
எட்வர்டு கெய்ஸி என்பவர் நமது பாரதநாட்டின் தொன்மையான கலைகள் மீது அளவற்ற மரியாதை வைத்திருப்பவர்.அவர் ஐரோப்பா,அமெரிக்காக் கண்டங்களைச் சேர்ந்த 4000 மனிதர்களை அறிதுயில் எனப்படும் ஹிப்நாட்டிசத்தில் ஆழ்த்தி அவர்களின் முற்பிறவிகள் பற்றி அறிந்துள்ளார்.
அதில் ஒரே ஒரு உதாரணம் மட்டும் இங்கு விவரிக்க விரும்புகிறேன்:
பிரான்ஸ் நாட்டில் பிறவியிலேயே பார்வைத்திறனின்றி ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தை பருவ வயதை எட்டியதும்,அந்த இளைஞனுக்கு அடிக்கடி விழிக்கோளத்தில் திடீர்,திடீரென வலி தோன்றியது.அந்த மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை கடும் வேதனையைத் தந்தது.எல்லா விதமான மருந்துகள் தந்தும்,அந்த தாங்க முடியாத வலி தீரவில்லை.
இதனால்,அந்த இளைஞனை அறிதுயிலில் ஆழ்த்தி,அவனது முற்பிறவியைக் கேட்டறிந்தார்.அந்த இளைஞன் முற்பிறவியில் காங்கோ தேசத்தில் ஒரு பழங்குடி இனத்தில் பிறந்திருந்தான்.அவன் பருவ வயதை எட்டியதும்,அந்த பழங்குடி இனத்தின் மன்னனின் மெய்க் காவலராக நியமிக்கப்பட்டான்.இருந்தபோதிலும்,இவனது வேலை ஒன்றே ஒன்றுதான்.
அந்த பழங்குடி இன மக்கள் வாழும் 200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எந்த வேற்று மனிதன் வந்தாலும்(வேறு பழங்குடி மனிதன்/வெள்ளைக்காரர்கள்) அந்த வேறு இனத்தவனை பிடித்து,தனது மன்னனின் முன்பாக நிறுத்துவார்கள்.விசாரணையே கிடையாது.அப்படி பிடிபட்ட வேற்றினத்து மனிதனின் கண்களில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் குத்துவது இந்த இளைஞனின் வேலையாக இருந்தது.
நமது இந்துப் பழமொழி எனக்கு தற்போது ஞாபகம் வருகிறது:
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
முற்பிறவியில் நாம் செய்யும் பாவ புண்ணியம் அனைத்தும் நமக்கு இப்பிறவியில் கிடைக்கிறது என அர்த்தப்படுத்திக்கொள்ளலாமா?
பேசும் ஆவிகள் என்ற மாத இதழ் நமது தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் பேருந்து நிலையங்களில் முதல் 15 தேதிகளில் கிடைக்கிறது.அதில் வந்த செய்தி எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது.
ஒரு 45 வயது பெரியவர், கட்டபொம்மன் போக்குவரத்துக்கழகத்தின் பணி மனை ஒன்றில் இரவுக் காவலாளியாகப் பணிபுரிகிறார்.அவர் ஒரு முறை ஆவி ஜோதிடர் ஒருவரை சந்தித்தார்.அதில்,அந்த இரவுக் காவலாளியானவர் முற்பிறவியில் கட்டபொம்மன் மகாராஜாவின் மெய்க்காவலர்களில் ஒருவராக இருந்தவராம்.அப்போது,ஒரு முறை கட்டபொம்மன் மன்னனுடன் திருச்செந்தூருக்கு வருகை தந்தார்.திருச்செந்தூர் முருகன் சன்னதியில் 'மன்னா, இப்பிறவியில் மட்டுமல்ல; இனி வரும் ஏழேழு பிறவிக்கும் நான் உங்கள் மெய்க்காவலனாக இருப்பேன்' என சத்தியம் செய்திருக்கிறார்.இந்த முற்பிறவி உண்மையை அந்த ஆவி ஜோதிடர், இரவுக் காவலாளியிடம் சொல்லியிருக்கிறார்.