RightClick

என்னை பிரமிக்க வைத்த புத்தகம் ; மறைந்திருக்கும் உண்மைகள்

புத்தக விமரிசனம்:

சுமார் 10 ஆண்டுக்கு முன்பு, மறைந்திருக்கும் உண்மைகள்,ஓஷோவின் பேச்சுக்களின் தொகுப்புக்களை நான் படித்தேன்.கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அற்புதமான புத்தகங்களில் இதுவும் ஒன்று..

இந்த புத்தகத்தை முதன் முதலில் வாசித்து முடித்த அன்று,என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை; அடுத்த ஒரு வாரம் வரை இந்த புத்தகத்தின் கருத்துக்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.ஓஷோவை செக்ஸ் சாமியார் என முத்திரை குத்தி, அவரது எழுத்துக்களை பரவாமல் பார்த்துக்கொண்டனர் சிலர்.அது யாரென அப்போது எனக்குப் புரியவில்லை.
தற்போதுதான் அது புரிந்தது.சோவியத் ரஷ்யாவில் கடவுள் இல்லை என்பதை தனது லட்சியமாகக் கொண்ட கம்யூனிசம் ஆட்சிசெய்தது.அவர்கள்,மனித சக்திக்கு மிஞ்சிய சக்தி இந்த பூமியில் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பலவிதமான ஆராய்ச்சிகளை,பல வருடங்கள் செய்தனர்.அந்த ஆராய்ச்சிகளின் முடிவில், மனித சக்தியே மனதின் சக்தி என்ற முடிவுக்கு வந்தனர்.

மனதின் சக்தியோ, ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபட்டது.அதே சமயம்,அந்த மன சக்தியை ஒருநிலைப்படுத்திடவே மனிதனின் முன்னோர்கள், தெய்வீக சக்தியை பூமியில் சில குறிப்பிட்ட இடங்களில் குவியச்செய்து,அதன் மூலம் எல்லாமனிதர்களும் தத்தம் மனசக்தியை சமநிலைப் படுத்திட ஏற்பாடுகள் செய்திருந்தனர் என்பதை தமது பகுத்தறிவினால் அறிந்தபின்னர்,திகைத்துப்போயினர்.

தனது காலத்திற்குப்பின்னரும்,பல நூற்றாண்டுக்குப்பின்னர் பிறக்க இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் கோவில்கள்,மசூதிகளை உருவாக்கியிருந்தனர் என்பதை உணர்ந்தனர்.இந்த உண்மைகளை இந்தியாவில் பரவாமல் இந்தியாவின் கம்யூனிஸ்டுகள் பார்த்த்க்கொண்டனர்.

ஜோதிடம் எப்பேர்ப்பட்ட அறிவியல்,இந்துக்கோயில்களில் ஈரத்தில் 60 ஆண்டுகள் வரை பூசாரிகளாக இருப்பவர்கள் எந்த ஒரு சிறு உடல் நலக்கேட்டிற்கும் ஆளாமலிருக்கும் ரகசியம்,இந்து தர்மத்தின் தொன்மையும்,அதனுள் மறைந்திருக்கும் விஞ்ஞான ரகசியங்கள் இவற்றின் ஆதாரபூர்வமான விளக்கங்கள் கண்டு பிரமித்தேன்.
உதாரணமாக,விமானம் கண்டுபிடித்து 100 ஆண்டுகள் ஆகிறது என நாம் பீற்றிக்கொள்ளுகிறோம்.ஆனால்,மத்திய தரைகடல் பகுதியில் ஒரு விமானதளம் 'கண்டுபிடிக்கப்பட்டது'.அந்தவிமான தளத்தின் வயது 20,000 ஆண்டுகள்.

இந்து தர்மத்தின் பெருமைகளை அறிய விரும்புவோர்கள், நமது முன்னோர்களின் பெருமைகளை உணர விரும்புவோர்கள், சுயச்சார்புடன் வாழ விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய அரிய புத்தகம் மறைந்திருக்கும் உண்மைகள்.இணைய தளம் முலம் வாங்கிடhttp://www.kannadhasanpathippagam.com/tamil_products.aspx

இந்துமதம் எதனால் சீரழிகிறது? ஓஷோவின் பார்வையில்


கிறிஸ்தவ மத போதகர்கள் முதன்முதலாக தென்னாட்டிற்கு வந்த போது, அவர்களில் சிலர்,திலகம் அணிய ஆரம்பித்தார்கள்.இதன் காரணமாக போப் ஆண்டவரின் வத்திகானில் விவகாரம் ஏற்பட்டு, மத போதகர்களை விளக்கம் கேட்டு எழுதியிருந்தார்கள்.

சிலர் திலகம் அனிந்து கொண்டார்கள்.சிலர் மரக்கட்டைச் செருப்பும் அணிந்து கொண்டார்கள்.சிலர் பூணூலும்,காவியாடையும் தரிந்து இந்து சன்னியாசிகள் போல் வாழ்ந்தார்கள்.
அவர்கள் தவறு செய்வதாக தலைமை பீடம் கருதியது.ஆனால்,மத போதகர்கள் அதற்கு விளக்கம் அளித்து எழுதினார்கள்.அவ்வாறு வாழ்வதால் அவர்கள் இந்துக்கள் ஆகிவிடவில்லை என்றும், திலகம் அணிவதால் அவர்கள் ஒரு ரகசியத்தை அறிந்து கொண்டதாகவும், மரக்கட்டைச் செருப்பு அணிவதால், தியானம் வெகுவிரைவில் கைகூடுவதாகவும் தியான சக்தி வீணாவதில்லை என்றும் பதில் எழுதினார்கள்.மேலும்,
'இந்தியர்கள் சில ரகசியங்களை அறிந்திருக்கிறார்கள்.அவற்றைக் கிறிஸ்துவ மத போதகர்கள் அறியாதிருப்பது மடத்தனம்' என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்துக்களுக்கு நிச்சயமாக பல விஷயங்கள் தெரிந்திருந்திருந்தன.இல்லாவிட்டால்,20,000 ஆண்டுகளாக சமயத்தேடுதல் இருந்திருக்க முடியாது.உண்மை தேடும் முயற்சியில்தான், அறிவுலக மேதைகள்,20,000 ஆண்டுகளாகத் தம் வாழ்வை அர்ப்பணித்து வந்துள்ளனர்.அவர்களுக்கு இருந்தது ஒரே ஒரு ஆசைதான்: "இந்த வாழ்வுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அருவமான உண்மையை அறிய வேண்டும்.வடிவமற்ற அதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்"

20,000 ஆண்டுகளாக இந்த ஒரு தேடலுக்காக ஒரே மனதுடன் தம் அறிவையெல்லாம் பயன்படுத்தி வந்த அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது வியப்பான கருத்து அல்லவா?அவர்களுக்கு உண்மை தெரியும் என்பதும், அதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்பதும் இயல்பான உண்மை.ஆனால்,20,000 ஆண்டுகாலத்தில் இடையூறு விளைவிக்கும் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.

இந்த இந்துதேசத்தின் மீது நூற்றுக்கணக்கான அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன.ஆனால்,எந்தப் படையெடுப்பாளராலும் முக்கியமான மையத்தை தாக்க முடியவில்லை;சிலர் செல்வத்தைத் தேடினார்கள்.சிலர் நிலங்களை ஆக்கிரமித்தார்கள்.சிலர்,அரண்மனைகளையும் கோட்டை கொத்தளங்களையும் கைப்பற்றினார்கள்.
ஆனால்,இந்து தேசத்தின் உள்ளார்ந்த அம்சத்தைத் தாக்க முடியவில்லை;கி.பி.1000 முதல் 1700 வரை நிகழ்ந்த இஸ்லாமியப்படையெடுப்பால் எதுவும் செய்ய முடியவில்லை; முதன் முதலாக மேலைநாட்டு (கிறிஸ்தவ)நாகரீகத்தால்தான் அந்தத் தாக்குதல் ஏற்பட்டது.அவ்வகைத் தாக்குதல் நடத்துவதற்கான எளிய வழி, ஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டின் இளைய சமுதாயத்திடமிருந்து பிரித்து வைப்பதுதான்.(மெக்காலே கல்வித் திட்டம் அதைத் தான் செய்தது.இன்றும் அதைத் தான் செய்து வருகிறது.இந்த கொடூரத்தினை உணரும் அரசியல்வாதிகள் ஆளும் கட்சியாவதில்லை.)அது இந்து தேசத்தின் செழிப்பான,பரந்துவிரிந்த,மனித மாண்பினை விவரிக்கும்,சுயச்சார்பினை உரத்துக்கூறும் வரலாற்றை அழிப்பதற்காக செய்யப்படுவது.நாட்டின் மக்களுக்கும் அதன் வரலாற்றிற்கும் இடையில் ஓர் இடைவெளி உண்டாக்கப்பட்டது.இதனால்,இந்துக்களாகிய நாம் நம்முடைய வேர்களை இழந்தோம்; சக்தியிழந்தோம்.

ஒரு இருபது ஆண்டுக் காலத்திற்கு பெரியவர்கள் தம் குழந்தைகளுக்கு எதுவுமே கற்றுத்தருவதில்லை என்று முடிவெடுத்தால் என்ன ஆகும் என கற்பனை செய்து பாருங்கள்.அதனால் ஏற்படும் விளைவு, இருபதாண்டுகால இழப்பு அல்ல;இருபதாயிரம் ஆண்டு கால ஞானத்தின் இழப்பு ஆகும்.அந்த இழப்பை சரிசெய்வதற்கு இருபதாண்டுகாலம் போதாது.20,000 ஆண்டுக்காலம் தேவைப்படும்.காரணம்,அறிவுச்சேகரிப்பின் தொடர்பு அறுபட்டுப்போவதுதான்.

இரண்டு நூற்றாண்டுகால கிறிஸ்தவ இங்கிலாந்து ஆட்சியென்ற பெயரில் சுரண்டிய,சுரண்டலும், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த அறிவுச்சேகரிப்பு இடைவெளி இந்த 20,000 ஆண்டு இடைவெளிக்குச் சமமாகும்.முந்தைய ஞானத்திற்கும்,நமக்குமான தொடர்பு கிறிஸ்தவத்தால் அறுக்கப்பட்டது.கடந்த காலத்தோடு எந்த தொடர்புமற்ற,முற்றிலும் புதிதான ஒரு நாகரிகம் நிலைநிறுத்தப்பட்டது.

நமது இந்து நாகரிகம் மிகப்புராதனமானது என்று இந்துக்கள் நினைக்கிறார்கள்.ஆனால்,அவர்கள் நினைப்பது தவறு;இது வெறும் 20,000 ஆண்டுகால பழமையான சமுதாயம் மட்டுமே என வெள்ளைத்தோலைக் கொண்ட இங்கிலாந்து நரிகள் ஊளையிட்டன.அந்த ஊளைக்கூச்சல் நமக்கு நமது பாரதப்பண்பாட்டின் மீதே சந்தேகம் கொள்ள வைத்து, மேல்நாட்டு நாகரிகத்தின் மீது மரியாதையை கொண்டு வந்துவிட்டது.இதனால்,200 ஆண்டுகளுக்கு முன்பு நாம் பெற்றிருந்த ஞானச்செல்வங்களையெல்லாம் இழந்து, ஒரே வீச்சில் இந்துதேசம் இழந்துவிட்டது.

200 ஆண்டுக் காலத்திற்கு முன்னால்,தடைபட்டு நின்றுபோன நமது இந்துதர்ம அறிவுடன் தொடர்புகொள்ளத்தான்,இன்று கல்வியறிவுஇல்லாத மக்கள் அந்தக் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.அவற்றை நாம் செய்வதன் மூலம்,நாம் மீண்டும் அவற்றிற்கு புத்துயிர் தந்து, ஆழமாகப் புரிந்துகொண்டு, 20,000 ஆண்டுக்கால அறிவோடு தொடர்புகொள்ள முடியும்.

அப்போதுதான் இதுவரை நாம் செய்துவந்த மேல்நாட்டு நாகரீகப் பயன்பாடு(பேண்ட் போடுவது,ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைப்பது, வீட்டுக்குள்ளேயே செருப்பு போட்டு நடப்பது,கோயில்கள்,ஜோதிடம்,பண்பாடு இவற்றை கேலி செய்வது) எவ்வளவு பெரிய்ய தற்கொலை என்பது விளங்கும்.

நன்றி: பக்கங்கள்128,129,130,131; மறைந்திருக்கும் உண்மைகள்,எழுதியவர் ஓஷோ
வெளியீடு,கண்ண்தாசன் பதிப்பகம்,சென்னை.

நேர்மை இன்றும் பாரதத்தில் இருக்கிறது:நன்றி தினமலர் 23.10.2010

"கலிகாலத்தில் இப்படியும் ஒருவரா' : இளையவர் காலில் விழுந்த மூதாட்டிதேனி : தேனி பஸ் ஸ்டாண்டில் கிடந்த 15 சவரன் தங்க நகையை தவற விட்ட முதியோர் நேற்று போலீஸ் ஸ்டேஷன் வந்து பெற்றுக்கொண்டனர். தேனி பஸ் ஸ்டாண்டில் நேற்று 15 சவரன் தங்க நகை கிடந்தது. அரசு பஸ் டைம்கீப்பர் ஆனந்தன் அந்த நகையை எடுத்து, போலீசிடம் ஒப்படைத்தார். நேற்று காலை மதுரை தெற்கு வெளிவீதி, முத்துப்பள்ளி தெருவில் வசிக்கும் மணி (82), ஜாய்சரோஜினி (72) தம்பதி அந்த நகையை கேட்டு, தேனி ஸ்டேஷனுக்கு வந்தனர்.மதுரையில் இருந்து லட்சுமிபுரம் திருமண விழாவிற்கு தனியே சென்றபோது, நகையை கழுத்தில் அணிந்து வர தயங்கி, மூதாட்டி சரோஜினி இடுப்பில் மறைத்து வைத்து வந்தபோது, தவறி விழுந்து விட்டதாக தெரிவித்தார்.தேனி எஸ்.ஐ., மீனாட்சி வேறு நகைகளை கொண்டு வந்து "இது உங்கள் நகைகளா', என மூதாட்டியிடம் கேட்டனர். தம்பதியினர்," இது இல்லை' எனக்கூறி விட்டனர். பின்னர் எஸ்.ஐ., மீனாட்சி, நகைக்கடையில் இருந்து வாங்கிய சில நகைகளுடன் பஸ் ஸ்டாண்டில், எடுத்த நகையை வைத்து காட்டினார். தம்பதியினர் அவ்வளவு நகைகளுக்கு நடுவில், பஸ் ஸ்டாண்டில் கிடந்த தங்களது நகைகளை அடையாளம் காட்டினர்.அதன் பின், உண்மையிலேயே தம்பதிகள் தான் நகையை தவற விட்டது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட போலீசார், அவர்களிடம் ஒப்படைத்தனர். நகைகளை வாங்கிய மூதாட்டி சரோஜினி, அவற்றை கண்டெடுத்த ஆனந்தன் காலில் விழுந்து "இந்த கலிகாலத்தில் இப்படி ஒரு நேர்மையான மனிதரை பார்த்ததில்லை' எனக்கூறி கண்ணீர் விட்டார். பின், ஆனந்தனுக்கு பரிசு ஒன்றை கொடுத்து விட்டு, தம்பதியினர் மதுரை புறப்பட்டனர்.

கோடிமடங்கு புண்ணியம் தரும் திருவாதிரை கிரிவலம்

விக்ருதி வருடத்தின் திருவாதிரை நட்சத்திர நாட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்த நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் மற்ற நாட்களில் கிரிவலம் செல்லுவதால் கிடைக்கும் புண்ணியத்தை விட பலகோடிமடங்கு புண்ணியம் கிடைக்கும் என அருணாச்சலபுராணம் தெரிவிக்கிறது.
மேலும்,இந்த நாட்களில் கிரிவலம் செல்லும்போது செய்யும் அன்னதானம்,ஆடைதானம்,விளக்குதானம்,மந்திர ஜபம்,சொர்ண தானம்,தீப தானம்,மரக்கன்று நடுதல் போன்றவை பல கோடி மடங்குகள் நன்மையளிக்கும்.
எனவே, எனதருமை ஆன்மீகக் கடல் வாசகர்களே! நீங்கள் இந்த நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்லவும்;கிரிவலம் செல்லும்போதெ அன்னதானம் செய்து நீங்களும்,உங்கள் வாரிசுகளும்,உங்கள் முன்னோர்களும் வளமுடன் வாழ்க!!!

10.7.2010 சனி மாலை 5.56 முதல் 11.7.2010 ஞாயிறு மாலை 4.59 வரை

6.8.2010 வெள்ளி நள்ளிரவு 1.56 முதல் 7.8.2010 சனி நள்ளிரவு 1.01 வரை

3.9.2010 வெள்ளி காலை 9.48 முதல் 4.9.2010 சனி
காலை 9.00 வரை

30.9.2010 வியாழன் மாலை 5.36 முதல் 1.10.2010 வெள்ளி மாலை 4.53 வரை

27.10.2010 புதன் நள்ளிரவு 1.23 முதல் 28.10.2010 வியாழன் நள்ளிரவு 12.44 வரை

24.11.2010 புதன் காலை 9.08 முதல் 25.11.2010 வியாழன் காலை 8.35 வரை
21.12.2010 செவ்வாய் மாலை 4.47 முதல் 22.12.2010 புதன் மாலை 4.20 வரை

17.1.2011 திங்கள் நள்ளிரவு 12.35 முதல் 18.1.2011 செவ்வாய் நள்ளிரவு 12.13 வரை

14.2.2011 திங்கள் காலை 8.25 முதல் 15.2.2011 செவ்வாய் காலை 8.10 வரை

13.3.2011 ஞாயிறு மாலை 4.15 முதல் 14.3.2011 திங்கள் மாலை 4.06 வரை

9.4.2011 சனி நள்ளிரவு 12.09 முதல் 10.4.2011 நள்ளிரவு 12.07 வரை

வேகமாக சம்பாதிக்கும் பணம் வேகமாகப் போய்விடும்


மதுரைக்குத் தெற்கே ஒரு ஊர்.அங்கே ஒரு புரோட்டாக் கடையில் புரோட்டாமாஸ்டர்.அவருக்கு இரண்டு மகள்கள்.முதல் மகளின் வயது 12,இரண்டாம் மகளின் வயது 8.சுமார் 11 வருடங்களாக அந்த புரோட்டா மாஸ்டர் லாட்டரி எடுக்கும் பழக்கம் வைத்திருந்தார்.
முதன் முதலில் அவருக்கு இரண்டரை கோடி ரூபாய்கள் லாட்டரியில் பரிசு விழுந்தது.வரி போக அவருக்கு ஒரு கோடியே அறுபது லட்சம் கிடைத்தது.
தினமும் அவர் குடிப்பார்;லாட்டரி வாங்குவார்;வீட்டுக்கு செலவுக்குப் பணம் தர மாட்டார்.மனைவி கூலி வேலைக்குப் போய் மகள்களை படிக்க வைக்கும்.

லாட்டரியில் பரிசு விழுந்ததும்,வேலையை விட்டார்.பரிசு விழுந்ததும்,ரோட்டில் போனவனெல்லாம் இவருக்கு உறவினரானான்.தனது 60 நண்பர்களுடன் குற்றாலம்,திருச்செந்தூர்,கன்னியாகுமரி,சென்னை என சுற்றினார்.வெறும் 100நாள்தான்.மீண்டும்,அதே புரோட்டாக்கடை;அதே புரோட்டா மாஸ்டர்.

எனது நண்பர் ஒருவர்.அவரது சம்பளமே மாதம்ரூ 2000/-தான்.2007 ஆம் ஆண்டில் அவர் வாரச் சந்தாவில் உறுப்பினரானார்.அவரும் அவரது மனைவியும் ஆளுக்கு ரூ.25/- ஒவ்வொரு ஞாயிறும் சேமித்து சந்தாவில் ரூ.50/-ஐ போட்டனர்.ஒராண்டில் சுமார் 3000/-பணம் திரண்டது.
சந்தா முடிவடைந்ததும்,கணவன் மனைவிக்குள் அந்த 3000 ஐ என்ன செய்வது என வாக்குவாதம் செய்தனர்.
மனைவி கலர் டிவிதான் தேவை என சொல்ல,கணவனோ செல்போன் தான் தேவை என மறுக்க,இருவரும் சேர்ந்து ஒருமுடிவு செய்தனர்.
இந்த 3000 ரூபாயை வங்கியில் போட்டு வைப்போம்;ஒரு மாதம் கழித்து எது அவசியம் என நினைக்கிறோமோ அதை வாங்குவோம் என்பது அந்த தம்பதியின் தீர்மானம்.
ஒரு மாதம் கழிந்ததும்,செல் போனின் முக்கியத்துவம் உணர்ந்தனர்.இருவருமே செல்போன் கடைக்குச் சென்று 3 வருடம் இன் கம்மிங் வசதியுள்ள செல்போன் வாங்கினர்.
இந்த அனுபவம் பணத்தை எப்படிக் கையாளவேண்டும்? என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.

சதுரகிரி மலையின் முக்கியத்துவம்:நன்றி தமிழ் வெப்துனியா

சதுரிகிரி மலைக்குச் செல்வது ஏன்?
வியாழன், 17 ஜூன் 2010( 20:42 IST )

தமிழ்.வெப்துனியா.காம்: சதுர கிரி மலைக்கு நிறைய பேர் போய்விட்டு வருகிறார். சிலர் அடிக்கடி செல்கிறார்கள். நீங்களும் போய் வருகிறீர்கள். எதற்காக? என்ன காரணம்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நமக்கு (தமிழர்களுக்கு) சித்தர்கள் தொடர்பு அதிகம் உண்டு. சித்தர்கள், மகான்கள் இருந்த இடம், நின்ற இடம், படுத்த இடம், நடந்த இடம் என்று நம்மால் உணர முடியுமா? நம்மால் சித்தர்களைப் பார்க்க முடியாவிட்டாலும், சித்தர்கள் நம்மை வந்து பார்ப்பார்களா? ஏனென்றால், நாம் தேகத்துடன் இருக்கிறோம். அவர்கள் ஸ்தூல தேகத்துடன் இருக்கிறவர்கள். ஸ்தூல தேகம் என்பது காற்று வடிவம். இருந்தும் இல்லாதது. தேகம் இருந்தும் இல்லாதது மாதிரி. அந்த மாதிரி இடங்கள் செல்லும் போது நமக்கு ஒரு பரவசம் உண்டாகிறது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் புகையிலிருந்து விடுபட்டு மரங்களுடைய பூரண பிராண வாயுவை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்வது போல் ஆகிறது. பிறகு அங்கிருக்கும் அருவி நீர் இதையெல்லாம் குடிக்கும் போது நமக்கு தெம்பு உண்டாகிறது.


FILEஆனால், மாறுபட்டச் சூழல் நம்முடைய மனதில் ஒருவிதமான கிளர்ச்சியை உண்டாக்குகிறது. கிளர்ச்சி என்றால், நம்மைப் பற்றி கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. இந்த பரபரப்பான கார், லாரி இந்தச் சத்தத்தில் இருந்து விட்டு விலகி போய் உட்காரும் போது, நம்மைப் பற்றி கொஞ்சம் யோசிக்க வைத்து - Know thy Self - என்று ஷேக்ஸ்பியர் சொல்கிறாரே, உன்னை நீ உணர்ந்து பார், உன்னை நீ திரும்பிப் பார் என்பது போன்று உட்கார்ந்து தியானம் செய்வதற்கு அந்தச் சூழல் நம்மைத் தூண்டுகிறது. அது மாதிரி அங்கு உட்காரும் போது ஒருமுகப்படுத்தக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. அந்தச் சூழலில் இருந்து வரும் போது சிந்தனையை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்துவிட்டு இறங்கும் போது நாம் செய்கிற காரியம் எல்லாம் எளிதில் வெற்றியடைகிறது. அதனால் சதுர கிரி மலைக்கு என்று ஒரு தனி சக்தி உண்டு.

என்னுடன் ஒருவரை அழைத்து வந்தேன். அவருக்கு யோகா, தியானம் என்று ஒன்றும் தெரியாது. நீங்க வேண்டுமானால் ஏதாவது செய்துகொள்ளுங்கள், நான் சும்மா இந்த மரம், செடி கொடியெல்லாம் சுற்றி பார்ப்பதற்காக வருகிறேன், அதற்காக நான் பக்திக்காக வருகிறேன் என்று நினைக்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தார்.

அங்கு வட்டப்பாறை என்று ஒரு இடம் இருக்கிறது. சதுர கிரி மலையிலேயே இன்னும் உச்சிக்கு போக வேண்டும். அதற்கு வழியெல்லாம் இருக்காது. மிகவும் கடினமான பாதையில் செல்ல வேண்டும். அங்கு போய் உட்கார்ந்த உடனேயே, இல்லை சார் நான் வீட்டிற்கு வரவில்லை இங்கேயே இருந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். என்னங்க, எதுவும் இல்லை என்று சொன்னீர்கள் என்றேன். இல்லை, இந்த இடம் ஏதோ என்னை செய்கிறது. எதையோ தூண்டுகிறது என்றார்.

மலை என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு விருட்சம் இருக்கும். வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின் இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி, அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது. ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால் ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

அதுபோல, அந்த சதுர கிரி மலையில், சதுரம் என்றால் நான்கு, அந்த நான்கு புறங்களிலும் சூழ்ந்து இருக்கக்கூடிய மரங்களில், அந்த விருட்சங்களுக்கு ஒரு தனி சக்தி உண்டு. 80 வயதானவரை பார்த்தால் காலில் விழுந்து கும்பிடுகிறோம். 300 வயதான மரத்தைப் பார்க்கும்போது, அதற்கென்று ஒரு தனி சக்தி இருக்கிறதல்லவா, அதனுடைய காற்று நம்மை பரவசமூட்டுவதல்லாமல், நம்மை உணர வைக்கிறது. தெய்வ வழிபாட்டிற்கு கொண்டு செல்கிறது.

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி கிருஷ்ணன் கோவில் என்ற கிராமத்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.அங்கிருந்து வத்ராப் செல்லும் டவுண் பஸ்ஸில் சென்று வத்ராப் இறங்கவேண்டும்.அங்கிருந்து ஆட்டோ,மினி பஸ் மூலமாக தாணிப்பாறை செல்ல வேண்டும்.இதுவே சதுரகிரியின் நுழைவாயில் ஆகும்.
பூலோகத்தின் திருக்கையிலாயம்,சித்தர்களின் வீடு,சித்தர்களின் உலகம் சதுரகிரி ஆகும்.
ஒரு அமாவாசைக்கு சதுரகிரி சென்றுவந்தால்,அந்த ஒரு மாதம் நாம் செய்த பாவங்கள் அழிந்துவிடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.

இந்துக்களின் மந்திரசக்தி பற்றிய ஒரு ஆராய்ச்சி முடிவு


ஜப்பானைச் சேர்ந்த மசாரு இமாட்டோ என்ற விஞ்ஞானி,தண்ணீரின் மூலக்கூறுகள் எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி மாறுகின்றன? என்பதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தார்.அதில் கிடைத்த தகவல்கள் திகைப்பூட்டுவதாகவும்,நமது புராதன இந்துதர்மத்தின் விஞ்ஞானபூர்வத்தையும் நிரூபிப்பதாக இருக்கிறது.
ஒரு தண்ணீர்த்துளியை நுண்ணோக்கி எனப்படும் மைக்ரோஸ்கோப்பில் வைத்து பெரிதாக்கி படம் எடுத்துக்கொள்கிறார்.பிறகு,அந்த (கொஞ்சம்) தண்ணீரானது ஒரு இந்துமந்திரம் ஜபம் செய்த பின்னர் மீண்டும் ஒரு துளி தண்ணீரை படமெடுத்தால்,மிக அழகான பூ அல்லது பழத்தின் வடிவத்தில் அந்த தண்ணீரின் மூலக்கூறு மாறிவிடுகிறது.
அதே துளித்தண்ணீரைக் கொண்டு,ஒரு நாட்டுப்புறப்பாடலைப் பாடிவிட்டு,மீண்டும் படமெடுத்தால்,அந்த தண்ணீரின் மூலக்கூறு மேலே உள்ளதைப் போல வடிவமெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மனதின் சக்தியே பெரிது என்பதை 20,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது ரிஷிகள்,துறவிகள்,மகான்கள்,கவிஞர்கள் பாடியதை பல வருடங்களாக முட்டாள் கம்யூனிஸ்டுகளும்,விதாண்டாவாதம் கொண்டுள்ள நாத்திகவாதிகளும் நக்கல் செய்துவந்தனர்.அதுமாபெரும் தவறு என்பது இந்த ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.
தவிர,நாம் வாழும் வீடு,இருப்பிடம்,அலுவலம் என எல்லாப்பகுதியையும் அன்பும் பண்பும் நிறைந்ததாக மாற்றிவிடலாம்;அப்படி மாறியதை படமாகவும் (கிர்லியன் கேமிரா மூலமாக) படமும் பிடிக்கலாம்.
மேலும் விபரமறிய www.masaru-emoto.net/english/ephoto.html

சங்க இலக்கியங்களில் ஜோதிடம்

மனித இனம் நாகரீகமடைந்து,சுமார் 20 லட்சம் வருடங்கள் ஆகின்றன.இராமாயணம் நம் பாரத நாட்டில் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகின்றன.(ஆனால்,வெள்ளைக்காரன் உண்டாக்கிய நமது பாடத்திட்டத்தில் நமது பாரத நாட்டுக்கு வெறும் 5000 வருட வரலாறு மட்டுமே உண்டு என நம்மை முட்டாளாக்கியிருக்கிறான்.நாமும்,நமது குழந்தைகளும் இந்த பொய்யை பாடமாகவே படித்துவருகிறோம்)
மனிதன் குரங்கிலிருந்து நாகரீகமடையத்துவங்கிய கால கட்டமே கிஷ்கிந்தா அரசு இருந்த,ஆஞ்சநேயர் வாழ்ந்த கால கட்டம்.

திங்கள் சகடம் மண்டிய என்ற அகநானூற்றின் பாடல் வரிகள் கூறும் கருத்து என்னவெனில், ரோகிணி நட்சத்திரம் நின்ற நாட்களில் திருமணம் செய்துள்ளனர்.

இருபெருங் குரவரும்
ஒரு பெரு நாளான்
மணவணி காண மகிழ்ந்தனர் - சிலப்பதிகாரம்

பொருள்: திருமணம் ஒரு நல்ல நாளில் நடந்ததால் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

பிணி கிடந்தார்க்குப்

பிறந்தநாள் போல

அணியிழை அஞ்சவருமால் - முத்தொள்ளாயிரம்

பொருள்: ஒருவன் நோய்வாய்ப்படும்போது,அவன் பிறந்த நட்சத்திரம் வந்தால்,அந்த நாளன்று அவனது நோய்த்துன்பம் மிகும்.

ஆக,எழுதப்படாத வரலாற்றிற்கு முன்பிருந்தே நமது இந்துதர்மம்,நமது ஜோதிடக்கலை,நமது சாஸ்திரங்கள் மிகவும் வளமடைந்துவிட்டன.
அதே காலகட்டத்தில்,ஐரோப்பிய அமெரிக்க மக்கள் நாகரீகமடையாத காட்டுவாசிகளாக இருந்தார்கள்.

முற்பிறவிகள்,மறுபிறவிகள் இருப்பதை நிருபிக்கும் மேல்நாடு ஆய்வுகள்


எட்வர்டு கெய்ஸி என்பவர் நமது பாரதநாட்டின் தொன்மையான கலைகள் மீது அளவற்ற மரியாதை வைத்திருப்பவர்.அவர் ஐரோப்பா,அமெரிக்காக் கண்டங்களைச் சேர்ந்த 4000 மனிதர்களை அறிதுயில் எனப்படும் ஹிப்நாட்டிசத்தில் ஆழ்த்தி அவர்களின் முற்பிறவிகள் பற்றி அறிந்துள்ளார்.
அதில் ஒரே ஒரு உதாரணம் மட்டும் இங்கு விவரிக்க விரும்புகிறேன்:
பிரான்ஸ் நாட்டில் பிறவியிலேயே பார்வைத்திறனின்றி ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தை பருவ வயதை எட்டியதும்,அந்த இளைஞனுக்கு அடிக்கடி விழிக்கோளத்தில் திடீர்,திடீரென வலி தோன்றியது.அந்த மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை கடும் வேதனையைத் தந்தது.எல்லா விதமான மருந்துகள் தந்தும்,அந்த தாங்க முடியாத வலி தீரவில்லை.

இதனால்,அந்த இளைஞனை அறிதுயிலில் ஆழ்த்தி,அவனது முற்பிறவியைக் கேட்டறிந்தார்.அந்த இளைஞன் முற்பிறவியில் காங்கோ தேசத்தில் ஒரு பழங்குடி இனத்தில் பிறந்திருந்தான்.அவன் பருவ வயதை எட்டியதும்,அந்த பழங்குடி இனத்தின் மன்னனின் மெய்க் காவலராக நியமிக்கப்பட்டான்.இருந்தபோதிலும்,இவனது வேலை ஒன்றே ஒன்றுதான்.
அந்த பழங்குடி இன மக்கள் வாழும் 200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எந்த வேற்று மனிதன் வந்தாலும்(வேறு பழங்குடி மனிதன்/வெள்ளைக்காரர்கள்) அந்த வேறு இனத்தவனை பிடித்து,தனது மன்னனின் முன்பாக நிறுத்துவார்கள்.விசாரணையே கிடையாது.அப்படி பிடிபட்ட வேற்றினத்து மனிதனின் கண்களில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் குத்துவது இந்த இளைஞனின் வேலையாக இருந்தது.
நமது இந்துப் பழமொழி எனக்கு தற்போது ஞாபகம் வருகிறது:
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
முற்பிறவியில் நாம் செய்யும் பாவ புண்ணியம் அனைத்தும் நமக்கு இப்பிறவியில் கிடைக்கிறது என அர்த்தப்படுத்திக்கொள்ளலாமா?

பேசும் ஆவிகள் என்ற மாத இதழ் நமது தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் பேருந்து நிலையங்களில் முதல் 15 தேதிகளில் கிடைக்கிறது.அதில் வந்த செய்தி எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது.

ஒரு 45 வயது பெரியவர், கட்டபொம்மன் போக்குவரத்துக்கழகத்தின் பணி மனை ஒன்றில் இரவுக் காவலாளியாகப் பணிபுரிகிறார்.அவர் ஒரு முறை ஆவி ஜோதிடர் ஒருவரை சந்தித்தார்.அதில்,அந்த இரவுக் காவலாளியானவர் முற்பிறவியில் கட்டபொம்மன் மகாராஜாவின் மெய்க்காவலர்களில் ஒருவராக இருந்தவராம்.அப்போது,ஒரு முறை கட்டபொம்மன் மன்னனுடன் திருச்செந்தூருக்கு வருகை தந்தார்.திருச்செந்தூர் முருகன் சன்னதியில் 'மன்னா, இப்பிறவியில் மட்டுமல்ல; இனி வரும் ஏழேழு பிறவிக்கும் நான் உங்கள் மெய்க்காவலனாக இருப்பேன்' என சத்தியம் செய்திருக்கிறார்.இந்த முற்பிறவி உண்மையை அந்த ஆவி ஜோதிடர், இரவுக் காவலாளியிடம் சொல்லியிருக்கிறார்.

கவிஞர் ஏகலைவன்;மாற்றுத்திறனாளர்களின் கலங்கரை விளக்கம்


விருதுகள் பல வெண்ற கவிஞர் திரு.ஏகலைவன்
சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர்,தனது 13வது வயதில் நிகழ்ந்த ஒரு இரயில் விபத்தால் உடல் ஊனமடைந்தபோதிலும் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் (தன்னம்பிக்கைக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள்) என்று தனது படைப்புகள் மூலமாக தமிழ் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் பல்வேறு இதழ்களில் படைப்புகளை எழுதி வருவதோடு, வாசகன் பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி, பதிப்பாளராகவும் இயங்கி வருகிறார்.


தனது முதல் நூலான "பயணவழிப் பூக்கள்" கவிதைத் தொகுப்பை 2004 இல் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம்‍‍ 1)", "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம்‍‍ 2)'', ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள், சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் போன்ற தொகுப்புகளின் வாயிலாக ஊனமுற்றோரின் சாதனைகளை புத்தகங்களாக்கி இருக்கிறார். "கல்விச் செல்வம்" என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ள
இவர், மாற்றுத்திறன் கொண்டோரின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில், தமிழகம் முழுவதிலுமான‌ 44 மாற்றுத்திறனாளர்களின் கவிதைகளை தொகுத்து ''கவிச்சிதறல்'' என்னும் கவிதைத் தொகுப்பையும், 8 மாற்றுத்திறன் சாதனையாளர்களின் சாதனைப் பதிவுகள் அடங்கிய "மாற்றுத்திற‌ன் சாதனைச் சிகரங்கள்" என்னும் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

இவர் மாற்றுத்திறனுடையோரின் முன்னேற்றத்திற்கு செய்துவரும் முயற்சிகளையும் தமிழ் மோழிக்கு அற்றிவரும் சேவைகளையும் பாராட்டி பல அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது. இதற்கெள்ளாம் சிகரம் வைத்தார்போன்று எதிர்வரும் தமிழ் செம்மொழி மாநாட்டில் உரையாற்ற இவருக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. (தலைப்பு : மாற்றுத்திறனுடையோர் பதிவேற்றி நடத்தும் தமிழ் வலைப்பதிவுகள் - பற்றி). இது தமிழக அரசு இவருக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய கெளரவமாகவே நினைக்கத்தோன்றுகிறது.

இந்த அளவிற்கு பேரும் புகழுடன் விளங்கும் திரு.ஏகலைவன் தனிப்பட்ட வாழ்க்கை மிகுந்த வறுமையுடையது. தனது தனிப்பட்ட வாழ்வில் வறுமை தான்டவமாடினாளும் தான் தமிழுக்கும் மாற்றுத்திறன் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளை இவர் சிறிதும் தொய்வின்றி செய்துவருவது மிகவும் பாராட்டுதளுக்குறியது.

அதற்கு சான்று கடந்த சனவரி மாதம் இவர் தனது வாசகன் பதிப்பகம் மூலம் பாள்ளாயிரம் ரூபாய் பொருட்செலவில் வெளியிட்ட கவிச்சிதரல் மற்றும் மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள் என்ற நூல்கள்.கவிதைத்தொகுப்பு நூலான "கவிச்சிதறல்" இன் முதல் பிரதியினை பிரபல எழுத்தாளர் திரு.லேணா.தமிழ்வாணன் அவர்கள் வெளியிட சேலம் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தலைவர் திரு.அத்தியண்ணா அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.
மாற்றுத்திறனாளர்களில் சாதனைபுரிந்தவர்களை உலகிற்கு வெளிப்படுத்தி வெளிச்சமிட்டக் காட்டும் "மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள்" நூலின் முதல் பிரதியினை உரத்த சிந்தனை இதழ் ஆசிரியர் திரு.உதயம். ராம் அவர்கள் வெளியிட கோடைபண்பலை வானொலியின் நிகழ்ச்சி பொருப்பாளர் திருவரங்கம் திரு.முரளி அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.

இவரது வலைப்பதிவுகள்
1) கவிஞர் ஏகலைவன்
2) பீனிக்ஸ் மனிதர்கள்
3) வாசகன் பதிப்பகம்


(குறிப்பு: மேற்கண்ட வலைதளங்களை பார்க்க விரும்புவோர் அந்தந்த வலைதளங்களின் மீது சொடுக்கவும்)

இவரது படைப்புகள்:

வாசகன் பதிப்பகம்


கவிச்சிதறல்
விலை ரூபாய் 55.00 மட்டும்
பக்கங்கள் 128


மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள்
விலை ரூபாய் 50.00 மட்டும்
பக்கங்கள் 184


கல்விச்செல்வம்
விலை ரூபாய் 6.00 மட்டும்
பக்கங்கள் 40
பயண வழிப்பூக்கள்
விலை ரூபாய் 30.00 மட்டும்
பக்கங்கள் 64பதிப்பில் இருப்பவை (விரைவில் வெளியிடப்படும்)
1) செந்தமிழே வணக்கம்,
விலை ரூ.8.00 மட்டும்
40 பக்கங்கள்

2) பெண்மையைப் போற்றுவோம்
விலை ரூ.8.00 மட்டும்
40 பக்கங்கள்


தொடர்புக்கு:
கவிஞர் ஏகலைவன்,
வாசகன் பதிப்பகம்,
11/96 சங்கிலி ஆசாரி நகர்,
சன்யாசி குண்டு,
சேலம் - 636 015.
செல்லிட பேசி: 9842974697, 9944391668.
மேலும் விபரமறியவும்,தமிழ்நாடு அளவில் வாழும் மாற்றுத்திறனுடையவர்கள் ஓரணியில் திரளவும் செயல்படும் வலைப்பூ
www.vrabled.blogspot.com

சீக்கிரமே புண்ணியம் சேர சில வழிமுறைகள்

சீக்கிரமே புண்ணியம் சேர சில வழிமுறைகள்

1.விஞ்ஞான அடிப்படையில் உருவாக்கப்பட்டதே நமது ஜோதிடக்கலை.(எல்லாத் துறையிலும் போலிகள் இருப்பதுபோல் ஜோதிடத்துறையிலும் போலிகள் இருக்கிறார்கள்.அவர்களால்தான் ஜோதிடத்துறைக்கே கெட்டப்பெயர் உருவாகிறது)
கிரகங்களின் சுழற்சியை பக்திமயமாக சாதாரணமக்களுக்கு உணர்த்தவே இந்துஜோதிடம் உண்டானது.ஜோதிடத்தின் பிறப்பிடம் தமிழ்நாடுதான்.

தமிழ் வருடப்பிறப்பு,தமிழ் மாதப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,சூரியக்கிரகணம்,சந்திரக்கிரகணம்,தினசரி சூரிய உதயத்திற்கு முந்தைய 90 நிமிடங்களில் ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

தொடர்ச்சியான மந்திர ஜபம் நமது,நமது முற்பிறவி,நமது இப்பிறவி,நமது முன்னோர்களின் பாவத்தைக் கரைத்துவிடும்.

நமது பூமியில் 7,00,00,000 (ஏழு கோடி) மந்திரங்கள் இருக்கின்றன.இதில் வாழ்க வளமுடன் என்பதும் ஒரு மந்திரமே!திருப்பாவை,திருவெம்பாவை,திருமந்திரம்,
சமஸ்க்ருத மந்திரங்கள்,காயத்ரி மந்திரங்கள்,கந்த சஷ்டிக் கவசம் என ஏராளமான மந்திரங்கள் இருக்கின்றன.இதில் ஏதாவது ஒன்று அல்லது ஒரு சில மந்திரங்களை வரிசைப் படுத்தி ஜபித்துக்கொண்டே இருக்கவும்.

2.விழுப்புரம் அருகிலிருக்கும் திரு அண்ணாலைக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலிருக்கும் சதுரகிரிக்கும் அடிக்கடி பயணம் செய்யவும்.கோவிலின் உட்பிரகாரத்தில் ஏதாவது ஒரு மந்திரம் ஜபிக்கலாம்;அல்லது அன்னதானம்,ஆடை தானம் செய்யவேண்டும்.

3.பவுர்ணமி, அமாவாசை,கிரகண நேரங்களில் கடலோரம் இருக்கும் கோவில் நகரங்களுக்கு முதல் நாளே வந்துவிடவும்.வந்து உரிய நாளில் காலை 4.30 முதல் சூரிய உதயம் வரையிலும் ஏதாவது ஒரு மந்திரத்தை (இடுப்பளவு கடலில் நின்று,மூன்றுமுறை மூழ்கிவிட்டு) 108,1008,10,008,1,00,008 முறை ஜபிக்கவும்.

4.அனாதை இல்லங்களில் அன்னதானத்துக்கு பணம் தருவதோடு, உங்கள் பணத்தைச் செலவிடும் நாளில் நீங்கள் அங்கே சென்று நீங்களே உணவு பரிமாறுவது மிக நன்று.

5.உங்கள் ஜாதியில் அல்லது ஊரில் இருக்கும் ஏழை மற்றும்/அல்லது அனாதை மாணவன்/மாணவிக்கு பாலிடெக்னிக்/பட்டப்படிப்பு வரையிலும் படிக்க வைப்பது.


6.ஏழை/அனாதைப் பெண்ணுக்கு உங்கள் சொந்தச் செலவில் திருமணம் செய்து வைப்பது.

7.உங்கள் ஊரின் அருகில் இருக்கும்/ஊருக்குள் இருக்கும் பாழடைந்த கோவிலை தத்தெடுத்து,அங்கே ஒரு வேளை பூஜை நடக்க பண உதவி செய்வது.

8.இலவசமாக ரத்ததானம் செய்வது, கண் தானம் செய்வது,உறுப்புதானம் செய்வது.

9.உங்கள் உறவுகள்,நட்புக்களிடம் அடிக்கடி கோபப் படாமலிருப்பது.

10.உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு தேவைப்படும் போது ஆறுதல் சொல்லுவது

11.சுய முன்னேற்றக் கருத்தரங்கங்கள் உங்கள் பள்ளியில் உங்கள் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்வது.

12.இலவசமாக ஐ.டி.ஐ.நடத்துவது

13.மாநிலத்திலும்,உங்கள் மாவட்டத்திலும் 3,4,5 ஆம் இடங்களைப் பிடித்த 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு அடுத்த மேற்படிப்பை படிப்பதற்கு முழு உதவி செய்வது.

14.தினமும் ஒரு மரக்கன்று நடுவது.

15.உங்கள் பகுதி வயதான ஆதரவற்ற தம்பதி, ஆண் பெண்ணுக்கு முதியோர் இல்லத்தில் இடம் வாங்கித் தந்து அவர்களது மாதாந்திர பராமரிப்புச்செலவை ஏற்றுக்கொள்ளுவது.

16.தாழ்த்தப்பட்ட பகுதிகளில் இலவச ஸ்போக்கன் ஆங்கிலம் விடுமுறை நாட்களில் பயிற்சியளிப்பது, மனதத்துவ முன்னேற்ற கருத்தரங்கம் நடத்துவது.
அவர்களின் வட்டார்த்திருவிழாக்களில் மரக்கன்றுகளை அவர்களைக் கொண்டே நடச்செய்வது.

17.புதிய நகர்ப்பகுதிகளில் விநாயகர் கோவில்களை நிறுவுவது; மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவது.

18.யாருக்கும், எப்போதும்,எந்த சூழ்நிலையிலும் மனதாலும், உடலாலும் தீங்கு தராமலிருப்பது.பிறரால் வர இருக்கும் தீங்கினைத் தடுப்பது.

19.உங்கள் குழந்தைகளிடம் எப்போதும் அன்பாக இருப்பது.உங்கள் பெற்றோரிடம் அன்பாக நடந்துகொள்ளுவது.

ஜோதிட கேள்வி பதில்

1.ஏன் அரச மரத்தின் கிளையை திருமணத்தின்போது நட்டி வைக்க வேண்டும்?

அரச மரமானது முழுச்சுபக்கிரகமான குரு என்னும் வியாழனுக்குரியது.வியாழனுடைய பார்வை படுவது சுபத்தைத் தரும் என்பதாலேயே அரசமரக்கிளையை நட்டி வைக்கின்றனர்.
மேலும் குருபார்வை,குருபலம் இல்லாத முகூர்த்தத்திற்கு ‘தோஷப்பரிகாரமும்’ ஆவதால் அக்காலப்பெரியவர்கள் இதைச் செய்யச் சொன்னார்கள்.

2.முருகக் கடவுளின் அருள் கிடைக்கச் செய்யும் மந்திரம் எது?

ஓம் ஹம்ஸஹ ஓம் தஸ்மை
ஷண்முகாயநமோ ஹஸ்து

என்ற இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபம் செய்துவந்தால்,முருகக் கடவுளின் அருள் கிடைக்கும்.

3.யார் குள்ள நரியாகப் பிறப்பார்?

மனைவி ஆசையுடன் உறவிற்கு நெருங்கி வரும்போது, அவள் ஆசையை பூர்த்தி செய்யாதவன்,
கணவனின் ஆசையை பூர்த்தி செய்யாத மனைவி,


ஒரு குழந்தையைக் கருவிலேயே கொன்றாலும்(எல்லா டிவி,சினிமா நடிகைகளும் இதில் அடக்கம்)
மறு ஜன்மத்தில் குள்ள நரியாகப் பிறப்பார்கள் என சாஸ்திரம் சொல்லுகிறது.

4.எனது எதிரிகள் செய்த தீச்செயலால் என்னால் இரவவல் சரியாகத்தூங்க முடியவில்லை.என்ன செய்யலாம்?

மருத்தோன்றிப்பூவை தலையணை ஓரத்தில் வைத்துத் தூங்குங்கள்.

5.எனக்கு நரம்புத்தளர்ச்சி உள்ளது.என்ன மருந்து சாப்பிடுவது?

அதிமதுரப் பொடி 2 கிராம் தேனில் காலை மாலை சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

6.நான் ஒரு முருக பக்தன்.தேள்க்கடி மற்றும் விஷக்கடி பார்வை(மந்திரப்பிரயோகம்) பார்க்க ஒரு மந்திரம் கூறுங்கள்.

ஓம் நீல கண்டாய வித்மஹே
சித்ரபட்சாய தீமஹி
தன்னோஹ் மயூர ப்ரஜோதயாத்
சர்வ விஷம் நசி மசி சுவாஹா.

7.ஒருவன் மரணத்திற்குப்பிறகு எந்த கதியைப் பெறுவார் என்பதை எதைக் கொண்டு தீர்மானிப்பது.

இறந்தவரின் மரணமானது உச்சகோள் தசாவில் வந்தால் தெய்வகதியிலும்,ஆட்சிக்கோள் தசாவில் வந்தால் மனித கதியிலும், பகைக் கோள் தசாவில் வந்தால் மிருக கதியிலும், நீசக்கோள் தசாவில் வந்தால் நரக கதியிலும்(தவழ்வன,பறப்பன,நீர்வாழ்வன) உயிரானது அனுபவித்துப்பிறவியெடுக்கும்.

ஆனால்,ஜீவசமாதி அனுபவம் பெற்றவர்களுக்கு எந்தவித கதியுமில்லை;பிறப்புமில்லை;

தெய்வகதியென்பது பல்லாண்டுகள் ஆலயத்தில் வைத்து வழிபடக் கூடிய நல்வினைக் கதியைக் குறிக்கிறது.

பித்ரு தோஷம் நீங்க ஒரு பரிகார முறை

பித்ரு தோஷம் நீங்க ஒரு பரிகார முறை

ஞாயிற்றுக்கிழமை வரும் உத்திராடம் நட்சத்திரம் அன்று ராமேஸ்வரம் சென்று,கடல் தீர்த்தத்திலும்,காயத்ரி தீர்த்தக்கட்டங்களிலும் நீராடிவிட்டு,ராமநாதசுவாமியையும்,அம்பிகையையும்வழிபடவேண்டும்.
பிறகு,கோவிலுக்கு வடக்கேயுள்ள கந்தமாதனப் பர்வதத்திலுள்ள ராமபிரான் பாதத்தை துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அதன்பிறகு,உடுமலைப்பேட்டையிலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திரு மூர்த்தி மலைக்குச் சென்று மலையடிவாரத்தில் இருக்கும் பஞ்சலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யவும்.
.

பஞ்ச பிரம்ம மந்திரம்

பஞ்ச பிரம்ம மந்திரம்

ஓம் ஹோம ஈசான மூர்த்தாய நமஹ

ஓம் ஹேம் தத்புருஷவக்த்ராய நமஹ

ஓம் ஹீம் அகோர இருதாயாய நமஹ

ஓம் ஹிம் வாமதேவ குஹ்யாய நமஹ

ஓம் ஹம் சத்யோஜாத மூர்த்தயே நமஹ

திருமணம் உடனே நடைபெறவும்,குடும்பச்சண்டை நிற்கவும் ஒரு பரிகாரம்

நீண்டகாலமாக திருமணமாகாதப் பெண்களுக்கு

பலவிதமான தோஷங்களுடன் தான் நாம் இந்த கொடூரமான கலியுகத்தில் பிறக்கிறோம்.ஆனால்,அது நமக்குத் தெரிவதில்லை;ஏனெனில்,முற்பிறவி/முற்பிறப்புக்களில் நாம் சில சிறந்த புண்ணியகாரியம் செய்திருப்போம்.அந்த புண்ணியம் நம்மை இந்தப்பிறவியில் நல்லெண்ணத்துடன் பிறக்க வைத்திருக்கும்.
உதாரணமாக,ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் வக்கிரமாக இருந்தால்,அவர் எதற்கெடுத்தாலும் பொறாமைப்படுவார்.(அந்த வக்ர செவ்வாயை குரு பார்த்தால் இந்த பொறாமைகுணம் ஓரளவு மட்டுமே இருக்கும்)
புதன் வக்கிரமாக இருந்தால்,சிந்தனையே வக்கிரமாக இருக்கும்.மனதில் ஒருவனுக்கு ஒருத்தி,ஒழுங்கான நிர்வாகம்,சிறந்த ஆளுமைத்திறன் இராது.ஆனால்,இவர்கள் அப்படி டீசன் டாக இருப்பதுபோல நடிப்பார்கள்.

லக்னாதிபதியே வக்ரமாக இருந்தால்,இவர்கள் யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பவே மாட்டார்கள்.

பல கன்னிப்பெண்களுக்கு 27,29,31,40 வயதாகியும் திருமணம் நடைபெறாமல் இருக்கிறது.அதற்கு அந்தக் கன்னிப்பெண்கள் அஷ்டமிதிதி வரும் நாளில் தனது வயதின் எண்ணிக்கையில் துர்கையம்மனுக்கு அகல் விளக்கு ஏற்றிவழிபட்டுவரவேண்டும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி திருமணம் ஆகும்வரை ஏற்றிவழிபட்டுவந்தால்,நிச்சயமாக விரைவாக திருமணம் நடைபெறும்.

திருமணமான பெண்கள் இதேபோல்,அகல் விளக்கில் தீபம் ஏற்றிவழிபட்டுவந்தால்,மாமியார் மருமகள் சண்டை,கணவன் மனைவி யுத்தம்,நாத்தனார் மதினி வாக்குவாதம் நின்றுவிடும்.

யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

அறிவாளியை உண்மையால் வெல்ல வேண்டும்.

முட்டாளை நடிப்பினாலும்,

நமக்குச் சமமானவர்களை திறமையாலும் வெல்ல வேண்டும்.

குழந்தைகளை இனிப்புத்தின்பண்டங்களைக் கொடுத்து வசப்படுத்திட வேண்டும்.

வயதானவர்களை மரியாதையால் மேன்மை செய்ய வேண்டும்.

தற்பெருமை மிக்கவர்களை புகழ்ச்சியால் புகழ்ந்து பேசி அடக்க வேண்டும்.

ஒழுக்கமற்ற நபர்களை வஞ்சகத்தினால் வெல்ல வேண்டும்.
திமிர் பிடித்தவர்களை வணக்கத்தாலும்,
வீரனை தைரியத்தாலும்,
குருவை பணிவான அன்பினாலும்,
மகான்களை சரணாகதி அடைந்தும் நன்மை பெற வேண்டும்.

ஆக,முழுக்க முழுக்க உண்மை பேசியும்,100% நேர்மையாகவும் இந்த கலிகாலத்தில் வாழ முடியாது; நீங்களும் அப்படி நடக்க முயல வேண்டாம்;மற்றவர்களிடமும் இப்படி எதிர்பார்க்க வேண்டாம்.

ஏழு சக்கரங்களும் அதன் சுபாவங்களும்

மனித உடலில் உயிரைத் தாங்கும் சக்கரங்கள்

மனித உடலில் ஏழு சக்கரங்கள் இயங்குகின்றன.இந்த ஏழு சக்கரங்களின் இயக்கத்தினால்தான் மனித உயிர் தங்குகிறது.
அவை மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம்,மணிப்பூரகம்,அனாகதம்,விஷீத்தி, ஆக்ஞா,சகஸ்ரஹாரம்.

வீரிய சக்தியான மூலாதாரம் முதுகெலும்பின் கடைசிப்பகுதியில் (நமது மலத்துவாரத்துக்கு சற்று மேலே) அமைந்துள்ளது.இது விநாயகரின் ஆசி பெற்ற இடமாகும்.
ஐம்பூதங்களில் இது மண்ணுக்குரியது.

ஆசாபாசங்கள்,மனிதனின் அடிப்படை உணர்வுகள் மற்றும் சிருஷ்டிக்குரிய ஸ்வாதிஷ்டானம் தொப்புளுக்குக் கீழே அமைந்துள்ளது.இது அக்கினிக்குரியது.

தொப்புள் பகுதியில் அமைந்துள்ளது மணிப்பூரகம்.இது பயம்,பதற்றத்துக்குரியது.இது பஞ்சபூதங்களில் நீருக்குரியது.இது பெண்களுக்குரிய சக்தி மையம் ஆகும்.

இரண்டு மார்புகளுக்கு நடுவே அமைந்திருப்பது அனாகதம்.கருணை,அன்பு போன்றவற்றின் இருப்பிடமான இது ஐம்பூதங்களில் காற்றிற்குரியது.

தொண்டைக்குழியில் இருப்பது விசுத்தி.சிந்தனை,சுதந்திர உணர்வு,தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் திறன் ஆகிவற்றிற்குக் காரணகர்த்தாவான இது ஆகாயதத்துவத்தின் அடிப்படையில் இயங்கிவருகிறது.

புருவத்தின் நடுப்பகுதியில் இருப்பது ஆக்ஞா.இது உள்ளுணர்வின் இருப்பிடம் ஆகும்.ஐம்பூதங்களில் மனதின் சக்தியிது.

சஹஸ்ரஹாரம் உச்சந்தலை தியானமும்,பிரபஞ்ச பிரக்ஞையும் பிறக்குமிடம்.

இந்த ஏழுச் சக்கரங்களுக்கு உரிய திருஸ்தலங்களே திருவாரூர், திருவானைக்கால்(திருச்சி), திருவண்ணாமலை,சிதம்பரம்,திருக்காளஹஸ்தி,காசி, திருக்கயிலை.

இந்த ஏழுச்சக்கரங்களைத் திறக்கும் தியான முறைகளில் மனவளக்கலையும்,ரெய்கியும் ஆகும்.ஆனால்,இரண்டின் வழிமுறைகளும் முற்றிலும் வேறுபட்டவை.நமது தினசரி வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டே நம்மை ரிஷியாக்கும் வழிமுறைகள் இவையாகும்.முயற்சிக்கவும்;இறையருள் மற்றும் குருவருளால் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றிபெறவும்.யோக வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம்

என்னவெனில்,தியானம்,குரு தீட்சை,தியான ஆராய்ச்சி என இறங்குபவர்கள் இந்த ஏழுச் சக்கரங்களைத் திறக்கத்துவங்கினால், இடையில் நிறுத்தக்கூடாது.அப்படி நிறுத்தினால்,அவர்கள் மரணம் அல்லது மன நிலை பாதிப்பில்தான் வீழ்ந்தாக வேண்டும்.

தகுந்த குருவின் துணையோடு மட்டுமே ஆன்மீக சாதனைகளை நிகழ்த்திட வேண்டும்.இது அவசியம்.

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பமா?

ஜோதிடம் நேரடியாகக் கற்றுக்கொள்ள விருப்பமா?

எனது ஆன்மீகக்கடல் வாசகர்களே!
எனது 22 வருட ஜோதிட அனுபவத்தை நேரடியாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அடிப்படை ஜோதிடம் முதல் தொழில்முறை ஜோதிடம் வரை கற்றுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

உங்களது ஆர்வம்,புரிந்துகொள்ளும் திறன்,பூர்வ புண்ணியத்தின்படி உங்களால் குறைந்தது ஒரு வாரம் முதல் அதிகபட்சம் ஒரு மாதம் வரை நீங்கள் தினமும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.ஒரு நாளைக்கு காலை 90 நிமிடம் அல்லது மாலை 90 நிமிடம் என வீதம் கற்றுக்கொள்ள வேண்டும்.
(ஞாபக சக்தி இல்லாதவர்களுக்கு இந்தக் கலை கை கூடாது)
ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு கட்டணம் உண்டு.சான்றிதழ் கிடையாது.உங்களை தொழில்முறை ஜோதிடராக்குவது எனது முழுப்பொறுப்பு.

மேலும் விபரங்களுக்கு aanmigakkadal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளவும்.

எனது ஜோதிட சீடர்களே! உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்.

கிரக அதிசாரத்தினால் பூமியில் வாழும் மக்களின் மனங்களில் ஏற்படும் மாற்றம்

மன‌தி‌ல் அ‌ச்ச‌ம் ஏ‌ற்படுவது எதனா‌ல்?
செவ்வாய், 8 ஜூன் 2010( 14:55 IST )

தமிழ்.வெப்துனியா.காம்: தங்களுடைய மனதில் ஒருவிதமான அச்சம் இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். எதைப்பற்றியாவது அந்த அச்சம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எதிர்காலத்தைப் பொறுத்த அச்சம் என்பது பொதுவானது. அப்படிப்பட்ட அச்சம் ஏன் வருகிறது. இதற்கு ஏதேனும் ஜோதிட தொடர்பு உண்டா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்: இயல்பான இயக்கங்களில் கிரகங்கள் இருக்கும் போது மக்கள் மனதில் அச்சம் ஏற்படுவதில்லை. சூரியன் 1 மாதத்திற்கு ஒரு வீடு, செவ்வாய் என்றால் 40 நாட்களுக்கு ஒரு வீடு, சுக்ரன் 28 நாட்களுக்கு ஒரு வீடு, புதன் 18 நாட்களுக்கு ஒரு வீடு என்பது இந்த கிரகங்களின் இயல்பான இயக்கம்.

குரு பகவான் என்றால் ஒரு வருடத்திற்கு ஒரு வீடு. சனி பகவான் என்றால் இரண்டரை வருடத்திற்கு ஒரு வீடு. இது இயல்பான இயக்கம். ஆனால் சமீப காலமாக, ஏறக்குறைய ஒன்பதே கால் மாதமாக செவ்வாய் ஒரே வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு வக்கிரமாகிவிட்டார். செவ்வாய் இரத்தத்திற்குரிய கிரகம். இரத்தம் கெடும்போதோ, இரத்தத்தோட தன்மை மாறுபடும்போதே உடல்நிலை மாறும். அடுத்து உடம்பு நன்றாக இல்லாதபோது மனசு நன்றாக இருக்க முடியாது. எனவே மனதும் பேதலிக்கும், பாதிக்கும், கவலை கொள்வது போன்றதெல்லாம் உண்டாகும்.

குரு பகவான் ஒரு வருடத்திற்கு ஒரு வீடு இருக்க வேண்டும். ஆனால் அவர் டிசம்பரில் மாறினார். மாறி உடனடியாக வக்ரம் அதிசாரம் என்று சொல்லிவிட்டு மே மாதத்தில் இருந்து அடுத்த வீட்டிற்குப் போய்விட்டார். இந்த மாதிரி கிரகங்களினுடைய இயல்பான இயக்க நிலை மாறுபட்டு வரும்போது மக்கள் மனதில் ஒரு அச்சம், பீதி, கவலை, அதாவது இனம் தெரியாத மனக் கவலை என்று சொல்வார்களே - என்னய்யா ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய். ஒன்றுமில்லீங்க, என்னமோ போல இருக்கிறது என்று சொல்வார்கள் - அதுதான் கிரகங்கள் வக்கிரமாக இருப்பதன் விளைவு. வக்கிரமாக இருக்கும்போது எதிர்மறை சிந்தனைகள் வரும். ஒரு வில்லங்கமான ஆள், வக்கிரபுத்திக்காரன் என்று சொல்வோமே அதுதான். கிரகங்கள் வக்கிரமாகும் போது இதுபோன்ற சங்கடங்கள், சலனங்கள், முறையற்ற பாலுணர்வு, வக்கிர புத்தி, விபத்துகள் இதெல்லாம் உண்டாகும்.

குருபூர்ணிமாவன்று புண்ணியம் தேடுவோம்


ஆனிமாதம் வரும் பவுர்ணமியே குருபூர்ணிமா ஆகும்.வேதங்களை தொகுத்த வியாஸர் மகரிஷியின் பிறந்த நாள் இதுதான்.இந்த விக்ருதி வருடம் ஆனிமாதம் பவுர்ணமியானது 25.6.2010 வெள்ளி மாலை 5.15க்குத் துவங்கி,26.6..2010 சனிக்கிழமை மாலை 5.46க்கு நிறைவடைகிறது.
கடவுளின் அருளைப் பெறவும், கலிகாலத்திலும் மனிதன் நிம்மதியாக வாழவும், 18 புராணங்களையும்,மகாபாரத இதிகாசத்தையும் இயற்றியவர் வேதவியாசர் ஆவார்.இவரையும்,நமக்கு எழுத்தறிவித்த ஆசிரியர்களையும்,ஆதிகுருநாதர்கள் எனப்படும் 8 மூல குருமார்களையும் பாதந்தொட்டு வணங்கி வழிபடவேண்டிய நாள் இதுதான்.
அத்திரி மகரிஷி, புவஸ்திய மகரிஷி, பிருகு மகரிஷி, வசிஸ்ட மகரிஷி, ஆஸ்கீரஸ மகரிஷி, கவுதம மகரிஷி, மரீசி மகரிஷி, ஸ்ரீமாங்கல்ய மகரிஷி ஆகிய இந்த எட்டுப்பேரும்தான் இந்த பிரபஞ்சத்தின் மூல குருநாதர்கள் ஆவர்.
இவர்களை பின்வரும் வேதவியாசரின் தியான மந்திரத்தினால் பவுர்ணமியன்று ஜபித்து,வழிபட்டு,அவர்களின் ஆசிபெற்று நிம்மதியாக வாழ்வோம்.

வ்யாஸஸம் வஸிஷ்ட நப்தாரம்
சக்தேஹ பவுத்ரம் அகஸ்மஷம்
பராசராத்மஜம் வந்தே ஸீகதாதம் தபோதிதிம்

உயர்ந்த அந்தஸ்தோடு வாழ


தைமாதம் வரும் பூசம் நட்சத்திரம் நாளன்றும்,ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் குரு ஓரையில் சித்தர்கள்,மகான்கள்,துறவிகளின் ஜீவ சமாதிகள்,சதுரகிரி மலைப்பகுதி,சதுரகிரியின் கோவில் சன்னதி,திரு அண்ணாமலையின் கோவில்பகுதி, திருவண்ணாமலையின் கிரிவலப்பாதை,அஷ்ட லிங்கங்களின் சன்னதிகளில் அமர்ந்து பின்வரும் மந்திரத்தை 90 நிமிடங்கள் (முற்காலக் கணக்கின்படி ஒரு நாழிகை) ஜபித்துவரவேண்டும்.
இதனால்,முற்பிறவி கர்மம்,நம் முன்னோர்கள் செய்த கர்மம்(பாவம்) தீரும்.அப்படித் தீர்ந்தாலே, நாம் செல்வச் செழிப்பின் உச்சத்தை நோக்கி நகரத்துவங்குவோம்.

அதற்குமுன்பாக,இந்த மந்திரத்தை ஒரு சிவ பக்தர்/சிவாச்சாரியார்/சைவச்சித்தாந்த மாணவர்/உங்கள் ஆஸ்தான ஜோதிடர்/உங்களது ஆஸ்தான துறவி/உங்களது ஆசிரியர் என யாரையாவது இதை ஒருமுறை வாசிக்கச் சொல்லி அதை நீங்கள் கேட்டு,குரு உபதேசம்
பெற்றிருத்தல் அவசியம்.

ஓம் ஹ்ரீம் பரஞ்சோதி பரஞ்சோதி ஹம்ஸ ஹம்ஸ
வ்யோம வ்யோம ந்ருத்த பரப்ரகாசானந்த நாதாய
ஹ்ரீம் சிவானய நமஹ

சில ஜோதிட விளக்கங்கள்

புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை,ஆபரணங்கள்,பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித் தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும்.ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால்,நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.
வெள்ளி,செவ்வாய்க்கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல்,அரிசி,கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள்,பதார்த்தங்கள் தரக்கூடாது.பணம்,முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது.அப்படிக்கொடுத்தால்,வாங்கியவர் வளமடைவார்.

கார்த்திகை,மகம்,உத்திரம்,சித்திரை,மூலம்,ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும் கூடாது.அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.

சீனாவின் கனவும் இந்தியாவின் சுதந்திர ஜாதகம் சொல்லும் ஜோதிட நிஜங்களும்

சீனாவின் கனவும் இந்தியாவின் சுதந்திர ஜாதகமும்

இந்தியாவின் பிறந்த ராசி கடக ராசியாகும்.கடக ராசிக்கு தற்போது ஏழரைச்சனி 26.6.2009 அன்றுடன் முடிவடைந்துவிட்டது. நவம்பர் 2011 வரை கடகராசிக்கு 3 ஆம் இடத்தில் சனி நிற்கிறார்.இதனால்,நவம்பர் 2011 வரை இந்தியாவின் வளர்ச்சி,ஒளி வேகத்தில்! (விநாடிக்கு 3,00,000 கி.மீ)இருக்கும்.
அதே சமயம்,நவம்பர் 2011 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சனிபகவான் துலாம் ராசியினை கடக்கிறார்.சனியைப் பொறுத்தவரையிலும், சனியின் பார்வைகள் கொடூரமானது. சனி தான் இருக்குமிடத்திலிருந்து 3,7,10 ஆம் இடங்களை(ராசிகளை) பார்க்கிறார்.இதில் 10 ஆம் பார்வை முழுப்பார்வையாகும்.

நவம்பர் 2011 முதல் துலாம் ராசிக்கு சனிப் பெயர்ச்சியானதிலிருந்து, சனி தனது 10 ஆம் பார்வையாக முழுப் பார்வையாக கடகராசியைப் பார்க்கிறார்.இந்தப் பார்வையால் கடகராசிக்காரர்கள் ஏதாவது சிக்கலில் மாட்டி,நிம்மதியின்றி தவித்தாக வேண்டும்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அப்போது போர் நடப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
ஆக, அப்படி நடப்பதற்கான அறிகுறியாகத் தான் சீனா முத்துமாலைத் திட்டம் என்ற பெயரில் இந்தியாவைச் சுற்றிலும் இருக்கும் நாடுகளை தனது அரசியல் நோக்கத்திற்கு வளைத்துவருகிறது.

முதலாவதாக,அந்தமான் தீவுகளுக்கும் மியான்மர்(பர்மாவுக்கும்) இடையில் பர்மாவுக்குச் சொந்தமான ஒரு தீவை சீனா 99 வருடக் குத்தகைக்கு எடுத்து,அதை ராணுவத் தளமாக மாற்றியுள்ளது.
அடுத்ததாக இந்தியா மீது மதத்தின் பெயரால் நிழல் யுத்தம் நடத்தும் நம்ம குட்டி பங்காளி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தனது சொந்த துறைமுகமாகவே மாற்றிவிட்டது சீனா.
இந்து மகா சமுத்திரத்தின் கண்ணீர்த்துளியான இலங்கையில் சீனாவின் ஆதரவு அரசாங்கத்தால், திருகோணமலையையும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் கச்சத்தீவையும் சீனா தன்வசப்படுத்திவிட்டது.
இலங்கை தனது நாட்டின் சீரமைப்பிற்காக உலக நாடுகளிடம் வாங்கியுள்ள மொத்தக் கடன் 3,00,000 கோடி ரூபாய்கள் ஆகும்.அதே அளவுத் தொகையை சீனா மட்டும் இலங்கை அரசுக்குக் கொடுத்து,கச்சத்தீவை தனதாக்கிக் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவில் இருக்கும் அமைதி தேசமான திபத்,இந்தியாவை தனது குருவாகவும்,நட்பு நாடாகவும் நம்பியிருக்கிறது. புத்தமதத்தை தனது தேசியமாக வைத்திருக்கும் திபத்தை 1950களிலேயே சீனா ஆக்கிரமித்துவிட்டது.இந்தியாவாகிய நாம் இதை ஒரு மரியாதைக்குக் கூட கண்டிக்கவில்லை;இன்று, திபத்தை தனது மாநிலங்களில் ஒன்றாகவே சீனா மாற்றிவிட்டது.திபத்தில் சீனர்களின் குடியிருப்பை பரவலாக்கிக் கொண்டே போவதுடன், 22 விமான தளங்களை அமைத்திருக்கிறது.
சுறுசுறுப்புடன் உலகின் ஒரே இந்துதேசமான நேபாளத்தில் அரசியல் சாதுரியத்துடன் தனது மார்க்ஸிஸ்ட் அரசாங்கமாக மாற்றியதுடன்,இந்துதேசம் என்ற அடையாளத்தையும் அழித்துவிட்டது.
அடுத்த கட்டமாக, இந்தியாவில் நக்சலைட்டுகள் பல மடங்கு பலம் பெற்று, இந்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

வழக்கம் போல்,இந்தியாவின் மத்திய அரசு இதுபற்றி என்ன எதிர் நடவடிக்கை எடுத்திருக்கின்றது? என்பதைப் பற்றி தகவல் வெளியிடுவதில்லை.
சீனாவானது அருணாச்சலப்பிரதேசம்,நாகலாந்து பகுதிகளைக் கைப்பற்றும் எண்ணத்திலிருக்கிறது.

சீனாவின் ராணுவ ஆலோசகர்கள்,இந்தியாவை 37 துண்டுகளாக்கி,37 சிறு நாடுகளாக்கினால்,சீனாவின் உலக வல்லரசாகும் எண்ணத்தினை நிஜமாக்கிவிடலாம் என்றே கணக்குப் போடுகிறது.

எம்.எல்.எம்., என்ற போர்வையில் சீன நிறுவனங்கள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காலூன்றி இந்தியா முழுக்க தனது உளவாளிகளை நடமாட வைத்திருக்கிறது.
சீன எம்.எல்.எம்.நிறுவனங்கள், தனது வர்த்தகக் கூட்டாளிகளை(டிஸ்டிரிபியூட்டர்கள்) சீனாதான் சிறந்த நாடு என்று மூளைச்சலவை செய்து வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்துகொண்டே இருப்பதால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போரைத் தூண்டிவிட, நயவஞ்சகமான அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.இருநாடுகளும் சண்டையிட்டால், தனது ஆயுத வர்த்தகம் பல மடங்கு பெருகி, தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்ளத்துடிக்கிறது.
சீனாவோ, திட்டமிட்டு செயல்பட்டு, அமெரிக்காவையை தனது நோக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத அளவுக்கு வளைத்துவருகிறது.அமெரிக்காவில் அதிகமான முதலீடு செய்துள்ள முதல் நாடு சீனா.

ஆசியாவின் தலைமைக்கு ஆசைப்பட்ட சீனா, ரஷ்யாவின் பிரம்மாண்டத்தின் முன்னால் அமைதிகாத்தது 1990கள் வரையிலும்!
ரஷ்யா துண்டு துண்டாக உடைந்ததும், இந்தியாவை எப்படி நசுக்குவது என்பதை தனது லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது.
இது பற்றி இந்தியாவின் பத்திரிகைகளில் எழுதமுடியாத அளவுக்கு மறைமுக நெருக்கடிகள் இருக்கின்றன.பெரும்பாலான பத்திரிகையாளர்கள் கம்யூனிஸ்டுகள்.
அதையும் மீறி இந்திய எல்லையில் சீனாவின் வாலாட்டம்,ஊடுருவல், சில்மிஷங்கள் ஏதாவது பத்திரிகையில் வந்தால், அந்தப் பத்திரிகையின் மீது வழக்குத் தொடுப்பதில் இந்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது.(இது நமக்கு உலக அரங்கில் அவமானத்தைத் தராதா?)

இந்தியாவை பிரபஞ்சத்தைப் படைத்த சக்தி கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது;(இது வெறும் நம்பிக்கையில்லை; நிஜம்)அந்த சக்தி தனது பிரதிநிதியை பூமிக்கு அனுப்பிவிட்டது.அந்தப் பிரதிநிதி இந்தியாவின் அதிகாரபீடத்தினை நெருங்கிவிட்டது.விரைவில், இந்தியாவின் தலைமை பீடத்தை அடையும்.அந்த சக்திக்கு ஆதரவாக சித்தர்கள் இருப்பார்கள்.உலக வரலாற்றில் தெய்வீக சக்தியுடன் கூடிய ஒரு மாபெரும் தலைவன், தலைமையில் இந்தியா தனது உள்ளுணர்வுடன்,உள்ளூக்கத்துடன் விழித்தெழப்போகிறது.
நீதி, நேர்மை,அகிம்சை,பிறருக்கும் உதவும் மனப்பான்மை போன்ற மனித நேயசக்திகள் இந்தியாவின் அரசு இயந்திரமாக மாறும்,இந்து தர்மம் உலகம் முழுக்கப்பரவத்துவங்கும்.

(தகவல் ஆதாரங்கள்: உலக வரலாறு, இந்தியா டுடேக்கள் 2008,2009,2010, அரசியல் இணைய தளங்கள்,ஜோதிட இதழ்கள்,ஜோதிட ஆராய்ச்சிக்கட்டுரைகள்,எனது குருநாதரின் போதனகள்,சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள்)

திறமையான ஜோதிடரால் என்னவெல்லாம் செய்ய முடியும்?

திறமையான ஜோதிடரால் என்னவெல்லாம் செய்ய முடியும்?

ஒரு திறமையான ஜோதிடர்,அசைவம் ஒரு போதும் சாப்பிடமாட்டார்.ஏதாவது ஒரு இஷ்டதெய்வத்தை வழிபட்டுக்கொண்டே இருப்பார்.அந்த தெய்வத்தால்,அவரது வாக்குப் பலிதமாகும்.
ஒரு தம்பதியர் தமது ஜாதகத்தைக் கொடுத்தால்,அந்த தம்பதியரை எக்காரணம் கொண்டும் பிரிக்க மாட்டார்.அந்த தம்பதியரின் அனைத்து வாழ்க்கை ரகசியங்களையும் தெரிந்தவராக இருந்தாலும்,அதை ஒருபோதும் எவரிடமும் எப்போதும் சொல்லமாட்டார்.

ஒரு அரசாங்கத்தின் உளவுத்துறைத் தலைவர் எப்படி அந்த அரசாங்கத்தை பாதுகாக்கிறாரோ,அதேபோல்,ஒரு ஜோதிடர் தனது வாடிக்கையாளர் அனைவரையும் பாதுகாத்து,நல்வழிப்படுத்தி,முன்னேறவைக்கிறார்.

நீங்கள் உங்கள் ஜாதகத்தை ஒரு அனுபவமிக்க ஜோதிடரிடம் தந்தாலே ,அவர் முன்னால் நீங்கள் நிர்வாணமாக நிற்பதற்குச் சமம்.ஆம்!

உங்களது அபிலாஷைகள்,ஆசைகள்,நோக்கங்கள் என்ன?
உங்களது கடந்த காலத்தோல்விகள் என்ன? ஏன் தோற்றீர்கள்?

எதற்காக வந்திருக்கிறீர்கள்?அதை செயல்படுத்திட நீங்கள் எப்படிச் செயல்பட வேண்டும்? என்பதை துல்லியமாக வழிகாட்டுபவரே திறமையான ஜோதிடர்!
(உங்களது அந்தரங்க வாழ்க்கையில் நீங்கள் எப்படி நடந்துகொள்ளுவீர்கள்? என்பதைக்கூட ஒரு திறமையான ஜோதிடரால் சொல்லிவிடமுடியும்)

திறமையான ஜோதிடர் இன்று மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு குடுக்கறதைக்குடுங்க எனக் கெஞ்சுவார்.அல்லது அவர் கேட்கும் தட்சிணையை உங்களால் தர முடியாது.அல்லது அவர் இந்தியாவை விட்டு உலகம் முழுவதும் உலா வந்துகொண்டே இருப்பார்.
ஒரு உதவியைக் கேட்டு உங்கள் ஆஸ்தான ஜோதிடர் உங்களிடம் வந்தால்,நீங்கள் மறுக்காமல் அவருக்கு உடனே உதவி செய்யவேண்டும்.அது, நீங்கள் உங்களது குருவுக்குச் செய்யும் மாபெரும் உதவியாகும்.

சதுரகிரியில் இருக்கும் அபூர்வ மூலிகைகள்

சதுரகிரியில் இருக்கும் சில அபூர்வ மூலிகைகள்

கல்தாமரை என்ற மூலிகைச் செடியினம் சதுரகிரியில் இருக்கின்றது.இதன் வேர் தரைக்குக் கீழே சுமார் 4 அடிவரை போகும்.அதன்பிறகே பக்கவாட்டுக்கு பரவும்.அப்படி பக்கவாட்டில் பரவுமிடத்தில் ஒரு பூசணிக்காயளவுக்கு ஒரு கிழங்கு இருக்கும்.

அந்தக்கிழங்கை ஒரு நல்ல திதியன்று அறுத்துஎடுத்து,தண்ணீரில் கழுவி,வெட்டவெளியில் மதிய நேரத்தில் அதன்மீது நின்றால்,வானில் நட்சத்திரங்களைக் காணமுடியும்.சித்தர்கள் இப்படி கண்டே ஜோதிட நூல்களை எழுதினர்.
கி.பி.2101 ஜீன் 1 ஆம் தேதி மதியம் 1.30க்கு என்ன நடக்கும்? என்பதைக்கூட தெளிவாகவும்,துல்லியமாகவும் பாடல்களாக எழுதியுள்ளனர்.
சஞ்ஜீவ காரணி என்ற மூலிகையானது வெட்டுப்பட்ட மனித உறுப்பினை ஒட்ட வைத்துக் குணப்படுத்தும் சக்திவாய்ந்தது.
மதி மயக்கி என்ற மூலிகையை நாம் நுகர்ந்தாலே,நமது அனைத்துக் கடந்தகாலமும் நமக்கு மறந்துவிடும்.அப்படியே சதுரகிரி மலைக்காடுகளில் சுற்றிவிட வேண்டியதுதான்.

தமிழ்க்குடும்பங்களைச் சிதைக்கும் நாத்திகம்

தமிழ்நாட்டின் குடும்பங்களைச் சிதைக்கும் நாத்திகம்

அரசியலில் நாத்திகம் பேசுவது மிகவும் மரியாதைக்குரியதாக தமிழ்நாட்டில் கருதப்படுகிறது.வெளியே,மேடையிலும் அரசியல் அரங்கிலும் நாத்திகத்தின் நேரடி வாரிசாக செயல்படும் அரசியல்வாதிகள் இந்த நிஜசம்பவத்தால் வறுமையில் வீழ்ந்த நாத்திகவாதிக்குப் பதில் சொல்லட்டும்:

ராஜபாளையம் நகரில் ஒரு பர்லாங்கு தூரமுள்ள ஒரு பெரிய தெருவில்,ஒருவர் டீக்கடை துவங்கினார்.15 ஆண்டுகளில் டீக்கடை நடத்தியே ஒரு மாடிவீடு கட்டினார்.அதே தெருவில்தான்!
அந்தத் தெருவில் இவ்வ்வளவு பெரிய்யமாளிகையை யாருமே கட்டியதில்லை.
தனது வீட்டின் திறப்புவிழாவுக்கு நாத்திகம் பேசும் தலைவர்களை தலைமை தாங்க வைத்தார்.அதுவும் அஷ்டமியன்று!
அடுத்த சில மாதங்களிலேயே அந்த டீக்கடைக்காரர் அந்த வீட்டையே விற்குமளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தார்.தனது மகள்களுக்கு திருமணம் செய்விக்க கடன் கேட்காத ஆளே இல்லை.இன்று,கோவில் பிரசாதத்தால் உயிர்வாழ்ந்துவருகிறார்.

நாத்திகம் பேசும் நமது தமிழறிஞர்கள்,புரட்சிகள் நிஜவாழ்க்கையில் ஆத்திகத்தை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்துவருகின்றனர்.
திருக்குவளைக்குச் செல்லும்போதெல்லாம் தனது குலதெய்வத்தின் கோவிலுக்குச் செல்லும் கறுப்புக்கண்ணாடித் தாத்தா,கோவிலின் பிரதான வாசலைப் பூட்டிவிட்டு மனதார வேண்டுவது அவரது வழக்கம்.
தனது ஆயுளை நீடிப்பதற்காக மஞ்சள்துண்டை ஜோதிட ஆலோசனைப்படி அணிவது இன்றுவரை தொடர்கிறது.
புரட்சியை தனது அடைமொழியாக வைத்துக்கொண்டு தனிக்கட்சி நடத்தும் தலைவர், ராகு காலத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்வார்.நமது அடிமுட்டாள் தொண்டர்கள் தனது தலைவனின் நாத்திகக் கொள்ளையைக் கண்டு புளங்காகிதமடைவார்.ஆனால்,அது புரட்சியை அடைமொழியாகக் கொண்டவரின் பிறந்த நட்சத்திரம் வலிமையாக இருக்கும் அரசபட்சிநேரம் என்பது அடிமுட்டாள் தொண்டர்களுக்குத் தெரியாது.
சரி போய்த்தொலையட்டும்.அஷ்டமியில் வீட்டில் குடியேறிய அந்த அப்பாவி நாத்திகரை எந்த நாத்திகத்தலைவனாவது அதன் பிறகு வந்து பார்த்தானா? இல்லவே இல்லை.உதவி செய்யவே இல்லை.
நாத்திகம் என்பது முழுமைபெறாத முட்டாள்தத்துவம்.