RightClick

வெளிநாட்டு பல்கலைகளுக்கு அனுமதி வீண்: நோபல் ராமகிருஷ்ணன் பேட்டி

வெளிநாட்டு பல்கலைகளுக்கு அனுமதி வீண்: நோபல் ராமகிருஷ்ணன் பேட்டிலண்டன்:இந்தியாவில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படுவதால் பெரிய பலன் ஏதும் ஏற்படாது என, நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். லண்டனில் நிருபர்களிடம் ராமகிருஷ்ணன் கூறியதாவது:வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியா உள்ளிட்ட இடங்களில் பல்கலைக்கழகத்தை அமைக்க முன் வருவதன் முக்கிய நோக்கம் வர்த்தகம் தான். வெளிநாடுகளில் அமைக்கப்படும் இது போன்ற பல்கலைக் கழகங்களால் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் போன்றவை மற்ற இடங்களில் துவக்கப்பட்டாலும் அதன் தனித்துவம் கிடைக்காது.இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டால், ஆசிரியர்களுக்கு சர்வதேச தரத்தில் சம்பளம் கிடைக்கும். இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகளுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.இந்திய அரசு அறிவித்துள்ள பத்ம விபூஷண் விருதை பெற ஆவலுடன் காத்திருக்கிறேன். நோபல் பரிசு பெற்றதன் மூலம் தான் என்னை உலகம் அடையாளம் கண்டு கொண்டது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் இந்தியாவிலிருந்து எனக்கு இ-மெயில் மூலம் பாராட்டுக்கள் குவிந்தன. இந்த பாராட்டால் உண்மையில் பீதியடைந்து விட்டேன். என்னுடைய தினசரி வாழ்க்கையை இந்த கடிதங்கள் பாதித்ததால் எரிச்சலடைந்தேன். என்னிடமிருந்து எந்த அறிவுரையையும் இந்தியர்கள் எதிர்பார்ப்பதாக நான் கருதவில்லை.கடந்த 2002ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் செல்வேன். மூன்று வார காலம் அங்கு தங்கியிருப்பேன். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட கல்வி நிலையங்களில் உரையாற்றுவேன்.இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.

நன்றி:தமிழ் வெப்துனியா 31.3.2010

நியுரோதெரபி சிகிச்சை என்றால் என்ன?

நியுரோதெரபியின் சிகிச்சை முறை என்ன?

இயற்கைக்குப் புறம்பான வாழ்க்கை முறையாலும்,மாறுபட்ட உணவுப்பழக்கவழக்கத்தாலும்,காலம் தவறிய உணவுமுறைகளாலும் நோயை நாமே உடம்பிற்குள் உற்பத்தி செய்துகொள்கிறோம்.

நோய்க்குத் தகுந்த உடல் உறுப்புக்களைக் கண்டறிந்து,அதன் நரம்பு மற்றும் ரத்த நாளங்களைத் தூண்டி விடுவதன்மூலம் உடலின் ஆற்றலை மீட்டுத் தரச் செய்வதே நியூரோதெரபியின் சிறப்புக்குறிக்கோளாகும்.

உங்கள் உடலே உங்களுக்கு மருந்து என்ற வாக்கியத்தின்படி நியூரோதெரபி சிகிச்சையில் அழுத்தம் உடலுக்குத் தரப்படுகிறது.இந்த சிகிச்சையில் உடலில் உயிர் ரசாயன ஆற்றலை நிலைப்படுத்தி நோய் முற்றிலும் நீக்கப்படுகிறது.

நோய் வருவதற்கான காரணிகள்:

உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகவும் அல்லது குறைவாகவும் சுரப்பதால் நோய் உண்டாகிறது.

வயிறு செரிக்காமை (சரியான நேரத்தில் சாப்பிடாதது, கண்டதையும் சாப்பிடுவது)

வாத,பித்தம் சமன்பாடு இல்லாமை (சித்த வைத்தியத்தின் ஆதாரக்கொள்கையே இதுதான்)

நோய்த் தொற்று,நோய் அழற்சி,வீக்கம்(Infection,inflammation)

நியுரோதெரபி மூலம் குணமாக்கப்படும் நோய்கள்:

அலர்ஜி,அல்சர்,கண் நோய்கள்,
ஆஸ்துமா, மூட்டுவலி எனப்படும் ஆர்த்ரைடீஸ்
இதய நோய், ஊளைச்சதை(எடை குறைத்தல்)
சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு
புற்றுநோய்,திக்குவாய்,சிறுநீரகக் கோளாறுகள்
மன அழுத்தம்,போலிக் ஆசிட் குறைபாடு
உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம்
தூக்கமின்மை எனப்படும் இன்சோமியா,ஆட்டிசம் எனப்படும் மூளை மற்றும் நரம்பியல் குறைபாடு
வலிப்பு,கல்லீரல் நோய்கள்,பக்கவாதம்,மூல நோய்
பெண்களின் கர்ப்பப்பை பிரச்னை மற்றும் மாத விடாய் பிரச்னைகள்
குழந்தையின்மை

நியூரோதெரபியால் எந்த வித மாத்திரை,மருந்துகளும் தரப்படுவதில்லை.நோய் நிரந்தரமாகக் குணமடைகிறது.பின்விளைவு,பக்க விளைவு இல்லை.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற சிகிச்சை முறையாகும். மேலும் விபரங்களுக்கு www.dlmnt.org
டாக்டர் பா.விஜய் ஆனந்த் அவர்களின் மின் அஞ்சல் முகவரி:neurovijay@gmail.com

மருந்தில்லாத,பக்கவிளைவுகளற்ற மருத்துவமுறை நியூரோதெரபி

இந்துமதத்தின் பாரம்பரிய வைத்தியமுறைகளில் ஒன்று நியூரோதெரபி ஆகும்.இது ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது.இதை நவீன்ப்படுத்தியவர் டாக்டர்.லஜ்பத்ராய் மெஹ்ரா ஆவார்.

இவர் கி.பி.1923 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார்.சிறுவயதிலிருந்தே இவருக்கு இயற்கை வைத்தியத்தில் ஆர்வம் இருந்தது.அவரது 11 ஆம் வயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அவரை நியூரோதெரபியைக் கண்டுபிடிக்க உதவியது.

லஜ்பதி மெஹ்ராவின் 11 ஆம் வயதில் வயிற்றுவலியால் அவதிப்பட்டார்.அவரது ஊரில் வயதான பெண்மணி, “உனக்கு நாபி(தொப்பூள்)ப்பகுதி உறுப்பு சரியாக வேலை செய்யவில்லை”என்றார்.இதை அந்தப்பெண்மணி நமது பாரம்பரிய முறையான வர்மக்கலை முறையில் லஜ்பதி மெஹ்ராவுக்குச் சிகிச்சையளித்தார். உடனே,அந்த பெண்மணியின் வர்ம சிகிச்சையால் வயிற்றுவலி சரியானது.


அதிலிருந்து லஜ்பதி மெஹ்ராவுக்கு வர்மக்கலையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.அனைவருக்கும் தனது வர்மக்கலையால் வயிற்றுவலி,முதுகுவலி,கை கால் வலி இவைகளைச் சரி செய்தார். பின்னர், மும்பை வந்து வீட்டிலேயே வர்மக்கலையை செய்துவந்தார்.

பல லட்சம் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார்.மும்பை வந்த அவர் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டு, செட்டில் ஆனார்.பின்னர் வர்மக்கலை சிகிச்சைக்கு நியூரோ தெரபி என பெயர் சூட்டினார்.

கி.பி.1965 முதல் முழுநேர நியூரோதெரபி மருத்துவம் செய்துவந்தார்.
கி.பி.1982 இல் மும்பையில் மாந்ரா பகுதியில் மருத்துவமனை ஆரம்பித்தார்.

கி.பி.1992 இல் மும்பையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூர்யமால் என்ற ஆதிவாசி மலைப்பகுதியில் நியூரோதெரபி அகாடமி துவங்கினார்.நாடு முழுவதும் உள்ள சேவாபாரதி அமைப்பு குருஜியிடம் தொடர்பு கொண்டு நியூரோதெரபி கற்றுக்கொண்டு ,நியூரோ தெரபி இந்தியா முழுவதும் பரவிவருகிறது.

கி.பி.2007 ஆம் ஆண்டில் மத்தியப்பிரதேச அரசாங்கம் நியூரோதெரபியை அங்கீகாரம் செய்து கிராம சுகாதார நிலையங்களில் நியூரோதெரபிஸ்டுகளைப் பணியமர்த்தியுள்ளது.ஆங்கில மருந்து,மாத்திரைகளைக் குறைத்து நியூரோதெரபி சிகிச்சையளித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல நியூரோ தெரபிஸ்டுகள் சேவையாற்றி வருகின்றனர்.
நன்றி: உங்கள் உடலே உங்களுக்கு மருந்து நியூரோதெரபி (மருந்தில்லா மருத்துவம்) எழுதியவர் டாக்டர்.லஜ்பதி மெஹ்ராஜி,மும்பை.தமிழில் டாக்டர் பா.விஜய் ஆனந்த்,திருச்சி.

லட்சியங்கள் நனவாக்கிட உதவும் 20/20

நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்; லட்சியங்கள் நனவாகும்.

அதற்கு என்ன செய்யலாம்?

பயனுள்ள 20 டிப்ஸ் :

1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்' என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்' ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.

2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.

3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.

4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!

5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.

6. ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்.

7. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.

8. வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மையான பாதை அல்ல. அங்கே ரோஜாவும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந்தோஷப்படலாம். அதன் முள் குத்தினால், அங்கேயே இருந்து விடக்கூடாது. அதை எறிந்துவிட்டு லட்சியபாதையில் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

9. காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.

10. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக - மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.

11. பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லிவிடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.

12. பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் - மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்...

13. வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்துவிடக்கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப்பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு மல்லிகைபூவையும், கூடவே ஸ்வீட்டைம் வாங்கி வந்து கொடுப்பது மனைவியை ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.

14. குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்கபடுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப்பார்கள்.

15. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங்களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

16. வருடத்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.

17. வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.

18. உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.

19. அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

20. தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்தமாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.

நன்றி:www.winmani.wordpress.com

சுவாமி விவேகானந்தர் பற்றிய சில உண்மைகள்

சுவாமி விவேகானந்தர் பற்றிய சில உண்மைகள்

கொல்கத்தாவில் பிறந்து,பட்டதாரியாகிய நரேந்திரன் தனது இளைமைக்காலத்தில் நாத்திகராக இருந்தார்.யாரைப்பார்த்தாலும், ‘நீ கடவுளைப் பார்த்திருக்கிறாயா?’ எனக் கேட்பார்.ஆமாம் என பதில் வந்தால், எனக்குக் காட்டு அப்போதுதான் நான் நம்புவேன் என வாக்குவாதம் செய்வார்.அவரது வாக்குவாதம் தோற்றுப்போனது, தட்சிணேஸ்வரம் காளிகோவில் பூசாரி ராமகிருஷ்ணரிடம்தான்.

ராம கிருஷ்ணர், ‘உன்னை எப்படிப் பார்க்கிறேனோ,உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ; அதே போல கடவுளை உனக்கும் காட்டுகிறேன்’ என தைரியமாகச் சொல்லி,விவேகானந்தருக்கு கடவுளை நேரில் காட்டவும் செய்தார்.

விவேகானந்தருக்கு ஞானம் வழங்கியது அவரது அம்மா புவனேஸ்வரியம்மாள். “எனக்கு ஞானம் என்று ஏதாவது இருக்குமானால் அதற்காக என் அம்மாவுக்குத்தான் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என ஒரு முறை கூறியுள்ளார்.

‘உடலைப் பலமாக வைத்துக்கொண்டால்தான் உள்ளமும் பலமாக இருக்கும்’ என அடிக்கடி சொல்லுவார் சுவாமி விவேகானந்தர்.(நமது தெரு,வீடு,அலுவலகம்,நட்பு வட்டத்தில் ஏன் புறங்கூறுவது ஒரு பழக்கமாக இருக்கிறது? பலவீனமான உள்ளம் தான் பிறரது சாதாரண சாதனைகளையும் பார்த்து,அவர்களை பிறரிடம் மட்டம் தட்டும்.தானும் அதே சாதாரண சாதனையைச் செய்ய முயலாது.)
(இன்று காமம் மிகவும் மலிவாக எங்கும் கிடைக்கிறது.மெமரிக்கார்டுகளில்,இணைய தளங்களில்,கணினிகளில்,வெளிநாட்டுச் சேனல்களில். . . இவை அனைத்தும் இளைஞர்,இளம்பெண்களின் வாலிபத்தை நாசமாக்க முயலும் நச்சுக்கள்.உடல் வலிமையை நாம் இழக்கும்போது,மன வலிமையையும் இழந்துவிடுகிறோம்.காம சுகம் ரொம்ப சாதாரணமானது.அதை செய்யும் போதும்,செய்த பின்பும் அது ரொம்ப சாதாரணமானது என்பதை உணர்கிறோம்.இருந்தும் ஏன் காமக் காட்சிகளைத் திரும்பத்திரும்ப பார்க்கத் துடிக்கிறோம்? யோசியுங்கள்)

சுவாமி விவேகானந்தர்,அகில பாரத அளவில் பிரபலமானது நமது சென்னையிலிருந்துதான்.அதுவும் எப்படி? ‘இங்கிலீஷ் பேசும் இந்துச்சாமியார்’ என்ற பெயரில் (ஆகா! என்ன ஒரு ஆங்கில அடிமைத்தனம்)
இவரிடம் மைசூர் மகாராஜா,
“நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்.அப்படிப் பேசினால் யாராவது உங்களை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள்” என எச்சரித்தார்.அதற்கு சுவாமி விவேகானந்தர்,
“நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்?” என திருப்பிக் கேட்டார்.

இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டன் அரசாங்கத்தை,பிரிட்டனின் அரசாங்கக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தார்.குறிப்பாக,மெக்காலே கல்வித் திட்டத்தை நிறுத்திட, சுவாமி விவேகானந்தர் போராடினார்.
“கிறிஸ்தவ அரசாங்கம் என்னைக் கைது செய்து, சுட்டுக் கொல்லட்டும்” என வெளிப்படையாக கோரிக்கை வைத்தார்.

இங்கிலாந்து இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு சீனாவால் நமக்கு பேராபத்து ஏற்படும் என சுவாமி விவேகானந்தர் நூறாண்டுக்கு முன்பே கணித்திருந்தார்.

சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் பிரபலமடைந்த போது,கிறிஸ்தவ மத வெறியர்களால் அதைத் தாங்க முடியவில்லை.மும்பையில் பிறந்து படிப்பில் சுட்டியாக இருந்த ஒரு இந்துப்பெண்ணை கிறிஸ்தவப்பெண்ணாக மதம்மாற்றி,விவேகானந்தரைப்பற்றி அவதூறாகப் பேசவைத்தனர்.(அமெரிக்காவில்).அதற்கு சுவாமி விவேகானந்தர் சிறு ரியாக்சனும் காட்டவில்லை.இன்று, சுவாமிஜி அட்லாண்டாவில் பேசிவிட்டு, நாளை ஒட்டாவாவில் பேசுகிறார் எனில், நாளை அட்லாண்டாவில் அந்த கிறிஸ்தவப்பெண்ணைப் பேச வைத்தனர்.இப்படி, அமெரிக்கா முழுக்கவும் சுவாமிஜியைப் பற்றி அவதூறாகப்பேச வைத்தனர்.
(ஆக,கி.பி.1000 முதல் இன்றைய கி.பி.2010 வரையிலும் அமெரிக்கா,இங்கிலாந்து,பாகிஸ்தான்,சீனா,ரஷ்யா,வளைகுடா நாடுகள்,ஆஸ்திரேலியா,இத்தாலி உள்பட உலகின் அனைத்து நாடுகளும் தத்தம் மதக்கண்ணோட்டத்துடன் தனது அரசியல் வியூகத்தை வகுக்கின்றன.இந்துக்களின் தாய்நாடாகிய நாம் இந்தியா மட்டுமே இந்துக்கண்ணோட்டத்துடன் செயல்படுவதில்லை.என்ன்ன்னக் கொடுமை சார் இது.?)இந்தத் தகவல்களை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.ஆக, இந்துக்களாகிய நாம்,இந்து உணர்வு பெற்றால்,இந்த பூமியில் மத வெறி அழிந்துவிடும்.)

“ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ,சமயத்திலோ எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது”

“முதலில் உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.அதன் பிறகு,ஆண்டவனை நம்புங்கள்.உணர்வதற்கு இதயமும்,எண்ணுவதற்கு அறிவும்,உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும்.இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால், இதயத்தைப் பின்பற்றி நடங்கள்”

ஆன்மீகக்கடல் வாசகர்களே! நீங்கள் சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட வேண்டுமா? சுவாமி விவேகானந்தரின் ‘கர்ம யோகம்’ என்ற நூலை சுமார் 50 முறை வாசியுங்கள்.
முதல்முறை வாசிக்கும்போது உங்களை கவரும் வரிகளை கோடு போட்டுக்கொள்ளுங்கள்.இரண்டாவது முறை வாசிக்கும்போது,நீங்கள் முதல் முறை கோடு போட்டீர்களே அதை மட்டும் வாசியுங்கள்.
மூன்றாவது முறை வாசிக்கும்போது நீங்கள் சிந்திக்கத் துவங்குவீர்கள்.இன்றைய அரசியல் கட்சிகள் நம்மை எப்படி ஏமாற்றிவருகின்றன? என்பதை உணருவீர்கள்.
எப்போதெல்லாம் உங்களுக்குள் சோகம் உருவாகிறதோ,அப்போதெல்லாம் நீங்கள் கர்ம யோகம் வாசியுங்கள்.
எப்போதெல்லாம் உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் கர்ம யோகத்தில் மூழ்குங்கள்.
நீங்கள் விரைவில் விவேகானந்தர் ஆவீர்கள்.இது எனது அனுபவ உண்மை.

தாய் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள தமிழில் பேசுங்கள்
இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.
ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணணி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது.
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனிஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்..

வி.சபேசன்
இன்றைய இந்திய இளைஞனின் தேசபக்தி:கவிதையாக

படித்த இளைஞனே!
வா!

படித்து விட்டாயா?

வந்தவுடன் என்ன அவசரம்?

ஜார்ஜ் புஷ் உன் கனவில் வருகிறாரா?

பில் கேட்ஸ் உன் முன் மாதிரியா?

சரி நீ!

இந்திய இளைஞனே தான்!

இந்தியாவை விட்டுப்

போய் விட வேண்டும் என்ற எண்ணம்

இந்திய இளைஞனைத் தவிர

எந்த இளைஞனுக்கும் வராது!

உன் அதிகபட்ச இலட்சியம்

ஆறாயிரம் மைல்கள் தாண்டிய

அமெரிக்கா!

உன் குறைந்தபட்சஇலட்சியம்

இரண்டாயிரம் மைல்கள் தாண்டிய

அரேபியா!

வயிற்றை

இந்தியாவில் நிரப்பிக் கொண்டு

மூளையை

அயல் நாட்டில் விற்கப் போகிறாய்!

உன்னை

இந்தியப் புழு என்றால்

அழுவாய்!

அமெரிக்கப் புழு என்றால்

ஆனந்தமாவாய்!

அமெரிக்க-பிரிட்டிஷ்

தூதரக சாலைகளை

நடந்து நடந்து தேய்ப்பாய்!

ஒரு வழியாய் பயணமாவாய்…

அதுவும்

இந்தியன் ஏர்லைன்ஸ் என்றால்

“ச்சீ” என்பாய்!

என்னே உன் தேசியப் பற்று!

நீ இந்தியத் தாயின்

கண்ணில் விழுந்த

தூசி அல்ல…ஊசி!

உனக்கு சின்ன வயதில்

சுதந்திர தினத்தன்று

தேசியக் கொடியை

குண்டூசியால் சட்டைப் பையில்

குத்தியிருக்கக் கூடாது!

ஒரு ஆணி வைத்து

இதயத்தில் அடித்திருக்க வேண்டும்!

—-யாரோ.
நன்றி:எனது பள்ளித் தோழன்

திருமணத்திற்கு முன்பு(தி.மு); திருமணமாகி சில வருடங்களுக்குப்பின்பு (தி.பி)

(தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்


அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க்

காத்திருந்தேன்

அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் :நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் :என்னை திட்டுவாயா ?

அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று

நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?
(தி.பி) திருமணத்திற்குப் பின் :

கீழிருந்து மேலே படியுங்கள்


திருமணம் பற்றி சில பழமொழிகளும்,பல அனுபவ மொழிகளும் இருக்கின்றன.அவற்றில் சில: ஒரு திறமையும்,சாமர்த்தியமும்,பொறுப்பும் கொண்ட மனைவி,அப்பாவிக் கணவனை சாதனையாளனாக்குவாள்.
நயவஞ்சகமும்,பித்தலாட்டமும்,பொறுப்பற்ற குணமும் கொண்ட மனைவி, சாதனைசெய்யும் கணவனை நாசமாக்குவாள்.
கல்யாணம் என்பது ஒரு வினோத சிறைச்சாலை.வெளியில் இருப்பவர்கள் உள்ளே வரத்துடிப்பார்கள்.உள்ளே வந்தவர்கள் வெளியே செல்ல முடியாமல் (ஆயுள் முழுக்க) தவிப்பார்கள்.

காதல் என்ற மயக்க மருந்து கொடுக்காமல்,கல்யாணம் என்னும் ஆபரேஷனை இளைய சமுதாயத்துக்கு செய்ய முடியாது.
உங்கள் ராசிப்படி காதல்

மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை

கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர்.

ஒரு பொறியியல் கல்லூரி மாணவரின் சிந்தனை:ஆன்மீகக்கடல் வாசகர்களின் சிந்தனைக்கு

ஒரு என் ஜினியரிங் மாணவனின் சிந்தனை

மாதம் ரூ.25,000/-சம்பளம் தரும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஐந்து கட்டத்தேர்வுகளை வைத்து என்னை வேலைக்குத் தேர்வு செய்கிறது.

முதலில்பொது அறிவுக்கான எழுத்துத் தேர்வு, அடுத்து பாடம் சார்ந்த எழுத்துத் தேர்வு, மூன்றாவதாக ஒரு நுண்ணறிவுக்கான சோதனை,நான்காவதாக கலந்துரையாடல் எனப்படும் ஜி.டி.(குரூப் டிஸ்கசன்),இறுதியாக நேர்முகத் தேர்வு.

அப்படியே இந்த ஐந்து கட்டத் தேர்வில் வெற்றி பெற்றாலும்,எந்த முன்னறிவிப்பும் இன்றி எப்போதும் என்னை வேலையை விட்டுத் தூக்கலாம்.

ஆனால்,நம்மை ஆளும் கருணாநிதி, மன்மோகன் இவர்களை ஏன் நாம் ஒரே ஒரு தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கிறோம்?
நமது நாட்டை ஆள்வது அவ்வ்வ்வ்வளவு ஈஸியா?

நோ ! இந்த தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வந்தே ஆக வேண்டும்.

மக்கள் நினைக்கும்போது,இந்த ஆளும் வர்க்கம் ஒழுங்கில்லை எனில்,அதை பதவி நீக்கம் செய்யும் விதமாக அரசியல் சாசன சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.

ஆன்மீகக் கடல் வாசகர்களே! நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

உங்கள் கடன் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது

உங்கள் கடன் முழுமையாகத் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.

14.4.2010 அன்று நமது தமிழ்வருடம் விக்ருதி பிறக்கிறது.14.4.2011 வரை நமது தமிழ்வருடம் விக்ருதியில் சில குறிப்பிட்ட நாட்களில்,சில குறிப்பிட்ட நேரங்கள் வரும்.அந்த நேரங்களுக்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர்.இந்த நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால்,நமது கடன் முழுமையாகத் தீர்ந்துவிடும். எப்படி என்பதைப் பார்ப்போம்:

நான் ராமன் என்பவரிடம்15.7.2004 அன்று ரூ.1,00,000/-கடன் வாங்கியிருக்கிறேன்.வருடங்கள் பல கடந்தும்,என்னால் வட்டி மட்டுமே கட்ட முடிகிறது.எனக்கோ எரிச்சல்! உழைக்கும் சம்பளம் வட்டி கட்டவே சரியாகிவிடுகிறது என நான் நினைக்கிறேன்.எப்படி நான் இந்த ஒரு லட்ச ரூபாய்க் கடனை அடைப்பது?
கீழே ஜோதிடப்படி, மைத்ர முகூர்த்த நேரங்கள் கணிக்கப்பட்டு,தரப்பட்டுள்ளன.இந்தப்பட்டியல், சித்திரை 1,விக்ருதி வருடம் முதல் பங்குனி 30 வரை (கிறிஸ்தவத் தேதி 14.4.2010 முதல் 13.4.2011 வரை ) தரப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில் வரும் நேரத்தில்,நான் ராமன் என்பவரை சந்திக்க வேண்டும்.நான் ரூ.1,00,000/-வாங்கினேன் அல்லவா? அதற்கு வட்டி மாதா மாதம் தந்துகொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறேன்.இந்த நேரத்தில் அசலில் ஒரு பகுதியைக் கொண்டு சென்று,(உதாரணம் ரூ.5000/- அல்லது ரூ.10,000/-) ராமன் அவர்களிடம் கொடுத்து இந்த நேரத்தில் வரவு வைக்கச் சொல்ல வேண்டும்.இப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை மைத்ர முகூர்த்தத்தில் கடன் வாங்கியவரிடம் செலுத்திவிட்டால்,அதன்பிறகு,மீதிக் கடன் தொகை(ரூ95,000/- அல்லது ரூ.90,000/-) வெகு விரைவாக,வெகு எளிதாகத் தீர்ந்துவிடும்.
போன வருடம் விரோதி (14.4.2009 முதல் 13.4.2010 வரை) இதே போல், மைத்ர முகூர்த்தம் நேரப்பட்டியல் நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டோம்.இந்தப் பட்டியலைப் பயன்படுத்தியவர்கள் பலரது கடன்கள் தீர்ந்துள்ளன.(மொத்தம் 64 பேர்கள் எமக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ரூ2,00,000/- கடன் இருந்தது.இந்தக் கடன் தீர்ந்தது.ஒரே ஒருவருக்கு ரூ 1கோடி கடன் இருந்தது.இன்று அவருக்கு கடன் ரூ.20,00,000/-ஆகக் குறைந்துவிட்டது என மகிழ்ச்சிபொங்கிடக் கூறியுள்ளார்.)

விக்ருதி வருடத்தின் மைத்ர முகூர்த்தங்கள்:

14.4.2010 புதன் இரவு 7.45 முதல் இரவு 9.45 வரை

30.4.2010 வெள்ளி இரவு 7.50 முதல் இரவு 9.50 வரை

12.5.2010 புதன் காலை 4.17 முதல் காலை 6.17 வரை

27.5.2010 வியாழன் மாலை 5.48 முதல் இரவு 7.48 வரை

9.6.2010 புதன் காலை 6.54 முதல் காலை 8.54 வரை

24.6.2010 வியாழன் மாலை 3.02 முதல் மாலை 5.02 வரை
21.7.2010 புதன் மதியம் 1.50 முதல் மதியம் 3.50 வரை
7.8.2010 சனி காலை 6.00 முதல் காலை 6.40 வரை
7.8.2010 சனி காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை
7.8.2010 சனி மாலை 4.40 முதல் மாலை 6.40 வரை
7.8.2010 சனி இரவு 10.40 முதல் இரவு 12.40 வரை

17.8.2010 செவ்வாய் மதியம் 12.20 முதல் மதியம் 2.01 வரை

29.8.2010 ஞாயிறு இரவு 9.14 முதல் இரவு 11.14 வரை

14.9.2010 செவ்வாய் காலை 10.18 முதல் மதியம் 12.18 வரை

25.9.2010 சனி இரவு 7.28 முதல் இரவு 9.28 வரை

12.10.2010 செவ்வாய் காலை 8.50 முதல் காலை 10.50 வரை

23.10.2010 சனி மாலை 5.22 முதல் இரவு 7.22 வரை

8.11.2010 திங்கள் காலை 6.45 முதல் காலை 8.45 வரை

19.11.2010 வெள்ளி மாலை 4.05 முதல் மாலை 6.05 வரை
5.12.2010 ஞாயிறு காலை 5.25 முதல் காலை 7.25 வரை

16.12.2010 வியாழன் மதியம் 2.40 முதல் மதியம் 4.40 வரை

18.12.2010 சனி காலை 8.30 முதல் காலை 10.30 வரை
1.1.2011 சனி காலை 4.21 முதல் காலை 6.21 வரை

1.1.2011 சனி காலை 8.21 முதல் காலை 10.21 வரை

1.1.2011 சனி மதியம் 2.21 முதல் மாலை 4.21 வரை

1.1.2011 சனி இரவு 8.21 முதல் இரவு 10.21 வரை

13.1.2011 வியாழன் மதியம் 12.15 முதல் 2.15 வரை

28.1.2011 வெள்ளி நள்ளிரவு 1.37 முதல் விடிகாலை 3.37 வரை

9.2.2011 புதன் காலை 10.45 முதல் மதியம் 12.45 வரை

24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் நள்ளிரவு 1.39 வரை
8.3.2011 செவ்வாய் காலை 9.53 முதல் காலை 11.53 வரை

9.3.2011 புதன் காலை 9.01 முதல் காலை 11.01 வரை

24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் இரவு 11.45 வரை

5.4.2011 செவ்வாய் காலை 6.46 முதல் காலை 8.46 வரை

எனது ஆன்மீகக்கடல் வாசகர்களே! கடன் இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பது எனது ஆசை.

காதலுக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்: ஒரு தத்துவார்த்தமான பார்வை

வாத்து மடையன்ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.அதற்கு அந்த ஞானி,''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ,அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை.நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.ஞானி,''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?''என்று கேட்டார். சீடன் சொன்னான்,'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.'
புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''


பின்னர் ஞானி,''சரி போகட்டும்,அதோ அந்த வயலில் சென்றுஉன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்.ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா?''சீடன் சொன்னான்,'இல்லை குருவே,இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப்படி,ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'
இப்போது ஞானி சொன்னார்,''இது தான் திருமணம்.''


சுரபாலர் அருளிய விருட்ச ஆயுர்வேதம் - 1000ஆண்டுகளுக்குப் பின் தமிழில்


இந்த அற்புதமான நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சுரபாலர் அவர்களால் சம்ஸ்கிருதத்தில் எழுத்துருவம் பெற்றது. பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மொழி பெயர்க்கப்படாமல் சுமார் 200 ஆண்டுகள் இருந்தது. பின் டாக்டர். நளினி சதாலே அவர்களால் 1996 ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கத்தை இயற்கை விஞ்ஞானி..ஆர்.எஸ். நாராயணன் மொழிபெயர்த்து 2005 ஆண்டு வெளியிட்டிருக்கிறார்.
கிடைக்குமிடம்.
திரு. ஆர்.எஸ். நாராயணன்
5/47 B சவுந்தரம் நகர் அம்பாத்துரை,
காந்திகிராமம் அஞ்சல்
திண்டுக்கல் 624 302
தொலைபேசி : 95451- 2452365
விலை ரூபாய் 75/=

Saturday, January 2, 2010
நட்சத்திர மரங்கள்

விருச்ச சாஸ்திரத்தில் கூறிய படி உங்கள்
நட்சத்திரம் பாதம் அறிந்து மரங்களை நடுங்கள்.

குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாக நடுங்கள்.
தவறாமல் பேணி பாதுகாத்து வாருங்கள்.
உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக வளமை அடையும்.

நாடும் நலம் பெரும்.

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சுபரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்

3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா
thanks www.agasool.blogspot.com

அரசியல் களத்தில் குதித்தார் ராம்தேவ் ஊழலை ஒழிக்கப் போவதாக அறிவிப்பு


அரசியல் களத்தில் குதித்தார் ராம்தேவ் ஊழலை ஒழிக்கப் போவதாக அறிவிப்பு

புதுடில்லி:யோகா குரு பாபா ராம்தேவும் அரசியல் களத்தில் குதித்துள்ளார். அரசியலை தூய்மைப்படுத்துவதற்காக, 'ஸ்வபிமான் அபியான்' என்ற பெயரில் அரசியல் கட்சியை துவக்கியுள்ளார்.இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் யோகா பயிற்சி அளிப்பதில் புகழ் பெற்றவர் பாபா ராம்தேவ். மன அழுத்தங்களை போக்கும் வகையிலான பல்வேறு யோகா கலைகளை கற்றுத் தருகிறார்.
இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் யோகா முகாம்களை இவர் நடத்தி வருகிறார். தற்போது இவருக்கு அரசியல் ஆசை வந்துள்ளது.'ஸ்வபிமான் அபியான்' என்ற பெயரில் அரசியல் கட்சியை துவக்கப் போவதாக இவர் அறிவித்துள்ளார்.ராம்தேவ் கூறியதாவது:அரசியலில் மாசுபடிந்துள்ளது. அதை தூய்மைப்படுத்துவதற்காகவே அரசியல் கட்சியை துவக்கியுள்ளேன். அடுத்த லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.
முதற்கட்டமாக, ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் ஏழு முதல் 10 லட்சம் உறுப்பினர்கள் வரை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். ஊழல் கறை படியாதவர்கள் மட்டுமே கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். சரியான, தகுதியான நபரை அடையாளம் கண்டு, அவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்துவோம்.
அதே நேரத்தில் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். எந்த பதவியையும் ஏற்க மாட்டேன். 300 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான கருப்பு பணம், இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.முறையான சட்ட விதிமுறைகளின்படி, இந்த பணம் முழுவதையும் இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வந்து, வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். 2020ம் ஆண்டுக்குள் இந்த பணம் முழுவதையும், நம் நாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும்.
இதுமட்டும் நடந்து விட்டால், சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா அசைக்க முடியாத பலம் பெற்று விடும். வல்லரசு நாடாக உருவெடுக்கும்.யோகா பயிற்சி கற்றுக் கொடுப்பவர்கள், அரசியல் ஆசையுடன் செயல்படுவதாக, உ.பி., முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகள், எங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை ஏற்க மாட்டார்கள்.
ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, பணம் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மாலைகளை உருவாக்க அவற்றை பயன்படுத்தக் கூடாது.சமீபகாலமாக, சிலர் ஆன்மிகத்தின் பெயரால், சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது கவலை அளிக்கும் செயல். இதுபோன்ற நபர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இவர்களை தண்டிப்பதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.

நன்றி:www.dinamalar.com 18.3.2010

மூட்டுவலி,வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்யும் வாயு முத்திரை

உடலின் அளவற்ற கொழுப்புச்சத்தினைக் கரைக்கும் சூரிய முத்திரை

மன அமைதியைத் தரும்,உடல் அமைதியைத் தரும் ப்ருத்வி முத்திரை

கண் பிரச்னைகள்,நரம்புப் பிரச்னைகளை நீக்கும்,உடலின் சகலபாகங்களையும் சுறுசுறுப்பாக்கும் ப்ரான் முத்திரை

சாப்பிட்டப்பிறகு மட்டும் இந்த முத்திரையைப் பயன்படுத்தினால் போதும்.ஜீரணசக்தியை அதிகரிக்கும்.

தலைவலி,காய்ச்சலைக்குணப்படுத்தும் லிங்க முத்திரை

ரத்தத்தை சுத்திகரிக்கும்,சகல வித சருமநோய்களையும் தீர்க்கும் ஜால் முத்திரை

மன அழுத்தம் தீரவும்,ஆழ்ந்த கவனத்தை தரும் தியான முத்திரை

ஆஸ்தமா,சுவாசக்கோளாறுகளை சரிசெய்யும் இருதய முத்திரை

ஆகாஷ் முத்திரையினால் ஏற்படும் நன்மை


காது சார்ந்த பிரச்னைகளை இந்த முத்திரை தீர்க்கிறது என்பதை நவீன மருத்துவ விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.

உங்களால் ஒரு கோயிலை பராமரிக்க முடியும்:தேவை மாதம் ரூ.3000/-மட்டுமே.

இறைபணியில் ஈடுபட ஒரு அரிய வாய்ப்பு

கேட்பாரற்றுக்கிடக்கும் கோவில்கள் ஒருபுறம்,கேட்பார் இருந்தும் கவனிப்பார் இல்லாமல் இருக்கும் கோவில்கள் மறுபுறம்.இரண்டும் இல்லாமல்,பெயருக்கு ஓர் அர்ச்சகர் மட்டும் இருக்கும் கோவில்கள் தமிழகத்தில் ஏராளம்.

வருமானம் இல்லாவிட்டாலும்,அதே கோவில்களில் அர்ச்சகர் வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.ஒரே காரணம் தலைமுறை தலைமுறையாக தங்கள் முன்னோர்கள் அர்ச்சித்துவந்த கோவில் என்பது தான்.

அர்ப்பணிப்பு(டெடிக்கேட்டடு) உணர்வோடு செயல்படும் அர்ச்சகர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சென்னை தி.நகரில் உள்ள மகாலக்ஷ்மி!

இவரின் முயற்சியால்,இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்பு மற்றும் உபயதாரர்களின் பங்களிப்போடு இதுவரை 14 கோவில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இன்னும் 42 கோவில்களில் குடமுழுக்கு நடந்துகொண்டிருக்கின்றன.

இவர் அர்ச்சகர்கள் வாழ்விலும் ஒளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அவர் கூறியது:
ஏராளமான கோவில்களில்,அர்ச்சகர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வருவாய் இருப்பதில்லை.இருந்தும்,தெய்வம் தங்களைக் கைவிடாது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து இறைபணி ஆற்றிவருகின்றனர்.அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில்,தமிழகம் முழுவதும்,முதல் கட்டமாக 30 கோவில்களை தேர்ந்தெடுத்துள்ளோம்.
இங்கு உள்ள அர்ச்சகர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள்,ஆளுக்கு ஒரு அர்ச்சகர் என்ற ரீதியில் தத்தெடுத்துக்கொள்ளலாம்.சம்பளமாக மாதம் ரூ.1500/-,பத்து கிலோ எண்ணெய், 15 கிலோ அரிசி,,300 ரூபாய்க்கு பூ என மாதம் சுமார் 3,000 ரூபாய்க்குள் அடங்கும் செலவுகளை ஏற்றுக்கொள்ளலாம்.
சைவம்,வைணவம்,சாக்தம் என அனைத்துக் கொவில்களும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.

யாரும் நேரடியாக எங்களிடம் பணம் தர வேண்டியதில்லை.சம்பந்தப்பட்ட கோவில்களுக்கே சென்று, நிலைமையை நேரில் பார்த்து, அதன்பிறகு, அர்ச்சகர்களிடமே அந்தத் தொகையை வழங்கினால் போதுமானது.இதன்மூலம், அந்தக் கோவில்களில் ஒரு கால பூஜையாவது தடைபடாமல் நடப்பது நிச்சயிக்கப்படும்.

இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு 044-2815 2533, 98400 53289 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி:தினமலர் பக்கம்4, நாள் 28.2.2010.

சீனாவில் ஏதற்கெல்லாம் இணையதளங்கள் தடை செய்யப்படுகின்றன ஒரு அலசல்


சீனாவில் ஏதற்கெல்லாம் இணையதளங்கள் தடை செய்யப்படுகின்றன ஒரு அலசல்சீனாவில் நேற்றல்ல இன்றல்ல பல வருடங்களாகவே இணையதளம்
-களுக்கு கொஞ்சம் அதிகமான கிடுக்குபிடி தான். ஏன் என்ற
பின்னனி கொஞ்சம் வித்தியாசமானதுதான் அதாவது சீனாவின் எந்த
அரசாங்க விஷயங்களும் வெளியே செல்லக்கூடாது என்பதற்காக
தான் இத்தனை செக்யூரிட்டி.முதலில் தடை செய்த இணையதளம்
பிளாக்கர் இதன் வழியாக பல தகவல் செல்லும் என்பதால் இது
தடைசெய்யப்பட்டது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நாம்
பயன்படுத்தும் பல இணையதளங்கள் என்று யூடியுப் வரை
சென்றுள்ளது.நாம் பயன்படுத்தும் எந்த சோசியல் நெட்வொர்க்கையும்
சீனாவில் பயன்படுத்த முடியாது.எங்கள் நாட்டு இளைஞர்கள் யாரும்
தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக சமீபத்தில் ஆபாச
இணைதளங்கள் சீனாவில் வைத்திருக்கும் நபரை நீங்கள் காட்டி
கொடுத்தால் 1 இலட்சம் வரை பரிசு என்று அறிவித்து 5394 பேரை
மொத்தமாக பிடித்தது. இதன் பின்னால் ஒரு இராஜதந்திரமே
உள்ளது எப்படி என்று பார்ப்போம். எந்த ஒரு நாட்டிலும் ஆபாச
இணையதளங்கள் வைத்திருக்கும் நபர் கண்டிப்பாக பணத்துக்காக
எதையும் செய்வார் இப்படிபட்ட நபர்கள் பெரும்பாலும் ஹக்கர் ஆக
இருக்க வாய்ப்பு அதிகம் அதனால் இவர்களை சரியாக கண்ணி
வைத்து பிடித்தது சீன அரசு.
கூகுள் சீனாவை விட்டு வெளியேறியது என்ற செய்தி நாம் படித்தது
தான் ஆனால் ஏன் வெளியேறியது என்ற காரணம் பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக கூகுள் தேடுபொறி வந்து
விட்டது. சீனாவில் பயன்படுத்தப்படும் கூகுள் தேடு பொறியில்
பிரைன் வாஸ் ( Brain wash ) என்ற சொல்லை
பயன்படுத்தினால் தேடுதல் முடிவு காட்டக்கூடாது அதுமட்டுமா
டெமாக்ரசி மூமெண்ட் (democracy movement) என்ற சொல்
முதல் ஒரு பெரிய பட்டியலை கொடுக்கிறது சீனஅரசு இந்த வலைப்பூவில் மேலே
காட்டப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள வார்த்தைகள் காணப்படும் இணைய
தளங்களை காட்டக்கூடாது என்று சொன்னால் ஆரம்பத்தில் சரி சரி
என்று சொல்லி கூகுள் ஏற்று கொண்டது அதன் பின் தான்
தெரிந்தது இவர்கள் கொடுக்கும் வார்த்தையை வைத்து ஃபில்ட்டர்
(Filter) செய்தபின் ஒரு இணையதளத்தையும் நம்மால்
காட்டமுடியாது என்று தெரிந்து கொஞ்சம் வார்த்தையை
குறைத்திருக்கலாம் என்று நிபுனர்கள் கூறினாலும் எதையும் எந்த
வார்த்தையையும் குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக
கூறிவிட்டது அதன் பின் தான் கூகிள் வெளியே வந்தது.
ஒரு நாட்டின் வருங்கால முதுகெலும்பாக இருக்கும் இளைஞர்கள்
எந்த விதத்திலும் தவறாக சென்றுவிடகூடாது என்பதிலும் பயிர்க்கு
பாதுகாப்பு வேலி நாட்டின் பாதுகாப்புக்கு இணையவேலி என்ற
புதிய தொலைநோக்கு பார்வையுடன் களம் இறங்கியுள்ளது
சீனஅரசு அதுமட்டுமல்ல இணையதள செக்யூரிட்டி பணிக்காக
மட்டும் பல இலட்சம் பேரை பணியில் அமர்த்தியுள்ளது.
நம் நாட்டில் இந்த அளவு செய்யாவிட்டாலும் ஆபாச
இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்
நாட்டின் பல குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு நாட்டின்
பாதுகாப்பு துறையில் இருக்கும் அதிகாரிகள் பார்வைக்கு இந்த
பதிவு செல்லுமா என்று தெரியவில்லை ஆனால் கூகுள் போன்ற
தேடுபொறிகள் ஆபாச இணையதளங்ளை காட்டுவதை நிறுத்தி
விட்டால் குற்றம் பெருமளவு குறையும். இந்தியா போன்ற ஒரு
வளரும் வல்லரசு நாட்டிற்கு தேவையானது இணையபாதுகாப்பு
என்பது நம் எண்ணம்.
நன்றி: http://winmani.wordpress.com/2010/01/15/chin/

சிறப்பான வாழ்க்கைக்கு சிறந்த வழிகள்

சிறப்பான வாழ்க்கைக்கு சிறந்த வழிகள்

1.நீங்கள் மகிழ்ச்சியானவராக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டிய செயல் உங்களை நீங்களே நேசிக்கத் தொடங்குங்கள்.

2.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களையும் வெற்றிபெறச் செய்யுங்கள்.உங்களுக்கான வெற்றி உங்களைத் தேடி வரும்.

3.கடந்த கால தோல்விகள் பயமுறுத்துமானால், நிகழ்காலமும் வருங்காலமும் தோல்வியாகிவிடும்.அதனால்,கடந்த காலத்தோல்விகளை வெல்ல வேண்டும்.

4.புண்பட நேரும்போது பொறுமையுடன் இருங்கள்.தகுந்த நேரத்தில் உணர்வுகளை,அமைதியாக புரியும்படி வெளிப்படுத்தி அதை சரிப்படுத்துங்கள்.

5.பணத்திற்காக, லாபத்திற்காகப் பழகுபவர்கள் நல்ல நண்பர்களாக இருக்க முடியாது.அவர்களை விட்டு நாசூக்காக (அவர்களுக்குத் தெரியாமல்) விலகி விடுங்கள்.

6.நம் மனதில் உள்ள குற்ற உணர்வுகள் நம் மகிழ்ச்சியைப் பாதிக்கும்.நாம் செய்துவிட்ட குற்றங்களுக்காக மனம் வருந்திப் பயனில்லை.அதிலிருந்து மீள முயற்சி செய்யுங்கள்.

7.கவலைகள் நம்முடைய உடலில் நோய்களை மட்டும் உருவாக்குவதில்லை.நமது வயதையும் மிகுதிப்படுத்திக் காட்டுகிறது.

8.ஆணவம் மிக்க மனிதனே பல இடங்களில் அடிமைப் பட்டுப் போகிறான்.

9.உங்களைப் பற்றி உண்மை அல்லாத ஒன்றை யாராவது கூறினால்,அதற்காக கோபப் படாதீர்கள்.ஒருவேளை அது உண்மையானதாக இருப்பின்,உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.

10.கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டால்,அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டுமென காத்திருக்காமல், நீங்களே முதலில் சென்று பேச்சைத் தொடங்குங்கள்.

11.நீங்கள் கூறுவது சரியாக இருந்தாலும் அதற்காக மற்றவர்களிடம் வாதாடாதீர்கள்.விவாதத்தை வெல்ல சிறந்த வழி அதைத் தவிர்ப்பதுதான்.

12.உங்கள் நெருங்கிய நண்பரைப் பற்றி பிறர் ஏதேனும் கூறினால்,அதை அப்படியே நம்பிவிடாமல் நேரடியாகப்பேசி உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.இல்லையென்றால் நட்பில் பிளவு ஏற்பட்டுவிடும்.

13.கருத்துவேறுபாடு இல்லாத குடும்பம் இருக்க முடியாது. அது மனித உறவுகளில் ஒரு அங்கம்.இருப்பினும், “நீ எப்போதும் அப்படித்தான்.உன்னை மாற்றவே முடியாது” என்பதுபோன்ற கடுஞ்சொற்களை பயன்படுத்தாதீர்கள்.(அது நிரந்தரப் பிரிவினையை உருவாக்கும்)

14.ஒருவனுடைய சிந்தனை,சொல்,செயல்,பழக்கவழக்கங்கள் தீயதாகவும், நய வஞ்சகமாகவும் இருக்குமானால் அவனிடமிருந்து தொடக்கத்திலிருந்தே விலகி விடுங்கள்.அல்லது அவனைப் புரிந்துகொண்ட உடனே விலகிவிடுங்கள்.

நன்றி:லட்சுமி இரவு உணவகம்.
நன்றி:தமிழ் லெமூரியா பக்கம் 59, 15.11.2009

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 27 : தடை விதிக்கும் மூன்று மனநிலைகள்!

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 27 : தடை விதிக்கும் மூன்று மனநிலைகள்!
-


ஆழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனத்தில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை ஆழ்மன சக்திகள் கைகூட வாய்ப்பேயில்லை. அவை :

* அவநம்பிக்கை

* அவசரம்

* அமைதியின்மை

அவநம்பிக்கை

அவநம்பிக்கையிலும் இரு வகைகள் உண்டு. ஒன்று ஆழ்மன சக்திகள் இருப்பது உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தால் ஏற்படுவது. மாயாஜாலக் கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது, இது நிஜமாக இருக்க சாத்தியமில்லையே என்ற எண்ணத்தால் ஏற்படுவது.

இந்த அவநம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அற்புத சக்தியாளர்களைப் பற்றியும், அவர்களை வைத்தும், தனித்தும் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும் இவ்வளவு விவரமாகக் குறிப்பிடப்பட்டன. குறிப்பாக எட்கார் கேஸ், நினா குலாகினா, லியனாரோ பைப்பர் போன்றவர்கள் எல்லாம் எவ்வித பரிசோதனைக்கும் தயாராக இருந்தவர்கள் என்பதைக் கண்டோம். அமெரிக்கா, ரஷியா உட்படப் பலநாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

மேலும், இத்தொடரில் சொல்லப்படாத எத்தனையோ ஆழ்மன சக்தியாளர்கள் எல்லாக் காலத்திலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளிலும், பல காலமாக, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத பல மனிதர்கள் சேர்ந்து கூட்டு சதி செய்திருக்கிறார்கள் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும்.

என்ன தான் சொன்னாலும் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லையே என்று சிலர் சொல்லலாம். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போல நமக்குத் தோன்றுகிறதா? இல்லையே. பூமியில் வசிக்கும் நமக்கு பூமி சுற்றுவது சிறிதளவாவது தெரியவேண்டாமா? பூமி ஸ்திரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. நம் பார்வைக்கு சூரியன் அல்லவா பூமியைச் சுற்றுவதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கில் போன சூரியன் சுற்றி வந்து மறுபடியும் கிழக்கில் அல்லவா எட்டிப்பார்க்கிறான். பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவன், எந்த விஞ்ஞானமும் அறியாதவன் அப்படி அடித்து அல்லவா சொல்லுவான். படித்ததை மறந்து விட்டுப் பார்த்தால் அவன் சொல்வது சரி என்றல்லவா நமக்கும் தோன்றும். எனவே புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் ஆழ்மன சக்திகள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.

இரண்டாவது வகை அவநம்பிக்கை நம் மீதே ஏற்படலாம். இதெல்லாம் பிரமாண்டமான சக்திகளாகத் தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு இதெல்லாம் வருமா? என்று தோன்றலாம். ஏகப்பட்ட பிரச்னைகள், பலவீனங்கள் எல்லாம் நம்மிடம் நிறைந்திருந்திருக்கிறது நமக்கல்லவா தெரியும். எத்தனையோ பலவீனங்களை அடுத்தவர் அறியாமல் நமக்குள் மறைத்து வைத்திருந்து அவற்றுடன் போராடி வரும் அவஸ்தையை நாமல்லவா அறிவோம். அப்படியிருக்கையில் ஆழ்மன சக்திகள் எல்லாம் நமக்கு கைகூடுமா என்ற அவநம்பிக்கை நமக்குள் எழலாம்.

ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். படைப்பாளியின் விசேஷ குணங்களை அவன் படைப்பில் பார்க்காமல் வேறெங்கே பார்க்க முடியும்? நம் எல்லா பிரச்னைகளும் நமது இயல்பான தெய்வாம்சத்தை மறந்து சில்லறை ஆசைகளுடனும், விஷயங்களுடனும் நம்மை இணைத்து அவற்றையே நம் அடையாளமாகக் காண்பது தான். மேல் மனக் குழப்பங்களை வைத்து எடை போடாமல் ஆழமாகச் சென்றால் தான் நம் உண்மையான சக்திகளை உணர முடியும். அடிக்கடி ஆழமாக நமக்குள் போக முடிந்தால், அந்த சக்திகளை ஒரு வினாடியாவது தரிசித்தால் நமக்கு ஒரு போதும் சந்தேகம் வராது. (இது குறித்து பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றாலும் தற்போதைய தலைப்புக்கு இந்த அவநம்பிக்கை தேவையில்லை என்பது உணர்ந்தால் போதுமானது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்).

அவசரம்

அடுத்த பெரும் தடை அவசரம். இது இன்றைய காலத்தில் மிக நியாயமானது என்று நாம் நினைக்கும் சாபக்கேடு. இயற்கையைப் பொறுத்த வரை எதிலும் எப்போதும் அவசரம் கிடையாது. அவசரப்படுத்தினால் நல்ல இயற்கையான விளைவுகள் கிடைக்காது. ஒரு விதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும். விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் "தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?" என்று தோண்டிப் பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் ஆழ்மன சக்தி வளர்த்தலும்.

ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால், நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.

அமைதியின்மை

மனத்தை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்துக்காவது மனத்தை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது.

நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் ஆழ்மன செய்திகளை அறிந்து கொள்ள முடியாது. ஆழ்மன சக்திகளை பயன்படுத்தவும் முடியும்.

நல்ல இசை, நல்ல இலக்கியம், நல்ல புத்தகங்கள், ஆன்மீகம், தியானம், இயற்கைக் காட்சிகள் போன்றவை மனத்தை ஓரளவு அமைதிப்படுத்த உதவலாம். அவரவர் தன்மைக்கு எது உதவுகிறதோ அதை உபயோகித்து மன அமைதி கொள்ளலாம். பயிற்சிகளின் போதும் சரி, ஆழ்மன சக்திகளின் போதும் சரி மனம் அமைதியாக இருப்பது மிக முக்கியம். பல ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆழ்மன சக்தி பெற்றவர்கள் கூட வெற்றிகரமான முடிவுகளைத் தரத் தவறும் தருணங்கள் அவர்கள் அமைதியிழந்த தருணங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள்.


thanks:::http://youthful.vikatan.com/youth/Nyouth/ganesanarticle230210.asp

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 28 : நான்கு வகை மின் அலைகள்

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 28 : நான்கு வகை மின் அலைகள்
- என்.கணேசன்ஆழ்மன சக்திகள் சாத்தியம் என்பதையும், அவை கைகூடத் தடையாக இருக்கும் எந்த மனநிலைகளை நீக்க வேண்டும் என்பதையும் பார்த்தோம். இனி அவை எப்படி சாத்தியப்படும் என்பதையும் பார்ப்போம்.

நம் மனநிலைகள் மூளையில் சிலவித மின் அலைகளை ஏற்படுத்துகின்றன. அந்த அலைகள் எலெக்ட்ரோசெபாலோக்ராஃப் (electrocephalograph - EEG) என்ற கருவியால் அளக்க முடிந்தவை. அவை ஒரு வினாடிக்கு எந்த அளவு ஏற்படுகின்றன என்பதை சிபிஎஸ் (Cycles per second -CPS) என்பதை வைத்து அளக்கின்றனர். அவை நான்கு வகைப்படும்.

பீடா அலைகள் (Beta Waves) - பதினான்குக்கும் மேற்பட்ட சிபிஎஸ் அலைகள் பீட்டா அலைகள். நாம் பெரும்பாலும் இருப்பது இந்த அலைவரிசையிலேயே.

ஆல்ஃபா அலைகள் (Alpha Waves) - எட்டிலிருந்து பதிமூன்று சிபிஎஸ் வரை உள்ள அலைகள் ஆல்ஃபா அலைகள். இது தூக்கம் தழுவுவதற்கு முன்னும், அரைத்தூக்கத்திலும் ஏற்படும் அலைகள். தியானத்தின் ஆரம்பத்திலும் இந்த அலைகள் ஏற்படும்.

தீட்டா அலைகள் (Theta Waves) - நான்கிலிருந்து ஏழு சிபிஎஸ் வரை உள்ள அலைகள் தீட்டா அலைகள். இவை குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகின்றன. அதே சமயம் ஆழ்ந்த தியானத்தின் போதும் வெளிப்படுகின்றன.

டெல்டா அலைகள் (Delta Waves) - நான்குக்கும் குறைவான சிபிஎஸ் உள்ள அலைகள் டெல்டா அலைகள். பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகளிடம் காணப்படுகின்றன. யோகிகள், சித்தர்களிடமும் இந்த டெல்டா அலைகள் காணப்படுகின்றன.

இந்த நான்கு அலைகளில் பீட்டா அலைகளில் நாம் எந்த அதீத சக்தியும் பெற முடிவதில்லை. ஆனால் மற்ற அலை வரிசைக்குள் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியும் போது எல்லா அதீதமான சக்திகளும் நமக்கு சாத்தியமாகின்றன.

அது எப்படி என்பதையும் நாம் புரிந்து கொள்வது நல்லது.

அணுவைப் பிளந்து பார்த்த பின் விஞ்ஞான உலகில் ஏற்பட்ட மாற்றம் பிரம்மாண்டமானது. உள்ளே இடைவிடாத கதிர் இயக்கத்தைக் கண்ட விஞ்ஞானிகள் திகைத்துப் போயினர். அது வரை திடப்பொருள், திரவப் பொருள், வாயுப் பொருள்
என்பது பார்வைக்கு மட்டுமல்ல உண்மையிலேயே அப்படித்தான் என்று நம்பி வந்த விஞ்ஞானிகள் கடைசியில் எல்லாம் சக்தி மயம் என்ற முடிவுக்கு வர நேர்ந்தது.

காணும் பொருள்கள் எல்லாம் சக்தியின் துடிப்புகளாக, சக்தியின் விதவிதமான மாறுதல்களாக இருக்கக் கண்டனர். விஞ்ஞானத்தில் க்வாண்டம் இயற்பியல் (Quantum Physics) என்ற புதிய அத்தியாயம் ஆரம்பித்தது.

பொருட்களும், மனிதர்களும், விலங்குகளும், மற்ற உயிருள்ளவையும், உயிரற்றவையும் மிக மிக நுண்ணிய மைக்ராஸ்கோப்பினால் பார்க்கப்படும் போது சக்தியின் வெளிப்பாடுகளாக, கதிரியக்கங்களாகத் தெரிவதாக இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. எனவே நாம் எல்லோரும், எல்லாமும் ஆழத்தில், அடிமட்டத்தில் ஒரு மகாசக்தியின் மிக நுண்ணிய பகுதியாக இருக்கிறோம். அந்த சக்தி மட்டத்தில் ஒன்றுபடுகிறோம். அந்த மட்டதுக்கு நம் உணர்வு
நிலையைக் கொண்டு போனோமானால் நாம் அறிய முடியாததில்லை. நம்மால் சாதிக்க முடியாததில்லை.

இதை வைத்தே "தத்துவமஸி" (நீயே அது), அஹம் ப்ரம்மாஸ்மி (நான் ப்ரம்மம்), என்ற வேத வாக்கியங்கள் எழுந்திருக்க வேண்டும். Know Thyself (உன்னையே நீ அறிவாய்) என்று பல மதங்களில் பிரதான அறிவுரையாகக் கூறுவதும் உன்னை நீ முழுவதுமாக அறிய முடியும் போது எல்லாவற்றையும் முழுமையாக அறிய முடியும் என்ற அடிப்படையில் தான் இருக்க வேண்டும்.

எத்தனையோ விஷயங்கள் ஆழ்மன அளவிலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்றும் விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இது மனிதர்கள் விஷயத்தில் மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்கள் விஷயத்திலும் உண்மையாக இருப்பது தான் பேராச்சரியம்.

உதாரணத்துக்கு எறும்புகள் குறித்து நடந்த ஒரு ஆராய்ச்சியைச் சொல்லலாம். ராணி எறும்பை எறும்புக் கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தி எத்தனை தொலைதூரத்தில் வைத்தாலும் எறும்புகளின் கட்டுமானப்பணிகள் தடைபடாமல் கச்சிதமாக நடப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். ஆனால் தொலைதூரத்தில் இருக்கும் அந்த ராணி எறும்பைக் கொன்று விட்டாலோ அந்த எறும்புகள் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போய் விடுகின்றன என்பதையும் அங்குமிங்கும் அலைபாய்கின்றன என்பதையும் ஆராய்ச்சியில் அறிய முடிந்தது. எவ்வளவு தொலைவானாலும் சரி ராணி எறும்பு உயிருடன் இருக்கும் வரை அதனிடமிருந்து எப்படியோ தேவையான கட்டளைகள் மற்ற எறும்புகளுக்குப் போய் சேர்கின்றன என்பது மிகப்பெரிய ஆச்சரியம் அல்லவா? அப்படி செய்திகள் பரிமாற்றம் ஆவது ஆழ்மன அளவிலேயே தான் இருக்க வேண்டும் என்பது தான் பலருடைய கருத்தாக
இருக்கிறது.

நாம் முன்பு பார்த்த பல ஆழ்மன சாதனையாளர்களும் ஒருவித அரைமயக்க நிலைக்குச் செல்ல முடிந்த போது தான் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள் என்பதைக் கண்டோம். மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன பிராந்தியத்துக்குள் நுழையும் போது தான், ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் சஞ்சரிக்கும் போது தான், எல்லோரையும் பிணைக்கும் மாபெரும் பிரபஞ்ச சக்தியைத் தொடர்பு கொள்ள முடிகிறது.

உதாரணத்துக்கு, எல்லாத் தகவல்களும் அண்ட வெளியில் பரந்து கிடப்பதாகவும் அதை ஆகாய ஆவணங்கள் என்றும் எட்கார் கேஸ் சொன்னதை எண்ணிப்பாருங்கள். அதைப் படிக்கும் கலையை அறிந்து கொண்டால் எந்தத் தகவலையும் மிக எளிதாகப் பெற்று விடலாம் என்று அவர் சொன்னதையும் சிந்தித்துப் பாருங்கள்.

ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் சஞ்சரித்து ஆழ்மன சக்திகளை அடைய முதலடி எடுத்து வைப்போமா?

ஆழ்மனத்தின் சக்தி:விஞ்ஞானபூர்வமான நிரூபணம்

எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன என்பதைப் பார்த்தோம். அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக்கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை. அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.

முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும், அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனத்துக்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார்.

முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ் ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.

புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள். அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத்துக்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில். பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.

அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம். ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை "ரிலாக்ஸ்" (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான
மனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.

முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம்.

சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.

இந்த எளிய பயிற்சியை அடுத்த வாரம் வரை தினமும் செய்து பாருங்கள்.
நன்றி:http://youthful.vikatan.com/youth/Nyouth/ganesan100310.asp/

உங்கள் குழந்தை சா‌ப்‌பிடுவத‌ற்கு‌ம் ல‌ஞ்ச‌ம் வே‌ண்டா‌ம்

சா‌ப்‌பிடுவத‌ற்கு‌ம் ல‌ஞ்ச‌ம் வே‌ண்டா‌ம்


குழ‌ந்தைகளு‌க்கு அளவு‌க்கு அ‌திகமான செ‌ல்ல‌ம் கொடு‌த்து வள‌ர்‌ப்பதா‌ல்தா‌ன் அவ‌ர்க‌ள் கெ‌ட்ட பழ‌க்க வழ‌க்க‌த்துட‌ன் வள‌ர்‌கிறா‌ர்க‌ள்.

எ‌ந்த இட‌த்‌தி‌ல் செ‌ல்ல‌ம் கொடு‌க்க வே‌ண்டுமோ, எ‌ந்த இட‌த்‌தி‌ல் க‌ண்டி‌ப்பு‌ட‌ன் இரு‌க்க வே‌ண்டுமோ அ‌த‌ற்கு ஏ‌ற்றபடி நட‌ந்து கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.

சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு.

அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும்.

நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.
நன்றி:தமிழ் வெப்துனியா 14.3.2010

சேமிப்பதன் அவசியம்:


சேமிப்பது எதற்காக?

1.சேமிப்புதான் நம்முடைய வளமான வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதை முதலில் உணர வேண்டும்.

2.சேமிக்கும்பழக்கம் ஒரு குணமாகவே சிறுவயதுமுதல் உங்கள் குழந்தைகளின் மனங்களில் விதைக்கப்பட்டு,பழக்கப்படுத்த வேண்டும்.
3.அத்தியாவசியம் எது,அனாவசியம் எது என்பதைப் பகுத்துப் பார்த்து அனாவசியச் செலவுகளைத் தள்ளிப்போடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
4.கையில் பணம் இல்லையென்றாலும்,கடன் மூலமாக சில சேமிப்புக்களைச் செய்ய முடியும்.அது சரியாகவும் இருக்கும்.ஆனால்,அந்த வகை சேமிப்பின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் கடன் தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்குமா? என்பதை கவனித்துக்கொள்ள வேண்டும்.

5.உதாரணமாக,வீட்டுக்கடன் வாங்குகிறோம்.அது கடன் தான் என்றாலும்,வீடு என்ற சொத்து நமக்குக் கிடைக்கும். நம்முடைய அத்யாவசிய தேவையான குடியிருக்கும் இடத்துக்கு வாடகை கொடுப்பது மிச்சமாகும்.பின்னாட்களில் வீட்டின் மதிப்பு உயரும்போது நம்முடைய சேமிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அந்த வகையில் பார்த்தால்,கடன் வாங்கிச் செய்யும் சேமிப்பு சிறந்ததுதான்.

6.அதைச் சொல்லும்போதே இதையும் சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கும்.சேமிக்கும் நோக்கத்துக்காகக் கடன் வாங்குவதைப் போல,செலவழிப்பதற்காகவும் கடன் வாங்கினால் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும்.கடன் அட்டைகள் எனப்படும் க்ரடிட் கார்டுகள் அந்த ரகம்தான்.(அமெரிக்கக் கண்டுபிடிப்பு அல்லவா?.பந்தாவான ஈர்ப்பும்,எரிச்சலான முடிவும் தரும்)
சரியாக திட்டமிட்டு வட்டி கட்டாமல் பணத்தைச் சுழல வைக்கலாம் என்றெல்லாம் கணக்கு போடுவோம்.ஆனால்,சிக்கிக்கொண்டால், சேமிப்பு எல்லாம் காணாமல் போய் சுழலில் மாட்டிக்கொண்ட துரும்பின் கதையாகிவிடும்.

இந்த ஐந்துவிஷயங்களும் உங்களை பணக்காரராக்கும் அனுபவ மந்திரங்கள் ஆகும்.

திருக்கையிலாயம் மானசரோவரின் தினமும் நள்ளிரவு 2.00 மணிக்கு நிகழும் அதிசயம்


மானசரோவரில் நிகழும் நள்ளிரவு அதிசயம்

தினமும் திருக்கையிலாய மலைக்கு அருகில் இருக்கும் மானசரோவர் ஏரியில் நள்ளிரவில் ஒரு அதிசயம் நடைபெற்றுவருகிறது.
“அங்கே நிகழ்வது நம் அறிவுக்கு அப்பாற்பட்டது.வேறு கிரகத்திலிருந்து போக்குவரத்து அந்த நேரத்தில் அங்கே இருக்கிறது.அதனால்,விடிகாலை இரண்டு மணி போல அங்கே நீர் அருகே செல்லாதீர்கள்.அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.தள்ளி நின்று பாருங்கள்.புகைப்படம் எடுத்தல்,சப்தம் போட்டுப் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.என்ன நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.”என்று சத்குரு ஏற்கனவே சொல்லியிருந்ததால், ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது.
குளிர் பிடுங்கித் தின்றது.நாய்களின் ஓலங்கள் எதிரொலித்தன.
மணி 1.30 ஆயிற்று.நள்ளிரவு 2.00 ஆயிற்று.ஒன்றும் நிகழவில்லை.கால் கடுக்க நின்றிருந்தோம்.அங்கே எதுவும் நடக்கலாம்.நடக்காமலும் போகலாம்.அவர்கள் நமக்காக கண்காட்சி நடத்தவில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.
சரியாய் நள்ளிரவு 2.30 மணிக்கு அந்த அதிசயம் நிகழ்ந்தது.வானத்தில் அண்ணாந்து பார்த்த போது உலகில் உள்ள அத்தனை நட்சத்திரங்களும் ஒன்று கூடி மானசரோவருக்கு மேலாக வந்தது போல் தோன்றியது.ஆமாம்,குவியல் குவியலாக கோடி நட்சத்திரங்கள்.
மின்னல் போல் ஒளி மானசரோவர் நீரில் பாய்ந்தது.இடி இடித்தது.நாய்களின் கூக்குரல் காணாமல் போயிருந்தன.எரிநட்சத்திரம் போல சில சரலென ஏரி நீரில் விழுந்தன.வெளிச்சம் அதிகரித்தது.
இதைப் பார்த்த என் உள்ளம் உருகியது.நெஞ்சம் நெகிழ்ந்தது.
நன்றி:குமுதம் பக்கம் 119,நாள் 10.3.2010

ரமண மகரிஷியின் ஆசையை நிறைவேற்றிய அயனாவரம்சதீஷ்ரமண மகரிஷியின் ஆசையை நிறைவேற்றிய சதீஷ்

ரமண மகரிஷிக்கு வெகுநாட்களாக ஒரு ஆசை இருந்தது.அது கடைசி வரை நிறைவேறவில்லை.
இந்நிலையில் சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களின் தலைமையில் ஒரு குழு திருக்கையிலாயம் மானசரோவர் புனிதப்பயணம் மேற்கொண்டனர்.அந்தப் பயண அனுபவத்தை ப்ரியா கல்யாணராமன் என்பவர் குமுதம் வார இதழில் தொடராக எழுதிவருகிறார்.அதில்,10.3.2010 ஆம் குமுதம் வெளியீட்டில்,118,119 ஆம் பக்கத்தில் ஒரு அதிசய சம்பவத்தை எழுதியுள்ளார்.

ரமண மகரிஷி அவர்களின் புகைப்படத்தை ஞாபகமாக தமிழ்நாட்டிலிருந்து மானசரோவர் யாத்திரைக்குக் கொண்டுவந்திருந்தார் அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர்.அவர் ரமண மகரிஷி அவர்களின் புகைப்படத்தை எடுத்து மானசரோவர் நீரில் நனைத்து எடுத்து,தனது பைக்குள் வைத்துவிட்டார்.
“இந்தக் காட்சியை பகவான் ரமணமகரிஷியும் நெகிழ்ச்சியாக இங்கே இருந்தபடி பார்த்துக்கொண்டிருப்பார்.”என ப்ரியா கல்யாணராமன் கூறினார்.

இந்தியாவிற்காக பாகிஸ்தானில் உயிர்விட்ட இந்திய ஒற்றன்:ஒரு பிரமிப்பூட்டும் தேசபக்தரின் நிஜக்கதை


இந்தியாவிற்காக பாகிஸ்தானில் உயிர்விட்ட இந்திய உளவாளி

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரைச் சேர்ந்தவர் கவுசிக்.இவர் படிக்கும்போதே மோனேஆக்டிங் நடிகர்.கி.பி.1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர்காலத்தில், இவர் தேசபக்தியை வலியுறுத்தி நாடகங்கள் நடத்தினார்.இவரது நாடகங்களைப் பார்க்க வந்த ராணுவ அதிகாரிகளுக்கு கவுசிக்கை ரொம்பவும் பிடித்துப்போனது.காரணம், அந்த நாடகங்களில் கவுசிக் ஏற்றிருந்த வேடம்,உயிரே போனாலும் தேசத்தைக் காட்டிக்கொடுக்காத ஓர் உளவாளி!

உண்மையாகவே ஒற்றனாக ராணுவ அதிகாரிகள் வாய்ப்பு கொடுத்த போது உடனே கவுசிக் அதை தனது கடமையாக ஏற்றுக்கொண்டார்.புது டெல்லி,அபுதாபி,துபாய் என சுற்றி கடைசியாக பாகிஸ்தான் வந்தார்.நபி அஹமத் என்ற பெயரில் அங்கே சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.ஒரு பாகிஸ்தானியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பக்கா பாகிஸ்தானியனாக வாழ்ந்த கவுசிக், பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார்.அங்கே இருந்து கொண்டு, இந்திய ராணுவத்திற்குப் பல முக்கியமான தகவல்களை அனுப்பிக்கொண்டே இருந்தார்.
ஒரு முறை இந்திய பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவைச் சேர்ந்த் இன்னும் ஒரு ஒற்றனை பாகிஸ்தானை விட்டுப் பத்திரமாக வெளியேற்றிவைக்க இந்திய ராணுவத்திலிருந்து அவருக்கு அசைன்மெண்ட் தரப்பட்டது.எதிர்பாராத விதமாக,அந்த இந்திய ஒற்றன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார்.பாகிஸ்தான் ராணுவத்தின் சித்திரவதையைத் தாங்கமுடியாத அவர்,கவுசிக் பற்றிய உண்மைகளை கொட்டிவிட்டார்.இதனால்,மாட்டிக்கொண்டார் கவுசிக்.

மொத்தம் 19 ஆண்டுகள் பாகிஸ்தானின் முல்டான் சிறையில் கவுசிக்கை பாகிஸ்தான் ராணுவம் சித்ரவதை செய்தது.அவரைப் பற்றி இந்தியா வாயைத் திறக்கவில்லை.(எப்போதுமே இந்தியா இப்படித்தான்.நயவஞ்சக சுயநலத்தின் முழுசொரூபம் இந்தியாதான்)
(இந்தியாவுக்காக பாகிஸ்தான் சென்று உளவு பார்த்த கவுசிக் உளவாளியைப்பற்றி ‘மிஷன் டு பாகிஸ்தான்’ என்ற புத்தகத்தினை கிருஷ்ணா தர் என்பவர் எழுதி வெளியிட்டார்.அந்த புத்தகத்தில் அந்த உளவாளி கவுசிக்தான் என்பதை கிருஷ்ணா தர் சொல்லவே இல்லை.
கி.பி.2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஜெயிலில் நபி அஹமத் என்ற பெயரில் இறந்துபோனது ரவிந்திர கவுசிக் என்ற இந்தியர்தான் என்பதை இந்துஸ்தான் டைம்ஸ் பிரகடனப்படுத்தியது.)

கடைசியாக,தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில், “நான் இதே வேலையை அமெரிக்காவுக்காகச் செய்து இருந்தால்,கைது செய்யப்பட்ட மூன்றே நாட்களில் வெளியே வந்திருப்பேன்” என்று மனம் நொந்து அழுதிருந்தார்.அதற்கடுத்த மூன்றாவது நாளில் கவுசிக் இறந்துவிட்டார்.
நன்றி மறக்குமா இந்தியா?மாதா மாதம் கவுசிக்கின் தாய்க்கு செலவுத் தொகை அனுப்பி வைக்கிறது.எவ்வளவு தொகை தெரியுமா? ரூ.500/-
இந்திய அரசு ஓடோடிச் சென்று தனது செல்வ மகனான கவுசிக்கைக் காப்பாற்றாமல், சாகும்வரை வேடிக்கை பார்த்துவிட்டு,கவுசிக்கின் வாழ்க்கைக்கு வெறும் ரூ.500/-ஆக மதிப்பிட்டுவிட்டது.சே!
நன்றி: ஆனந்த விகடன்,இணைப்பு:உளவாளி விகடன் பக்கம் 133,வெளியீட்டு நாள்: 23.12.2009.

SOURCE:http://intelligencenews.wordpress.com/2009/12/08/03-217/

பெட்டிக்கடை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள்

சில்லறை வணிகம் எனப்படும் பெட்டிக்கடை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள்

சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபட அனுமதி அளித்ததால் நம் நாட்டில் 4 கோடி வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என சி.ஐ.டி.யு.,சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பு தெரிவித்துள்ளன.

நமது வணிகர்களின் பண்பாடு மனித நேயம் சார்ந்தது.வெளிநாட்டு நிறுவனங்கள் அட்டைப்பூச்சிக்குச் சமமானவை.
நாம் நியாயமான விலை வைத்து விற்பனை செய்பவர்கள்.அவர்கள் நஷ்டம் வந்தாலும் பொதுமக்களைக் கவர ஆரம்ப காலத்தில் விலையை அடிமட்டத்தில் குறைத்துவிற்பர்.இதன்மூலம்,நம் நாட்டு சுதேசி வர்த்தகர்களை ஓட்டாண்டியாக்கிவிடுவர்.பிறகு தாம் மட்டுமே அந்த வர்த்தகத்தில் இருக்கும் நிலையை,வர்த்தக சர்வாதிகார நிலையை உருவாக்கியதும்,விலையை தாறுமாறாக உயர்த்துவர்.இதனால்,நமது நாட்டின் சாதாரண மக்களால் எதையும் வாங்கிட முடியாது.இந்த முட்டாள் அரசு கோடிக்கணக்கில் கமிஷனும்,லஞ்சமும் பன்னாட்டு நிறுவனங்களிடம் வாங்கிக்கொண்டு,நமது நாட்டின் பெட்டிக்கடை வியாபாரத்தின் கழுத்தை நெறிக்கிறது.

செல்போன் குறுந்தகவல் மூலமாக ரத்ததானம் பெறலாம்

அவசரகாலத்தில் இரத்த தானம் பெறுவது எப்படி?

தற்போது இரத்த தானம் பெறுவது எளிதாகிவிட்டது.நீங்கள் செய்ய வேண்டியது 9600097000 என்ற எண்ணிற்கு BLOOD (தேவைப்படும் ரத்த வகையின் பெயர்) என்று SMS அனுப்ப வேண்டும்.உதாரணம் BLOOD B+.உடனே நீங்கள் கேட்கும் வகை ரத்தம் கொடுக்கக்கூடியவர் உங்களைத் தொடர்புகொள்ளுவார்.

தாய்லாந்து அரசாங்கத்தின் பெருந்தன்மைதாய்லாந்து அரசாங்கத்தின் பெருந்தன்மை

சமீபத்தில் தாய்லாந்து இந்துக்கடவுள்களின் படத்துடன் அஞ்சல்தலைகள் வெளியிட்டுள்ளது.விநாயகர்,பிரம்மா,விஷ்ணு,சிவபெருமான் ஆகிய கடவுளர்களின் படங்களுடன் நான்கு அஞ்சல்தலைகளையும், நான்கு முதல்நாள் அஞ்சல் உரைகளும் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.இதன்மூலம்,அந்த நாடு நமது பாரத நாட்டுடன் கொண்டுள்ள இந்துப்பண்பாட்டுத்தொடர்பை பறைசாற்றிக்கொள்வதாக வெளியிட்டுள்ளது.

நன்றி & ஆதாரம்:ttp://hinduexistence.wordpress.com/2009/12/17/thailand-government-released-new-postage-stamps-on-hindu-deities/

இந்துமதத்தைக் கொசசைப்படுத்தும் புத்தகம்

புதுடில்லி : "இந்து மத வரலாற்றைப் புதிய நோக்கில் விவரிப்பதாகக் கூறி கொச்சைப்படுத்தும் புத்தகத்தைத் தடைசெய்ய வேண்டும்' என்று போர்க்கொடி எழுந்துள்ளது; எம்.பி., ஒருவர் பார்லிமென்டில் கோரிக்கை விடுத்துள்ளார்; தடைசெய்யக் கோரி ஆன்-லைனில் பலத்த பிரசாரமும் நடந்து வருகிறது.


பிரபல ஆங்கிலப் பதிப்பகமான "பெங்குயின்', சமீபத்தில், வெண்டி டோனிஜெர் என்ற பெண்மணி எழுதிய "தி ஹிண்டுஸ்: ஆன் அல்டர்நேட்டிவ் ஹிஸ்டரி' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இது இந்து மத வரலாற்றை "வித்தியாசமான' கோ ணத்தில் அலசிப் பார்ப்பதாகக் கூறுகிறது. பார்லிமென்டில் கேள்வி நேரத்தின் போது பிஜு ஜனதா தளக் கட்சி எம்.பி., பர்த்ருஹரி மத்தாப்,"பெங்குயின் பதிப்பகம் இதை வாபஸ் பெற வேண்டும். இதில், இந்துமதம் பற்றி மிக மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் தேவையில்லாத பதட்டத்தைத்தான் இது உருவாக்கும். இதுபோன்ற புத்தகங்கள் உருவாவதையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாவதையும் தடை செய்ய வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டார். "இப்புத்தகம் முழுவதும் வக்கிரமான சிந்தனைதான் கொட்டிக் கிடக்கிறது. இந்து மதக் கடவுள்கள் ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்துக்களின் புனித நூலான வேதங்கள் இதில் திரிவுப்படுத்தப்பட்டிருக்கின்றன. பல விஷயங்கள் ஆதாரம் இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளன.


இன்றைய அறிவியல் உலகத்தில் ஆய்வாளர்களால் புறக்கணிக்கப்பட்ட சிக்மண்ட் பிராய்டு என்பவரின் சிந்தனையின் அடிப்படையில் இந்துமதத்தை நூலாசிரியர் ஆய்வு செய்து எழுதியுள்ளார். அவர், நடைமுறையில் இந்துமதப் பாரம்பரியங்கள், சடங்கு முறைகள், அவை கூறும் தத்துவங்கள் போன்றவற்றைக் கணக்கில் எடுக்காமல் மனம்போன போக்கில் வரலாற்றைத் திரித்து எழுதியுள்ளார். வால்மீகி ராமாயணத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு வேண்டும் என்றே தவறான அர்த்தங்களை நூலாசிரியர் கொடுத்துள்ளார். மொத்தத்தில் நூல் முழுவதும் அபத்தக் களஞ்சியமாகவும், நூலாசிரியரின் மன வக்கிரத்தை வெளிப்படுத்துவதாகவும்தான் உள்ளது. இதிலுள்ள ஒவ்வொரு அத்தியாயங்களும், இந்துமதத்தை நன்றாக அறிந்தவருக்கு அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தும். இந்துக்கள் மற்றும் இந்தியா பற்றிய தவறான அபிப்ராயத்தைப் புதியவர்களுக்கு ஏற்படுத்தும். மாணவர்கள் மத்தியில் இந்தியா மற்றும் இந்து வரலாறு குறித்து மோசமான கருத்தைத்தான் இது உருவாக்கும். எனவே, இதைத் தடைசெய்ய வேண்டும். பதிப்பகம் இப்புத்தகத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' இவ்வாறு இந்தப் புத்தகத்தை எதிர்த்து ஆன்-லைனில் பிரசாரம் செய்து வருகின்றனர்.


கர்ம வியாதி என்றால் என்ன?

கர்ம வியாதி என்றால் என்ன?

அரசு வேலை என்பது இன்றும் ராஜ மரியாதை தருவதாகத்தான் இருக்கிறது.என்னதான் ஐ.டி.எனப்படும் சாப்ட்வேர் வேலையில் இருந்தாலும்,சாப்ட்வேர் இளசுகள் பேசும் பொய்கள் மிகவும் நம்பும்படியாகவும், தமது மரியாதையை செல்போன் டவர் அளவிற்கும் உயர்த்தும்விதமாக தனது பழக்கவழக்கத்தை வைத்துக்கொள்வதால், தமிழ்நாட்டின் இளைய சமுதாயம் ஐ.டி.வேலை பார்ப்பது மிகவும் உயர்ந்த கவுரவம் என நம்பிக்கொண்டிருக்கிறது.

அதே சமயம், ஐ.டி.வேலை பார்ப்பவர்கள் அங்கிருந்து நிரந்தரமான, பாதுகாப்பான, வேலை மிகவும் குறைந்த அரசாங்கப்பணிக்குத் தாவுவதை ஒரு கடமையாகக் கொண்டிருக்கிறது.என்னதான் ரூ.50,000/- ரூ.75,000/- மாதச் சம்பளம் வாங்கினாலும்,ஐ.டி.பணியாளர்களுக்குத் தெரியும் ‘இந்த வேலை நிரந்தரமில்லை;எந்த நிமிடமும் இந்த வேலையிலிருந்து நாம் வெளியேற்றப்படுவோம்.அப்படியே தாக்குப்பிடித்தாலும், அதிகபட்சம் ஐந்து அல்லது பத்துவருடங்கள் தான் இதில் ஒட்டிக்கொண்டிருக்க முடியும்’என்று.

அதனால்,கடந்த 2008,2009 ஆம் ஆண்டுகளில் ஐ.டி.அறிவுப்புலிகள் அங்கிருந்தவாறே மத்திய மாநில அரசுப் பணிகளுக்குத் தாவத் தொடங்கியுள்ளனர்.தனது அரசுப்பணிச் சேர்க்கைக்காக எல்லாவிதமான குறுக்கு(?!) வழிகளையும் பின்பற்றி ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.அதுபோகட்டும்.அவர்களாவது நல்லா இருக்கட்டும்.

நாம் நமது ஆன்மீகத்தை இங்கே பார்ப்போம்:
ஒரு அரசு ஊழியர் தனது அரசுப்பணியை சுமார் இரண்டு ஆண்டுகளில் நிரந்தரப்படுத்திவிடுகிறார்.சுமார் 300 நாட்கள் வேலை பார்த்தாலே,தான் ஒரு நிரந்தர அரசு ஊழியர் ஆகிவிடுகிறார்.அதே 300 நாட்கள் வரை மட்டுமே அவரால் ஓரளவு அப்பாவியாக இருக்கமுடியும்.அதன் பிறகு,அவர் திறமையாக லஞ்சம் வாங்க கற்றுக்கொள்கிறார்.கூடவே,மதுவுக்கும் அடிமையாகிவிடுகிறார்.இந்த இரண்டு பழக்கத்திற்கும் அவரது சக ஊழியரால்/ஊழியர்களால் அடிமைப்படுத்தப்படுகிறார்.
ஐந்துவருடங்களில் அவரது லஞ்சப்பணமானது,பங்களாவாகவும், பண்ணை வீடாகவும்,தங்க வைர நகைகளாகவும்,பங்கு பத்திரங்களாகவும்,மனையாகவும்,வீடுகளாகவும் மாறிவிடுகிறது.லஞ்சத்தின் அளவினைப் பொறுத்து அவருக்கு ஏதாவது ஒரு கர்மவினை(வயிறெரிந்து தரும் லஞ்சம்) நோயாகவும் மாறிவிடுகிறது.வாங்கும் சம்பளம் வீட்டுச்செலவுக்கும்,வாங்கும் லஞ்சம் கர்மவினை நோய்க்கு மருத்துவச்செலவாகவும்,மொடாக்குடிக்கான செலவாகவும் செலவழிந்துவிடுகிறது.
சுமார் 10 வருடத்துக்கும் மேலாக,லஞ்சம் வாங்குபவரின் வீட்டுப்பெண்கள் தடம் மாறிப்போகின்றனர் அல்லது லஞ்சம் வாங்குபவரின் பிரியமான உறவு திடீரென இறந்துபோய்விடுகிறது. மேலும்,பிரியமான உறவுகளில் சில மன நோயாளியாகவும்,வம்சப்பரம்பரையில் சில அல்லது ஒரு உடல் அல்லது மனக்குறைபாடுடைய குழந்தையும் பிறக்கிறது.

அரசுப்பணியைத் தவிர, வர்த்தகம் செய்பவர்களுக்கும் கர்மவினை நோய் வரத்தான் செய்கிறது.எப்படியெனில்,நியாயமான லாபம் வைக்காமல், கொள்ளைலாபம் அடிப்பவர்களுக்கும் இதே நிலைதான்.அது பலசரக்கு,கணிப்பொறி,பொழுதுபோக்கு,கேளிக்கை,உணவு விடுதி,வாகனக் கட்டுமானம்,சேவைத் தொழில்கள்,தனியார் வங்கி(உதாரணமாக இந்தியாவில் முதன் முறையாக ஏ.டி.எம்மை அறிமுகப்படுத்திய வங்கி நிர்வாகம்),செல்போன் நிறுவனங்கள்,போக்குவரத்து நிறுவனங்கள்,தரகுத் தொழில் என சகலவிதமான தொழில்களையும் அடுக்கலாம்.
சரி! அப்போ எல்லோரும் கர்ம நோயுடன் தான் வாழ்ந்துவருகிறார்களா? இல்லை.

அம்பலமாகும் உங்கள் அந்தரங்கங்கள்

அம்பலமாகும் உங்கள் அந்தரங்கங்கள்இன்று நம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மொபைல்.........கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமலர் செய்தி தாளில் ஒரு செய்தியை படித்தருப்பீர்கள். சில வக்கிரம் எண்ணம் கொண்டவர்கள். தன்னுடன் பழகிய, படித்த, பணி புரிந்த பெண்களை வக்கிரமாக மொபைல் போனில் படம் பிடித்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள அது பரவி சம்பந்தப்பட்ட சில பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவமும் நடந்ததது.

இது போன்ற சம்பவம் எனது காவல் நிலையத்திலும் நடந்ததால் இந்த பதிவை எழுதுகிறேன். கடந்த சில நாட்களுக்குமுன்பு இரவு பணி செய்து கொண்டிருந்த போது ஒரு 16 வயது மதிக்கத்தக்க ஒருவன் சந்தேகப்படும்படி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்ததாக சக அலுவலர் அழைத்து வந்தார். அவரை சோதனையி்ட்ட போது அவர் வைத்திருந்த போன் விலை உயர்ந்ததாக இருக்க சரி பார்க்கலாம் என்று அந்த போனை நோண்டி கொண்டிருந்தேன். அதில் சில வீடியோக்களும் இருக்க பார்த்தால் அத்தனையும் குடும்ப பெண்கள். வீடு கூட்டும் போது, துவைக்கும் போது உடை மாற்றும் போது, குளிக்கும் போது இதை விடக் கொடுமை ஒரு தாய் தன் குழந்தைக்கு பால் ஊட்டும் போது அந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டிருந்தது.

பிறகு அவனை அழைத்து "உரிய" முறையில் விசாரிக்க அவர்கள் தன் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் என்றும் தான் விளையாட்டாய் எடுத்ததாகவும் கூறினான். பிறகு அடுத்த நாள் காலை வரை வைத்திருந்து அவனது தந்தைக்கு போன் செய்து வரச் சொல்லி, வீடியோவில் சம்மந்தப்பட்டவர்களையும் வரச் சொல்லி இது குறித்து கூற அவர்கள் அனைவரும் அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தங்களின் வீட்டருகே பல வருடங்களாக குடியிருப்பதாகவும் சிறு வயதிலிருந்தே அவனை தெரியும் என்பதால் தாங்கள் அவனை சந்தேக படவில்லை என்றும் புகார் அளித்தால் தங்கள் பெயரும் கெட்டுவிடும் என்று கூறியதால் அவனது தந்தையை அழைத்து எச்சரித்து எனக்கு தெரிந்த மொபைல் கடையில் அவனது மொபைல் ஐ கொடுத்து பிளாஷ் செய்து அவனது மெமரி கார்டை அவர்கள் முன்னிலையிலேயே உடைத்து. விட்டேன்.

பெண்களுக்கு : உங்கள் நெருங்கிய தோழியாக இருந்தாலும் உங்களை அரைகுறை ஆடையுடன் படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம் ( விளையாட்டாக இருந்தாலும் கூட ) ஏனென்றால் தோழி என்றும் உங்களுக்கு தோழியாக இருக்க போவதில்லை சின்னப்பிரச்சினை வந்தாலும் உங்களின் நிலை ?

இன்னொரு பிரச்சினை பெண்களுக்கு ( ஆண்களுக்கும் கூட ) வரும் மொபைல் அழைப்புகள் முடிந்தவரை உங்களுக்கு தெரியாத எண்களில் அழைப்புகள் வந்தால் அட்டன் செய்ய வேண்டாம். இரண்டு முறை முன்று முறை அழைப்புகள் வந்தால் அருகில் உள்ள ஆண் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கொடுத்து பேச செய்யுங்கள் தெரிந்தவர்கள் என்றால் வாங்கி பேசுங்கள்.

மற்றொன்று நீங்கள் உங்கள் காதலனிடமே அல்லது காதலியிடமோ ( அல்லது மற்றவரிடமோ) மொபைலில் பேசும் எதிர் முனை பீப்... பீப்...பீப்... என்ற ஒலி கேட்கிறதா என்று பாருங்கள் அப்படி ஒரு ஒலி கேட்டால் உங்கள் பேச்சுக்கள் ரெக்கார்டு செய்யப்படுகிறது என்று அர்த்தம். முடிந்தவரை அப்போதே உங்கள் தொடர்பை துண்டியுங்கள்.

பேசும் போது சரி தெரியாதவர்களிடமிருந்து எஸ்எம்.எஸ் வந்தால் ? கண்டு கொள்ளாதீர்கள். திரும்ப நீங்கள் Who are You ? / Who is This ? / Your Name Pls என்று எஸ்எம்.எஸ் அனுப்ப ஆரம்பித்தால் அங்கு ஆரம்பிக்கும் சனி. எஸ்எம்.எஸ் அனுப்பியவன் உங்களின் பதிலால் உற்ச்சாகமாகி உங்களிடம் பேச்சை வளர்ப்பான். உங்களிடம் உரிய பதில் இல்லை என்றால் மறுபடி எஸ்எம்.எஸ் வராது. அப்படி மீறி எஸ்எம்.எஸ் ஓ தேவையில்லாத அழைப்புகள் வந்தால் தாராளமாக உங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் காவல் துறைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல. தாராளமாக புகார் தெரிவிக்கலாம். உங்களை பாதிக்கும் என்றால் உங்களை பற்றிய விபரங்கள் ரகசியமாக வைப்பார்கள். எங்களுக்கும் நண்பர்கள், குடும்பம், உறவினர்கள் உண்டு.

மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்க்க :

பெண்கள் முடிந்தவரை கணவனோ, காதலனோ தன்னை ஆபாசமாக படம் எடுப்பதை அனுமதிக்கூடாது.
முடிந்தவரை தனது மொபைல் எண்களை அவசியம் ஏற்பட்டாலன்றி யாருக்கும் அளிக்க வேண்டாம்.
முடிந்தவரை ஈஸி ரீச்சார்ஜ் ஐ பயன் படுத்தாதீர்கள் ( ஒரு கடையில் பெண்களின் எண்களை மட்டும் தனியாக குறித்து அவர்களுக்கு கடை பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பி பெண்கள் பாதிக்கப்பட்டதனால் இந்த குறிப்பு )
வீடு மற்றும் பொது இடங்களில் தங்களின் உடலை வெளிப்படுத்தும் வண்ண்ம் உடை அணிய வேண்டாம்.

என்னடா எல்லாம் பெண்களுக்கே அட்வைஸ் பண்றானே நமக்கில்லையா என்று யோசிக்கும் ஆண் நண்பர்களுக்கு...

முடிந்தவரை உங்கள் பிள்ளைகளுக்கு கேமிரா, புளுடுத் இல்லாத மொபைல்களை வாங்கி கொடுங்கள். மொபைல் என்பத நாம் அவர்களை தொடர்பு கொள்வதற்காக மட்டுமே இருக்கட்டும்.

அப்புறம் ஒன்னு. நம்மளையெல்லம் அரைகுறையா போட்டோ எடுத்து எவன் பாக்கறது. முடிந்தவரை உங்கள் உறவினர்கள், பெண் தோழிகளுக்கு மொபைல் போனால் ஏற்படும் விபரீதங்களை எடுத்து சொல்லுங்கள்.


நன்றியுடன்.................நன்றி:கட்டபொம்மன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம்

புத்த மதத்தை அழிக்க முயற்சிக்கிறது சீனா: தலாய் லாமா குற்றச்சாட்டு


புத்த மதத்தை அழிக்க முயற்சிக்கிறது சீனா: தலாய் லாமா குற்றச்சாட்டு:நன்றி:தமிழ் வெப்துனியா 10.3.2010


திபெத் பிரச்சனைக்கு தான் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளையும் கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்த சீன அரசு, திபெத்தில் புத்த மதத்தை முழுமையாக அழித்து ஒழித்துவிடும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது என்று திபெத் தலைவர் தலாய் லாமா குற்றம் சாற்றியுள்ளார்.

1959இல் திபெத்தை ஆக்கிரமிக்க சீனா மேற்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தியர்கள் நடத்திய போராட்டத்தின் 51வது ஆண்டு தினத்தை முன்னிட்ட ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலாய் லாமா, “பெளத்தத்தை கொன்றொழிக்க முயற்சிக்கிறது சீனா” என்று நேரிடையாக குற்றம் சாற்றினார்.

திபெத்திற்கு தான் கேட்பது சுயாட்சிதான் என்றும், அதன் மூலம் தங்களுடைய ஆன்மீக வழியையும், பண்பாட்டையும், மொழியையும் திபெத்தியர்கள் காப்பாற்றிக்கொள்ள அந்த அளவிற்காவது சுதந்திரம் வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று கூறினார்.

ஆனால், தனது முயற்சிகளையும் கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்த சீன அரசு, திபெத்தில் ‘தேசப்பற்றுக் கல்வி’யைப் போதிக்க முயற்சித்து வருகிறது என்று கூறினார்.

“திபெத்திலுள்ள மடங்களில் உள்ள சன்யாசிகளை சிறை வைப்பது போன்று அடைத்து, அவர்கள் தங்கள் ஆன்மீகப் பணிகளை தொடர்வதற்கு தடை ஏற்படுத்தி வருகிறது. பெளத்தத்தை கொன்றொழிக்கும் முயற்சியில் நேரிடையாக ஈடுபட்டு வருகிறது. இதையெல்லாம் சீன அரசு ஏற்கிறதோ இல்லையோ, அங்கு மிக மோசமான பிரச்சனை தோன்றியுள்ளது” என்று தலாய் லாமா கூறியுள்ளார்.

“இன்றுள்ள சீனத் தலைமையின் போக்கை வைத்துப் பார்க்கும்போது. எந்தத் தீர்வும் எட்டுவதற்கான சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஆயினும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண தொடர்ந்து முயற்சிப்பது என்ற எங்கள் நிலையில் மாற்றமில்லை” என்றும் தலாய் லாமா கூறியுள்ளார்.

சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய அந்த நிகழ்வை குறிக்கும் நாளில் தலாய் லாமாவின் உரையைக் கேட்க பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்கள் தர்மசாலா வந்திருந்தனர்.


தலாய்லாமா அவர்களின் கருத்து:இன்றைய தினகரன் பத்திரிகையில்

இந்திய அரிசியாலும்,இந்தியப் பணத்தாலும் எனது உடல் பாதுகாக்கப்பட்டு,பராமரிக்கப்பட்டு வருகிறது என புத்த மதத்தின் தலைவர் தலாய்லாமா அறிவித்துள்ளார்.இது அவரது பெருந்தன்மையான குணத்தைக் காட்டுகிறது.

ஆனால்,இந்துமதத்தின் ஒரே நாடான இந்தியாவாகிய நாம் நமது சகோதர மதமான புத்தமதத்தையும்,புத்த மத நாடான திபத்தையும் சீனாவின் ஆதிக்கத்திலிருந்து காக்கவும்,வழிநடத்தவும் தவறிவிட்டோம்.வரலாறு நம்மை மன்னிக்கவே மன்னிக்காது.

மதம் என்பது இயற்கைப் பாதுகாப்பு - அமிர்தானந்தமயி


மதம் என்பது இயற்கைப் பாதுகாப்பு - அமிர்தானந்தமயி
மதம் என்பது குருட்டு நம்பிக்கை என்று கூறி, சிலர் கேலியாகச் சிரிப்பதைக் காணலாம். ஆனால் இப்படிக் கூறுபவர்களின் செயல்களே இயற்கைக்கு மிகவும் கெடுதலாக மாறுகின்றன. இந்தப் பொய்யான பகுத்தறிவுவாதிகளைவிட இயற்கையின் மீது அன்பு செலுத்துவதும், அதைப் பாதுகாப்பதும் மத உணர்வைப் பெற்றுள்ள சாதாரண மக்களே. மதத்தில் கூறப்படும் சில விஷயங்கள் தவறென்று நிரூபிக்க அறிவியலை உதாரணம் காட்டச் சிலர் முயல்வதைக் காணலாம். ஆனால் பெளதிக அறிவியல் தெரிந்துகொள்வதற்கு இன்னும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன என்பதை அவர்கள் மறுக்கின்றனர்.

மதம் வெறும் குருட்டு நம்பிக்கை என்று சொல்பவர்கள் அதன் ஆசாரங்களின் பின்னே உள்ள சாஸ்திர தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. மத தத்துவங்கள் ஏதாவது ஒரு பிரிவைச் சேர்ந்தவருக்காக மட்டும் கூறப்படுபவை அல்ல. எல்லா நிலையில் உள்ளவர்களுக்கும் தேவையானது அதில் உண்டு. சிறு குழந்தைகளுக்குத் தேவையானதும், பத்து வயதுச் சிறுவனுக்கு வேண்டியதும், இளைஞனுக்குப் பொருந்துவதும், நூறு வயதுள்ள கிழவருக்குத் தேவையானதும், பைத்தியக்காரர்களுக்கும், அறிவாளிகளுக்கும் தேவையானவையும் சாஸ்திரங்களில் உள்ளன.

ஒவ்வொருவரின் இயல்பிற்கு ஏற்ப, அவற்றிற்குப் பொருந்தும் ரீதியிலுள்ள தத்துவங்களே மதத்தில் உள்ளன. ராணுவத்திற்கும், காவல் துறையிலும், அலுவலகத்திலும் வேலை செய்வதற்குத் தேவையான தகுதிகளில் வித்தியாசமுண்டு. அதுபோல், மாறுபட்ட இயல்புள்ளவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட பல தத்துவங்கள் மதத்தில் உள்ளன. அனைத்தும் ஒன்றாக இருக்கும்போது, சில நேரங்களில், சில தத்துவங்கள் நமக்குப் பொருந்தாதவையாக இருக்கும். ஆனால், ஒவ்வொன்றும் ஒவ்வொருவரையும் கருத்தில் கொண்டு கூறப்பட்டதாகும். மத தத்துவங்களை அறிய முற்படுகையில் இந்தத் தெளிவு நமக்கு இருக்க வேண்டும்.

நம்பிக்கையின்றி யாரால் வாழ முடியும்? எத்தனையோ பேர் விபத்துகளிலும், வேறு விதங்களிலும் இறக்கின்றனர். பேசிக்கொண்டு நிற்கும்போதே இறந்து விடுகின்றனர். இருந்தபோதும் "நாம் இப்போது சாகமாட்டோம்" என்ற குருட்டு நம்பிக்கையே நமக்கு இருக்கிறது. இதுபோல் எந்த ஒரு செயலிலும் - அவ்வளவு ஏன்! - ஒவ்வொரு நிமிடத்திலும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வது நம்பிக்கையே ஆகும். இங்கே குண்டு விழாது என்ற நம்பிக்கையால்தான். தனது மகளைக் கண்கலங்காமல் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் தான் ஒருவர் தன் மகளை ஒரு ஆடவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். நாம் குடிக்கும் தண்ணீர் விஷமில்லை என்ற நம்பிக்கையே அதைக் குடிக்க நமக்கு வழி செய்கிறது.

இப்படி பார்க்கும்போது வாழ்க்கையின் எந்த நிலையிலும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வது நம்பிக்கையே ஆகும். எதையும் நம்பிக்கையுடன் பார்க்கும்போதுதான் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். தான் விரும்பும் பெண் தருகின்ற கசப்பையும், இனிப்பாக எண்ணி அருந்த முடியும்.