RightClick

சீனாவின் கனவும் இந்தியாவின் சுதந்திர ஜாதகம் சொல்லும் ஜோதிட நிஜங்களும்

சீனாவின் கனவும் இந்தியாவின் சுதந்திர ஜாதகமும்

இந்தியாவின் பிறந்த ராசி கடக ராசியாகும்.கடக ராசிக்கு தற்போது ஏழரைச்சனி 26.6.2009 அன்றுடன் முடிவடைந்துவிட்டது. நவம்பர் 2011 வரை கடகராசிக்கு 3 ஆம் இடத்தில் சனி நிற்கிறார்.இதனால்,நவம்பர் 2011 வரை இந்தியாவின் வளர்ச்சி,ஒளி வேகத்தில்! (விநாடிக்கு 3,00,000 கி.மீ)இருக்கும்.
அதே சமயம்,நவம்பர் 2011 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சனிபகவான் துலாம் ராசியினை கடக்கிறார்.சனியைப் பொறுத்தவரையிலும், சனியின் பார்வைகள் கொடூரமானது. சனி தான் இருக்குமிடத்திலிருந்து 3,7,10 ஆம் இடங்களை(ராசிகளை) பார்க்கிறார்.இதில் 10 ஆம் பார்வை முழுப்பார்வையாகும்.

நவம்பர் 2011 முதல் துலாம் ராசிக்கு சனிப் பெயர்ச்சியானதிலிருந்து, சனி தனது 10 ஆம் பார்வையாக முழுப் பார்வையாக கடகராசியைப் பார்க்கிறார்.இந்தப் பார்வையால் கடகராசிக்காரர்கள் ஏதாவது சிக்கலில் மாட்டி,நிம்மதியின்றி தவித்தாக வேண்டும்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அப்போது போர் நடப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
ஆக, அப்படி நடப்பதற்கான அறிகுறியாகத் தான் சீனா முத்துமாலைத் திட்டம் என்ற பெயரில் இந்தியாவைச் சுற்றிலும் இருக்கும் நாடுகளை தனது அரசியல் நோக்கத்திற்கு வளைத்துவருகிறது.

முதலாவதாக,அந்தமான் தீவுகளுக்கும் மியான்மர்(பர்மாவுக்கும்) இடையில் பர்மாவுக்குச் சொந்தமான ஒரு தீவை சீனா 99 வருடக் குத்தகைக்கு எடுத்து,அதை ராணுவத் தளமாக மாற்றியுள்ளது.
அடுத்ததாக இந்தியா மீது மதத்தின் பெயரால் நிழல் யுத்தம் நடத்தும் நம்ம குட்டி பங்காளி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தனது சொந்த துறைமுகமாகவே மாற்றிவிட்டது சீனா.
இந்து மகா சமுத்திரத்தின் கண்ணீர்த்துளியான இலங்கையில் சீனாவின் ஆதரவு அரசாங்கத்தால், திருகோணமலையையும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் கச்சத்தீவையும் சீனா தன்வசப்படுத்திவிட்டது.
இலங்கை தனது நாட்டின் சீரமைப்பிற்காக உலக நாடுகளிடம் வாங்கியுள்ள மொத்தக் கடன் 3,00,000 கோடி ரூபாய்கள் ஆகும்.அதே அளவுத் தொகையை சீனா மட்டும் இலங்கை அரசுக்குக் கொடுத்து,கச்சத்தீவை தனதாக்கிக் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவில் இருக்கும் அமைதி தேசமான திபத்,இந்தியாவை தனது குருவாகவும்,நட்பு நாடாகவும் நம்பியிருக்கிறது. புத்தமதத்தை தனது தேசியமாக வைத்திருக்கும் திபத்தை 1950களிலேயே சீனா ஆக்கிரமித்துவிட்டது.இந்தியாவாகிய நாம் இதை ஒரு மரியாதைக்குக் கூட கண்டிக்கவில்லை;இன்று, திபத்தை தனது மாநிலங்களில் ஒன்றாகவே சீனா மாற்றிவிட்டது.திபத்தில் சீனர்களின் குடியிருப்பை பரவலாக்கிக் கொண்டே போவதுடன், 22 விமான தளங்களை அமைத்திருக்கிறது.
சுறுசுறுப்புடன் உலகின் ஒரே இந்துதேசமான நேபாளத்தில் அரசியல் சாதுரியத்துடன் தனது மார்க்ஸிஸ்ட் அரசாங்கமாக மாற்றியதுடன்,இந்துதேசம் என்ற அடையாளத்தையும் அழித்துவிட்டது.
அடுத்த கட்டமாக, இந்தியாவில் நக்சலைட்டுகள் பல மடங்கு பலம் பெற்று, இந்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

வழக்கம் போல்,இந்தியாவின் மத்திய அரசு இதுபற்றி என்ன எதிர் நடவடிக்கை எடுத்திருக்கின்றது? என்பதைப் பற்றி தகவல் வெளியிடுவதில்லை.
சீனாவானது அருணாச்சலப்பிரதேசம்,நாகலாந்து பகுதிகளைக் கைப்பற்றும் எண்ணத்திலிருக்கிறது.

சீனாவின் ராணுவ ஆலோசகர்கள்,இந்தியாவை 37 துண்டுகளாக்கி,37 சிறு நாடுகளாக்கினால்,சீனாவின் உலக வல்லரசாகும் எண்ணத்தினை நிஜமாக்கிவிடலாம் என்றே கணக்குப் போடுகிறது.

எம்.எல்.எம்., என்ற போர்வையில் சீன நிறுவனங்கள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காலூன்றி இந்தியா முழுக்க தனது உளவாளிகளை நடமாட வைத்திருக்கிறது.
சீன எம்.எல்.எம்.நிறுவனங்கள், தனது வர்த்தகக் கூட்டாளிகளை(டிஸ்டிரிபியூட்டர்கள்) சீனாதான் சிறந்த நாடு என்று மூளைச்சலவை செய்து வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்துகொண்டே இருப்பதால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போரைத் தூண்டிவிட, நயவஞ்சகமான அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.இருநாடுகளும் சண்டையிட்டால், தனது ஆயுத வர்த்தகம் பல மடங்கு பெருகி, தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்ளத்துடிக்கிறது.
சீனாவோ, திட்டமிட்டு செயல்பட்டு, அமெரிக்காவையை தனது நோக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத அளவுக்கு வளைத்துவருகிறது.அமெரிக்காவில் அதிகமான முதலீடு செய்துள்ள முதல் நாடு சீனா.

ஆசியாவின் தலைமைக்கு ஆசைப்பட்ட சீனா, ரஷ்யாவின் பிரம்மாண்டத்தின் முன்னால் அமைதிகாத்தது 1990கள் வரையிலும்!
ரஷ்யா துண்டு துண்டாக உடைந்ததும், இந்தியாவை எப்படி நசுக்குவது என்பதை தனது லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது.
இது பற்றி இந்தியாவின் பத்திரிகைகளில் எழுதமுடியாத அளவுக்கு மறைமுக நெருக்கடிகள் இருக்கின்றன.பெரும்பாலான பத்திரிகையாளர்கள் கம்யூனிஸ்டுகள்.
அதையும் மீறி இந்திய எல்லையில் சீனாவின் வாலாட்டம்,ஊடுருவல், சில்மிஷங்கள் ஏதாவது பத்திரிகையில் வந்தால், அந்தப் பத்திரிகையின் மீது வழக்குத் தொடுப்பதில் இந்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது.(இது நமக்கு உலக அரங்கில் அவமானத்தைத் தராதா?)

இந்தியாவை பிரபஞ்சத்தைப் படைத்த சக்தி கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது;(இது வெறும் நம்பிக்கையில்லை; நிஜம்)அந்த சக்தி தனது பிரதிநிதியை பூமிக்கு அனுப்பிவிட்டது.அந்தப் பிரதிநிதி இந்தியாவின் அதிகாரபீடத்தினை நெருங்கிவிட்டது.விரைவில், இந்தியாவின் தலைமை பீடத்தை அடையும்.அந்த சக்திக்கு ஆதரவாக சித்தர்கள் இருப்பார்கள்.உலக வரலாற்றில் தெய்வீக சக்தியுடன் கூடிய ஒரு மாபெரும் தலைவன், தலைமையில் இந்தியா தனது உள்ளுணர்வுடன்,உள்ளூக்கத்துடன் விழித்தெழப்போகிறது.
நீதி, நேர்மை,அகிம்சை,பிறருக்கும் உதவும் மனப்பான்மை போன்ற மனித நேயசக்திகள் இந்தியாவின் அரசு இயந்திரமாக மாறும்,இந்து தர்மம் உலகம் முழுக்கப்பரவத்துவங்கும்.

(தகவல் ஆதாரங்கள்: உலக வரலாறு, இந்தியா டுடேக்கள் 2008,2009,2010, அரசியல் இணைய தளங்கள்,ஜோதிட இதழ்கள்,ஜோதிட ஆராய்ச்சிக்கட்டுரைகள்,எனது குருநாதரின் போதனகள்,சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள்)