RightClick

ருத்திராட்சத்தின் சக்தியால் நவக்கிரகங்களின் பாதிப்பைக் குறைக்க முடியும்


ருத்திராட்சத்தின் மகிமைகள்

சிவபெருமானின் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணின் அம்சமாகக் கருதப்படுவது ருத்திராட்சமாகும்.ஒரு முகத்திலிருந்து 32 முகம் வரை ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன.இவை பெரும்பாலும் நேபாளத்திலிருந்தே நமக்கு வருகின்றன.சதுரகிரி,திரு அண்ணாமலை,பொதிகை மலையிலும் ஓரளவு கிடைக்கின்றது.

ஒருவருக்கு ருத்ராட்சம் அணியும் எண்ணம் வருவதற்கே அவர் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.ருத்ராட்சம் மனித உடலின் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடியது.மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றில் புண் உருவாகிறது.அதன் அடையாளமாக வாயில் புண் உண்டாகிறது.வயிற்றிற்கும்,வாய்க்கும் இடைப்பட்ட கழுத்துப்பகுதியில் கட்டப்படும் ருத்ராட்சம் இந்த அதீத வெப்பத்தை உறிஞ்சிவிடுகிறது.தவிர, கண்திருஷ்டியிலிருந்து நம்மைக் காக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு.

பஞ்சபூதங்களை எதிர்கொள்ளும் சக்தி ருத்ராட்சத்திற்கு உண்டு.பஞ்சபூதங்களின் குறிப்பிட்ட விகிதச்சேர்க்கையே நவக்கிரகங்களாகும்.நவக்கிரகங்களின் செயல்பாடுகளால்தான் ஒருவர் கோயில் கட்டுவதும்,மற்றவர் விபச்சாரம் செய்வதும்,மற்றவர் கொலை செய்யப்படுவதும் காரணமாக அமைகிறது.நவக்கிரகங்களின் தூண்டலால் ஒருவர் தீயச் செயல் செய்யாமல் தடுக்கும் சக்தியும்,நவக்கிரகங்களின் பாதிப்பை 100% அளவு இல்லாவிட்டாலும் 70% அளவு குறைக்கும் சக்தி ருத்ராட்சத்திற்கு உண்டு.

இந்துக்காலக்கணக்கீடு

இந்துக்காலக் கணக்கீடு

அறுபது நொடிகள் ஒரு நிமிடம்

பதினைந்து நிமிடங்கள் கொண்டது ஒரு காஷ்டை

பதினைந்து காஷ்டைகள் கொண்டது ஒரு கலை

முப்பது கலைகள் கொண்டது ஒரு முகூர்த்தம்

முப்பது முகூர்த்தங்கள் கொண்டது ஒரு திதி

முப்பது திதிக்கள் கொண்டது ஒரு மாதம்

இரண்டு மாதங்கள் கொண்டது ஒரு ருது

மூன்று ருதுக்கள் கொண்டது ஒரு அயனம்

இரண்டு அயனங்கள் கொண்டது ஒரு வருடம்

இவை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படும்போது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் தற்போதைய குறைகள் கொண்ட கிரிகோரியன் காலண்டர் முறை வழக்கத்திலிருந்து நீக்கப்பட்டு,இந்துக்காலக்கணக்கீடு முறை எல்லா மதம்,எல்லா நாடு,எல்லா மொழி,எல்லா இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.இந்நிலை கி.பி.2025க்குள்ளாகவே நடைமுறைக்கு வந்துவிடும்.

உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்

ஒருவரது பிறந்த நட்சத்தரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி,திருஅண்ணாமலை,பழனி,திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர்,திருப்பதி,திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.
இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:
அசுவினி - எட்டி

பரணி - நெல்லி

கார்த்திகை - அத்தி

ரோகிணி - நாவல்

மிருகசீரிடம் - கருங்காலி

திருவாதிரை - செங்கரு

புனர்பூசம் - மூங்கில்

பூசம் - அரசு

ஆயில்யம் - புன்னை

மகம் - ஆலமரம்

பூரம் - பலாசு

உத்திரம் - அலரி

அஸ்தம் - வேலம்

சித்திரை - வில்வம்

சுவாதி - மருதம்
விசாகம் - விளா

அனுஷம் - மகிழம்

கேட்டை - பிராய்

மூலம் - மாமரம்

பூராடம் - வஞ்சி

உத்திராடம் - பலாசு

திருவோணம் - எருக்கு

அவிட்டம் - வன்னி

சதயம் - கடம்பு

பூரட்டாதி - தேமா

உத்திரட்டாதி - வேப்பை

ரேவதி - இலுப்பை


உங்கள் வீட்டிலேயே காய்கறித்தோட்டம் அமைக்கலாம்.ஆரோக்கியமும் சிக்கனமும் கிடைக்கும்

காய்கறி வளர்க்கலாம் வாரியளா?
அப்பாடா, ஒரு வழியாக கோடை காலம் முடிந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையைச் சுற்றி ஓரளவுக்கு மழை பெய்திருக்கிறது. கூடிய விரைவில் தமிழகம் முழுக்க நல்ல மழை பெய்ய வேண்டும் என்பது என் ஆசை.

இந்த மழை காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு நல்ல யோசனை. உங்கள் வீட்டில் கொஞ்சுண்டு இடம் இருக்கா? கொஞ்சம் இடுப்பை வளைத்து வேலை செய்ய நீங்கள் தயாரா? சத்தான, உடம்புக்கு எந்தத் தீங்கும் செய்யாத காய்கறிகளைச் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா?

மேலே கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்று பதில் சொன்னீர்கள் என்றால், ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் காய்கறி வளரக்கப் புறப்படலாம்.

உங்கள் வீட்டில் காய்கறி வளர்ப்பதினால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். முதலில் காய்கறிக்காக நீங்கள் செலவு செய்யும் அத்தனை பணத்தையும் மிச்சப்படுத்தி விடலாம். ஞாயிற்றுக்கிழமை காய்கறி மார்க்கெட்டுக்குப் போய் கண்ணீர் விட்டு காய்கறி வாங்கினேன். விலைப்பட்டியலைக் கொஞ்சம் பாருங்கள்.

தக்காளி - 32 ரூ. காரட் - 32. பீன்ஸ் - 40. வெங்காயம் - 28. முருங்கைகாய் ஒன்று - 4 ரூ. சென்னையில் லட்ச ரூபாய் சம்பாதித்தாலும் கையில் காசு மிஞ்சாது போலிருக்கு.

இந்த மாதிரியான புலம்பலை எல்லாம் வீட்டில் காய்கறி வளர்ப்பதன் மூலம் எளிதாகத் தவிர்த்துவிடலாம். வருஷத்து மூவாயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.

தவிர, ரசாயணம் மருந்துகள் கலக்காத காய்கறிகள் உங்களுக்குக் கிடைக்கும். மார்க்கெட்டில் விற்பனை ஆகும் காய்கறிகள் அளவுக்கதிகமான ரசயாண மருந்து கொட்டி வளர்க்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்தக் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் நன்மை விட தீமைகளே அதிகம்.

இன்னொரு முக்கியமான விஷயம், சுவை. இயற்கையாக வளர்க்கப்படும் காய்கறிகளின் சுவையே தனி. சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.

வீட்டுத் தோட்டத்தில் காய்கறி வளர்ப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியாதே என்றெல்லாம் சொல்லாதீர்கள். முதலில் தக்காளியைப் பிழிந்து விட்டு வளர்க்க ஆரம்பியுங்கள். பிறகு கீரை, வெண்டை, கத்தரி.. இப்படி ஒவ்வொன்றாக வளர்க்கக் கற்றுக் கொள்ளலாம்.

வீட்டில் இடம் இல்லையா? நோ ப்ராபளம். மாடியில் மண் தொட்டி வச்சு அருமையா காய்கறி வளர்க்கலாம்.

மரம், செடிகொடிகளை வளர்ப்பது என்பது ஒரு வகை தியானம். அது நமக்குக் கொடுக்கும் உற்சாகமே தனிரகம்.

இந்த மழைக் காலத்தை முழுமையாக நீங்கள் அனுபவிக்க காய்கறி வளருங்க. என்ன விதை, எங்கே கிடைக்கும் என்கிற மாதிரி எந்த சந்தேகம் வந்தாலும் இந்த சம்சாரிகிட்டே கேளுங்க.
Posted by a.rajaramkumar@gmail.com
நன்றி:www.samsari.blogspot.com

இயற்கை சர்க்கரை வாங்க விரும்புகிறீர்களா?

MONDAY, JUNE 18, 2007
இனிப்புப் பிரியர்களின் கவனத்துக்கு!
இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பாலில் வரை சர்க்கரை ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளைச் சர்க்கரையை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சர்க்கரைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாருங்கள்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு வருகிறது சர்க்கர. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சர்க்கரையில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சர்க்கரையில் விஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

உங்கள் சட்டை காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சர்க்கரையை எடுத்து தேய்த்துப் பாருங்க. நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு சமாச்சாரத்தைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்?

குடல் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி (ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான நுழைவுவாயில்) நிச்சயம் வரும்.

சரி, இன்று முதல் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட வேண்டாம். இனி இனிப்புக்கு என்ன வழி?

வழியில்லாமல் இல்லை. ஆலைகளில் தயாரான வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை ஒழித்துக் கட்டிவிட்டு, வெல்லம், நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

தமிழகம் முழுக்க உள்ள சில இயற்கை விவசாயிகள் தாங்களே சொந்தமாக கரும்பு வளர்த்து, வெல்லத்தையும் நாட்டுச் சர்க்கரையையும் செய்துவிற்கிறார்கள். நல்ல வெல்லத்தையும் நாட்டுச் சர்க்கரையும் தேவைப்படுகிறவர்கள் பின்வரும்முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

சீத்தா ஏகாம்பரம்,
அருணோதயம் இயற்கை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கம்,
திருவண்ணாமலை.

நன்றி:www.samsari.blogspot.com

இந்திய விவசாயத்தின் நிஜமுகம்

விளைச்சலைப் பெருக்க நினைக்கும் வீரபாண்டியார் கவனத்துக்கு!
பள்ளிக்கூடம் போய் படிக்காமலே அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகவும் மாமேதையாகயும் விளங்குகிற மண்ணாங்கட்டிக்கு கடந்த பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை.

அவனுக்கு இது கேடு காலம். அதனால் அவன் விளங்காமல் போய்க் கொண்டிருக்கிறான் என்று சொன்னார்கள் சிலர். அளவுக்கதிகமாக வெயிலும் மழையும் மாறி மாறி அடிப்பதால்தான் அவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக சொன்னார்கள் வேறு சிலர்.

மண்ணாங்கட்டியின் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு உண்மையான காரணம், சமீப காலமாக தனக்குக் கொஞ்சமும் ஒவ்வாத, தன் உடல்நலத்தைக் கெடுக்கக்கூடிய சாப்பிட்டு வருவதுதான்.

இந்த உண்மையை உணர்ந்து மண்ணாங்கட்டிக்கு மருத்துவம் செய்ய யாருமே தயாராக இல்லை. பல மருத்துவர்களும் தப்பும் தவறுமாக மருத்துவம் செய்த பிறகு ஒரு நன்னாளில் ஊர்ப் பெரியவரின் இளைய மகன் சொன்னான்.

‘'இனி மண்ணாங்கட்டி உடுத்தும் உடைகள் ஆற்றுப்படுகையில் துவைத்து கழுதை மீது கொண்டு வரவேண்டாம். கழுதைக்கு பதிலாகக் குதிரைகளின் மீது ஏற்றி வருவோம்''.

இந்தத் தீர்ப்பைக் கேட்டு பதினெட்டு பட்டியும் பலத்த கரகோஷம் செய்தது. ஆனால், மண்ணாங்கட்டியோ தன் வேதனையை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்று மெளனமாக அழுது கொண்டிருந்தது.

இது ஏதோ ஒரு குட்டிக்கதை அல்ல. இந்திய விவசாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை. மண்ணாங்கட்டி என்பது வேறு யாரும் அல்ல, இந்திய விவசாயமும் விவசாயிகளும்தான்.
சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்த விவசாய விளைபொருட்கள் உற்பத்தி தொடர்பாக நடந்த கூட்டத்தின் முடிவுகளைப் பார்க்கிற போது மண்ணாங்கட்டிக்கு நேர்ந்த கதி நினைவுக்கு வருகிறது.

செம்மை செல் சாகுபடி மற்றும் விவசாயத் திட்டங்களை தீவிரப்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்க தமிழக விவசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மதுரைச் சுற்றி இருக்கும் 15 மாவட்ட ஆட்சித் தலைவர்களை அழைத்து நடத்தி இருக்கிறார். இந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே நடந்திருக்க வேண்டிய இந்தக் கூட்டம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக இந்தக் கூட்டத்தை நடத்தியே தீருவது என்கிற கங்கணத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தி இருக்கும் அமைச்சருக்கு நம் பாராட்டுகள்.

பெருகி மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியையும் நாம் அதிகரித்துத்தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தை இந்த அரசாங்கம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் என்கிற மாபெரும் பிரச்னை ஒரு பக்கமிருக்க, விளைநிலங்கள் வீட்டடிமனைகளாக மாறிவரும் கொடுமையும் இன்னொரு பக்கம் வேகமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் படுத்துவிட்டாலும் (சப்-பிரைமின் கைங்கர்யம்) தமிழ்நாட்டில் மரமேறிய பேயாக அரற்றிக் கொண்டுதான் இருக்கிறது. பச்சைப் பசேல் என விளைந்த நிலங்கள் எல்லாம் கட்டம் கட்டி விற்பனையாகும் பண்டமாக ஆகிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் வளரும் ஒரு குழந்தைக்கு நெல் வயலைக் காட்ட வேண்டுமென்றால் குறைந்தது 25 கி.மி. தூரமாவது பயணம் செய்தாக வேண்டிய நிலை. இப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்தக் கூட்டம் நடந்திருக்கிறது.

பொதுவாக ஒரு மாவட்டத்தில் மிகப் பெரிய அதிகாரம் கொண்டவர் மாவட்ட ஆட்சித் தலைவர். மத்திய, மாநில அரசாங்கங்களின் திட்டங்களை சரியாக நடைபெறுகிறதா என்று கண்காணிக்கிற வேலை மாவட்ட ஆட்சித் தலைவரையே சாரும். எல்லாத் துறைகளின் நடவடிக்கைகளையும் கவனிக்கிற மாதிரி விவசாய உற்பத்தியையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதுநாள் வரை கவனித்தே வந்திருக்கிறார்கள். இந்தக் கண்காணிப்பு போதாது, இன்னும் கவனம் தேவை என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைத்து சொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரத்தையும் வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் சொல்லி இருக்கிறார்.

இப்படிச் செய்வதால் எல்லாம் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்துவிட முடியுமா? விவசாயிகளின் துயரைத் துடைத்துவிட முடியுமா?

நிச்சயம் முடியாது. உடம்புக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள உடம்பை பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்தித்தான் ஆக வேண்டுமே ஒழிய, பெண் நர்ஸுக்கு பதிலாக ஆண் நர்ஸைக் கொண்டு வந்தால் சரியாகிவிடாது.

இன்றைய தேதியில், விவசாய உற்பத்தி மிகப் பெரிய அளவில் குறைந்து வருவதற்குக் காரணம், செயற்கை உரங்களை மானாவாரியாக அள்ளித் தெளித்து விளைநிலங்களை சுடுகாடுகளாக்கும் மாடர்ன் விவசாய முறைகளினால்தான். செயற்கை உரங்களை பெருமளவில் பயன்படுத்தும் போது செலவும் ஏகத்துக்கு எகிறுகிறது. விளைநிலங்களும் தன் சக்தியை இழக்கிறது.

இந்த செயற்கை விவசாயத்தை விட்டொழித்து விட்டு, இயற்கை விவசாயத்து நாம் மாறுவோம் எனில், சத்தான, சுவையான உணவை நம் மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க முடியும். “இயற்கை விவசாயத்தில் விளைச்சல் இருக்காது. அனைத்து இந்திய மக்களுக்கு சோறு போட முடியாது” என்று சிலர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தப் பிரச்சார பீரங்கிகள் வாய் கிழிய கத்துவதோடு சரி, புளியங்குடி விவசாயி அந்தோணிசாமி அண்ணாச்சியின் சவாலை நேருக்கு நேர் சந்திக்கத் துணிவதே இல்லை.

அரசாங்க அதிகாரிகள் பலரும் 'இயற்கை விவசாயம்தான் சரி. ஆனால், சில பல காரணங்களுக்காக செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் நிலத்தில் கொட்டச் சொல்ல வேண்டியிருக்கிறதே!' என்று புலம்புகின்றனர். என்ன புண்ணியம் செய்து தங்கள் பாவத்தைக் கழுவிக் கொள்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

உணவுப் பொருட்களின் உற்பத்தி பெருக வேண்டுமெனில், இயற்கை விவசாயம் ஒன்றுதான் தீர்வு என்றுதான் என்பதை நம் அரசாங்கம் எப்போதுதான் உணரப் போகிறதோ!

SATURDAY, AUGUST 9, 2008
நன்றி:www.samsari.blogspot.com

மரம் வளர்த்துப் பணக்காரர் ஆன தமிழ்நாட்டுநிஜம்

MONDAY, AUGUST 18, 2008
மரம் வளர்த்தார்; குரோர்பதி ஆனார்!
ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!

உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!


தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் த ங்கசாமி, காடு வளர்ப்பில் உலகு க்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உல கின் பல பகுதி களில் இருந்தும் வேளாண் ஆராய் ச்சியாளர்கள் தங் கசாமியின் தோட் டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்க ள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்...

“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.

அப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.

மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.

ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.

திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர் களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்க சாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.

இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.

எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.

நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.

எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.

விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.

மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன் றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட் டை பிடித்து விற்றுவிடுவேன். என் னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.

நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.

செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”

விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”

(குமுதம் நிறுவனத்தில் இருந்து வெளிவருவதாக இருந்த 'மண்வாசனை' (விவசாய இதழ்) பத்திரிகைக்காக மரம் தங்கசாமியை அவரது தோட்டத்தில் சந்தித்தேன். மூன்று இலவச இதழ்களுக்குப் பிறகு மண்வாசனை நின்றுவிட்டது.)

நன்றி: தளவாய் சுந்தரம் http://dhalavaisundaram.blogspot.com
நன்றி:www.samsari.blogspot.com

தமிழக விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்

தமிழ் விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்
கட்டாந்தரையில் பசுஞ்சோலை!

செக்கச்செவேலென திரும்பிய பக்கமெல்லாம் தெரியும் செம்மண். காலை வழுக்கும் உருண்டைக் கற்கள். ஆண்டுக்கு மூன்று மாதம் மழை பெய்தாலே அதிகம் என்று சொல்லும் அளவுக்குத் தாகம் தீராத பூமி. அந்த இடத்தைப் பார்த்தால், 'இந்தக் கட்டாந்தரையில் என்ன முளைக்கும்? கருவேலஞ் செடிகளும் பனையும் புளியும் தவிர வேறு என்ன விளையும்?' என்று கேட்கத் தோன்றும். நாமாக இருந்தால் அந்த நிலத்தை இலவசமாகக் கொடுத்தால்கூட வேண்டாம் என்று ஒதுங்கியிருப்போம்.

ஆனால், அப்படிப்பட்ட நிலத்தை பசுமை கொழிக்கும் பசுஞ்சோலையாக மாற்றியிருக்கிறார் பெர்னார்ட் கிளார்க். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெற்றுடம்பாக கிடந்த அந்த பூமியில் இன்று குளுமை தரும் மரங்கள் பலப்பல.

பாண்டிச்சேரி- திண்டிவனம் நெடுஞ்சாலையில் திருச்சிற்றம்பலத்திர்கு அருகே உள்ள பெர்னார்டின் தோட்டத்துக்குள் நுழைந்தால் ஒரு சின்ன காட்டுக்குள் நுழைந்துவிட்ட மாதிரி ஒரு பிரமை. அதனால்தானோ என்னவோ அந்த இடத்திற்கு பிருந்தாவனம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

இந்த வியத்தகு மாற்றத்தைச் செய்த பெர்னார்டு கிளார்க், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். மேற்கத்திய நாட்டு மனிதர்கள் அடிப்படை வசதிகள் அனைத்தையும் அடைந்தவர்கள். அதனால்தான் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி ஆன்ம பயணம் செய்ய எளிதில் துணிந்துவிடுகிறார்கள். விஞ்ஞானம் தந்த வளர்ச்சி மனிதனின் வயிற்றை நிரப்பும். ஆனால், ஆன்மாவை ஓட்டை விழுந்த குடமாகவே வைத்திருக்கும் என்பதை சிறு வயதிலேயே உணர்ந்தார் பெர்னார்ட். எனவேதான் முப்பது வயதிலேயே வேலை, சொத்து, சுகம் என்று எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு, பாண்டிச்சேரிக்கு வந்து அரவிந்தர் ஆசிரமத்தில் சேர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை ஆனமப் பயணம் மேற்கொள்ளும் சாதாரண மனிதனாக வாழ்ந்து வருகிறார் பெர்னார்ட்.

'கட்டாந்தரையில் இத்தனை மரங்களை வளர்த்தது எப்படி?' என்று பெர்னார்டிடம் கேட்டோம். பெர்னார்டின் மனைவி தீபிகா, மூலிகைச் சாறு ஜூஸ் கொடுக்க, அதை ரசித்துக் குடித்தபடி பதில் சொல்ல ஆரம்பித்தார்.

"தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற வேண்டும். சலிப்பில்லாத மனித உழைப்பும் ஓரளவுக்குத் தண்ணீரும் இருந்தால் எந்த நிலத்தையும் தரிசு நிலம் என்று ஒதுக்கி வைக்கத் தேவையில்லை என்பது எங்கள் ஆசிரமத்தின் நம்பிக்கை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூன்று ஏக்கர் நிலத்தைக் கொடுத்து இதில் காட்டை உருவாக்க முடியுமா?" என்று கேட்டார்கள்.

இடத்தைப் பார்த்தபோது, அது சவால் நிறைந்த வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். என்றாலும், நம்பிக்கையோடு செய்ய ஆரம்பித்தேன்.
நிலத்தை எப்போதும் சும்மா போட்டு வைத்திருக்கக் கூடாது. இது பாரம்பரிய விவசாயத்தின் பாலபாடம். காரணம், சூரியனில் இருந்து வரும் வெப்பம் நிலத்தை எரித்துவிடும். நுண்ணுயிர்கள் மட்டுமல்ல, மனிதர்கள்கூட இந்த வெப்பத்தில் துவண்டு போவார்கள். எனவே, உடனடியாக ஏதாவது ஒரு மரம் வளர்த்து பூமிக்கு நிழல் தந்து, வெப்பத்திலிருந்து காக்க வேண்டும்.
எனக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தில் இப்படி ஒரு வேலையை உடனடியாகச் செய்தாக வேண்டும் என்று முடிவு செய்தேன். என்ன மரம் வளர்ப்பது என்கிற பிரச்னை தலை தூக்கியது. நீரை தண்ணீரை எதிர்பார்க்காமல் வேகமாக வளரக்கூடிய மரங்களைத் தேடிப் பிடித்தேன். அவசரத்திற்கு எனக்குக் கை கொடுத்தது விராலி மரமும், ஆஸ்திரேலியன் அக்கேசியா என்கிற மரமும்தான்.

இந்த மரங்கள் மழை நீரைக் குடித்தே நன்றாக வளரும். நிறைய இலைகளை நிலத்தில் கொட்டும். மண்ணில் விழந்த இலைகள் மட்கும். மண் வளம் பெறும். நுண்ணுயிர்கள் பிறக்கும். புல் பூண்டுகள் முளைக்கும். அதைச் சாப்பிட ஆடு, மாடுகள் வரும். சாணம் போடும். அதில் இருந்து பூச்சிகள் வரும். அதை உண்ண காக்கைகளும் வரும். கடைசியில் அந்த இடம் பசுமையான விளைநிலமாக மாறிவிடும். இந்த இடத்தையும் நாங்கள் இப்படித்தான் மாற்றினோம்" என்கிறார் பெர்னார்ட்.

"வாருங்கள். இந்தத் தோட்டத்தில் என்னவெல்லாம் விளைகிறது என்று காட்டுகிறேன்" என்று அழைத்தார் பெர்னார்ட். போனால் நமக்கு வியப்புக்கும் மேல் வியப்பு.

பெர்னார்டின் தோட்டத்தில் வாழை நன்றாக குலை தள்ளியிருந்தது. பச்சை வெண்டை, சிகப்பு வெண்டை, குட்டை வெண்டை என வெண்டை மட்டும் நான்கு வகைகளை வளர்க்கிறார். கொடியில் பாகல் சந்தோஷமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. தக்காளி, மிளகாய் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தன. பூசணி, இலைக்குள் மறைந்து கண்ணாமூச்சு காட்டிக் கொண்டிருந்தது. பப்பாளி மரம் படுகம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அவ்வளவு ஏன், பைனாப்பிள்கூட அருமையாக வளர்ந்து இருந்தது. இது தவிர ஏராளமான மூலிகைச் செடிகள்.

"நிலத்துக்குத் தேவையான தண்ணீர் தேங்குகிற மாதிரி முதலில் ஆங்காங்கே சின்னச் சின்ன குழிகளை வெட்டி மழைநீரைச் சேகரியுங்கள். பிளாஸ்டிக் தவிர, மக்கக்கூடிய எந்தக் குப்பையும் இலவசமாகக் கிடைத்தால் உங்கள் நிலத்தில் கொட்டுங்கள்.

ஓரளவுக்கு ஈரப் பதத்தில் விதைகளைத் தூவுங்கள். நீங்கள் விதைக்கும் எந்த விதையும் உங்களை ஏமாற்றாது. கொஞ்சமாக உழைத்ததிலேயே இந்த நிலம் இப்படி மாறியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் வளமான நிலங்கள்தான் அதிகம். நாம் உழைக்கத் தயாராக இல்லை. நிலம் தரிசு என்று சொல்லி காயப் போட்டுவிடுகிறோம். நம்பிக்கையோடு எந்த நிலத்தையும் பண்படுத்துங்கள். அதில் நீங்கள் விதைக்கும் எந்த விதையும் முளைக்கும்" என்கிறார் பெர்னார்ட்.

வித்தியாசமான இந்த வெள்ளைக்காரருக்கு தமிழ்நாட்டு விவசாயிகளை வழி நடத்தும் அத்தனை தகுதிகளும்
நன்றி:www.samsari.blogspot.com

விவசாயத்தில் சாதனை செய்துள்ள விவசாயி:இடம் புளியங்குடி,நெல்லை மாவட்டம்

தமிழகத்தின் நம்பர் 1 விவசாயி!
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
- சாதனை செய்யும் நம்பர் ஒன் விவசாயி


``விவசாயத்துக்கு இது போறாத காலம்! முன்ன மாதிரி வானம் என்ன, மும்மாரி மழை பொழிஞ்சுகிட்டா இருக்கு! தண்ணியில்லாம எப்படி விவசாயம் செய்ய முடியும்?ஒஒ என்று புலம்பும் கிராமத்துப் பெருசுகள் பலர்.

வகை தொகை இல்லாமல் மரங்கள் வெட்டப்பட்டதினால் மழையின் அளவு கடுமையாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மை. அதற்காக, மழையே இல்லை என்று நிலத்தை மூட்டை கட்டி, தூக்கி எறிந்துவிட வேண்டிய கட்டாயம் நமக்கு இன்னும் ஏறபட்டுவிடவில்லை. தண்ணீர் பற்றாக்குறை என்கிற தீர்க்க முடியாத பிரச்னை ஒரு பக்கமிருக்க, கணக்கு வழக்கில்லாமல் தண்ணீரை ஊற்றி, விலை மதிப்பற்ற செல்வத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய தேதியில் தண்ணீர் சிக்கனத்திற்கு வழி சொல்கிறவர்களைத் தாராளமாக தலைவர்களாக ஏற்றுக் கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள புளியங்குடி விவசாயி அந்தோணிசாமி, கரும்பு சாகுபடியில் தண்ணீர் சிக்கனத்திற்காக பல ஆராய்ச்சிகளைச் செய்தவர்.

``காவிரியாற்றுப் பாசன விவசாயிகள் வேண்டுமானால் தண்ணீரை இளக்காரமாக நினைக்கலாம். நெல்லுக்கும் வாழைக்கும் கரும்புக்கும் மடை திறந்து வெள்ளத்தைப் பாய்ச்சலாம். ஆனால், நாங்களோ வானம் பார்த்த பூமிக்குச் சொந்தக்காரர்கள். எங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு மழைத்துளியும் வருண பகவான் எங்களுக்கு அளிக்கும் உயிர்மூச்சு. ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட வீணடிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். அதனாலதான் தண்ணீர் சிக்கனத்திற்காகப் பல வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம்ஒஒ என்கிறார் அந்தோணிசாமி.

``தண்ணீர் சிக்கனத்திற்காக நீங்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் என்ன?ஒஒ என்று அந்தோணிசாமியிடம் கேட்டோ ம்.

``சொல்றேன். அதுக்கு முன்னால உங்ககிட்ட ஒரு கேள்வி. என் தோட்டத்தை அப்படியே ஒரு பொடி நடை நடந்து போய் சுத்திப் பார்த்துகிட்டே பேசலாமா?'' என்று கேட்கிறார். அன்போடு நம்மை அழைத்துச் சென்ற அந்தோணிசாமி அண்ணாச்சியைப் பற்றிய அறிமுகத்தை இங்கேயே செய்துவிடுவது நல்லது.

புளியங்குடி பக்கத்தில் உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த இவர், பாரம்பரியமான விவசாயி. பள்ளிக்கூடத்தில் எட்டாவது வரை மட்டுமே படித்தவர். மத்திய அமைச்சராக இருந்த அமரர் கிருஷ்ணசாமி இவரது பள்ளித் தோழர்.

இளைஞர் பருவம் தொட்டே விவசாயத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்று வெறி கொண்டவர். செயற்கை உரங்களை நம்பி இவர் தீவிரமாக விவசாயம் செய்யப் போக கிட்டத்தட்ட 50 லட்ச ரூபாய் கடனாளியாக மாறிவிட்டாராம் அண்ணாச்சி. பிறகு செயற்கை உரத்தைத் தூர எறிந்துவிட்டு, இயற்கை விவசாயத்துக்கு மாறினார். பட்ட கடன் 50 லட்சத்தையும் மொத்தமாக துடைத்து எறிந்ததோடு, இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கருக்கு சொந்தக்காரர் அண்ணாச்சி. அறுபது ஏக்கருக்கும் மேலே எலுமிச்சையும் இன்னுமொரு அறுபது ஏக்கருக்கு மேலே கரும்பும் வளர்க்கிறார்.

``கரும்பு வளர்க்க மிக அதிகமான தண்ணீரைத் தமிழகத்து விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள். ஒரு கிலோ சர்க்கரை உருவாக்க 20 முதல் 22 ஆயிரம் லிட்டர் தண்ணீரச் செலவழிக்கிறார்கள். ஆனால், நான் ஒரு கிலோ சர்க்கரையை உருவாக்க 1500 லிட்டர் முதல் 1800 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவழிக்கிறேன். அதாவது, மற்ற விவசாயிகளுடன் ஒப்பிடும் போது 10 சதவிகிதத்துக்கும் குறைவான தண்ணீரையே பயன்படுத்துகிறேன்!''

``அப்படியா! ஆச்சரியமாக இருக்கிறதே! உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு குறைவான நீரைக் கொண்டு கரும்பை வளர்க்க முடிகிறது?'' என்று கேட்டவுடன், அதற்கான பதிலை கொஞ்சமும் தயக்கமில்லாமல் தெள்ளத் தெளிவாக சொல்ல ஆரம்பித்தார்.

``கால்வாய் பாசனக்காரர்கள் மடையைத் திறந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிற மாதிரி நான் கால்வாயைத் திறந்து தண்ணீரைக் கொட்ட மாட்டேன். சொட்டு நீர் பாசனம்தான் எனக்கு அடிப்படை.
நிலத்தை நன்றாக உழுதபின் ஆறு அடி, மூன்று அடி என்று இடைவெளி விட்டு அடி மடுக்கிறேன். முதலில் மூன்று அடி பார், அடுத்து ஆறு அடி பார். மீண்டும் மூன்று அடி பார், அடுத்து ஆறு அடி பார். இப்படி மாற்றி, மாற்றி அடி மடுக்குறேன். ஆறு அடி பாரில் பயறு வகைப் பயிர்களை விதைத்து வளர்க்கிறேன். அடுத்த மூன்றடி பாரில் இரண்டு வரிசையாக கரும்பை நட்டேன். கரும்புக்கு இடையில் பயறு வகைகளாகப் பிடுங்கி மூடாக்காக வைத்தேன்.

இதன் பின்னர், பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஏதாவது ஒரு பயறு வகைப் பயிரை ஊன்றிவிடுகிறேன். அது வளர்ந்து மூடாக்கிற்குப் பயன்படும். குறிப்பாக, 45 நாட்கள் மூடாக்குப் பயிர்களை வளர விட்டும் பின்பு பிடுங்கி மூடாக்காக பயன்படுத்துகிறேன்.

பின்னர் தொண்ணூறாம் நாள் அடுத்த மூடாக்கு செய்ய வேண்டும். அதற்கு அடுத்ததாக பயிர் ஊக்கியான மீன் அமினோ அமிலத்தை இரண்டாம் மூடாகு செய்த பிறகு ஒரு லிட்டருக்கு நூறு லிட்டர் நீர் என்ற அளவில் சேர்த்துத் தெளிக்க வேண்டும். 120-ஆம் நாள் பஞ்சகாவ்யா கரைசலைத் தெளிக்க வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் பத்து டன் உரத்தை நிலத்தில் கொட்டியதர்கு சமமாக ஆகிவிடுகிறது. 160-ஆம் நாள் முதல் சோகையை உறிக்க வேண்டும். உரித்து கரும்புக்கு அடியில் வைத்து மீண்டும் மண்ணால் மூடிவிட வேண்டும். இது முடிந்த பிறகு மீன் அமினோ அமிலம் தெளிக்க வேண்டும்.
210-ஆம் நாள் இரண்டாவது முறை சோகை உரிக்க வேண்டும். முன்பு சொன்னது போலவே, இதையும் மூடாக்கு செய்ய வேண்டும். மீண்டும் மீன் அமினோ அமிலம் அல்லது பஞ்சகாவ்யதைத் தெளிக்க வேண்டும்.
250-ஆம் நாள் கடைசி சோகையை உரிப்பு செய்ய வேண்டும். அது அடுத்த பயறு வகைப் பயிருக்கான உரமாக மாறும். இப்படித் தொடர்ந்து நிலத்தைப் பண்படுத்துவதன் மூலம் நிலத்தில் உள்ள மண்புழுக்கள், பூச்சிகள் என பல உயிரினங்கள் கோடிக் கணக்கில் பெருகுகின்றன.இதனால் நிலம் குளுகுளுவென இருக்கும். வெளியே முப்பது டிகிரி செல்சியஸ் வெயில் அடித்தால் என் தோட்டத்துக்குள்ளே 25 டிகிரி செல்சியஸ்தான வெப்பம் இருக்கும். வெப்பம் அதிகம் இல்லாததால் தண்ணீரின் தேவையும் கணிசமாகக் குறைந்துவிடுகிறது. இதுதான் நான் செய்யும் தொழில்நுட்பம்தான்!'' என்று ஒரு விவசாயக் கல்லூரிப் பேராசிரியர் மாதிரி பேசுகிறார் அந்தோணிசாமி.

தமிழகத்தின் சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு முப்பது டன். இது இந்திய சராசரியை விட கொஞ்சம் அதிகம். ஆனால், அந்தோணிசாமியோ ஒரு ஏக்கருக்கு சராசரியாக அறுபது டன் கரும்பை சாகுபடி செய்கிறார். இத்தனைக்கும் இந்த உரம், அந்த உரம், மருந்துச் செலவு என்று பத்து ரூபாய்கூட செலவழிப்பதில்லை. செலவும் இல்லை; அதே நேரத்தில் விளைச்சலும் அதிகம். தமிழ்நாட்டில் உள்ள மற்ற விவசாயிகளும் அந்தோணிசாமியைப் பின்பற்றினால் லட்சம் லட்சமாகப் பணத்தைக் குவிக்கலாம்.

இது மட்டுமல்ல, அந்தோணிசாமியின் தோட்டத்தில் வளரும் கரும்பில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கணக்கிட்டார்கள். கிட்டத்தட்ட 80 சதவிகிதம் குளுக்கோஸ் இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆர்வமுள்ள விவசாயிகள் அவரது தோட்டத்துக்கு ஒருமுறை நேரடியாகச் சென்று பார்த்து விட்டு வரலாம்!

அண்ணாச்சிக்கு நல்லதாக நாலு வார்த்தை சொல்லி பாராட்ட நினைப்பவர்கள் இந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். xavierukr@yahoo.com
நன்றி:www.samsari.blogspot.com

இதோ ஒரு இயற்கைவிவசாயி:நிஜக் கதை

WEDNESDAY, APRIL 11, 2007
காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?

விவசாயத்தை ஒரு தொழிலாக அல்ல, ஒரு வாழ்வியல் லட்சியமாகவே நினைத்து செயல்படுகிறவர் தக்கோலம் விவசாயி நீலசம்பத். இவர் வளர்க்கும் காந்திக் கடலை இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் முழுக்கப் பரவி பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது.

காந்தி கடலையா? அது என்ன என்று விசாரிக்க தக்கோலம் நோக்கிப் போனோம். அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் கிட்டத்தட்ட பதினைந்து கி.மி. தொலைவில் இருக்கிறது தக்கோலம் பேரூராட்சி. ஊரில் போய் இறங்கி 'நீலசம்பத்' என்று கேட்டால், "ஓ, திருக்குறள் பண்ணைக்காரா?" என்று அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள் இளைஞர்கள்.

வீட்டுக்குப் போய் உட்கார்ந்தவுடன் கிராமத்து கலாசாரப்படி டம்ளர் நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறார் நீலசம்பத்தின் மனைவி கோமளவல்லி. கூடவே கொஞ்சம் முந்திரி பருப்பைக் கொண்டு வந்து வைக்கிறார். விவசாயி வீட்டில் முந்திரி பருப்பு உபசாரமா? நாம் கொஞ்சம் திகைப்போடு கேட்க, பேச ஆரம்பித்தார் நீலசம்பத்."அது முந்திரி பருப்பு இல்லீங்க.. முந்திரி பருப்பு மாதிரி மொக்கை, மொக்கையா இருக்கிற காந்திக் கடலை. இதை நான் கண்டுபிடிச்ச விதமே சுவாரஸ்யமானது.

எங்க ஊர்ல எனக்கு மூணு ஏக்கர் நிலம் இருக்கு. புஞ்சை நிலம்தான். நெல்லையும் கடலையும்தான் பயிர் செய்வேன். நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெ.எல்.24 என்கிற கடலை ரகத்தைப் பயிர் செய்தேன். விளைச்சல் முடிந்து கடலை விதைகளைப் பிரித்த போது, சில கடலை விதைகள் மட்டும் கொஞ்சம் பெரிதாக, நீளமாக இருப்பதை கவனித்திருக்கிறார் என் மனைவி. உடைத்துப் பார்த்தால், கடலைப் பருப்பு சிகப்பாக, பெரிதாக இருந்திருக்கிறது. இந்த மாத்ரி கடலைகளை மட்டும் தனியாகப் பொறுக்கி, அதை மீண்டும் விதைத்தோம். விதைத்த போதுதான் தெரிந்தது. அது படர்கொடியாக வளரக்கூடிய கடலைப் பயிர் என்று. விளைச்சலும் நன்றாக இருந்தது.

இந்தக் கடலைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று என் நண்பர் ஜான் தன்ராஜிடம் கேட்டேன். அவரும் ஒரு இயற்கை விவசாயி. பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது திருத்தணிக்குப் பக்கத்தில் உள்ள காவேரி ராஜபுரத்தில் அற்புதமாக விவசாயம் செய்து வருகிறார். என் கையில் இருந்த கடலையைப் பார்த்த தன்ராஜ், "இது குஜராத் மாநிலத்திலிருந்து வந்த கடலை. குஜராத்தில் இந்த வகை கடலையை நிறைய பயிர் செய்கிறாகள். எனவே இதற்கு காந்தி கடலை என்று பெயர் வைக்கலாம்" என்றார்.

கடலையையும் பசுவின் பாலையும் எல்லோரும் சாப்பிட வேண்டும் என்று சொன்னவர் காந்தி. அந்த மகாத்மாவின் பெயரை வைப்பது பொருத்தமாகத்தான் இருக்கும் என்று உடனே சரி என்று வைத்தேன். இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் காந்தி கடலை வேண்டும், காந்தி கடலை வேண்டும் என்று கேட்டு வாங்கிப் பயிர் செய்கிறார்கள். நல்ல விளைச்சல் தந்து, விவசாயிகளுக்கு நிறைய வருமானம் தந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி; எனக்கும் மகிழ்ச்சி. என்னுடைய நோக்கமெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விவசாயிகளின் வீட்டுக்கும் காந்தி கடலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு காராபூந்தி, மைசூர்பாகு கொடுப்பதை விட காந்தி கடலையை வறுத்தோ, அவித்தோ கொடுக்கலாம். அவர்களும் ஆரோக்கியமான உணவை ஆனந்தமாக சாப்பிடுவார்கள்".முந்திரி பருப்பு போல இருந்த காந்தி கடலையை சாப்பிட்ட போது சுவையாகத்தான் இருந்தது. "இந்த கடலையில் சத்தும் அதிகம். எண்ணெய்ச் சத்து பத்து சதவிகிதம் குறைவு. எனவே, கொஞ்சம் அதிகம் சாப்பிட்டாலும் தலை சுற்றாது" என்றார் நீலசம்பத்.டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான ஒரு பட்டம் மட்டும் இப்போது காந்தி கடலையை சாகுபடி செய்கிறார் நீலசம்பத்.

தான் சாகுபடி செய்யும் கடலையை பெரும்பாலும் விதைக் கடலையாகவே விற்கிறார். ஒரு கிலோ கடலை விலை ரூ. 50. கடந்த ஆண்டு கிலோ 40 ரூபாய் விற்றாராம். விலையேற்றத்துக்குக் காரணம், விவசாய வேலை செய்ய ஆட்கள் கிடைக்காததுதான் என்கிறார்.

'சரி, உங்க பண்ணைக்கு ஏன் திருக்குறள் பண்ணை என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டோம்.

"வள்ளுவர், காரல் மார்ஸ், பெரியார், மாவோ - இந்த நான்கு சிந்தனையாளர்களின் வழி நடப்பவன் நான். என்னைப் பொருத்த வரை திருவள்ளுவர் மாதிரி ஒரு சிந்தனையாளரைக் கண்டது இல்லை. இந்த உலகத்தில் எத்த்னையோ தொழில்கள் வரலாம். ஆனால் விவசாயம்தான் எல்லா தொழிலுக்கும் அடிப்படையாக இருக்கும் என்று அன்றைக்கே சொன்னார் அந்த தத்துவ ஞானி. அவரைக் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை!" என்று உணர்ச்சி வசப்பட்டார்.

"உங்களுக்கு பணத் தேவை இருந்தால், உங்களிடம் உள்ள நகைகளை விற்றுக் கொள்ளுங்கள். நிலத்தை மட்டும் எந்தக் காரணத்தை கொண்டும் விற்காதீர்கள். இன்னும் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் விட்டுச் செல்லும் மிகப் பெரிய சொத்தாக உங்கள் நிலம்தான் இருக்கும்" என்கிறார் நீலசம்பத்.

வித்தியாசமான இந்த விவசாயியோட தொடர்பு கொள்ள நினைக்கிறவர்கள் பின்வரும் தொலைபேசி எண்ணில் பேசலாம். 04177-246448.

முகவரி: திருக்குறள் பண்ணை, 40, மேல் தெரு, தக்கோலம் - 631 151.

நன்றி:www.samsari.blogspot.com

மரபணுக்காய்கறிகள் என்றால் என்ன?

அடிச்சு சொல்றேன்! நீங்க சுத்த சைவம் கிடையாது!


நான் சுத்த சைவம். காரணம், நான் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறேன் என்று நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

அடிச்சுச் சொல்றேன், நீங்க சுத்த சைவம் கிடையவே கிடையாது. பயோடெக்னாலஜி கைங்கரியத்தினால் ஜீன் இடமாற்றத் தொழில்நுட்பம் விவசாயத் துறையில் வந்தபிறகு சைவ வஸ்துக்களில் பல அசைவ வஸ்துக்கள் சேர்ந்துவிட்டன. சுத்த சைவம் என்கிற பெயரில் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காய்கறிகளில் பல அசைவ அம்சங்கள் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.

இயற்கை விவசாயி தக்கோலம் நீல.சம்பத்து என்பவர் எழுதிய இயற்கை வேளாண்மை அறிவுச் சுவடியில் இந்தச் செய்தி இருந்தது கண்டு நான் அதிர்ந்து போனேன். தக்காளியிலும், உருளைக்கிழங்கிலும் பிற விலங்குகளின் ஜீன் எப்படி புகுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி அதில் சொல்லப்பட்டிருக்கும் ஆச்சரிய உண்மை இதோ:

தவளைத் தக்காளி:

தக்காளிப் பழத்தை வணிகத்துக்காக இடம் மாற்றும் போதும், கையாளும் போதும் உடைந்து போவதைத் தவிர்ப்பதற்காக தவளையின் தோலில் உள்ள மரபணுவைத் தக்காளியின் தோலில் புகுத்தியுள்ளனர். அந்த தவளை மரபணுத் தக்காளியைத்தான் நாம் இன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

உருளைக்கிழங்கு மீன்:
அநேகமாக உருளைக் கிழங்கைப் பல மாதங்கள் குளிர்பதனக் கிடங்கில் பாதுகாத்து வைத்திருந்தே கொண்டு செல்கிறார்கள். வெளி வெப்பத்தால் உருளைக் கிழங்கில் சுருக்கம் விழாமல் இருக்க, மீனின் தோலில் உள்ள மரபணுவை உருளைக் கிழங்கின் தோலில் புகுத்தியுள்ளனர். பருவம் அல்லாத காலங்களில் நல்ல உருளைக்கிழங்கு கிடைப்பதன் ரகசியம் இதுதான்.

இந்தப் பதிவை நான் எழுதியதற்குக் காரணம், சைவ உணவை உண்பவர்களை வாந்தி எடுக்க வைக்க வேண்டுமென்பதல்ல. அசைவ உணவை சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குமல்ல. உணவுப் பொருட்களின் ஜீனில் தேவையில்லாமல் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது. அப்படி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை நாம் தவிர்க்க வேண்டும். இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளை நாம் சாப்பிட வேண்டும் என்று உங்களிடம் வற்புறுத்திச் சொல்வதற்காகத்தான்.

MONDAY, AUGUST 25, 2008
நன்றி:www.samsari.blogspot.com

இயற்கை விவசாயம் என்றால் என்ன?

நீங்கள் சாப்பிடுகிற காய்கறிகளில் விஷம்!
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரைப் பற்றி உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருபவர். சுற்றுச்சூழல் போராளி. ஏன் வேண்டும் இயற்கை விவசாயம் என்பது குறித்து அவர் எழுதிய கட்டுரை இதோ:

கண்களை விற்றா சித்திரம் வாங்குவது?

ஒரு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கேளம்பாக்கத்தை அடுத்த திருப்பேரூரில் டி.இ.டிஇ. அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம். பிரேசில் நாட்டில் இருந்து வந்திருந்த கிரிஸ்டி என்ற பெண்மணி முக்கிய விருந்தினர். தள்ளுப் படங்களைப் போட்டுக் காட்டி
விளக்கிக் கொண்டிருந்தார்.

பச்சைப் புரட்சியினால் உழவர்கள் நிலத்தைக் கம்பெனிகள் வாங்கிக் கொண்டுவிட்டன. உழவர்கள் தமக்குச் சொந்தமான நிலங்களிலேயே கூலிகளானார்கள். ஏற்றுமதிக்காக வாழைத் தோட்டம் போட்டார்கள். வாழைத் தோட்டம் போட்டபோது எலிகாப்டர் மேலே பறந்து பூச்சி கொல்லி நஞ்சைத் தெளித்தது. இதுபோன்ற போக்கால் புற்று நோய்க்கு ஆளானார்கள். தோட்டத் தொழிலை எட்டிக் கூடப் பார்க்காத மனைவி மார்களும் இத்தகைய நோய்களுக்கு ஆளானார்கள். பிறப்புறுப்புக்களிலெல்லாம் ரணக் கட்டிகள்இ பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் உறுப்புக் குறைவு. அரையும் குறையுமாகப் பாலுறுப்புக்கள். படம் போட்டுக் காட்டாது. இருந்தால் இந்தக் கொடூரத்தை நம்புவது கடினம்.

படக் காட்சி முடிவில் கேள்வி நேரம். இந்தியாவில் கூட நிறைய பூச்சி கொல்லி தெளிக்கிறார்கள். நீ காட்டிய அளவு கொடுமை இல்லையே என்று கேட்டேன். அதைக் கேட்ட கிரிஸ்டி இப்படிச் சொன்னாள்.

''அதன் விளைவு இனிமேல் தான் தெரியும்'' என்றவள் காரணமும் சொன்னான். ''முதலாவதாக இந்தியர்கள் அதிகம் இறைச்சி உண்பதில்லை. இரண்டாவதாக, நீங்கள் ஐ.எம்.எப்.பிடம் அண்மையில் தான் கடன் வாங்கியுள்ளீர்கள்.

கிரிஸ்டியின் வாக்கு பலித்துள்ளதைக் காசர்கோடு படம் பிடித்துக் காட்டுகிறது. கேரளாவில் பாலக்காடு அடுத்துள்ள காசரகோடு பகுதி உலகத்தின் பார்வையைக் கவர்ந்துள்ளது. அங்கு 7000 ஏக்கர் பரப்பில் முந்திரிக் காடு உள்ளது. அது அரசுக்குச் சொந்தம். இந்தக் காட்டில் ஏரோப்ளேன் பறந்து பறந்து நச்சு தெளித்தது. மரத்துக்கு மேலே மின் கம்பி போவதால் உயரே உயரே பறந்து நஞ்சு தெளித்தது. அதன் விளைவு பயங்கரமாக இருந்தது. சுற்று வட்டாரத்தில் இருந்த 25 கிராமத்து மக்கள் தோல் புற்று நோய்க்கு ஆளானார்கள். இவர்கள் முந்திரிக் கொட்டை தின்றவர்களும் அல்ல. முந்திரிக் கொல்லையில் வேலை பார்த்தவர் ரூம் அல்ல. இவர்கள் பயன்படுத்திய ஓடை நீரிலும் மூச்சுக் காற்றிலும் நஞ்சு குடி புகுந்துவிட்டது. மக்கள் உடலெங்கும் புற்று நோய்ப் புண்கள். வயிறு வீக்கம், மூச்சிறைப்பு இப்படிப் பாதிப்புகள். பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவி ஊனம். கட்டைவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையே நமக்கு இயல்பான இடைவெளி உண்டல்லவா? அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரவிரலுக்கு சுட்டுவிரலுக்கும் இடையில் பிளவு காணப்படுகிறது. நடுவிரல்களையே காணோம். குழந்தைக்குத் தலை மட்டும் பெருக்கிறது. உடம்பு சிசுவின் உடலாகவே உள்ளது. இருந்து நான்கு வயது சிறுவன் நாலுவயது குழந்தை போல உடலும் மனமும் சிறுத்துக் காணப்படுகிறான். பிறக்கின்ற கன்றுக்குட்டி மூன்று காலுடன் பிறக்கிறது.

இவற்றையெல்லாம் முதலில் கண்டுகொண்டவர் ஒரு மருத்துவர். வருகின்ற நோயாளிகள் ஒரே வகை நோய்க்கு ஆளாகியுள்ளார்களே என்று புருவத்தை நெளித்த டாக்டர் இந்தக் கொடுமையை வெளிக் கொணர்ந்தார். இவர் கடைசியாகக் கண்டுபிடித்தது. பிறக்கின்ற குழந்தைக்கு சிறுநீரகங்கள் முதுகுக்கு வெளியே தொங்குகின்றன என்பதாகும். பத்து வருடமாக இவர்கள் போராடினார்கள். கோகோ, பெப்சி புகழ் (டெல்லி) சுற்றுச் சூழல் விஞ்ஞான மையம் அனைத்தையும் சோதித்து, ''முந்திரிக் காட்டில் தெளித்த என்டோசல்பான்தான் காரணம் என்று சான்று வழங்கியது. அரசு ஒரு மூன்று பேர் கமிட்டி போட்டது. கமிட்டி மக்களைப் பார்க்காமலே தீர்ப்பு எழுதியது. ''பாதிப்பு என்டோ சல்பான் தெளித்ததால் தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை'' என்று எழுதினார்கள். அதற்கு மேலும் ஒரு மைய அரசு வேளாண் விஞ்ஞானி விடுத்த அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது. அவர் சொன்னது இதுதான்.

''என்டோசல்பான் தெளிப்பதால்தான் பிறவி ஊனம் வர வேண்டும் என்பது இல்லை. நெருக்கமான உறவினர்கள் இடையே திருமணம் முடித்தால் கூட பிறக்கும் குழந்தைகள் ஊனமாகப் பிறக்கும்'' என்று முத்துக்களை உதிர்த்தார்.

மக்கள் போராட்டம் ஓயவில்லை. நீதிமன்றம் சென்றார்கள். எலிகாப்டரில் என்டோசல் பான் தெளிப்பதை நீதிமன்றம் தடை செய்தது. எலிகாப்டரில் நஞ்சு தெளிப்பதை நிறுத்தி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. முந்திரிக் காட்டில் விளைச்சல் குறையவில்லை என்று செய்தி வருகிறது. அதாவது பூச்சிகொல்லிக்கே தேவை இருக்கவில்லை என்பது நிரூபணமாகி இருக்கிறது.

பொருள்கள் மீது பூச்சி கொல்லி தெளிக்கும்போது அவை மீது எஞ்சிய நஞ்சு படிந்திருப்பதை 1984 ஆம் ஆண்டிலேயே கோவை வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடித்தது. காய், கனி, தானியம், இறைச்சி. முட்டை, பால் இவற்றில் காணப்படும் எஞ்சிய நஞ்சு தாயின் உடலில் சேமிக்கப்பட்டு குழந்தை பெற்ற பின்பு குழந்தைக்கு ஊட்டும் தாய்ப்பாலிலும் வெளிப்படுகிறது என்று கண்டறிந்தார்கள். அதனால், இயற்கை வழி பயிர்ப் பாதுகாப்புத் துறை என்று ஒரு ஆராய்ச்சித் துறையே ஏற்படுத்தப்பட்டது. இருபத்திரண்டு ஆண்டுகளாக எந்த ஒன்றையும் பல்கலைக் கழகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்று உழவர்கள் வியப்படைகிறார்கள்.

1984 ஆம் ஆண்டு போப்பால் நகரில் கார்பைடு (செவின்) என்ற அமெரிக்கக் கம்பெனியின் பூச்சி கொல்லி ஆலையில் ஒரு இரவில் நச்சுக் கசிவு ஏற்பட்டது. பல்லாயிரவர் மடிந்தார்கள். பல்லாயிரவர் முடம் ஆனார்கள். அன்று சிறுவனாக இருந்த சுனில்குமார் இன்று 25 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டுவிட்டான். இன்னும் பலர் தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என்ற செய்தி இதயத்தைப் பிழிகிறது.

பூச்சி கொல்லிகள் இத்தகைய தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை 1962 ஆம் ஆண்டே ''ராச்சேல் கார்சன்'' புத்தகமாக எழுதி வெளியிட்டார். அமெரிக்கர்களுக்குத் தெரிந்துவிட்டது. வேப்பங்கொட்டைச் சாறே பூச்சியையும் விரட்டும், நோய் களையும் விரட்டும் என்று. அது குறித்துத்தான் 2000 ஆண்டில் மே மாதத்தில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் வழக்கு நடந்தது. இந்த அலுவலகம் ஜெர்மன் நாட்டில் உள்ள மியூனிச் நகரத்தில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இந்தியாவில் இருந்து போயிருந்த ஐந்து பேரில் நானும் ஒருவன். காப்புரிமை வாங்கியிருந்த கம்பெனியின் பெயர் டபிள்யு. ஆர்.கிரேஸ். இந்த கம்பெனி வேப்பங் கொட்டைச் சாறு பூஞ்சாள நோய்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்திருப்பதாகக் கூறி அமெரிக்காவில் ஒரு காப்புரிமை வாங்கி இருந்தான். ஐரோப்பாவிலும் ஒரு காப்புரிமையும் வாங்கி இருந்தான். டெல்லி நகரில் டாக்டர வந்தனா சிவா தலைமையில் செயல்படும் விஞ்ஞான, உயிரியல் ஆராய்ச்சி மையம் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தது.

வேம்பு எங்கள் சுதந்திர மரம். நினைவு தெரியாத காலத்திலிருந்து வேம்பு எங்கள் பயிர் மருத்துவத்திலும் கால்நடை மருத்துவத்திலும் மனித மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் புதிதாக நீங்கள் எதையும் கண்டுபிடிப்பதற்கில்லை என்பது எங்கள் வாதமாக இருந்தது. நடுவர் கம்பெனிக்காரரிடம் கேட்டார். ''நீங்கள் புதிதாகக் கண்டுபிடித்தது என்ன? இந்தியாவில் சிறிய அளவில் செக்கில் ஆட்டுகிறார்கள். நாங்க பெரிய அளவில் ஃபேக்டரியில் தயாரிக்கிறோம்.'' இது கம்பெனியார் பதில்.

எங்களுக்காக வாதிட்ட வழக்கறிஞர் கேட்டார். ''A''யைக் கண்டுபிடித்தால் அது இல்லாததைக் கண்டு பிடித்ததாகும். இன்னொருவர் A,B,C,D யெல்லாம் கண்டுபிடித்த பிறகு ''E''ஐ நீ கண்டு பிடித்தால் அது எப்படிப் புதிய கண்டுபிடிப்பு? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் கம்பெனி தோற்றுப்போனது. அதன் தோல்வியை வலுப்படுத்த இன்னுமொரு சாட்சியையும் நடுவர் முன் வைத்தோம். அது டபிள்யூ. ஆர்.கிரேஸ் கம்பெனி மும்பாய் வியாபாரிக்கு எழுதிய கடிதம். அதில் ''நீங்கள் வேப்பங்கொட்டைச் சாற்றைப் பயிர்களில் தெளித்து சோதித்துப் பா¡த்திருப்பதாக அறிய வருகிறோம். உங்கள் கண்டுபிடிப்பை எங்களுக்குக் கொடுத்தால் போதிய சன்மானம் தருவோம் என்று எழுதப்பட்டிருந்தது. இந்தச் சாட்சியத்தைப் பார்த்தபோது கம்பெனிக்காரன் மூஞ்சி வெளுத்துப் போனது. மும்பாய்க்காரர் என்னதான் செய்திருந்தார்?

வேப்பங்கொட்டைச் சாற்றைக் காய்ச்சி வடித்து 35 உழவர்களின் பருத்தி, திராட்சைத் தோட்டங்களில் தெளித்திருந்தார். இரண்டு பயிர்களிலும்
பூச்சிகளும் கட்டுப்பட்டன. நோய்களும் மட்டுப்பட்டன. இந்தியாவில் எது அதிகமாக விற்கும் என்பதை யோசித்து மும்பாய் வியாபாரி பூச்சி கொல்லி தயாரிக்கக் காப்புரிமை வாங்கியுள்ளார்.

வேப்பங் கொட்டைச்சாறு பூச்சியையும் கட்டுப்படுத்தும் நோயையும் மட்டுப்படுத்தும் என்ற உண்மை பரப்பப்பட்டால் பல உழவர்களின் தற்கொலை தவிர்க்கப்படும். ஆந்திராவில் ஆயிரம் ஆயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். காரணம் பருத்திக் காயைத் தின்ற புழுக்களை இரசாயணப் பூச்சி கொல்லிகளால் கொல்ல முடியவில்லை. ஆந்திராவில் உழவர் தற்கொலையை ஒட்டி தமிழகத்து உழவியல் விஞ்ஞானி திரு.செல்வம் மற்றும் இரு விஞ்ஞானிகளை இணைத்துக் கொண்டு ''பருத்தி உழவர்களின் நண்பர்கள்'' என்ற நூலை வெளியிட்டார். அதில் எந்த எந்தப் பூச்சிகளை எந்த எந்த பூச்சிகள் உண்ணுகின்றன என்பது வண்ண வண்ணப் படங்களுடன் விளக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு உழவுத்துறை இயக்குனர், ஆந்திர மாநில உழவுத் துறை இயக்குனர் இருவரும் முன்னுரை எழுதியுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகர் அணிந்துரை வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள செய்தி முக்கியமானது.

''ஒரு பருத்தி வயலில் 150 உயிரினங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பத்து மட்டுமே செடியைத் தின்கின்றன. 100 உயிரினம் செடியைத் தின்னும் பூச்சிகளைத் தின்கின்றன. மீதமுள்ள நாற்பது உயிரினங்கள் நன்மையும் செய்வது இல்லை. தீமையும் செய்வது இல்லை. இரசாயணத்தைத் தெளித்துத்தான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லுபவர்கள் உயிரியல் விஞ்ஞானம் பற்றிய அறிவில்லாதவர்கள். அல்லது வேறு ஏதோ காரணத்தால் அப்படிச் சொல்லுகிறார்கள்'' இப்படி எழுதி வெளியிட்டார்கள். நமது விஞ்ஞானிகளுக்கு இந்தப் புத்தகத்தில் ஆளுக்கொன்று கொடுத்தால் நமது உண்ணும் உணவும் குடிநீரும் நஞ்சாகாமல் காக்கப்படும்.

பத்தொன்பது ஆண்டுகளாக நான் முட்டைகோசு சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தேன். அக்டோபர் கடைசி வாரம் நீலகிரி சென்றபோது மீண்டும் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. முட்டைக்கோசு உண்பதை விலக்கியதற்கான அடிப்படைக் காரணம். அது 1987 ஆம் ஆண்டு. நான்கு வார இயற்கை உழவாண்மை பயிற்சி முடித்திருந்த நேரம். பெங்களூர் போயிருந்தேன். அங்கு முட்டை கோசு அறுவடை நடைபெறுவதைப் பார்த்தேன். ஒரு பெரிய அண்டா அல்லது கொப்பரையில் என்ட்ரின், எக்கலாச்சு முதலாக என்டோசல்பான் ஈறாக பத்து வகை பூச்சி. பூசனைக் கொல்லிகளைக் கொட்டிக் கலக்குகிறார்கள். பிறகு, முட்டை கோசு, காலி ப்ளவர், பீட்ரூட், கேரட் அனைத்தையும் தயாரிக்கப்பட்டுள்ள நஞ்சுக் கலவையில் முக்கி எடுக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரை நோக்கி நான் கேட்டேன். ''இந்த நஞ்சு அனைத்தும் பூச்சி, பூஞ்சனத்தைக் கொல்வதற்கு என்றுதானே சொன்னார்கள். ஏன் அறுவடை செய்தபிறகு முக்குகிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர்கள் பதில் விசித்திரமானது.

''அறுவடையாகும் காய்கறிகள் உடனடியாக விற்கப்படுவது இல்லை. பல இடங்களுக்கும் போய் வாடிக்கையாளரை சந்திக்கும் போது ஐந்து நாள் கடந்திருக்கும். அதற்குள் காய்கறி வதங்கி வாடிப்போனால் விற்காமல் கடந்து போகும். அதற்காகத்தான் பூச்சி கொல்லியில் முக்கி எடுக்கிறோம்.''

மேட்டூர் இலக்கியக் கழகத்தில் இதுகுறித்துப் பேசியபோது ஒரு இளைஞர் எழுந்து, ''ஐயா நான் நீலகிரியில் இருந்து வருகிறேன். நாங்கள் முட்டை கோசை நஞ்சு கலந்த நீரில் முக்கி எடுப்பது இல்லை'' என்றார். ''நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள். போகும் இடமெல்லாம் அதைச் சொல்கிறேன்'' என்றேன். அந்த இளைஞர் வாய்திறக்கவில்லை. நீலகிரி போனபோது தெரிந்துகொண்டேன். அவர்கள் சக்தி மிகுந்த பூச்சி கொல்லியை சக்தி மிகுந்த தெளிப்பானில் இட்டு வாரம் ஒரு முறை முட்டைகோசு, காலிஃப்ளவர் செடிகளைக் குளிப்பாட்டுகிறார்கள்.

இன்று ஒரு மாற்றம். வான்யா ஓர் என்று பெயர் சூடிய ஓர் சேவகி தனது நண்பர்களுடன் கூட ''எர்த் ட்ரஸ்ட்'' என்று ஒரு அறக்கட்டளை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பு சார்ந்த நண்பர்கள் ''உயிரகற்றல் வேளாண்மை''யில் பயிற்சியளிக்கிறார்கள். பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள், ஆடவர், மகளிர் அனைவரும் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்கிறார்கள். அவை சென்னையில் மயிலாப்பூரில் உள்ள கடைக்குக் கூட வருகின்றன. ''உங்கள் காய்கறி வாடுவது இல்லையா'' என்று கேட்டேன். ''நாங்கள் யூரியா, டீ.ஏ.பீ என்று உப்பு எதுவும் போடுவது இல்லை'' என்றார்கள்.

நன்றி: திரு. நம்மாழ்வார்

இந்தக் கட்டுரை நான் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட 'சிம்பிளா தோட்டம் போடு' என்கிற புத்தகத்தில் உள்ளது.

WEDNESDAY, AUGUST 27, 2008
நன்றி:www.samsri.blogspot.com

மான்சாண்டோ என்பது யார்?

மரபணுப்பயிர்களை அறிமுகப்படுத்தும் மான்சாண்டோவின் வரலாறு:

கி.பி.1901 ஆம் ஆண்டு ஜான் எஃப் க்யூனி என்பவரால் தனது மனைவி ஓல்கா மான்சாண்டோவின் பெயரால் துவங்கப்பட்ட நிறுவனமே இது.சாக்கரின் தயாரிக்கும் நிறுவனமான இது பிற்காலத்தில் உலகின் மோசமான பிராடுக்கம்பெனி என அமெரிக்காவிலேயே ‘பெயர்பெற்ற’நிறுவனமாக வளர்ந்தது.

கடந்த 108 ஆண்டுகளில்,பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்து 55 நாடுகளில் கிளைபரப்பி நிற்கிறது.இதன் கிளைகள் பாகிஸ்தான்,சீனா,டென்மார்க்,பிரேசில்,பெரு,பிலிப்பைன்ஸ்,இந்தியா என பலநாடுகளில் ஆளும் வர்க்கத்தை தனது வர்த்தகப்பேராசைக்கு வளைத்துப்போட்டுவருகிறது.இதன் நடவடிக்கைகள் பெரும்பாலும் மர்மமானவை.

உலகம் முழுவதும் இந்த நிறுவனம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை அறிமுகம் செய்து கி.பி.2100க்குள் உலக உணவுச்சந்தையில் ஒரே ஒரு வல்லரசு நிறுவனமாக ,சர்வாதிகார நிறுவனமாக மாறத்துடிக்கிறது.உலகம் முழுவதும் வாழும் 700 கோடி மக்களும் உணவுப்பொருட்களை பயிரிட இந்த நிறுவனத்தின் விதைகளை மட்டும் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கிட திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது.வடபாரதத்தில் பி.டி.பருத்தி விதைகளை அறிமுகம் செய்ததால் (பிடி பருத்தி எனப்படும் மரபணு பருத்தியை அறிமுகம் செய்ததே) இந்த மான்சாண்டோதான்.இதனால்,பீகார்,உத்திரப்பிரதேசம்,மத்தியப்பிரதேசம் முதலான மாநிலங்களில் வருடத்திற்கு ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.அந்த வரலாற்றை நாம் முழுமையாகப் படித்தால்,மான்சாண்டோ நிறுவனத்தையே தகர்த்தெறியும் ஆத்திரம்தான் வரும்.அவ்வளவு நயவஞ்சகம்!!!
பருத்தியில் மரபணுப்பயிரை அறிமுகம் செய்ததால் இதன் நயவஞ்சகத்தை நாம் உணரவில்லை;தற்போது பிடி கத்திரிக்காய்,பிடி சோயா,பிடி அரிசி,பிடி வெண்டைக்காய் என ஒட்டு மொத்த இந்தியர்களின் சோற்றுத்தட்டில் 100% விஷமுள்ள உணவுவகைகளை வைக்கத் துடிக்கிறது.இதையெல்லாம் அறிந்தும் கூட மத்திய அமைச்சரவையானது இந்த நிறுவனத்திற்கு சிகப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறது.

தற்போதைய மான்சாண்டோவின் தலைவர் ஹக் கிராண்ட்.இவரைத் தவிர, 12 நிர்வாகிகள் மேற்பார்வையில் செயல்பட்டுவரும் மான்சாண்டோவின் லாபவளர்ச்சியைப் பார்த்தால் இதன் அசுர வளர்ச்சி புரியும்.
எத்தகைய உணவுதொடர்பான சோதனையும் செய்துபார்க்கப் படாமலேயே மான்சாண்டோ மகிகோ கம்பெனி உற்பத்தி செய்த பிடி கத்தரிக்காய்க்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.12 கோடி இந்து உழவர்க் குடும்பங்கள் பயிர்செய்யும் உணவுப்பயிர் கத்தரிக்காய்.
உழவர் அல்லாத குடும்பங்களிலும் கூட தொட்டியில்,பெட்டிகளில்,மாடிகளில்,வீட்டுத்தோட்டங்களில் பயிர்செய்து உண்ணக்கூடிய காய்கறியான கத்தரிக்காய் 112 கோடி இந்தியர்களின் உணவுப்பண்டமாகும்.இதில்,மரபணுவைத் திணித்து,(மாற்றப்பட்டுள்ளதாகச் சொல்வது பொய்)இந்தியாவின் உணவுச்சந்தையை தனது கைக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது அமெரிக்க பகாசுர மான்சாண்டோ.

மான்சாண்டோவின் 2009 ஆம் ஆண்டுக்கான நிகர விற்பனை ரூ.56,047 கோடிகள்.இதன் மொத்த லாபம் ரூ.32,326 கோடிகள்.இவ்வ்வ்வளவு லாபம் போதாதென்றுதான் இந்தியர்களின் தினசரி உணவில் கைவைத்து நம்மை அவர்களிடம் பிச்சையெடுக்கும் நிலைக்கு முயற்சியெடுக்கிறது.

மலையாள ஆயுர்வேத சிகிச்சை வகைகள்


மலையாள மசாஜ் சிகிச்சை என்றால் என்ன?

ஆயுர்வேத மருத்துவமுறையில் எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தும் மருந்துகளும்,மருத்துவமுறைகளும் இருக்கின்றன.அவற்றில் ஒன்றுதான் ஆயுர்வேத மசாஜ்(உடலை பிடித்துவிடுதல்) ஆகும்.இந்தமுறையால் கேரளாவின் புராதன மருத்துவமனைகள் எப்போதும் பிஸியாகவே இருக்கின்றன.

சாதாரண மசாஜ் செய்யும் முறைக்கு ஆயுர்வேதத்தில் ‘அப்யங்கா’ என்று பெயர்.அப்யங்காவில் உடல் முழுவதும் மூலிகை எண்ணெய்யை தடவி,மெதுவாகப்பிடித்துவிடுவது.இதனால்,ஆழ்ந்த தூக்கம் வரும்.உடல்,மனம்,மூளை இம்மூன்றும் நல்ல சுறுசுறுப்பை அடையும்.

இன்னொரு முறைக்குப்பெயர் ‘ஞவரக்கிழி’ இதில்,உடல் முழுக்க மூலிகை எண்ணெய்யை தடவிவிட்டு,ஞவரா அரிசி(மூலிகை சத்துக்களை புகுத்தப்பட்ட அரிசி)யை துணியில் கட்டி,அதை பொட்டலமாக்கி,அதைக்கொண்டு உடலின் ஒவ்வொருபாகமாக அழுத்துவது.

‘பிழிச்சல்’என்றொரு முறை உண்டு.இதில் இளம் சூடான மூலிகை எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி,ஒரு தாள கதியில் உடலை அழுத்தித் தேய்ப்பது.மசாஜீக்கு வந்திருப்பவரின் உடல் உபாதையைப் பொறுத்து,மசாஜ் செய்பவர்கள் முதுகு,இடுப்பு போன்ற பகுதிகளை காலால் மிதித்து மசாஜ் செய்வர்.ஒருநாளுக்கு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வீதம் குறைந்தது ஒரு வாரம் அதிகபட்சம் 3 வாரங்களுக்கு இப்படிப்பட்ட மசாஜ் செய்ய வேண்டியிருக்கும்.இதனால்,ஆர்த்திரிடிஸ், பக்கவாதம்,நரம்புத்தளர்ச்சி நீங்கிவிடும்.

ஒற்றைத்தலைவலி, இரட்டைத்தலைவலி,மூக்கடைப்பு,தொண்டை வாய் உலர்ந்து போகுதல் போன்றவை நீண்ட நாட்களாக இருந்தால் அதை சரிசெய்ய ‘சிரோ வஸ்தி’ என்ற முறை இருக்கிறது.தலையில் தோலான மேல்,கீழ்பக்கம் திறந்த தொப்பியை தலையில் வைத்து,குழல் வழியாக இளஞ்சூடான மூலிகை எண்ணெய்யை குறிப்பிட்ட நேரத்திற்கு ஊற்றுவர்.இதனால்,இந்நோய்கள் ஓடிவிடும்.

ஆண்மை பெருக சிட்டுக்குருவி லேகியமும்,லேட்டஸ்டாக வயாகராவும் பிரபலம்.அதனால்,பக்கவிளைவுகள் அதிகம் எனத் தெரிந்தும் அதில் போய் விழுந்து தன்னை அழித்துக்கொள்பவர்கள் அதிகம்.பக்கவிளைவுகளற்ற ஆயுர்வேத முறையான காயகல்ப சிகிச்சை செய்தால் போதும்.ஒரே நிபந்தனை 50 வயதுக்குள் இந்த காய கல்ப சிகிச்சை செய்துகொண்டால்,50 வயதுக்கு மேலும் படுக்கையில் துள்ளி விளையாடலாம்.

சிரோதாரா என்ற ஆயுர்வேத சிகிச்சையானது டென்ஷனோடு வாழ்ந்துவருபவர்களுக்கு மிக அவசியமானது.தொழிற்சங்கத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்கள்,உளவுத்துறையில் இருப்பவர்கள்,அரசியல்கட்சியில் கொள்கை வகுப்பவர்கள்,அரசாங்கத்தின் நிழல் சக்தியாக செயல்படுபவர்கள் மற்றும் டென்ஷனோடு வாழ்பவர்களுக்கு சிரோதாரா மிகச்சிறந்த சிகிச்சையாகும்.
மூலிகை எண்ணெய்,மூலிகை சேர்க்கப்பட்ட பால்,மோர் அல்லது மூலிகைச்சாற்றினை சிறிய குழல் வழியாக நெற்றியில் தொடர்ந்து விழும்படி செய்வதுதான் ‘சிரோதாரா’
இந்த ஆயுர்வேத சிகிச்சைகளைச் செய்வதற்கு ஏற்ற காலம் கேரளாவின் மழைக்காலம்தான்.அப்போது இந்த சிகிச்சை அதிக பலன் தரும்.தூசிகள் இராது.தோலில் இருக்கும் துவாரங்கள் விரிந்து பெரிதாகும்.இதனால்,மூலிகை எண்ணெய் உடலினுள் இழுக்கப்படும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குங்கள்;நிம்மதியாக வாழுங்கள்


உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி

கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்திரமில்லாத நிலை, எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை,தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல், திடீர் நோய்,திடீர் அவமானம்,மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல் இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க ஒரு சுலபமான பரிகாரம் இருக்கிறது.
பசுவுக்கு அகத்திக்கீரை ஒரு முறை வழங்கினாலே இந்தப்பிரச்னைகள் உடனே தீர்ந்துவிடும்.பசுவை
இன்று கிராமங்களில் பார்க்கலாம்.அல்லது பால் பண்ணைகள்,மாட்டுப் பண்ணைகள்,பசு மடங்கள்,பெரிய கோவில்களில் உள்ள பசு மடங்களில் இவ்வாறு அகத்திக்கீரையை வழங்கலாம்.அல்லது வாழைப்பழங்களையும் தானமாக வழங்கலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ளேயே உட்பிரகாரத்தில் பசுமடம் அமைந்திருக்கிறது.அந்த பசுமடத்தின் வாசலிலேயே அகத்திக்கீரைக் கட்டு ஒன்று ரூ.10/-க்கு விற்பனை செய்கிறார்கள்.நாம் அதை வாங்கி உள்ளே இருக்கும் பசுக்களுக்கு வழங்குவது மாபெரும் புண்ணியம்.
திரு அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ரமண மகரிஷியின் ஆசிரமத்திலும், அஷ்ட லிங்கங்களில் சில லிங்கங்களின் வாசல்களிலும் பசுக்களைக் காணலாம்.
சாதாரணமாக நமது ஊரில் தெருவில் இருக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் வழங்கினாலே காம ரீதியான குற்றங்கள் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும்.பழமையான கோயில்களில் இதையே செய்தால் எவ்வளவு சிறப்பு!!!

யாருக்கு எந்த ராசிக்கல்லை அணிவது?அதை எப்படி தேர்வு செய்வது?


சூரியக்கிரக ஆகர்ஷணசக்தி பூமிக்கு சிவப்பு நிறத்திலும், சந்திரக்கிரக ஆகர்ஷண சக்தி வெள்ளை நிறத்திலும், சுக்கிரக்கிரக ஆகர்ஷண சக்தி வெண்பட்டு நிறத்திலும்,செவ்வாய்க்கிரக ஆகர்ஷணசக்தி சிவப்பு நிறத்திலும், குரு கிரக ஆகர்ஷண சக்தி மஞ்சள் நிறத்திலும், புதன் கிரக ஆகர்ஷண சக்தி பச்சை நிறத்திலும், ராகு மற்றும் கேதுவின் ஆகர்ஷண சக்தி சாம்பல் நிறத்திலும் பூமிக்கு வருகின்றன.அதே போல், மேற்படி கிரகத்தின் நிறத்தில் இருக்கும் கற்களும்,கடல்பாசிகளும் கிரக சக்தியை ஈர்க்கும் என அறிந்து வகைப்படுத்தினர்.

இங்கே தான் குழப்பம் வருகிறது.ஒருவர் கும்ப லக்னம், மேஷ ராசி,ராகு மகா திசை நடக்கிறது என வைத்துக்கொள்ளுவோம்.
கும்ப லக்னம் சனியின் லக்னம், மேஷ ராசி செவ்வாயின் ராசி, ராகு மகா திசை 18 வருடங்கள்.இப்போது அந்த ஒருவர் எந்த விதமான ராசிக்கல்லைப் பயன்படுத்துவது?
கும்ப லக்னம் என்பதால், சனியின் கிரகத்தின் நீலக்கல்லைப் பயன்படுத்துவதா?
இல்லை
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய்க்கிரகத்தின் பவளக்கல்லைப் பயன்படுத்துவதா?
இல்லை
ராகு மகாதிசையின் அதிபதி ராகு.ராகுவின்
கோமேதகத்தைப் பயன்படுத்துவதா?

இங்கே தான் ஒரு அனுபவமுள்ள ஜோதிடரின் ஆலோசனை தேவைப்படுகிறது.அந்த அனுபவமுள்ள ஜோதிடரும் நடுநிலையுள்ளவராக இருக்க வேண்டும்.
என்னிடம் மேலே கூறிய ஒருவர் நேரில் சந்தித்தார்.அவருக்கு கும்ப லக்னாதிபதியான சனி (ஜோதிடப்படி)கெடவில்லை;மேஷராசிப்படி ராசியதிபதி (ஜோதிடப்படி) நல்ல இடத்தில் அமையவில்லை;
ஆனால்,திசை அதிபதி நன்றாக இருக்கிறார்.அவருக்கு 2015 ஆம் ஆண்டுவரை, கோமேதகம் அணியும்படி ஆலோசனை கொடுத்தேன்.ஒரே வாரத்தில்,அவரது வாழ்க்கைப்பாதை மாறிப்போனது.இப்போது அவர் ரொம்ப பிஸியாகிவிட்டார்.
சிலர் நீலக்கல்,பவளக்கல்,கோமேதகம் மோதிரம் என அனைத்தையும் அணிகிறார்கள்.இதனால்,பலன்கள் ஏற்படுவது அபூர்வம்.
லக்னம்,லக்னாதிபதி,ராசி,ராசியாதிபதி,திசா புக்தி,கோசாரம் என கணக்கிட்டு சரியான ரத்தினக்கல்லைத் தேர்வு செய்ய வேண்டும்.

நவக்கிரகங்களின் ஆதிக்கம் பெறும் மனித உறுப்புகள்

மனித உடலின் நீர் மற்றும் மனம் சந்திரக்கிரகத்தின் ஆகர்ஷண சக்தியால் இயங்குகிறது.
மனித உடலின் விந்து(ஆணின் சக்தி), சுரோணிதம் (பெண்ணின் சக்தி) சுக்கிரக்கிரகத்தின் வெள்ளிக்கோளின் ஆகர்ஷண சக்தியால் இயங்குகிறது.
ரத்தம் மற்றும் ரத்த நாளங்கள் செவ்வாய்க்கிரகத்தின் ஆகர்ஷணசக்தியாலும்,எலும்புகளின் தாதுக்கள் சனிக்கிரகத்தின் ஆகர்ஷண சக்தியாலும்,விந்துவின் உயிர் அணு குருக்கிரகத்தின் கதிர்வீச்சாலும் இயங்குகிறது.

நரம்புமண்டலத்தின் அனைத்து நரம்புகளும் புதன் கிரகத்தின் ஆகர்ஷண சக்தியாலும், கண்களின் ஒளியும்,ஆத்ம சக்தியும் சூரியக்கிரகத்தின் ஆகர்ஷண சக்தியாலும் செயல்பட்டுவருகிறது.மனித உடலின் கழிவு மற்றும் கெட்ட நீர் ஆகியன ராகு மற்றும் கேது கிரகங்களின் ஆகர்ஷணசக்தியால் செயல்பட்டுவருகிறது.

நன்றி:பிரம்ம ஜோதிடம் மாத இதழ் பக்கம்4,செப்டம்பர் 2007

திருஅண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகள்

திருவாதிரை மண்டலமும் அண்ணாமலையும்

ஒருவர் திருஅண்ணாமலைக்கு வருவதும்,அவர் கிரிவலம் செல்வது அவரால் முடிவு செய்யப்படுவதில்லையாம்;பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவரது அல்லது அவளது முன்னோர்கள் மற்றும் பித்ருக்களால் பித்ரு உலகங்களில் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது.ஒவ்வொருவரின் அண்ணாமலை எனப்படும் அருணாச்சல யாத்திரையும் விண்ணுலக அருணாச்சல திருவாதிரையில்தான் திட்டமிட்டு முடிவாகிறது.

திருவாதிரை என்பது நட்சத்திரம் என்றுமட்டுமே நாம் அறிந்திருக்கிறோம்.அருணாச்சல திருவாதிரை என்பது ஒவ்வொரு விநாடியும் அண்ணாமலையில் நிகழ்வதை விவரித்துக்காட்டும் நட்சத்திர மண்டலமாகும்.திரு அண்ணாமலையில் கிரிவலம் சென்றவர்கள்,செல்லுபவர்கள்,இனிமேல் செல்ல இருப்பவர்களின் கிரிவலப்பயணத்தை விநாடிதோறும் திரைப்படம்போல் விவரிப்பதே அருணாச்சல திருவாதிரை ஆகும்.
ஒருவர் கிரிவலம் நிறைவடைந்ததும் “அருணாச்சல திருவாதிரை மங்களம்” என்ற விஷேசமான மங்களத்துதியை ஓதி மூலவரின் வாசலுக்கு நேரில் நெடுஞ்சாண்கிடையாகத்தரையில் வீழ்ந்து வணங்குவர்.

இதுதவிர, திருவாதிரை நட்சத்திரம் நின்ற நாட்கள் அல்லது நாளன்று கிரிவலம் செல்லுவது,கிரிவலப் பயணத்தின் போது செய்யும் தர்மங்களுக்கு பல கோடி மடங்கு பலன் உண்டு என்பது சிவனாகிய அண்ணாமலை ரகசியமே!

ஒருவர் ஒரே ஒரு முறை திரு அண்ணாமலையில் குருபக்தியுடன்,மனப்பூர்வமாக கிரிவலம் சென்றால் அவருடன் நிறைவுபெறும் 64 தலைமுறையினருக்கு அதன் புண்ணியப்பலன்கள் சென்றடையும் என்பது அருணாச்சலரின் வாக்கு.

திருஅண்ணாமலையில் கிரிவலம் பவுர்ணமி,அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கானவர்கள் செல்லுகிறார்கள்.அப்போதுதான் கிரிவலம் செல்லவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.அந்த நாட்களில் கிரிவலம் செல்லும்போது நம்மோடு சூட்சுமமாக (ரகசியமாக) பல சித்தர்களும் கிரிவலம் செல்லுகிறார்கள்.அதனால்,அந்த சித்தர்களில் ஒருவர் அல்லது சிலரின் அருட்பார்வை நம்மீது படுவதற்கு வாய்ப்பு உண்டு.
கூட்ட நெரிசலை வெறுப்பவர்கள்,ஒரு தியானமாக,ஒரு தவமாக கிரிவலம் செல்ல விரும்பும் அன்பர்கள் எந்த நாளிலும்,எந்த நட்சத்திரத்திலும்,எந்தக் கிழமையிலும் கிரிவலம் செல்லலாம்.அப்படிச்சென்றாலும் கிரிவலம் சென்ற புண்ணியம் நமக்கும் நமது முந்தைய 64 தலைமுறை முன்னோர்களுக்கும் கிடைக்கும்.மூன்று கோடி தடவை திருக்கார்த்திகை தீபத்திருநாட்களில் மட்டும் கிரிவலம் சென்ற சித்தர்கள் இருக்கிறார்கள்.நாமெல்லாம் எம்மாத்திரம்?
நன்றி:அகஸ்திய விஜயம்,டிசம்பர் 2009

நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை


ணம் நிறைய்ய்ய சேர ஒரு ஆன்மீக வழி

உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும்.அந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆல இலை,வெற்றிலை,மஞ்சள்,குங்குமம்,மல்லிகை,தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும்.இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்திருக்க வேண்டும்.மறுநாள்,அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும்.

இப்படி அடிக்கடி செய்தால்,நமது பணம்நியாயமாகவும், நல்ல விதமாகவும் நம்மை வந்தடையும்; நம்மிடம் சேரும்.பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.

நடுத்தர மற்றும் பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கருப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை, சுரைக்குடுவை,தேக்கு மரப்பெட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி மேற்கூறியவாறு பயன்படுத்தலாம்.

இதன்மூலம்,நமது பணம் மது,காமம்,புகை,ஆடம்பரம், கேளிக்கை போன்ற வீண் விரையமாகாமல் தற்காத்துக்கொள்ளலாம்.
நன்றி: அகஸ்திய விஜயம்,பக்கம் 38,டிசம்பர் 2009.

கிர்லிக் கேமிராவின் மகிமைகளை விண்வெளியில் காட்டினால். . .


கிர்லிக் கேமிராவின் மகிமைகள்

சோவியத் யூனியன் வல்லரசாக இருந்தபோது கம்யூனிஸக்கொள்கை அதன் முகமாக இருந்துவந்தது.அப்போது,மனிதனின் சக்தியே மகத்தான சக்தி என்பதை நிரூபிக்கும் விதமாக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அதில் ஒன்றுதான் மன சக்தியைப் பயன்படுத்துதல்.

ஒரு ஜீனியஸ் தனது மூளையின் சக்தியில் 1 % மட்டுமே பயன்படுத்துகிறான் என்பதை சோவியத் கம்யூனிஸ்டுகளின் ஆராய்ச்சிமுடிவுகள் தெரிவித்தன.ஒரு மனிதன் தனது முழு மனசக்தியைப் பயன்படுத்தினால், ஒரே வருடத்தில் 12 பட்டங்களை (டிகிரி) முடிக்க முடியும்.40 வெவ்வேறு மொழிகளை கற்று அந்தந்த வட்டார மொழிக்காரர்களைப்போல பேசமுடியும்.ஆனால், தேவையற்ற கவலை,அர்த்தமற்ற பயம் போன்றவற்றால் தனது மனசக்தியின் தன்மையை உணருவதில்லை.
இந்த மனசக்தியைப் பயன்படுத்துவதன் உச்சமாக அவர்கள் கண்டுபிடித்ததுதான் கிர்லிக் கேமிரா.இந்த கேமிரா ஒன்றின் விலை சுமார் ரூ.40 லட்சமாகும்.இந்தக்கேமிராவின் மூலம் எடுக்கப்படும் புகைப்படம் ஒன்றின் விலை ரூ.5000/-ஆகும்.

இந்த கிர்லிக் கேமிராவின் மூலமாக ஒரு மனிதனின் முகத்தை காலையில் எடுத்தால் அவனது தலையைச் சுற்றிலும் ஆரஞ்சு நிற ஒளிவட்டம் தெரியும்.அந்த மனிதனின் சுறுசுறுப்பான மனநிலையைத் தெரிவிக்கிறது.மதியம் வயலட் நிறம் தெரியும்.சுறுசுறுப்பின் உச்சத்தை அது காட்டுகிறது.மாலையில் ஒரு மனிதனின் முகத்தை புகைப்படம் எடுத்தால் அடர்ந்த கறுப்பு நிறம் தெரியும்.இது அந்த மனிதனின் அசதியைக் காட்டுகிறது.
இந்த கிர்லிக் கேமிராவினால்,இந்தியாவில் புத்த பகவான் தியானம் செய்த கயாவில் உள்ள போதி மரத்தை ஒரு புகைப்படம் எடுத்தனர்.அந்த புகைப்படத்தில் ஒரு துறவி தியானம் செய்வது போன்ற அவுட் லைன் தெரிந்தது.

எனது ஆலோசனை என்ன வெனில், இன்று பல செயற்கைக்கோள்கள் பூமியை 24 மணி நேரமும் சுற்றிவந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டே இருக்கின்றன.இந்த செயற்கைக்கோள்களின் கேமிராக்களுடன் இந்த கிர்லிக் கேமிராக்களை இணைத்து பூமியில் மெக்கா, ஜெருசலம், சதுரகிரி, அண்ணாமலை,இமயமலை, திருக்கையிலாயத்தை ஒரு வருடம் முழுக்க புகைப்படம் எடுத்தால், இந்த சம்பவம் மனித வரலாற்றில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கி விடும் என்பது சந்தேகமே இல்லை;
மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு கிர்லியன் கேமிராவால் எடுக்கப்பட்ட ரெய்கி சக்தியைக் காட்டும் புகைப்படம்

கி.பி.2025 இல் இந்தியா

இந்தியா – 2025

நேற்று NDTV ல் நடந்த விவாதம்
இந்தியா இன்னும் 20 ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாக உருவாக முடியுமா?

அந்த விவாதத்தின் தொகுப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த Goldman sachs நிறுவனம் கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு இந்தியாவின் GDP ஜெர்மனி நாட்டை விட அதிகமாக இருக்கும்
இந்தியாவின் நடுத்தர வர்க்கம் 10 பில்லயனாக மாறி விடும்
உலகத்தின் கச்சா எண்ணெய்யில் 7% சதவீதத்தை நாம் விழுங்கி விடுவோம்
பங்குச் சந்தை, சந்தை மூலதனம் (Market Capitalization) 10 மடங்கு அதிகரித்து விடும்
ஆனால் இதனை எட்டுவதற்கு நமக்கு தடையாக இருக்கப் போவது

நாட்டின் படிப்பறிவு அதிகரிக்க வேண்டும்
உள்கட்டுமானம்
இதனைத் தவிர வேறு என்ன இடர்பாடுகள் இருக்கும்

தற்பொழுது வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் 40% மக்களை முன்னேற்றாத வரையில் இது ஒரு பகல் கனவாகவே இருக்கும்
இந்தியாவின் இதயமான விவசாயம் முன்னேற்றப் பட வேண்டும்
பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். இடது சாரிகளை உள்ளடக்கிய எந்த அரசும் இதனை முழுமையாக செயல்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது
லாலுக்களும், முலயாம்களும், இடதுசாரிகளும் இவர்களைப் போன்ற மற்ற அரசியல்வாதிகளும் நிச்சயம் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் குட்டிச் சுவர்களாகவே இருப்பார்கள்
ஆறுதலாக இருப்பவை

மிக அதிக அளவில் இருக்கும் இந்தியாவின் படித்த இளைய தலைமுறை
இந்தியா இன்னும் 20 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டி விடுமா ?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

கி.பி.2050 இல் நமது இந்தியா

இந்தியா 2050

இந்தியா 2025 ஐ எழுதி விட்டு, இது சாத்தியம் தானா இல்லை ஒரு நிறுவனத்தின் கற்பனையா என்ற ஐயத்துடன் Goldmansachs இணையத்தளத்துக்கு சென்று அந்த அறிக்கையினைப் பார்த்த பொழுது, இது சாத்தியமாவதற்கான வாய்ப்பு ஓரளவு இருப்பதாகவே தோன்றியது.

அப்படி என்னத்தான் சொல்கிறது அந்த அறிக்கை ?

2050ம் ஆண்டு உலகின் முதல் மூன்று பொருளாதார வல்லரசுகள்

சீனா
அமெரிக்கா
இந்தியா
என்ன நம்பமுடியவில்லையா ? எனக்கும் கூட அப்படித்தான் இருந்தது.

Goldmansachs நிறுவனம் அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனம். அதன் BRIC Report என்ற இந்த அறிக்கையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்து கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் அறிக்கையை இம் மாதம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது.

அந்த அறிக்கையின் சாராம்சம்

40 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்பொழுதுள்ள பணக்கார நாடுகளான G6 நாடுகளின் (US, UK, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி), பொருளாதாரத்தை விட BRIC நாடுகளின் பொருளாதாரம் அதிகமாக இருக்கும்.
2050ஆம் ஆண்டு உலகின் ஆறு பெரிய பொருளாதார வல்லரசுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா, ஜப்பான் தவிர மற்ற G6 நாடுகள் காணாமல் போய்விடும்.
2050 ஆம் ஆண்டிற்கு பிறகு மற்ற BRIC நாடுகளின் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்படும். ஆனால் இந்தியாவின் வளர்ச்சி மட்டும் 3% மாக இருக்கும்.
இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், பணக்கார நாடாக இருக்காது. ரஷ்யாவைத் தவிர்த்து மற்ற BRIC நாடுகளில் ஏழ்மை இருந்து கொண்டு தான் இருக்கும்.
இந்தியாவின் நடுத்தர வர்க்கம் அதிக அளவில் உயரும். அதனால் உலகில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில் தான் அதிகமாக கார்கள் இருக்கும். அமெரிக்கா கூட இந்தியாவிற்கு அடுத்த நிலையில் தான்.
இது சாத்தியம் தானா ?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் பின் தங்கியே இருந்தன. ஆனால் 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் இந்த நாடுகள் வளர்ச்சிப் பெற்றன. ஒரு காலத்தில் சோவியத் யூனியன், ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிஞ்சி விடும் என்று கருதப்பட்டது. ஆனால் இது நடைபெறவில்லை. ஒரு நாட்டின் நீண்ட கால வளர்ச்சி விகிதத்தில், வளர்ச்சியும் தேக்க நிலைகளும் தோன்றுவது இயல்பு. தற்பொழுது சீனாவின் வளர்ச்சி விகிதம் 8% . இதே அளவில் கணக்கிடும் பொழுது சீனா 2050ஆம் ஆண்டு அமெரிக்காவை விட 25 மடங்கு வளர்ச்சி அடைந்ததாக கணக்கு வரும். ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சி அவ்வாறு நடைபெறுவதில்லை. இத்தகைய நிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டே BRIC நாடுகளின் வளர்ச்சி விகிதம் கணக்கிடப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சியில் வேலை செய்யும் வயதுடைய இளைஞர்கள் அதிகமாக இருப்பதும் ஒரு காரணம். இந்தியா மற்றும் பிரேசில் தவிர மற்ற நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5% என்ற அளவில் இருக்கும். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2050 ஆம் ஆண்டு சீனா, அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இருந்தாலும், தனி நபர் வருமானம் மற்ற எல்லா நாடுகளை விட குறைவாகவே இருக்கும். ஆனால் இப்பொழுது உள்ள நிலையை விட 35 மடங்கு உயர்ந்து இருக்கும்.

இத்தகைய வளர்ச்சி உண்மையிலேயே சாத்தியம் தானா என்பதை அறிய 1960 ல் தொடங்கி அடுத்து வந்த 50 ஆண்டுகளுக்கு இதே முறையில் கணக்கிடும் பொழுது, தற்பொழுதுள்ள வளர்ச்சி விகிதத்திற்கு நெருக்கமாகவே முடிவுகள் வந்துள்ளதாம். அதனால் இது கனவு அல்ல நடைமுறையில் சாத்தியமான ஒன்று தான் என்று Goldman sachs நிறுவனம் தெரிவிக்கிறது. தற்பொழுதுள்ள வளர்ச்சி நிலையே இந்த இலக்கை எட்டுவதற்கு போதுமானது. எந்த வித அற்புதங்களையும் இதற்காக நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை.

ஆனால் இந்த நிலையை எட்ட தேவையானவை

குறைந்த அளவிலான பணவீக்கம்
நிலையான ஆட்சி
தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரம்
அந்நிய முதலீடு
படிப்பறிவு – இந்தியாவில் தான் படிப்பறிவு மற்ற BRIC நாடுகளை விட குறைவாக இருக்கிறது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற கேள்விகள் எழுகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5% என்ற அளவில் கணக்கிடப்பட்டிருக்கிறது. இது தற்பொழுதய நாட்டின் வளர்ச்சி விகிதமான 6%-6.5% விட குறைவு. நாட்டின் வளர்ச்சி 7% என்ற இலக்கை கடக்கும் என்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்ததும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்பொழுதுள்ள சூழ்நிலையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளனர். ஆனால் இதனை வேகமாக செய்ய வேண்டும். முதலில் விமான போக்குவரத்தில் அந்நிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரிகள் பிறகு பெயரளவிற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு கப்சிப் ஆகி விட்டனர். அரசு உத்தேசித்துள்ள தொலைத் தொடர்பு மற்றும் காப்பீடு மட்டுமின்றி பிற துறைகளிலும் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்.

படிப்பறிவு – கிரமப்புறங்களில் படிப்பறிவை அதிகரிப்பது மிகவும் அவசியம். அரசாங்கம் அதிக அளவில் கல்விக்காக செலவிடவேண்டும். இந்த ஆண்டு பட்ஜட்டில் சில நல்ல திட்டங்கள் இதற்கென அறிவிக்கப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் இது மட்டுமே போதாது. மோசமாக உள்ள கிராமப்புற கல்விக்கூடங்கள் சீர்செய்யப்படவேண்டும். அரசாங்கம் அளிக்கும் கல்வியின் தரம் உயர வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் மனிதவளமேம்படு மிகவும் முக்கியமான ஒன்று.

விவசாயம், இந்தத் துறைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இப்பொழுது தான் அரசுக்கு வந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் விவசாயம் மிகவும் முக்கியம். நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த படுமா ? (நிச்சயமாக இது நிறைவேறாது தானே ?)

இலக்கு எட்டிவிடும் தூரத்தில் இல்லை தான். ஆனால் சரியாக திட்டமிட்டு நகர்ந்தால், எட்டி விடுவோம். எட்டுவோமா ?

Goldman sachs ன் அறிக்கையைப் படிக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள்

http://www.gs.com/insight/research/reports/99.pdf
நன்றி:http:://thamizhsasi.wordpress.com/2004/10

ஒழுக்கம் சிதைவதற்குக் காரணம் என்ன?நன்றி;தமிழ் வெப்துனியா மற்றும் ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்

தனி மனித ஒழுக்கம் இன்றைய சூழலில் பெரிய சரிவைச் சந்தித்துள்ளதற்கு காரணம் என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
வெள்ளி, 11 டிசம்பர் 2009( 18:28 IST )

இன்றைய சூழலில் தனி மனித ஒழிக்கம் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுள்ளதை சமீபத்திய நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன. கோயிலிலேயே காம லீலைகளில் ஈடுபட்ட பூசாரியில் துவங்கி, கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதியில் கிடைக்கக் கூடாத பொருட்கள் கிடைத்தது வரை பல்வேறு செய்திகள் வாராந்திர பத்திரிகைகளில் உலா வருகின்றன. தனி மனித ஒழுக்கம் இவ்வளவு கீழ்த்தரமாக சென்றதற்கு காரணம் என்ன?

பதில்: கன்னி ராசிக்கு சனி (கடந்த நவம்பரில்) பெயர்ச்சியாகி உள்ளதால் உலகெங்கும் முறையற்ற பாலியல் தொடர்புகள் (முன்பு இருந்ததை விட) அதிகரித்து வருகிறது. கன்னிச் சனியால் உலகெங்கும் காமம் (முறையற்றது) அதிகரிக்கும். சிற்றின்ப பிரியர்களுக்கு, சிற்றின்பம் தொடர்பான வேட்கை அதிகரிக்கும். இது முறையற்ற உறவில் முடியும்.

கன்னி ராசியில் சனி இருக்கும் வரை உலகெங்கும் நடக்கும் குற்றங்களில் பாலியல் தொடர்பான குற்றங்களே முதலிடம் பிடிக்கும் என்று கூடக் கூறலாம். வரும் 21/12/2011 வரை இதே நிலை நீடிக்கும்.

சனி பகவான் கன்னியில் அமர்ந்துள்ளதால், அந்த ராசிக்காரர்களின் நிலை என்ன?

கன்னி ராசியில் சனி அமர்ந்துள்ளதால், அந்த ராசிக்காரர்கள் ஒரு சிலருக்கு காம உணர்வே முற்றிலும் இல்லாமல் போகக்கூடும். சிலருக்கு வழக்கத்திற்கு விட இச்சை அதிகமாகும். அது அவரவர் ஜாதக நிலையைப் பொறுத்தும் மாறுபடும்.


ஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன?

ஜோதிடத்தில் என்ன வகையான புண்ணியங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
புதன், 20 ஜனவரி 2010( 17:52 IST )

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் இன்றளவிலும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு தினசரி உணவு வழங்கி வருகிறார்.

அவரது சத்திரத்தில், 3 நட்சத்திர விடுதிகளில் ரூ.50க்கு விற்கப்படும் சாப்பாட்டிற்கு இணையாக முதல் தரமான உணவு வழங்கப்படுகிறது. இதைச் செய்வதற்காக அவர் யாரிடமும் நன்கொடை கேட்டுப் போனதில்லை. அன்னதானம் சாப்பிடுபவர்கள் நன்கொடை தர விரும்பினால் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டு விடுமாறு கூறிவிடுவார்.

இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.

அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.

இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

என்னிடம் ஜோதிடம் பார்க்க வரும் சிலரது ஜாதகங்களைப் பார்க்கும் போது லக்னாதிபதி கெட்டுப் போய் இருப்பார். எந்தவித யோக பலனும் இருக்காது. ஆனால் பூர்வ புண்ணியாதிபதி மட்டும் மிகச் சிறப்பாக இருப்பார். அதன் காரணமாக அவர்களின் வாழ்வில் பெரிய ஏற்றம் இல்லாவிடிலும் எந்தக் குறையும் இருக்காது.
நன்றி: தமிழ் வெப்துனியா

இந்தியா சீனா போர் வருமா? தமிழ்வெப்துனியா 20.1.2010

இந்தியா-சீனா இடையே போர் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
புதன், 20 ஜனவரி 2010( 17:56 IST )

இந்தியா, சீனா இடையே சமீபகாலமாக உரசல்கள் அதிகரித்து வருகிறது. உதாரணமாக அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பு செயல்களை நடத்தியது, பிரதமரின் அருணாச்சலப் பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது, ஜம்முவில் இருந்து சீனாவுக்கு விமானப் பயணம் செல்லும் இந்தியர்களுக்கு முறையான விசா வழங்காமல் வெற்றுக் காகிதத்தில் விசா அளிப்பது என்று விவகாரங்கள் தொடர்கிறது. இந்த நிலை படிப்படியாக உயர்ந்து போரில் முடிவடையும் சாத்தியம் உள்ளதா? ஜோதிட ரீதியாக இதற்கு விளக்கம் தாருங்கள்?

பதில்: இந்தியா கடக ராசி, ரிஷப லக்னம் என்பதால் அதன் ஜாதக நிலை தற்போது நன்றாக இருக்கிறது. மே மாதம் முதல் குருவும் சாதமாகி விடுவார் என்பதால், தசா புக்திகளும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.

அதே நேரத்தில் 2011 டிசம்பர் 21 முதல் இந்தியாவுக்கு 4ஆம் வீட்டில் சனி வருவதால், புத்த மத நாடுகளாலும், இஸ்லாமிய நாடுகளாலும் இந்தியா பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இனக் கலவரம், மதக் கலவரம் அதிகரிக்கும்.

நடப்பாண்டில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவில் பாதிப்பு ஏற்படும். சர்வதேச அரங்கில் இருந்து சிறிது சிறிதாக இந்தியா தனிமைப்படுத்தப்படுவதற்கும் சாத்தியங்கள் உள்ளன. அதனைத் தவிர்க்க இந்தியாவும் பெரிய விலையைக் கொடுக்க முன்வரும்.

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இந்தியாவின் மீது போர் திணிக்கப்படுவதற்கான வேலைகள் நடைபெறலாம். ஆனால் இந்தியா போரை ஏற்காது. இதேபோல் ஜம்மு-காஷ்மீர் விவகாரமும் (சுயாட்சி) விஸ்வரூபம் எடுக்கும்.

தற்போது கடக ராசியில் உள்ள செவ்வாய், மே 27ஆம் தேதி வரை அங்கேயே இருப்பார். இதன் காரணமாக தனி மாநிலம் கோரும் குரல்கள் உயர்கின்றன. எல்லைகளிலும் பதற்றம் நிலவுகிறது. ஜோதிட ரீதியாகக் கூறவேண்டுமானால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில்தான் ஆபத்துகள் அதிகம் உள்ளது.

தற்போது செவ்வாய் நீச்சம் பெற்றதால் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவை நட்புறவுடன் இல்லை. சில வேற்று நாட்டுத் தலைவர்கள் இந்தியா எதற்கும் லாயக்கற்ற நாடு என்ற ரீதியிலான கருத்துகளைக் கூட வெளியிடுவார்கள்.

கோமாதா பூஜையின் முக்கியத்துவம்


கோமாதா பூஜையின் மகிமைகள்

பசுவுக்கு பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.

ஏனெனில்,பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலான மும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம் என்றொரு தெய்வம் உண்டு.சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக திருமூர்த்தி (கிறிஸ்தவத்தில் ட்ரினிட்டி) இருக்கிறார்.

இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாக மனோன்மணி என்ற ஆதிபரப்பிரம்ம சக்தி இருக்கிறாள்.இவளே இந்த பிரபஞ்சம்,உலகம்,உயிர்கள் என அனைத்தையும் படைத்து,காத்து,ரட்சிப்பவளாக இருக்கிறாள்.இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன் வாழ்ந்து வருகிறாள்.
இதனாலேயே,முப்பத்துமுக்கோடி தேவர்களும்,நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்ட வசுக்களும்,நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றன.

கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம்.எந்த ஜாதி,மதம்,மொழியும் தடையாக இராது.(உருவ வழிபாடு இல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்)

கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கிவிடும்;குழந்தைபாக்கியம் உண்டாகும்.கெட்ட சக்திகள் நெருங்காது.

முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும்;நீண்ட கால மனக்குறைகள் நீங்கிவிடும்.

கோமாதா பூஜையைச் செய்ய பக்தியும்,நம்பிக்கையும் முக்கியமாகும்.

முதலில் பசுவை அழைத்துவர வேண்டும்.அதன் மீது பன்னீர் தெளித்து மஞ்சள்,குங்குமம் பொட்டு அதன் நெற்றியில் வைக்க வேண்டும்.பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும்.
பிறகு பசுவிற்கு புடவை அல்லது ரவிக்கை சாற்றி,அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும்.

நெய்விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.எடுத்துவிட்டு,விழுந்து வணங்க வேண்டும்.கோமாதா 108 போற்றியை பக்தியுடன்,ஒருவர் மனதை ஒருமுகப்படுத்திச் சொல்ல வேண்டும்.(இடையில் நிறுத்தக்கூடாது).மற்றவர்கள் “போற்றி”, “ஓம்” என சொல்லிட வேண்டும்.

108 போற்றி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நெய் தீபத்தால் ஆரத்தி செய்ய வேண்டும்.பிறகு,3 முறை பசுவை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும்.

இப்படிச் செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும்,பல புராதன கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் ஒரு சேரக்கிடைக்கும்.
ஆகவே, இந்த கோ பூஜை செய்து வாழ்க்கையில் உள்ள எல்லா பிரச்னைகளும் தீர்ந்து, மனத்தில் உள்ள அனைத்துக் கவலைகளும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் மகிழ்ச்சியாக வாழ கோமாதா நம்மை ஆசிர்வாதிப்பாள்.

ராகு காலம் எமகண்டம் என்றால் என்ன?

ராகு காலம், எமகண்டம்:

ராகு காலத்தில் நல்ல காரியங்கள் தொடங்கக்கூடாது. எமகண்டத்தில் கெட்டகாரியங்கள் செய்யக்கூடாது. என்பது ஜோதிட சாஸ்திர விதி!

ராகு காலத்தில் இறை வழிபாடு, தங்க நகை வாங்குதல்,பட்டு ஆடைகள் வாங்குதல்,திருமணம் அல்லது வீடு வாங்கிட பேச்சை ஆரம்பித்தல், சொத்துக்கள் வாங்குதல்,புதிய நிறுவனம் ஆரம்பித்தல் கூடாது.இதை மீறிச்செய்தால் அந்த காரியங்கள் வெற்றி பெறாது.
ஏனெனில்,ஜோதிடப்படி நவக்கிரகங்களுக்கு தலா ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவையே ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி.ஆனால்,ராகு கேதுக்களுக்கு என தனிக்கிழமைகள் ஒதுக்கப்படவில்லை.

இவற்றில் ஒரு நாளில் ஒன்றரை மணி நேரத்தை ராகு பகவான் ஆளுகிறார்.
மேலே சொன்னவை எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.ஒரே ஒரு விதிவிலக்கு என்ன வெனில்,ராகு திசை நடக்கும் ஜாதகர்களுக்கும்,திருவாதிரை,சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் மேலே சொன்ன விதிகள் பொருந்தாது.
இவர்கள் ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்யலாம்.காதலிக்கத் தொடங்க(!?!), திருமணப்பேச்சு எடுக்க, சொத்துக்கள் வாங்கிட, புதிய நிறுவனங்கள் வாங்கிட,பங்குச் சந்தையில் முதலீடு செய்ய,மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய, பட்டு ஆடைகள்,செல்போன்,வாகனங்கள் என எதையும் வாங்கிட மிக நன்று.

எமகண்டத்தில் கெட்டது செய்யக்கூடாது.அதென்ன கெட்டது. . . நமக்குப்பிடிக்காத நமது சக ஊழியரைப்பற்றி இன்னொரு ஊழியரிடம் போட்டுக்கொடுப்பது,மேலதிகாரியிடம் போட்டுக்கொடுப்பது,
அப்புறம் இங்கு அச்சில் ஏற்ற முடியாத சகல கெட்ட காரியங்களையும் செய்ய ஆரம்பிக்கக்கூடாது.

யார் எப்படிச் சாப்பிட வேண்டும்?இந்து சாஸ்திர விதிமுறை


நாம் எந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும்?

கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வி வளரும்.
மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் பெருகும்.
வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் வரும்;வந்து நோய் வளர்ந்துகொண்டே இருக்கும்.
தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அழியாதப்புகழ் நமக்கு ஏற்படும்.

இவையெல்லாம் நமது வீட்டில் சாப்பிடும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.
நண்பர்,உறவினர் வீடுகளில் மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது.அப்படிச் சாப்பிட்டால் மறு நாளிலிருந்தே அவருக்கும் நமக்கும் பகையாகிவிடும்.

ஹோட்டல்கள்,மோட்டல்கள்,மெஸ்களில் சாப்பிட இந்த விதிகள் பொருந்தாது.வடக்கு நோக்கிச் சாப்பிடாமல் இருந்தால் போதுமானது.

கடக மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல்


கடகராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல்

தன்னுடைய தெளிவான மனநிலையை நம்பியே தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் கடக ராசிக்காரர்களே!

சென்ற 26.6.2009 ஆம் தேதியுடன் தங்களுக்கு ஏழரைச்சனி நீங்கிவிட்டது.ஆனாலும்,ஒரு நிலையான வேலை அல்லது வருமானம் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருப்பீர்கள்.இந்நிலையானது 2010 ஆம் ஆண்டு தீபாவளி வரை தொடரும்.இதுவரை ஏதாவது ஒரு வழிமுறையில் தங்களுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும்.ஆனால்,உங்களது வாழ்க்கைப்பயணத்தை சுலபமாகக் கொண்டு செலுத்தக்கூடியதாக இராது.

2010 ஆம் ஆண்டு தீபாவளிக்குப்பிறகு,தங்களது கல்வித்தகுதி,வேலைத்திறன்,திறமை, சமார்த்தியம், தனி சாமர்த்தியம் இவற்றைப்பொறுத்து மிகச்சிறந்த வேலை அல்லது தொழில் அமைந்துவிடும்.அப்படி அமைந்த பின்னர்,தாங்களே நினைத்தாலும் அந்த வேலை அல்லது தொழிலை விட்டு விலக முடியாது.

இதே நிலைதான்,அஷ்டமச்சனி நிறைவடைந்த மகர ராசிக்காரர்களுக்கும்!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம்


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில், சிவராத்திரியையொட்டி 76 வயதான மூதாட்டி, கொதிக்கிற நெய்யில் கைவிட்டு அப்பம் சுடும் நிகழ்ச்சி நடந்தது. சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்கள் நேற்று முன் தினம் தங்கள் குலதெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். ஸ்ரீவி., முதலியார் பட்டி தெரு பத்திரகாளியம்மன் கோவிலில் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கொதிக்கும் நெய்யில் கையினால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. இதில், அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து, ஸ்ரீவி., ஊரணி பட்டியை சேர்ந்த 76 வயதான முத்தம்மாள் 90 நாள்கள் விரதமிருந்தார். பின், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, சட்டியில் நெய் ஊற்றி, அப்பம் சுடும் பணியில் ஈடுபட்டார்
முத்தம்மாளுக்கு பக்தர்கள் மாவை பிசைந்து கொடுக்க, அவர் கொதிக்கிற நெய்யில் போட்டார். பின், கரண்டி பயன்படுத்தாமல் கையால் அப்பத்தை புரட்டி, வேக வைத்தார். அப்பம் வெந்தவுடன் அவற்றை மீண்டும் கையால் வெளியில் எடுத்தார். அவருக்கு உதவியாக கோவில் பூசாரிகள் சுந்தரமகாலிங்கம், இருளப்பன், முருகன் இருந்தனர். தொடர்ந்து, 25 பெட்டி அப்பத்தை, தன் கையால் கொதிக்கிற நெய்யில் போட்டு எடுத்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியை காண, பக்கத்து கிராமங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். கையால் சுட்ட அப்பம் பத்திரகாளியம்மனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
நன்றி:தினமலர் 14/2/2010

உங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்


ராசிக்கேற்ற தோசைகள் மதுரையில் அறிமுகம்

மதுரை மாநகரில் உள்ள டெம்பிள் சிட்டி உணவகத்தின் உரிமையாளர் குமார் அவர்களும்,பிரபல மதுரை ஜோதிடர் சித்திரகுப்தனும் இணைந்து அவரவர் பிறந்த ராசிக்கேற்ற தோசை வகைகளை 14.2.2010 அன்று சாதாரண தோசையின் விலையிலேயே அறிமுகம் செய்துள்ளார்.

உதாரணமாக,மேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் கோபக்காரர்களாகவும், கடகம்,கன்னி ராசிக்காரர்கள் பரம அமைதியாகவும் செயல்படுபவர்களாக இருப்பர்.இந்நிலையில்,12 ராசிக்காரர்களின் தன்மைக்கேற்றவாறு தோசைகளை அறிமுகம் செய்துள்ளார் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர்.நன்றி:தினமலர் 14.2.2010

தங்கம் வாங்கிட சிறந்த மாதம்


நீங்கள் தங்கம் வாங்க விரும்புகிறீர்களா?

காலப்பிரகாசிகை என்ற புராதன ஜோதிடப்புத்தகத்தில் கூறிய படி,இந்த மாசி மாதத்தில் நீங்கள் சூரிய உதயம் ஆனது முதல் இரண்டு மணிகளுக்குள் ஒரு கிராம் தங்கம் வாங்கினால், அவை பல கிராம்களாக வளரும்.

மாசி 15 முதல் அதாவது மார்ச் 1 ஆம் நாளிலிருந்து சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து ஒரு மணிநேரம் வரை இந்த நல்ல சுபமான நேரம் அமைந்திருக்கின்றது.

நீங்கள் எந்த ஊரில் வாழ்ந்து வந்தாலும் சரி! உங்கள் ஊரின் சூரிய உதய நேரத்தை உங்கள் பகுதி தினசரிகளில் குறிப்பிடுகின்றனர்.அந்த நேரத்திலிருந்து கணக்கிட்டு தங்கம் வாங்கவும்.வளமாக வாழவும்.

ஜோதிட ராசிகளும் அவை ஆளும் உடல் உறுப்புகளும்

நமது உடலை நிர்வகிக்கும் ராசிகள்:ஜோதிடப்படி

மேஷம் - தலை

ரிஷபம் - தொண்டை

மிதுனம் - நுரையீரல்கள்,நரம்புகள்,தோள்பட்டைகள்,கைகள்,விரல்கள்

கடகம் - மார்பு,வயிறு

சிம்மம் - இதயம்,முதுகுத்தண்டு

கன்னி - குடல்

துலாம் - சிறுநீரகங்கள்,இடுப்பு

விருச்சிகம் - இனப்பெருக்க உறுப்புகள்,மல,ஜல உறுப்புகள்

தனுசு - தொடைகள்

மகரம் - கால் முட்டி

கும்பம் - கணுக்கால்

மீனம் - பாதம்

நீங்கள் எந்த ராசியோ ,அந்த உறுப்பு உங்களுக்கு மிகவும் வலிமையாக இருக்கும்.ஒரு சிலருக்கு அப்படி வலிமையாக இல்லாவிட்டால்,உங்களது இந்த பிறப்பில் நீங்கள் நிறைய்ய துன்பத்தை அனுபவிக்கப்பிறந்திருக்கிறீகள் என்று அர்த்தம்.

ஜோதிட & ஆன்மீகக் குறிப்புகள்

ஜோதிட மற்றும் ஆன்மீகக்குறிப்புகள்

1.பயம் நீங்கவும், பதினாறுவகை செல்வ வளமும் ஏற்படவும்:
குறைந்தது 13 முறைஉங்கள் ஊரில் உள்ள பழமையான சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு செய்யவும்.

2.வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்படாமல் இருக்க ,பயணம் செய்யும்போது ‘ஹரிஓம்’ என ஜபித்துக்கொண்டே செல்ல வேண்டும்.
மிதிவண்டி,டூ வீலர்,கார்,விமானம்,கப்பல்,(எதிர்காலத்தில் ராக்கெட்/ஸ்பேஸ் பஸ்) என எந்த வாகனத்தில் பயணித்தாலும்,ஹரிஓம் என ஜபித்துக்கொண்டே இருந்தால்,நாம் பயணிக்கும்/ஓட்டும் வாகனம் விபத்திற்குள்ளாகாது.

3.இரவில் கெட்ட கனவு அல்லது கொடூரக் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்துவிட்டீர்களா?
அப்படி கனவு கண்டு அதுபோல நிஜத்தில் நடந்துவிடும் என அஞ்சுகிறீர்களா?
ஸ்ரீகோவிந்த ஜெய் கோவிந்தா ஜெய ஜெய மகா கோவிந்தா நமஹா என 9 இன் மடங்குகளில் ஜபித்துவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தால் நீங்கள் பயப்பட்டது பொய்யாகிவிடும்.

4.செய்வினை தோஷம் நீங்கிட:
கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து 17 கி.மீ.தூரத்தில் சோட்டானிக்கரை பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளது.இங்கு சென்றுவந்தால் செய்வினை தோஷம் நீங்கும்.

5.வியாபாரத்தில் செல்வ வளம் பெருக:
இலட்சுமி கணபதியின் மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.இதை தினமும் வியாபார நிலையத்தில் ஜபிக்க வேண்டும்.
“ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய
கணபதியே வரவரத ஸர்வஜனம்மே
வசமானய ஸ்வாஹ”.

இதுதவிர,விநாயகருக்கு தினமும் கற்கண்டு,பழமும் ‘லகு நைவேத்தியம்’ செய்துவர வேண்டும்.இப்படி செய்தால், வியாபாரத்தில் செல்வ வளம் பெருகும்.

6.வருமானம் பெருக உதவும் சிவ மந்திரம்:

வந்தூக ஸ்ந்நிபம் தேவம் த்ரிநேத்ரம்
வந்த்ரசேகரம், த்ரிசூல தாரிணம்
வந்தே சாருஹாசம் சுநிர்மலம்
கபால தாரிணம் தேவம் வரதாய
ஹஸ்தகம்,உமயா ஸஹிதம் சம்பும்
த்யாயேத் ஸோமேச்வரம் சதா

ஹ்ரீம் ஓம் நம: சிவாய ஹ்ரீம்

7.களவு போன பொருளைக் கண்டுபிடிக்க பெரிதும் உதவும் மந்திரம் கார்த்த வீர்யார்ஜீன மந்திரம் ஆகும்.

நன்றி: ஜோதிட அரசு, பிப்ரவரி 2010.ஜோதிட விழிப்புணர்வு மாத இதழ்.

சிவ ராத்திரியின் மகிமைகள்


> மஹா சிவராத்திரி
> <
http://vediceye. blogspot. com/2009/ 02/blog-post_ 23.html> நமது
> தேசத்தில் எண்ணற்ற கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு
> கொண்டாட்டங்களுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. உலக அளவில் பல்வேறு
> விழாக்கள் இருந்தாலும் நமது நாட்டில் கொண்டாடப்படும் விழாக்களின் பின்புலத்தில்
> எப்பொழுதும் மெய்ஞான காரணம் இருக்கத்தான் செய்கிறது.
>
> எளிய மக்களுக்கு மெய்ஞான கருத்துக்கள் புரிவதில்லை என்பதால் அவர்களுக்கு
> விளக்கவும், சுவாரசியமாக இருக்கவும் கதைகள் மூலம் அவர்களின் ஆர்வத்தை
> மேம்மடுத்தினார்கள். மெய்ஞான கருத்தை அறிய முடியாத சில மூடர்கள், அறியாமையில்
> இருக்கும் மக்களுக்கு சொல்லப்பட்ட கதைகளை பிடித்து தொங்குகிறார்கள். இங்கே
> மெய்ஞான கருத்து என குறிப்பிடுவது சாஸ்திர ரீதியான தன்மைகளை. விஞ்ஞானத்தை அல்ல.
>
> மனித உடல் இயற்கையானது. மனிதனின் மனம் மற்றும் செயல்களும் இயற்கையை ஒட்டியே
> செயல்படுகிறது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என கேள்வி
> பட்டிருப்பீர்கள். அது போல பிரபஞ்சத்தில் என்ன நிகவுகள் இருந்தாலும் அந்த
> நிகழ்வு நமக்குள்ளும் நடக்கும்.
>
> பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியில் நடக்கும் நிகழ்வு தனிமனிதனுக்கு உள்ளும்
> நடைபெறும். வேண்டுமானால் காலங்கள் வேறுபடலாம். ஆனால் கண்டிப்பாக நடைபெறும்.
>
> மனிதன் பூமியில் வாழ்வதால், பூமி - சந்திரன் - சூரியன் எனும் இந்த மூன்று
> பிரபஞ்ச பொருட்களும் மனித வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படுத்துகிறது.
> முப்பரிமாண நிலையில் பூமி-சந்திரன்-சூரியன் ஆகிய கிரகங்கள் மனிதனுக்கு முறையே
> உடல், மனம் மற்றும் ஆன்மா எனும் நிலையில் செயல்படுகிறது.
>
> பூமியில் இருக்கும் நெருப்பு- காற்று - நீர் - மண் மூலம் நமது உடல் வளர்ச்சி
> அடைகிறது. உடலுக்கு பூமியே ஆதாரம். சூரியன் ஆன்மாவிற்கு ஆதாரம் என கூறலாம்.
> காரணம் அது சுயமாக பிராகாசிக்கிறது. சந்திரன் தனது நிலையற்ற தன்மையால் மனதை
> குறிக்கிறார்.
>
> பிரபஞ்ச நிலைக்கும் மனித உடலுக்கும் இருக்கும் தொடர்பை அறிந்த ரிஷிகள்,
> கிரகநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப மனிதனை செயல்படுமாறு
> வழிநடத்தினார்கள். இந்த வழிமுறையை ஜோதிடம் என்கிறோம்.
>
> மனிதனின் செயல்கள் இரு நிலையில் செயல்படுகிறது. ஒன்று உள் முகமாக, மற்றது
> வெளிமுகமாக. தியானம், யோக பயிற்சி மூலம் உள்முகமாகவும், உணர்வு-செயல் மூலம்
> வெளிமுகமாகவும் இருக்கலாம். மனிதர்கள் அதிக சதவிகிதம் வெளிமுகமாகவே
> இருப்பார்கள்.
>
> மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின்
> கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். சூரிய மண்டலத்தில்
> ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.
>
> <
http://4.bp. blogspot. com/_LxMf4fNflJE /SaIgv360p5I/ AAAAAAAAAjs/ RnIuc16Sws0/ s1600-h/Soul_ 2.jpg>
>
>
> அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக
> நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியிம் இன்றி
> உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக
> திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.
>
> மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில்
> ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு
> மாதமும் வரும் பெளர்ணமியை கவனியிங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என
> அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும்
> சூழலை அமைத்தார்கள். ஆனால் இன்று நடப்பதோ வேறு பெளர்ணமி நல்ல நாள் என திருமணம்,
> தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது
> தவிர்க்கப்பட வேண்டியது.
>
> அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன்
> சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால்
> அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி,
> திரயோதசி காலங்கள். வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி
> தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.
>
> ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான்
> தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். யோக சாஸ்திர ரீதியாக சூரியன்
> மற்றும் சந்திரன் இடா, பிங்கள நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய
> தினம் ஏற்படும்.
>
> <
http://4.bp. blogspot. com/_LxMf4fNflJE /SaIgUWgWEmI/ AAAAAAAAAjk/ v6kkeK3l89Q/ s1600-h/shivarat ri.bmp>
>
>
> சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை
> சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் ,
> மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும்
> மாற்றம் அடையும். அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை
> இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.
>
> உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது.
> இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில்
> ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
>
>
> சிவ எனும் சொல் அழகு அல்லது இயற்கை என்றும் பொருள்படும். அன்று இரவு உண்ணதமான
> இயற்கை நிலையை காண உடல் தயார் நிலையில் இருப்பதால் சிவ ராத்திரி என
> அழைக்கப்படுகிறது.
>
> சூரியன் சந்திரன் பூமி என்பது தனி ஒரு மனிதனுக்கோ, மதத்திற்கு செயல்படுவதில்லை.
> அதுபோலவே மஹாசிவராத்தரி “இந்துக்கள்” பண்டிகை அல்ல.
>
> ஆன்மாவிற்கான கொண்டாட்டங்கள்.
> ஆன்மாவில் கொண்டாடுங்கள்.
> ஆன்மாவாய் கொண்டாடுங்கள்.
> ஆன்மாவை உணர இன்றைய நாளை பயன்படுத்தி ஆன்மீகனாகுங்கள்.
>
>
> *- -- --- நன்றி சுவாமி ஓம்கார்:->
> *