துமே மூலிகைகள்தான். ராஜ ராஜன் காலத்தில் எல்லாம் மூலிகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் எல்லாம் உண்டு. சில கோயில்களில் எல்லாம் அபிஷேகங்கள் இருக்காது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள லிங்கம் மண்ணால் ஆனது என்றும் சொல்லப்படும். அதாவது மண்ணை மூலிகைச் சாறுகள், வில்வக் குழம்புகளை வைத்து செய்யப்பட்டது. அதனால்தான் அவற்றிற்கு அபிஷேகங்கள் செய்வதில்லை.


வில்வத்தின் வடிவத்தைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். மூன்றாகப் பிரிந்திருக்கும். சூலம் என்று எடுத்துக்கொடுக்கலாம். மூன்று தெய்வங்களை குறிப்பதாகவும், நங்கூரத்தின் வடிவிலும் இருப்பதாக கூறலாம். சாதாரணமாக சிவனுக்கு எத்தனை ரத்தினம் அணிவித்தாலும், வில்வத்தால் பூஜை செய்தால் அதீத சக்தி கிட்டும். வில்வத்திற்கு அவ்வளவு மகிமை.

மேலும் நாம் தினமும் வில்வ பொடியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் கிட்டும். ரத்தத்தை சுத்திகரிப்பது, விந்தணு நீர்த்தத் தன்மை போன்ற பல பிரச்சினையை சீர் செய்யும். அம்மன் கோயிலில் கொடுக்கப்படும் வேப்பிலைக்கும் அதிக மருத்துவ குணம் உள்ளது.வில்வத்தால் சிவனை அர்சிக்கும்போது, சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும், சிவனின் அருளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஏழரை சனிக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

திருமணம் செய்யவேண்டும் என்று முடிவுஎடுத்ததும் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

பதிலளிப்பவர்:
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

பிள்ளைகளின் கிரக அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இவர்களுக்கு காதல் திருமணமா, பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.பிள்ளையின் ஜாதகத்தில் சுக்கிரன், புதன் வலுவாக இருந்தால் அவர் யாரை அழைத்து வருகிறாரோ அவர்களுக்கு அட்சதை போட்டுவிடுவது நல்லது.ஜோதிடத்தில் நிறைய உட்கூறுகள் உள்ளன. வேறு ஜாதிப் பெண்ணை மணம் முடிப்பார், வயதில் மூத்தவர் என எத்தனையோ கூறப்பட்டுள்ளது. 7ஆம் இடத்தில் என்ன கிரகம் வலுவாக இருக்கிறதோ அதற்கு ஏற்றபடியான மணப்பெண்தான் அவருக்கு அமையும். அதோடு பூர்வ புண்ணிய ஸ்தானம் எப்படி இருக்கு என்பதையும் பார்க்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருந்தால் தனது இனத்திலேயே பெண் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டுப் போய், ஏழாம் இடமும் கெட்டுப் போயிருந்தால் புது உறவு, தூரத்து உறவு, வேறு மதத்தில் முடியக் கூடிய வாய்ப்பு உள்ளது. அடுத்து என்ன தசா புக்தி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். குரு பலன் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அது மிகவும் முக்கியமானது கிடையாது. நல்ல தசாபுக்தி நடந்தால் குரு பலன் இல்லாமல் கூட திருமணம் நடக்கும். திருமணம் செய்யலாம்.ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடக்கும் போது திருமணத்தை தள்ளிப்போடலாம். அவசரமாக முடிக்காமல் நிதானமாக செய்யலாம்.ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கும் போது, ஏழாம் இடத்தில் பாவ கிரகங்களின் தசா புக்தி நடந்தால் திருமணத்தை தள்ளிப்போடுவது நல்லது. அப்படி இல்லை என்றால் நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் அதிக இடைவெளி விடாமல் திருமணத்தை முடிப்பது நல்லது.

விவாகரத்து முடிவுக்கு வந்தப்பின்னர் செய்ய வேண்டியது என்ன? ஜோதிட ஆலோசனை

தம்பதிகள் விவாகரத்து பெறும் முடிவுக்கு வந்த பின்னர் செய்ய வேண்டியது என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

தம்பதிகள் விவாகரத்து பெறுவது என உறுதியாக முடிவு செய்த பின்னர், அந்த மனுவை குறிப்பிட்ட நாளில் தாக்கல் செய்வது எதிர்பார்க்கும் பலனைத் தரும். குறிப்பாக சனி ஓரை, செவ்வாய் ஓரைகளில் விவகாரத்து மனுவை தாக்கல் செய்யலாம்.அதேபோல் 6வது வீட்டில் பாவ கிரகங்கள் இருக்கும் போதும், சந்திரன் இருக்கும் போதும் விவாகரத்து மனுவில் கையெழுத்திடுவதும், அன்றைய தினத்தில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதும் விரைவாக விவாகரத்து பெற உதவும். ஜாதகருக்கு என்ன தசா புக்தி நடக்கிறது என்பதைப் பார்த்து விட்டு அதற்கு தகுந்தது போல் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். உதாரணமாக மூத்த வழக்கறிஞரிடம் வழக்கை அளித்தால் உடனடிப் பலன் கிடைக்குமா? அல்லது இளம் வழக்கறிஞரிடம் சென்றால் விரைவாக விவாகரத்து கிடைக்குமா? என்பதைக் கூட கணித்து விட முடியும். ஒரு சிலருக்கு பெண் வழக்கறிஞர் வாதாடினால் நிச்சயமான பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறோம். அவர்களது ஜாதகத்தில் சில கிரகங்கள் சிறப்பாக இல்லாததால் இப்படிக் கூறுவோம். அவர்கள் ஆண் வழக்கறிஞரிடம் சென்றால் நீண்ட இழுபறிக்கு பின்னரே விவாகரத்து கிடைக்கும். இதற்கு பெண் ஆதிக்க கிரகங்களின் தன்மையை ஆராய வேண்டும்.

அசைவ உணவுசாப்பிட்டுவிட்டு கோவிலுக்குப் போகக்கூடாது.

அசைவ உணவு சாப்பிட்டால் கோயிலுக்குச் செல்லக் கூடாது எனக் கூறுவது ஏன்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக கூறலாம். அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும். பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் பொருந்தும். மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை. எனவேதான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். ஆன்மீகக்கடலின் கருத்து என்னவெனில்,உக்கிரமான ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் கோவிலுக்கு அசைவம் சாப்பிட்ட அன்று குளித்தப்பின்பும் போகாமலிருப்பது மிக நன்று.மீறினால்,அந்த நாளில் அல்லது அடுத்த சில நாட்களுக்குள் விபத்தில் சிக்கிட வாய்ப்புக்கள் உண்டு.

பிள்ளைகளின் காதலுக்குப் பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்?

பிள்ளைகளுக்கு காதல் திருமணம் நடைபெறுவதைத் தடுக்க பெற்றோர் முயற்சி செய்யலாமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:வாசகர் கேள்வி: ஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது அவர்கள் காதலில் விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தீர்கள். தங்கள் பிள்ளைகள் காதலில் விழுவதைத் தவிர்க்க பெற்றோர் பரிகாரம் செய்யலாமா? அது பலனளிக்குமா?

பதில்: காதல் திருமணத்தை தவறாகப் பார்க்கும் மனப்பான்மையை பெற்றோர் முதலில் கைவிட வேண்டும். காதல் திருமணம் மட்டுமே நிலைக்கும் அமைப்பு சில ஜாதகங்களுக்கு உண்டு.

சமீபத்தில் என்னிடம் வந்த பெண் ஜாதகத்தில் (ரிஷப லக்னம், பூரட்டாதி 4ஆம் பாதம், மீன ராசி) லக்னத்தில் செவ்வாய் இருந்தது. 7ஆம் இடத்தில் சனி அமர்ந்திருந்தார். பழங்கால நூல்களில் 7இல் சனி இருந்து செவ்வாய் அதனைப் பார்த்தால், அந்த ஜாதகர் தன்னை விட தகுதி, குணம், ஒழுக்கம், அந்தஸ்தில் குறைந்தவரை திருமணம் செய்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.தகுதி குறைவானவர்கள் எனக் குறிப்பிட்டதை ஜாதியை வைத்து இனம் பிரிக்க முடியாது. ஏனென்றால் உயர்ந்த ஜாதியிலும் தகுதி குறைவானவர்கள் உண்டு.ஜாதகத்தை கணித்து முடித்த பின்னர், உங்கள் ஜாதியிலேயே கொஞ்சம் ஒழுக்கம் குறைந்த பையன் வரனாக அமைவார் என்று அப்பெண்ணின் தாயிடம் கூறினேன்.

இதன் பின்னர் அந்தத் தாய் என்னிடம் சில குடும்ப விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, தனது மகள் தற்போது ஒழுக்கம் குறைந்த ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரைத் தவிர்த்து வேறு வரன் பார்க்கலாமா என்பதை என்னிடம் கேட்க வந்ததாகவும் கூறினார்.ஜோதிடத்தைப் பொறுத்தவரை செவ்வாய், சனி ஆகியவை ஒன்றுக்கொன்று பகை கிரகங்களாகும். செவ்வாய் நெருப்புக்கு உரியது. சனி நீருக்கு உரியது. எனவே, இந்த கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று பார்க்கும் அமைப்பு உள்ள ஜாதகர்களும், ஒரே வீட்டில் இருக்கப் பெற்ற ஜாதகர்களும், தங்கள் நிலை/தகுதிக்கு எதிரான முடிவுகளை எடுப்பர்.எனவே, இவ்விவகாரத்தில் இந்தப் பெண் எடுத்த முடிவு சரியானதாக இருக்கும் என்றும், இந்த வரனைத் தவிர்த்து விட்டு, வேறு மாப்பிள்ளையை நீங்கள் பார்த்தாலும், இதுபோலவே தகுதி குறைவாக அமையும் என்றும் கூறினேன். பையனின் குடும்பம் நன்றாக இருப்பதாலும், அவருக்கு கெட்ட பழக்கங்கள் உள்ளது வெளிப்படையாக தெரிந்துள்ளதாலும் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்கலாம். காலப்போக்கில் இருவருக்கும் இடையே நல்லுறவு மலரும் என்று கூறினேன்.

ஒரு சிலருக்கு காதல் திருமணம் நடந்தாலும், அதில் மணமுறிவு ஏற்பட்டு, பின்னர் பெற்றோர் பார்த்த வரனைத் திருமணம் செய்து இறுதி வரை ஒன்றாக வாழ வேண்டிய நிலையும் ஜாதக ரீதியாக அமையும். இது ஒருபுறம் என்றால், பெற்றோர் நிச்சயித்த திருமணம் தோல்வியில் முடிந்ததால், தாமாகவே விரும்பிய வரனை 2வது திருமணம் செய்து சிறப்பாக வாழும் ஜாதக அமைப்பு உள்ளவர்களும் இருக்கின்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.எனவே, எந்த மாதிரியான கிரக அமைப்பு உள்ளது என்பதை துவக்கத்திலேயே ஆராய்ந்து, அதற்கு ஏற்றது போன்ற திருமணத்தை அமைத்து தருவதே பெற்றோரின் கடமையாக இருக்க வேண்டும். தனது பிள்ளைக்கு காதல் திருமணம்தான் நடக்கும் என்ற கிரக அமைப்பு காணப்பட்டால், அவர்களது காதலை எதிர்க்காமல், நல்ல வரனைத் தேர்வு செய்து திருமணம் நடத்தி வைப்பதே நல்ல பலனைத் தரும்.

உலகெங்கும் வாழும் இந்திய சந்ததிகளே! விரைவில் இந்தியாவுக்குத் திரும்புங்கள்.வெளிநாடுகளில் தொல்லைகளும்;இந்தியாவுக்குள் உங்களுக்கு வரவேற்பும் உள்ளது

இந்திய இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து

தமிழ்.வெப்துனியா.காம்: ஆஸ்ட்ரேலியாவில் புதிதாக ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் அங்கு சென்று தங்கி படித்து வேலை வாய்ப்பை பெறக்கூடிய வாய்ப்பு இந்தியாவில் இருந்து போகக் கூடிய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெரிய அளவில் குறைந்துவிட்டது. இது இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளுக்கு சமிஞ்சையா? ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பொதுவாக பார்க்கும் போது இந்தியா கடக ராசி, ரிஷப லக்னத்தில் இருக்கிறது. தசா புத்தி மற்றவைகளைளெல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது, காலப் போக்கில் இந்தியாவிற்கு பல நெருக்கடிகள் காத்துக் கிடக்கிறது. அதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, இந்தியர்கள் இந்தியாவிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவாவதற்குக் கூட வாய்ப்புகள் உண்டு. அதற்கான சமிஞ்சையெல்லாம் தற்போதே தெரிய ஆரம்பிக்கிறது. குறிப்பாக தற்போது இந்தியாவிற்கு கடக ராசியில் 3ஆம் வீட்டில் சனி இருக்கிறார். 27.12.2011இல் இருந்து இந்தியாவிற்கு 4ஆம் வீட்டிற்கு சனி வரப்போகிறார். இந்த 4வது வீட்டிற்கு சனி வரும்போது உலகெங்கிலும் இருக்கக்கூடிய இந்திய வம்சாவழியினருக்கு சில பாதிப்புகள், நெருக்கடிகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கிறது. தற்போது இந்த கங்காரு தேசம் எடுத்திருக்கக் கூடிய முடிவு போல பல நாடுகளில் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. ஏனென்றால் தற்போதுள்ள கிரக அமைப்புகளை வைத்துப் பார்க்கும் போது அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கனியன் பூங்கொன்றனார் சொன்னதெல்லாம் இனிமேல் இல்லாமல் போகும். அவரவர்கள் தன்னலத்துடன் எங்க நாட்டு மக்களுக்கு எதுவும் இல்லை, நீங்கள் எதற்கு வருகிறீர்கள்? இருப்பவர்களும் வெளியேறுங்கள் என்று சொல்லப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் துலாம் ராசியில் சனி வரும்போது, 27.12.2011க்குப் பிறகு இதுபோன்ற கோஷங்கள், கோரிக்கைகள் இதெல்லாம் உலகெங்கும் அதிகரிக்கும். அதனால் இந்தியா அதற்குத் தயாராக வேண்டும். ஆள்பவர்களும் அதற்குத் தயாராக வேண்டும்.

இந்திய மக்கள்தொகையில் ஏழைகள் 55%


இந்திய மக்கள்தொகையில் ஏழைகளின் எண்ணிக்கை 55%

நமது மத்திய அரசு இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை வெறும் 29% தான் என அடிக்கடி கூறிவந்தது.ஆனால்,ஐ.நா.சபையின் திருத்தப்பட்ட அடிப்படையின் கீழ் கணக்கீடு செய்யும்போது நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை 55% ஆக,அதாவது 64 1/2 கோடி பேர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ஏழைகள் இருக்கும் மாநிலங்களில் பீகார் முதலிடத்திலும்,உத்திரபிரதேசம் இரண்டாமிடத்திலும்,கேரளா கடைசி இடத்திலும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.கேரளாவில் ஏழைகளின் எண்ணிக்கை 20% மட்டுமே.
வசதியான மாநிலங்களான குஜராத்,ஹரியானா,கர்நாடகாவில் 40% ஏழைகள் இருக்கின்றனர்.
இவ்வாறு ஏழைகள் இருக்கும்போது,கடந்த வருடத்தில் மட்டும் 5 கோடிக்கும் மேல் மூலதன சொத்துக்கள் உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை 80,000 லிருந்து 1,20,000 பேர்களாக உயர்ந்துள்ளது என்பதையும்,அதே காலகட்டத்தில் 3.2 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் சென்றுள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதையும் நாம் உணரலாம்.

இந்தியாவில் பரவிவரும் இயற்கை வேளாண்மை


மெல்லப்பரவும் இயற்கை வேளாண்மை

சிக்கிம் மாநிலத்தில் கி.பி.2015க்குள் முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாற அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதன் மூலம் வேதியியல் விவசாயமான தற்போதைய நச்சு விவசாயத்திற்கு விடை கொடுப்படும்.இம்மாநிலத்தில் கி.பி.1997 ஆம் ஆண்டிலேயே பிளாஸ்டிக் மற்றும் வேதியியல் கழிவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.வேதியல் உரத்தினால் செய்யப்படும் விவசாயத்தினை ஒழித்துக்கட்டிட வேண்டும் என்று கி.பி.2003 ஆம் ஆண்டிலேயே வேதியியல் உரத்திற்கான மானியம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

படிப்படியாக இயற்கை ரசாயன விவசாயத்திற்கு மாறினாலும் ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்தின் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை;ஆனால்,தொடர்முயற்சியின் விளைவாக ரசாயன உரங்களால் மலடாகியிருந்த மண்வளம் மீட்கப்பட்டு, தற்போது நற்பலன்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன.

சிக்கிமின் இந்த வெற்றியினைத் தொடர்ந்து இம்முயற்சிகள் இமாச்சலப்பிரதேசத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் பரவத்தொடங்கியிருக்கிறது.

இந்தியர்களின் அறிவுசார் சொத்துக்களை திருடும் பன்னாட்டு நிறுவனங்களும்,அந்தத் திருட்டை தடுத்து நிறுத்தும் பாரத அரசும்

காப்புரிமை மீட்புப்போரில் வென்றுவரும் பாரதம்

சீனா புதினாவின் உற்பத்திக்கு காப்புரிமை கொண்டாடியதனை முறியடித்தப்பின்,இந்திய அரசு டென்மார்க் நிறுவனம் ஒன்று மஞ்சள்,சீரகம்,இஞ்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் உடல் கொழுப்பைக் கரைக்கும் திறனைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமை கொண்டாடி மனுசெய்ததையும் எதிர்த்து முறியடித்துள்ளது.

நமது பாரம்பரிய தாவரங்கள் மற்றும் மூலிகைகளின் மருத்துவ குணங்களையெல்லாம் தாங்கள் தான் கண்டுபிடித்ததுபோல் காப்புரிமை கொண்டாடும் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்க ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையமும் பாரம்பரிய அறிவு நூலகமும் சேர்ந்து 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்ட ஆயுர்வேத நூல்களில் விளக்கப்பட்டுள்ள மருத்துவத் தயாரிப்பு முறைகளை ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

உலகளவில் இந்திய தொழிற்கல்வியின் எதிர்காலம்

உலக அரங்கில் இந்திய தொழில் கல்வியின் நிலை

ஜெர்மனியின் தொழிற்கல்வி உலகத்தரம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.எனவே,ஜெர்மனியின் உதவியால் இந்தியாவில் ஐ.ஐ.டிக்கள் துவக்கப்பட்டன.அதனால் தான் இந்திய ஐ.ஐ.டி.மாணவர்கள் உலகெங்கும் பிரகாசிக்கிறார்கள்.

உலக அளவில் மக்கள்தொகையில் 80% பேர்கள் தொழிற்கல்வி படிக்கின்றனர்.இந்தியாவில் வெறும் 3% பேர்கள் தான் தொழிற்கல்வி படிக்கின்றனர்.பிறகு எப்படி சர்வீஸ் மேன்கள் சுலபமாகக் கிடைப்பார்கள்?

உலக அளவில் 3000 விதமான பாடங்கள் தொழிற்கல்வியில் (ஐ.டி.ஐ) பயிற்றுவிக்கப்பட்டுவருகின்றன.ஆனால்,உலகின் ஒரே ஜனநாயகநாடும்,அதிகமான ஜனத்தொகையும் கொண்ட நமது இந்தியாவில் வெறும் 500 விதமான தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் 2/3 பங்கு மக்கள்தொகையினர் தொழிற்கல்வி கற்றுவருகின்றனர்.

கொரியாவில் பாடத்திட்டங்கள் தொழிற்சாலையின் தேவைக்கேற்ப அவ்வப்போது மாற்றியமைத்துக்கொண்டே இருக்கின்றனர்.அதனால்தான் தொழிற்துறையில் கொரியத் தயாரிப்புக்கள் சக்கைபோடு போடுகின்றன.

இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடிபேர்கள் ஆகும்.அதனால்,தனியார் நிறுவனங்கள் தொழில்நுணுக்கம் தெரிந்த ஆட்கள் இல்லாமல் திண்டாடுகின்றன.

அகில இந்திய அளவில் ஸ்டீல் உற்பத்தித் தொழிற்சாலைகள் 120% உற்பத்திக்கு முயற்சித்துவருகின்றன.இந்த உற்பத்தியை எட்டிட 80,00,000 தொழிலாளர்கள் தேவை.ஆனால்,ஓரிரு ஆண்டுகளில் அதாவது கி.பி.2013க்குள் இந்த அளவிற்கு தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம்.இதனால்,இந்தியப் பொருளாதாரம் பாதிப்படைவதோடு உலக அரங்கில் போட்டியிடும் திறன் பாதிப்பாகி,இந்தியா உலக அரங்கில் தனது பிடியை இழந்துவிடும்.இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், 35 வயதுக்குக் கீழுள்ள இந்தியர்களின் ஜனத்தொகை 77 கோடிகளாகும்.இவர்களில் நான்கில் ஒரு பங்கினர் ஐ.டி.ஐ.படிக்குமளவுக்கு தொழிற்பயிற்சிப்பள்ளிகள் இந்தியாவில் இல்லையென்பது வேதனையான உண்மை.எப்படி நாம் வல்லரசாவோம்?

ஒரு இந்துச்சம்பிரதாயம்


ஒரு இந்துச்சம்பிரதாயம்

தமிழ்நாடு மாநிலம்,தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் இருக்கும் ஊர் எட்டயபுரம்.இங்குதான் ஆங்கிலேயனை எதிர்த்துப்போரிட்ட கட்டபொம்மன் மகாராஜா வாழ்ந்தார்.இவரை காட்டிக்கொடுத்த எட்டப்பனும் இதே பகுதியில்தான் வாழ்ந்தான்.

எட்டப்பனின் செய்கையை மறக்காமலிருக்கும்பொருட்டு,இப்பகுதி மக்கள் ஒரு சிறு காரியம் செய்துவருகின்றனர்.

எண்களை எண்ணும்போது ஆறு,ஏழு,எட்டு என நாம் பொதுவாகக் குறிப்பிடுவோம்; ஆனால்,எட்டயபுரம் மக்கள் ஆறு,ஏழு,மகாராஜா,ஒன்பது என்றே இன்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதே போல்,எண்பது என்பதை மகாராஜா பத்து என்றும்,

எண்ணூறு என்பதை மகாராஜாநூறு என்றும்,

எட்டாயிரம் என்பதை மகாராஜா ஆயிரம் என்றும் பயன்படுத்திவருகின்றனர்.

இவர்களைப்போன்ற ராஜவிசுவாசம்மிக்க மக்கள் இருக்கும்வரை நமது பாரதப்பண்பாட்டை இந்த உலகமே எதிர்த்தாலும் யாராலும் அழிக்க முடியாது.

ஆதாரம்:ஆகஸ்டு,1982ஆம் ஆண்டில் வெளிவந்த ஆனந்த விகடன்.