RightClick

இந்துமதம் எதனால் சீரழிகிறது? ஓஷோவின் பார்வையில்


கிறிஸ்தவ மத போதகர்கள் முதன்முதலாக தென்னாட்டிற்கு வந்த போது, அவர்களில் சிலர்,திலகம் அணிய ஆரம்பித்தார்கள்.இதன் காரணமாக போப் ஆண்டவரின் வத்திகானில் விவகாரம் ஏற்பட்டு, மத போதகர்களை விளக்கம் கேட்டு எழுதியிருந்தார்கள்.

சிலர் திலகம் அனிந்து கொண்டார்கள்.சிலர் மரக்கட்டைச் செருப்பும் அணிந்து கொண்டார்கள்.சிலர் பூணூலும்,காவியாடையும் தரிந்து இந்து சன்னியாசிகள் போல் வாழ்ந்தார்கள்.
அவர்கள் தவறு செய்வதாக தலைமை பீடம் கருதியது.ஆனால்,மத போதகர்கள் அதற்கு விளக்கம் அளித்து எழுதினார்கள்.அவ்வாறு வாழ்வதால் அவர்கள் இந்துக்கள் ஆகிவிடவில்லை என்றும், திலகம் அணிவதால் அவர்கள் ஒரு ரகசியத்தை அறிந்து கொண்டதாகவும், மரக்கட்டைச் செருப்பு அணிவதால், தியானம் வெகுவிரைவில் கைகூடுவதாகவும் தியான சக்தி வீணாவதில்லை என்றும் பதில் எழுதினார்கள்.மேலும்,
'இந்தியர்கள் சில ரகசியங்களை அறிந்திருக்கிறார்கள்.அவற்றைக் கிறிஸ்துவ மத போதகர்கள் அறியாதிருப்பது மடத்தனம்' என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்துக்களுக்கு நிச்சயமாக பல விஷயங்கள் தெரிந்திருந்திருந்தன.இல்லாவிட்டால்,20,000 ஆண்டுகளாக சமயத்தேடுதல் இருந்திருக்க முடியாது.உண்மை தேடும் முயற்சியில்தான், அறிவுலக மேதைகள்,20,000 ஆண்டுகளாகத் தம் வாழ்வை அர்ப்பணித்து வந்துள்ளனர்.அவர்களுக்கு இருந்தது ஒரே ஒரு ஆசைதான்: "இந்த வாழ்வுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அருவமான உண்மையை அறிய வேண்டும்.வடிவமற்ற அதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்"

20,000 ஆண்டுகளாக இந்த ஒரு தேடலுக்காக ஒரே மனதுடன் தம் அறிவையெல்லாம் பயன்படுத்தி வந்த அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது வியப்பான கருத்து அல்லவா?அவர்களுக்கு உண்மை தெரியும் என்பதும், அதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்பதும் இயல்பான உண்மை.ஆனால்,20,000 ஆண்டுகாலத்தில் இடையூறு விளைவிக்கும் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.

இந்த இந்துதேசத்தின் மீது நூற்றுக்கணக்கான அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன.ஆனால்,எந்தப் படையெடுப்பாளராலும் முக்கியமான மையத்தை தாக்க முடியவில்லை;சிலர் செல்வத்தைத் தேடினார்கள்.சிலர் நிலங்களை ஆக்கிரமித்தார்கள்.சிலர்,அரண்மனைகளையும் கோட்டை கொத்தளங்களையும் கைப்பற்றினார்கள்.
ஆனால்,இந்து தேசத்தின் உள்ளார்ந்த அம்சத்தைத் தாக்க முடியவில்லை;கி.பி.1000 முதல் 1700 வரை நிகழ்ந்த இஸ்லாமியப்படையெடுப்பால் எதுவும் செய்ய முடியவில்லை; முதன் முதலாக மேலைநாட்டு (கிறிஸ்தவ)நாகரீகத்தால்தான் அந்தத் தாக்குதல் ஏற்பட்டது.அவ்வகைத் தாக்குதல் நடத்துவதற்கான எளிய வழி, ஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டின் இளைய சமுதாயத்திடமிருந்து பிரித்து வைப்பதுதான்.(மெக்காலே கல்வித் திட்டம் அதைத் தான் செய்தது.இன்றும் அதைத் தான் செய்து வருகிறது.இந்த கொடூரத்தினை உணரும் அரசியல்வாதிகள் ஆளும் கட்சியாவதில்லை.)அது இந்து தேசத்தின் செழிப்பான,பரந்துவிரிந்த,மனித மாண்பினை விவரிக்கும்,சுயச்சார்பினை உரத்துக்கூறும் வரலாற்றை அழிப்பதற்காக செய்யப்படுவது.நாட்டின் மக்களுக்கும் அதன் வரலாற்றிற்கும் இடையில் ஓர் இடைவெளி உண்டாக்கப்பட்டது.இதனால்,இந்துக்களாகிய நாம் நம்முடைய வேர்களை இழந்தோம்; சக்தியிழந்தோம்.

ஒரு இருபது ஆண்டுக் காலத்திற்கு பெரியவர்கள் தம் குழந்தைகளுக்கு எதுவுமே கற்றுத்தருவதில்லை என்று முடிவெடுத்தால் என்ன ஆகும் என கற்பனை செய்து பாருங்கள்.அதனால் ஏற்படும் விளைவு, இருபதாண்டுகால இழப்பு அல்ல;இருபதாயிரம் ஆண்டு கால ஞானத்தின் இழப்பு ஆகும்.அந்த இழப்பை சரிசெய்வதற்கு இருபதாண்டுகாலம் போதாது.20,000 ஆண்டுக்காலம் தேவைப்படும்.காரணம்,அறிவுச்சேகரிப்பின் தொடர்பு அறுபட்டுப்போவதுதான்.

இரண்டு நூற்றாண்டுகால கிறிஸ்தவ இங்கிலாந்து ஆட்சியென்ற பெயரில் சுரண்டிய,சுரண்டலும், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த அறிவுச்சேகரிப்பு இடைவெளி இந்த 20,000 ஆண்டு இடைவெளிக்குச் சமமாகும்.முந்தைய ஞானத்திற்கும்,நமக்குமான தொடர்பு கிறிஸ்தவத்தால் அறுக்கப்பட்டது.கடந்த காலத்தோடு எந்த தொடர்புமற்ற,முற்றிலும் புதிதான ஒரு நாகரிகம் நிலைநிறுத்தப்பட்டது.

நமது இந்து நாகரிகம் மிகப்புராதனமானது என்று இந்துக்கள் நினைக்கிறார்கள்.ஆனால்,அவர்கள் நினைப்பது தவறு;இது வெறும் 20,000 ஆண்டுகால பழமையான சமுதாயம் மட்டுமே என வெள்ளைத்தோலைக் கொண்ட இங்கிலாந்து நரிகள் ஊளையிட்டன.அந்த ஊளைக்கூச்சல் நமக்கு நமது பாரதப்பண்பாட்டின் மீதே சந்தேகம் கொள்ள வைத்து, மேல்நாட்டு நாகரிகத்தின் மீது மரியாதையை கொண்டு வந்துவிட்டது.இதனால்,200 ஆண்டுகளுக்கு முன்பு நாம் பெற்றிருந்த ஞானச்செல்வங்களையெல்லாம் இழந்து, ஒரே வீச்சில் இந்துதேசம் இழந்துவிட்டது.

200 ஆண்டுக் காலத்திற்கு முன்னால்,தடைபட்டு நின்றுபோன நமது இந்துதர்ம அறிவுடன் தொடர்புகொள்ளத்தான்,இன்று கல்வியறிவுஇல்லாத மக்கள் அந்தக் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.அவற்றை நாம் செய்வதன் மூலம்,நாம் மீண்டும் அவற்றிற்கு புத்துயிர் தந்து, ஆழமாகப் புரிந்துகொண்டு, 20,000 ஆண்டுக்கால அறிவோடு தொடர்புகொள்ள முடியும்.

அப்போதுதான் இதுவரை நாம் செய்துவந்த மேல்நாட்டு நாகரீகப் பயன்பாடு(பேண்ட் போடுவது,ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைப்பது, வீட்டுக்குள்ளேயே செருப்பு போட்டு நடப்பது,கோயில்கள்,ஜோதிடம்,பண்பாடு இவற்றை கேலி செய்வது) எவ்வளவு பெரிய்ய தற்கொலை என்பது விளங்கும்.

நன்றி: பக்கங்கள்128,129,130,131; மறைந்திருக்கும் உண்மைகள்,எழுதியவர் ஓஷோ
வெளியீடு,கண்ண்தாசன் பதிப்பகம்,சென்னை.