RightClick

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்
காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்க்கின்ற்து.அதே சமயம் சிறிய நாணற்புற்கல் வளைந்து கொடுக்கின்றன.வெள்ளம் நின்றவுடன் நிமிர்ந்து கொள்கிறது.இதே போன்றதுதான் நம் வாழ்க்கைச்சக்கரம்.யார் “ஓம்”, “ஓம்”, “ஓம்” என்று சதா ஜெபிக்கின்றார்களோ அவர்கள் நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை;நெருக்கடி காலத்தில் வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து கொள்கின்றனர். “ஓம்” ஜெபிக்காதவர்கள் அடியோடு வீழ்கின்றனர்.இதை நாம் அனேகர் வாழ்க்கையில் காணலாம். “ஓம்” என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.இந்த மும்மூர்த்திகளை கிறிஸ்தவர்கள் பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என அழைக்கின்றனர்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.


வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும்.வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.இளநீரில் ஓதிக்கொடுக்க உடல் காங்கை தணியும்.பிறரை ஆசிர்வாதிக்கும்போது “ஓம்” என்னும் மின்சக்தி தான்,நம் கைகளில் இருந்து வெளியே பாய்கிறது.பிறருக்குண்டான குறைகள் நீக்குகின்றன.ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் “ஒம்”., “ஓம்”, “ஒம்” என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.கர்ப்பமான தாய்மார்கள் “ஒம்” , “ஓம்”, “ஓம்” என சதா காலமும் ஜபித்துவந்தால் தெய்வக்குழந்தைகள் பிறக்கும்.வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.மீறி ஜபித்தால், உடல் தள்ளாடி விபத்து உண்டாகலாம்.மூச்சை உள்ளே இழுக்கும் போது “ஓம்” “ஓம்” “ஓம்” என ஜெபிக்கலாம்.அப்படி ஜெபிக்கும்போது மூச்சை உள்ளே இழுப்பதும்,வெளியே விடுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும்.ஊசியில் மருந்தை ஏற்றிய பின் இறக்குவது மாதிரி அமைய வேண்டும்.எக்காரணம் கொண்டும் மூச்சை அடக்கக் கூடாது.அதாவது கும்பகம் செய்யக்கூடாது.மந்திரங்களுக்கேற்றது சைவ உணவுதான்.சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வருவதால் விரைவில் பலன் கிடைக்கும்.

செல்வ வளம் பெருகிட ஒரு சுலபமான பரிகாரம்:நிரூபிக்கப்பட்டது


ஒரு எலுமிச்சம்பழத்தில் வெள்ளிக்கிழமையன்று நயம் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சக்கரம் எழுதி திருவிளக்கு பாதத்தில் வைத்து வணங்கலாம்.ஒவ்வொரு வாரமும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்து வணங்கியபின் தனியாக எடுத்து வைக்கவும்.


ஒரு வருடம் ஆனதும் ஏதாவது ஒரு ஆற்றில் மொத்தமாக போட்டு 12 ரூபாய் நாணயங்களை தட்சிணையாக ஜலம் ஓடும் ஆற்றில் போடவும்.இதனாலும் செல்வ வளம்(தன ஆகர்ஷணம்) உண்டாகும்.இதுவும் செய்ய முடியாதவர்கள் மாப்பொடி,மஞ்சள்பொடி கொண்டு ஸ்வஸ்திக் கோலம் போடலாம்.


வெள்ளிக்கிழமைதோறும் மாலை 6 மணிக்குள் ஏதாவது ஒரு பசுமாட்டிற்கு 6 மொந்தன் பழம் கொடுத்துக்கொண்டே வரலாம்.இதனாலும் நம்முடைய பணக்கஷ்டம் தீரும்.இந்த முறைகளை வெளிப்படுத்தியவர் நமது ஆன்மீககுரு அவர்களுக்கு நமது ஆன்மீகக்கடல் வலைப்பூசார்பாக ஸ்பெக்ட்ரம்நன்றிகள்!!! (17,000,000,000 நன்றிகள்)

நம் பாவங்களைப் போக்கும் சனிப்பிரதோஷம்

நாளை சனிப்பிரதோஷம்.பிரபஞ்சத்தில் முதன் முதலில் பிரதோஷம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது.எனவே,சனிப்பிரதோஷம் மிகவும் புண்ணியமான நாள் ஆகும்.இந்துக்களாகிய நம்மில் சிவனை வழிபடுவோருக்கு இது நமது பாவங்களை விரைவாக அழிப்பதற்கு உகந்த நாளாகும்.ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.


தினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும்.இந்த தினப்பிரதோஷ நேரம் என்பதே இந்த சனிப்பிரதோஷ சம்பவத்தினால்தான் உருவானது.மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.எனவே,இந்த ஒன்றரை மணி நேரமும் நாம் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு மாலை 4 மணிக்கே சென்றுவிடுவோம்.மாலை 6 மணி ஆகும் வரையிலும் சிவ மந்திரங்களை ஜபித்துக்கொண்டே இருப்போம்;


ஒரு முறை ஓம் அண்ணாமலையே போற்றி என ஜபித்தால் 3,00,000 முறை ஓம் நமச்சிவாய நம என்று ஜபித்ததற்குச் சமம் என்று அருணாச்சலபுராணத்தில் சிவபெருமானே தெரிவிக்கிறார்.அதை நாம் ஜபிக்கலாம்.


ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணான அபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்த மந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும் ஜபிப்போம்;


அடுத்தபடியாக,ஓம்சிவசிவஓம் என்ற மந்திரத்தை பிரதோஷ நேரத்தில் அமிர்த நேரமான மாலை 5.30 முதல் 6.00 மணிவரையிலும் ஏதாவது ஒரு விரிப்பு விரித்து,(மஞ்சள் நிற துண்டு எனில் மிகவும் ஏற்றது)அதில் நந்திபகவானை நோக்கி அமர்ந்து,ஜபித்துக்கொண்டே இருப்போம்.


ஒரு மந்திரத்தை வாயால் பேசுவது போல் ஒரு முறை சொன்னால்,ஒரு தடவை ஜபித்ததற்குச் சமமாகும்.


மனதுக்குள் உதடு அசையாமல் சொன்னால்,அதன்பலன் பல மடங்கு ஆகும்.


மனதுக்குள் உதடு அசையாமல்,வீட்டில்,அலுவலகத்தில் ஒரு முறை சொன்னால்,பத்துமுறை ஜபித்தமைக்குச் சமமாகும்.


கருங்கல்லால் கட்டப்பட்ட(பழமையான) கோவிலுக்குள் அமர்ந்து மனதுக்குள் ஒரு முறை சொன்னால்,ஆயிரம் முறை ஜபித்ததற்குச் சமமாகும்.


மலைமீதிருக்கும் கோவில்களுக்குள் அமர்ந்து ஒரு முறை மனதுக்குள் சொன்னால்,ஒரு கோடி தடவை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.


கடலோரக்கோவில்களுக்குள் அமர்ந்து ஒரு முறை மனதுக்குள் சொன்னால்,இரண்டு கோடி தடவை ஜபித்ததற்குச் சமமான பலன் கிடைக்கும்.இவையெல்லாம் சாதாரண நாட்களில் கிடைக்கும் பலனாகும்.


சனிப்பிரதோஷத்தன்று,இவ்வாறு பழமையான கோவில்களில் மனதுக்குள் ஒன்றரை மணி நேரம் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தால்,மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் நூறு கோடி மடங்காக ஜபித்த பலன்கள் கிடைக்கும் என மந்திர ராஜ பதப்பிரயோகம் என்ற ஆன்மீகநூல் தெரிவிக்கிறது.


ஆக,கலிகாலத்தில் இறை நாம ஜபம் மட்டுமே நமது பாவங்களையும்,நமது முற்பிறவி மற்றும் முன்னோர்களின் பாவங்களையும் தீர்க்கும் அருமருந்தாகும்.Arrogent USA-2:thanks to tamil webdunia

இதனால் இப்போது அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் போன் போட்டு, "விக்கிலீக்ஸ்" தகவல்களை பொருட்படுத்தாதீர்கள். நாம் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம் என்று தாஜா செய்து வருகிறார்!இந்த அளவுக்கு நிலைமை சந்தி சிரித்த பிறகும், அமெரிக்க அரசுக்கும் அந்நாட்டவர்களுக்கும் தங்களை பற்றிய ஆணவம் என்னவோ கடுகளவும் குறைந்தபாடில்லை என்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.


'யு.எஸ்.ஏ டுடே' ( USA Today) என்ற அமைப்பு கடந்த 10 முதல் 12 ஆம் தேதி வரை அமெரிக்கர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், நான்கில் மூன்று பங்கு அமெரிக்கர்கள் - அதாவது 62 விழுக்காட்டினர் - அமெரிக்காவும், அமெரிக்கர்களும் "விதிவிலக்கானவர்கள்" என்று கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.


" மற்ற உலக நாடுகளிலிருந்து அமெரிக்கா வேறுபட்ட மகத்தான நாடு.அதன் கடந்த கால வரலாறு மற்றும் அரசியலமைப்பு சாசனம் போன்றவற்றினால் அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் குணாதிசயம் மாறுபட்ட ஒன்று" என 73 விழுக்காட்டினர் கருத்து கூறியுள்ளனர். இதில் குடியரசு கட்சியை சேர்ந்த 91 விழுக்காட்டினர் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.


அதேப்போன்று அதிபர் பராக் ஒபாமாவும் "அமெரிக்கா விதிவிலக்கான நாடு" என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதாக 58 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.


ஆனால் முந்தைய அதிபர்களான ரொனால்ட் ரீகன், பில் கிளின்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர்களிடத்தில் இருந்ததை விட, ஒபாமாவிடம் இந்த எண்ணம் சற்று குறைச்சலாகத்தான் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


அதே சமயம் அமெரிக்கா, தனது சாதுரிய நடவடிக்கை மூலம் பெற்ற "உயர் அந்தஸ்து நிலை" யை இழக்கத் தொடங்கியிருப்பதாக ( விக்கிலீக்ஸ் போன்றவற்றால்...) பெரும்பாலான அமெரிக்கர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.


மேலும் உலக விவகாரங்களுக்கு தலைமையேற்று நடத்திச் செல்லும் "சிறப்பு பொறுப்பு" அமெரிக்காவுக்கு உள்ளதாக 66 விழுக்காட்டினர் கூறியுள்ளனராம்.


ஹூம்...! தும்முவதை கூட அமெரிக்காவிடம் கேட்டுவிட்டு செய்யும் பல உலக தலைவர்கள் ( நம் நாடும் சேர்த்துதான்!) இருக்கும் வரை அமெரிக்கர்களின் இந்த ஆணவம் அத்தனை இலேசில் அடங்காதுதான் போல!

சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை
ஆனைகட்டி ஆஸ்ரமம்.


26 - 5 - 2010.


நீதியற்றதும் பிறப்படிப்படையிலானதுமான எவ்விதக் கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் வேதங்களில் எவ்வித ஆதாரமும் இல்லை. நமது தேசத்தின் பல பிராந்திய மொழிகளில் உள்ள வேதங்களல்லாத திருமுறைகளும் அனைத்து மானுடத்தின் ஒற்றுமையைப் போற்றிப்புகழும் வசனங்களைக் கொண்டுள்ளன. மத நம்பிக்கை, பால், இன்று சாதி என கருதப்படும் பாகுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படும் நியாயமும் நீதியுமற்ற பாரபட்சங்களை அவை மறுக்கின்றன. ஹிந்து பாரம்பரிய வணக்கமான கை கூப்பி கூறப்படும்  வணக்கம் சக மனிதரில் உறையும் ஈஸ்வரத்தன்மையை வணங்குவதே ஆகும். பிறப்படிப்படையிலான பாகுபாடு காட்டுதலும் தனி நபர்களையும் குடும்பங்களையும் கொடூரமாக நடத்துவதும் சமூக ஏற்புடையதாக ஹிந்து சமுதாயத்தில் ஏற்பட்டது பழமையான ஹிந்து (சுருதி) பிரமாணங்களுக்கும் தத்துவங்களுக்கும் எதிரானதாகும் தமது பழமையான தர்மத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்றெடுத்த பல மக்கள் இதன் விளைவாக ஆண்டாண்டு காலமாக துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இன்றைக்கு நமது அரசியல் நிர்ணயச் சட்டமும் பல நூற்றாண்டுகளாக ஞான ஒளி பெற்ற சமூக-ஆன்மிக அறிஞர்களும் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக நிலைபாடுகள் எடுத்தும் போராடியும் வருகிறார்கள். என்ற போதிலும் இத்துன்பங்கள் நிலவுகின்றன. இத்துன்பங்களை போக்க அவர்கள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இத்துன்பங்களை உருவாக்கும் சூழலுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது முக்கியமானதாகும்.


கிராமக் குடியுறவுகளாக உருவான உறவுகள் ஒருவித பாதுகாப்புத் தன்மையை அளிப்பதாக அமைந்தன. இவ்வித உறவுகளாகத் தொடங்கிய விஷயங்கள் பல நூற்றாண்டுகளாக இவ்வித சமூகப் பாரபட்சங்களாக ஆழமாக நம் கிராமப்புறங்களில் வேரூன்றிவிட்டன. இதனை ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா நன்றாக உணர்ந்திருக்கிறது. இந்தப் பழக்கவழக்கங்களை முழுமையாக அகற்றுவது நேரமெடுக்கும் ஒரு விஷயமாகும் என்பதையும் ஆச்சாரிய சபா உணர்ந்திருக்கிறது. எனவே தீவிரமான முன்முனைப்பு கொண்ட தொடர்ச்சியான களப்பணியின் மூலமே பிறப்படிப்படையிலான நியாயமற்ற பாரபட்சங்கள் அகற்றப்பட முடியும் என ஆச்சாரிய சபா கருதுகிறது.


இந்த சமுதாய அடிப்படையிலான பிரச்சினைகளை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் குறையாகச் சொல்லி தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஆபிரகாமிய மதமாற்றப் பிரசாரகர்கள் ஈடுபடுவதையும் ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா உணர்ந்திருக்கிறது. இதில் மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால் நமது நாடு அந்நியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த பிறகு நம் ஜனநாயகத்தில் நம் அரசியல் சக்திகள் சாதியத்தை தங்கள் ஓட்டுவங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ளன. நம் தாழ்த்தப்பட்ட சமுதாயங்களில் நிலவும் கல்வியின்மை, அடிப்படை கட்டமைப்புகளின்மை, வருமானமின்மை ஆகியவை (அரசியல் சுயநலமிகளால்) சுரண்டப்பட்டு வருகிறது.


ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா மானுட சுயமரியாதையையும் சமூக சமரசத்தையும் பேணி வளர்ப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. ஆச்சார்ய சபாவின் உறுப்பினர்கள் உட்பட இந்த தேசத்தின் ஹிந்து சமயத் தலைமையானது பிறப்படிப்படையிலான இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு எதிராக முன்னணி முக்கிய செயல்பாடுகளை எடுக்க வேண்டுமென ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா கருதுகிறது. இதை அவர்கள் தங்கள் வரையறைக்குட்பட்ட மடங்களிலும் பீடங்களிலும் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் செய்ய வேண்டும். தங்கள் பிரவசனங்களில் செய்ய வேண்டும். மேலும் அறிவொளி கொண்ட ஹிந்து சமுதாய ஆர்வலர்கள் ஹிந்து சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட எளிய மக்களை சமூக-பொருளாதார வலிமை அளிக்கவும் கல்வி அளிக்கவும் மேலும் பல அமைப்புகளை ஏற்படுத்தி உழைக்க வேண்டும்.


- சுவாமி தயானந்த சரஸ்வதி


ஒருங்கிணைப்பாளர், ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா

நாத்திகவாதிகளின் சிந்தனைக்கு

ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.அதற்கு ஒரு நீதிபதி அவர்களை தலைமை தாங்கிட அழைத்திருந்தனர்.அந்தக் கூட்டம் கடவுள் இல்லையென்று கூறும் நாத்திகவாதிகளால் கூட்டப்பட்டிருந்த கூட்டம்.அந்த நீதிபதி அவர்களோ,கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்.


அவர் தனது இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லிப் பேச ஆரம்பித்தார்.


உடனே,அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நாத்திகர்,


“நான் பார்க்காத எதையும் நம்ப மாட்டேன்” என்றார்.


அதற்கு அந்த ஆத்திக நம்பிக்கை கொண்ட நீதிபதி,


“அப்பா! உனது மூளை எனது கண்களுக்குத் தெரியவில்லை;அதற்காக அது இல்லை என நான் நம்புவது அழகா?” எனக் கேட்டார்.


நாத்திகத்தை தனது கொள்கைகளாகக் கொண்ட சகோதரர்கள் சிந்திக்கவே இந்த நிஜக்கதை.


நன்றி;இராமகிருஷ்ண விஜயம்,ஜனவரி,2011.

நாத்திகர்கள்,கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு அழைப்பு

ஓம் சிவசிவஓம்

இந்து மதத்தை இழிவுபடுத்துவதை விட்டுவிட்டு,இந்த ஆன்மீகக் கடல் வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆன்மீக வழிமுறைகள்,பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை மனப்பூர்வமாக(போலியாக இல்லாமல்) பின்பற்றவும்.இதில் ஏதாவது ஒன்றை மட்டும் போலி என்பதை நீங்கள் நிரூபித்தால்,நான் நாத்திகனாகவோ,கம்யூனிஸ்டாக மாறத்தாயார்.


இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் உண்மை என்பதை நிரூபித்தால்,நீங்கள் உங்களது வாழ்நாளை இந்து தர்மத்தின் பெருமைகளைப் பரப்புவதற்காக அர்ப்பணிக்கத்தயாரா? குறிப்பாக ஓசை செல்லா போன்றவர்களை யாம் அழைக்கிறோம்.


ஓம் சிவசிவ ஓம்

ஓராண்டு வரை நவக்கிரக தோஷம் நம்மை பாதிக்காதிருக்க ஒரு ஆன்மீகப்பரிகாரம்
சுத்தமான இடத்தில் இருந்து இரண்டு கைப்பிடியளவு அருகம்புல் எடுத்து வரவேண்டும்.அதைக் கழுவ வேண்டும்.பின் அதோடு ஐந்து மிளகை இடித்துப்போட வேண்டும்.அதை ஆட்டுரலில் அல்லது மிக்ஸியில் போட்டு சாறு எடுக்க வேந்தும்.அதை துணியில் வடிகட்ட வேண்டும்.அதில் முப்பது மில்லி காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.குடித்தப்பின் ஒன்றரை மணி நேரம் வரையிலும் டீயோ காபியோ காலை உணவோ சாப்பிடக்கூடாது.அதன்பின் அதிக காரசாரமில்லாத உணவுகளை சாப்பிடலாம்.மச்சமாமிசம் அறவே கூடாது.இப்படி ஒன்பது நாள் சாப்பிட்டால் போதும்.ஒரு வருடம் வரை நவக்கிரக தோஷம் நம்மைப் பாதிக்காது.இது அனேகர் அனுபவத்தில் பரிசோதிக்கப்பட்டது.நன்றி:எனது ஆன்மீககுரு சகஸ்ரவடுகர் அவர்கள்.

வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை
பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்குக் கொண்டு வந்து சில நாட்கள் வைக்கவும்.அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக் கட்டியிருக்கும் வாழை நாரை நீக்கிவிட்டு,அருகம்புல்லை இடித்து தூள் ஆக்கவும்.மேற்படி தூளை சாம்பிராணியுடன் கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டில் போட்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறும்.இது அதிக செலவில்லாத பரிகாரம்.ஆனால்,பலனோ அபரிதமானது.எனக்குப்போதித்த எனது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

இடுமருந்து,விஷகடிகள் நீங்கிட ஒரு சுலப பரிகாரம்


100 மி.லி.பசும்பால்,100 மி.லி.தேங்காய்ப்பால்,100 மி.லி.வெண்பூசணி என்ற தடியங்காய் பால் எடுத்து,சரிசமமாக கலந்து ஐந்துமிளகு இடித்துப்போட்டு,கொதிக்க வைத்து,பின் இறக்கி வைத்து,இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.காலையில் வெறும் வயிற்றில் ஒருநாள் விட்டு ஒரு நாள் என 3 முறை குடிக்க வேண்டும்.இதனால்,இடுமருந்து நீங்கிவிடும்.


அநேகர்களுக்கு விஷகடிகளுக்கு,இடுமருந்து முறிவதற்கு,மனக்குழப்பத்திற்கு இந்த முப்பாலை பனங்கற்கண்டு சேர்த்தும்,நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இனிப்பு சேர்க்காமலும் கொடுப்பதால் குணமாகும்.


ஹோமியோ மருத்துவத்தில் நக்ஸ்வாமிகா(எட்டிக்கொட்டை)என்னும் மருந்தை 30 ஓ வீரியத்திஉல் ஒரு முறை,ஒரு டோஸ் கொடுத்தால் போதும்.இடுமருந்து முறிந்துவிடும்.


இவற்றின் மூலம் ஜோதிடம்,மந்திரம்,மருத்துவம் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது நிரூபணமாகிறது.

பரிகாரம் என்றால் என்ன?

உலகத்தோடு ஒட்ட ஒழுகார் பல கற்றும் கல்லார் அறிவிலாதார் என்னும் குறள்படி உலக சமுதாயத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதன் சமுதாயத்தை அனுசரித்துத்தான் செல்ல வேண்டியுள்ளது.முற்றும் துறந்த முனிவர் ஊர் பிடிக்காமல் வனத்துள் போய் விடுவதால்,அவருக்கு எந்த விதக்கட்டுப்பாடும் இல்லை.இப்பொழுது மனித மன விடுதலைக்கு யோக மார்க்கங்கள் இருந்தாலும் 90% மக்கள் கிரியா மார்க்கத்தை விரும்புகிறார்கள்.மந்திரம்,தந்திரம்,எந்திரம் ஆகியவைகளின் பேரில்தான் முழு நம்பிக்கை வைக்கின்றார்கள்.அதனால்தான் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் தாங்கமுடியாத அளவு பெருகிக்கொண்டே செல்கிறது.கலியுகத்தில் வாழும் மக்களுக்கு நிமிடத்துக்கு நிமிடம் பிரச்னைதான்.


என்றைக்கு பிரச்னை என்ற ஒன்று ஒரு மனிதனுக்கு ஏற்பட்டதோ அன்றே தீர்வு என்ற ஒன்றும் உள்ளது.அது என்ன தீர்வு என்பது நம் கண்களுக்கு புலப்படுவது இல்லை.ஏதோ ஒரு மாற்றுவழி இருக்கத்தான் செய்கிறது.அதைத்தான் பரிகாரம் என அழைக்கின்றனர்.ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல் உண்டு என்பதுதான் பரிகாரத்தின் தத்துவம்.


நம்பிக்கைதான் பல மதங்களின் மூலதனம்.மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் பல மதங்கள் கிடையாது.எனக்கு அருளாளர்கள் மேல் வைக்கும் நம்பிக்கை குறைவுதான்.ஆனால் அருளாளர்கள் கூறும் பரிகாரங்கள் மேல் முழு நம்பிக்கை உண்டு.கடந்த 40 ஆண்டுகளில் பல முறை பரிகாரங்களை பரீட்சை செய்து பார்த்துள்ளேன்.பரிகாரம் ஒரு முழுமையான தீர்வு இல்லை.விபத்தில் சிக்கியவனுக்கு முதலுதவி மாதிரிதான்.பரிகாரங்கள் தற்காலிகமானவை.கொஞ்சம் சிந்திக்க,மூச்சுவிட கால அவகாசம் கிடைத்தவுடன் நிரந்தர நிவாரணத்தை மனிதன் தேட வேண்டும்.மனித காரியங்களுக்குத் தடையாக இருப்பது அவன் மனமும் உடலும்தான்.வெளி எதிரியே கிடையாது.கொல்லாமல் கொல்லும் நோய் அவனவன் உள்ளத்தில் இருக்கின்றது.கெட்ட நேரம் வரும்போதுதான் அடுத்தவர் சொத்தை அபகரிக்க எண்ணுகிறான்.அவனுக்கு நல்ல புத்தி சொல்ல ஆளில்லை.அதனால்தான் விநாசகாலே விபரீத புத்தி என பெரியோர்கள் கூறினர்.ஒன்று சுயபுத்தி வேண்டும்.அது இல்லாவிட்டால் சான்றோர்கள் புத்திமதியைக் கேட்டு அதன்படி நாணயமாக நடக்க வேண்டும்.இரண்டும் இல்லை எனில் ஒரு மனிதன் என்னதான் கலைகள் கற்றிருந்தாலும் அவன் தரித்திரமடைகிறான்.நன்றி:எனது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்புற்றுநோயை வரவழைக்கும் (உணவுப்பொருட்களில் சேர்க்கப்படும்)செயற்கை வண்ணங்கள்

ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.


உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.


பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.


கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.


சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.


கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.


உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.


எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?


கேன்சர் ஆபத்து!


இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்.


பி.கு.:


என்ன நண்பர்களே....அதிர்ச்சியாக உள்ளதா? இந்த மேட்டர், ஏதோ பத்திரிக்கையிலோ, பதிவிலோ வந்தது போலத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும், எழுதியவர்களுக்கும் பகிர்ந்தவர்களுக்கும் நன்றி. இதையும் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இந்தியாவில் உணவுக்கான வண்ணங்கள் அளவு மீறிப் பயன்படுத்தப்படுவதும், தடை செய்யப் பட்ட வண்ணங்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இது சரியான முறையில் கண்காணிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. சிறு நகரங்களில் இது இன்னும் கேள்விக்குரியது.


இந்நிலையில் நாம்தான் எச்சரிக்கையோடு பளிச்சென்று வண்ணங்கள் நிறைந்த உணவுப்பொருட்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கோபி மன்சூரியன், பஜ்ஜி, சில்லி சிக்கன் போன்றவை மீதும் எனக்கு சந்தேகம் உண்டு.பாக்குச் சாமிகள்

இவர்தான் பாக்கு சாமிகள் .இவரது படத்தை வெளிடுவதில் ஆன்மிகக்கடல் பெருமை கொள்கிறது. 

திருச்செந்தூர் முருகன் பற்றி ஒரு ஜோதிடரின் கருத்து

தமிழ்.வெப்துனியா.காம்: பழனி முருகன் என்றால் வழக்கு, குடும்பம், மன நிலையில் மாற்றம், திருமணம் போன்றவற்றிற்காக வழிபடலாம் என்று சொன்னீர்கள். அதேபோல, திருச்செந்தூர் முருகனை எதற்காக வழிபடலாம்?ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் என்று எடுத்துக்கொண்டாலே சந்தான பாக்கியம். குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான்.


செந்தில் ஆண்டவர், குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம். அதுவொரு பெரிய சிறப்பு. அடுத்து, பெரிய பெரிய மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம். அதனால் கல்விக்குரிய இடமும் அதுதான்.


பையன் மிகவும் டல்லாக இருக்கிறான். கான்சண்ட்ரேட் பண்ணவதே இல்லை என்று சொன்னவர்களுக்கெல்லாம் திருச்செந்தூருக்குப் போகச் சொல்லி எவ்வளவோ பேருக்கு குணமாகியிருக்கிறது. அவர்களே வந்து நல்ல மாற்றம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.


அதேபோல, இப்பவும் ஆண் குழந்தைதான் வேண்டும் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இன்னமும் ஆண் குழந்தை மோகம் நம் நாட்டில் தீரவே இல்லை. அதுபோல வந்து கேட்பவர்களுக்கும் திருச்செந்தூரைத்தான் சொல்கிறோம்.


அதே மாதிரி, கர்ம வினைகள் இருக்கிறதல்லவா, அதாவது ஊழ்வினைப் பயன், அதனை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்தான்.


சூரனை சம்ஹாரம் செய்கிறார் என்று சொன்னால், நம்மிடத்தில் இருக்கக்கூடிய சூரத்துவம் போன்றவற்றை ஒவ்வொன்றாக போக்கக் கூடிய இடம். கர்ம வினைகளையெல்லாம் யாராலும் நீக்க முடியாது. அதனை அந்த முருகன்தான் தீர்க்க முடியும்.


இந்த மூன்று விஷயங்களுக்கு திருச்செந்தூர் முதன்மையான இடம். அதனைக் கண்கூடாக எவ்வளவோ மக்கள் அனுபவிக்கிறார்கள்.

அண்ணாமலையில் அரூபமாக இருக்கும் குகை நமச்சிவாயர்!!!

குகை நமச்சிவாயர்:திருஅண்ணாமலையில் இன்றும் சூட்சுமமாக வாழ்ந்துவரும் துறவிபல புத்தகங்களில் அண்ணாமலை துறவிகள்,சித்தர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளன.அவர்களில் முக்கிய துறவிகளில் குகை நமச்சிவாயரும் ஒருவர்.இவரது கோவில் திரு அண்ணாமலையில் பேக்கோபுரத்துக்கு அருகில் மலை மீது அமைந்துள்ளது.அவரது 18 ஆம் தலைமுறை வாரிசுகள் இந்தக்கோவிலில் பூஜை செய்துவருகின்றனர்.


குகை நமச்சிவாயர் கார்த்திகை மாதம் வரக்கூடிய பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தார்.ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இவரது குருபூஜை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.


நீங்கள் பூராடம் நட்சத்திரத்தில்(தனுசு ராசி) பிறந்தவரா? ஆம் எனில்,குகை நமச்சிவாயரின் கோவிலில் பூஜை செய்யலாம்.ஒரு முறை உங்களது குடும்பத்தோடு பூஜை செய்ய ரூ.1000/-வரை ஆகும்.நீங்கள் விரும்பும் நாளில் எந்த நாளிலும் பூஜை செய்யலாம்.அன்று தாங்கள் தங்கள் குடும்பத்தோடு சேர்ந்து இங்கு வந்து அபிஷேகம் ஆராதனைகளில் கலந்து கொள்ளலாம்.இப்படி அடிக்கடி உங்களது பெயரில் அல்லது உங்களது பிறந்த தமிழ் மாதம் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்துவந்தால்,உங்களது நீண்ட காலப்பிரச்னைகள் தீரும் என இங்கு வரும்போது கேள்விப்பட்டேன்.


பூராடம் நட்சத்திரம் தவிர, பிற நட்சத்திரக்காரர்களும் இந்த பூஜையினை நடத்தலாம்.இதற்கான முன்பதிவை குகை நமச்சிவாயரின் வாரிசுகளிடம் தொலைபேசி அல்லது அலைபேசியில் பேசி உறுதிபடுத்திக்கொண்டு குடும்பத்தோடு திருஅண்ணாமலை சென்று குகை நமச்சிவாயரின் அருள் பெறுக!!!


தொலைபேசி:04175 223178


அலைபேசி:94871 19616

ருத்ராட்சம் பற்றி தமிழ் வெப்துனியா

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?
புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.


ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.


ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.


ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.


இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.


சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

தன்மானம் நிறைந்த தமிழர் ஒருவரின் சுபாவம்!!!

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்


சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.


அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார். ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு


கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.


அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.


தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.


அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.


விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்


செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.


இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.


இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.


“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன் கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்காங்க. இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது. சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. 2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே. கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும். அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.


டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.


அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்


செய்துள்ளார்.


மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

பொடிச்சாமிகள்,அண்ணாமலை

இவர்தான் பொடி சாமீ.இவர் அண்ணாமலையில் இருக்கிறார்.இவரது படத்தை வெளியிடுவதில் ஆன்மிகக்கடல்   பெருமை கொள்கிறது.பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் கிரிவலப்பாதைஇல் இவர் தனது பக்தர்களோடு இருந்தார்.அப்போது ஒரு மனிதன்  செல்வதை பார்த்து ,"அதோ குபேரன் கிரிவலம் போகிறான். போங்க எல்லாரும  ஆசிர்வாதம் வாங்குங்க " என அடையாளம்  காட்டினார். . இவரது பார்வை நமது பாவங்களை அழிக்கும்.

thanks to dinamalar 22.12.2010

கம்யூ.,களின் புது சித்தாந்தம்!அடுத்த ஆண்டு ஏப்ரலில், கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மாநிலத்தில் உள்ள முக்கிய மார்க்சிஸ்ட் தலைவர்கள் அனைவரும், இப்போது அங்குள்ள சர்ச்சுகளில் தான் காட்சி தருகின்றனர். ஆம்... சர்ச்சுகளில் உள்ள பாதிரியார்களை சந்தித்துப் பேசி வருகின்றனர். பாதிரியார்களிடம் தங்களுக்குள்ள நட்பை இன்னும் ஆழமாக்கி வருகின்றனர்.கேரளாவில் உள்ள சிரோ-மலபார் சர்ச்சுக்கும் மார்க்சிஸ்ட்களுக்கும் எப்போதும் ஆகாது.சிறுபான்மையினர் ஆதரவை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளில் இப்போது, கேரள மார்க்சிஸ்ட்கள் இறங்கியுள்ளனர்.கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், திருச்சூரில் உள்ள சிரோ-மலபார் பிஷப் இல்லத்தில்தான் அடிக்கடி காட்சி தருகிறார். அங்குள்ள ஆர்ச்பிஷப் மார் ஆன்ட்ரிவ்ஸ் தாழத்து தன் 60ம் பிறந்த நாளிலும், பிஷப் மார் ஜேகப் தூங்குலியின் 80ம் பிறந்த நாளிலும், பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். மார் ஜேகப், இடதுசாரிகளை கடுமையாக விமர்சனம் செய்பவர்.நண்பர்களாக இல்லாவிட்டாலும், எதிரிகளாக இருக்கக் கூடாது என்பது கம்யூனிஸ்டுகளின் லேட்டஸ்ட்


சித்தாந்தம்.
கடவுள் நம்பிக்கை இல்லாத ரஷ்யா 16  துண்டுகளாக  உடைந்தது. எனவே அதிகாரம் கிடைக்க கொள்கைகளை இழந்து விட்டனர் தோழர்கள் !!!விக்கிலீக்ஸ் உருவான வரலாறு தமிழில்!!!

இணைய உலகம வழியாக  சர்வதேச அரசுகளின் சொரூபத்தை வெளிப்படுத்திய எனது மன்னிக்கவும் நமது ஹீரோ விக்கிலீக்ஸ் நிறுவனரை ஆன்மீகக்கடல் சார்பாக மனம் திறந்து பாராட்டுகிறோம்.அவரது உலகப்பற்றைப் பற்றி விரிவாக அறிய http://www.suduthanni.blogspot.com/ செல்லவும்.

சீனாவின் நிஜமுகத்தை காட்டும் ஒரு பயண நூல்!!

சீனாவைப் பற்றி ஒரு பார்வையாளனின் எண்ணங்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். சீனாவை ஒரு சட்டகத்திற்குள் அடைக்கும் முயற்சியோ, அல்லது சீனாதான் டாப்பு அல்லது வேஸ்ட்டு என்றோ குறிப்பிடாமல் ஒரு இந்தியன் சீனாவில் வாழ்ந்த காலங்களில் தான் கண்டு, கேட்டதை தனது இந்தியக் கண்ணாடி கொண்டு பார்த்திருக்கிறார். அங்கிருக்கும் நல்லது கெட்டதுகளையும், அது இந்தியாவில் இருந்தால் எப்படி நமக்கு நன்மை பயக்கிறது என்பதையோ, அல்லது அது நமக்கு எப்படி பாதகமாக இருக்கிறது என்பதையோ தனது கருத்தாக பதிவு செய்திருக்கிறார் பல்லவி அய்யர்.
சீனா என்ற பிரம்மாண்டத்தை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் குறுக்கும் நெடுக்குமாக தெரிந்து கொள்வதற்காகவே பயணம் செய்திருக்கிறார். அவரது வேலையும் பத்திரிக்கையாளர் என்பதால் இது எளிதில் சாத்தியமாகியிருக்கிறது. மனதில் பட்டதை அழகாக எழுத்தாக்கியிருக்கிறார்.
சீனா என்பது ஏழைகளின் சொர்க்கமாக இருக்கிறது என்கிறார். குறைந்தபட்ச தேவைகளான உணவு, உடை உறையுள் எல்லோருக்கும் கிடைப்பதை சாத்தியப்படுத்தியிருக்கிறது அரசு. ஒரு மக்கள் நலன்சார் அரசு இதைவிட வேறு என்ன மக்களுக்குச் செய்துவிட முடியும்?
இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு வாக்கு என்ற ஒரு ஆயுதமாவது இருக்கிறது. ஆனால் சீனா மக்களுக்கு வாக்கு என்ற ஒன்றிருப்பதே தெரியுமா எனத் தெரியவில்லை என்கிறார். மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரு அறிவிக்கப்படாத சர்வாதிகார ஆட்சியைப் போன்ற ஒரு ஆட்சியில் இருப்பதை விளக்குகிறார்.
பொதுமக்களுக்கு எதிரான அரசின் குற்றங்கள் எல்லாம் பத்திரிக்கைகளாலும், மனித உரிமைகள் அமைப்பாலும் மீண்டும் மீண்டும் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். மீண்டும் அரசு மக்கள் விரோத வேலைகளை செய்யாது. ஆனால் சீனாவிலோ மனித உரிமைகள் எல்லாம் முழுதாய் மீறப்படும். மக்களுக்கு எதும் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும். ஊடகங்களிலோ, புத்தகங்களிலோ அவை இல்லாமல் செய்யப்பட்டு அடுத்த தலைமுறைக்கு நடந்த அநியாயங்கள் எதும் தெரியாமலேயே போய்விடும். எடுத்துக்காட்டு, தியான்மென் சதுக்கப் படுகொலைகள். சுருங்கச் சொன்னால் எது வரலாறு என்பதைக்கூட அரசாங்கமே தீர்மானிக்கும். உண்மைக்கும் அதற்கும் காததூரம் இருக்கும்.
சீனாவில் ஒரு கட்சி ஆட்சியினால் எதிரிகளோ அல்லது எதிர்ப்புகளோ இல்லை என்ற நிலையில் அரசு நினைப்பதை உடனே செயலாக்க முடிகிறது என்பதையும், அதையே இந்தியாவில் செய்வதாயிருந்தால் சந்திக்க வேண்டிய சவால்களையும் குறிப்பிட்டு, இந்தியாவில் குறைந்தபட்சம் தனது கருத்துக்களைச் சொல்லவாவது வாய்ப்பளிக்கப் படுகிறது என்பதையும், ஆனால் சீனாவில் இந்த உரிமைகள் எல்லாம் சாத்தியமே இல்லை என்பதையும் சொல்கிறார்.
நமது தோழர்களும், காம்ரேடுகளும் சொல்வதுபோல சீனா ஒன்றும் சொர்க்கபூமியல்ல… எல்லா நாடுகளைப் போலவே எல்லாவிதமான பிரச்சினைகளும் உண்டு என்பதையும், அரசாங்கம் என்பது கிட்டத்தட்ட ஒரு அடிமைகளை உருவாக்கும் தொழிற்சாலைபோல செயல்படுவதையும், இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க முடியாத நிலையில் அரசாங்கம் மக்களை வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார்.சீனாவில் மருத்துவம் படிக்கச் செல்லும் நமது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான கல்வி கிடைக்கிறது என்பதையும் சொல்கிறார். கிட்டத்தட்ட நம்மூர் மாட்டுக்கொட்டகை பொறியியல் கல்லூரிகளை விட மோசமான கல்வி வழங்கப்படுகிறது என்கிறார்.
சீனாவுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
பொதுமக்களுக்கு தீமை விளையும் எந்தத் திட்டத்தையும் தடுத்து நிறுத்தவும் அல்லது குறைந்தபட்சம் உரிய நஷ்டஈடு பெறவாவது முடியும். ஆனால் சீனாவில் அரசு, ”இடத்தைக் காலிசெய்” என்று சொன்னால் மறுபேச்சு பேசாமல் இடம்பெயர வேண்டும். மறுத்தால் ஜெயில்வாசமும், கொடுமைகளும்.
இந்தியாவில் நமது இஷ்டம் மற்றும் வசதிக்கேற்ப நாம் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சீனாவிலோ நினைத்தபடி குழந்தை பெற்றுக்கொள்ள நீங்கள் சிறுபான்மையினராக இருந்தால்தான் முடியும். இல்லையெனில் ஒரு குழந்தைதான் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் சாமி கும்பிடலாமா, எந்த சாமியைக் கும்பிடுவது அல்லது கோவில் கட்டிக்கொள்ளலாமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம் இந்தியாவில், சீனாவில் அரசாங்கம் முடிவு செய்யும். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு கடவுள். முன்பு சேர்மன் மாவோ, தற்போது புத்தர். முதலில் கோவில்களையும், புத்த விகாரங்களையும் இடித்தனர் இந்த கம்யூனிஸ கும்பல்கள். தற்போது பொறுமை இழந்துகொண்டிருக்கும் மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஒரே வழி கோவில்களை புதிதாய் கட்டுவதுதான் என கோவில்களை அரசே கட்டிக்கொண்டிருக்கிறது. ஆக, கொள்கைகளைவிட தான் பதவியில் இருப்பதும், நாட்டை இரும்புப் பிடியில் வைக்கவும் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். புத்த மதத்தையும் அரசாங்கத்தின் பிடியில் வைத்துக்கொள்ளவும், அரசுக்கு எதிரான எதிர்ப்புக்குரல்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடவும் தலாய்லாமாவை நாட்டைப் பிரிப்பவர் என்றாக்கி விட்டார்கள். அடுத்த லாமாவையும் அரசே நிர்ணயம் செய்து மத சுதந்திரம் என்ற ஒன்றில்லாமல் செய்துவிட்டனர்.
சீனாவின் இஸ்லாமிய சமூகம் இதுவரை அரேபியாவுடன் தொடர்பில்லாமல் இருந்தது. அதனால் சீனர்களுடன் சுமூகமாக வாழ்ந்துவந்தனர். ஆனால் சமீபத்திய அரேபியத் தொடர்புகள், அவர்களை சீன சமூகத்திலிருந்து விலகி இருக்க வைத்துவிட்டது என்கிறார். தற்போதைய அமைதியின்மை அரேபியாவுடன் சீன முஸ்லிம்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டவுடன் வந்தது என்கிறார்.
நமது கேரளக் காம்ரேடுகள் அன்றாடம் செய்யும் போராட்டம், வேலை நிறுத்தம் எல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். தொழிலாளர்களின் சொர்க்கபுரியான கம்யூனிச சீனாவில் இவையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்கப்படும்.
இந்தியாவில் உங்கள் எண்ணங்கள் உங்களுடையவை, சீனாவில் அரசாங்கம் நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதுடன் , அரசாங்கம் செய்வது மட்டுமே சரி என்றும் உங்களை நம்பவைக்கும்.
உலகமே சார்ஸ் என்ற வியாதியால் அமளி துமளிப் பட்டுக்கொண்டிருக்க, அது சீனாவிலிருந்துதான் வருகிறது எனச் சொன்ன பிறகும் அரசாங்கமே மூடி மறைத்து பல ஆயிரக்கணக்கான மக்கள் அழியக் காரனமாய் இருந்தது. நிலமை கைமீறிய பின்னர் உண்மையை ஒத்துக்கொண்டது. இந்தியாவில் ஒரு ஆளுக்கு சார்ஸ் என்றாலும் இந்தியா முழுக்க அதுபற்றி பேசப்படும், குறைந்த பட்ச பாதுகாப்பு நடவடிக்கையாவது எடுக்கப்படும். சீனாவில் நாட்டின் கௌரவம் என்ற பெயரில் விஷயத்தை வெளியே சொல்லாமல் மக்களை சாகவிட்டது சீன அரசு.
நமது தோழர்கள் காட்டும், அல்லது கம்யூனிச நாடுகளில் தேனும் பாலும் ஓடுவதுபோல சொல்வது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட பொய்கள் மட்டுமே என்பதை நாம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது உணரலாம்.
இந்தப் புத்தகத்தின் பலமே கிட்டதட்ட எந்தவிதச் சார்பும் அற்று ஒரு சமகால பத்திரிக்கையாளரின் பார்வையில் சீனாவைப் பற்றி சொல்லப்படுவதுபோல எழுதப்படிருப்பது. ஆனால் முடிந்தவரை உண்மையாய் எழுதப் பார்த்திருக்கிறார்.
china-labor-dispute
புத்தகத்தில் சிலகுறைகளும் இல்லாமல் இல்லை. குறிப்பாக, இந்தப் புத்தகம் சீனாவின் பெரும்பான்மைப் பகுதியான கிராமப்புற சீனாவைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. சீனாவின் கலாச்சாரப் புரட்சி எப்படி பண்டைய வரலாற்றை அழித்தது, அந்த வெற்றிடத்தை எப்படி சாதுர்யமாக கிறிஸ்தவம் நிரப்பி அதனை மேற்கிற்கான ஆயுதமாக மாற்றுகிறது என்பதைப் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை.சீனாவால் ஆதரிக்கப்படும் மாவோயிஸ்ட்டுகள் நமது பழங்குடி கலாச்சாரத்தை அழிப்பதுடன் நின்றுவிட்டு, அந்த வெற்றிடத்தை கிறிஸ்தவம் மூலம் நிரப்பி இன்றைக்கு வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட கிறிஸ்தவமயமாகி இந்திய இறையாண்மைக்கே அச்சுறுத்தலாக இருக்கின்றன. அதைப்பற்றியும் சொல்லியிருக்கலாம். சீனாவில் மாவோவினால் உருவாக்கப்பட்ட பஞ்சங்களைப் பற்றியும், அதனால அழிந்த லட்சக்கணக்கான மக்களைப் பற்றியும் சிறுகுறிப்புகூட இல்லை.
இவற்றை பல்லவி அய்யர் அணுகாதது எதிர்பார்க்க கூடியதே. ஆனால் இந்த விஷயங்களை அவர் அணுகாமைக்கான காரணங்கள் வெளிப்படை. அவர் வேலை செய்தது சென்னை மவுண்ட் ரோடிலிருந்து வெளிவரும் ஒரு சீன ஆதரவுப் பத்திரிக்கையில் என்பதை கருத்தில் கொண்டால், இவ்வளவுதூரம் சீனாவைப் பற்றி எழுதியதற்கே பாராட்டலாம். புத்தக ஆசிரியரின் இந்தியாவுடனான ஒப்பீடு நமக்கு சீனாவைப் பற்றி எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.
இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்தவர் ராமன்ராஜா. சொல்வனம் இதழில் நிறைய அறிவியல் கட்டுரைகளை நகைச்சுவையுடன் கலந்து எளிமையாக எழுதுபவர். இவரது சொல்வனம் கட்டுரைகள் இவரது எழுத்தைப் பற்றிய ஒரு சிறப்பான அறிமுகம் கொடுக்கும். புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பின் மூலம் நாம் மூலப்புத்தகத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வேற்படுத்தியிருக்கிறார். ஆங்காங்கே புன்னகைக்க வைக்கிறார். பல்லவி ஐயரும் நகைச்சுவை உனர்ச்சியுடன் எழுதியிருப்பார்போல..  தமிழில் ஒரு காலத்தில் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் என்றாலே வறட்டுத்தனமாக, ஜீவனின்றி மொழிபெயர்த்தல் என்ற நிலையிருந்தது. இன்றைக்கு ராமன்ராஜா, ஜெ.ராம்கி போன்றோர் தமிழ் மொழிபெயர்ப்பில் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கின்றனர்.
சீனாவைப் பற்றி கிட்டத்தட்ட காய்ப்பு, உவத்தலின்றி எழுதப்பட்ட அருமையான புத்தகம்.
சீனா - விலகும் திரை
பல்லவி அய்யர் (தமிழில்: ராமன் ராஜா)
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 360, விலை: ரூ 200.

ஆன்மீக பூமி பாரதம் பற்றி

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஆன்மீகத்திற்கு என்றால் இந்தியாவிற்குப் போ என்று சொல்வார்கள் என்று சொன்னீர்கள். அரவிந்தர் கூட அதைத்தான் சொல்கிறார். இந்தியா ஒரு ஆன்மீக பூமி. அது ஆன்மீகத்திற்கான வழிகாட்டியாக உலகத்திற்கு இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார். ஆனால் இப்படிப்பட்ட ஆன்மீகம், கோயில்களெல்லாம் நிறைந்திருக்கக் கூடிய இந்தியாவில் எங்கு பார்த்தாலும் திருத்தலம், புண்ணியத் தலம், ஆசிரம், ஓடும் நதியெல்லாம் புண்ணியம் என்றெல்லாம் இருக்கும் இங்கு எப்படி இத்தனை பேர் பாவ ஆத்மாக்களாகவும், பெரிய அளவில் ஊழலும் ஏன் நடைபெறுகிறது. ஏன் இந்த அளவிற்கு சீர் கெட்டிருக்கிறது வாழ்க்கை?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தேவர்கள் என்றால் அசுரர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். என்னதான் பரிகார பூமி, புண்ணிய பூமி இந்தியா என்று சொன்னாலும், துர் ஆத்மாக்கள் என்பது இங்கும் உண்டு. இவ்வளவு பெரிய ஆன்மீக நாட்டில்தான் கடவுள் எதிர்ப்பாளர்கள் மிக அதிகம். உலக நாடுகளில் பார்த்தால் இந்த அளவிற்கான கடவுள் மறுப்பாளர்கள் குறைவு.

இப்படித்தான் அத்தனையையும் சகித்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம். ஆனால் தண்டிக்கப்படுகிறார்கள். தெய்வம் நின்று கொல்லும் அரசன் அன்று கொல்வான் என்பது மாதிரி, (அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லையே?). நடக்காமல் இல்லை, நமக்குத் தெரியாமல் சில விஷயங்கள் இருக்கலாம்.

வெளி உலகத்திற்குத்தான் ஒருவர் கெளரவமாகவும், கம்பீரமாகவும், நிம்மதியாகவும் இருக்கிற மாதிரி இருக்கலாம். ஆனால், வாரிசுகள், சந்ததிகள் பாதிக்கப்படுவதை பார்க்கிறோம். வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத அளவிற்கு தேம்பித் தேம்பி அழுவதும், வெளியில் வந்தும் கெளரவமாக துண்டு போட்டுக் கொண்டு இருப்பவர்களையும் நா‌ம் பார்க்கிறோம்.

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு


சுமார் 20 வருட ஜோதிட அனுபவத்தை நேரடியாக கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பினை ஆன்மீகக்கடல் வழங்குகிறது.


ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரே மாதத்தில் நீங்கள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளமுடியும்.


காலை 90 நிமிடங்கள்,மாலை 90 நிமிடங்கள் வீதம் 30 நாட்களுக்குள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.


இதற்கு உங்களுக்குத் தேவையான தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரையிலும் உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம் வந்து தங்கவேண்டும்.அவ்வளவே!


தொழில்முறை ஜோதிடம் கற்க கட்டணம் உண்டு.


தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஜோதிட பயிற்சி வகுப்புகளில் நடைபெறுகின்றன.அவை வார இறுதிநாட்கள் வகுப்பை நடத்துகின்றன.அது நமது வேகமான வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்கின்றதா?


தொழில் முறையாகப் பார்க்க விரும்பாதவர்கள்,பொழுதுபோக்கிற்காகவும் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம்,கோவை அவினாசிப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஜோதிட டிப்ளமோ,ஜோதிட டிகிரிகள் படிப்பவர்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் திறனை மெருகுபடுத்திக்கொள்ளலாம்.


பெண்களுக்குத் தனி வகுப்புக்கள் நடைபெறுகின்றன.


நமது எதிர்கால வாழ்க்கையையும்,நம்மைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்தையும் கணிக்கவும்,ஜோதிடப்படி வழிகாட்டவும்,நமது நட்புவட்டத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையை மதிப்பிடவும் ஜோதிடம் பயன்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!!!


சில ஜோதிட ரகசிங்களினால் நமது ஜாதகத்தில் இருக்கும் பிரச்னைகளையும்,பாவங்களையும் சரி செய்யமுடியும்.நமது சராசரி வாழ்க்கையை அசாதாரணவாழ்க்கையாகவும் மாற்றிட முடியும்.


தொழில்முறை ஜோதிடம் கற்க விரும்புவோர்,உங்களது பிறந்த ஜாதகம்,செல் எண்ணுடன் மின் அஞ்சல் அனுப்பவும்.அடுத்த பேட்ச் வகுப்புக்கள் 7.1.2011 அன்று ஆரம்பாக இருக்கின்றன.

நவபாஷாணங்களின் சுபாவங்கள்

-->
நவபாஷாணங்களின் சுபாவங்கள்
பாஷாணம் என்றால் விஷம் என்று பெயர்.ஒன்பது விதமான பாஷாணங்களைக் கட்டுவது சித்தர்களுக்கே சிரமமான காரியம் ஆகும்.ஏனெனில்,ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான சுபாவத்தைக் கொண்டது.ஒவ்வொரு பாஷாணமும் கட்டும்போதும் கட்டுபவருக்கு ஒவ்வொருவிதமான மனநிலையை உருவாக்கும்;தவிர,பாஷாணத்திலிருந்து உருவாகும் சூட்சுமமான கதிர்வீச்சு,கட்டுபவர்,அவரது அருகில் இருப்பவரின் உடல்களுக்குள் புகுந்து உடல் நலம்,மனநலத்தை அதிகரிக்கும்.
நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது;நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.ஏனெனில்,பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.இதை உணர்ந்தே போகர் பழனிமலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார்.இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால்/சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
பழனிமலையில் இருக்கும் தண்டாயுதபாணியினை உருவாக்கிய நேரப்படி,அவரது முக்கியத்துவம் தற்போது குறையத்துவங்கிவிட்டது.ஆனால்,பல லட்சம் வருடங்கள் ஆயுளைக் கொண்டவர் நவபாஷாணமுருகர் பழனி தண்டாயுதபாணி.
வெகு விரைவில் பழனிமலையில் வேறொரு முருகக்கடவுள் ஸ்தாபனம் ஆகப்போகிறார்.இவர் மின்சாரக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் நவபாஷாணமுருகர் ஆவார்.இவரை ஸ்தாபித்ததும்,உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மின் சாதனங்களும் செயலிழந்துபோகும்;ஆக,இந்த வலைப்பூ உள்பட எல்லாமோ அம்போதான்.இதை இன்னும் சில வருடங்களில் நாம் உணரப்போகிறோம்.அதே சமயம்,இப்படி கதிரியக்க நவபாஷாண முருகர் பழனிமலையில் நிறுவப்பட்ட உடனே,நமது பாரதம் வல்லரசாகிவிடும்.

வேர்களைக் காட்டும் வரலாறு:ஆராய்ந்து எழுதியவர் ஈரோடு டாக்டர் எம்.எல்.ராஜா அவர்கள்

-->

நமது புனிதமான பாரதத் தாய்திருநாட்டின் வரலாற்றில் ஐரோப்பியர்கள் புகுத்திய தவறுகள் கணக்கில் அடங்கா.
நம்நாட்டின் தொன்மையான ஓலைச்சுவடிகளைப்படித்து பிரதிஎடுக்கும்போதும்,கல்வெட்டுக்களைப்பிரதி யெடுத்துப் பொருள் கொள்ளும்போதும்,அவற்றில் பொய்களைப் புனைந்துரைத்தல்,தவறுகளைப் புகுத்துதல்,தவறாகப்பொருள் உரைத்தல்,இடைச்செருகல்களை நுழைத்தல்,தவறாகத்திருத்திக்கூறல்,உண்மைகளைஅழித்தல்மற்றும் மறைத்தல்,பொய்யான ஆதாரங்களைச் செயற்கையாக உருவாக்குதல் போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத அநீதிகளைச் செய்தார்கள்.அவர்களின் நோக்கம் நமக்குள் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்.மேலும் நமக்குள் செயற்கையாகப் பிரிவினையை உருவாக்க வேண்டும்.இவற்றின்மூலம் நம்மை அவர்கள் என்றென்றும் ஆட்சி செய்து சுரண்டி,தாம் கொழுக்க வேண்டும் என்பதே!
இதற்காக அவர்கள் புரிந்த,சிறிதும் நியாயமற்ற செயல்களில் மிக முக்கியமானவை.1.ஆதாரபூர்வம் ஏதுமற்ற கிரேக்க நாட்டுக்குறிப்புக்களை,உறுதியான மற்றும் முடிந்த முடிவான ஆதாரமாகக்கொண்டு(sheet anchor) நம் நாட்டு வரலாற்றின் கால வரிசைக்கிரமத்தை முற்றிலும் தவறாக நிர்ணயித்து,நமது தொன்மையை செயற்கையாகக் குறைத்தது.2.அலெக்ஸாண்டரை மிகப்பெரிய வீரனாகப் பொய்யாக உயர்த்திக்கூறியது.புருஷோத்தமன் தோற்றுப்போனதாகப் புனைந்துரைத்தது. 3.நமது பாரத தேசத்தில் செயற்கையாகப்பிரிவினையை ஏற்படுத்தி, அதன்மூலம் நம்மை என்றென்றும் ஆட்சி செய்து சுரண்டுவதற்கு ஐரோப்பியர் திட்டமிட்டது.இதற்கு ஏதுவாக மொழி,சமூக,பிராந்திய மற்றும் சமுதாயப் பழக்க வழக்க ரீதியில் நம்மவருக்குள் மனத்தளவில் பிரிவினை மற்றும்துவேசத்தை விதைத்தது.இதுவே அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி ஆகும்.
இதற்காக நமது நாட்டின் வரலாற்றில் எண்ணற்ற,முற்றிலும் தவறான கருத்துக்களைச் செயற்கையாகப் புகுத்தினர்.இதற்கு ஒரு உதாரணமாக,ஐரோப்பியரும் அவர்களது அடிவருடிகளும் புனைந்துரைத்த,ஆரிய திராவிட இனவாதகட்டுக்கதையைக் கூறலாம்.
4.உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு,முழு பாரதத்தையும் ஆண்ட வீரதீரம் பொருந்திய மாபெரும் மன்னர்களான விக்ரமாதித்ய மற்றும் சாலிவாஹன மன்னர்களை,வரலாற்று நாயகர்களாக ஏற்றுக்கொள்ளாது,மக்களின் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று வரலாற்றைத் தமது நோக்கத்திற்கு ஏற்ப தவறாகமாற்றிஎழுதியது.
5.கனிஷ்கர் (கி.மு.1294முதல் கி.பி.1234 வரை) என்ற காஷ்மீரத்தின் க்ஷ்த்ரிய குல மன்னனை ஹீணமன்னனாக மாற்றி , அவரின் காலத்தை நவீன காலத்தை நோக்கி மாற்றியது.
6.மிகிரகுல (காஷ்மீரத்து க்ஷத்திரிய மன்னர் கி.மு.704 முதல் கி.மு.634 வரை)மற்றும் தோரமாணா (காஷ்மீரத்து க்ஷத்திரிய இளவரசர் கி.மு.16) ஆகியோரை ஹீண மன்னர்களாக தவறாகக் கூறி,618 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகிர குலனை,அவருக்கு மிகவும் பிற்காலத்தில் வாழ்ந்த தோரமாணாவின் மகனாக வரலாற்றை தவறுபட எழுதியது.
7.நம்நாட்டின் பண்டைய விஞ்ஞான மற்றும் பிற நூல்கள்,அவற்றின் ஆசிரியர்களின் கால நிர்ணயத்தில்,நீதிக்குப்புறம்பாகத் தொன்மையை வெகுவாகக் குறைப்பதற்குச் செய்த மாற்றங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இவற்றை ஒவ்வொன்றாக சிந்திக்கலாம்.

மெகஸ்தனிஸின் சண்ட்ரகோட்டோஸ்
பாரத நாட்டின் வரலாற்றைத் தவறாக எழுத முயற்சித்த ஐரோப்பியர்களுக்கு,கிரேக்க நாட்டின் அலெக்ஸாண்டர் மற்றும் செல்யூகஸீடன் பாரதம் வந்த மெகஸ்தனிஸ் என்பவர் நமது நாட்டைப் பற்றி எழுதிய குறிப்புக்களைப்பற்றிய சிலவிபரங்கள் கிடைத்தன.அவற்றில் மெகஸ்தனிஸ் காலத்தில் ப்ராஸி என்ற பகுதியின் பாலிபோத்ரா நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னனின் பெயர் சண்ட்ரகோட்டோஸ் என்று ஓரிரு இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.(Ref.Ancient India as described by Megasthenes and Arrian,John W.Mc Crindle,Munishiram,New Delhi (1926)2000,page 5,19,66)வெறும் இந்தப்பெயரை மட்டும் ஆதாரமாக எடுத்துக்கொண்டு, அவசரம் அவசரமாக இந்த சண்ட்ரகோட்டோஸ் என்பது சந்த்ர குப்தா: என்றும்,இந்த சந்த்ர குப்தர் மவுரிய வம்சத்தில் மகதத்தை ஆண்ட
சந்த்ர கும்பதர் என்றும் ஐரோப்பியர் முடிவு கட்டினர்.சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் பிரிட்டிஷ் நாட்டுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நீதிப்பிரிவில்,பாரதத்தில் கி.பி.1780 களில் பணிபுரிந்து வந்தார்.1784 இல் கொல்கத்தாவில் ராயல் ஆசியாடிக் சொசைட்டியை (Royal Asiatic Society)ஏற்படுத்தி,நம் நாட்டின் வரலாற்றை,ஐரோப்பியருக்குச் சாதகமாக எழுத ஆரம்பித்தார்.நம் நாட்டின் ராதாகண்ட்(Radhakant)என்ற ஸமஸ்க்ருத நிபுணர்,இந்த துரோகத்திற்கு உதவியாய் இருந்தார்.நம் நாட்டின் பாகவதபுராணம் உட்பட பற்பல புராணங்களைப் புரட்டிப் பார்த்த வில்லியம் ஜோன்ஸீக்கு அந்த புராணங்கள் விவரித்த நம் நாட்டின் மிகமிகத் தொன்மையான வரலாற்றை ஏற்றுக்கொள்வதில் எண்ணற்ற சிரமங்கள் இருந்தன.உதாரணமாக,அவரது மத நம்பிக்கையின்படி,உலகம் இன்றைக்கு 6014 ஆண்டுகளுக்கு முன்புதான் (கி.மு.23.10.4004 காலை 9 மணிக்கு) படைக்கப்பட்டது.ஆகவே,பத்தாயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான நம்நாட்டின் பழமையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.நம் நாட்டினைத் தாழ்வாக சித்தரிக்கும் அவரது நோக்கத்திற்கு இது முற்றிலும் எதிராக இருந்தது.ஆகவே,கிரேக்க நாட்டவரான மெகஸ்தனிஸின் குறிப்புகள் மற்றும் தான் அரைகுறையாகப் படித்திருந்த நமது புராணங்கள் இவற்றை வைத்துக்கொண்டு,அவசர கதியில்,மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புக்களில் காணப்பட்ட பாலிபோத்ராநகரமானது,பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா) என்றும்,இதனைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னனின் பெயரான ‘சண்ட்ரகோட்டோஸ்’என்பது சந்திரகுப்தர் என்பதன் உருமாற்றம் எனவும்,இந்த சந்த்ர குப்தர் மவுரிய வம்சத்தில் மகதத்தை ஆண்ட சந்த்ரகுப்தர் என்றும் அரைகுறையாக 28.02.1793இல் முடிவுகட்டினார். இதைப்பற்றி வில்லியம் ஜோன்ஸ், “இது முடிந்த முடிவு அல்ல;இது பற்றிய தனது ஆய்வுகள் மற்றும் முடிவுகள் அடுத்த கட்டுரையில் தான் முழுமையாக முடிவாகும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால்,அடுத்த கட்டுரை எழுத,காலம் அவருக்கு அவகாசம் தரவில்லை.வில்லியம் ஜோன்ஸ் 27.4.1794இல் காலமாகிவிட்டார்.(ஆதாரம் 1. “The work of Sir WilliamJones” in 13 Volumes,Volume 4,1807 Edition,pages 1,2,6,36 to 40,42 to 46 by Lord TEignmouth and 2.”Is Sandrakottas Chandragupta Mauraya)” by Sree Shriram Sathe,1985 Edition,Pages 1 to 9)நன்றி:சுதேசிச் செய்தி மாத இதழ்

சித்தர்களின் எண்ணிக்கைஆயிரக்கணக்கான சித்தர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் 18 பேர்கள்.

விஷ்ணுபுராணம் கூறும் கருத்துப்படி சித்தர்களின் எண்ணிக்கை 88,000பேர்கள் ஆவார்கள்.

காரை சித்தர் கருத்தின்படி,நூறு கோடி சித்தர்கள் இருக்கிறார்கள்.அதாவது சத கோடிபேர்கள்!!!!

கபீர்தாசர் கருத்துப்படி சித்தர்களின் எண்ணிக்கை 84 தான்!
சித்தர்கள் மூன்று மரபுகளில் ஏதாவது ஒரு மரபைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.முதல் மரபு கைலாய வர்க்கம்.இவர்களுக்கு ஆத்மகடவுள் கைலாய நாதன்.
இரண்டாவது மூலவர்க்கம்.இவர்களுக்கு அவரவர் இஷ்ட தெய்வம் யாராவது ஒருவர் இருப்பர்.மூன்றாவது பால வர்க்கம்.இவர்களுக்கு ஆத்மகடவுள் முருகக்கடவுள் ஆவார்.

கவுதமர்,அகத்தியர்,சங்கரர்,வைரவர்,மார்க்கண்டர்,வன்மீகர்,உரோமர்,புசண்டர்,சட்டைமுனி,நந்தீசர்,
திருமூலர்,காலாங்கிநாதர்,மச்சமுனி,புலத்தியர்,கருவூரார்,
கொங்கணர்,போகர்,புலிப்பாணி என்பது பதினெட்டு சித்தர்களில் ஒரு வரிசை.

திருமூலர்,ராமதேவர்,கும்பமுனி,இடைக்காடர்,தன்வந்திரி,வான்மீகி,கமலமுனி,போகநாதர்,மச்சமுனி,கொங்கணர்,
பதஞ்சலி,நந்திதேவர்,போதகுரு,பாம்பாட்டிசித்தர், சட்டைமுனி,சுந்தரானந்தர்,குதம்பையர்,கோரக்கர் என்பது பதினெண் சித்தர்களில் இதுவும் ஒரு வரிசையாகும்.