RightClick

சுவாமி விவேகானந்தர் பற்றிய சில உண்மைகள்

சுவாமி விவேகானந்தர் பற்றிய சில உண்மைகள்

கொல்கத்தாவில் பிறந்து,பட்டதாரியாகிய நரேந்திரன் தனது இளைமைக்காலத்தில் நாத்திகராக இருந்தார்.யாரைப்பார்த்தாலும், ‘நீ கடவுளைப் பார்த்திருக்கிறாயா?’ எனக் கேட்பார்.ஆமாம் என பதில் வந்தால், எனக்குக் காட்டு அப்போதுதான் நான் நம்புவேன் என வாக்குவாதம் செய்வார்.அவரது வாக்குவாதம் தோற்றுப்போனது, தட்சிணேஸ்வரம் காளிகோவில் பூசாரி ராமகிருஷ்ணரிடம்தான்.

ராம கிருஷ்ணர், ‘உன்னை எப்படிப் பார்க்கிறேனோ,உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ; அதே போல கடவுளை உனக்கும் காட்டுகிறேன்’ என தைரியமாகச் சொல்லி,விவேகானந்தருக்கு கடவுளை நேரில் காட்டவும் செய்தார்.

விவேகானந்தருக்கு ஞானம் வழங்கியது அவரது அம்மா புவனேஸ்வரியம்மாள். “எனக்கு ஞானம் என்று ஏதாவது இருக்குமானால் அதற்காக என் அம்மாவுக்குத்தான் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என ஒரு முறை கூறியுள்ளார்.

‘உடலைப் பலமாக வைத்துக்கொண்டால்தான் உள்ளமும் பலமாக இருக்கும்’ என அடிக்கடி சொல்லுவார் சுவாமி விவேகானந்தர்.(நமது தெரு,வீடு,அலுவலகம்,நட்பு வட்டத்தில் ஏன் புறங்கூறுவது ஒரு பழக்கமாக இருக்கிறது? பலவீனமான உள்ளம் தான் பிறரது சாதாரண சாதனைகளையும் பார்த்து,அவர்களை பிறரிடம் மட்டம் தட்டும்.தானும் அதே சாதாரண சாதனையைச் செய்ய முயலாது.)
(இன்று காமம் மிகவும் மலிவாக எங்கும் கிடைக்கிறது.மெமரிக்கார்டுகளில்,இணைய தளங்களில்,கணினிகளில்,வெளிநாட்டுச் சேனல்களில். . . இவை அனைத்தும் இளைஞர்,இளம்பெண்களின் வாலிபத்தை நாசமாக்க முயலும் நச்சுக்கள்.உடல் வலிமையை நாம் இழக்கும்போது,மன வலிமையையும் இழந்துவிடுகிறோம்.காம சுகம் ரொம்ப சாதாரணமானது.அதை செய்யும் போதும்,செய்த பின்பும் அது ரொம்ப சாதாரணமானது என்பதை உணர்கிறோம்.இருந்தும் ஏன் காமக் காட்சிகளைத் திரும்பத்திரும்ப பார்க்கத் துடிக்கிறோம்? யோசியுங்கள்)

சுவாமி விவேகானந்தர்,அகில பாரத அளவில் பிரபலமானது நமது சென்னையிலிருந்துதான்.அதுவும் எப்படி? ‘இங்கிலீஷ் பேசும் இந்துச்சாமியார்’ என்ற பெயரில் (ஆகா! என்ன ஒரு ஆங்கில அடிமைத்தனம்)
இவரிடம் மைசூர் மகாராஜா,
“நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்.அப்படிப் பேசினால் யாராவது உங்களை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள்” என எச்சரித்தார்.அதற்கு சுவாமி விவேகானந்தர்,
“நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்?” என திருப்பிக் கேட்டார்.

இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டன் அரசாங்கத்தை,பிரிட்டனின் அரசாங்கக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தார்.குறிப்பாக,மெக்காலே கல்வித் திட்டத்தை நிறுத்திட, சுவாமி விவேகானந்தர் போராடினார்.
“கிறிஸ்தவ அரசாங்கம் என்னைக் கைது செய்து, சுட்டுக் கொல்லட்டும்” என வெளிப்படையாக கோரிக்கை வைத்தார்.

இங்கிலாந்து இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு சீனாவால் நமக்கு பேராபத்து ஏற்படும் என சுவாமி விவேகானந்தர் நூறாண்டுக்கு முன்பே கணித்திருந்தார்.

சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் பிரபலமடைந்த போது,கிறிஸ்தவ மத வெறியர்களால் அதைத் தாங்க முடியவில்லை.மும்பையில் பிறந்து படிப்பில் சுட்டியாக இருந்த ஒரு இந்துப்பெண்ணை கிறிஸ்தவப்பெண்ணாக மதம்மாற்றி,விவேகானந்தரைப்பற்றி அவதூறாகப் பேசவைத்தனர்.(அமெரிக்காவில்).அதற்கு சுவாமி விவேகானந்தர் சிறு ரியாக்சனும் காட்டவில்லை.இன்று, சுவாமிஜி அட்லாண்டாவில் பேசிவிட்டு, நாளை ஒட்டாவாவில் பேசுகிறார் எனில், நாளை அட்லாண்டாவில் அந்த கிறிஸ்தவப்பெண்ணைப் பேச வைத்தனர்.இப்படி, அமெரிக்கா முழுக்கவும் சுவாமிஜியைப் பற்றி அவதூறாகப்பேச வைத்தனர்.
(ஆக,கி.பி.1000 முதல் இன்றைய கி.பி.2010 வரையிலும் அமெரிக்கா,இங்கிலாந்து,பாகிஸ்தான்,சீனா,ரஷ்யா,வளைகுடா நாடுகள்,ஆஸ்திரேலியா,இத்தாலி உள்பட உலகின் அனைத்து நாடுகளும் தத்தம் மதக்கண்ணோட்டத்துடன் தனது அரசியல் வியூகத்தை வகுக்கின்றன.இந்துக்களின் தாய்நாடாகிய நாம் இந்தியா மட்டுமே இந்துக்கண்ணோட்டத்துடன் செயல்படுவதில்லை.என்ன்ன்னக் கொடுமை சார் இது.?)இந்தத் தகவல்களை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.ஆக, இந்துக்களாகிய நாம்,இந்து உணர்வு பெற்றால்,இந்த பூமியில் மத வெறி அழிந்துவிடும்.)

“ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ,சமயத்திலோ எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது”

“முதலில் உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.அதன் பிறகு,ஆண்டவனை நம்புங்கள்.உணர்வதற்கு இதயமும்,எண்ணுவதற்கு அறிவும்,உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும்.இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால், இதயத்தைப் பின்பற்றி நடங்கள்”

ஆன்மீகக்கடல் வாசகர்களே! நீங்கள் சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட வேண்டுமா? சுவாமி விவேகானந்தரின் ‘கர்ம யோகம்’ என்ற நூலை சுமார் 50 முறை வாசியுங்கள்.
முதல்முறை வாசிக்கும்போது உங்களை கவரும் வரிகளை கோடு போட்டுக்கொள்ளுங்கள்.இரண்டாவது முறை வாசிக்கும்போது,நீங்கள் முதல் முறை கோடு போட்டீர்களே அதை மட்டும் வாசியுங்கள்.
மூன்றாவது முறை வாசிக்கும்போது நீங்கள் சிந்திக்கத் துவங்குவீர்கள்.இன்றைய அரசியல் கட்சிகள் நம்மை எப்படி ஏமாற்றிவருகின்றன? என்பதை உணருவீர்கள்.
எப்போதெல்லாம் உங்களுக்குள் சோகம் உருவாகிறதோ,அப்போதெல்லாம் நீங்கள் கர்ம யோகம் வாசியுங்கள்.
எப்போதெல்லாம் உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் கர்ம யோகத்தில் மூழ்குங்கள்.
நீங்கள் விரைவில் விவேகானந்தர் ஆவீர்கள்.இது எனது அனுபவ உண்மை.