RightClick

செல்வ வளம் பெருக வைக்கும் கஜலட்சுமி வழிபாடு


செல்வ வளம் பெருக வைக்கும் கஜலட்சுமி வழிபாடு

நமது ஜாதகரீதியாக எத்தனை கொடிய த்ரித்திர யோகமிருந்தாலும்,சிலரின் சாபத்தாலோ,பலரின் வயிற்றெரிச்சலாலோ அல்லது கர்மவினை,செய்வினை மந்திரப்பிரயோகத்தாலோ எது எப்படியிருப்பினும் திட மனதுடன்,தளராத மன உறுதியுடன்,விடா முயற்சியால் இந்த கஜலட்சுமிபூஜை செய்தால் நமது தரித்திரம் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது அனுபவ உண்மை.


வளர்பிறை வெள்ளிக்கிழமையும்,திருஓணம் நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாளில் இந்த பூஜையை ஆரம்பித்து தொடர்ச்சியாக 24 வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும்.திருஓணம் வரும் வெள்ளியன்று நீராடி தூய உடை உடுத்தி,குலதெய்வத்தை மானசீகமாக வேண்டிட வேண்டும்.பிறகு விநாயகரை மனதார வேண்டி 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இந்த பூஜை நடைபெற உதவுமாறு வேண்டி வழிபட்டு,குருவை தியானிக்கவேண்டும்.
அதன்பிறகு இஷ்ட தெய்வத்தையும் பூஜித்து வழிபட்டு காலையில் சுக்கிர ஓரையில் இந்த தனம் தரும் கஜலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும்.

நுனி வாழையிலையில் நெல்பரப்பி,அதன் மீது மற்றொரு இலை வைத்து பச்சரிசி பரப்பி அதன்மீது புதுமண்கலசம் அல்லது புதுகலசச் சொம்பு வைத்து அதில் நூல் சுற்றி அதன் உள்ளே அஷ்டகந்தம் என்னும் எட்டுவிதமான வாசனைப் பொருட்கள்,
குண்டு மஞ்சள்,வெட்டிவேர்,பன்னீர்,வெள்ளிக்காசு முதலியனவற்றை விட்டு அதன் வாயில் மாவிலை வைத்து புதிய நல்ல தேங்காயை வைத்து,அத்துடன் கலசத்தில் பொட்டு வைத்து,பூவைத்து,சிகப்புப் பட்டு ஆடை சார்த்திவைக்க வேண்டும்.

கலசத்தின் முன்பு நெய்யால் தீபம் ஏற்றிட வேண்டும்.இலையில் தாம்பூலம்,தேங்காய்,பழம்,லட்டு,பாலில் செய்த இனிப்பு வகை ஒன்று, வெண் மொச்சை,சுண்டல் முதலியவற்றைப் படைக்க வேண்டும்.அந்த கலசத்தில் சவுபாக்கிய லட்சுமி எழுந்தருளும்படி வேண்டிட வேண்டும்.

அதன்பிறகு சோடேசபூஜை என்னும் பதினாறுவகை உபச்சாரங்கள் செய்யவும்.(புத்தகக் கடைகளில் சோடேச பூஜை செய்யும் முறை என்ற புத்தகம் வாங்கி வைத்துக்கொள்ளவும்)சவுபாக்கியமகாலட்சுமியிடம் நமது தரித்திரம்,பணக்கஷ்டம்,பணப் பற்றாக்குறை நீங்கிட வேண்டவேண்டும்.

செல்வத்தை வாரி வழங்கும் ஸ்ரீகஜலட்சுமியை மனதார வேண்டியவாறு
ஓம் ஸ்ரீம் ச் ரீயை நம தனம் ஆகர்ஷய ஆகர்ஷய
என்ற மூல மந்திரத்தை 1008 முறை மெதுவாகவும்,நிதானமாகவும் ஜபிக்க வேண்டும்.
அதன்பிறகு,மல்லிகை இதழ்களால் அல்லது தாமரை இதழ்களால் ஓம் ஸ்ரீமகாலக்ஷ்மி சவுபாக்கிய தாரண்யை நம என்று 108 முறை அர்ச்சிக்க வேண்டும்.அர்ச்சித்தப்பின்பு,தூபதீப நைவேத்தியம் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் இந்த கலசத்தைக் கலைக்காமல் அப்படியே வைத்திருந்து அடுத்தடுத்த வாரங்களில் கலசத்தில் சிறிது நீரும் வாசனைத் திரவியமும் சேர்த்து பூஜை செய்யவேண்டும்.

இப்படி ஒவ்வொரு வாரமும் வீதம் 24 வெள்ளிக்கிழமைகள் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது காலை 6 முதல் 7 மணிக்குள் செய்துவரவேண்டும்.

இந்த பூஜையை தொடர்ந்து செய்யவிடாமல் நமது கர்ம வினைகள் தடுக்கலாம்;அதையும் மீறி பக்தி,வைராக்கியத்தால் தொடர்ந்து செய்து பெரும் செல்வ வளத்தை அடைவீர்களாக!
நன்றி:ஜோதிட பூமி,பக்கம் 42,ஆகஸ்டு 2010

சனிபகவானை மகிழ்விக்கும் துதி(ஏழரைச் சனி,அஷ்டமசனிக்காரர்களுக்கு)

சனிபகவானை மகிழ்விக்கும் துதி

தினமும் வரும் சனி ஓரை நேரத்தில் பின்வரும் பாடலை மனதுக்குள் எட்டு முறை ஜபித்துவந்தால்,சனியால் ஏற்படும் (அஷ்டமச்சனி,ஏழரைச்சனி,அர்த்தாஷ்டமச் சனி)
துன்பங்கள் குறையும்.

காகத்தின் மீதினில் கருணையாய் வருபவர்
சோகமே தீர்த்து சுகமது தருபவர்
மோகமும் மூடமும் மோசமும் தீர்ப்பவர்
வேதனே மந்தனே வேண்டினேன் போற்றியே

இந்த மந்திரத்தை உபதேசித்தவர் ஸ்ரீலஸ்ரீதுர்க்கை சித்தர் சுவாமிகள்
.

தமிழ்நாட்டின் புராதன இந்துக்கலைகளை கற்றுக்கொள்ள ஒரு ஏற்பாடு

புராதனக் கலைகள் கற்றுக்கொள்ள ஒரு ஏற்பாடு

தமிழ்நாட்டின் புராதனக் கலைகளான பம்பை,உடுக்கை,உருமி மேளம்,கோலாட்டம்,கும்மி,நாதஸ்வரம்,கொம்புகுழல்,தாரை,தப்பட்டை,திடும்பு,உடும்பு,லவண்டை,பேரிகை உள்ளிட்ட முக்கியமான கிராமீய அபூர்வக் கலைகள் கற்றுத்தர இந்தியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது.
இத்துடன் கோவிலில் பூஜை செய்யும் விதம்,பூஜாரிப் பயிற்சி,மந்திரம் உச்சரிக்கும் முறை,சுவாமி விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யும் விதம்,தேவாரம் திருவாசகம் ஓதுதல் போன்ற பயிற்சிகளும் காமாட்சிபுரி ஆதினம் அவர்களின் ஆசியோடு இந்தியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் வழங்குகிறது.இதுபற்றி மேலும் விபரமறிய அஞ்சல் முகவரி:
கோவை காமாட்சிபுரி ஆதீனம்
கோளறுபதிக நவக்கிரகக் கோட்டை,
சித்தம்பலம்,
பல்லடம் அருகில்,திருப்பூர் மாவட்டம்.

பதவி உயர்வைத் தரும் மந்திரம்

பதவி உயர்வைத் தரும் மந்திரம்

மந்திரம் 1:

சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸீகேஸ்வரீம்

அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்

மந்திரம் 2:

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்

ச் ரீயம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜீஷதாம்

இந்த இரண்டு மந்திரங்களையும் ஜபிக்கும்போது,லட்சுமியை வெள்ளைத் தாமரை மற்றும் குங்குமப்பூவால் அர்ச்சிக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து 48 நாட்கள் ஜபித்துவந்தால், மிக உயர்ந்த பதவி/பதவி உயர்வு கிடைக்கும்.இந்த வழிமுறையை நமக்கு சித்விலாஸ விருத்தி என்ற நூல் சொல்லுகிறது.

நன்றி:தினமலர் பக்கம் 17, 21.10.2007

எனது ஜோதிட அனுபவங்கள்-1

எனது ஜோதிட அனுபவங்கள்-1
எங்களுடைய ஊரில் ஒரு VAO இருந்தார்.அவர் எனது உறவினர் மூலமாக எனக்கு அறிமுகமானார்.அவரது வீட்டுக்குச் சென்று அவரது ஜாதகம்,அவரது மனைவி,மகளின் ஜாதகங்களைப் பார்த்தேன்.பார்த்து முடித்துவிட்டு,புறப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபின்னரே அவர் கூறினார்.
எனது மகள் டிகிரி படிப்பாள் என உறுதியாக சொன்னீர்கள்.ஆனால்,இதுவரை நாங்கள் பார்த்த ஜோதிடர்கள் அனைவருமே உங்கள் மகள்பள்ளிப் படிப்பை தாண்டிட மாட்டாள் எனக் கூறியுள்ளார்களே? ஏன் இந்த வித்தியாசம்? எனக் கேட்டார்.
நான் யோசித்தேன்.இந்தக் கேள்விக்கு என்ன விடை சொல்வது என அவரது மகளின் பிறந்த ஜாதகத்தை மனக்கண்ணுக்குக் கொண்டு வந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.
அவரே எடுத்துக் கொடுத்தார்.
‘இல்லீங்க ஜோசியரே!
எனது மகளுக்கு புதன் நீசம்.இப்போ புதன் தசை நடக்குது.இது அவளின் 15 ஆம் வயது வரை நடப்பதால் அவள் பள்ளிப்படிப்போடு (படிப்பை)நிறுத்திவிடுவாள்’ என எல்லா ஜோதிடரும் சொல்லியிருக்கிறார்கள் என விளக்கினார்.
இப்போது எனக்குப் புரிந்துவிட்டது.உங்கள் மகளுக்கு தாய் மாமா இருக்கிறாரா? எனக் கேட்டேன்.
“இருக்கிறார்” என அந்த VAO சொன்னார்.
“சரி,அந்த தாய்மாமா உங்கள் மனைவியின் உடன் பிறந்தவரா? இல்லை சித்தப்பா பெரியப்பாவின் மகனா?” என கூர்மையாகக் கேட்டேன்.
அவரோ பதட்டத்தோடு, “இல்லையில்லை; எனது மனைவியின் சொந்தத் தம்பி” என அழுத்தந்திருத்தமாக சொன்னார்.
அப்போ,உங்க மகளுக்கு புதன் நீசமாக இருக்கிறது என அந்த ஜோதிடர்கள் சொன்னது பொய்.புதன் நீசமாக இருந்தால், தாய்மாமா இருக்கக் கூடாது.நீங்களோ தாய் மாமா இருப்பதாக சொல்கிறீர்கள்.எனவே, உங்கள் மகள் நிச்சயமாக பட்டப்படிப்பு படிப்பாள்” என ஆறுதல் கூறினேன்.
அவர் பரம திருப்தியடைந்தது அவரது முகத்தில் தெரிந்தது.
ஜோதிட விதிமுறைகள் பல இருக்கின்றன.ஒரு ஜாதகருக்கு தாய்மாமா இருக்கிறாரா? இல்லையா ?என்பதை அறிவதற்கே சுமார் 40 விதிகள் இருக்கின்றன.புதன் நீசம் என்பது ஒரு மேலோட்டமான சட்டென அடையாளம் கண்டுகொள்ளப்படக் கூடிய விதி.அவ்வளவே!
இதேபோலத்தான்,ஒருவருக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்று கேள்விகேட்டால்,அதற்கும் சுமார் 40 ஜோதிட விதிமுறைகள் இருக்கின்றன.நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலான ஜோதிடர்கள் தினமும் ஜோதிடப் புத்தகங்களைப் படிப்பதில்லை.இதுதான் ஜோதிடத்தின் மீது மக்கள் அவநம்பிக்கை கொள்வதற்குக் காரணம்!

ஆன்மீகத் துளிகள்:1

திருஅண்ணாமலை கிரிவலம் செல்லும் முறைகளில் மட்டும் ஒரு லட்சத்து எட்டு விதமான முறைகள் இருக்கின்றன.இதில் ஒரு சில மட்டுமே நமது முன் ஜன்மபுண்ணியத்துக்கு ஏற்ப நமக்குத் தெரியும்.

திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் கிரிவலம் சென்றால்,மற்ற நாட்களில் கிரிவலம் செல்லும் நாளை விட அதிகமான புண்ணியம் கிடைக்கும்.அப்படி கிரிவலம் செல்லும் போது,அன்னதானம் செய்தால்,அதை விட பெரும் பேறு வேறில்லை; (சிவபெருமானின் ஜன்ம நட்சத்திரம் திருவாதிரை என்பதை இப்போது நினைவில் கொள்ளவும்)

துவாதசி திதியன்று ஒருவன் அண்ணாமலையில் ஒரு நாளுக்கு அன்னதானம் செய்தால்,அவன் தனது வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்த புண்ணியத்தை அடைகிறான்.மேலும்,அவன் மீண்டும் பிறவாத நிலையை அடைகிறான் என அருணாச்சல புராணம் சொல்லுகிறது.ஆக,துவாதசி திதியன்று கிரிவலம் சென்றவாறு அன்னதானம் செய்தால்?
ஒரு முக்கிய வேலையாக நாம் நமது இடத்திலிருந்து புறப்படுகிறோம்.வீட்டின் வாசலில்/வாசலுக்கு வெளியே முதல் காலடி எடுத்து வைக்கும் போது,நமது மூக்கில் எந்த துவாரத்திலிருந்து மட்டும் சுவாசம் அப்போது வருகிறதோ,அந்த காலை எடுத்துவைத்து புறப்பட்டால்,காரிய வெற்றி உண்டாகும்.
உதாரணமாக,நான் ஒரு வேலைக்கு நேர்காணலுக்கு இன்று காலையில் எனது வீட்டிலிருந்து புறப்படுகிறேன்.வாசலுக்கருகில் வந்ததும்,எனது ஆள்காட்டிவிரலை வைத்து,எனது மூக்குத்துவாரங்கள் ஒவ்வொன்றிலும் வைத்துப் பார்க்கிறேன்.அப்போது,எனது இடது மூக்குத் துவாரம் வழியாக சுவாசம் நடக்கிறது.நான் எனது வீட்டின் வாசலில் வைக்கும் முதல் அடி,எனது இடது காலை வைத்து! எனக்கு வேலை கிடைத்துவிடுகிறது.
(சரக்கலையின் அடிப்படை ரகசியம் இதுதான்)

பெண்களின் மாத விலக்கு சமயத்தில் உருவாகும் கழிவு இரும்பையே உருக்கும் என எனது ஜோதிட குருநாதர்களில் ஒருவர் சொன்னார்.இதை முறைப்படி ஆராய்ச்சி செய்ய முடியவில்லை;உங்களில் யாராவது இதை இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து எமக்கு மின்னஞ்சல் அனுப்பினால் நல்லது.

கி.பி.1971 ஆம் ஆண்டில் திருநெல்வேலியிலிருந்து ஒரு புத்தகம் அகமதியா முஸ்லீம்களால் வெளியிடப்பட்டது.அந்த புத்தகத்தின் பெயர் ஏசுவின் மரணம் காஷ்மீரிலே! இதில் கிறிஸ்தவ மதத்தின் ஸ்தாபகர் ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட நிஜங்களை விரிவாகவும்,உலகம் முழுக்கவும் இருக்கும் நாடுகளின் ரகசிய ஆவணங்களினை ஆராய்ந்தும் எழுதப்பட்டதாம்.மொத்தம் ஆயிரம் பிரதிகள் வெளியிடப்பட்டதாம்.உங்களில் யாரிடமாவது இருக்குமா?


வாழ்க அறமுடன் என்பதும் ஒருவித மந்திரமே! இதை அடிக்கடி நினைத்தாலோ,பேசினாலோ நமது நரம்புகளில் இறுக்கம் குறைகிறது.

உங்களது பாவங்கள்,உங்களது முன்னோர்களின் பாவங்கள் தீர ஒரு சுலப வழி இருப்பதாக போன வாரம் எனது குருநாதர்களில் ஒருவர் உபதேசம் செய்தார்.
அது என்னவென்றால்,நீங்கள் எந்த ராசி,லக்னம்,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி.ஒவ்வொரு பவுர்ணமியன்றும் உங்கள் தெரு/வீட்டருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றுக்கொண்டிருக்கும்.
அங்கே,பவுர்ணமிபூஜை இரவு பத்துமணிக்குமேல் நள்ளிரவு இரண்டுமணிக்குள் நடைபெறவேண்டும் என்பது மட்டும் கட்டாயம்.(பெரும்பாலான இடங்களில் இரவு ஒன்பது மணிக்கே பவுர்ணமிபூஜையை முடித்துவிடுகிறார்கள்)அப்படி நடக்கும் இடங்களுக்குச் சென்று அந்த பவுர்ணமிபூஜை நடைபெறும்போது,காயத்ரி மந்திரத்தை கிழக்கு நோக்கி,அம்மன் சன்னிதியில் அமர்ந்து பவுர்ணமி பூஜை முடியும் வரை ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.இப்படி 12 பவுர்ணமிகளுக்கு ஜபித்தால் போதும்.பெரும்பாலான பாவங்கள் தீர்ந்துவிடும்.

ராகு மகாதிசை அல்லது ஜன்ம ராகு நடப்பவர்களுக்கு மட்டுமே மாந்திரீக பாதிப்பை வேறு ஒருவரால் உருவாக்கமுடியும்.வேறு எப்போதும் எல்லோருக்கும் மாந்திரீகம் வைக்க முடியாது.தற்போது,தனுசு ராசியில் ராகு பகவான் ஆகஸ்டு 2011 வரை இருக்கிறார்.இதனால்,தனுசு ராசிக்காரர்கள் மாந்திரீகபாதிப்பிற்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது.
மாந்திரீகத்தை ஒருவர் மீது ஏவுவதற்கு காளியே துணை செய்கிறாள்.அதே மாந்திரீகப் பாதிப்பை நீக்கவும் காளியே துணை புரிகிறாள்.எனவே,ராகு மகாதிசை நடப்பவர்கள் மட்டுமல்ல;யார் வேண்டுமானாலும் காளியை தினசரி வழிபட்டுவருவது நல்லது;
அல்லது குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலமாக மாந்திரீக பாதிப்பிலிருந்து முழுமையாகத் தப்பிக்கலாம்.

ஜோதிடம் கற்பதற்கே முன்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.வெறும் ஒன்பது கிரகங்கள்,27 நட்சத்திரங்கள்,12 ராசிகள் தான் என பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள்.அதையும் கடந்து, அதில் ஏராளமான சூட்சுமங்கள் ஒளிந்திருக்கின்றன.அவற்றினை நேரடியாக உணரும்போது நாம் திகைத்துப்போவோம்.


தற்போது இந்தியாவில் இருக்கும் பல அரசியல்வாதிகள் சித்தர்களின் ஆசி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்

சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்...!!

சித்தர்கள் கண்டறிந்த வாதவித்தையே சிறந்த விஞ்ஞான, ரசாயன ஆராய்ச்சியாகும். உலோகங்கள், உப்புக்கள், பாஷாணங்கள், வேர்கள், இலைகள், விதைகள், பட்டைகள், பூக்கள், முத்து, பவளம், மற்றும் பல கடல் பொருட்கள், விலங்குகளின் உடல்களில் இருந்து கிடக்கும், கஸ்தூரி, புனுகு, சலம், சாணம் முதலியவற்றின் குணங்களை எல்லாம் கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்களே. அவற்றின் நோய் தீர்க்கும் பண்புகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.

இவ்வாறு ஆராய்ந்து இவற்றைச் சேர்த்தால் இன்ன மருந்து கிடைக்கும். இன்ன நோய்க்கு இன்ன மருந்து. இந்த மருந்து இன்னின்ன நோய்களுக்குப் பலன் தரும், நுகரும் மருந்து, பூசும் மருந்து, குடிக்கும் மருந்து எனப் பலவகையான மருத்துவ ஆய்வுகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.

இன்று இருப்பது போல விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்கள் இல்லாத அந்தக்காலத்தில் காட்டிலும் , மலையிலும், குகையிலும் வாழ்ந்த இந்த பேரறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை நடத்தி ஒவ்வொன்றின் மருத்துவப் பண்புகளை கண்டறிந்து மக்களுக்கு தெரிவித்துள்ளது வியப்பளிக்கும் செய்தியாகும்.

இதேபோல வானவியல், சோதிடம், மருத்துவம் என எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சி செய்து தெளிவான முடிவுகளை அறிவித்தே உள்ளனர்.

ஆகவே சித்தர்களை உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றும், விஞ்ஞானத்தின் முன்னோடிகள் என்று கூறலாம். மனிதனும், நாடும், உலகமும், நலம் பெற, முன்னேற பல்வேறு அறிவுரைகளை நமக்கு அளித்துச் சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள், இக் காலத்தில் உள்ளது போன்று பல்வேறு உபகரணங்கள் இல்லாத அக்காலத்தில் மனித சமூகம் வளம்பெற, உடல் நலம்பெற, ஆன்மிகம் தளைத்தோங்க, மருத்துவ இயல், வானவியல், போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ந்து, உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை தம் பிற்கால சந்ததியினருக்கு பயன் பெரும் வகையில் பாடி சென்றுள்ளனர். இது யாராலும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.

ஆகவே,
சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றால் அது மிகைப் படுத்தல் அல்லவே. நன்றியுடன் www.sith

சிறந்த மணவாழ்க்கை அமைய சிறந்த வழி: நன்றி தமிழ் வெப்துனியா

நல்ல மணவாழ்க்கை அமைய சிறந்த வழி எது?


தமிழ்.வெப்துனியா.காம்: சிறந்த, சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்து கொள்ள சரியான வழி எது? இதுபற்றி விவாதமெல்லாம் நடைபெற்று வருகிறது. காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அதன் பிறகு கல்யாணம் செய்வது மூலம் ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்றும், உங்களைக் கேட்டால் ஜோதிடத்தைப் பார்பது அவசியம் என்று சொல்வீர்கள். ஜோதிடம், காதல் இதில் வாழ்க்கை புரிந்துகொண்டு அமைத்துக் கொள்ள சரியான வழி எது?ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஜோதிடத்தைப் பொறுத்தவரை முன்பெல்லாம் பெரியவர்கள் வந்து பையன் ஜாதகம் எப்படி இருக்கிறது, பேரன் ஜாதகம் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டுப் போவார்கள். இது முன்பு இருந்த நடைமுறை. தற்பொழுது நம்மிடம் வருபவர்கள் எல்லாமே இளைஞர்கள்தான். பெரும்பாலும் மென்பொருள் துறையில் இருப்பவர்கள், திருமணத்திற்குத் தயாராக இருப்பவர்கள்தான் அதிகமாக வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்க்கை வசந்தமாக இருக்க வேண்டும். திருமணம் வசந்தமாக இருக்க வேண்டும் என்பதில் ஆவல் அதிகமாக உள்ளது. பெருகிவரும் விவாகரத்து, குறுகிவரும் புரிந்துகொள்ளாத நிலை, கணவரால் துன்புறுத்தப்படுதல் போன்றவைகளையெல்லாம் பார்த்துவிட்டு மிகவும் வெறுப்படைந்து உள்ளனர்.

ஒரு கல்லூரி மாணவி வந்திருந்தார். அவர் மூன்று பிறந்த தேதிகளைக் கொண்டு வந்திருந்தார். இந்த மூன்று பேருமே என்னை விரும்புகிறார்கள். மூன்று பேருமே என் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று ஜாதங்களில் எது சிறந்தது, எனக்கு எது பொருந்தும் என்று தேர்வு செய்து கொடுங்கள் என்று கேட்டார். பிறகு அந்த மூன்றில் அவருடைய ஜாதகத்திற்கு தகுந்த மாதிரி ஒன்று அருமையாக இருந்தது. அதை தேர்வு செய்து கொடுத்தேன். எப்படியும் இவர்கள் வீட்டில் ஜாதகம் பார்ப்பார்கள். அவர்கள் பார்க்கும் போது நிராகரிப்பதாக இருக்கக்கூடாது. அந்த மாதிரி எது இருக்கிறதோ அதை கொடுங்கள் என்று கேட்டார். என்னுடைய பார்வையில் பர்சனாலிட்டி யாரும் குறைவில்லை. கல்வியும் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் ‘லவ் கம் அரேஞ்சிடாக’ வந்து முடிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் வீட்டில் உள்ளவர்கள் எதிர்க்கக் கூடாது. அதே நேரத்தில் என்னை நானும் ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. காதல் என்ற பெயரில் சரியில்லாத, பொருந்தி வராத ஜாதகத்தை கல்யாணம் செய்து கொண்டு என்னை நானே ஏமாற்றிக் கொண்டு 4, 5 வருடங்கள் கழித்து பேக் டூ பெவிலியன் வந்து, பிறகு அப்பா, அம்மா பார்க்கிற யாரோ ஒருவரை கல்யாணம் செய்துகொள்கிற சூழ்நிலை வரக்கூடாது. அதனால் நீங்கள் சரியானதை சொல்லுங்கள். இல்லை மூன்றுமே பொருந்தவில்லையென்றாலும் சொல்லிவிடுங்கள். இந்த மூன்றையுமே புறக்கணித்துவிடுகிறேன் என்று கூறினார் அந்தப் பெண். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த மாதிரி காதல் விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிறது.

முன்பு ஏதோ ஒன்றிற்காக விரும்புவது, அதற்காக தன்னை பலி கொடுப்பது, அந்த மாதிரியெல்லாம் இப்பொழுது கிடையவே கிடையாது. இப்பொழுது, வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஜாதகமும் பொருந்தி வரவேண்டும். கடைசி வரைக்கும் துணையோடு இருக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஏனென்றால் தற்பொழுது மறுமணம் அதிகரித்துவிட்டது. அதனால், இப்பொழுது இருக்கிற கன்னிப் பெண்கள், இளைஞர்களுக்கு பயம் வர ஆரம்பித்துவிட்டது. ஏனென்றால், ஒரு வருடம், இரண்டு வருடம் அன்யோன்மாக, உயிருக்கு உயிராய் காதலித்துவிட்டு, ஏதோ ஒரு காரணத்தால் திடீரென்று பிரிகிறார்கள். இந்த மாதிரியான ஜாதகத்தையெல்லாம் கூட பார்க்கிறோம். சிலருக்கு முன்கூட்டியே தெரிவிக்கிறோம். உங்களுக்கு என்ன இருந்தாலும் காதல் திருமணம் கிடையாது. ஏனென்றால் சுக்ரன் உங்கள் ஜாதகத்தில் பலவீனமாக இருக்கிறார். சுக்ரன் நீச்சமானால், வலுவான காதல் கொடுத்து பிறகு அந்தக் காதல் தோல்வியாகி பெரிய காயத்தை இதயத்தில் உண்டாக்கிவிட்டு போய்விடும். இந்த மாதிரியெல்லாம் முன்கூட்டியே சொல்வது உண்டு. நீங்கள் காதலிக்கலாம், காதல் வலுவாக இருக்கும். ஆனால் காதலி மனைவியாகக் கூடியது உங்கள் ஜாதகத்தில் இல்லை என்று கூறுவோம்.

சனியில் வரும் காதல் சனியோடு போய்விடும்!

அதேபோல, ஏழரைச் சனி, அஷ்டத்துச் சனி நடக்கும் போதெல்லாம் தீவிரமாக காதலிப்பார்கள். ஏழரைச் சனி, அஷ்டத்துச் சனி இருக்கிறதே, விட்ட குறை தொட்ட குறை என்று பெரியவர்கள் சொல்வார்களே, அந்த மாதிரி நட்புகளையெல்லாம் நம் கண் முன்னால் நிறுத்தும். விட்ட குறை, தொட்ட குறைதான். அந்தக் குறையாக இருப்பதை அவர்கள் பூர்த்தி செய்துவிட்டுப் போய்விடுவார்கள். ஒரு இரண்டு வருடம் ஆழமான அன்போடு இருப்பார்கள். அனைத்தும் இருக்கும். ஆனால் சனியில் வரும் காதல் சனியோடு முடிந்துவிடும். அந்த ஏழரை சனி முடிந்த உடனேயே ஒரு தெளிவு பிறக்கும். இவ்வளவு நாளாக வீணாக கழித்துவிட்டோமே, வேறு வேலை எதையாவது பார்த்திருக்கலாமே, வீணாக லீவ் போட்டுவிட்டு சுற்றி வந்தோமே, கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தோமே என்று இரண்டு பேருக்குமே ஏமாற்றங்களைத் தரக்கூடியது.

அதனால்தான் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி நடப்பவர்களை கொஞ்சம் எச்சரிக்கை செய்து அனுப்புவது. கொஞ்சம் கவனமாக இருங்கள். இப்பொழுது பேசுகிற வசனங்களை நம்பி வாழ்க்கையைத் தீர்மானிக்காதீர்கள். நட்பாக பழகுங்கள். யதார்த்தமாக ஒத்துவருகிறதா என்று பாருங்கள். காயப்படுத்திக் கொள்ளாமல் கல்யாணம் செய்துகொள்ளப் பாருங்கள். இதில், சில பெற்றோர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். சில பெற்றோர்களுக்கு நாமே எடுத்துச் சொல்கிறோம். எப்படிப் பார்த்தாலும் உங்க பெண்ணுக்கு காதல் திருமணம்தான், ஏனென்றால் 7ஆம் இடத்தில் சனி, 8இல் ராகு, சுக்ரன் அஷ்டத்தில் கிடக்கிறார். உங்கள் ஜாதியிலேயே பார்த்து கொடுப்பது சாதகமாக இருக்காது. இந்த மாதிரியான காதல் திருமணம், காந்தர்வத் திருமணம் எல்லேமே சாதமாக வருகிறது, அதையும் கணித்துச் சொல்லிவிடுகிறோம்.

சிலரெல்லாம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். நாம் பொருத்தம் பார்த்திருந்தால் கூட அந்த அளவிற்கு பொருந்தியிருக்காது. அவ்வளவு பிரமாண்டமான பொருத்தமெல்லாம் பெற்றிருக்கிறார்கள். அதில் 7க்கு உரிய கிரகம், லக்னத்திற்கு 7க்கு உரிய கிரகம் நன்றாக ஆட்சி உச்சம் பெற்று லக்னாதிபதியோடு சேர்ந்திருக்கும் போது, சுக்ரன் நன்றாக இருக்கும்போது பார்த்தீர்களென்றால் மிகவும் அற்புதமாக வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த அதிர்ஷ்டம் அவர்களுக்கு அமைந்துவிடுகிறது. சரியில்லாத சிலர்தான் அதில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த மாதிரியான சில விடயங்களெல்லாம் இதில் உண்டு.


உங்களின் ஜிமெயில் மற்றும் வலைப்பூவை பாதுகாப்பது எப்படி?

* நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியின் வேகத்தில்
ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக ஆண்டிவைரஸ்
மென்பொருள் கொண்டு கணினியை சோதியுங்கள்.

* ஜீமெயில் பயன்படுத்துபவராக இருந்தால் பாஸ்வேர்ட்
ரெக்கவரியில் உங்கள் அலைபேசி எண்ணை சேமித்துவிடுங்கள்.

* அனைத்து இமெயில் Contact -ம் அவ்வப்போது சேமித்து
வையுங்கள்.

* இமெயில் உருவாக்கிய தேதியையும் செக்யூரிட்டி கேள்வியின்
பதிலையும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.

* சொந்தக்கணினி பயன்படுத்துபவராக இருந்தால் இமெயிலுக்கு
தனி உலாவியையும் , மற்ற வேலைகளுக்கு தனி உலாவியையும்
பயன்படுத்துங்கள்.

* எக்காரணம் கொண்டும் பாஸ்வேர்ட் நம் கணினியில் சேமித்து
வைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள்ளே
செல்லுங்கள்.

* நம் இமெயிலுக்கு வரும் எந்த லிங்கையும் சொடுக்காதீர்கள்
அது பேஸ்புக் வாழ்த்தாக இருந்தாலும் சரி சொடுக்கவே கூடாது.

* பல இமெயில் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கடவுச்சொல்
வைக்கவும்,ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டாம்.
இதைத் தவிர பிரெளவ்சிங் செண்டர்களில் நாம் இமெயில் திறக்கும்
முன் அந்த கணினியில் கீலாக்கர் போன்ற எந்த மென்பொருளும்
இருக்கிறதா என்று சோதிதபின் பயன்படுத்துங்கள்.

Trojan code - கொண்டு யாருடைய இமெயில் கடவுச்சொல்லையும்
எந்த இணையதளத்தையும் கொள்ளை அடிக்கலாம் என்பது முற்றிலும்
உண்மை தான்.என்ன தான் செக்யூரிட்டி இருந்தாலும் எவ்வளவு பெரிய
இணையதளம் ஆனாலும் கணினி கொள்ளையர்கள் கண்ணில் இருந்து
தப்ப முடியாது.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் இதை ஒழிக்க
முடியாது.

கோட்டைச்சாமி அவர்களின் குருபூஜை விழாவில்(பரமக்குடி அருகிலுள்ள பந்தியூர்) கலந்துகொண்டு வாழ்த்திய சித்தர்களின் வருகை; புகைப்படங்களாகthanks to www.machamuni.blogspot.com

தமிழ்நாட்டில் ஒரு ஜோதிட கிராமம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுக்கா தாயில்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட வெற்றிலையூரணி கிராமத்தில் வீட்டுக்கொரு ஜோதிடர் வீதம் 500 ஜோதிடர்கள் இருக்கின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் உலகம் முழுவதும் சுற்றி வந்து ஜோதிடம் பார்த்து வருகின்றனர்.இது நமக்குப் பெருமை தானே!

மறுபதிப்பு:செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்:புதிய ஆன்மீகக்கடல் வாசகர்களுக்காக

ஆன்மீகக் கடல்-6 அறிவியல்பூர்வமான இந்து மதம்-1

இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.

கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.

எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விஞ்ஞானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.
இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.
இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை... ?

நன்றி:வெப்துனியா:-ஜோதிடரை எப்போது சந்திக்கலாம்?

ஜோதிடரை எப்போதெல்லாம் சந்திக்கலாம்?
வியாழன், 1 ஜூலை 2010( 20:18 IST )

தமிழ்.வெப்துனியா.காம்: ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது என்பது தற்பொழுது நடைபெறுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை ஒரு வருடத்திற்கு ஒரு முறை என்று. இதேபோல தனி மனிதர்களும் செய்கிறார்கள். இதேபோல ஒவ்வொரு குடும்பமும் ஒரு குறிப்பிட்ட காலவரையில் ஜோதிடரை நாடி நல்லது, கெட்டது அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: கடந்த வாரம் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு சனியும், செவ்வாயும் ஒன்றாக இருந்து, செவ்வாய் தசை தற்பொழுது தொடங்கியிருக்கிறது. நீங்க தைராய்டு செக் பண்ணிக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அதை அவர்களும் செய்து பார்த்துவிட்டு, ஹார்மோன்ஸ் பிரச்சனை ஆரம்பமாகி இருப்பது தெரியவந்துள்ளது என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார் என்று கூறினார்கள். அவர்களுக்கு ஒரே சர்ப்ரைஸ். எப்படி சார், இதெல்லாம் விட்டுவிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும். தொடக்கத்தில் வந்துவிட்டீர்கள் என்று டாக்டரே சொல்லியிருக்கிறார். உங்களுக்கு பாதிப்பு இருக்காது, மருந்து கொடுத்து கட்டுப்படுத்திவிடலாம் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதுபோல, ஜோதிடரைப் பின்பற்றுவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வந்து, சார் ஏழரைச் சனி தொடங்கியிருக்கிறது, எதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு, ஜாமீன் கையெழுத்தெல்லாம் போடாதீர்கள். கையெழுத்திட்ட செக் போன்றவற்றை வைத்துக் கொள்ளாதீர்கள், முக்கியமான பொருட்களையெல்லாம் இரவல் தராதீர்கள், இரவலும் வாங்காதீர்கள் என்பது போன்ற ஆலோசனைகள் கூறுவது உண்டு.

கல்யாணத்திற்கு போனால் நெக்லஸ் தருவது, வாங்குவது, பிறகு காணாமல் போவது. 5 பவுனை 7 பவுன் என்று அவர்கள் கேட்டு வாங்குவது. நீங்கள் தரவும் தராதீர்கள், வாங்கவும் வாங்காதீர்கள். ரெக்கார்ட் பூர்வமாக எதையும் செய்யாதீர்கள். ஏதாவது கேட்கிறார்களா, உங்கள் கையில் இருப்பதை கொடுங்கள். ஆனால், லோன் விவகாரத்தில் நீங்க போய் நின்று மாட்டிக் கொள்ளாதீர்கள்.

ஏழரை சனி இல்லாத காலகட்டத்தில் நல்ல தசா புக்தி இருக்கிற காலகட்டத்தில் செய்யுங்கள் என்று சொல்வதும் உண்டு. தற்பொழுது சுக்ர திசை ஆரம்பமாகியிருக்கிறது. இனிமேல் இந்த சுக்ர திசை மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுக்கும். ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைப் பெண்கள் கல்யாணம், அவர்கள் பிள்ளைகளுக்கு உதவுவது. இதுபோன்ற தெரிந்தவர்களுக்கு, ஓட்டுநர் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு ஏதாவது செய்யுங்கள்.

இப்ப, நிறைய பெரிய நபர்களைப் பார்க்கும் போது வெளியில் யார் யாருக்கோ எத்தனையோ லட்சக் கணக்கில் செலவு செய்கிறார்கள். கூடவே 15 வருடமாக கார் ஓட்டீக் கொண்டிருப்பார். அவருக்கு எதையுமே செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். பக்கத்திலேயே இருந்துகிட்டு புலம்பிக்கொண்டு, உள்ளுக்குள் அழுது கொண்டு, சபித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய அழுகுரல் இவர்களுக்கு கேட்பதே இல்லை. இதையெல்லாம் சொல்லி அனுப்புவது உண்டு. 400 கிலோ மீட்டர் போய் ஒரு கல்யாணத்தை நடத்தி வைத்துவிட்டு வருகிறீர்கள். ஆனால், அந்த 400 கிலோ மீட்டருக்கும் உங்களை அழைத்துக் கொண்டு போய் வருகின்ற டிரைவர் வீட்டில் ஒரு கல்யாணம் என்றால், 500 ரூபாயும், வேட்டி சட்டையும் கொடுத்து விட்டுவிடாதீர்கள். ஏதாவது ஒரு செலவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நல்ல திசைகள் ஆரம்பிக்கும் போது, இனிமேல் உங்களுக்கு எல்லாமே யோகமாக நல்லதாக நடக்கும்.

செவ்வாய் யோக அதிபதியாக இருந்து யோக திசை நடக்கும் போது ரத்த தானம் செய்யுங்கள். அடிபட்டு காயப்பட்டுக் கிடப்பவர்களை குறைந்தபட்சம் காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையிலாவது சேர்த்துவிட்டுப் போங்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு. சனி தசை, யோக தசை எவ்வளவோ பேருக்கு காசை கொட்டிக் கொடுக்கிறது. அவர்களுக்கெல்லாம், ஊனமுற்றவர்கள், மனவளம் குன்றியவர்கள், அகதிகளாக வந்தவர்கள், இடமில்லாமல் தவிப்பவர்கள் போன்றவர்களுக்கெல்லாம் உதவி செய்யுங்கள்.

இப்ப, ராகு திசையில் இருப்பவர்களுக்கு, வாழ்க்கைத் துணையைப் பிரிந்தவர்கள். கணவர் இல்லாமல் அல்லது மனைவி இல்லாமல் கணவர் இருப்பவர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்விக்கு உதவுதல், வீடு எடுத்துக் கொடுப்பது அல்லது வேலை வாங்கிக் கொடுப்பது இதுபோன்றெல்லாம் சொல்வது உண்டு.

ஏன் ஜோதிடம் கற்க வேண்டும்?


ஏன் ஜோதிடம் கற்க வேண்டும்?

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் தமிழகத்திலிருந்து கேரளாவில் குடியேறியது.சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சென்றதில் சிறு அளவில் ஜவுளிக்கடை துவங்கினர்.ஐந்து சகோதரர்களின் ஒற்றுமையால் அந்த மாவட்டத்திலேயே மாபெரும் கடையாகவும்,ராசியான கடையென்றும் பெயரெடுத்தது.
ஐந்து சகோதரர்களின் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி,படித்து,வேலைக்குச் சென்று திருமணமும் செய்து செட்டில் ஆனார்கள்.அந்த குழந்தைகளின் திருமணத்துக்கு அந்த மாவட்ட ஆட்சியாளரே வந்திருந்து ஒரு நாள் முழுக்க கல்யாணவீட்டுக்காரராக இருந்தார்.அந்த ஜவுளிக்கடையில் ஒரு வருட விற்றுமுதல் கோடிகளாக இருந்தது.
ஆனால்,கடந்த ஆறுவருடங்களாக,அந்த ஜவுளிக்கடைக்கு இறங்குமுகம் ஆரம்பித்தது.ஒரு நாளுக்கு சுமார் ரூ.20,000/-நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது.இந்நிலையில் என்னை ஜோதிடம் பார்க்க அழைத்திருந்தனர்.
யார் அந்தக் கடையின் தலைமைப் பொறுப்பில் இருந்தாரோ அவரது ஜாதகம் விசேஷமாக இருந்தது.அந்த விசேஷம்,கடந்த 20 ஆண்டுகளில் பலகோடிகளை லாபமாகக் கொடுத்தது.ஆம்! மிகவும் யோகம் நிறைந்த சுக்கிரசார மகாதிசையானது அவர்களை உச்சாணிக்கொம்பில் கொண்டு சென்றது.
அடுத்து வந்த திசைகள் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்தன.

தடுக்க முடியாத வீழ்ச்சியை நோக்கிச் செல்லத்துவங்கிய பின்னரே அவர்களின் ஜாதகத்தை நான் பார்க்கும் நிலை வந்தது.அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 40 பேர்கள்.அவர்களில் இரண்டு பேர் ஜோதிடராக இருந்திருக்கின்றனர்.அவர்களின் ஆலோசனையை கடையை நடத்தியவர்கள் மதிக்கவில்லை.பிறகென்ன? தமிழ்நாட்டிலிருந்து சென்ற எனது ஆலோசனையை அவர்களால் செயல் படுத்த முடியவில்லை.(எல்லாமே செலவில்லாத பரிகாரங்கள்!!!)
இப்போது சொல்லுகிறார்கள்.அன்றைக்கே எங்கள் (பிரசன்னம் ஜோதிடம் அறிந்த )மகனும்,(ஜோதிட) மகளும் சொன்னதை நாங்கள் கேட்கவில்லை;அதன் பலனை அனுபவிக்கிறோம்.
அவர்களுக்கு ஜாதகங்கள் பார்த்துவிட்டு வந்த எனக்கும் ஐந்துநாட்கள் உடல்நிலை சரியில்லாமல் போனது.இதுபோல்,ஏராளமான அனுபவங்களால் வீட்டுக்கு ஒரு ஜோதிடர் உருவாவது அவசியம் என்பதை உணர்ந்தேன்.

ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் வீதம்,ஒரு மாதத்துக்குள் ஜோதிடம் பற்றிய அடிப்படை அனைத்தையும் கற்றுத்தருகிறேன்.
(பெரும்பாலான ஜோதிடப் பயிற்சிப்பள்ளிகள் வாரம் ஒரு நாள் வீதம் மாதக்கணக்கில் ஜோதிடபாடத்தை நீடிப்பு செய்கின்றன.அதுவும் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புக்கள் வைக்கின்றன.அது அவர்களது செயல்முறை.நடைமுறையில் தினமும் கற்கும்போது விரைவில் பாடங்களும் நிறைவடையும்;விரைவாகவும்,சந்தேகமின்றியும் ஜோதிடம் கற்று முடித்து,ஜோதிடராகிவிடலாம்)

ஜோதிடத்தின் அடிப்படை முதல் ஜோதிடராவது வரை அதாகப்பட்டது ஜோதிடம் பலன் துல்லியமாகச் சொல்லுவது வரை பாடமாக நடத்திவருகிறேன்.

இத்துடன் பஞ்ச பட்சி சாஸ்திரம்(அடிப்படை)

சாமுத்ரிகா லட்சணம் எனப்படும் அங்க லாவண்ய சாஸ்திரம்(அடிப்படை)
எண்கணிதம் எனப்படும் நியூமராலஜி(அடிப்படை)
மனோதத்துவமும் ஜோதிடமும்,
இறைவனை அடைவது எப்படி?,
நமது ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை நீக்குவது எப்படி?
நாம் படும் ஜன்ம பாவங்களை நீக்கி நிம்மதியாகவும் வசதியாகவும் வாழும் ரகசியம்,
எந்த மாதிரியான நவரத்தினக்கற்கள் அல்லது கல்லை அணிந்தால் வாழ்க்கை இன்னும் வசதியாக அமையும்?

காமரீதியான குடும்பக் குழப்பங்களை சரிசெய்யும் மனோதத்துவ செயல்பாடு,
யாரிடம் எப்படி நடந்துகொண்டால் நாம் நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும்,நம் சந்ததி சிறப்பாகவும் வாழும்?
இதுபோன்ற மனித வாழ்க்கைதத்துவங்கள் அனைத்தும் இலவசமாகவே ஜோதிடப்பயிற்சி வகுப்பில் கற்றுக்கொள்ளலாம்.
கற்றலை விட கேட்டலே நன்று என்ற புராதனப்பழமொழி நிஜம் என்பதை இங்கு வந்தப்பின்னரே உணருவீர்கள்.

ஜோதிடப் பயிற்சிக்கு மட்டும் கட்டணம் உண்டு.ஒரு மாதம் நீங்கள் ராஜபாளையம்(விருதுநகர் மாவட்டம்) வந்து தங்கிட வேண்டியிருக்கும்.
உங்களது வாழ்க்கைப் பாதையே இந்த ஒரு மாதத்திற்குப் பிறகு அடியோடு மாறிவிடும் என்பது மட்டும் நிஜம்.

ஜோதிடராக விருப்பமில்லை; ஜோதிடத்தை ஆதியோடு அந்தம் விடாமல் (அனைத்தும்) கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புபவர்களும் வந்து கற்றுக்கொள்ளலாம்.

ஜோதிடராக மட்டுமே நான் ஜோதிடம் கற்றுக்கொள்ளவிரும்புகிறேன் என முடிவெடுத்துள்ளவர்களும் இங்கு வந்து கற்றுக்கொள்ளலாம்.
இங்கே வருபவர்கள் தங்குவதற்கு ஆகும் செலவு உங்கள் பொறுப்பு.எழுதப்படிக்கத் தெரிந்த யாரும் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.
பெண்களுக்கு தனி வகுப்புகள் உண்டு.
மேலும் விபரமறிய aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு உங்களது பிறந்த ஜாதகம்,செல் எண்ணை அனுப்பி,விபரம் கேட்டுக் கொள்ளவும்.
அடுத்த பயிற்சி வகுப்புக்கள் 15.7.2010 அன்றும்,1.8.2010 அன்றும் துவங்குகின்றன.

குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா?

கேள்வி: குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பிறக்குமா? இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறேன் என்றால், எங்கள் ஊரில் அய்யனாருக்கு குதிரை கட்டி பலரும் ஆண் பிள்ளை பெற்றிருக்கிறார்கள். இந்த மாதிரி நடக்கின்றதா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: எத்தனையோ தெய்வங்கள் இருக்கிறது. ஆனால், அதில் குலதெய்வம் என்பது மிக மிக முக்கியம். மதம் இருக்கிறது. மதத்தில் ஜாதி இருக்கிறது. ஜாதியில் பிரிவு இருக்கிறது. சில ஜாதியில் ஆந்தைக் கூட்டம் என்று அதில் ஒரு பிரிவு இருக்கும். அந்த ஜாதியிலேயே 4 பிரிவு இருக்கும். ஒவ்வொரு ஜாதியிலுமே நான்கைந்து பிரிவுகள் உண்டு. ஆனால், இந்த நான்கைந்து பிரிவுகளையுமே ஒற்றுமைப்படுத்துவதுதான் இந்தக் குலதெய்வம். பல ஜாதிகள் இருக்கிறது. அதில் கருப்பசாமியை வணங்குகிறவர்கள் என்று தனியாக இருக்கிறார்கள் இல்லையா, அதைப்போல், இவர்களில் நான்கு, ஐந்து பிரிவு இருக்கிறது. ஆனால் கிடா வெட்டும் போது எல்லோரும் ஒரே பிரிவுதான்.

அடுத்து, குல தேவதா, இஷ்ட குல தேவதா என்று இரண்டு வழிபாடு உண்டு. குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதற்கு நீங்கள் சென்றே ஆகவேண்டும். இஷ்ட குல தேவதை என்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். அய்யப்பன் கோயிலுக்குப் போவது பிடிக்கிறது. எனக்கு என்னவோ அந்தப் பாட்டெல்லாம் பிடிக்கிறது. இப்படி இஷ்டத்திற்குப் போவது. இது அவரவர்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் குலதெய்வம் என்பது கட்டாயம்.

குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.

எவ்வளவோ பேர் எங்கெங்கோ போய் வருகிறார்கள். காசிக்கு ஒருவர் போய்விட்டு வந்தார். அவருடைய கனவில் வந்து, ஏண்டா நான் இங்கே உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறேன். மூன்று வருடமா என்னை வந்துப் பார்க்காமல் எவ்வளவோ செலவு செய்து கொண்டு அங்கெல்லாம் போய்விட்டு வருகிறாயா? என்னை நீ பார்க்காமல் போன பிறகு உனக்கு காசி போனால் பலன் கிடைக்குமா? என்று கனவில் வந்து கேட்டிருக்கிறது. பிறகு ஓடிப் போய் வணங்கினார்.

அய்யனார், முனீஸ்வரர், வேடப்பர், கருப்பு இந்த எல்லை தெய்வங்கள் நேரடியாகவே கனவில் வந்து பேசக்கூடியதெல்லாம் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். வசதி வாய்ப்பு இழந்தவர்களும் பெரிய கோபுரங்கள் உள்ள கோயில் தெய்வங்களை குலதெய்வம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ஒருவர் வந்தார். குழந்தையே இல்லை என்றார். குலதெய்வக் குறைபாடு இருக்கிறது, போயிருக்கிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், எங்களுக்கு குலதெய்வம் திருப்பதிதான் என்று சொன்னார். கண்டிப்பாக திருப்பதி கிடையாது. மரத்தடியில் இருக்கிற பெண் தெய்வம்தான் உங்களுக்கு குலதெய்வமாக வருகிறது என்று சொன்னேன். அவருடைய பாட்டியும் வந்திருந்தார்கள். அவர் சொன்னார், இவன் பொய் சொல்கிறான் தம்பி, எங்களுக்கு ஆரணிக்கு பக்கத்தில் பச்சையம்மன் என்கிற குலதெய்வம் இருக்கிறது. வேப்ப மரம் இருக்கும். நடுவில் நான்கு கல் இருக்கும். அவ்வளவுதான். ஒருதடவை கூட்டிக் கொண்டு போனேன். இதெல்லாம் கல் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான். இனிமேல் திருப்பதிதான். குழந்தை பிறந்தால் முதல் மொட்டை திருப்பதிக்குதான் என்று அடம் பிடிக்கிறான். இதை குலதெய்வம் என்று சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது என்று சொன்னான். நீங்களாவது கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.

இப்படியெல்லாம் குலதெய்வத்தில் கூட பேஷன் பார்க்கிறவர்கள், அதைகூட பெருமையாக புகழ்பெற்ற கோயிலாக சொல்லிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவருக்கு 7 வருடமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. அங்கு சென்று அருகில் இருக்கும் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து உங்கள் விளை நிலத்தில் இருக்கக்கூடிய நெல்லை எடுத்து பொங்கல் வைத்து வணங்குங்கள் என்று் கூறினேன்.

இதெல்லாம் அறிவியல் ரீதியாக நமக்கு என்னவென்று தெரியாது. பொங்கல் வைத்த 60வது நாள் அவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. புகழ்பெற்ற டாக்டர்கள் பெயரெல்லாம் சொன்னார். எங்கெங்கேயோ போனேன். டாக்டர் இந்த மரத்தடியில் உட்கார்ந்திருந்தார் என்று எனக்குத் தெரியவே தெரியாது என்று அழுதுவிட்டார். குலதெய்வத்திற்கு அவ்வளவு சக்தியா சார், இப்பவும் சொல்கிறேன், நாலு மரம், நாலு கல்லு சார். எப்படி சார் அது என்று கேட்டார்.

அப்படியில்லீங்க, முன்னோர்கள் கூடி கூடி வழிபட்ட அந்த இடத்திற்கென்று ஒரு சக்தி இருக்கிறது. இன்றைக்கு நாம் சொல்லவில்லையா? காந்தி நின்ற இடம், வ.உ.சி. செக்கிழுத்த இடம் என்று எவ்வளவு பெருமையாகச் சொல்கிறோம். அதுபோல நம் முன்னோர்களும் நமக்குத் தலைவர்கள் மாதிரிதானே. அவர்கள் நின்று வழிபட்ட இடம். அவர்கள் பொங்கல் வைத்தது. அதெல்லாம் நாம் மதிக்க வேண்டாமா? அதனால் குலதெய்வத்திற்கு சக்தி உண்டு. குலதெய்வம் என்பது என்ன? தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக்கூடியதுதான் குலதெய்வம். மற்ற தெய்வங்கள் எல்லாம் வேண்டித்தான் கூப்பிட வேண்டும். இவர்கள் வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் நம்மிடம் வந்து நமக்கு நல்லது செய்யக்கூடிய தெய்வம். அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும்.