சாப்பிடுவதற்கும் லஞ்சம் வேண்டாம்
குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து வளர்ப்பதால்தான் அவர்கள் கெட்ட பழக்க வழக்கத்துடன் வளர்கிறார்கள்.
எந்த இடத்தில் செல்லம் கொடுக்க வேண்டுமோ, எந்த இடத்தில் கண்டிப்புடன் இருக்க வேண்டுமோ அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு.
அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும்.
நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.
நன்றி:தமிழ் வெப்துனியா 14.3.2010