RightClick

பொதுவான ஜோதிடப்பலன்கள் 2010:பாகம் 1


பொதுவான ஜோதிடப்பலன்கள்:2010 பாகம் 1

.
நாம் இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவை வாசிக்கும் இந்த அறையில் செல்போன் நிறுவனங்களின் (பி.எஸ்.என்.எல்., டாடா, ரிலையன்ஸ்,ஏர்செல்,ஏர்டெல்,ஓடபோன்,ஐடியா,டோகோமோ) செல்போன் அலைகள் இருப்பதால்தானே நமது செல்போன்கள் இயங்குகின்றன.அந்த செல்போன் அலைகள் இருப்பதைப் பார்த்தால்தான் நான் நம்புவேன் என்றால் அது எவ்வளவு பெரிய்ய முட்டாள்த்தனம்! அதுபோலத்தான் கடவுளைப் பார்த்தால்தான் நான் நம்புவேன் என அடம்பிடிப்பதும்!அப்படி கடவுளைப் பார்க்க விரும்புபவர்கள் அதற்கு மனரீதியாகத் தயாராக வேண்டும்.எப்படித் தெரியுமா? உங்களின் காதலியின் வருகைக்கு இன்னும் ஐந்து நிமிடம் இருக்கும்போது எப்படிப் பட்ட மனநிலையில் இருப்பீர்கள்.அப்படி! அப்படி இருந்தால் மட்டுமே சில காலத்திற்குள் நீங்கள் கடவுளை நேரில் சந்தித்து விடுவீர்கள்.அதற்குரிய தியானம் அல்லது மந்திர ஜபம் அல்லது நீங்கள் சந்திக்க விரும்பும் கடவுளின் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து ஜபித்துவரவேண்டும்.
சங்கீத மேதை தியாகராஜர் தனது வாழ்நாளில் தன்னையறியாமல் 96 கோடிதடவை ராம் என்ற மந்திரத்தை ஜபித்துவந்தார்.அதனால்,நாம் நமது வீடுகளில் இருக்கும் போட்டோக்களில் பார்த்திருப்போமே! ஸ்ரீராமர்,ஸ்ரீசீதா,ஸ்ரீலட்சுமணன் என்ற இளையபெருமாள்,அனுமன் சகிதமாக அவருக்கு நேரடியாகக் காட்சியளித்தார்.இந்த சம்பவம் நிகழ்ந்து வெறும் 200 ஆண்டுகள் தான் ஆகிறது.ஆக,இந்துமதத்தின் நேரடிப் பிரதிநிதிகளாக ஜோதிடர்கள் இருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயம் தான்.நான் ஒரு அனுபவம் மிக்க ஜோதிடர் என்பதில் பெருமை கொண்டு இந்த ஜோதிடப்பலன்களை உங்களுக்கு உரைக்கிறேன்:ஜோதிடத்தில் வருடக்கிரகங்கள் எனப்படும் குரு,சனி,இராகு,கேது இவைகளின் இயக்கமே பூமியில் மனிதர்கள்,நகரங்கள்,மாநிலங்கள் நாடுகள்,கண்டங்களின் விதியை நிர்ணயிக்கின்றன.

தற்போது கன்னிராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.சனிக்கு மந்தன் என்ற பெயர் உண்டு.ஒரு ராசியை சனி கடப்பதற்கு 900 நாட்கள் ஆகிறது.இதை 30 மாதங்கள் என்றும் இரண்டரை ஆண்டுகள் என்றும் சொல்லலாம்.26.6.2009 முதல் 11.12.2011 வரை கன்னியில் சனி இருப்பார்.இந்த கன்னிச்சனியானவர் கன்னி ராசிக்கு ஜன்மச்சனியையும், கும்ப ராசிக்கு அஷ்டமச்சனியையும் தருகிறார்.


இதனால், உத்திரம் நட்சத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அஸ்தம் நட்சத்திரம் 4 பாதங்கள், சித்திரை நட்சத்திரம் 1,2 ஆம் பாதங்களை உள்ளடக்கிய கன்னி ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியில் முக்கிய பாகமான ஜன்மச்சனி நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இதன் படி, கன்னிராசிக்காரர்களுக்கு எந்த ஒரு வேலையும் சட்டென முடியாது.எங்கு போனாலும் இவர்களை கன்னி ராசிக்காரர்களை உதாசீனப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.இவர்கள் இந்த இரண்டரை ஆண்டுகளுக்கு யாரிடமாவது ஏமாற வேண்டும்;அல்லது யாரையாவது ஏமாற்ற வேண்டும். இவர்களுக்கு நிரந்தர வேலை அமைவது சந்தேகமே! அப்படி ஒருவேளை அமைந்துவிட்டால்,31.12.2010 வரை மட்டுமாவது இவர்கள் கொத்தடிமையாக வேலை பார்க்க வேண்டும்.வேலை பார்த்த இடத்தில் இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு மட்டும் சம்பளம் சரியான தேதியில் தரமாட்டார்கள்; அல்லது முழுச்சம்பளம் வாங்க முடியாது;அல்லது சம்பளமே கிடைக்காது; அல்லது சம்பளம் வாங்காமலேயே வேறு நிறுவனத்திற்கு வேலை மாறிவிடுவார்.பல சமயங்களில் இந்த ஓராண்டில் 31.12.2010க்குள் நாமெல்லாம் ஏன் உயிர் வாழணும்? என்ற அளவிற்கு விரக்தி வரும்.அந்த அளவிற்கு ஜன்மச்சனி கன்னிராசிக்காரர்களைப் பாடாய்படுத்தும்.அதே சமயம்,நமது சுபாவத்தைப் பக்குவப்படுத்தும்.
இதே மனநிலையை கும்பராசியில் பிறந்த அவிட்டம் நட்சத்திரம் 3,4 ஆம் பாதம்,சதயம் நட்சத்திரம் 4 பாதங்கள்,பூரட்டாதி 1,2,3 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் தரும்.
11.12.2011 வரை ஜன்மச்சனி இருந்தாலும், டிசம்பர் 2010 இல் குருப்பெயர்ச்சியாகி, மீன ராசிக்கு செல்வதால், டிசம்பர் 2010 முதல் கன்னிராசி மற்றும் கும்ப ராசிக்காரர்கள் குருவின் அருளால் இதுவரை சொன்ன கஷ்டங்களை 11.12.2011 வரை அனுபவிப்பதற்குப்பதிலாக, டிசம்பர் 2010 வரை மட்டுமே அனுபவிப்பார்கள்.
பெரும்பாலான, கன்னி மற்றும் கும்ப ராசியில் பிறந்த புதுமணப்பெண்கள், திருமணமான 5 ஆண்டுகளுக்குள் இருக்கும் இல்லத்தரசிகள் ஒரு முறையாவது தற்கொலைக்கு முயற்சிப்பார்கள்.இதுவும் ஜன்மச்சனியின் வேலைதான்.
கன்னிராசிக்காரர்களில் 27 வயதுக்குள் இருக்கும் ஆண்கள் பெண்களில் பலருக்கு இராகு மகா திசை நடைபெற்றுக்கொண்டிருக்கும்.அப்படி இராகு மகாதிசையும் ஜன்மச்சனியும் நடப்பவர்கள் காமரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளாகி,அதனால்,அவமானம் தாங்காமல்தான் தற்கொலைக்கு முயலுவார்கள்.இப்படி தற்கொலைக்கு முயலுவதற்கும் ஜன்மச்சனியே காரணம் ஆகும்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில், ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயிப்பது சனி பகவானே! அப்படிப்பட்ட சனியே ஒருவரை தற்கொலைமூலமாக கொன்றுவிட்டால் பிறகு எப்படி கன்னிராசிக்காரர்களை சித்திரவதை செய்வதாம்?
அதனால், தற்கொலை முயற்சியோடு விட்டுவிட்டு ஆகஸ்டு 2014 வரை அதாவது கன்னி ராசிக்கு ஏழரைச்சனி முடியும் வரை கொஞ்சம் கொஞ்சமாக பாடாய்படுத்துவது சனியின் ஸ்டைல் ஆகும்.
ஜன்மச்சனியை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் வேதனையும் வலியும் தெரியும்.வேறு எவராலும் அந்த உணர்வை உணர முடியாது.