RightClick

திருக்காளஹஸ்தி கோபுரம் இடிந்துவிழுந்ததன் மொத்த ஆன்மீகப்பின்னணி என்ன?

திருக்காளஹஸ்தி கோவில்கோபுரம்:முழு விளக்கம்

கிருஷ்ணதேவராயர் அவர்களின் பல போர்களின் வெற்றிக்குக் காரணம் திருக்காளஹஸ்தி சிவபெருமானே காரணம் என நம்பினார்.அதன் விளைவாக கி.பி.1510 ஆம் ஆண்டில் இந்த கோபுரத்தைக் கட்டினார்.இந்த கோபுரத்தில் கி.பி.1960 ஆம் ஆண்டில் ஒரு சிறுவிரிசல் ஏற்பட்டது.அதை அப்போதே சரி செய்தனர்.அதன்பிறகு சிறுசிறுவிரிசல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தாலும்.,அதை சரிசெய்துகொண்டே இருந்தாலும்,தற்போது இரண்டாகப்பிளந்து இடிந்துவிழுந்துவிட்டது.

வேதசாஸ்திரங்களில் கைதேர்ந்தவரான சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் கோபுரம் இடிந்துவிழுந்தது பற்றி கேட்டபோது அவர் விளக்கமளித்தார்:
மக்களை ஆள்வோர் தவறான வழியை மேற்கொண்டால் உற்பாதம் நிகழும் என வேதநூல்கள் கூறுகின்றன.

காரணம் இல்லாமல் திடீர் திடீரென நிகழும் பேரழிவுகள் மற்றும் வினோதமான சம்பவங்களைத்தான் உற்பாதம் என்பார்கள்.

கோவில்களில் உள்ள சிலைகளில் வியர்வை வழிவது, கோபுரங்களில் விரிசல் கண்டு உடைவது,சிலைகள் அசைவது ஆகிய விஷயங்களின் மூலம் “நாட்டில் ஆள்வோருக்கும் மக்களுக்கும் கெட்ட விஷயங்கள் நடக்க இருக்கின்றன.பெரிய அளவில் பேரழிவுகள் நடக்க இருக்கின்றன.” என்பதை முன்கூட்டியே தெய்வீக சக்தி குறிப்பால் உணர்த்துவதாக அர்த்தம்.

தவறு செய்வது மன்னனாக இருந்தாலும்,மக்களாக இருந்தாலும் தன்னை உடனே திருத்திக்கொள்ள வேண்டும்.

தனிமனித ஒழுக்கம் முக்கியமானது.தனி மனித ஒழுக்கம் இல்லாமல் போனால் சமுதாயமே சீர்கெட்டுவிடும்.
அப்படி சீர்கெட்ட சமுதாயத்திலிருந்துதான் நம்மை ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கிறோம்.ஆள்பவர்கள் ஒழுக்கக்கேடாக இருந்தால் நிச்சயம் உற்பாதம் நிகழும்.

கோவில் கோபுரமே இடிந்துவிழுந்ததாக இதுவரை சரித்திரம் கிடையாது.ஏனெனில்,கோபுரங்களின் கட்டிட சாஸ்திர அமைப்பு(சில்ப சாஸ்திரத்தின் ஒரு பகுதி) அத்தனை பாதுகாப்பானது.மொத்த எடையும் அடிப்பாகம் தாங்கும் வகையில் அமைக்கப்படும்.காளஹஸ்தி கோபுரம் மேலிருந்து கீழ்வரை ஒட்டுமொத்தமாகச் சிதைந்துவிழுந்ததால்,அந்தளவுக்கு அதர்மம் நடந்திருக்கிறதோ? என்றுதான் அர்த்தம்.
நன்றி: ஜீனியர் விகடன்,2.6.2010,பக்கம் 6,7.

வலிமையடைந்துவிட்ட செவ்வாய்பகவான்


மேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

7.10.2009 முதல் 27.5.2010 வரை மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களின் ராசி நாதன் செவ்வாய் நீசமாகியும் ,வக்கிரமாகியும் இருந்தார்.இந்த காலகட்டத்தில் பலவிதமான அவமானங்கள்,கவனக்குறைவுகளை சந்தித்து நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? என்ற அளவுக்கு மேஷம் விருச்சிகம் ராசிக்காரர்கள் மனம் வெதும்பியிருந்திருப்பர்.நமது ஆன்மீகக்கடலில் கூட அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்களை வெளியிட்டிருந்தோம்.
சுமார் 60 ஆண்டுக்குப்பிறகு இப்படிப்பட்ட 8 மாத செவ்வாய் நீசம் உண்டானது.இதனால்,உலகம் எங்கும் ராணுவம்,காவல்துறையினர் ஆளும் வர்க்கத்துக்கு எதிராகவே போராடும் நிலைவந்திருந்தது.
இலங்கையின் பிறந்த?(சுதந்திர!) ராசி விருச்சிகம்;

கடகராசியில் நீசமாகவும்,வக்கிரமாகவும் இருந்த செவ்வாய் 27.5.2010 அன்று இரவு மணி 9.49க்கு சிம்மராசிக்குப் பெயர்ச்சியாகிவிட்டார்.சிம்மராசி சூரியனின் ராசி;இதுஒரு நெருப்பு ராசியாகும்;நெருப்புராசியில் நெருப்புக்கோளான செவ்வாய் வரும்போது உச்சத்துக்குரியபலனைத் தருவார் என்பது ஜோதிட விதி;அனுபவப்பாடமும் கூட!
சிம்மராசியில் செவ்வாய் இருக்க ஒரு ஜாதகர் பிறந்தால்,அவருக்கு செவ்வாய் தோஷம் கிடையாது.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 2,4,7,8,12 ஆம் இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் என ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது.
ஆனால்,இதில் சுமார் 45 விதிவிலக்குகள் இருக்கின்றன.அதில் முதன்மையாக இருப்பது சிம்மச் செவ்வாய் தோஷம் தராது.

ஆக, 27.5.2010 இரவு மணி 10 முதல் மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்கள் இதுவரை இழந்த அனைத்தையும் பெறுவார்கள். இதுவரை பட்ட கஷ்டங்கள் தீரும்;அவமானப்படுத்தியவர்களாலேயே புகழ் வந்துசேரும்;எல்லா விஷயங்களிலும் சர்வ நிதானம் வந்து சேரும்.எதிரிகளை துவம்சம் செய்யத்துவங்கலாம்.

உங்கள் குழந்தையிடம் வாரம் ஒரு முறை மனம்திறந்து பேசுங்கள்


மனநலத்தை அலட்சியம் செய்யும் பாரதநாடு

கி.பி.2015 ஆம் ஆண்டில் மன அழுத்தத்தால் உருவாகும் நோயாளிகளில் முதலிடம் நமது இந்தியாவுக்குத்தான் கிடைக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.ஆதாரம் ஜீனியர் விகடன் 2008.

ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள்.இந்த மூன்று சகோதரர்களுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றன.மொத்தம் ஆறு குழந்தைகள்.
மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீதம்,இந்த மூன்று குடும்பத்தின் அத்தனை பேரும் திரைப்படம் ஒன்றுக்குச் செல்லுகின்றனர்.படம் பார்த்துமுடிந்ததும்,அருகில் இருக்கும் பூங்காவுக்குச் சென்று இரவு 7 மணிவரை அரட்டை,பரஸ்பரம் மகிழ்ச்சி,சாதனை,குடும்பப்பிரச்னை மற்றும் அலுவலகப்பிரச்னையை இந்த ஒரு மாதத்தில் சமாளித்த விதம் இவற்றை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளுகின்றனர்.
இந்த பொழுதுபோக்கினை அவர்கள் குடும்ப செயற்குழுக்கூட்டம் என்றே அழைக்கின்றனர்.இதை கடந்த 9 வருடங்களாக தொடர்ந்துநடத்துகின்றனர்.
இந்த ‘குடும்ப செயற்குழு’ கூட்டத்தை தனது குழந்தைகளும் பெரியவர்களானபின்னரும் செய்யுமளவுக்கு உணர வைத்துள்ளனர்.
கி.பி.1960களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி,15 நாட்களுக்கு ஒருமுறை வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது மகன்களுடன் செலவிடுவதை ஒரு ‘கடமை’யாகவே வைத்திருந்தார்.(நன்றி:திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறு)அன்று முழுவதும் அவர் தனது மகன்களுடன் விளையாடுவார்.(தனது எதிர்கால வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகிக்க இரண்டு நிர்வாக சாணக்கியர்களை உருவாக்கினார்)
அவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்ததும் சிற்சில மனோதத்துவ பரிட்சைகள் வைப்பார்;பணத்தின் மதிப்பு,அதை எப்படியெல்லாம் பயன்படுத்தவேண்டும்;அதை தவறாகப்பயன்படுத்தினால் அதன் முடிவு என்னாகும்? மனித உறவு என்றால் என்ன? என பலவிதங்களில் தனது வாரிசுகளை உருவாக்கினார்.
இன்று ரிலையன்ஸ் குழுமங்கள் இரண்டு மாபெரும் வியாபார சாம்ராஜ்ஜியமானாலும்,இந்திய அரசின் அமைச்சரவையை தனது இஷ்டத்திற்கு வளைக்குமளவுக்கு வளர்ந்துவிட்டனர்.
நாம் நமது குழந்தைகளுக்காகத்தான் வேலைக்குப்போகிறோம்; அல்லது அரசு வேலை பார்க்கிறோம்;அல்லது தொழில் செய்கிறோம்;

எத்தனை முறை ஒரு நாளுக்கு நாம் நம்முடைய மகன் அல்லது மகளிடம் மனம் விட்டுப்பேசுகிறோம்?
ஆனால்,அவர்களுக்காகத்தான் பள்ளி/கல்லூரி கட்டணம் கட்டுகிறோம்?
பிஸி, பிஸி,பிஸி . . . எப்போதும் பிஸி, எப்போதும் பணத்தின் பின்னாலேயே ஒடுகிறோம்; ஓடுகிறோம்; நமது பரம்பரையை பண்புள்ளவர்களாக மாற்றிட,நமது மகன்/மகளின் மனநிலை,சுபாவம்,நடத்தை,பழகும் நட்புவட்டம் பற்றி எதுவும் நாம் அறிவதில்லை;

மனம் விட்டுப்பேச ஒரு குடும்ப உறவு இல்லாததால்தான்,நமது மகள்கள் பருவமடைந்ததும் தனது காமத்துணையுடன் ஓடிப்போகிறது.
தனது கஷ்டங்களை கொட்டிட ,தலையை கோதிவிட ஒரு ஆத்மார்த்தமான உறவு நமக்கே இல்லையே? நாமாவது இன்று முதல் நமது குழந்தைகள்/சகோதரர்கள்/சகோதரிகளுக்காக ஆத்மார்த்தமான உறவாக இருக்கலாமே!!!

திருக்காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்துவிழுந்தது:


சென்னை: பிரசித்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில். திருப்பதிக்கு அருகில் உள்ள இக்கோவிலில் ராகு, கேது தோஷத்திற்கு பரிகார பூஜைகள் நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். காளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரம் 140 அடி உயரம் கொண்டது. இதன் இடப்புறத்தில் முதல் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரை, திடீரென பெரிய விரிசல் ஏற்பட்டது., கோபுரம் பிளவுபட்டது போல் காணப்பட்டது. மின்னல் வெட்டியது போல காணப்படும் இந்த பகுதியிலிருந்து சுண்ணாம்பு துகள்கள் விழுந்தன.
சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, இக்கோபுரத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தது. கோவில் ராஜகோபுரத்திலிருந்து 200 அடி வரை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை உடனே காலி செய்யும்படியும் இக்குழு ஆலோசனை வழங்கியது. இந்நிகழ்வு, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலை ஏழு மணி அளவில் இந்த கோபுரம் இடிந்து விழுந்தது. கோபுரத்தின் அருகில் யாரும் செல்ல முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. பயங்கர சப்தத்துடன் கோபுரம் இடிந்து விழுந்தது. காளஹஸ்தி முழுவதும் அந்த சப்தம் எதிரொலித்தது. கோயிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காளஹஸ்தியை சேர்ந்த பொதுமக்கள் உடனே கூட்டம், கூட்டமாக அங்கு விரைந்தனர்.
தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி கூறியதாவது: காளஹஸ்தி ராஜகோபுரத்தை கி.பி.1510ம் ஆண்டு, கிருஷ்ண தேவராயர் கட்டினார். கோபுரத்தின் மூலப்பொருளான சுண்ணாம்பில் ஏற்படும் ஒட்டும் தன்மை குறைவு, இடி தாக்குதல், கோபுரத்தின் அடித்தளத்தில் நிகழும் மண் அரிப்பு போன்ற காரணங்களால் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு நாகசாமி கூறினார்.
ரோசய்யா அவசர ஆலோசனை: காளஹஸ்தி கோவிலின் தெற்கு ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா, அறநிலையத் துறை அமைச்சர் வெங்கடரெட்டி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் நேற்று இரவு ஐதராபாத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். "ராஜகோபுரம் இடிந்து விழுந்ததில், அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியம் ஏதும் இல்லை' என, அமைச்சர் வெங்கட ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார். காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்தவுடன் சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி, அங்கு சென்று இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்பார்வையிட்டார். போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு மீட்பு நடவடிக்கை மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோபுரத்தின் இடிபாடுகளில் எவரும் சிக்கிக் கொண்டதாக இதுவரை தெரியவில்லை என, கலெக்டர் தெரிவித்தார். காளஹஸ்தி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இடிந்து விழுந்த ராஜகோபுரத்தை பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.


மரக்கன்று நடுவது எப்படி? நமது பூமியைக் காப்போம்


மரக்கன்று நடுவது எப்படி?

அடிக்கிற வெயிலைப் பார்த்தால்,ஐ.நா.சபை., மத்திய அரசு,மாநில அரசுகள்,அரசியல் கட்சிகள் பூமி நலனுடன் எந்த ஒரு உருப்படியான சுற்றுச்சூழல் காரியத்தையும் செய்யாது;/செய்ய முடியாது என தெள்ளத் தெளிவாக தெரிகிறது.ஆகவே,நாம் ஒவ்வொருவரும் எப்படி மரக் கன்று நடுவது என்பதை இங்கு பார்ப்போம்:

சாலையோரம்,தெருவின் ஓரங்கள்,நமது வீட்டின் ஓரங்கள்,புழைக்கடை என நாம் விரும்பும் எந்த இடத்திலும் மரக்கன்று நடலாம்.
மரக்கன்றை நடுவதற்குரிய இடத்தை நாம் தேர்ந்தெடுத்தப்பிறகு,அங்கு 1 முதல் 3 அடி வரை குழி தோண்ட வேண்டும்.
தோண்டி உடனே மரக்கன்றை நட்டால், அந்த மரக்கன்று பட்டுப்போய்விடும்.ஏன்?
ஏன் எனில், நாம் குழி தோண்டியதும், பக்கவாட்டுமண்ணிலிருந்து வெப்பம் வெளியேறத்துவங்கும்.எனவே, குழி தோண்டி 24 மணிநேரம் கழித்து, நாம் மரக்கன்றைக் கொண்டுவந்து இணுக்கு வெளியே தெரியுமளவுக்கு மரக்கன்றை மண்ணைப்போட்டு மூட வேண்டும்.மூடிய பிறகு,மரக்கன்றை ஒட்டி தண்ணீர் ஊற்றாமல்,ஒரு சதுர அடி தள்ளி தண்ணீரை ஊற்ற வேண்டும்.இரண்டாம் நாளிலிருந்து 20 நாள் வரையிலும் மரக்கன்றினை ஒட்டியே தண்ணீர் ஊற்றலாம்.
நமது பிறந்த நட்சத்திரப்படி உரிய மரக்கன்றை வாங்கி ஊன்றலாம்; அரசு,வேம்பு,ஆல்,மஞ்சணத்தி போன்ற உபயோகமான மரக்கன்றை நடலாம்.

மரக்கன்றை நடுவதில் 10 வருட அனுபவமுள்ள எனது நண்பர் சொன்னது.
நாம் மரக்கன்றுகளை நடுவோம்;நமது மகன்,மகள்,பேரன்,பேத்தியின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும்,நமது நாட்டின் இயற்கைவளம் பெருகுவதற்கும்.

மரக்கன்றை நடுவதற்கும்,நடுவதற்கான குழி தோண்டுவதற்கும் ஏற்ற நேரம் காலை 6 மணி முதல் 8 மணிக்குள்;மற்றும்/அல்லது மாலை 5 மணி முதல் இருட்டுவதற்குள்.

7,00,000 மரக்கன்றுகளை நடுவதை தனது லட்சியமாகக் கொண்டுள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனம்(ஸ்ரீவில்லிபுத்தூர்,மதுரை,சென்னை) இந்த நேரத்தில் பாராட்டுவதற்குரியது.

உலகமயமாக்கலால் சிதையும் இந்தியசிறுவர் பருவம்

உலக மயமாக்கலால் சிதையும் சிறுவர் பருவம்

இன்று(24.5.2010 திங்கள்) தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பில் 8 ஆம் பக்கத்தில் தடம் மாறும் இளம் ரத்தம் என்ற தலைப்பில் ஒரு முழுப்பக்கக் கட்டுரையை ச.சுப்ரமணியம் மற்றும் ச.இரகுநாதன் எழுதியுள்ளனர்.அதிலிருந்து சில பகுதிகளும்,நமது ஆன்மீகக்கடலின் சிந்தனையும்:
சில வருடங்களுக்கு முன்பு,சீட்டாட்டத்தில் தோற்ற சிறுமியை உடைகளை கழற்றச்சொல்லி சக சிறுவர்கள் கட்டாயப்படுத்தினர்.அவமானத்தால் துடித்த சிறுமி முடிவில் தூக்கில் தொங்கினாள்.
தற்கொலைக்குத் தூண்டியதாக சட்டம் அந்த சிறுவர்களை கைதுசெய்தது.இவர்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்களே.இன்னொரு கொடூர நிஜம் என்னவெனில், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வு அறிக்கையின்படி, இளம் குற்றவாளிகள் அதிகரிக்க,இல்லாமை எனும் வறுமை முக்கிய பங்கு வகிக்கிறது.அன்றாடத்தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத குடும்பங்களில் பிள்ளைகளைக் கவனிக்கவும்,மனம் விட்டுப்பேசவும் கூட நேரமில்லாத பெற்றோர்கள் எப்படியாவது மூன்றுவேளை சாப்பிட்டால் போதும் என்ற நிலையால் அவர்களை தம் குழந்தைகளின் நிலையைக் கண்டும் காணாமல் இருக்க வைத்துவிடுகிறது.

2008 ஆம் ஆண்டு பதிவுகளின்படி 62.2% வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்.ஆண்டுவருமானம் ரூ.25,000/-க்குக் கீழ் இருப்பவர்களே இளம் குற்றவாளிகளாக உருவாகின்றனர்.
ஆண்டுவருமானம் ரூ.25,000/- முதல் ரூ.2 லட்சம் இருக்கும் குடும்பங்களில் இளம் குற்றவாளிகள் 13.6% உருவாகியுள்ளனர்.
ஆண்டுவருமானம் ரூ.2,00,000/-க்கும் அதிகமாக இருப்பவர்களின் குடும்பங்களிலிருந்து இளம் குற்றவாளிகள் 24.2% உருவாகின்றனர்.
இந்த இளம் குற்றவாளிகளில் பெரும்பாலானவர்கள் தெருவில் வசிப்பவர்கள்.அதாவது பேருந்துநிலையம்,ரயில் நிலையத்தில் வாழ்ந்துவருபவர்கள்.
போலீஸார்களுக்கு “மாதக்கடைசிகேஸ்”ஆகி போலீஸ்காரர்கள் பதவி உயர்வுக்கு இந்த தெருவோரம் வசிப்பவர்களே ‘உதவி’செய்கின்றனர்.பிறகு,போலீஸ்துறையால் இவர்கள் பெரும் குற்றவாளிகளாக மாறுகின்றனர்.
காமம் ரீதியான குற்றங்கள் உருவாக கவர்ச்சிகாட்டும் ஸ்ரேயாக்கள்,சிம்ரன்கள்,அனுஷ்காக்கள்,அசின்கள்,மும்தாஜ்கள்,ஷகீலாக்கள் காரணமாகின்றனர்.நாமும் இதை கண்டும் காணாமலும் அனுமதிக்கின்றன.

அந்த சமூகப்பிரச்னையின் ஒரு சுருக்கம்.


இனி ஆன்மீகக்கடலான நமது சிந்தனை:
ஒரு பெட்டிக்கடை கிராமத்தில் உருவாக்கிட ரூ.50,000/-முதலீடும்,நகரத்தில் உருவாக்கிட ரூ.1,00,000/-முதலீடும்,மாநகரத்தில் உருவாக்கிட ரூ.5,00,000/-முதலீடும் தேவை.இப்படி துவங்கிடும் ஒருபெட்டிக்கடையானது 10 பேருக்கு நேரடியான வேலை வாய்ப்பை உருவாக்குகிறது.இந்த ஆய்வுமுடிவை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வெளியிட்டுள்ளது.

(சுதேசி விழிப்புணர்வு இயக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்தியாவின் தேசிய பொருளாதாரச் சுயச்சார்பை உருவாக்க உதவும் ஒரு பிரச்சார அமைப்பு)
ரூ.2 கோடி ரூபாயை மத்திய அரசு சர்வோதயா அமைப்புக்குத் தந்தால்,சர்வோதயா அமைப்பினால் 200 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கிடமுடியும். இதன்மூலம் 200 குடூம்பத்தை நிரந்தரமாக வறுமையிலிருந்து காப்பாற்ற முடியும்.
ஆனால்,நமது மத்திய அரசுகள் என்ன செய்கிறது தெரியுமா?
ஒரு வருடத்துக்கு 7,00,000 கோடி ரூபாய் அளவுக்கு உலகம் முழுவதும்(இந்தியாவைத் தவிர்த்து) வருமானம் பார்க்கும் வால்மார்ட் என்ற அமெரிக்க சில்லறை வர்த்தக பூதத்துக்கும்,அதுபோன்ற வர்த்தக பிசாசுகளுக்கும் இந்தியாவை விற்றுவிட்டது.
ஒரு சர்வேப்படி,ஒரு இந்தியன் தனது 60 வயது வாழ்நாளுக்குள் ஒரே ஒரு முறை ஒரு பொருளை (உதாரணம் ஹமாம் சோப் அல்லது பெப்சி அல்லது கேதான் பேன்) வாங்கினாலே அந்த பொருளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் விற்பனை பல மடங்கு உயர்ந்துவிடுமாம்.அவ்வளவு பெரிய்ய சந்தை நம்முடைய இந்திய சந்தை.நமது இந்தியச்சந்தையில் நுகர்வோர்கள் தான் ராஜா என எல்லா வணிகப்பத்திரிகைகளும் எழுதிக்குவிக்கின்றன.அது வடிகட்டினபொய்.மேல்நாட்டைச் சேர்ந்த (அமெரிக்கா,இங்கிலாந்து,ஜெர்மனி,சீனா,ஜப்பான்,பிரான்ஸ்)பன்னாட்டு நிறுவனங்கள்தான் ராஜா.
ஏனெனில்,ஒரு மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் விலை இந்தியாவில் ரூ6000/- அதே ஆபரேட்டிங் சிஸ்டத்தின் அமெரிக்கவிலை வெறும் ரூ.450/-மட்டுமே.(இந்தியாவின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 72 கோடி, அமெரிக்காவின் நுகர்வோர்கள் எண்ணிக்கை வெறும் 25 கோடி)

அதிகமான பயன்பாட்டாளர்கள் இருந்தால் விலையைக் குறைக்க வேண்டும்.ஆனால்,பேராசை அமெரிக்கா இந்தியாவில் மட்டுமே பகாசுரக்கொள்ளையடித்துக்கொண்டே இருக்கிறது.இந்த கொள்ளையைக் கண்டுகொள்ளாமலிருக்க மத்திய அரசின் அமைச்சர்கள்,பிரதமர்,துறைச் செயலாளர்கள் என அனைவருக்கும் அன்பளிப்புகளை வாரி வழங்கிக்கொண்டே இருக்கின்றனர்.


குளிர்பானச்சந்தையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால்,பெப்சியும் கோகோகோலாவும் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 1000 வட்டார குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருந்தன.இந்தியா முழுக்க சுமார் 1,00,000 வட்டார குளிர்பான நிறுவனங்கள் இருந்தன.இவைகளை பெப்சியும் கோலாவும் அழித்தன;அல்லது விலைக்கு வாங்கின.

ஒரு பெட்டிக்கடையே 10 பேருக்கு வேலைவாய்ப்பைத் தருகிறது என பார்த்தோம்.ஒரு குளிர்பான நிறுவனம் குறைந்தது 100 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பைத் தந்திருக்கும்.அப்படியானால் 1,00,000 x 100=1,00,00,000 (ஒரு கோடி) பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கும்.
4 பேர் கொண்டது ஒரு குடும்பம் எனக் கொண்டால், 4 கோடி குடும்பங்கள் குளிர்பான நிறுவனங்களை நம்பி வாழ்ந்திருக்கும்.இந்த சுயதொழில் மற்றும் சுதேசி(உள்நாட்டு) வாழ்வாதாரத்தை சிதைத்து, 4 கோடி இந்தியக்குடும்பங்களை ஓட்டாண்டியாக்கிவிட்டு,1,00,000 இந்திய சிறுதொழில் நிறுவனங்களை கொன்றுவிட்டு, பன்னாட்டு குளிர்பானங்கள் இன்று ஐஸ்வர்யாராய்,டெண்டுல்கர்,அசின்,த்ரிஷாக்களின் கவர்ச்சிவிளம்பரங்களால் பல மடங்கு லாபம் சம்பாதிக்கின்றன. நாமும் நமது நடிகை/நடிகர்களின் மூஞ்சிக்காக சிறிதும் சத்தில்லாத இனிப்பும்போதையும் நிறைந்த குளிர்பானங்களை குடித்து நம் உடலைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம்.
குளிர்பானத்தை மட்டும் எடுத்துக்கொண்டால்,இந்தியாவில் 4 கோடி குடும்பங்கள் வறுமைநிலைக்கு வந்துள்ளது எனில்,இந்தியாவின் ஆட்டோமொபைல்,விவசாயம்,கல்வி,ஏற்றுமதி,வணிகப்பயிர்,தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் அன்னிய ஆதிக்கத்தை மட்டும் வளரவைத்து எத்தனை கோடி இந்தியக்குடும்பங்கள் வறுமையின் எல்லையைத் தொட்டிருக்கும்?

ஏன் இந்தியாவின் அரசியல்வாதிகளின் மகன்கள்,மகள்கள் ஒருநாளுக்கு மட்டும் பட்டினி கிடந்திருப்பார்களா? நமது நாட்டின் பெருமைகள் தெரிந்திருக்குமா?

அரிசி,பலசரக்கு,காய்கறி,உயிர்காக்கும் மருந்துகள்,அத்யாவசியப்பொருட்கள் இவற்றின் விலைவாசி தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது;ஆனால்,தனிமனித சம்பளம் மட்டும் ஒரு ஆண்டுக்கு ஓரிரு முறை உயருகிறது.பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் குடும்பத்தலைவிகளின் புத்திசாலித்தனத்துக்கு வேட்டு வைக்கின்றனர் இந்தியாவின் மத்திய அரசுத்துறைகளின் கொள்ளை முடிவுகள் . . . ஓ ஸாரி கொள்கை முடிவுகள்.
இதன் விளைவாக,வேலைவாய்ப்பு சுருங்கி இந்தியாவின்/தமிழ்நாட்டின் குடும்பங்களில் விபச்சாரம் சகஜமாகிவிட்டது.விபச்சாரம் நவீனமாகி பணம் சம்பாதிப்பது ஒரு வெறிபிடித்த கொள்கையாகிவிட்டது.


எனக்குத் தெரிந்தவரையிலும்,
தமிழ்நாட்டில் பல குடும்பங்களில் தனது மகனையும்,மகளையும் ‘ நீ என்ன செய்வியோ தெரியாது; ஒரு நாளுக்கு குறைந்தது ரூ.100/- சம்பாதிச்சுட்டு வா.முடியலையா. . வீட்டுக்கே வராதே’ என தனது செல்வ மகன்/மகள்களை மிரட்டி வீட்டைவிட்டு வெளியேற்றும் பெற்றோர்களை நான் நேரில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
தான் வளர்த்த தனது மகள்களை பெற்ற தாயே விபச்சாரத்திற்கு அறிமுகப்படுத்துவதை நேரில் கண்டு நான் அந்த இளைஞர்கள்,இளம்பெண்களின் எதிர்கால நிலையை நினைத்து எனது தூங்காத இரவுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.


காரணம் கேட்டால்,என் புருஷன் குடிக்கிறான்.வேலைக்குப் போக மாட்டேங்குறான்.. என பல முறை இப்படிப்பட்ட வார்த்தைகளை நான் இன்று வரை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

இந்துக்களுக்கு திருவிதாங்கூர் மன்னரின் அழைப்பு:நன்றி தினமலர் 24.5.2010

இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் : திருவிதாங்கூர் மன்னர் விருப்பம்திருவனந்தபுரம் : "இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதுகுறித்து பேசினாலோ, படித்தாலோ, எழுதினாலோ போதாது. ஒற்றுமையுடன் செயலில் இறங்க வேண்டும்' என, திருவிதாங்கூர் ராஜவம்சத்தை சேர்ந்த, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கேட்டு கொண்டார். திருவனந்தபுரத்தில், முதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாட்டை உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா துவக்கி வைத்து பேசியதாவது:இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும். இந்துக்கள் ஐக்கியத்திற்கு படிப்பதால், எழுதுவதால், பேசுவதால் மட்டும் போதாது. ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.ஐந்து விரல்களும் இணைந்திருப்பதை போல், இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். குருதேவன், சட்டம்பி சுவாமி, வைகுந்தசுவாமி, அய்யங்காளி ஆகியோர் வலியுறுத்திய நெறிமுறைகளை, நாம் இன்னமும் பின்பற்றவில்லை.இதே நிலை நீடித்தால் கேரள மாநிலம் சிதறி விடும்.இவ்வாறு மன்னர் கூறினார்.

துவங்கிவிட்ட 2012 அழிவு:பாலஜோதிடம் வார இதழின் ஆதாரத்துடன்


பாலஜோதிடத்தில் வந்துள்ள கட்டுரைச்சுருக்கம்

விக்ருதி வருடம் பிறந்த 14.4.2010 முதல் 26.12.2012 வரையிலும் சனி,செவ்வாய்,புதன் மற்றும் குருவின் சஞ்சாரச்செயல்பாடுகளால் உலகின் பெரும்பகுதிகள் ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி,பூகம்பம்,கடல் மட்டம் உயருதல் போன்றவற்றால் அழியப்போகிறது.
இந்தியாவில் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள்,சென்னை,விசாகப்பட்டினம், இலங்கை,பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் இருக்கும் ஜப்பான்,இந்தோனோஷியா,அமெரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றன.
இந்த பேரழிவினால் சில நாடுகளின் பொருளாதாரம் அடியோடு நாசமாகும்.சில நாடுகள் உலக அரசியலில் இருந்து நிரந்தரமாக தனது பிடியை கைவிட்டுவிடும் எனஒரு ஜோதிடர் கணித்துள்ளார்.
இந்தக்கணிப்பு மே 2010 முதல்வாரத்தில் வெளிவந்த பாலஜோதிடத்தில் வெளிவந்துள்ளது.

அதிசார குருப்பெயர்ச்சி 2010

அதிசார குருப்பெயர்ச்சிப்பலன்கள் 2010

2.5.2010 ஞாயிறு மாலை சுமார் 4 மணியளவில் கும்பராசியில் இருந்த குருபகவான்,அதிவேகமாக(அதிசாரமாகி) மீனராசிக்கு பெயர்ச்சியாகிவிட்டார்.கார்த்திகை மாதம் அதாவது நவம்பர் 2010 இல் சில நாட்கள் மட்டும் மீண்டும் கும்பராசிக்கு வந்துவிட்டு,மீண்டும் மீனராசிக்குச் சென்றுவிடுகிறார் என பஞ்சாங்கம் தெரிவிக்கிறது.
இதனால்,ஓரளவு ஏழரைச்சனியில் தொல்லையிலிருந்து மீண்ட சிம்மராசிக்காரர்கள் மீண்டும் வேதனைநிறைந்த நாட்களில் வாழத்துவங்கியுள்ளனர்.
ஏழரைச்சனியில் ஜன்மச்சனியின் துன்பத்தைஅனுபவித்துவரும் கன்னிராசிக்காரர்களுக்கும்,அஷ்டமச்சனியை அனுபவித்துவரும் கும்பராசிக்காரர்களுக்கும் இந்த அதிசார குருப்பெயர்ச்சி ஆறுதலளிப்பதாக இருக்கும்.
மீனத்துக்கு வந்துள்ள குருபகவான், ஏழாம் ராசியான கன்னியையும்,கடகத்தையும்,விருச்சிகத்தையும் பார்வையிடுகிறார்.
இதனால்,கடந்த 9 மாதங்களாக படாதபாடு பட்டுவந்த கன்னிராசிக்காரர்களுக்கு டிசம்பர் 2011 வரை இருக்கும் ஜன்மச்சனியால் பெரும் தொல்லைகள் இராது.
ஏழரை முடிந்தும்கூட,ஒரு நல்ல வேலை அல்லது தொழில் அல்லது லைஃப் செட்டிலை எதிர்பார்த்துக்காத்திருக்கும் கடகராசிக்காரர்கள் இதுவரை பொறுமையிழந்து,எதிர்காலம் பற்றிய பயம் கலந்த ? யாக இருந்திருப்பார்கள்.அவர்களுக்குப் பொற்காலம் துவங்கிவிட்டது.இந்த வருடம் ஆவணி மாதத்திற்குள் பெரும்பாலான கடகராசிக்காரர்கள் நிரந்தரமான வேலை அல்லது தொழிலில் அமர்ந்துவிடுவார்கள்.பலருக்கு அரசாங்கவேலை கிடைக்கும்.தைரியமாக முயற்சி செய்யவும்.

விருச்சிகராசிக்காரர்களை 11 ஆம் இடத்து சனி நன்மையைத் தந்தாலும்,சனியில் 3 ஆம் பார்வையால் அடிக்கடி நிம்மதியிழந்துதவிப்பார்கள்.இந்த நிலையை இந்த அதிசாரகுருப்பெயர்ச்சி மாற்றிவிட்டது.ஆம்!
குருவின் 9 ஆம் பார்வையும்,சனியின் 3 ஆம் பார்வையும் சேர்ந்து விருச்சிகராசிக்காரர்களுக்கு இடம் மாற்றத்துடன் கூடிய நிம்மதியான ,நல்ல,வேலை அல்லது தொழிலை அமைத்துத்தரும்.

மிதுனராசிக்காரர்கள் குருவின் பார்வையிலிருந்து தப்புவதாலும்,சனியின் முழுப்பார்வையான 10 ஆம் பார்வையில் சிக்குவதால்,டிசம்பர் 2011 வரை தேவையில்லாத சிக்கல்கள் அல்லது பிரச்னைகளில் சிக்க வாய்ப்பிருக்கிறது.ஏதாவது ஒரு ரூபத்தில்,அவமானம் வரலாம்.
தனுசுராசிக்காரர்கள் இடமாற்றத்துடன்,பதவி உயர்வு கிடைக்கும்.தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும்.குறிப்பாக காதல்,கள்ளக்காதல்,பிறரது அந்தரங்கம் இவற்றில் தலையிடுவதைத் தவிர்ப்பது மிக அவசியம்.
கும்பம்,மேஷம்,கன்னி,கடகம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு திடீர் திருமணம் ஏற்படும்.அல்லது திடீரென சுபகாரியங்கள் நடைபெறும்.

வாழ்க வளமுடன்!