RightClick

அகத்தியமகரிஷியை தரிசிப்பது எப்படி?


நீங்கள் அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா?

கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.

இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.

பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.
முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.
அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;

கிரிவலம் செல்லுவதால் ஏற்படும் புண்ணியபலன்கள்

கிரிவலம் செல்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

நீங்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அப்போது உங்களுடைய அத்தனை பிறவி வடிவங்களும் கூடவே சேர்ந்து வருகின்றன.ஒவ்வொருவரின் ஒட்டு மொத்தப் பிறவிச் சாரமே கூடவே சேர்ந்து அருணாச்சலத்தை வலம் வருமாம்!!!

இதற்குக் காரணம், அத்தனை கோடிப் பிறவிகளுக்கும் முற்றுப்புள்ளி இடும் ஆன்மசாதனமே அண்ணாமலை கிரிவலம் என்பதால்தான்!
நமது பிரபஞ்சத்தில் அருணாச்சலமான திரு அண்ணாமலையில் மட்டுமே இது சாத்தியமாகும்.இது நிகழ்ந்தாகிப் பிறவிப்பெரும்பயன் அடைய வேண்டுமென்றால், பவுர்ணமி தினம் போன்று மாதசிவராத்திரி நாளிலும் அருணாச்சல கிரிவலத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
நன்றி:பக்கம் 11,ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜனவரி 2010 மாத இதழ்.

அகஸ்தியர் மகரிஷியின் முழுவிபரங்களைப்பற்றியும், ஆன்மீக அபூர்வத்தகவல்களும் அறிய

www.agnisiksha.org
www.agnisiksha.com
www.agasthiar.org
www.agasthyarashram.com
www.agasthyarashram.org

இந்தியாவின் பிரதமராவாரா ஆன்மீக சூப்பர் ஸ்டார் ரஜினி!


ஆன்மீகத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்

தமிழ்த்திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த் அவர்கள்.தனது திரைப்படங்களில் அவர் வலியுறுத்தும் கருத்துக்கள் அனைத்துமே குடும்பத்தைக் காக்கும்விதமாகவும்,பெற்றோரை மதிக்கும்விதமாகவும் இருக்கின்றன.அவரே பல தடவை தனது ரசிகர்களை உங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என பேசியிருக்கிறார்.

ருத்ராட்சத்தினை முக்கிய காரெக்டராக வைத்து தயாரித்த படம் பெரும் வெற்றி பெற்றது.

அருணாச்சலம் என்ற பெயரில் தனது கதாபாத்திரத்தை அவர் உருவாக்கினார்.அண்ணாமலை என்ற பெயரில் தனி திரைப்படத்தில் நடித்தார்.இம்மூன்றுமே அவருக்குள் திரு அண்ணாமலையின் மகிமைகளால் எழுந்த தாக்கமே!

பாபா படம் மட்டும் ஹிட் ஆகவில்லை;அந்த படத்தையும் இமயமலையில் எடுக்க விரும்பினார்.பல்வேறு ஆன்மீகக் காரணங்களால் அங்கே பாபா படத்தை எடுக்க முடியவில்லை.

திரு அண்ணாமலையின் கிரிவலப்பாதையில் ஒளிரும் சோடியம்விளக்குகள் அனைத்தும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்பளிப்பாக அளித்தவை.இத்தனைக்கும் இப்படி அன்பளிப்பு தந்ததை வெளியில் காட்டிக்கொள்ளவேண்டாம் என உரியவர்களிடம் அவர் தெரிவித்தும் எப்படியோ வெளியில் இந்த தகவல் கசிந்துள்ளது.

13.11.2009,14.11.2009,15.11.2009 இந்த மூன்று நாட்களும் ரஜினிகாந்த் அவர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இரண்டு உதவியாளர்களுடன் அவர் வந்திருக்கிறார்.அந்த நாட்களைப்பற்றி பஞ்சாங்கத்தில் பார்த்தால், அது மாதப்பிரதோஷமும், மாதசிவராத்திரியும் உள்ள நாட்களாக வருகின்றன.

அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனான நான் விரும்புவது என்னவென்றால், ரஜினிகாந்த் இந்தியாவுக்கே பிரதமராக வேண்டும் என்பதே!

மகர ராசி, திரு வோணநட்சத்திரத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த்.ஜோதிடப்படி, உலக கோடீஸ்வரர்களில் 100 க்கு 80 பேர் மகரராசிக்காரர்களாக இருப்பர்.மகர ராசி சனி பகவானின் ராசி.சனியோ தர்மம்,நீதி,நியாயத்தின் அதிபதி.ஆக, நேர்மையாக வாழ்வதும், தர்மத்தை காக்கவும்,அநீதி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எப்பேர்பட்டவராக இருந்தாலும் அவர்களை எதிர்த்துப்போராடும் குணம் சனியின் ராசியில் பிறந்தவர்களின் குணமாக இருக்கிறது.

ஆக,சாதுக்களின் நாடான நம் பாரதம்,சித்தர்களின் ஆசி பெற்ற ரஜினியின் ஆளுகைக்கு வந்தாலே அது நமது நாட்டுக்கு மட்டுமல்ல;உலகத்துக்கே நன்மை பயக்கும்.

15.12.2009அன்று குரு பெயர்ச்சியாகிவிட்டது.மகர ராசியில் நீசமாக இருந்த குரு பகவான் கும்பராசிக்கு இடம் மாறிவிட்டார்.மகரராசிக்காரர்களுக்கு இனி பொற்காலமே!எனவே,நமது ரஜினிகாந்த் அவர்கள் அரசியல்கட்சி ஆரம்பித்து, நாத்திகத்தை ஒழித்துக்கட்டி,ஆன்மீகபூமியான தமிழ்நாட்டில் மீண்டும் ஆத்திகம் வலுப்பெற வழிசெய்ய வேண்டும்.விரைவில்,இந்தியாவையே ஆட்சி செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்.

கி.பி.2011 ஆம் வருடம் ஒரு கலையுலகத்தைச் சேர்ந்தவர்தான் இந்தியாவின் ஜனாதிபதியாவார் என ஒரு ஆங்கில ஜோதிடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.ஒரு வேளை அது நம்ம ரஜினிகாந்த் ஆக இருக்குமோ?

அதிசய உண்மை


நம்பமுடியாத அதிசயம்;ஆனால் உண்மை

நம்ம தெரு அல்லது நமது நட்பு வட்டத்தில் எம்.சி.ஏ.,எம்.பி.ஏ., பி.ஈ.படிக்கும் மாணவர்கள்,மாணவிகளுக்கு அமெரிக்கக் கனவு இருக்கிறது.அதற்காக நமது நாட்டை இழிவாக (விளையாட்டுக்குத் தான்) பேசும் குணம் இருக்கிறது.

ஆனால்,கி.பி.2011க்குள் நான் இந்தியாவுக்குப் போகப் போகிறேன் என்பதும்,இந்தியாவில் செட்டில் ஆகப்போகிறேன் எனப்பேசுவதும் ஐரோப்பாவிலும்,அமெரிக்காவிலும் பெருமைக்குரிய விஷயமாகப் போகிறது.

அமெரிக்காவின் பல மாநிலங்களில் வெட்டவெளியில் (துவைத்த) துணியைக் காயப்போடுவது (?!) பரவலாகிவருகிறது.இப்படிச் செய்வதை அமெரிக்க மாநில அரசுகள் எதிர்த்துவருகின்றன.ஆதாரம்:தினமலர் வாரமலர் 13.12.2009.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேமிப்பு பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.ஆதாரம்:தினமலர் 17.12.2009
நம்ம கமெண்டு:உலக வல்லரசே பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்தபின்னர்தான் வீட்டில் சேமிக்கும் பழக்கம் பற்றி யோசிப்பார்கள் போல! இதுவும் உலக நன்மைக்குத்தான்.இனி அடாவடி அரசியல்,ஆயுத அரசியல் காணாமல் போகும்.
(கொரியாவை இரண்டாக உடைத்தது,ஜெர்மனியை இரண்டாக உடைத்தது,நாத்திக கம்யூனிசத்துக்கு எதிராக இஸ்லாமிய மதத்தினரை தீவிரவாதிகளாக மாற்றியது,இந்தியா பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்றது,தற்போது இந்தியாவுக்கு எதிராக சீனாவை கொம்பு சீவுவது. . . என எப்போதுமே அழிவு அரசியலை உலக மயமாக்கிய அமெரிக்கா சாதாரண நாடாக மாறினால்தான் உலகம் அமைதியடையும்)

மேலே கொடுக்கப்பட்டிருப்பது இரவு நேரத்தில் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தியாவின் நிஜப் புகைப்படம்.(உங்கள் வீடு தெரியுதா?)