RightClick

சுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன். அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், "என்னப்பா விஷயம்..?'' என்று கேட்டார்.

"சுவாமி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன்-மனைவி இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்த வள் என்கிறார்கள், அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்?'' என்று கேட்டான் அந்த இளைஞன்.

இவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார். அவனும் அதை எடுத்து வந்தான். எப்படிம் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்த கல்.

"சுவாமி! இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், "அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்" என்றார்.

அந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பதுபோல் அந்த கல்லை கட்டிக்கொண்டான். சிறிதுநேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோபோல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் இருக்க முடியவில்லை.

2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தை பட்டதுபோல் இருந்தது. வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான்.

"சுவாமி! இதற்குமேல் என்னால் கல்லை கட்டிக்கொண்டு இருக்க முடியாது...'' என்று சொல்லி மேல் முச்சு கீழ் முச்சு வாங்கினான்.

அப்போது விவேகானந்தர் சொன்னார்...

"உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல்லை 4 மணி நேரம்கூட சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாளே... அதற்காக அவள் உன்னைபோல் அலுத்துக்கொள்ளவில்லையே... அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம்...'' என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.

ஆனாலும், நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் பெண்மைக்கு கொடுக்கபடும் முக்கியத் துவம் - அங்கீகாரம், நடைமுறை வாழ்க்கையில் அவர்களுக்கு அளிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றே.

பெண் என்றால் கணவனுக்கு அடங்கித்தான் போக வேண்டும், வீட்டு பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை மாத்திரமே செய்ய வேண்டும், யாரையும் எதிர்த்து ஒரு சொல்கூட பேசக்கூடாது... என்றெல்லாம் அவளுக்கு கட்டுபாடுகள் விதிக்க படுகின்றன.

இப்படி கட்டுபாடுகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம் என்ற பெண்மைக்கே உரிய குணங்கள் மட்டும் எந்த சூழ்நிலையிலும் அவளிடம் மாறாமல் இருந்து அவளது தனித்துவத்தை விளக்குகிறது.

உபதேசம், அறிவுரை என்று வந்தாலும் கூட, மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு அறிவுரை கூறக்கூடியவள் பெண் மாத்திரமே!

ஒருமுறை புத்தரின் சீடன் ஒருவன் வறியவன் ஒருவனுக்கு உபதேசம் செய்தான். ஆனால், அவன் அதை கேட்கவில்லை. உடனே, அந்த சீடனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

நேராக புத்தரிடம் சென்றான். "குருவே! தாங்கள் உபதேசம் சொன்னால் மக்கள் உடனே ஏற்றுக்கொள்கிறார்கள். நான் ஒரு ஏழ்மையானவனிடம் உபதேசம் சொன்னேன். ஆனால், அவன் அதை கேட்கவில்லை; அதன்படி நடந்துகொள்ளவும் இல்லை...'' என்று கூறி குறைபட்டுக் கொண்டான்.

அதற்கு புத்தர் பதில் ஏதும் சொல்லவில்லை. அந்த ஏழ்மையானவனை தன்னிடம் அழைத்து வருமாறு மட்டும் சீடனிடம் கூறினார்.

மறுநாள் அந்த ஏழ்மையானவனோடு புத்தரிடம் வந்து சேர்ந்தான் சீடன். ஏழ்மை யானவனை மேலும் கீழும் பார்த்தார் புத்தர். பசிக்கொடுமையால் எலும்பும் தோலுமாக இருந்தான் அந்த ஏழ்மையானவன். அவனுக்கு சுவை மிகுந்த உணவை கொடுத்து உட்கொள்ளச் செய்த புத்தர், இனி வீட்டுக்குச் செல் என்றார்.

புத்தரின் சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. உபதேசம் செய்வார் என்று பார்த்தால், சாப்பாடு போட்டு அனுப்புகிறாரே என்று எணினான்.

அப்போது புத்தர் சொன்னார்...

"இப்போது அவனுக்குத் தேவை உபதேசம் அல்ல. அவனது பசியை போக்க தேவையான உணவுதான். அந்த உணவுதான் இப்போது அவனுக்கு உபதேசம்'' என்றார்.

புத்தர் ஒரு ஆணாக இருந்தாலும் கூட, ஒரு தாய்மைக்கே உரிய பொறுமையான பக்குவத்தோடுதான் உபதேசங்கள் செய்தார். அதனால்தான் அவரது அறிவுரைகளை மக்கள் கேட்டார்கள். அதன்வழி நடந்தார்கள்.

ஆனால், ஆண்களில் பெரும்பாலானோர், பசிக்கு வருந்தியவனிடம் உபதேசம் செய்து கோபப்பட்ட சீடனாகவே இருக்கிறார்கள்.

மகான்களுக்கே உரிய பக்குவத்தோடு நடந்து கொள்வதாலும் பெண்களை நாம் போற்றுகிறோம். இதில் விதிவிலக்காக சில பெண்களும் உண்டு. அவர்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இன்றைய கணவன்-மனைவியரில் பலரது பிரச்சினையே, ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ளாத தன்மைதான். எதையும் பொறுமையாக கடைபிடித்தால் பிரச்சினை தானாகவே விலகிபோகும்.

இந்த விஷயத்தில் ஒரு ஆண், பெண்ணிடம் இருந்து எப்படி வேறுபடுகிறான்? குடும்பத்திற்குள் பிரச்சினை என்றால் சட்டென்று பதற்றபடக்கூடியவன் ஆணாகிய கணவன் தான். அந்த பதற்றத்தில் அவன் பிரச்சினைக்குரிய தீர்வையே மறந்து போகிறான். ஆனால், மனைவிதான் பிரச்சினைக்கான தீர்வை யோசித்துச் சொல்கிறாள். (டி.வி. சீரியல்களில் ஒரு குடும்பத்தை எப்படி இரண்டாக உடைக்கலாம் என்று பெண்கள் போடும் திட்டங்களை இதில் சேர்க்க வேண்டாம்!). ஒரு ஆண், தனது பலத்தால், அதிகாரத்தால் எதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என்று கணக்கு போடுகிறான். இவர்கள் போடுவது தப்புக் கணக்கு. ஆனால், பெண்கள் போடும் மனக்கணக்குதான் எபோதும் ஜெயிக்கிறது. விட்டுக்கொடுத்து போகத் தெரிந்த பெண்கள் இந்த கணக்கில் எப்போதுமே நுற்றுக்கு நுறு வாங்கி விடுகிறார்கள். எப்போதுமே ஒரு ஆணிடம் `தான்' என்ற அகங்காரம் இருக்கிறது. நடைமுறை சூழ் நிலைகளால் அந்த அகங்காரம் சிறு வயதிலேயே அவனது முளையில் பதிவு செய்ய பட்டு விடுகிறது. அதனால், மனைவிக்கு அவன் உத்தரவு இடுபவனாகவே செயல்படு கிறான். மனைவிதான் அவனது உத்தரவை செயல்படுத்த வேடும் என்கிற எழுத படாத சட்டத்தால், அவள் பல அனுபவங்களை பெற்று, மன தளவில் பக்குவம் அடைந்து விடுகிறாள். தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்றால் கூட, ஆண் தனக்கு பிடித்த சினிமாவைக் காணவே மனைவியையும், குடும்பத்தினரையும் அழைத்துச் செல்கிறான். இந்த விஷயத்தில் மனைவியின் கருத்தைக் கேட்பது தனக்கு அவமானம் என்று கருதுகிறான் அவன். வீட்டில் சமையல் என்றாலும், தனக்கு பிடித்த உணவைத்தான் பெண் சமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் - தேவைபட்டால் கட்டாயபடுத்தும் ஆண், தனது சேவையை மறுபேச்சு கேட்காமல் செய்யும் பெண்ணின் எதிர்பார்பை கேட்டு தெரிந்து கொள்ளவே மறந்துபோய் விடுகிறான். வரன் பார்க்கும் விஷயத்தில் கூட ஆணின் கையே ஓங்கி இருக்கிறது. தனக்கு இப்படிபட்ட பெண்தான் வேடும் என்று நினைத்ததை சாதித்துக் கொள்கிறான் அவன். ஆனால், பெண்தான் பாவம். தனது கருத்தை வெளிபடுத்த முடியாமல் மனதிற்குள் புழுங்கித் தவிக்கும் அவளுக்கு எதிர்பாரப்புக்கு மாறான கணவனே பெரும்பாலும் வந்து சேர்கிறான். ஆனாலும், பொறுத்துக்கொண்டு அவனோடு குடும்பம் நடத்துகிறாள். ஆசைகளை மனதிற்குள்ளேயே புதைத்து விடுகிறாள்.

- இப்படி, தனக்காக அன்றி பிறருக்காக தனது வாழ்க்கையையே அர்பணித்துக் கொள்ளும் பெண்ணுக்குள் பாசம் மட்டும் இல்லையேல், இவை எல்லாம் சாத்தியபடாமல் போய் இருக்கும் என்பது மட்டும் உண்மை!

ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். ஒரு பெண் பக்குவமான மனநிலையை இந்த நிலையில் தான் அடைகிறாள். அம்மாவின் அருமைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது. தெய்வத்தின் மறுஉருவமாகவே நடந்து கொள்கிறாள். ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அவளது கையில் தான் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் அரவணைத்துச் செல்வது தாய் தான்.

அரவணைப்பு

ஒரு தாய் தன் பிள்ளை என்னதான் தவறே செய்தாலும், அவளை அரவணைத்தே செல்வாள். எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாமல் இருக்கும் போது தான் அதன் அருமை தெரியும். அதே போல் தான் தாயின் அருமையும்.

பள்ளிக்குச் செல்லும் போது மகளை குளிப்பாட்டி, தலை முடித்து, சிங்காரித்து அனுப்புவாள். அவள் களைந்து போட்ட உடைகளை துவைப்பாள். அவளுக்கு தேவையான ருசியான உணவைத் தயார் செய்து கொடுப்பாள். அவளது முதுகைத் தட்டிக் கொடுத்து செல்லமாகத் தூங்க வைப்பாள். ஆனால், ஒருநாள் தாய் வெளியூர் சென்றாலும் கூட, அவள் இல்லாமல் தனிமையில் தவித்துக் கொண்டு இருப்பாள் மகள். அப்போது தாய் அவளுக்குச் செய்த கடமைகளைத் தற்போது `தானே செய்ய வேண்டிள்ளதே' என்று எண்ணி வருத்தபடுவாள். தள்ளி இருக்கும் போது தான் அம்மாவின் பணிவிடைகள் மகளுக்குத் தெரியத் தொடங்கும்.

தியாகம்

பருவ வயது பெண்களுக்கு அம்மா மேல் அவ்வளவாக பிரியம் வருவதில்லை. தன்னை போல நவீனமாக அம்மா யோசிப்பதில்லை. மதம், சமயம், பக்தி, கருத்துக்கள் என்று பழைய நடைமுறைகளுடனே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறாள் என்பதே அவர்களது எண்ணத்திற்கு காரணம்.

புரிந்து கொள்ளுங்கள்

தன்னால் சாதிக்க முடியாததை மட்டும் என் மீது சுமத்துகிறாள் என்று தன் தாயிடம் பருவவயது மகள் குறை காண்கிறாள். ரசனைகள், விருப்பங்கள், தேர்வுகள் இவை ஒவ்வொரு தலைமுறையிலும் மாறிக் கொண்டே இருக்கும் என்பதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் எது நல்ல விஷயமோ அதை கடைபிடித்து வாழ்வதே உத்தமம்.

தாயானவள் தன் காலத்தில் எப்படி முழுமை பெற்று நின்றாளோ, அதேபோல் மகளும் அவள் காலத்தில் முழுமை பெற்று நிற்கும் போது பெருமைபட வேண்டுமே தவிர, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளக் கூடாது.

வேண்டாமே `பெரிய மனுஷித்தனம்'

அம்மாவை நிறைவு பெற வைக்க அவள் கூட உட்கார்ந்து உங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டாலே போதும். உங்கள் சுமையில் பாதியை அவள் இதயத்தில் சுமக்கத் தொடங்கிவிடுவாள். பல குடும்பங்களில் சிக்கல்கள் உருவாக முக்கிய காரணம் போதிய தகவல் தொடர்பு இல்லாதது தான். ஒரு கட்டத்துக்கு பின் அம்மாவிடம் எதையுமே சொல்லாமல் நாமே பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துக்கு பெண் பிள்ளைகள் வந்து விடுகிறார்கள். இந்த `பெரிய மனுஷித்தனம்' தேவையற்ற இடைவெளியை அம்மா விடம் ஏற்படுத்தி விடும்.

பிறந்தது முதல் படிப்படியாக வளர்ந்துவரும் தன் பெண்ணின் தேவையை அம்மாவால் புரிந்து கொள்ள முடியாதா?

`உனக்கு ஒண்ணும் தெரியாது? சும்மாயிரு' என்று சொல்லும்போது அம்மா மனதளவில் உடைந்து விடுகிறாள். இதுவே பெரிய குறையாக நாளடைவில் அவளுக்குள் வளர்ந்து விடுகிறது. வலி காணும் மனதுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பவள் தாய் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நீங்கள் தப்பே செய்து விட்டு வந்தாலும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் தான் தாய். அவளை புரிந்து கொள்வதற்கு தேவை, பொறுமை மட்டுமே.

நட்பு முறிவதைத் தாங்கமுடியாத இந்தியக்குழந்தைகள்;சர்வே முடிவு


பெங்களூரு : இந்தியாவில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோரின் மிகப்பெரிய கவலை எது தெரியுமா? உயிருக்கு உயிராக பழகும் நண்பர்கள் பிரிந்து செல்வது தான். நாட்டின் முக்கிய நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் தான், இந்த தகவல் தெரியவந்துள்ளது.எஜுமீடியா இந்தியா பி. லிட்., என்ற நிறுவனம், சமீபத்தில் பெங்களூரு, மும்பை, பாட்னா, நாக்பூர், ஆக்ரா, மதுரை ஆகிய நகர்களில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 532 குழந்தைகளிடம், ஒரு ஆய்வு மேற்கொண்டது. அனைத்து குழந்தைகளையும் நேரில் வரவழைத்து, அவர்கள் ஒவ்வொருவரிடமும், தனித்தனியாக, 'உங்களின் மிகப்பெரிய கவலை எது? எந்த ஒரு பிரச்னை உங்களுக்கு மிகவும் மனவேதனையை அளிக்கும்?' என கேள்விகள் கேட்டது. தோல்வி, கோபத்தை அடக்க முடியாதது, படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, பொறாமை, ஆண், பெண் சமத்துவம் இன்மை, நட்பு முறிவு, புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவை உள்ளிட்ட 20 முக்கிய பிரச்னைகள் அவர்கள் முன் வைக்கப்பட்டு, இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும்படி, அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.இதில், பெரும்பாலான குழந்தைகள், 'ஏதாவது ஒரு பிரச்னையால் நட்பு முறிவு ஏற்பட்டு, நண்பர்கள் பிரிந்து செல்வது தான்,எங்களுக்கு மிகவும் மன வேதனை அளிக்கும் விஷயம்' என, கூறியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தோல்வியால் ஏற்படும் பயம், தங்களுக்கு மிகப் பெரிய கவலையை அளிப்பதாக 10.4 சதவீதம் குழந்தைகள் கூறியுள்ளனர். மூன்றாவதாக கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது, தங்களுக்கு பெரியவருத்தம் அளிப்பதாக 9.5 சதவீதம் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.நன்றி:தினமலர் 24.4.2010

முறையற்ற உறவுகளுக்குள் இருக்கும் முற்பிறவி ரகசியங்கள்

சில முறையற்ற உறவுகளுக்குள் மறைந்திருக்கும் முற்பிறவி ரகசியங்கள்

ஒவ்வொரு மனிதனின் வலது மூளைக்குள்ளும் முந்தைய மூன்று பிறவிகள் பதிவாகியிருக்கும்.இந்த மூன்றுபிறவிகளில் சந்தித்த காம உறவுகள்,எதிரிகள்,பாச உறவுகளை இந்தப்பிறவியில் சந்தித்தால் உரிய உறவுகள் மீண்டும் துளிர்க்கும்.இப்படி துளிர்ப்பதை உரிய மனிதன்/மனுஷியே உணரமாட்டார்.

உதாரணமாக,மூன்றுபிறவிகளுக்குள் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள்,கணவன் மனைவி போல வாழ்ந்தவர்கள் இப்பிறவியில் எங்கோ பிறந்திருப்பர்.முந்தைய பிறவிகளில் ஆணாகப்பிறந்திருப்பவர்கள் இந்தப்பிறவியில் பெண்ணாகப்பிறந்திருக்கலாம்; இதேநிலைதான் முற்பிறவிப்பெண்ணுக்கும்.
அவர்கள் எப்போதாவது ஒருமுறை சந்தித்தால் போதும்; மீண்டும் காம அனுபவம் அவர்களுக்குள் தலைதூக்கும்.அப்புறமென்ன, இந்தப்பிறவியில் மானம் அவமானத்திற்கு அஞ்சாமல் அவர்கள் மனம் போனபடி வாழ்ந்துகொள்ளுவார்கள்.
எனது 22 வருட ஜோதிட அனுபவத்தில் இதுபோன்ற முறையற்ற உறவுகளைப் பார்த்திருக்கிறேன்.பார்த்தும் வருகிறேன்.
முற்பிறவி மனைவி இப்பிறவியில் பிறக்கிறாள்.அவள் பிறந்த 19 வருடம் கழித்து,அவளது கணவன் பிறக்கிறான்.கணவன் திருமணவயதையடைந்ததும், அவளது முற்பிறவிமனைவி தனது இப்பிறவி மகளை அவனுக்கு திருமணம் செய்விக்கிறாள்.மாமியார் மருமகன் உறவு, கணவன் மனைவியாகிறது.
இதேபோல, மனைவி பிறந்து 27 வருடம் கழித்து, கணவன் பிறக்கிறான்.47 வயதில் இருவரும் சந்திக்கின்றனர்.அப்போது கணவனுக்கு 20 வயதுதான் ஆகிறது.கணவன் தனது பெற்றோரைப் பிரிந்து,இந்த 47 வயதுக்காரியுடன் அவளது கணவன் சம்மதத்தோடு சேர்ந்து வாழ்கிறான்.தனது முற்பிறவிக்கணவனை ஒரு குழந்தையைப்போல கவனித்துக்கொள்ளுகிறாள்.ஒரு முன்னுதாரணமான மனைவியாகத் திகழுகிறாள்.வெளியுலகிற்கு தனது முற்பிறவி மனைவியை சித்தி என்றே அழைக்கிறான்.உலகம் நம்புகிறது.47 வயது பெண்,20 வயது ஆண் என்பதால்.வீடு சொந்தமாக இருந்தும், வாடகை வீட்டுக்கு குடிபோகின்றனர்.பக்கத்துவீடுகளில் இந்த முறையற்ற உறவைக் கண்டுபிடித்ததும், வேறு ஏரியாவுக்கே மாறிப்போகின்றனர்.
முற்பிறவித்தொடர்புகள் என்பதற்கு ஆதாரமே, ‘நீ தான் ஏழேழு ஜன்மத்துக்கும் எனக்கு பொண்டாட்டியா வரணும்’

‘உன்னை விடமாட்டேண்டி! உன்னை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் நீதாண்டி எனக்கு எல்லாம்’ என்ற டயலாக்குகளை இவர்கள் அடிக்கடிப் பேசிக்கொள்ளுவார்கள்.

சித்திரை மாத பவுர்ணமிபூஜைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வருக! உங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனையைப் பெறுக!!!

சித்திரை மாத பவுர்ணமிபூஜைக்கு வருக!

ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி ரோட்டில் அமைந்திருப்பது முதலியார்பட்டித்தெரு.இங்கே நடுநாயகமாக வடக்குநோக்கி அமர்ந்துவரங்களை வாரி வழங்குபவள் எனது அன்னை பத்திரகாளி!
மாசிமாதம் வந்த சிவராத்திரியன்று கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி இந்தக் கோவிலில்தான் நிகழ்ந்தது.இந்த அபூர்வ அதிசய சம்பவம் சுமார் 40 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பவர்கள்,திருமண வாழ்க்கையில் மாபெரும் அவமானத்தை சந்தித்திருப்பவர்கள்,நிம்மதியையும் அமைதியான வாழ்க்கையையும் எதிர்பார்ப்பவர்கள்,தற்போது ராகு மகா திசை நடப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த சித்திரை பவுர்ணமி நாளன்று (27.4.2010 செவ்வாய்க்கிழமை இரவு 9.30க்கு ஆரம்பித்து நள்ளிரவு 1.00 மணி வரை ) பவுர்ணமிபூஜை நடைபெறுகிறது.

நீங்கள் தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் மதுரைக்கு வந்து,ராஜபாளையம்/தென்காசி/செங்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி ஸ்ரீவில்லிபுத்தூர் என பயணச்சீட்டு கேட்டுவருக! மதுரையிலிருந்து சுமார் 2 மணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துவிடலாம்.ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திலிருந்து சிவகாசி ரோட்டில் நடந்துவந்தால் வெறும் 10 நிமிடத்தில் வந்துவிடலாம்.

பல வருடங்களாக திருமணம் ஆக கன்னிப்பெண்கள் இரண்டு அல்லது மூன்று பவுர்ணமிபூஜைகளில் கலந்துகொண்டதும்,மிகச்சிறப்பான வரன் அமைந்திருக்கிறது.

மணவிலக்குபெற்ற பல பெண்கள்,தொடர்ந்து பவுர்ணமி பூஜைகளில் கலந்துகொண்டதும், தனது மனதுக்கினிய கணவன்களை அடைந்து நிம்மதியான,மகிழ்ச்சியான மறுமண வாழ்க்கையை அடைந்திருக்கிறார்கள்.
பொறுப்பில்லாத வாழ்க்கைத்துணையைப் பெற்றிருப்பவர்கள் இந்த பத்திரகாளியம்மனை தொடர்ந்து வழிபட்டுவருவதால்,சிறு சிக்கலுமின்றி தனது வாழ்க்கைத்துணையைப்பிரிந்து,பொறுத்தமான வேறு வாழ்க்கைத்துணையைப் பெற்றிருக்கிறார்கள்.
(சிலரது வாழ்க்கைத்துணைகள் மனம் திருந்தி, மறுமணத்திற்கு அவசியமின்றியும் சேர்ந்து வாழ்ந்துவருகின்றனர்)

நீங்கள் ஒரே ஒருமுறை இந்த சித்திரை பவுர்ணமிபூஜையில் கலந்துகொண்டு செக் செய்துகொள்ளலாம்.

நேரம் தவறாமையின் முக்கியத்துவம்

காந்தியடிகள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடும் பழக்கம் உடையவர். அவர் தான் ஆசிரமத்தில் உள்ள மற்றவர்களையும் எழுப்பி விடுவார். அவர் நடக்கும் நடையின் வேகத்திலேயே அவரது சுறுசுறுப்பு தெரியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்ற அவர் ஒரு நிமிடம் தாமதித்து வந்ததற்காக அங்குள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

ஒருமுறை நெப்போலியன் தம்முடைய தளபதிகளை விருந்திற்கு அழைத்தார். குறிபிட்ட நேரத்திற்குள் அவர்கள் வராததால் அவரே தனியாக அமர்ந்து உணவருந்த ஆரம்பித்து விட்டார். அவர் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில், தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக அறையின் உள்ளே நுழைந்தனர். உடனே சாப்பிட்டு விட்டு எழுந்த நெப்போலியன், "தளபதிகளே! சாப்பிடும் நேரம் முடிந்து விட்டது. வாருங்கள், நாம் இனி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் போருக்குச் செல்வோம்'' என்றார். அப்புறமென்ன, அன்று முழுவதும் தளபதிகள் பட்டினி தான்.

"குறிப்பிட்ட செயலை செய்து முடிப்பதிலோ, ஒரு குறிப்பிட்ட சந்திப்பை நிறைவேற்றுவதிலோ முழுகவனம் செலுத்தாதவன் ஒருபோதும் மதிக்கபட மாட்டான். அவன் வாழ்விலும் வெற்றி பெற மாட்டான்'' என்கிறார், டாக்டர் பீட்ச் என்ற மேலைநாட்டு அறிஞர்.

குறித்த நேரத்திற்குள் குறித்த வேலையைச் செய்து முடிக்கும் போது தான் பிறர் நம் மீது நம்பிக்கை கொள்வார்கள். தம்முடைய நிறுவனத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்த ஒருவர் தாமதித்து வந்ததற்கு தன்னுடைய கடிகாரத்தை நொடிச்சாக்காக கூறியதும், " உன் கிளாக்கை மாற்று. இல்லையேல், நான் உன்னை மாற்றி விடுவேன்'' என்றார், வாஷிங்டன்.

ஒரு வேலையை செய்வது ஒரு விதையை விதைப்பது போலாகும். உரிய காலத்தில் விதைத்தால் தான், உரிய காலத்தில் அறுவடை செய்யமுடியும்.

மாமியார் மருமகள் சண்டையை நிறுத்திட வழி

அடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் நடந்து செல்கிறான். அப்போது இரை தேடி வந்த புலி ஒன்று அவனை பார்த்து விடுகிறது. உடனே அவனைத் துரத்துகிறது. பயந்து ஓட்டம் பிடித்த மனிதன், அங்கிருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக்கொள்கிறான்.ஆனாலும், புலி அவனை விடுவதாக தெரியவில்லை. மரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. பயம் அதிகமான மனிதன் மரத்தின் கிளையை இறுக பற்றிக்கொள்கிறான்.

அப்போதுதான் தனக்கு பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்கிறான். அங்கே ஒரு கரடி இருக்கிறது. அதை பார்த்த மாத்திரத்தில் குலை நடுங்கிபோகிறான் மனிதன்.

தன்னை பார்த்து மிரண்ட மனிதன் மீது கரடிக்கு இரக்கம் பிறக்கிறது. `மனிதா... என்னை பார்த்து பயபடாதே. நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உயிருக்கு பயந்து மரத்தின் மீது ஏறும்போது என் காலை தொட்டுவிட்டாய். இதன் முலம் என்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளாய். எந்த நிலையிலும் நான் உன்னை கொல்ல மாட்டேன்` என்றது கரடி.

அப்பாடா... தலைக்கு வந்தது தலைபாகையோடு போயிற்று என்று பெரு முச்சுவிட்ட மனிதன் கீழே பார்த்தான். அங்கே புலி இடத்தைவிட்டு அகலுவதாக தெரியவில்லை. அது கரடியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தது.
`ஏ கரடியே! நீயும் மிருகம், நானும் மிருகம். அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி. ஒன்று... அவனை நீ சாப்பிடு. இல்லை... கீழே தள்ளிவிடு; நான் சாப்பிடுகிறேன்` என்றது புலி.

அதற்கு கரடி, `அவன் என்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளான். அவனை நான் காப்பாற்றியே தீருவேன்` என்றது.
சிறிதுநேரம் கழிந்தது. மனம் தளராத புலி அடுத்ததாக மனிதனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்தது.

`மனிதா! எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. எனக்கு எப்படிம் இரை வேண்டும். கீழே இறங்கினால் நிச்சயம் உன்னை கொன்று சாப்பிட்டு விடுவேன். ஆனால், உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் கூறுகிறேன். உன் அருகே உள்ள கரடி இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறது. அதை கீழே தள்ளி விட்டுவிடு. என் பசியும் தீரும். உயிர் பிழைத்துவிடலாம்` என்றது.

தான் மட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன், அருகே மரக்கிளையில் தூங்கிக்கொடிருந்த கரடியை பிடித்து கீழே தள்ளினான். ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக பிடித்துக்கொடு கீழே விழாமல் தப்பியது. நடுநடுங்கிபோனான் மனிதன். அவன் கை, கால்கள் தானாக ஆட ஆரம்பித்தன. விட்டால், மரத்தில் இருந்து தானாகவே கீழே விழுந்துவிடுவான் போல் இருந்தது.

அப்போது கரடி நிதானமாகவே பேசியது. `பயப்படாதே. இப்போதுகூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாபப்படுகிறேனேத் தவிர, உன்னை பழிவாங்க நினைக்கவில்லை. இப்படிச் செய்யலாம் என்று நான் எண்ணினேன். அதனால், முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன். இபோதும்கூட நான் உன்னை கொல்ல மாட்டேன். புலியிடம் தள்ளியும் விட மாட்டேன். கவலைபடாதே...' என்றது.

`தவறு செய்துவிட்டோமே...'என்று கண்ணீர் சிந்தினான் மனிதன்.

மிருகங்களிடம் இருக்கும் நற்பண்புகள் மனிதர்களிடம் இல்லை என்பதற்காக சொல்லபட்ட கதை இது.
பல மாமியார்-மருமகள் உறவிலும் இதே நிலைதான். மாமியார் என்றால் மருமகளை கொடுமைபடுத்துவாள், மருமகள் என்றால் மாமியாரை மதிக்க மாட்டாள்; மாறாக, கணவனை கைக்குள் போட்டுக்கொள்வாள் என்கிற எண்ணம்தான், இன்றைய மாமியார்கள், மருமகள்களின் முளையில் பதிவு செய்யபட்டு இருக்கிறது.

தவறாக பதிவு செய்யபட்ட அந்த கண்ணோட்டத்தில் ஒருவரையொருவர் அணுகுவதால் மாமியாரும், மருமகளும் எலியும், பூனையுமாக மாறி விடுகிறார்கள். மாமியார் மருமகளை பற்றி மகனிடமோ, மருமகள் மாமியாரை பற்றி கணவனிடமோ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, பெரும் பிரச்சினையையே ஏற்படுத்தி விடுகிறார்கள்.
இந்த விஷயத்தில் பாவம் கணவன்மார்கள்தான்! பெற்றத் தாயிடம் கோபப்படவா? தாரத்திடம் கோபப்படவா? என்று தெரியாமல், மண்டையை பிய்த்துக்கொள்கிறார்கள்.

நம்ம ராமையாவும் இந்த வகையில் பாதிக்கபட்டவர்தான். ஒருநாள் அவரது மனைவி, `நான் உங்க அம்மா பற்றி நிறைய கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க கண்டுக்கவே மாட்டேங்குறீங்க...' என்று கேட்டதோடு, கோபத்தில் பளார் என்று அடிக்காத குறையாக பேசி விட்டதால், மனைவியிடம் பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார்.

பெரும்பாலான கணவன்மார்கள் இப்படித்தான் மனைவிமார்களிடம் அடங்கிபோய் கிடக்கிறார்கள். சிலர்தான், தாயின் பேச்சைக்கேட்டு மனைவியை வாங்கு வாங்கு என்று தினமும் வாங்குகிறார்கள்.

இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

முதலில் மாமியார்களுக்கு...

மருமகளை உங்களது இன்னொரு மகளாக கருதுங்கள். வீட்டுக்கு வந்ததும் மகனை கையில் போட்டுக்கொள்வாள் என்று அக்கம் பக்கத்தில் பெருசுகள் யார் சொன்னாலும், அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள். `நானும் உனக்கு அம்மாதான். நீயும் எனக்கு இன்னொரு மகள்தான்' என்று அடிக்கடி மருமகளிடம் சொல்லி பாருங்கள். அவள் தன் அம்மாவை உங்களிடமும் காண்பாள். பெற்ற மகளிடம் உரிமையோடு கோபிக்கலாம். ஆனால், மருமகளிடம் அப்படிச் செய்யக்கூடாது. ஏனென்றால், மாமியார் எப்படிபட்டவர் என்பதை அவள் உங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்து கொள்கிறாள். நீங்கள் அவளிடம் ஒரு தாய்க்குரிய அன்பையும், பாசத்தையும், பரிவையும் அவளிடம் கொட்டினால், அவளும் உங்களை தன் அம்மாவாக ஏற்றுக்கொள்வாள். மருமகள் மனதிற்குள் ஏதாவது பிரச்சினைகளில் புழுங்கினால் அவளுக்கு அன்பாய் ஆதரவு சொல்லுங்கள். பிரச்சினை தீர வழிகாட்டுங்கள். மருமகள் வீட்டிற்கு வந்த பிறகு அவளிடம் எல்லா வேலையையும் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுப்பதும், டி.வி.யில் சீரியல் பார்ப்பதும், பக்கத்து வீட்டு பெருசுகளிடம் ஊர் வம்புகளை பேசுவதும் நல்லதல்ல. அவளோடு நீங்களும் வேலைகளை ஆதரவாய் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் அவளோ வீட்டு வேலைகளை தானாக செய்ய ஆரம்பித்து விடுவாள். அதற்காக அப்படியே விட்டுவிடாதீர்கள். நீங்களும் முடிந்தவரை உதவுங்கள். மருமகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் தாய்பாசத்தை கொட்டி கவனியுங்கள். உங்கள் அன்பில் மெய்சிலிர்த்துபோவாள் அவள்.

இனி, மருமகள்களுக்கு...

டி.வி. சீரியல்களில் பயமுறுத்தும் மாமியார் மாதிரிதான் நம் மாமியாரும் இருப்பாள் என்ற கற்பனைகளை தூக்கியெறிந்து விடுங்கள். அவரை உங்களது இன்னொரு தாயாக கருதுங்கள்.

எந்தவொரு தாயும் தனது மகன் கடைசிவரை தனக்கு துணை நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பாள். அதனால், கணவன் எப்போதும் தன்னுடன்தான் இருக்க வேண்டும், தன் பேச்சை மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.

எல்லா மாமியார்களுமே மருமகளிடம் எதிர்பார்ப்பது நல்ல குணத்தையும், விட்டுக்கொடுக்கும் மனபான்மையும்தான். `நீங்களும் எனக்கு அம்மாதான். உங்கள் மகளிடம் பழகுவது போலவே என்னிடமும் பழகுங்கள்' என்று சொல்லி பாருங்கள். `மருமகள் என்றால் என் மருமகள் போல்தான் இருக்க வேண்டும்' என்று மற்றவர்களிடம் புகழ ஆரம்பித்துவிடுவார்.

வயதான காலத்தில் எல்லா மாமியாரும், மாமனாரும் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையையும், ஓய்வையும்தான். அதற்கு எந்த பங்கமும் ஏற்படுத்திவிடாதீர்கள்.

சாப்பாட்டை மாமியாரே போட்டு சாப்பிட வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவருக்கு நீங்களும் அடிக்கடி உணவு பரிமாறி, அவருக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து அசத்துங்கள்.

வயதானாலே உடல் ரீதியான தொந்தரவுகள் நிறைய வரும். அந்தநேரத்தில், மாமியாருக்கு ஒரு மகளாய் நின்று பணிவிடை செய்யுங்கள். அந்த வயதான உள்ளம் உங்களை பாராட்ட வார்த்தை தெரியாமல் மகிழ்ச்சியில் தவிக்கும்

12 ராசிக்காரர்களுக்கும் விக்ருதி வருடப்பலன்கள்

விக்ருதி வருட ஜோதிடப்பலன்கள்

இதுவரை ஏழரைச்சனியால் கஷ்டப்பட்டுவந்த கடகராசிக்காரர்கள்,இந்த விக்ருதி வருடத்தின் முதல் நாளிலிருந்து மிக நல்ல செய்தியைப் பெறுவார்கள்.எந்த வேலையில் சேருவது? அல்லது எந்தத் தொழிலை ஆரம்பிப்பது? என்ற குழப்பம் நீங்கும் நாள் இந்த ஆண்டுப்பிறப்பு.
இதுவரை இருந்துவந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்துவந்த நிலை, இனி, பெரும் செல்வச்செழிப்பை நோக்கிச் செல்லும்.
உங்களை சிறிதும் மதிக்காமல் இருந்தவர்கள் உங்களைத் தேடி வரத்துவங்குவர்.(நமது வாழ்க்கையில் யாரும்,எதுவும்,எப்போதும் நிலையில்லை என்ற மனநிலை உங்களுக்குள் தோன்றும்)

இதே நிலைதான் அஷ்டமச்சனியை அனுபவித்துவந்த மகர ராசிக்காரர்களுக்கும்.

மேஷம்,விருச்சிகம்,ரிஷபம்,தனுசு,துலாம் ராசிக்காரர்கள் மிகவும் நிதானமாகவும் திட்டமிட்டும் தமது வருவாயை செலவழிக்க வேண்டும்.
மேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் 15.5.2010 வரை பொறுமை காக்க வேண்டும்.அதுவரை உங்களைச் சீண்டுபவர்களிடமிருந்துகூட, விலகிச் செல்வது நன்று.ஏழுமாதங்களாக பல்வேறுமுறைகளில் அவமதிப்பை,கவனக்குறைவைப் பார்த்த நீங்கள் அட்லீஸ்ட் 2.5.2010 வரை மட்டுமாவது பொறுமை காக்கவும்.அன்று குருபகவான் மீனராசிக்கு அதிசாரம் ஆவதால்,அன்றுமுதல் குருவின் பார்வை உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயைப் பார்க்கிறார்.அன்று முதல்,படிப்படியாக உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்.

கும்பம் மற்றும் கன்னிராசிக்காரர்களுக்கு முறையே அஷ்டமச்சனி,ஜன்மச்சனியை அனுபவித்துவருகின்றனர்.குருவின் அதிசாரத்தால் 60% கஷ்டம் நீங்கி சுகம் பெறுவர்.

சிம்மம் மற்றும் மீனராசியினர் எதையும் யோசித்துச்செய்வது நல்லது.கடந்த காலத்தவறுகள் திடீரென விஸ்வரூபம் எடுக்கலாம்.

விக்ருதி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விக்ருதி தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எனதருமை ஆன்மீகக் கடல் வாசகர்கள் அனைவருக்கும் எனது விக்ருதி வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


தன்னலமற்ற அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு வேலை செய்யும் தமிழர்களால் உலகம் முழுவதும் இருக்கும் மென்பொருள்,பங்குச்சந்தை,அரசாங்கம்,ஜோதிடம்,உயிர்த்தகவலியல், ராணுவ ஆராய்ச்சி என பல துறைகள் புதிய சாதனைகளைப் படைக்கின்றன.
ஐ.நா.சபை,இந்திய தேசம்,விண்வெளி ஆராய்ச்சி,உலக வர்த்தக அமைப்புக்களில் விரைவில் தமிழ் இன சாதனையாளர்கள் தலைமை பீடத்தை அலங்கரிப்பார்கள்.
விக்ருதி வருடத்தில் இந்தியாவின் தலைமை பீடத்தை சித்தர் பெருமக்கள் ஆசி பெற்ற ஒரு மாவீரன் கைப்பற்றுவான்.தமிழர்களின் மதமாகிய இந்துதர்மம் இந்த வருடத்திலிருந்து 300 ஆண்டுகளுக்கு உலகம் முழுக்கப்பரவும்.வாழ்க தமிழ் இனம்; வெல்க தமிழ் உலகம்;பரவுக இந்துதர்மம்.

குழந்தைப் பாக்கியம் பெற ஒரு சுலப வழி

குழந்தைப் பாக்யம் பெற விரும்பும் தம்பதியருக்கு

ஒவ்வொரு தமிழ்மாதமும் அதிகபட்சமாக இரு முறை சுவாதி நட்சத்திரம் தலா ஒரு நாள் வரை நிற்கும்.அப்படி நிற்கும் நாளன்று,தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்,நீண்டகாலமாக குழந்தைச்செல்வம் இல்லாதவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

இதே சுவாதி நட்சத்திரத்தன்று,திருவாலங்காட்டுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டால்,களத்திரதோஷம்,புத்திர தோஷம் நீங்கும்.மாந்திரபாதிப்பு எனப்படும் அபிசாரப்பிரயோகம் நீங்கிவிடும்.

திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில்,சிவபெருமானை வணங்கி,மருத்துவ சிகிச்சையை துவக்கினால்,எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகும்.
இந்த நட்சத்திரம் நிற்கும் நாளில்,பாம்புக்கடி,விஷக்கடிக்குரிய மந்திரங்களை அதிகமான எண்ணிக்கையில் ஜபித்தால்,எளிதில் சித்தி பெறலாம்.
உங்களுக்கு அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பேய் பிசாசு தொல்லைகள் இருக்குமானால்,நீங்கள் திருநாகேஸ்வரம் அல்லது சிதம்பரம் அல்லது திருவாலங்காடுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அல்லது அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்தால்,பேய் பிசாசுத்தொல்லைகள் நீங்கும்.

சதயம் நட்சத்திரம் நிற்கும் நாட்களில் சிவாலயங்களில் இருக்கும் காலபைரவருக்கு மண்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட, மூட்டுவலி,கைகால் வலிகள் நீங்கும்.மாந்திரீகப்பாதிப்பும் நீங்கும்.

நிஜமாகிவிட்ட ஜோதிடக்கணிப்பு

Astrological Predictions of the Major Countries of this World- The Next 20 Years என்ற ஜோதிடக்கணிப்புப் புத்தகத்தில் கி.பி.1990 முதல் கி.பி.2010 வரை இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை துல்லியமாகக் கணித்துள்ளார் வடபாரதத்தைச் சேர்ந்த ஒரு ஜோதிடர்.இந்தப்புத்தகத்திற்கு சர்வதேச நீதிமன்றத்தில் முறையான அங்கீகாரம் வாங்கியிருக்கிறார்.இந்தப்புத்தகத்தில் கி.பி.2010 ஆகும்போது இந்தியாவில் விபச்சாரம் ஒரு சமூக அங்கமாகிவிடும் என கணித்திருந்தார்.


அதற்கு ஆதாரமாக ஜனவரி,13,2010 ஜீனியர் விகடன் வெளியீட்டில் வெளிவந்திருக்கும் ஒரு நிஜப்பேட்டியும் கட்டுரையும் அமைந்திருக்கிறது.
வாடகை மனைவி என்ற பெயரில் வெளிவந்த அந்தக்கட்டுரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் வெளிவந்தது.திருச்சி மாநகரில் 30 முதல் 40 வயது வரையிலான இல்லத்தரசிகள் மாதாந்திர மனைவியாக தம்மை ரூ.20,000/- முதல் ரூ.50,000/-வரை தன்னையே வாடகைக்கு விடுகின்றனர்.தமது குடும்பத்தினர் மற்றும் கணவனின் சம்மதத்தோடு!


ஒருவனுக்கு ஒருத்தி, காதலும் வீரமும் என்பவை நமது தமிழ் சமுதாயத்தின் அடையாளம் ஆகும்.ஆனால்,விலைவாசி உயரும் அளவிற்கு,சம்பளம் உயருவதில்லை.குழந்தைகளை வளர்க்க வேண்டும்.வீட்டுவாடகை,மளிகை பாக்கி,பால் பாக்கி,கல்விக்கட்டணம் என எல்லா வித அடிப்படைச் செலவுகளுக்கும் கணவன் மனைவி இருவருமே வேலைக்குப்போயும்கூட இரண்டு சம்பளம் குடும்பம் நடத்திட போத வில்லை.(மனைவியின் அலங்காரச்செலவும்,கணவனின் ஊதாரிச்செலவும் இதற்கு முக்கிய காரணங்கள்.ஆனால் அதைநிறுத்திட முடிவதில்லை)

ஒரு ஜோதிடரிடம் கேட்கக்கூடாத கேள்வி:உங்கள் சிந்தனைக்கு தமிழ் வெப்துனியாவிலிருந்து

ஜோதிடரிடம் கேட்கக் கூடாத கேள்வி இருக்கிறதா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

இன்றைக்கு பல்வேறு வாழ்வியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜோதிடரின் ஆலோசனையை மக்கள் நாடுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் ஜோதிடரிடம் கேட்கக் கூடாத கேள்வி/விஷயம் ஏதாவது இருக்கிறதா? அல்லது ஜோதிடத்தில் சொல்லக் கூடாத விஷயம் என்று ஏதாவது இருக்கிறதா?

பதில்: ஜோதிடத்தைப் பொறுத்தவரை கேட்கக் கூடாத கேள்வி அல்லது சொல்லக் கூடாத விஷயம் என்று எதுவும் கிடையாது. ஜாதகத்தைக் கொண்டு வருபவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களின் கிரக நிலைகளை ஆராய்ந்து உண்மையான பதிலைக் கூறுவதே ஜோதிடரின் கடமை.

என்னைப் பொறுத்தவரை ஜாதகம் பார்க்க வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை முதலில் கருத்தில் கொள்வேன். சில வருத்தமான விஷயங்களை தாங்கும் மனப்பக்குவத்தை அவர் பெற்றுள்ளாரா? சந்தோஷமான செய்தியையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? என்று யோசிப்பேன். அதன் பின்னரே எந்த ஒரு விஷயத்தையும் அவரிடம் கூறுவேன்.

ஒரு ஜோதிடரைப் பொறுத்தவரை பலன் கூறுவது என்பது வாய்ச்சொல்; ஆனால் ஜாதகரைப் பொறுத்தவரை அது தலைச்சுமை என முன்னோர்கள் கூறியுள்ளனர். அதாவது நாம் பலன் கூறிவிட்டு முடித்துக் கொள்வோம். ஆனால் அதில் உள்ள நல்லது, தீயவைகளை அவர்கள் மனதளவில் ஏற்று நினைவில் (தலையில்) வைத்துக் கொள்கின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் என்னிடம் வந்திருந்த தம்பதி தங்கள் குழந்தையின் ஜாதகத்திற்கு தற்போது என்ன பலன் எனக் கேட்டனர். அந்தக் குழந்தையின் (6 வயது) ஜாதகத்தை பார்த்த பின்னர் அவர்களிடம் பேசிய நான், “இந்தக் குழந்தையால் நீங்கள் பிரிய (விவாகரத்து) நேரலாம்” என்றேன்.

உடனே அந்தப் பெண்ணின் கணவர், “எந்தக் காரணத்திற்காக நாங்கள் பிரிய நேரிடும் எனக் கூற முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, “தவறாக நினைக்காதீர்கள். உங்களுக்கு மனைவி மீது சந்தேகம்” என்றேன். உடனே அவரது மனைவி கதறி அழத்துவங்கி விட்டார்.

ஓரிரு நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் துவங்கிய அந்தப் பெண், “இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது எனக் கடந்த 5 ஆண்டுகளாகவே என்னிடம் கேட்டு, என்னை மனதளவில் சித்ரவதை செய்கிறார். ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் தனித்தனி மனிதர்களாகவே வாழ்கிறோம். உலகிற்கு மட்டும் நாங்கள் தம்பதிகள். வீட்டிற்குள் எதிரிகள் போல் இருக்கிறோம்” என்று தன் மனதில் உள்ளவற்றைக் கொட்டினார்.

ஜோதிட ரீதியாக ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னம்/லக்னாதிபதி அல்லது சந்திரனை குரு பார்த்தால் அவருக்கு பிறக்கும் குழந்தை அவருடையதுதான் என உறுதியாகக் கூற முடியும். இதேபோல் பூர்வ புண்ணியாதிபதியை குரு பார்த்தாலும் அந்த ஜாதகர் குழந்தையின் பிறப்பில் களங்கம் இருக்காது. இதுபோல் பல வகையான அமைப்புகள் மூலம் ஒரு குழந்தை அந்த ஜாதகருக்குதான் பிறந்தது என்று ஜோதிட ரீதியாக உறுதிபடக் கூறிவிட முடியும்.

அதுமட்டுமின்றி அந்தப் பெண்ணின் குழந்தைக்கு அந்தக் கணவர்தான் தந்தை என்பதை அவரது மனதில் பதியும்படி, சில நிகழ்வுகளைக் கூறி (குழந்தை பிறந்த பின்னர்) அதுபோன்று உங்கள் வாழ்வில் நடந்ததா? எனக் கேட்டேன். சிறிது தயக்கத்திற்குப் பின்னர் நான் கூறிய நிகழ்வுகள் நடந்ததாக ஒப்புக் கொண்டதுடன், குழந்தையும் தன்னுடையதுதான் என்று வாய் விட்டுக் கூறினார்.

பிரச்சனை முடிந்தது என்று அவர்களை உடனடியாக அனுப்பிவிடாமல், தம்பதிகளை மனம்விட்டுப் பேசச் செய்து, அவர்களிடையே இருந்த மனக்கசப்பை நீக்கி அவர்களை அனுப்பி வைத்தேன்.

மற்றொரு சம்பவம்: சில மாதங்களுக்கு முன் ஒரு பாட்டி தனது பேத்தியை அழைத்துக் கொண்டு என்னிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தார். பேத்திக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், வரன் எப்படி அமையும் எனத் தெரிந்து கொள்ள வந்ததாகவும் என்னிடம் தெரிவித்தார்.

பேத்தியின் ஜாதகத்தைக் கணித்ததில் அவருக்கு 2 முறை திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மேலோட்டமாக பதில் சொல்லிவிட்டு, பெண்ணின் தந்தை இங்கே வரச் சொல்லுங்கள் என்று பாட்டியிடம் கூறினேன்.

அதற்கு அந்தப் பாட்டி சற்று பதற்றமாக, “ஏன் ஏதாவது என்னிடம் சொல்லக் கூடாத பிரச்சனை இருக்கிறதா?” என்று கேட்டார்.

மணமகனைப் பார்க்கப் போவது தந்தைதான். எனவே அவரிடம் சில விஷயங்களைத் தெரிவித்தால் மாப்பிள்ளைத் தேர்வுக்கு உதவியாக இருக்கும் எனக் கூறி சமாளித்து அனுப்பினேன். நான் அழைத்தது போல் அந்தப் பெண்ணின் தந்தையும் ஓரிரு நாட்கள் கழித்து என்னைச் சந்தித்தார்.

அப்போது அவரது மகளின் தற்போதைய ஜாதக நிலையைக் கொண்டு பார்க்கும் போது 2 திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதையும், அதனைத் தவிர்க்க வேண்டும் என விரும்பினால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைப் பரிகாரங்களையும் கூறினேன். அதாவது வசதியான குடும்பத்தில் உள்ள அந்தப் பெண்ணுக்கு வசதி குறைந்த இடத்தில் மாப்பிள்ளை பார்த்தால் பரிகாரமாக அமையும் என்றேன். அதனை அரைமனதுடன் அப்பெண்ணின் தந்தை ஏற்றுக் கொண்டார். இதே விஷயத்தை அந்தப் பெண்ணின் பாட்டியிடம் நான் கூறியிருந்தால் அவரது மனம் அதனைத் தாங்காது.

எனவே, அந்தக் காலத்தில் ஒளிவு மறைவாக இருந்த விடயங்கள் இன்று வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. அந்த வகையில் ஜோதிட பலன்களைக் கூறுதிலும் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. ஜாதகர் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அளிப்பதே ஜோதிடரின் கடமையாகும்.

மேஷம் விருச்சிகம் ராசி அன்பர்கள் இன்னும் ஒரே ஒரு மாதம் பொறுங்கள்

மேஷ விருச்சிக ராசி அன்பர்களே!

உங்களது ராசி அதிபதியான செவ்வாய் 60 ஆண்டுகளுக்குப்பிறகு, தொடர்ந்து எட்டு மாதங்களாக நீசமாகியிருக்கிறார்.7.10.2009 அன்று துவங்கிய இந்த நீசம் 15.5.2010 அன்றோடு நிறைவடைகிறது.இன்னும் சுமார் ஒருமாதம்தான் இருக்கிறது.இந்த எட்டு மாதங்களில் காரணமே இல்லாமல் அவமானப்பட்டிருப்பீர்கள்.தற்போது, பொறுமையிழக்கும்படியான சம்பவங்கள்,முக்கியமான விஷயங்களில் கவனக்குறைவு என்று உங்களின் தினசரி வாழ்க்கை பாதிப்பாகிக்கொண்டிருக்கும்.
இந்த நிலை 15.5.2010 வரை நீடிக்கும்.அதுவரை மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம்.
16.5.2010 முதல் நீங்கள் உங்களுடைய முக்கியப்பிரச்னைகளை கையிலெடுங்கள்.வெற்றி உங்களுக்கே!

செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்புப் புகைப்படங்கள்


அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா
சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன்
முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்களுக்கு முன்
செவ்வாய் கிரகத்திலிருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான
தெளிவான படங்களை வெளியிட்டு உள்ளனர் இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.

பல மில்லியன் டாலர் அளவு பணத்தை கிரகங்களைப்பற்றி
ஆராய்ச்சி செய்வதற்காக பயன்படுத்துகின்றனர். இதன் மூலம்
பல கிரகங்களைப்பற்றிய தகவல்களை அறிவியல் பூர்வமாக
தெளிவாக விளக்கியுள்ளனர். இதில் ஒரு பெரிய வேடிக்கை
என்னவென்றால் இவர்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து
செவ்வாய்கிரகம் சிவப்பு என்று அறிவித்தனர். ஆனால் பல
நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் வான்வெளியில்
உள்ள செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு என்று அறிவித்துள்ளனர்
( இடைக்காட்டு சித்தர் தன் நூலில் கிரகங்களை பற்றி மேலும்
சிறப்பாக கூறியுள்ளார் ஆராய்ச்சியாளர்கள் நேரம் இருந்தால்
எங்கும் செல்லாமல் கிரகங்களை பற்றிய அனைத்து விபரங்களையும்
இந்த நூலில் இருந்து பெறலாம் ). செவ்வாய் கிரகத்திலிருந்து
எடுக்கப்பட்ட சிறப்பு படங்களை நாசா வெளியிட்டுள்ளது. அதன்
படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

போலிச்சாமியார்கள் பிடிபடுவது தொடருமா? நன்றி:தமிழ் வெப்துனியா

ஆன்மிகவாதிகளின் வேஷத்தில் உள்ள போலி சாமியார்கள் பிடிபடுவது தொடருமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

இந்தியா முழுவதிலும் பிரபல ஆன்மிக குருக்களாகக் கருதப்பட்ட நித்யானந்தா, கல்கி ஆகியோர் சமீபத்தில் சிக்கினர். அவர்களின் காவிச்சாயமும் வெளுத்தது. இந்த நிலை தொடருமா? மேலும் பல போலி ஆன்மிகவாதிகளின் சாயம் வெளுக்குமா?

பதில்: ஆன்மிகத்திற்கு உரிய கிரகமாக குரு கருதப்படுகிறது. தற்போது குரு நீச்சம் அடைந்துள்ளதால் (கும்பத்தில்) போலி ஆன்மிகவாதிகள் பிடிபடும் நிலை தொடரும். கும்பம் சனியின் வீடாகும்.

வரும் மே 2ஆம் தேதி மீனத்திற்கு குரு பகவான் அதிசாரத்தில் பெயர்ச்சியாகிறார். குரு தனது சொந்த வீட்டிற்கு சென்றாலும், கன்னியில் உள்ள சனியின் நேரடிப் பார்வையில் இருப்பதால், போலி சாமியார்களுக்கு இது போதாத காலமாகவே இருக்கும். ஏனென்றால் போலிகளை உலகிற்கு உணர்த்துவதே சனியின் கடமை.

வரும் 2011 மே மாதம் வரை போலிச் சாமியார்கள் பிடிபடுவது தொடரும். ஒரு குறிப்பிட்ட மதத்தில் உள்ள போலிச் சாமியர்கள் மட்டுமின்றி மத வேறுபாடின்றி இந்த நிகழ்வு தொடரும். (சமீபத்தில் கேரளாவில் உள்ள போலி மதபோதகர் பிடிபட்டார்). எனவே, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த பலரின் முகத்திரை கிழியும் என்பதில் சந்தேகமில்லை.

ராஜகிரகங்கள் என்றழைக்கப்படும் குருவும், சனியும் ஆன்மிகம் தழைத்தோங்கச் செய்யும் கிரகங்களாக கருதப்படுகின்றன. இதில், யோகம், நிஷ்டை, தியானம் ஆகியவற்றில் ஒருவரை ஈடுபடச் செய்வது சனி பகவான். ஒருவரது ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அவரால் புலன்களை அடக்கியாள முடியும்.
பேராசையைப் போக்க நினைத்தால் அதன் தாயாகிய
ஆடம்பர குணத்தை ஒழிக்க வேண்டும்.
******
வெறும் கைகள் என்பது மூடத்தனம்.
பத்து விரல்கள் என்பது மூலதனம்.
******
பிறரை முகஸ்துதி செய்பவன் அவன்
கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
******
நீங்கள் கோபம் கொண்டாலும்
பாவம் செய்யாதிருங்கள்.
******
கோபம் முட்டாள்தனத்தில் தொடங்கி
தவறுக்கு வருந்துவதில் போய் முடிகிறது.
******
யார் மீது அதிக அன்பும் நம்பிக்கையும் கொள்கிறோமோ,
அவர்களிடம் தான் அடிக்கடி சினமும் கொள்கிறோம்.
சினம் என்பது தலை கீழான அன்பு.
******
என்னிடம் உதவி பெற்றவன்,அதை மறந்தால்
அது அவன் குற்றம்.ஆனால்
நான் உதவி செய்யா விட்டால்
அது என் குற்றம்.
******
நம் தந்தை சொன்னதெல்லாம் சரிதான்
என்று நாம் உணருகின்ற காலத்தில்
'நீ சொல்வதெல்லாம் தவறு'
என்று சொல்ல நமக்கொரு மகன்
பிறந்து விடுகிறான்.
******
எங்கு யாரிடம் எந்தத் தவறைக் கண்டாலும்
அதை உன்னிடம் நீ திருத்திக்கொள்.
******
திறமை என்பது ஒருவனை உயரே கொண்டு போகும்.
நல்ல குணம் தான் அவனை கீழே விழாமல் பாது காக்கும்.
******
ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டு பிடிக்கிறாய்.
செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டு பிடிக்கிறாய்.
******
தோற்று விட்டோமோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே,
நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
******
சுமப்பதெல்லாம் பாரமுமில்லை;
பாரமாக நினைப்பவை சுமைகளுமில்லை.
******
கெட்ட தந்தை கூடத் தன மகன் கெட்டவனாக
இருக்க விரும்புவதில்லை.
******
சோம்பேறிகளின் நாக்கு சோம்பேறித்தனமாய் இருப்பதில்லை.
******

நியுரோதெரபி சிகிச்சையால் குணமடைந்தவர்கள்1.திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் அதிகாரியின் கர்ப்பபை கட்டி(Utras fibraied)யை நியுரோதெரபி சிகிச்சை மூலம் கரைத்துவிட்டனர்.இப்போது அந்தப்பெண் அதிகாரி முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

2.நாகப்பட்டிணத்தில் 21 வயதுவரையிலும் பூப்படையாத ஒரு பெண்ணிற்கு நியுரோதெரபி சிகிச்சைமூலமாக, சிகிச்சையளித்த இரண்டே நாளில் பருவமடைந்தாள்.

3.திருச்சியைச் சேர்ந்த ஒரு நவரத்தினக்கல் ஆலோசகருக்கு நீண்ட நாட்களாக கைகளில் பெருவிரல்களுக்குக் கீழ் மணிக்கட்டில் மிகுந்த வலி இருந்தது.ஆங்கில மருத்துவத்தால் பலனில்லை.மணிக்கட்டில் ஊசி போட வேண்டும்.6 மாதத்திற்குப்பிறகு மீண்டும் வலி வரும்.மீண்டும் ஊசி போட வேண்டும் என்றனர்.அதற்கு அவர் ஒப்புக்கொள்ள வில்லை.10 நாட்கள் நியுரோதெரபி சிகிச்சையெடுத்ததும் அந்த வலி மறைந்தது.

குதிகாலில் நடக்கமுடியாமல் அதிக வலி இருந்தது.மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரைத்தனர்.நியுரோதெரபி சிகிச்சையை 20 நாட்கள் எடுத்ததும், வலி முற்றிலும் நீங்கி,நன்றாக நடக்க முடிகிறது.