RightClick

பணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்
தங்கத்தை விட்டெறிபவன், செம்பை பொறுக்கியெடுக்கும் படி ஆகும் நாள் விரைவில் வரும்.

ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு.

உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான்.

பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.

பொருளுக்கு மனிதன் அடிமை;பொருள் யாருக்கும் அடிமையில்லை.

அழகு வல்லமையுடையதுதான்.ஆனால்,அதைவிட சர்வ வல்லைமை யுடையது பணம்தான்.

செல்வச் செருக்குடையவர்கள், தங்களுடைய உடமைகளை மட்டுமல்ல;உள்ளத்தையும் அடமானம் வைக்கத் தயங்கமாட்டார்கள்.

உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற!
அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.

செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்திறமையைப் பொறுத்தது.

செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குவதே அதிகச் செலவும்,ஊதாரித்தனமும் ஆகும்.

அனுபவிக்கிற வசதியில் சிறிது குறைந்தாலும், சிலர் தாங்கள் ஆண்டியாகிவிட்டதாகவே நினைக்கிறார்கள்.

ஊதாரி தன் வாரிசையே கொள்ளையடிக்கிறான்.கஞ்சன் தன்னையே கொள்ளையடிக்கிறான்.

தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு.

இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (ஆளுமைத்திறனுடன்) வளர்ப்பதில்லை.அவர்கள் வளர பணம் மட்டுமே கொடுத்து உதவுகிறார்கள்.பணத்தின் குணம்,அதன் மதிப்பு,அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை சொல்லித்தருவதே இல்லை.அதனால்தான்,பொறுப்புள்ள குடும்பங்கள் இன்று உருவாகுவது இல்லை.(இந்த பழமொழிக்கு மார்வாடிகள்,சேட்டுகள் விதிவிலக்கு)

லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை.சேமிப்பதால் மட்டுமே !

ஒருமுறை சேமித்த பணம் , இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம்.

முதுமைக்காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்காலச்சிறைக்குச் சமம்.

எட்டாம் தேதியில் பிறந்து இந்த உலகத்தில் தலையெழுத்தை மாற்றிக்கொண்டிருப்பவர்கள்
நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த தேதி ஜனவரி 17.
இந்துக்களின் விடிவெள்ளி இயக்கம் ஆர்।எஸ்।எஸ்।இந்த ஆங்கில எழுத்துக்களின் கூட்டுத் தொகை எட்டு।இதனால் தான் இந்த இயக்கத்தின் நிஜமான நோக்கம் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது।ஆனால்,இந்த இயக்கம் இன்று உலகின் மிகப்பெரிய ஒரே சுயச்சார்புள்ள தொண்டர்
இயக்கம் என்ற புகழ் பெற்றுள்ளது।
அமெரிக்க உளவுத்துறையான சி।ஐ।ஏ।வால் ஆராயப்படும் முதல் அரசியல் சாராத இயக்கம் ஆர்।எஸ்।எஸ்।மட்டுமே।இன்று ஆர்।எஸ்।எஸ்।உலகில் 100நாடுகளில் வளர்ந்துவருகின்றது।இந்து மதத்தின் பாதுகாப்பு மற்றும் புனர்நிர்மாணம் செய்யும் தலைசிறந்த இயக்கம் ஆர்।எஸ்।எஸ்।ஆகும்।இந்த இயக்கத்தின் செயல்பாடுகள்,லட்சியங்கள்,வழிமுறைகளை ஒருவன் தெரிந்துகொள்ளவே ஒருவருக்கு ஒரு வருடம் அகும்.

நடிகை ரோஜாவின் பிறந்த தேதி நவம்பர் 17.

கடவுள் இல்லை;இல்லவே இல்லை என சத்தியம் செய்து இந்துமதத்தினை புதுப்பித்தவர் ராமசாமி நாயக்கர் எனப்படும் ஈ.வே.ரா.அவர்கள் பிறந்ததும் ஒரு 17 ஆம் தேதியில் தான்.

தமிழ்நாடு அரசின் பாரன்சிக் துறையில் பணிபுரிந்து கொண்டே அரசியல்கட்சி ஆரம்பித்த அரசியல்வாதி தொல்.திருமாவளவன் பிறந்தது ஆகஸ்டு 17.

இலங்கைத் தமிழர்களின் தலைவர் வே.பிரபாகரன் பிறந்தது டிசம்பர் 26.

கேரளக்கிளி அசின் பிறந்தது 8 ஆம் தேதியில்.கேரளாவில் பிறந்து தென் இந்திய நாட்டையே மயக்கும் அரபுக்கடல் அப்சரஸ்
நயன் தாரா பிறந்தது 26 ஆம் தேதியில்!

பிரும்மாண்ட இயக்குநர் என்ற பெயர் எடுத்திருக்கும் ஷங்கர் பிறந்தது ஒரு 26 ஆம் தேதியில்!
ஆந்திரா மாநிலத்தில் பிரஜா ராஜ்ஜியம் கட்சியை ஆரம்பித்த நடிகர் சிரஞ்சீவி முக்கிய முடிவுகள் அறிவிப்பது் எட்டாம் தேதிகளில்தான்!இவர் குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் உணர்ந்தவர்.

சரி! இவர்களின் விபரத்தால் என்ன பயன் எனக் கேட்கிறீர்களா?

கர்மவீரர் காமராஜர் அவர்களால் மதிய உணவுத்திட்டம் பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதை தமிழ்நாடு முழுக்கப்பரவலாக்கியவர் எம்.ஜீ.ஆர்.அநேகமாக 1979 ஆம் வருடம் இந்த முழுமையான சத்துணவுத்திட்டம் தமிழகம் முழுக்க அறிமுகப்படுத்தப்பட்டது என நினைக்கிறேன்.(சில வருடங்கள் முன்பு அல்லது பின்பு இருக்கலாம்)
இன்று வரை இந்தத் திட்டத்தை யாராலும் ரத்து செய்ய நினைக்கவும் இயலாது।இந்தத் திட்டத்தால் எத்தனை கோடி தமிழ்க்குழந்தைகள் உயிர் பிழைத்தது என்பது கடவுளுக்கே தெரியும்।

(ஆக,பலரின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி 8,17,26 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு உண்டு.இந்த மூன்று தேதிகளும் சனியின் முழு அம்சத்துடன் இயங்குவதால் இந்த தேதியில் பிறப்பவர்கள் பலரது தலையெழுத்தையே அடியோடு மாற்றப்பிறந்தவர்கள்!)

நடிகை ரோஜா ஆணைப்போல வேட்டி சட்டை போட்டு தமிழ்ப்படங்களில் நடித்தார்.இன்றும் இந்த நடைமுறைப் பின்பற்றப்படுகிறது.

பிராமணர்கள் கடவுளின் பெயரைச் சொல்லி கோயிலிலும்,ஆன்மீகத்திலும் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.பிராமணர்களை எதிர்த்தால் ஜாதி வெறியன் என்ற பெயர் வரும்.ஆகவே,இந்த பிராமணர்கள் யாரைச் சொல்லி ஏமாற்றிவருகிறார்களோ,அந்த யாரையே இல்லை எனக்கூறிவிட்டால் தமிழன் சிந்திக்கத்துவங்குவான் .சுயமரியாதையுடன் திகழுவான்.அதனால்தான் கடவுள் இல்லை என நான் பிரச்சாரம் செய்கிறேன் என ஈ.வே.ரா. தனது கருத்தை ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பது, ‘கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற வெளிநாட்டு மதங்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை.எனது இந்து மதம் இந்த மூடநம்பிக்கைகளால் அழிந்துபோய்விடக்கூடாது.அதற்காக என்னால் முடிந்த சீர்திருத்தம் செய்கிறேன்’ என அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.அவர் இந்த பிரச்சாரம் செய்து 30 வருடங்கள் ஓடிவிட்டன.

இன்று?!
நான் கோவிலுக்கெல்லாம் போவதில்லை என சும்மா சாதாரணமாக ஒருவர் சொன்னாலே அவரிடம் , ‘ஏன்பா நீ நாத்திகவாதியா?’ என கேட்குமளவுக்கு ஈ.வே.ரா.வின் பிரச்சாரம் அமைந்துள்ளது.

(17 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அனைவரும் சீர்திருத்தவாதிகள்.இவர்கள் மதவிஷயங்களில் ஈடுபாடு கொண்டால் அளவற்ற எதிர்ப்பை சம்பாதிப்பார்கள்.ஆனால்,இவர்களது சீர்திருத்தம் பல நூற்றாண்டுகள் கடந்தும் பரவிக்கொண்டே இருக்கும்)தமிழ்சினிமாவில் பிரம்மாண்டம் என்பதை நவீனமயமாக அறிமுகப்படுத்தியவர் ஷங்கர்.ஒரு பாடலுக்கு ஒரு கோடி ரூபாயைச் செலவிடும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்.இவரது ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்தாலே 10 பி.எச்.டி.பட்டம் வாங்கலாம்.

எம்.ஜி.ஆர்.(17) அவர்கள் பிரபாகரன்(26) மீது பாசம் வைத்திருந்தார்.தற்போது திருமாவளவன்(17), பிரபாகரன் மீது அக்கறை கொண்டுள்ளார்.

8 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் தான் ஒரு அனாதை என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்।எனக்கென இந்த பூமியில் யார் இருக்கிறார்கள் என ஏக்கத்துடன் இருப்பர்। ஆனால் இவர்களைப் போல வேறு யாரும் கடுமையாக உழைப்பது அரிது.

இவர்கள் நண்பர்களை பாதிப்பார்கள்.அதாவது,இவர்களது சில ஆளுமைத்திறனை இவருடன் பழகுபவர்கள் பின்பற்றத்துவங்கி மள மளவென முன்னேறிக்கொண்டே இருப்பர்.இவர்கள் மிக மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுவர்.

இவர்களுக்கு 1 ஆம் எண்காரர்கள் போல வேறு யாரும் உதவ முடியாது.

ஒருவரது ஆயுள்பலம் அதிகரிக்க ஆலோசனைகள்
1.தினமும் காலையும், மாலையும் அரைமணிநேரத்திற்கு குறையாமல் ப்ராணயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி செய்துவருதல்.(இந்த ப்ராணயாமப்பயிற்சியை இராமகிருஷ்ணமிஷன் கிளைகளிலும், வேறு பல இந்து மத ஆன்மீக மடங்களிலும் பயிற்றுவிக்கிறார்கள்)

இருபது நிமிடம் தன்னை மறந்த தியானம் செய்யவேண்டும்.(இதன் பெயர் ஆழ்நிலைதியானம்.நமது ஆன்மீகக்கடலில் ஆழ்நிலை தியானம் பயிற்றுவிக்கும் தமிழ்நாட்டு இடங்களை டிசம்பர் 2008 ஆம் வலைப்பூக்களில் குறிப்பிட்டுள்ளோம்..அல்லது http://www.tm.org/ என்ற ஆங்கில இணைய தளத்தில் நீங்கள் உங்கள் பகுதியில் ஆழ்நிலை தியானம் சொல்லித்தரும் இடத்தைக் கேட்டால் மின் அஞ்சல் அனுப்புவார்கள்.)
(இந்த ஆழ்நிலை தியானம் செய்யத்துவங்கிய சில நாட்களில் நமது தேவையற்ற கோபம்,ஆவேசம்,பொறாமை,ஆத்திரம்,வறுமை,பயம்,கூச்சம், தேவையற்ற வெட்கம், பதட்டம்,நோயின் வேதனைகள் எல்லாமே காணாமல் போயிருக்கும்)

2.கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் காலையும்,மாலையும் குறைந்தது 32 தடவை ஜபிக்கவேண்டும்.வீட்டில் பூஜை அறை அல்லது அருகில் உள்ள கோவிலில் ஜபிக்கலாம்.

த்ரியம்பகம் யஜாமஹே
ஸீகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர்
முக்ஷிய மாம்ருதாத்

3.பல ஜோதிடர்களிடம் உங்கள் பிறந்த ஜாதகத்தை காண்பிக்காமல் இருத்தல்

(பல ஜோதிடர்கள் சமூகப் பொறுப்புடன் இருப்பதில்லை.சிலருக்கு கருநாக்கு இருக்கும்.ஆனால் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள்.அந்த கருநாக்கு ஜோதிடர் என்ன சொல்லுவார் என்பதை உணருங்கள்.)
(தமிழ்நாட்டில் ஒரு நப்பிக்கூட்டம் இருக்கின்றது.இவர்கள் கையில் எப்போதும்,இவர்களின் பிறந்த ஜாதகக்கட்டம் இருக்கும்.ஒரு நாளுக்கு ஒரு முறையாவது ஜாதகம் யாரிடமாவது ஓசியில் பார்க்காவிட்டால் இவர்கள் தூங்கமாட்டார்கள்.எனக்கு ஜோதிடம் தெரியும் என எவர் சொன்னாலும் போதும்.இந்த ரக மனிதர்கள் உடனே அவர் காலில் விழுந்தாவது தனக்கு ஜோதிடம் சொல்லும்படி கெஞ்சுவர்.இப்படி வாழ்நாள் முழுக்கப்பார்த்துக்கொண்டே இருப்பவர்கள் இருக்கிறார்கள்.ஒரு டீக்காக இவர்களுக்கு ஜோதிடர்கள் ஜோதிடம் பார்க்கும் கூத்தும் நடக்கிறது.இது மாபெரும் தவறு)

சனிப்பரிகாரஸ்தலங்களில் பழமையானது ஏரிக்குப்பம்
கோவில்களில் இருக்கும் தெய்வீகவிக்கிரகங்கள் அதன் அடியில் புதைக்கப்பட்டிருக்கும் செப்புயந்திரத்தகடுகளால்தான் தெய்வீகசக்தி பெறுகின்றன.இந்த தெய்வீகசக்திகொண்ட தகடுகள் பல லட்சம் தடவை மந்தர உரு ஏற்றப்பட்டு கோவில் மூலஸ்தானத்தில் பதிக்கப்படுகின்றன.இதன் மீது தான் தெய்வீகசிலைகள் ஸ்தாபிக்கப்படுகின்றன.

ஆனால்,கல்லில் யந்திரத்தகடு ஒன்றை சித்தர்கள் பொருத்தி சுயம்புசனீஸ்வரரை வழிபட்டஸ்தலமே ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரபகவான் திருக்கோவில்.ஏரிக்குப்பம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் களம்பூர் அஞ்சலில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு ஆரணியிலிருந்து நடுக்குப்பம் வழியாக படவேடு கிராமத்திற்கு செல்லும் வழியில், ஆரணியிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் உள்ளது.
வேலூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ள சந்தவாசல் கிராமத்திலிருந்து ஆரணிக்கு வரும் வழியில் 3 கி.மீ.தூரத்தில் உள்ளது.இந்த கோவில் போகர் 3000 என்ற வைத்திய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சுயம்புசனீஸ்வரனாகிய இவர் ஏராளமான அற்புதங்களை செய்து வருகிறார்.
ஏரிக்குப்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வலது கை மூட்டு விலகி சிரமப்பட்டு வந்தார்.இந்தக் கோவிலுக்கு வந்துவழிபட்டு வந்ததால்,குணமாகி பழையபடி கை செயல்படத்துடங்கியுள்ளது.

சந்தவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கால் வீங்கி நடக்க முடியாமலும்,கால்களை மடக்க முடியாமலும் பாதிக்கப்பட்டு இருந்த போது, ஒரு உதவியாளருடன் சனிக்கிழமைதோறும் வந்து வழிபட்டுக்கொண்டே இருந்தார்.இன்று அவரது கால்கள் குணமடைந்து யாரது உதவியுமின்றி நடமாடத்தொடங்கிவிட்டார்.

திருமணமாகாத பெண்கள் 9 வாரம் (சனிக்கிழமைதான்) இங்கே வந்து ஒவ்வொரு வாரமும் 9 விளக்குகள் ஏற்றி வழிபட்டுவந்துள்ளனர்.அவர்களுக்கு திருமணம் நடந்துவருகின்றது.

சரி! ஏரிக்குப்பம் சனிபகவானை எப்படி குளிர்விக்கலாம்?

சனிபகவானின் காயத்ரி மந்திரத்தை சனிக்கிழமை,சனிப்பிரதோஷம் நாட்கள்,சனிப்பெயர்ச்சிநாட்கள், 8,17,26 ஆம் தேதிகளில் இங்குவந்து பீடத்தில் அமர்ந்து 108 முறை ஜபிக்கலாம்.
ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தக ப்ரசோதயாத்

நீலப்பட்டு வாங்கி சனிபகவானுக்கு சாற்றலாம்.

நீல உடைகள் அணிந்துவந்து சனிபகவானை வழிபடலாம்.

கறுப்பு எள் மற்றும் கருப்பட்டி அல்லது சர்க்கரை கலந்த பண்டங்களை இடித்து சனிபகவானுக்கு படைத்து பிறருக்கு பிரசாதமாக வழங்கலாம்.

சனிபகவான் முன்பாக நல்லெண்ணெய்,நெய்,இலுப்பை எண்ணெய் கலந்து சிட்டி விளக்கில் திரி வைத்து விளக்கேற்றி 9 முறை வலம்வந்து வணங்கலாம்.

கோயிலுக்கு அருகில் உள்ள காக தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபடலாம்.

கோயில் தொடர்பு முகவரி:
சுவாமி ஆர்.சீனிவாசன்
செயலாளர்,ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோவில்,
ஏரிக்குப்பம்-606903.களம்பூர் அஞ்சல்,போளூர் வட்டம்,திருவண்ணாமலை மாவட்டம்.
போன்:04173-229273.93602 23428.

சனிபகவான் எப்படி செயல்படுகிறார்?

சூரியனின் புற ஊதாக்கதிர்களே சனி பகவான் ஆவார்.ஒரு மனிதனுக்கு ஏழரைச்சனி அல்லது அட்டமத்துச்சனி காலங்களில் இந்த புற ஊதாக்கதிர்கள்,இந்த மனிதனின் உடலில் எதிர்மறை அதிர்வுகளை (Negative Vibrations) உருவாக்கி, மந்தம், மறதி, வெறுப்புணர்வு,கோபம்,பகை,விரையம் இவற்றால் ஸ்தம்பிக்கவைக்கிறார் என்பதை இன்றைய நவீன அறிவியல் கண்டறிந்துள்ளது.

26.6.2009 முதல் 21.12.2011 வரை கன்னிராசிக்காரர்களுக்கு ஜன்மச்சனியும், கும்பராசிக்காரர்களுக்கு அட்டமச்சனியும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இந்த ராசியைச் சேர்ந்த ஆண்,பெண்,குழந்தைகள்,அலிகள்,நாடுகள்,மாநிலங்கள்,நகரங்கள் என அனைவருக்கும் மேற்கூறிய குணாதிசயங்கள் உருவாகியிருக்கும்.

நன்றி:ஜோதிட அரசு,பக்கம் 12,ஜோதிட மாத இதழ் அக்டோபர் 2009.

நவகைலாசங்கள் இருக்கும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்
எப்படி கும்பகோணம் பகுதியில் நவக்கிரகத்தின் கோயில்கள் அமைந்துள்ளனவோ,அதே போல,தென் தமிழகத்தில் நவக்கிரகங்கள் சிவபெருமானின் அம்சமாக கோயில் கொண்டுள்ளன.

சித்தர்களின் தலைவர் அகத்தியர் வாழும் பாபநாசம் மலையடிவாரத்திலிருந்து தாமிரபரணி நதிக்கரையோரம் 97 கி.மீட்டர்கள் தூரத்துக்குள் இந்த நவக்கிரகஸ்தலங்கள் அமைந்துள்ளன.

இவை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களால் பெரும்பாலும் வழிபாடு செய்யப்பட்டுவருகின்றன.ஏனெனில்,இந்த கோயில்கள் பற்றி சிலருக்கே தெரிந்திருக்கின்றன.

பொதிகைமலை எனப்படும் பாபநாசம் மலையில் பாணதீர்த்தம் அருவியின் அருகில் சூரியபகவானின் அம்சமான சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்தக்கோவில் காலை மணி 6.30 முதல் 11.30 வரையிலும்,மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர்கள் திரு.சதாசிவபட்டர் மற்றும் திரு.ஹரிகரசுப்பிரமணியன் விக்கிரமசிங்கபுரம் தெற்குமாடவீதியில் வசிக்கின்றனர்.


சேரன்மகாதேவியில் சந்திரபகவானின் அம்சமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.இக்கோவில் காலை 7 முதல் 9 வரையிலும்,மாலை 5.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.சந்துரு,சேரன்மகாதேவியில் அக்ரஹாரம் தெருவில் வசிக்கிறார்.இவரது செல்:9442226511.

கோடகநல்லூரில் செவ்வாய்பகவான் சிவபெருமானாக எழுந்தருளிவருகிறார்.இந்தகோவில் காலை 7 முதல் 8.30 வரையிலும்,மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.சுரேஷ் சிவாச்சாரியார் அவர்களின் போன்:04534-261849.

குன்னத்தூரில் ராகுபகவானின் அம்சத்துடன் இருப்பவர் சிவபெருமான்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 6 வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர் திரு.ராமச்சந்திரன் என்ற சந்துரு திருவேங்கடநாதபுரம் என்ற இடத்தில் வாழ்கிறார்.இவரது செல்:9442018567,9442018077.

முறப்பநாடு என்ற இடத்தில் உள்ள சிவபெருமானே குரு பகவானாக அருள்பாலிக்கிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் பெயர்:திரு.செல்லப்பா ஐயர்,இவரது செல்:9842404559.

ஸ்ரீவைகுண்டத்தில் சிவபெருமான் சனிபகவானின் அம்சமாகத் திகழ்கிறார்.ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருப்பவர் பெருமாள்.அவரைத் தாண்டி ஒரு தெரு தள்ளிதான் சிவபெருமான் இருக்கிறார்.நாளை 31.10.2009 சனிப்பிரதோஷநாள்.நாளை ஒருநாள் மட்டும் மாலை 4.30 முதல் 6.00 வரை சிவ வழிபாடு செய்தால் 5 வருடங்களுக்கு தினமும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது சைவசித்தாந்த விதிமுறையாகும்.
இக்கோவில் காலை 7 முதல் 10 மணி வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.கே.சிவகுருபட்டர்.கோவில்வாசல்.போன்:04630-252117.


தென் திருப்பேரையில் புதன் பகவானின் அம்சமாக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 8 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.கமலேஷ் பட்டர் செல்:9365889291.

கேது பகவானின் அம்சம் பெற்ற சிவபெருமான் ராஜபதியில் இருக்கிறார்.இக்கோயில் ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையில் இருக்கின்றது.இக்கோவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.இதன் பூஜகர்கள் திரு.லட்சுமணன்,திரு.ஜோதி செல்:9787382258,9942062825.

சுக்கிரபகவானின் அம்சமான சிவபெருமான் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் வாசம் செய்கிறார்.இக்கோவில் காலை 7.30 முதல் 9.30 வரையிலும்,மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர்கள் திரு.குமாரசுவாமிபட்டர் மற்றும் திரு.ஈஸ்வரபட்டர் செல் மற்றும் போன்:9486178063,04639-239319.


பாபநாசத்திலிருந்து சேரன்மகாதேவி 22 கி.மீதூரத்திலும்,
சேரன்மகாதேவியிலிருந்து கோடகநல்லூர் 15 கி.மீ.தூரத்திலும்,
கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் 12 கி.மீ.தூரத்திலும்,
குன்னத்தூரிலிருந்து முறப்பநாடு 18 கி.மீ.
தூரத்திலும்,
முறப்பநாட்டிலிருந்து ஸ்ரீவைகுண்டம் 20
கி.மீ.தூரத்திலும்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தென் திருப்பேரை 6
கி.மீ.தூரத்திலும்,
தென் திருப்பேரையிலிருந்து இராஜபதி 4
கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளன.

ஆக மொத்தம் 97 கி.மீ.தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கேதுபகவானின் கோவில்நவக்கிரகங்களில் ராகுவை விட பலம் மிக்கக்கிரகம் கேது.
ஞானமார்க்கத்தில் அளவற்ற ஈடுபாட்டைத்தருவது கேதுபகவானே!
கேதுபகவானின் அகில இந்தியஸ்தலம் ஆந்திராவில் உள்ள திருக்காளஹஸ்தி என்ற சிவாலயம் ஆகும்.
தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் உள்ள கீழப்பெரும்பள்ளம் ஆகும்.
ஸர்ப்ப தோஷம்,மாங்கல்ய தோஷம் முற்பிறவியில் செய்த காமம் சார்ந்த பாவங்களாலும்,நமது முன்னோர்கள்(தாத்தா மற்றும் அப்பா அம்மா,மற்றும் அவர்களின் முன்னோர்கள்) செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிக்கவே குழந்தை பிறக்கின்றன.
இந்த தோஷமுள்ள குழந்தைகள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பர்.

தென் தமிழ்நாட்டுமக்கள் கேதுபகவானை வழிபடுவதற்காக ஒரு புராதன ஸ்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகில் அமைந்துள்ளது.
ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையே ராஜபதி என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது.இங்குள்ள சிவபெருமானின் அம்சமாக கேதுபகவான் இருக்கிறார்.முற்காலத்தில் அரசர்கள் போரில் வெற்றி பெறுவதற்காக இந்த கேதுபகவானை வழிபட்டிருக்கின்றனர்.தற்காலத்தில்,அரசியல்வாதிகள் அரசியல்வெற்றிபெற இவரை அடிக்கடி வழிபட்டுவருகின்றனர்.

சிதிலமடைந்த இந்த கோவிலை புனர்நிர்மாணம் செய்ய சிவபக்தர்கள் ஒன்றிணைந்து கைலாஷ் அறக்கட்டளையை உருவாக்கியுள்ளனர்.கி.பி.2010 ஆம் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் செய்ய இருக்கின்றனர்.அன்பளிப்பு வழங்கிட விரும்புவோர் கைலாஷ் அறக்கட்டளை,94/107,தனுஷ்கோடியாபுரம் தெரு,கோவில்பட்டி-628 501.க்கு அனுப்பலாம்.இணையதளம்:www.kailsahtrust.org

கணினிக்கல்வியைத் தேர்ந்தெடுக்க சில ஆலோசனைகள்
கம்யூட்டர் படித்தால் மாதம் ரூ.50,000/-சம்பளம் என தமிழ்நாடு முழுக்க விளம்பரப்போஸ்டர்களை ஆண்டு முழுக்க ஒட்டித்தீர்த்து கம்யூட்டர் படிக்க ஏராளமான கணினி நிறுவனங்கள் அழைக்கின்றன.இது மிகவும் நல்ல விஷயம் தான்.ஆனால் மாதம் அல்ல வாரம் ரூ.50,000/- சம்பாதிப்பது யாரெனில் இந்த கணினி பயிற்சிப்பள்ளிகள் நடத்துபவர்கள்தான்.இதுகூட தப்பில்லை.இந்த பள்ளிகள்,இன்ஸ்டிடியூட்கள் நடத்துபவர்களுக்கு 95% ராகு மகாதிசை நடக்கும்.நிர்வாகச்செலவு 30% மட்டுமே.லாபம் 70%.ஏற்றுமதியில் கூட இவ்வளவு லாபம் கிடைக்காது.ஆனால்,இந்த கணினி பயிற்சிப்பள்ளிகள் நடத்துபவர்கள் சொல்லும் பொய்யால் எத்தனைக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது யாருக்குத் தெரியும்?

இதில் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவ மாணவிகள்,அவர்களின் பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன?
முதலில்,
இரண்டு மாதங்களுக்கு தட்டச்சு எனப்படும் டைப் ரைட்டிங் கற்றுக்கொள்ளவேண்டும்.(டைப்ரைட்டிங்கில் இருக்கும் கீ போடும் கணிப்பொறி கீபோடும் ஒரே விதமான வடிவமைப்புதான்)ஆங்கிலத்தை பாரா பாராவாக சிறு பிழையின்றி டைப் செய்யும் திறமை வந்தபின்னர் (டைப்ரைட்டிங் படிப்பில் தேர்வு அவ்வளவு அவசியமில்லை.அரசுப்பணியில் சேருபவர்கள் மற்றும் ஸ்டெனோடைப்பிஸ்டு வேலைக்கு மட்டும் டைப் தேர்வுகள் அவசியம்)அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.

அதுதான்
ஸ்போக்கன் இங்கிலீஷ் எனப்படும் ஆங்கிலப்பேச்சுப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும்.இப்பயிற்சி 4 மாதங்கள் வரை இருக்கும்.
ஆங்கிலத்தைப் பொருத்தவரை இக்காலத்தில் பெரும்பாலான கம்யூட்டர்பயிற்சி நிறுவனங்களே இலவச ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியை நடத்துகின்றன.இதில் 10% கூட தரம் இருப்பதில்லை என்பது நேரில் கண்ட அனுபவ உண்மை.
ஸ்போக்கன் இங்கிலீஷ் என தனியாக நடத்துபவர்களின் அனுபவம் கம்யூட்டர் பயிற்சிநிலையங்களில் இருப்பதில்லை.

ஆங்கிலமொழியைப் பொருத்தவரை,ஒரு நாளுக்கு புதிதாக 300 புதிய ஆங்கில வார்த்தைகள் உருவாகின்றன.ஒருவருடத்துக்கு சுமார் 1,20,000 புதிய வார்த்தைகள் ஆங்கிலமொழியில் சேருகின்றன.இன்று 26.10.2009 ஆங்கிலமொழியில் இருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை 5,00,000.ஆனால்,இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் கற்கவேண்டியது வெறும் 3000 ஆங்கில வார்த்தைகள் மட்டுமே!
வெறும் 20 நாளில் சரளமாக ஆங்கிலம் ஒருவரால் பேச ஆரம்பிக்க முடியும்.வெறும் 100 நாளில் சரளமாகவும்,முழுமையாகவும் ஆங்கிலம் பேசமுடியும்.ஆனால்,இந்த சாதனையை எட்ட 30 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் அவர் குறைந்தது 10ஆம் வகுப்பு முடித்திருக்கவேண்டும்.படித்துக்கொண்டிருப்பவராக இருந்தால்,9ஆம் வகுப்பு முடித்திருக்கவேண்டும்.தற்காலத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளில் பலர் வெறும் 100 நாள் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியால் சரளமாக ஆங்கிலம் பேசிவிடுகின்றனர் என்பது பெருமைக்குரிய உண்மை.
ஸ்போக்கன் இங்கிலீஷ் பயில சரியான தருணம் 9ஆம் வகுப்பு முடிக்கும்போதுதான்.(பல இடங்களில் 6 ஆம் வகுப்பிலேயே சேர்த்துவிடுகின்றனர்.)
நாம் தமிழில் என்ன நினைக்கிறோமோ,அதை ஆங்கிலத்தில் சுயமாக பேசவும் எழுதவும் முடிகின்றவரை ஆங்கிலம் பயிலவேண்டும்.

இதற்குப்பிறகே,கணினிப்பயிற்சியில் சேரவேண்டும்.இந்த வரிசைப்படி,பயின்றுகொண்டு வந்தால் கம்யூட்டர் எனப்படும் கணினிப்பயிற்சியில் சேரும் மாணவ மாணவிகள் மிகவும் திறமைசாலிகளாக கற்பார்கள்.இந்தத்திறன்கள் பள்ளிப்படிப்புமுடித்து டிப்ளமோ அல்லது டிகிரி முடிக்கும்போது அவர்களுக்கு காம்பஸ் இன் டர்வியூவிலேயே மிகச்சிறந்த வேலை கிடைக்கும்.இதற்குப்பெயர்தான் சாஃப்ட் ஸ்கில் லேபர் எனப்படும் தனித்திறன் நிறைந்த பணியாளர்.இந்தத் தகுதியைத் தான் இன்றைக்கு சென்னையில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

அதுவும் எந்த(பள்ளி,பாலிடெக்னிக்,டிகிரி,சர்டிபிகேட்) படிப்பு படித்திருந்தாலும்,முதலில் எம்.எஸ்.ஆபிஸ் கற்பது அவசியமாகும்.

அது முடித்தபின்னர்,படம் வரையும் திறன் உள்ளவர்கள் DTP எனப்படும் டெஸ்க் டாப் பப்ளிஷிங் படிப்பது நன்று.

அக்கவுண்டன் ட் வேலைக்குச் செல்ல நினைப்பவர்கள் கணக்குப்பதிவியல் படிப்பவர்கள்,படித்தவர்கள், பி.காம் படிப்பவர்கள் டேலி படிக்க வேண்டும்.

நிறைய்ய செலவு செய்யும் வசதியுள்ளவர்கள், DTP படித்தப்பின்பு, அனிமேஷன், கிராபிக்ஸ் எனப்படும் வரைகலை கற்கலாம்.

சிவில்,மெக்கானிக்கல்,எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ் படிப்பவர்கள் ஆட்டோகேட் படிக்கவேண்டும்.
ECE,EEE,DCE,DCT படிப்பவர்கள் கம்யூட்டர் பழுதுநீக்குதல் எனப்படும் கம்யூட்டர் ஹார்டுவேர் கற்கவேண்டும்.அதன்பிறகு,நெட்வொர்க் கற்கலாம்.அதற்குப்பிறகு,சைபர்க்ரைம் கற்கலாம்.அல்லது ஐ.பி.எம்மின் ஏ.எஸ்.440 கற்கலாம்.

சாப்ட்வேர்துறைக்குச் செல்ல விரும்புவர்கள் சி.சி# ,விசுவல் பேசிக் கற்க வேண்டும்.


ஆனால்,இந்த அடிப்படை விழிப்புணர்வு எத்தனை பேருக்குத்தெரியும்?

பிரம்மாண்டமான விளம்பரம் செய்யும் கம்யூட்டர்பயிற்சிப்பள்ளிகள்,இன்ஸ்டிடியூட்கள் செய்வது என்ன தெரியுமா?
PGDCA/DCA/DCP இவற்றில் ஏதாவது ஒன்று படித்தால் மட்டுமே கம்யூட்டரே படித்ததாக அர்த்தம் என ஒரே தவணையில் ரூ.8000/- அல்லது ரூ.10,000/- கறந்துவிடுகின்றனர்.இதனால் என்ன எனக்கேட்கிறீர்களா?

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சி தேவையா?
எல்லா சாப்ட்வேர்களையும் கொஞ்சம்,கொஞ்சம் படித்து எதிலும் தேர்ச்சி பெறாமல் போவதுதான்.இதை எந்த பெற்றோரால் உணரமுடியும்?

பாவம் மாணவர்கள்,அவர்களின் பெற்றோர்கள் ஏழையாக இருந்தால் காட்டையும்,மாட்டையும் விற்று கம்யூட்டர் படிக்கவைக்கின்றனர்.

சில நகரங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சி நடைபெறுகிறது.பாடங்கள் என்ன தெரியுமா? எம்.எஸ்.ஆபீஸ்,சி.,மட்டுமே.

சரி பி.ஈ. அல்லது டிப்ளமோ படித்துவிட்டு நேராக சென்னைக்கு வேலைதேடிச் சென்றால் அங்கே ஆங்கிலத்தின் முக்கியத்துவம் புரிகின்றது.அங்கேயே ஆங்கிலம் மொழியைக் கற்கச் சென்றால் ஸ்போக்கன் இங்கிலீஷின் மாதக்கட்டணம் ரூ.10,000/-மட்டுமே!

ஒரு லட்சியத்தை அடைய, ஒருவருக்கு இருக்கவேண்டிய இயல்பான குணங்கள்1)தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம்
2)கற்பனைத் திறமையுடன் எதையும் பார்க்கும் குணம்
3)ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழுங்குபடுத்தி அமைக்கும் குணம்
4)சிந்தனையைச் சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமுடன் செயல்படுவது
5)நேரம்,பணம் இந்த இரண்டையும் திட்டமிட்டு செலவு செய்வது
6)எப்போதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் மனதை வைத்திருப்பது
7)தன்னை அடக்கி திருத்திக்கொள்ளுதல்

நன்றி:எனது கி.பி.1992 ஆம் ஆண்டு டைரி

மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி?

அ)உங்களுக்கென்று உள்ள கருத்துக்களைக்கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.
ஆ)வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.
இ)பிற மனிதர்கள் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கவும்.
ஈ)எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு.அதற்காக பிறரை வெறுக்க வேண்டாம்.

உ)குறைவாகப் பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்

ஊ)ஒருவரிடம் கேள்வி கேட்டப்பின் அவர் என்ன கூறுகிறார் என்பதை பொறுமையாக கவனியுங்கள்.நீங்களே உடனே விடை கூற முற்படாதீர்கள்.

எ)பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்க வேண்டாம்.பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்க அனுமதிக்காதீர்கள்.

ஏ)ஒருவருக்கு ஓர் உதவியை செய்யும்முன், அதில் சிறிது சந்தேகம் இருந்தாலும், அதைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.

ஐ)(உங்களிடம் பணிபுரிவர்களிடம்) முடிவு செய்தல், செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் முழுச்சுதந்திரம் கொடுங்கள்.

ஒ)மற்றவரின் குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.இதனால் அவர்களிடம் நீங்கள் நன்மதிப்பு பெற முடியும்.

ஓ)ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்.போலியான பாராட்டுக்களை வாரிவிடவேண்டாம்.

ஒள)தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள்.மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஃ)உங்களைச் சுற்றியிருப்பவர்களே உங்கள் கூட்டாளிகள்.(உங்கள் உலகமே அவர்கள்தான்)அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ளவேண்டாம்.

க) உங்களுக்குத் தெரியாவிட்டால், உரியவரிடம் உண்மையைச் சொல்லிவிடுங்கள்.தெரியும் என்ற நடிப்பு வேண்டாம்.
ங)தவறிழைத்தால் அதை ஒப்புக்கொள்ளத்தயங்காதீர்கள்! இதனால் மற்றவர்களுக்கு உங்களைப் பிடித்துப்போகும்.
ச)வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.ஆலோசனை தருபவர்:மனநலப் பேராசிரியர்,ஹார்வார்டு பல்கலைக்கழகம்,மனோதத்துவத்துறை.

சுய கவுரவத்துடன் வாழ்வதற்கு


 ஒரு வழிகாட்டி புத்தகம்:விழிமின், எழுமின்.வெளியீடு:விவேகானந்தா கேந்திரம்,கன்னியாகுமரி.விலை ரூ.25/-

^^இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.அப்படி வாழ்வதற்கு முதலில் தேவை தனது முன்னோர்களைப் பற்றிய பெருமைகளை முழுமையாக அறிவதே!
(இன்றைய பாடத்திட்டம் இங்கிலாந்தையும்,அமெரிக்காவையும் புகழ்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.அதே சமயம்,நமது முன்னோர்கள் எதற்கும் லாயக்கிலாதவர்கள் என்ற மாய பிம்பத்தை கி.பி.1947 முதல் உருவாக்கிவிட்டது.அதெல்லாம் பொய் என்பதை நிரூபிப்பதே ஆன்மீகக்கடலின் நோக்கம்)

^இப்போது இந்த புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:
‘உத்திஷ்ட ஜாக்ரத ப்ராப்ய வாரன்னிபோதத’ இந்த சம்ஸ்க்ருத வாசகம் கட உபநிஷத்தில் இருக்கின்றது.இந்த வாசகத்தை இந்து தேசத்தின் நவீன அல்டிமேட் ஸ்டார் சுவாமி விவேகானந்தர் அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.

இதன் தமிழ் அர்த்தம் ‘உன்னுடைய லட்சியத்தை அடையும் வரை சிறிதும் அயராமல் உழை’ என்பதாகும்.

^இந்து தீர்க்கதரிசிகள் எதிர்காலத்தில் (கி.பி.3000 க்கும் மேல்) நடக்க இருக்கும் சம்பவங்கள் அனைத்தையும் குறித்து வைத்தனர்.அதைப் புரிந்து கொண்டு பாராட்டவே மேல்நாடுகளுக்கு பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

நமது பாரத நாடு சீரழியக்காரணம் நமது புராதன இந்து மரபு மற்றும் சட்டதிட்டங்களை கடைசிவரைப் பின்பற்றாததுதான்.

^அன்பைப் பிரவாகமாக வெளிப்படுத்திய ஈசா எனப்படும் யேசுகிறிஸ்து’ ‘உனது எதிரியையும் ஆசிர்வாதி.உனது வலது கன்னத்தில் உன்னை ஒருவன் அடித்தால் நீ அவனிடம் உனது இடது கன்னத்தைக்காட்டு’ என போதித்தார்.

இந்துக்களின் வேதநூலான பகவத்கீதையில், கிருஷ்ணபரமாத்மா, ‘எப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்; உனது எதிரி யாராக இருந்தாலும் அப்பா அம்மா சகோதரன், சகோதரி, தாத்தாவாக இருந்தாலும் நீ அவர்களை அழித்துவிடு.ஏனெனில் போர்க்களத்துக்கு வந்த பின்னர் பாசம் தேவையா?’ என நமக்கு உபதேசம் செய்தார்.

ஆனால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அமெரிக்கா பகவத்கீதையை அப்படியே பின்பற்றிவருகின்றது.
அகிம்சையின் மனித உருவமான புத்தரின் கொள்கையைப் பின்பற்றும் இலங்கை கூட பகவத்கீதையைப் பின்பற்றுகிறது.

நாம், இந்துதேசம் என இந்தியாவை அழைப்பதைக் கூட அவமானமாகக் கருதுகிறோம்.ஆனால்,ஏசு கிறிஸ்துவின் கொள்கைகளை 101% பின்பற்றுகிறோம்.

^வெள்ளைக்காரர்களின் லட்சியம்: தனி மனித சுதந்திரம் (அதனால்தான் அங்கே ஓரினசேர்க்கையாளர்களுக்கு தனி எம்.எல்.ஏ., எம்.பி. இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.)
அதன் மொழி: பணம் திரட்டும் கல்வி (அட நம்ம கல்வித் தந்தைகள் விஸ்வரூபமெடுத்தது இதனால்தான்)
அதற்கு வழி:அரசியல் (இந்தியாவை நாசக்காடாக்குவது அரசியல் என்பது புரிகின்றதா?தேசப்பாதுகாப்பு விஷயத்தில் கூட அரசியல் புகுந்து நாம் அசிங்கப்பட்டுக்கொண்டிருப்பதுதான் அதிகம்)

நமது இந்துதர்மத்தின் லட்சியம்*: முக்தி
அதற்கான மொழி : வேதம் ரிக்,யஜீர்,சாமம்,அதர்வணம்
அதற்கான வழி: துறவு
இந்த வழிமுறை* தற்போது வெளிநாட்டில் பின்பற்றத்துவங்கியுள்ளனர்.


^ஒருவன் போகங்களை அனுபவித்துத் தீர்க்காமல் போனால் அவன் கடவுளை அடையமுடியாது.இது உறுதி.நாம் இன்னும் கிளிப்பிள்ளைகளாக இருக்கிறோம் பல விஷயங்களில்!!!
இதற்குக்காரணம் உடல் பலவீனம்.அப்படி உடல் பலவீனமாக இருப்பதன் ஆதாரம் பலமில்லாத மூளை.

^ நம்மில் ஒருவன் எழுந்து பெரியவனாக முயன்றால் அவனை நாம் அனைவரும் இழுத்துக் கீழே ஒடுக்கிவிடுகிறோம்.ஆனால்,அன்னியன் ஒருவன் நம் அனைவரையும் அடித்து உதைத்தால் பரவாயில்லை.(ஏ! எனது சுயநலமிக்க தமிழினமே! மலேஷியாவிலும், சிங்கப்பூரிலும், வளைகுடாவிலும், இலங்கையிலும் நமது ரத்தங்கள் செத்துக்கொண்டிருந்தும் நமக்குச் சொரணையில்லையா? மானமும் வீரமும் நமது அடையாளம் என்பது இப்போது எங்கே?
ஏ! எனது இந்து இனமே! அமெரிக்காவிடமும் சீனாவிடமும் அவமானப்படுவதற்கா நமது முன்னோர்கள் நம்மை இவ்வளவு பெருமைமிக்க இந்துதர்மத்தில் வளர்த்தார்கள்.
அமெரிக்கா நம்மிடம் ‘நீங்கள் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மின்சார உற்பத்திக்குத் தேவையான அணு மூலப்பொருளை உலகில் எந்த நாட்டிடமும் நான் வாங்கித் தருகிறேன்’ என நம்மிடம் பசப்புவார்த்தை சொல்லி நம்மை அடிமைப்படுத்தியது.
அணுஅயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும்,நமக்கு அணுமின்சார மூலப்பொருள் வாங்கித்தருவதிலிருந்து அமெரிக்கா எஸ்கேப்.ஆக அவனவனுக்கு அவன் காரியம் மட்டுமே முக்கியம்)
^மூன்று இந்துக்கள் ஒன்று சேர்ந்து வெறும் ஐந்து நிமிடம் வரை ஒரு காரியத்தை முடிக்கும் பொறுமை நமக்கு இல்லை.
அந்த ஐந்து நிமிடத்தில் ஒருவனை ஒருவன் தூற்றவும், முந்தவும் செய்வதால்தான் நமது இயக்கங்கள் தோற்றுவிடுகின்றன.

^ஐயமும்,பயமும் நம்மை முட்டாளாக்கும்.முதலில் நம்மிடையே இருக்கும் பொறாமையை ஒழித்துக் கட்டுவோம்.

^நாம் உண்மையில் உண்மைக்காக பணிபுரிந்தால் நமது பாரதம் வெறும் 25 ஆண்டுகளில் சர்வசக்திவாய்ந்த நாடாக மாறிவிடும்.(அப்படி மாறாமல் பார்த்துக்கொள்வதில் காங்கிரஸ்,திக,கம்யூனிஸ்டுகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன)

^இன்றைய கல்வி ஒரு குப்பை.அது திமிரும் அகம்பாவமும் நிறைந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது.மனதை மலரச்செய்யும் வேலை சிறிதும் இல்லை.
பிறரை மட்டம்தட்டும் போக்கு பிற வெளிநாட்டுமதங்களிடமிருந்து நம்மிடம் பரவியது.
மனிதனை மனிதனாக்கும் கல்வியே நமக்குத் தேவை.

^கிழக்கிந்தியக்கம்பெனி நமது இந்துக்கருவூலமான ரிக் வேதத்தை வெளியிடுவதற்கு கி.பி.1750களில் ஒன்பது லட்ச ரூபாய்களை (இன்று கி.பி.2009.இந்தப்பணம் எத்தனை கோடிகள்?) செலவழித்தது.

அதற்கு முகவுரை எழுதி ரிக் வேதத்தை வரிசைபடுத்துவதற்கு 20 ஆண்டுகள் ஆயின.

அதன்பிறகு அவற்றை அச்சிடுவதற்கு 25 ஆண்டுகள் ஆயின.
கி.பி.1000 துவங்கும் வரை இந்து தேசமான நம் பாரதத்தில் ஜாதிக்கொடுமைகள் கிடையாது.எல்லா ஜாதி மக்களும் சமஸ்க்ருதம் பயின்றனர்.பெண்களில் துறவிகள், மகான்கள், மன்னர்கள்,காவலர்கள், ஜோதிடர்கள்,உளவாளிகள்,ரவுடிகள் என அனைவரும் இருந்தனர்.
இஸ்லாம் மதம் நம்மிடம் 800 ஆண்டுகளாக தீராத இம்சை கொடுத்து இங்கே வளர்ந்தது.மதுரை மீனாட்சியம்மன் கோவில் 45 ஆண்டுகள் பூட்டிக்கிடந்தது.
300 ஆண்டுகள் கிறிஸ்தவம் இங்கிலாந்து ஆளுமை என்ற பெயரில் நம்மை செல்லரித்தது.நமது பரந்த மனப்பான்மையால் அது இப்போது செய்யும் அழிவு வேலைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
எப்போது நாம் நமது குழந்தைகளுக்கு நமது இந்துதர்மம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கப்போகிறோம்?
ஒவ்வொரு இந்துவும் இந்த புத்தகத்தைப்படித்தால் விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் பல மடங்கு பெருகும்.
புத்தகம் கிடைக்கும் இடம்:
செயலாளர்,
விவேகானந்த கேந்திரம்,
விவேகானந்தபுரம்,
கன்னியாகுமரி-629702.
போன்:04652-247012.
தொலைநகல் என்ற ஃபேக்ஸ்:04652-247177.
இணையதளம்:www.vkendra.org/centers

இராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் 2009
நவக்கிரகங்களில் மிக மிக சக்தி வாய்ந்த கிரகங்கள் ராகுவும் கேதுவும்.இந்த இரண்டு சர்ப்பக்கிரகங்களில் கேதுவே சர்வ சக்தி வாய்ந்தவர்.

ஞானத்தின் சின்னங்களான கடகராசியும்,மகர ராசியும் இதுவரை கேது ராகுக் கிரகங்களின் பயணத்தை பொறுத்திருந்தன.

கடந்த 18 மாதங்களில் பிறந்த அனைத்து குழந்தைகளும் ஞானத்தின் அம்சங்களாகவே திகழும்.

27.10.2009 அன்று இராகு பகவான் குருவின் வீடான தனுசு ராசிக்கும், அதே நேரம் அதே நாளில் கேது பகவான் புதனின் வீடான மிதுனத்துக்கும் பெயர்ச்சியாகின்றனர்.

இதனால், 27.10.2009 முதல் 18 மாதங்களுக்குள் தனுசு மற்றும் மிதுன ராசிக்காரர்கள் ஒரு முறையாவது காவல்நிலையம் செல்லும் சூழ்நிலை ஏற்படும்.
முறையற்ற உறவில் சிக்குவதற்கு சந்தர்ப்பம் உண்டாகும்.
மூலம் நட்சத்திரம் தனுசு ராசிக்காரர்கள், திருவாதிரை நட்சத்திரம் மிதுனராசிக்காரர்களுக்கு இந்த 18 மாதங்களில் பேய் பிடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.ஏன் எனில், இந்த காலகட்டம் இவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை உண்டாகும்.எனவே,அகால நேரத்தில் அதாகப்பட்டது இரவு 10 மணிக்கு மேல் சுடுகாட்டுப்பக்கம் போகக்கூடாது.
உங்களின் எதிரிகள் உங்களுக்கு மாந்தீரீகப்பாதிப்பு ஏற்படுத்தலாம்.
இந்த பாதிப்புக்கள் ஏற்படாதிருக்க உக்கிரமான பெண் தெய்வத்தை தினமும் வழிபட்டு உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்வது நல்லது.இந்த காலகட்டத்தில் உங்கள் சார்பாக யார் அம்மன் வழிபாடு செய்தாலும், இந்த பரிகாரம் செல்லாது.நீங்கள் மட்டுமே 27.10.2009 முதல் ஒன்றரை ஆண்டுக்கு தினமும் அம்மன் வழிபாடு செய்யவும்.அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.சற்றும் எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு விதத்தில் அவமானப் பட வேண்டியிருக்கும்.
ஒரு சில தனுசு மற்றும் மிதுன ராசியினர் மட்டும் உலகப்புகழ் பெறுவர்.இந்த எதிர்நிலைக்கு அவர்களது பிறந்த ஜாதகத்தில் ராகு கேதுக்களின் நிலை நல்ல நிலையில் இருக்கும்.


விருச்சிகராசிக்காரர்கள் இந்த 18 மாதங்களில் பேச்சை 2000% அளவுக்கு குறைப்பது அவசியம்.இல்லாவிட்டால்,இவர்களது பேச்சே ஏதாவது வில்லங்கத்தை உண்டாக்கிவிடும்.அதே சமயம்,எவருக்கும் பணம்,திருமணம்,வேலைவாய்ப்பு,காதல் சார்ந்த வாக்குறுதி தராமலிருப்பது அவசியம்.

கும்பராசிக்காரர்களுக்கு வீண்சிலவுகள் பெருமளவு குறையும்.மகர ராசிக்காரர்களுக்கு வீண்செலவுகள் அதிகரிக்கும்.
துலாம் ராசிக்காரர்கள் திடீர் தனலாபம் பெரியளவில் அடைவர்.
மீனராசி,கடகராசி,சிம்மராசி,கன்னிராசி,மேஷ,ரிஷபராசிக்காரர்களுக்கு பெரியளவில் பாதிப்புக்கள் இல்லை.

சில பண மொழிகள்:அனுபவ உண்மைகள்
உனது வாயையும் பணப்பையையும் கவனமாகத் திற;அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.

கடன் என்பது கவனக்குறைவால் ஏற்படும் சுமை.

நல்லவர்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பார்கள்.

பணத்தின் குவியல் = கவலைகளின் குவியல்

ஏழ்மை பொல்லாதது,அது சிலரைப் பணிவுள்ள மனிதராக மாற்றுகிறது.ஆனால் பலரை தீதும் சூதும் கொண்ட மனிதராக வாழ்ந்து மடியக் காரணமாகின்றது.

எமனுக்கு அஞ்சாத நெஞ்சம் கடன்கொடுத்தவனை நினைத்து அஞ்சும்.

தயவு செய்து எவரிடமும் கடன்படாதீர்கள்.நாயிடம் கடன் பட்டிருந்தால் கூட அதை ‘ஐயா’ என அழைக்கவேண்டியிருக்கும்.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்;இல்லாதவனுக்குக் கவலை.

பணம் நம்மிடம் வரும்போது அதற்கு இரண்டுகால்கள்.நம்மை விட்டுப்போகும் போது அதற்கு பல கால்கள்.

பணத்தை வெறுப்பதாகக்கூறுபவர்கள் வெறுப்பது பிறரது பணத்தைத் தான்!

இன்று நாம் செய்யவேண்டிய காரியம் இரண்டு தான்.
ஒன்று. பணக்காரர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறிய வேண்டும்.
இரண்டு. ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பணக்காரர்கள் அறிய வேண்டும்.

தனிமையும், தான் யாருக்கும் வேண்டப்படாதவராகிவிட்டோமோ என்ற உணர்வும் மிகக் கொடிய வறுமையாகும்.

எவனால் சிரிக்க முடிகிறதோ,அவன் கட்டாயம் ஏழையாக இருக்க மாட்டான்.


நீ பணக்காரனாக வேண்டுமா? நிறைய்ய்ய பணம் புழங்கும் இடத்திற்கு தினமும் ஒருமுறை போய்வருவது உனது கடமைகளில் முதன்மையானதாக இருக்கட்டும்.அடுத்தசில வருடங்களில் உனது இடத்தில் பணம் ஒரு ஊற்றாக பெருக்கெடுக்கும்.

குறிப்பிட்ட அளவுக்கு பணம் சேர்க்கும் வரைதான் அதை நாம் பாதுகாக்க வேண்டியிருக்கும்.அதன் பிறகு, அது நம்மையும், தன்னையும் பாதுகாத்துக்கொள்ளும்;கூடவே தன்னையே பல மடங்கு பெருக்கிக் கொண்டே செல்லும்.இது அனுபவ உண்மை.

எப்போது நாம் நமது பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கப்போகிறோம்?நமது தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கு அனுமதி மறுக்கின்றது.ஆனால்,இலங்கையில் இளநீர்,கள்,கருப்பட்டி, தேங்காயை கலந்து மது தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.இந்த மது உடலுக்கு தீங்குதருவதில்லை.
அதே சமயம், கிக் ஏற்றுவதோடு, முழு சுறுசுறுப்பு தருகின்றது.இதனால்,இந்த மது பானத்துக்கு வெளிநாடுகளில் பயங்கரமான வரவேற்பு!!!

நாம் இன்னும் அதே பழைய பல்லவியில் வாழ்கின்றோம்.எனக்குத் தெரிந்து ஜப்பானில் அரிசியிலிருந்து பீர் தயாரித்து தினசரி உணவாக பயன்படுத்திவருகின்றனர்.நாம் இன்னும் அதே இட்லி,தோசை . . .

தமிழ்நாட்டில் பனையிலிருந்து எடுக்கப்படும் கள்ளைக் கொண்டு சுமார் 200 விதமான மதுபானங்கள் தயாரிக்கலாம்.தென்மாவட்டங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்கள் நிறைந்த மாவட்டங்களாக மாற இது ஒரு அரிய வாய்ப்பு.
யார் இதைச் செய்வது?

பிரபஞ்ச செயல்பாடும்,நடராஜ சிவனும்சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவபெருமான் ஆடும் நடனத்துக்கும், இந்த மொத்த பிரபஞ்ச இயக்கத்துக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது.இந்த புத்தகத்தை பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஒருவர் எழுதிவெளியிட்டுள்ளார்.

அவரின் பெயர் ஃபிரிட்ஜாஃப் காப்ரா.அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் “தாவோ ஆஃப் பிசிக்ஸ்”(Tao of Physics).

இந்த புத்தகத்தில் சிவபெருமானின் நடராஜர் தோற்றம் காஸ்மிக் நடனம் எனக் கூறுகின்றது.

இந்த புத்தகம் வெளிவந்த பின்னர்,சிதம்பரம் சிவாலயம் உலகப்புகழ் பெற்றுவிட்டது.

நமது மனநிலை எப்படி இருக்க வேண்டும்?


அப்துல்கலாம் அவர்களின் வெளியுறவுக்கொள்கை

“பரிசுப் பொருளை ஏற்பதால் ஒருவர் தெய்வீக அருளை இழந்துவிடுகிறார் என்று மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது.எனவே,நான் பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை”

சொன்னவர் நமது மனமார்ந்தகுடியரசுத்தலைவர்
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள்

அபூர்வ செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள்


கி.பி.1977க்குப் பிறகு செவ்வாய்க்கிரகமானது தொடர்ந்து 9 மாதங்கள் நீசமாகப்போகிறது. யுத்தகாரகன், ரத்த காரகன், சகோதரக்காரகன் என போற்றப்படும் செவ்வாய் கடகராசியில் 7.10.2009 முதல் 15.5.2010 வரை நீசமாக சஞ்சரிக்கப்போகிறார்.இதனால், ராணுவம், காவல்துறையிலும் கலகம் வரலாம்.சில மாதங்களுக்கு முன்பு வங்காளதேசத்தில் ராணுவம் கலகம் செய்தது ஞாபமிருக்கிறதா? அதுபோல!!!

தவிர, மேஷம், விருச்சிகம் ராசியில் பிறந்த மனிதர்கள், நிறுவனங்கள், மாநிலங்கள், நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறது. செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாடுகளில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கொரியாக்கள்.(அதனால்தான் அங்கே விதவிதமான யுத்தக்கலைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. கராத்தே, குங்பூ,டோக்வாண்டே மற்றும் 100 விதமான சண்டைக்கலைகள்) நம்ம பக்கத்து நாடு இலங்கையின் ராசி விருச்சிகம்.அதன் தற்போதய அதிபர் ராஜபக்ஷேயின் பிறந்த ராசியும் விருச்சிகம். தமிழர்களின் துருவ நட்சத்திரம் பிரபாகரன் அவர்களின் பிறந்த ராசியும் விருச்சிகம்!!! ஆக இலங்கையில் என்னமோ நடக்கப்போகுது. சரி அதை பேப்பரில் பார்த்துக் கொள்ளலாம்.


இனி செவ்வாய் பெயர்ச்சி பலன்களைக்காணலாம்:

அசுபதி: தெய்வீக அருளைப் பெற்றவரும், தனவான் சாஸ்திரங்களை அறிந்தவருமாகிய அசுவினி நட்சத்திரக்காரர்களே!

நீங்கள் மற்றவர்களுக்கு நல்ல விஷயங்களை போதிப்பவராகவும் தைரியசாலியாகவும் இருக்கும் தாங்கள் 7.10.2009 முதல் 16.11.2009 வரை இருப்பிடப்பிரச்சனை, தயாரின் உடல்நலத்தில் சீர்கேடு, நண்பர்களிடையே பகை,தொழிலில் மந்தம் அல்லது தொழில் சார்ந்த குளறுபடிகள் ஏற்படும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரையில் இந்த குளறுபடிகள் மாறி எதிர்பாராத தொழில் வளர்ச்சி லாபங்களும் ஏற்படும்.இருப்பிடப்பிரச்னை நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.தங்களுக்கு அல்லது தங்களைச் சார்ந்தவருக்கோ சுபகாரியம் உண்டாகும்.வண்டி வாகன வசதிகள் உருவாகும்.

23.12.2009 முதல் 13.3.2009 வரை மன தைரியம் அதிகரிக்கும்.தங்களது வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவர். முன்கோபமும் பிடிவாதமும் இந்நேரங்களில் தங்களிடம் அதிகம் காணப்படும்.உங்களுக்கு அல்லது உங்களது ரத்த உறவுகளுக்கு ஏற்படும் காயம் அல்லது நோய்க்கு தகுந்த மருத்துவ நிபுணர்(எக்ஸ்பர்ட்)ரிடம் ஆலோசனை கேட்கும் நிலை உருவாகும்.தொழில்நிலை சுமாராகும்.நிலம் சார்ந்த விஷயங்களில் சிறு லாபம் ஏற்படும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை சுப நன்மைகள் உண்டாகும்.இளைய சகோதரத்தாலும் கடனாலும் சில தொல்லைகள் வந்து தீரும்.

இக்காலகட்டத்தில் திருப்பரங்குன்றம் முருகக் கடவுளை அடிக்கடி வழிபட நன்று।
பரணி : நற்குணங்களும் நற்செயல்களையும் செய்வதை தனது சுபாவமாக வைத்திருப்பவரே!

எதிரிகளை எளிதில் வெல்பவரே!பிடிவாதத்தால் எதையும் சாதிப்பவரே!
தங்களுக்கு 7.10.2009 முதல் 16.11.2009 வரை நன்மையுண்டு. தாயார் மற்றும் நண்பர்களாலும் இருப்பிடவகையிலும் நன்மைகள் பல உண்டாகும்.வண்டி வாகன லாபமும் உண்டு.

16.11.2009 முதல் 23.12.2009 வரை வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும்.தொழிலில் பல்வேறு நல்மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறி தெரியத்துவங்கும்.தன்னைவிட மூத்தவர்களுடன் தீய சேர்க்கை சேர வாய்ப்பு உண்டாகும். மனைவி/பெண்கள் வழியில் விரையங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.இக்காலகட்டத்தை கவனமாக கடக்கவேண்டும்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை மனைவி வகையில் மருத்துவ செலவு, காயங்கள் ஏற்படுதல் நடக்கும். எச்சரிக்கை.உணர்ச்சிக்கு இடம் தராமல் வாழ்க்கைப் பயணத்தை கொண்டு செலுத்தவும்.யாருக்கும் வாக்குதரக் கூடாது.ஜாமீன் போடக்கூடாது.பலவிதங்களில் விரையங்கள் ஏற்படலாம்.

தினமும் முருக காயத்ரி மந்திரம் ஜபிக்கவும்.


கார்த்திகை :நல்பாக்கியங்களும் கடும் கோபத்தையும் ஆழ்ந்த பாசத்தையும் கொண்டவரே!பலவித திறமைகளால் எங்கும் எப்போதும் முதன்மையாகத் திகழுபவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை உங்கள் குடும்ப மூத்த உறுப்பினரால் வைத்தியச்செலவு உண்டாகும். எதிர்பாராத விரையங்களும், வாகனப்பழுதும் ஏற்படும்.வீட்டில் அதிகம் பேசவேண்டாம்.குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும்.

16.11.2009 முதல் 23.11.2009 வரை தொழில் ரீதியாக பிரச்னை ஏற்பட்டு நீங்கும். தொழிலில் லாபம் உண்டாகும். விற்காத பொருட்கள் விற்கும். மேலதிகாரி பாராட்டுவார்.கார்த்திகையன்று திருச்செந்தூரானை நேரில் வழிபடவும். நன்மைகள் பெருகி தீமைகள் குறையும்.

23.11.2009 முதல் 13.3.2010 வரை இல்லத்தில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும்.தொழில் ரீதியாக புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய முதலீடுகள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். தாயார்- மனைவி வழி மருத்துவச் செலவு குறையும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை மூத்த சகோதர்கள், மனைவி வழி உறவுகளால் கசப்பான சம்பவங்கள் நடக்கும்.சனிதிசை புக்தி நடப்பவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆட்படலாம்.விரையச்செலவுகள் ஏற்படும்.வியாழதிசை நடப்பவர்களுக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும்.சுக்கிர திசை நடப்பவர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவமானத்தைச் சந்திக்க வேண்டிவரும்.

ரோகிணி : அழகும் கம்பீரமும் உடையவரே! எல்லோருக்கும் நட்பாகத் திகழுபவரே! தனவந்தர்களிடம் செல்வாக்கு பெற்றவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.சகோதர வகையில் சண்டை ஏற்பட்டு தீரும். பூர்வீக சொத்து சார்ந்த நடவடிக்கை நன்மை தரும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை தங்களது மரியாதை குறையும். குழப்பமாகப் பேசுவீர்கள்.தைரியமும் தன்னம்பிக்கையும் குறையும்.வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதம் கெட்ட பெயரைத் தரும்.வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது.

23.12.2009 முதல் 13.3.2010 வரை குழந்தைகளால் செலவும் குடும்பத்தில் சுபச்செலவும் ஏற்படும்.தொழிலில் நல்ல மற்றும் இட மாற்றம் ஏற்படும்.கேட்ட இடங்களில் பண உதவி கிடைக்கும்.

13।3.2010 முதல் 15.5.2010 வரை எல்லாச் செயல்களிலும் சர்வ நிதானம் அவசியம்.சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.நரம்பு சார் பிரச்னைகள் வரலாம்.

மிருகசீரிடம் : ஒருவரைப் பார்த்த உடனே அவரது எண்ணம் என்ன? என்பதை கண்டறியும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்களே! தாங்கள் கோபத்தைவிட்டுவிட்டால் அற்புதமனிதர்தான்.தங்கள் நட்சத்திரங்களில்தான் பெரும் செல்வந்தர்கள், பக்திமான்கள்,திறமையானவர்கள் பிறக்கிறார்கள்.

7.10.2009 முதல் 16.11.2009 வரை திடீர் பணவரவுகள், பதவி உயர்வு மற்றும் விரும்பிய இட மாற்றங்கள் கிடைக்கும்.குடும்பத்துக்கு ஆடம்பரப்பொருட்கள் வாங்கிக்குவிப்பீர்கள்.குடும்ப வைத்தியச்செலவு குறையும்.மூத்தோரால் ஆதாயம் உண்டு.
16.11.2009 முதல் 23.12.2009 வரை சுபச்செலவு உண்டு.சிலருக்கு ஈமச்சடங்குகள் செய்யும் சந்தர்ப்பம் அமையும்.(குடும்பத்தில் பெரியவர்கள் மறையலாம்).தவறான சகவாசத்தை ஒதுக்கி வைத்தால் தேவையற்ற வம்பு வழக்கு அண்டாது.வீட்டில் பிரச்னை செய்யாதீர்கள்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை தொழில்மாறுதல் மற்றும் இடமாறுதல் உண்டு.சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும்.வாகனத்தில் செல்லும்போது மிகக்கவனம் அவசியம்.தொழில் ரீதியாக வாக்கு தராதீர்கள்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகள் உண்டு.குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். தைரியம் கூடும். வாழ்க்கையில் மிக முக்கிய ஆனால் சிறு மாற்றம் உண்டாகும்.

திருவாதிரை : எவரிடமும் எளிதில் பழகும் குணமுடையவரே! 7.10.2009 முதல் 16.11.2009 வரை இதுவரை இருந்து வந்த பணப்பிரச்னைகள், குடும்பப்பிரச்னைகள் தீரும். தங்களது வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும்.மருத்துவ செலவு குறையும்.தாய் குடியிருக்கும் வீடு இவற்றால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை ஆன்மீகப்பயணங்கள் செல்வீர்கள். புதிய ரகசிய தொடர்புகள் ஏற்படும். வெளிநாட்டுப்பயணமுயற்சி வெற்றி பெறும். மூத்த சகோதரவர்க்கத்தால் லாபம் உண்டு.
23.12.2009 முதல் 13.3.2010 வரை கடன் தொல்லைகள் ஏற்படும். தொழில்துறையினருக்கு முடக்கம் நீங்கும்.வாழ்க்கைத் துணை பிரச்னை நீங்கும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை வார்த்தையில் நிதானம் தேவை.விஷ வண்டுகள் பயம் உண்டு. மனக்குழப்பம் ஏற்படும்.வாக்குறுதி தரக்கூடாது.சிறு பிரச்னைகளில் ஒதுங்கிக் கொள்ளவும்.வீரத்தைக் காட்டக் கூடாது.

புனர்பூசம் : மனதுக்குள் அனைத்தையும் பூட்டி வைத்துக் கொள்பவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை உடல்நலக்குறைவு ஏற்படும்.ரத்த அழுத்த நோய் பாதிப்பைத் தரும்.இளைய சகோதரத்தால் செலவு உண்டு.எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை தொழில் முன்னேற்றம் ஏற்படும்.அப்பா வழியில் உதவிகள் கிடைக்கும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை பூர்வீகசொத்தில் லாபமும், சிலருக்கு புத்திரப்பாக்கியமும் உண்டாகும்.தேங்கிக்கிடந்த பொருட்கள் விற்பனையாகிவிடும். திடீர் அதிர்ஷ்டம் சிலருக்கு உண்டாகும்.(லாட்டரி போல).
13।3.2010 முதல் 15.5.2010 வரை குடியிருக்கும் வீட்டை அழகுபடுத்துவீர்கள்.ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள்.கனவுத் தொல்லை உண்டு.பிதுர்காரியம் செய்வீர்கள்.

பூசம் : இல்லற இன்பத்தில் அளவற்ற ஆர்வமும், பெரியவர்களிடம் நாசூக்காக பழகத் தெரிந்த பூச நட்சத்திரக்காரர்களே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை நீண்ட காலமாக உடலில் இருந்துவந்த நோய்கள் நீங்கும்.வாழ்க்கைத்துணையாலும் நிம்மதி உருவாகும். பூர்விக சொத்துக்கள் மூலமும் குழந்தைகள் மூலமும் லாபமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இதுவரை ஏற்பட்டிருந்த காரியத்தடைகள், முடக்கப்பட்டிருந்த தொழில் வாய்ப்புகள் நீங்கி படு சுறுசுறுப்பாக செயல்படத்துவங்குவீர்கள்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை இளைய சகோதரத்தால் தொந்தரவுகள் உண்டு.வெளிநாட்டு வர்த்தகம் புரிவோர் புதிய வாய்ப்புகள் அடைவர். தாய்வழி, மாமா வழியில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

23.12.2009 முதல் 13.3.2010 வரை பொறுமை மிக அவசியம்.வாகனப்பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.செவ்வாய் திசை, செவ்வாய் புக்தி நடக்கும் பூச நட்சத்திரக்காரர்கள் ஆயுள் ஹோமம் செய்வது அவசியம்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை சனி புக்தி நடப்பவர்களுக்கு இக்காலகட்டத்தில் வம்பு வழக்கு வர வாய்ப்புண்டு. உடலில் தீக்காயங்கள் அல்லது கோபத்தால் மிகப்பெரிய மனிதரைப் பகைக்குமளவுக்கு அனாவசிய கோபம் ஏற்படலாம்.பொறுமை அவசியம். ராகு தசை அல்லது புக்தி நடப்பவர்களுக்கு கடன் தீர வாய்ப்பு.கணவன் மனைவி வாக்குவாதம் தவிர்க்கவும்.


ஆயில்யம் : அழகான வாழ்க்கைத் துணையைக் கொண்டவரே! கல் நெஞ்சக்காரர்களாகவும் அதி புத்திசாலித்தனமாகவும் வாழ்நாள் முழுக்க செயல்படுபவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை சகல செயல்தடுமாற்றங்களும் தீர்ந்து செயல்புயல் ஆகப்போகிறீர்கள். தொழில்வளர்ச்சி விறுவிறுப்பாகும்.வீடு மனையால் அபரித லாபம் உண்டு. சிலருக்கு விரையச்செலவு ஏற்படும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை சுப காரியங்கள் நடக்கும். மனைவி/கணவர் வழியில் செலவுகள் குறையும்.புதிய இன்பம் தரும் நட்பு அமையும்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை பூர்வீக சொத்துக்கள் மற்றும் தொழில் லாபம் சற்றும் எதிர்பாராத அளவுக்கு கிடைக்கும். செவ்வாய் / வியாழ திசை நடப்பவர்களுக்கு மிகப்பெரும் தன வரவு உண்டு.குடும்பப்பிரச்னைகள் நீங்கும்.
மதுரை அருகில் உள்ள திருவாதையூர் சென்று சிறப்பு பிரார்த்தனை செய்ய மிகச்சிறந்த வாழ்க்கையை தினமும் காண்பீர்கள்.இங்கு சாபம் பெற்ற சனிபகவான் சாப நிவர்த்தி அடைந்த சிவாலயம் இருக்கிறது.

13।3.2010 முதல் 15.5.2010 வரை வாகனப்பயணத்தில் எச்சரிக்கை!தாயாரின் உடல் நலனில் அக்கறை அவசியம்.வாக்குறுதி தரக்கூடாது.

மகம் : சிவந்த கண்களும் சாஸ்திர ஆராய்ச்சியும் மந்த குணமும், யாவருக்கும் அதிக செலவு செய்பவரும், பிறரை வசீகரிக்கும் முகமும் கொண்டவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை: சுப விரையங்கள் ஏற்படும்.தூக்கமின்றி தவித்துக் கொண்டிருக்கும் தாங்கள் நிம்மதியாக தூங்கத் துவங்கும் காலம் இது.தங்களுடைய செயலாலும் வார்த்தைகளாலும் இது வரை ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும்.குடும்பத்தில் வாதம் செய்யக்கூடாது.அசட்டு தைரியம் வரும்.நெருங்கிய நண்பர்கள் மற்றும் தாயாரின் உதவி கிட்டும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை:மூத்த சகோதர சகோதரியால் நன்மை உண்டு.சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.கூட்டுத் தொழில் வாய்ப்பு ஏற்படும்.பதவி உயர்வு ஏற்படும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை: வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபமுண்டு. கேட்ட இடங்களில் கடன் கிடைக்கும். இல்லத்தில் திருமணம் முதலான சுபகாரியங்கள் நடைபெறும்.நட்பு, வாகனப்பயணத்தில் கவனம் தேவை.வாக்குறுதி தராதீர்.சனி புக்தி நடப்பவர்கள் வாக்குறுதி தரக்கூடாது.
13.3.2010 முதல் 15.5.2010 வரை:கோபம் குறைக்கவும். விவேகம் மிகத் தேவை. பூர்வீகசொத்துக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சிலர் பூர்வீகசொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்.

பூரம் : புத்திசாதுர்யம் கொண்டவரே! தைரியமும் சிறந்த வியாபார யுக்திகளை கையாள்பவரே! உடலில் காய வடு கொண்டவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை: இனி விரையச் செலவுகள் குறையும். பலமுறை முயற்சி எடுத்து தாமதப்பட்ட வர்த்தக திட்டங்கள் வெற்றி பெறும்.பூர்வீக சொத்து சார்ந்த பேச்சுவார்த்தை ஏற்படும்.தொழில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.பயம் வரும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை: புதிய பதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் எல்லோரிடமும் அனுசரித்துப் போகவும். மனைவி,குழந்தை உடல் நலத்தில் அதிஅக்கறை தேவை.
23.12.2009 முதல் 13.3.2010 வரை: தம்பதியரிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.சக பாலினரால் மகிழ்ச்சி கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கடும் முயற்சிக்குப் பிறகு கிடைக்கும். இடம் வீடு ஆதாயத்துடன் விற்பனை செய்வீர்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை: மனைவியால் குடும்பத்தில் நிம்மதி குறையும்.கருத்து வேறுபாடு ஏற்படும்.
உத்திரம்: நன்றி மறவாதவரே! பிறரிடம் இனிய வார்த்தை பேசுபவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை: குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் திகழும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் கிடைக்கும்.இளைய சகோதரத்தால் செலவு ஏற்படும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை: இருப்பிட மாற்றம் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.தொழில் ரீதியாகபுதிய முயற்சி எடுப்பீர்கள்.தந்தை வழியில் செலவு வந்து நீங்கும்.தங்கள் குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படும். நிதானம் பேச்சில் தேவை.கால் பாதங்களுக்கு வைத்திய செலவு உண்டு.

23.12.2009 முதல் 13.3.2010 வரை: திடீர் சுப நிகழ்ச்சி நடக்கும்.வீடு மனையால் ஆதாயம் உண்டு. தம்பதி நெருக்கம் அதிகரிக்கும்.சனி மற்றும் குருதிசை நடப்பவர்களுக்கு சுபச்செய்தி உண்டு.ஏஜன்சி தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் உண்டு.

13.3.2010 முதல் 15.5.2010 வரை : வீட்டுப்பெரியவர்கள் சிவலோகப் பதவியடைவார்கள்.பூர்வீக சொத்துப்பிரச்னை தலைதூக்கும்.

அஸ்தம் : ஐந்து நட்சத்திரங்களின் சேர்க்கை என்றும் மனோக்காரகனின் முழு ஆசி பெற்ற நட்சத்திரம் அஸ்தம் ஆகும்.எல்லோரிடமும் சுலபமாகப் பழகும் குணமும்,சங்கீதம், நாட்டியம் இவற்றில் ஆர்வம் கொண்டவரும் பெண்கள் மீது மதிப்பு கொண்டவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை:வீடு, நிலம், தாய், மனைவியால் எதிர்பாராத தன லாபம் செவ்வாய் அருளால் தங்களுக்கு கிடைக்கும்.மூத்த சகோதர வழியில் விரையமும்,தொழிலில் மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பும் ஏற்படும்.புதிய தொழில்கள் அமையும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை:தொழில் லாபம் உண்டு. வாழ்க்கைத்துணையால் சிறுசிறு குழப்பமுண்டு.இடமாற்றம் உண்டு.கடனை அடைக்கும் சந்தர்ப்பம் ஏற்படும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை : குழந்தைகள் வழியில் செலவுகள் உண்டு.பிறந்த ஜாதகத்தில் விபரீதராஜ யோகம், சகட யோகம் உள்ளோருக்கு புதையல் போன்ற அதிர்ஷ்டம் கிடைக்கும்.உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை :தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டும்.வாகனப்பயணத்தில் கவனம் தேவை.சுபவிரையச் செலவுகள் ஏற்படும்.

சித்திரை :பிறரது குணமறிந்து நடப்பவர், திறமைசாலி,ஊர் சுற்றுவதில் ஆர்வமிகுதி, தன் காரியத்தில் சுறுசுறுப்பு உடைய சித்திரை நட்சத்திரக்காரர்களே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை :இதுவரை இருந்துவந்த வீடு , நிலம் சார்ந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் மனவெறுப்பு வரும்.பொறுமையாக இருந்தால் நிம்மதியாக வாழ முடியும்.உங்களது உழைப்பின் பலன் உங்களை வந்து சேரும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை : தகப்பனார் வழியில் விரையச்செலவுகள் வந்து சேரும்.செல்வச் சேர்க்கை உண்டு.தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :எதிர்பாராத இடத்திலிருந்து கடன் உதவி கிடைக்கும்.பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் தீரும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை :விரையங்களை தவிர்க்க முடியாது.வாகனப்பயணத்தில் கவனம்.ரத்தம்,நரம்பு சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்.தொழில்பங்குதாரர்களிடையே கோபத்தை அளவோடு காட்டவும்.1976 முதல் 1979க்குள் பிறந்தவர்கள் ஸ்ரீகாலபைரவரை தினமும் வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

சுவாதி :யாரையும் நம்பும்படி பேசி தன்காரியத்தை செயல்படுத்துபவரும், முன்கோபியும், பல்வேறு யோசனைகள் கொண்டவரும்,பெரியோர்களிடம் மரியாதையும்,தெய்வ வழிபாடுகளில் ஆர்வமும் நிறைய (தூக்கத்தில்) கனவும் காண்பவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை :இழந்த தைரியத்தைப் பெற்று வருமானத்தை பெருக்குவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.வாழ்க்கைத்துணையால் வருமானமும், தந்தை வழியால் செலவும் ஏற்படும்.இளைய சகோதரத்தின் ஆரோக்யம் கெடும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை : வாகனம், மின்சாரம் இவற்றில் மிகுந்த கவனம் தேவை.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாது.செவ்வாய் புக்தி நடப்பவர்கள் வாழ்க்கைத்துணையை பிரிய வேண்டியிருக்கும்.ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவு, வியாபார ஒப்பந்தங்களில் மிகுந்த எச்சரிக்கையும் பலமுறை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை :நண்பர்களிடம் விரோதமும், குழந்தைகளுக்கு வைத்தியச் செலவும்,பொருளாதார சிக்கல்களும் ஏற்படும்.பயணத்தின் போது கவனமாக இல்லாவிட்டால் தலை,முகம் பகுதியில் படுகாயம் ஏற்படலாம்.சிலருக்கு வாய் ,உதடு ,சளி சம்மந்தப்பட்ட நோய் ஏற்படலாம்.

13।3.2010 முதல் 15.5.2010 வரை :தொழில், வேலை இவற்றில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரியின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் அல்லது புத்திர பாக்யம் கிட்டிடும்.
விசாகம் : கல்வி கற்பதில் ஊக்கம் உள்ளவரும், தகுதிக்கு மீறிய காரியங்களை சாதிக்க விரும்புபவரும், குள்ளமானவரும், சண்டைப்பிரியரும், செல்வந்தரும், சாமர்த்தியமாகப்பேசுவதில் திறமையும் கொண்டவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை : இதுவரை தங்களைக் கண்டும் காணாமல் இருந்து வந்த தங்கள் உறவினர்களும் நண்பர்களும் தங்களைத் தேடி வருவர். தொழில் முடக்கம் நீங்கும்.மனபயம் நீங்கும். சில புதிய முடிவுகள் எடுப்பீர்கள்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை :தந்தைவழியில் மனக்குழப்பங்களும் மருத்துவச்செலவுகளும் வரும்.விரையச்செலவுகள் தவிர்க்க முடியாதவை.பெண்களால் அவப்பெயர் ஏற்படும். சிலருக்கு மூத்த சகோதர வகையில் பணவரவு உண்டு.

23.12.2009 முதல் 13.3.2010 வரை : உங்களின் பிறந்த ஜாதகத்தில் விபரீத ராஜ யோகம் உள்ளவர்களுக்கும், சனி திசை அல்லது புக்தி நடப்பவர்களுக்கும் எதிர்பாராத வகையில் வருமானமும் பதவிகளும் கிடைக்கும்.எவருக்கும் வாக்குறுதி வழங்கக்கூடாது.சிலருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.எதிரிகள் செய்யும் காரியங்களால் உங்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை : குடும்பத்தில் அமைதியற்ற நிலை உருவாகும்.பலருடைய கண்டனத்திற்கும், விமரிசனத்துக்கும் ஆளாவீர்கள்.குழந்தைகள் மற்றும் மனைவி வழியில் விரையங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

அனுஷம் :படிப்பதில் ஆர்வமும், உங்களுக்கு தீங்கு செய்தவருக்கும் நன்மைகள் மட்டுமே செய்ய விரும்பும் தாங்கள்,மேன்மையான பதவி அந்தஸ்தில் வாழ்வீர்கள்.பிறர் மனம் கோணாமல் நடப்பவர்கள்.தர்ம சிந்தனையும் ஊர் சுற்றுவதில் பிரியமும் அதிக புத்திர சந்தானமும் உடையவ்ர்கள் தாங்கள்!!!

7.10.2009 முதல் 16.11.2009 வரை :தங்களுடைய செயல்பாடு சுறுசுறுப்பற்ற நிலையும் மந்தமான உடல் நிலையும் கொண்டிருப்பீர்கள்.இளைய சகோதரத்தால் கருத்துவேறுபாடு ஏற்படும்.தம்பதியரிடையே தவறாகப்புரிந்து கொள்ளுதல் ஏற்பட்டு கருத்துவேறுபாடு உருவாகலாம்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை : எதிர்பாராத பணவரவும் புதிய நட்பும் ஏற்படும்.குழந்தைகளால் கல்வி சார்ந்த சுபச்செலவு ஏற்படும்.தந்தை வழியில் துக்ககரமான செய்தி அல்லது சம்பவம் நடக்கும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை : இடமாற்றம் உண்டு.கணுக்காலில் ரத்தகாயம் ஏற்படும்.கவனம் தேவை.உயரமான கட்டிடங்களில் வேலை செய்வோர்களும், மின்சாரம் சார்ந்த பணியாளர்களும் மிகக்கவனமாக இருப்பது அவசியம்.சுக்கிர திசை நடப்பவர்களுக்கு மர்மஸ்தானத்தில் நோய் ஏற்படலாம். இக்காலகட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வணங்கிவர பாதிப்புகள் குறையும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை :கடன்களை அடைத்துவிடுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும்.விற்காமல் இருந்த வீடு, மனை நல்ல விலைக்கு விற்பனையாகும்.இரும்பு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.சட்டம் நீதித்துறையில் இருப்பவர்கள் ஒரு சில சிரமங்களை சந்தித்தாலும் பதவி உயர்வை அடைவர்.பாராட்டுக்களும் கிடைக்கும்.


கேட்டை:தர்ம குணமும் முன்கோபமும் , குறும்புத்தனமும் கொண்டவரே! அழகாகப்பேசக்கூடியவரும், கலகம் குறுக்குபுத்தி + பிறந்த வீட்டைப்பெருமையாகப்பேசுபவரும்,கணிதத்தில் வல்லமைமிக்கவரும், தாமதத்திருமணயோகமும் கொண்டவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை : பூர்வீக சொத்துக்களாலும் மூத்த சகோதரர்களாலும் தனவரவு பெறுவீர்கள்.மனைவி மூலமாக மகிழ்ச்சியும் லாபமும் கிடைக்கும். தேவைப்படும் உதவிகள் எல்லாப்பக்கத்திலிருந்தும் கிடைக்கும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை:இதயம், வயிறு மார்புப்பகுதி நோயால் பாதிக்கப்படலாம். தகுந்த மருத்துவசிகிச்சை செய்யவும்.உண்ணும் உணவில் கவனம் தேவை.இதுவரை இருந்து வந்த முழங்கால் வலி, கால்களிலிருந்து வந்த எரிச்சல் குணமடையும்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை :குடியிருக்கும் இல்லத்தில் பிரச்னைகள் உண்டாகும்.தாய் வழியில் கசப்புகள் ஏற்படலாம்.இளைய சகோதரத்தால் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.அனுசரித்துச்செல்க!
அளவோடு பேசவும்.அல்லது மவுனமே உங்களை காக்கும்.தமிழ்நாட்டில் தேனி அருகில் உள்ள உத்தம பாளையத்தில் 1000 ஆண்டு பழமையான சிவாலயம் செண்று வழிபட்டால் மேற்கண்ட பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.வருமுன் காப்பதும் நன்று!
13.3.2010 முதல் 15.5.2010 வரை :இதுவரை இருந்துவந்த மந்த நிலை மாறி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.தந்தைவழி ஏற்பட்டிருந்த மனக்கசப்பு நீங்கும்.குழந்தைகளால் ஏற்பட்ட வைத்தியச்செலவு குறையும்.சிலருக்கு புதிய ஆடம்பரப்பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.சிலருக்கு நல்ல உயர்ந்த இடத்தில் மகிழ்ச்சியான சூழலில் திருமணம் நடக்கும்.பிறந்த இடத்திலிருந்து 100 கி.மீ.தூரத்தில் திருமணம் நடைபெறும்.
எந்த சூழ்நிலையிலும் தங்களைத்தாங்களே குழப்பிக்கொள்ளக்கூடாது.தங்கள் சக்திக்கு உட்பட்ட காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும்.இப்படிச்செய்தால் வெற்றியும் புகழும் ஏற்படும்.

உத்திராடம் : கர்வமும், செல்வ வளமும் கொண்டவரே!வர்த்தக நோக்கமும் சுறுசுறுப்பும் தொடை/முழங்கால்/கால்களில் மச்சமும் கொண்டவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை : கடந்த 40 நாட்களாக மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கோபதாபங்களுடன் பலருடன் சண்டை சச்சரவு ஏற்பட்டிருக்கும்.குறிப்பாக மனைவி,தொழில் பங்குதாரர்கள், உடன்பணிபுரிவோர்- இவர்களிடம் பிரச்னை ஏற்பட்டிருக்கும்.
இந்த காலகட்டத்தில் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து வைத்துக்கொள்வீர்கள். மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமைக்கான வழிகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி கடந்த காலத்தில் இருந்த பணத்தட்டுப்பாடு விலகி சரளமான பணப்புழக்கம் ஏற்படும்.தந்தைவழி மருத்துவச்செலவுகள் குறையும்.கடந்த காலங்களில் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்திருக்கும்.இப்போது அவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை :தொழில் நிலையில் சில மாற்றங்களைக்காண்பீர்கள்.தொழில் அபிவிருத்திக்காக சில இடங்களில் கடன் பெறுவீர்கள். வாகனப்பயணங்களில் எச்சரிக்கை!
முகமைத்தொழிலில் ஈடுபடுவோர் இருமடங்கு வருமானமடைவார்கள்.ராகு திசை நடக்கும் அன்பர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு பெறுவார்கள்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை: விலகியிருந்த , கண்டுகொள்ளாமலிருந்த உறவினர்கள் தேடிவருவர்.விற்பனையாகாமலிருந்த சொத்துக்கள் விற்பனையாகும்.சனிதிசை, சனி புக்தி நடைபெறுபவர்களுக்கு தனலாபம் கிடைக்கும்.
புதன் திசை, புதன் புக்தி நடப்பவர்களுக்கு மிகப்பெரிய மாரக கண்டம் உள்ளது.இவர்கள் வாழும் இடத்தில் உள்ள வடக்குபார்த்து ஆயுதம் ஏந்தி அமர்ந்துள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.சிலருக்கு புதிய மகிழ்ச்சி தொடர்புகள் கிடைக்கும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை : மின்சாரம்,அடுப்பு,நீர்நிலைகள் பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை.கடந்த காலங்களில் உடம்பில் ஏற்பட்ட காய வடு பற்றி மருத்துவரிடம் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை பெற வேண்டும்.இளைய சகோதரத்தால் சச்சரவு ஏற்படும்.

திருவோணம் : தெய்வீக வழிபாடுகளில் பற்றுமிக்கவரும், தர்ம சிந்தனை கொண்டவரும் தனவானும் கர்வமுடன் நடந்து கொள்பவரும்,காம குணம் கொண்டவரும், சிறந்த அறிவாளியும் மந்த சுபாவமுடையவரும் உடைய தாங்கள்...
7.10.2009 முதல் 16.11.2009 வரை :கடந்த காலங்களில் அதிக வேலைப்பளுவால் உடலில் சோர்வும் அசதியும்,எதிலும் பிடிப்பு இல்லாமல் விரக்தி மனப்பான்மையுடனும் இருந்திருப்பீர்கள்.இந்நிலை மாறி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பொங்கும்.தடைபட்ட காரியங்கள் நீங்கி சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.நீதிமன்றத்தில் இழுவையில் உள்ள வழக்குகள் சாதகமாகும்.சுபவிரையம் உண்டு.
16.11.2009 முதல் 23.12.2009 வரை :தந்தையால் விரையம் உண்டு.தொல்லைகளும் ஏற்படும்.தாய், நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது.முறைதவறிய உறவுகள் ஏற்படும்.குடும்பத்தில் வாக்குவாதம் தவிர்க்கவும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.உறவினர், நண்பர்களிடையே மதிப்பு ஏற்படும்.சனிதிசை, சனி புக்தி நடப்பவர்களுக்கு பெரும்தன லாபம் ஏற்படும்.வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.சிலருக்கு லாட்டரி போன்ற பரிசு கிடைக்கும். தந்தைவழி பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து சுமுகமான முறையில் நட்பு ஏற்பட்டு லாபம் உங்களை வந்தடையும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை : தொழில் லாபகரமாக இயங்கும்.இடம்விட்டு இடம் மாற நினைப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.கடன் தொல்லை ஏற்படும்.காதல் வசப்பட்டு தங்களை குழப்பிக்கொள்ளாதீர்கள்.

அவிட்டம்: கோபத்தின் பிரதிநிதிகளே! அவசரபுத்தியும், மனைவியின் பேச்சுக்கு மதிப்புதருபவர்களே! கம்பீரத்தோற்றமும், உடலில் அடர்ந்த ரோமங்கள் உள்ளவரும், செல்வமும் செல்வாக்கு பெற்றவரும், முட்டிக்கால்களில் மச்சமும் கொண்டவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை :கடந்த ஆண்டுகளில் இருந்த நிலையில்லாத தன்மையும், பிறரை நம்பி செயல்பட்ட செயல்களில் வீண் அலைச்சல்களும், விஷமிருகங்கள்-வண்டுகளால் ஏற்பட்ட காயங்கள் மறக்கமுடியாதவை.
கடந்த 40 நாட்களாக தொழிலில் நல்ல வாய்ப்புகளும் பெரிய திட்டங்களும் வழக்குகளில் எதிரியை வென்றிருப்பீர்கள்.
இனி, தாயார், சகோதர சகோதரிகளாலும் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும்.வாக்குறுதி தராதீர் எவருக்கும்! பணம் கொடுக்கல் வாங்கலில் மந்த நிலை ஏற்படும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை :தொழில் வளர்ச்சி உண்டு.கடன்களை திருப்பி செலுத்துவீர்கள்.பூர்வீக சொத்து பிரச்னைகள் நீங்கும்.குழந்தைகள் வழியிலும், ஆடம்பரப்பொருட்கள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :இக்காலம் தங்களுக்கு ஒரு பொற்காலமாகும்!!!
தங்களைக்கண்டு ஓடி ஒளிந்தவர்கள், எதிராக செயல்பட்டவர்கள் தங்களை வணங்கி வாழ்த்துவார்கள். கடன்கள் குறையும்.புதிய நட்புகள் அறிமுகமாகும்.தொழில் வளர்ச்சிக்கு பலர் உதவுவர்.சிலர் தொழில்ஸ்தானங்களை மாற்றியமைப்பீர்கள்.விற்காமலிருந்த நிலம் விற்பனையாகும்.தடைபட்ட திருமணம் நிச்சயமாகும்.தொழில் லாபங்கள் குறையும்.தொழில் அபிவிருத்திக்காக முதலீடு முடக்கும் சூழ்நிலை உண்டாகும்.நரம்பு சார்ந்த நோய்கள்,ரத்த அழுத்த நோய்கள் வந்து நீங்கும்.சிலருக்கு தோல்வியாதி அறிகுறி தென்படும்.
முழுமையான மகிழ்ச்சியான பலன்கள் பெற திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசித்தீர்த்ததில் உள்ள சிவலிங்கத்தை வழிபட சிறப்பான பலன்கள் பெற்று வளமுடன் வாழ்க!!!

சதயம் : யாரையும் வசீகரிக்கும் தோற்றம் உள்ளவரும்,கரும் விழிகள் கொண்டவரும்,நினைத்த காரியத்தை முடிக்கும் நுண்ணறிவு படைத்தவரும், தீர யோசித்து எக்காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலைக் கொண்டவரும், எவரையும் எளிதில் தன்வயப்படுத்தும் கோபக்காரருமாகிய தாங்கள் இதுவரை இழிவான பேச்சுக்கு ஆளாகியிருப்பீர்கள்.குடும்பசூழலால் தேக்க நிலையே எதிலும் இருந்திருக்கும்.
7.10.2009 முதல் 16.11.2009 வரை : தேக்க நிலை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். இழந்த தைரியத்தைப்பெறுவீர்கள். தொழிலில் புதிய அணுகுமுறையை உருவாக்குவீர்கள்.பணப்புழக்கம் ஏற்படும்.உடலில் இருக்கும் மந்தநிலை நீங்கிட ஸ்ரீபழனி முருகனை நேரில் சென்று ஒருமுறை தரிசித்துவரவும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை : குழந்தைகள் வழியில் செலவு ஏற்படும்.குடும்பபெரியவர்களுக்கு கர்ம காரியங்கள் செய்வீர்கள். தந்தைக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.தொழில் உறுதியான கசப்பான முடிவுகள் எடுப்பீர்கள்.வாழ்க்கைத்துணையிடம் சூடான வர்த்தைகளைக் கேட்பீர்கள்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :தொழிலில் வருமானம் சிறப்பாக வந்து கொட்டும்.விரையங்கள் நீங்கும்.பெரிய பெரிய இடங்களில் நட்பு கிட்டும்.சுபவிரையம் உண்டு.புதிய வீடு,மனை போன்றவை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும்.வாழ்க்கைத்துணையிடம் மட்டும் பேச்சைக்குறைக்கவும்.
சனி திசை,சனி புத்தி நடப்பவர்கள் சிறப்பான லாபமும், சிலருக்கு இருமடங்கு லாபமும் கிட்டும்.யோகங்கள் வரும் காலமிது.
இக்காலகட்டத்தில் கிடைக்கும் பெருந்தன வரவுகளை நீண்டகால முதலீடுகளில் சேமிப்பது/முதலீடு/சேர்ப்பது எதிர்காலத்தில் நன்மைகளைத்தரும்.

ராகு புத்தி நடப்பவர்களுக்கு பதவி உயர்வு, தொழில் நிலைகளை உயர்த்திக்கொள்ளுதல் என பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.உப்புக்கல் என நினைத்த பொருள் வைரமாக மாறுவதைப் போன்று நான்காம் நிலையில் உள்ள ஒருவர் திடீரென முதல் நிலைக்கு (உச்சத்துக்கு) வருவர்.
தங்கள் சக்திக்கு மீறிய காரியங்களில்/விஷயங்களில் தயவுசெய்து தலையிடாதீர்கள்.ஒருவேளை அப்படி தலையிட்டால் பிற்காலத்தில் கண்டனங்கள்/நஷ்டங்களுக்கு ஆளாவீர்கள்.

13।3.2010 முதல் 15.5.2010 வரை :விரையங்கள் தவிர்க்க முடியாதவை.பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவீர்கள்.உடலில் வேகமும்,கோபமும் ஏற்பட்டு ரத்தம்,நரம்பு சார்ந்த நோய்கள் உருவாகத்துவங்கும்.வாகனங்களில் பயணத்தின்போது கவனம் தேவை.குழந்தைகளுக்கு வைத்தியச்செலவு ஏற்படும்.இக்காலகட்டத்தில் துர்கையை வழிபட்டு நிம்மதியாக வாழ்க்கையை அமைத்துக்கொள்க!!!

பூரட்டாதி : ஆடை ஆபரணங்கள் அணிந்து மகிழ்பவரும், திடசரீரம் கொண்டவரும், பெரிய மனிதர்கள் நட்பும்,கவிஞரும் ஆசிரியரும்,வீட்டில் உணவு உண்பதை குணமாகவே கொண்டவரும்,கடனால் தொல்லையும்,குழந்தைகள் வழியில் குழப்பமான சூழ்நிலையும்,உழைப்புக்கேற்ற லாபத்தை அனுபவிக்க முடியாத நிலையும் குடும்பத்தில் சண்டை சச்சரவும் கடந்த 40 நாட்களாக இருந்திருக்கும்.

7.10.2009 முதல் 16.11.2009 வரை : குழந்தைகளால் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும்.குழந்தைகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும்.தங்களுடைய வார்த்தைகளில் கோபம் குறையும்.குழந்தைகளுக்கு பிரியப்பட்டதை வாங்கித்தருவீர்கள்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை : இடம்,வீடு போன்றவற்றால் லாபம் கிடைக்கும்.தந்தைவழி சொத்துக்கள் மூலமாகவும் லாபமுண்டு.சிலருக்கு மருத்துவச்செலவு உண்டு.முகமைப்பணியிலிருப்போர் பெரும் பணலாபமடைவர்.சிலருக்கு தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :லாபங்கள் அதிகமாக கிடைக்கும் நேரமிது.மூத்த சகோதரத்தால் ஆதரவும் உதவியும் லாபமும் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் உண்டாகும்.முன்பு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள்.அரசு ஒப்பந்தப்பணிகளில் இருப்போருக்கு அதிக லாபம் உண்டாகும்.மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை உருவாகும்.
13।3.2010 முதல் 15.5.2010 வரை :அரசு வழியில் தொந்தரவும் , கருத்துவேறுபாடுகளும் சகோதரர்/ரிகளிடையே கருத்துவேறுபாடுடன் வாக்குவாதமும் உண்டாகும்.உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கும்.ஆடை ஆபரணச்சேர்க்கைக்கு அதிகம் செலவழிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதி மூலமாக தங்களுக்கு நெருக்கடி ஏற்படும்.தங்களுக்கு கீழே பணிபுரிபவர்களால் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்படும்.

உத்திரட்டாதி :சொல்வாக்கும், செல்வாக்கும் பெற்றவரும்,பக்திமானும்,கல்வியில் சிறந்தவரும், சஞ்சலத்துடன் வாழ்பவரும் ,இழிவான நண்பர்களைக் கொண்டவரும்,நண்பர்களின் வார்த்தைகளை கேட்பவரும்,தாராளமனம் கொண்டவரும்,பாதங்களில் காயத்தழும்பும் மச்சங்களும் கொண்டவருமான தாங்கள். . .

7.10.2009 முதல் 16.11.2009 வரை : எடுத்த முயற்சிகளில் தோல்வியும், தங்கள் பேசிய வார்த்தைகளால் மனக்கசப்பும், வண்டி வாகனங்களில் செல்லும்போது காயங்களும் ஏற்படக்கூடிய காலகட்டமிது.கவனமுடன் செயல்படவேண்டும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை :நண்பர்களால் ஆதாயமும், இருப்பிடத்தில் மாற்றங்களும், மனைவி குழந்தைகளால் மருத்துவச்செலவும்,தந்தையாருக்கு உஷ்ணசம்பந்தப்பட்ட நோய்கள் வருகைதந்து நீங்கும்.தொழிலில் பழைய நிலையை மாற்றி புதிய தொழில் செய்ய நினைப்பீர்கள்.பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை நீங்கி லாபம் அடைவீர்கள்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை : தங்கள் நிலை உயரும்.பதவி உதவி சிலருக்கும், வெளிநாட்டுப்பயணம் சிலருக்கும் கிட்டும்.ஏற்கனவே உடலில் இருந்த நரம்பு சார்ந்த பிரச்னைகளுக்கு முறையான சிகிச்சை பெறுவீர்கள்.குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.சுக்கிர திசை நடப்பவர்களுக்கு பெண்களால் ஆதாயம் கிட்டும்.
குரு மங்கள யோகம், சகட யோகம் உள்ள அன்பர்கள் பூர்வ புண்ணியசாசனம், சானாதிபதி வலுப்பெற்றிருந்தால் (நல்ல நிலையிலிருந்தால்) மிகப்பெரிய தொகை லாபமாக கிடைக்கும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை : வார்த்தையில் நிதானம் தேவை. எவருக்கும் வாக்குறுதி தரக்கூடாது. மூத்த சகோதரத்தால் பிரச்னை தங்களை தேடி வரும் நேரமிது.சரியான உறக்கம் இராது. தங்களை தாங்களே குழப்பிக்கொள்ளக்கூடாது. அமைதியாக இருக்கவும்.அப்படி இல்லாவிட்டால் நீதிமன்றம் போக வேண்டியிருக்கும்.
கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் (ராகு பகவான் ஸ்தலம்) அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவிலுக்கு ஒரு முறை சென்று வருக!!!


ரேவதி :மனைவியிடம் பிரியம் கொண்டவரும்,அழகான தோற்றம் கொண்டவரும்,எளிமையாக வாழ்பவரும்,தன்னைப்பற்றி மேலாக நினைப்பவரும், நேர்மை,சத்தியம், சத்ருக்களை வெல்லும் குணம் கொண்டவரும், முன் ஜாக்கிரதை உள்ளவரும், 28 வயதில் இருமல் சுரம் போன்றவற்றால் பீடிக்கப்பட்டவரும், கணிதத்தில் வல்லவருமாகிய தாங்கள்

7.10.2009 முதல் 16.11.2009 வரை : இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி குழந்தைகள் மூலம் ஏற்பட்ட மருத்துவச்செலவுகள் குறைந்து கடன் தொந்தரவுகள் தீர்ந்து நிம்மதியான சூழ்நிலை உருவாகும்.தந்தையாருக்கு வைத்திய செலவு ஏற்படும்.மனைவி மூலம் தொந்தரவு ஏற்படும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை : விவசாயத்திலும், முகமைத்தொழிலிலும் உள்ளவர்களுக்கு இது பொற்காலமாகும்.மனைவிமூலமாக வருமானம் தேடிவரும்.மனைவி வழியில் பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.அரசு வழியில் ஆதரவு கிடைக்கும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :குடும்பத்தில்
ஏற்பட்டிருந்த பிரச்னைகள் நீங்கி இளைய சகோதரர், சகோதரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.தங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும்.தந்தை , தந்தைவழி ஆதரவும், ஆதாயமும் கிட்டும்.தங்களின் தாய்மாமனார் உடல்நிலையை பாதிக்கும்.தாய்மாமனுக்கு கெட்ட பெயர் உண்டாகும்.தங்கள உடலில் உள்ள ரத்த அழுத்த நோய்களை பரிசீலினை செய்து கொள்ள வேண்டும்.சிலருக்கு பாதங்களில் காயங்கள் அல்லது நோய் உருவாகும்.மூத்த சகோதரத்தால் திடீர் பணவருவாய் ஏற்படும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை : மனைவியின் கருத்தின் அடிப்படையில் ஒரு சில லாபங்கள் கிடைக்கும்.அரசு வழியில் கண்டனங்களும் அபராதங்களும் ஏற்படும்.வெளிநாடு சென்று வருபவர்கள் அபராதம் செலுத்துவார்கள்.மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் ஆலயம் சென்று வழிபட நன்மை உண்டாகும்.

குறிப்பு: இந்த பலன்கள் அனைத்தும் அவரவர் பிறந்த ஜாதகப்படி 80% பொருந்தும்.

ராகங்களும் அவற்றின் மருத்துவகுணங்களும்

இந்துக்களின் இசைஞானத்தின் வரம்பு மனிதகுலம் மொத்தத்திற்கும் கிடைத்த பொக்கிஷம் ஆகும்.ஏனெனில்,ஒலியின் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பே ராகங்கள் ஆகும்.வீணை,மிருதங்கம்,புல்லாங்குழல்,தபேலா,வயலின் முதலான இசைக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதே மன நிம்மதிக்கும்,மனிதகுல அமைதிக்கும்தான்.இதெல்லாம் மேல்நாட்டினருக்குப் புரியத்துவங்கியுள்ளதால்தான், இந்தியாவின் தனியார் இசைப்பயிற்சிக் குருகுலங்களில் வெளிநாட்டு மாணவ மாணவிகள் நிரம்பி வழிகின்றனர்.


உதாரணமாக, கலாக்ஷேத்திராவில் ரஷ்யா,சீனா,செக்கோஸ்லோவோக்கியா, அமெரிக்கா,பிரான்ஸ்,ஸ்பெயின்,தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் ஒரு அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் இந்துக்கலைகளில் நுண்கலைகள் எனப் போற்றப்படும் பரதநாட்டியம்,வீணைப்பயிற்சி, ராகப்பயிற்சி,கர்நாடக இசை என இந்துநுண்கலைகளில் அளவற்ற ஈடுபட்டுடன் கற்றுக்கொண்டு வருகின்றனர்.


ராகங்களின் மெல்லிய அதிர்வு மற்றும் பாடல்களின் ஒலிவித்தியாசம் நமது உடல் நரம்புகளில் ஊடுருவி ஒலி அதிர்வுகளுக்கு ஏற்றபடி மென்மை அல்லது கடினமடைகின்றன.நரம்புத்துடிப்பைப் பொறுத்து நமது சுவாசமுறை மாறுபடத்துவங்குகின்றது.இந்த மாறுபாடு ரத்த ஓட்டத்தினையும் நன்மைதரும் விதமாக பாதிக்கிறது.இந்தச் செயல்பாடுகள் மூளையின் செயல்பாட்டையே மெல்லியதாக ஆக்குகின்றது.


அம்மாவின் தாலாட்டு குழந்தையின் மனதை மென்மையாக்கி மூளையில் அமைதியை நிலைநாட்டுகின்றது.இதனால் குழந்தை தூங்கிவிடுகின்றது.அம்மாவின் தாலாட்டுப்பாடல் அம்மாவின் மனதையும் அர்ப்பணிப்புடன் இனிமையை உருவாக்குகின்றது.
அதேசமயம்,ஒப்பாரி மனதில் சோகத்தை உருவாக்குகின்றது.
(இவற்றில் பெரும்பாலானவற்றை உலகமயமாக்கல் மற்றும் ஆங்கில மயமாக்கலால் பெரும்பாலனவற்றை இழந்துவிட்டோம்.)


நிம்மதியாகத் தூங்கிட நீலாம்பரி ராகம் உதவி செய்கிறது.ஒரு குறிப்பிட்ட ராகம் ஒன்று நம்முடைய முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த ராகத்தைப் பாடினால் பாடுபவரே தீப்பிடித்து எரிந்து போவாராம்.அப்படி எரிந்து போன இசை மேதைகள் இந்தியாவில் ஏராளம்.இன்று அந்த சூட்சுமம் யாருக்கும் தெரியுமா?
அமிர்தவர்ஷினி ராகம் மழையைக் கொண்டுவருகின்றது.இப்படி கொண்டுவருவதை பிரபல சங்கீத மேதைகளான முத்துச்சாமி தீட்சிதர், செம்மாங்குடி பாலமுரளிகிருஷ்ணா, குன்னக்குடி வைத்தியநாதன் பல முறை பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பாக நிரூபித்துள்ளனர்.

வருணஜபம் செய்தாலும், திருப்பாவையின் ஒரு பாடலான ‘ஆழி மழைக்கண்ணா’ என்ற பாடல் பாடினாலும்(முழுப்பாடல் நமது ஆன்மீகக்கடலில் இருக்கின்றது) மழை வருகின்றது.இம்மூன்றின் உச்சரிப்பு மற்றும் ஒலி ஒத்திசைவும் பாடப்படும் இடத்தில் மழைமேகங்களை கூடச்செய்து மழைபொழியச் செய்கின்றது.
இம்மூன்றிலும் இப்பேர்ப்பட்ட சூட்சும சக்திகள் நிறைந்திருப்பதை ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியவியல் விஞ்ஞானிகள்(Indologists) நிரூபித்துள்ளனர்.

தமிழர்களின் மரபுச்செல்வங்களான தேவாரம், திருவாசகம்,நாலாயிரத்திவ்விய பிரபந்தம்,சவுந்தரிய லஹரி இவை அனைத்தும் மனித மனத்தையும்,இறைவனின் மனத்தையும் உருக்கும் வலிமை மிக்கவை.ஒலிவிஞ்ஞானம் என்ற Fonotics அறிவியலில் மேற்குநாடுகள் இன்று கத்துக்குட்டிகள்; நாமோ மேதைகள்.

எனவே,இந்தப் பெருமைகளை நாம் நமது குழந்தைகளின் மனதில் பதியச்செய்வோம்.
மிகுந்த தன்னம்பிக்கை நிறைந்த இந்தியாவை உருவாக்குவோம்.

வானவியல் உண்மைகளைக் கண்டறிந்த தமிழர்கள்“அண்டற் தொகுதியின் உண்டைப் பிறக்க
நூற்றி யொரு கோடியின் மேல்பட விரிந்தன”
என்பது திருவாசகத்தின் வரிகளாகும்.இதன் அர்த்தம் பூமி உருண்டை வடிவமானது என்பதேயாகும்.

பூமிக்கு தமிழர்களாகிய நாம் நம்முடைய சங்க இலக்கியங்களில் ஞாலம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.ஞாலம் என்ற அழகிய தமிழ்வார்த்தைக்கு தொங்குதல் என்று ஒரு அர்த்தமும் உண்டு.நிறையீர்ப்பு விசையால் பூமி அந்தரங்கத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை உலகின் மூத்த குடியாகிய நம் தமிழ்க்குடி கண்டறிந்துள்ளது.

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் நியூட்டன் இந்த உண்மையைக்கண்டறிந்தார்.
நமது கந்த புராணத்தில் சூரபத்மன் என்ற அரக்கன் ஆயிரம் அண்டங்களை பலயுகங்களாக ஆட்சிபுரிந்தான்.அவனது அக்கிரமத்திற்கு முடிவு கட்டவே முருகக்கடவுள் அவதரித்தார் என படித்திருக்கிறோம்.
இதையே இன்றைய நவீன வானியல் விஞ்ஞானிகள் பல்லாயிரம் அண்டங்கள்(காலக்ஸி) பிரபஞ்சத்தில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.


நாம் வாழும் அண்டத்தின் பெயர் பால்வழித்திரள் எனப்படும் மில்கிவே ஆகும்.நமது அருகில் உள்ள அண்டத்தின் பெயர் அண்ட்ரோமீடா ஆகும்.இந்த அண்ட்ரோமீடாவுக்கு நாம் ஒளி வேகத்தில் (விநாடிக்கு 3,00,000 கி.மீட்டர் வேகத்தில்) சென்றாலே அங்கு சென்றடைய 2000 ஆண்டுகளாகும் என பிரபஞ்சவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ராஜராஜ சோழன் அரசாண்டபோது,இந்தப் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் பிறந்த ஒரு நட்சத்திரத்திலிருந்து புறப்பட்ட ஒளி தற்போதுதான் (கி.பி.2009) நம்மை(பூமியை)வந்தடைந்துள்ளது.அதாவது 20,000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நட்சத்திரத்தொகுதியை நாம் தற்போதுதான் பார்க்கிறோம்.இந்தத்தகவல்கள் நமது வானசாஸ்திர நூல்கள் மற்றும் புராதன ஜோதிடநூல்களில் இருக்கின்றன என்பதை நாம் அறியும்போது இந்துக்களாகிய தமிழர்களாகிய நாம் எப்பேர்ப்பட்ட அறிவுஜீவி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஸ்ரீஇராமச்சந்திரமூர்த்தியின் பிறந்த தேதிபற்றிய நவீன் ஆய்வு முடிவு


இராமபிரான் பிறந்த தேதி பற்றி புதுத் தகவல்

இராமபிரான் கி.மு.5114 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்றுதான் பிறந்தார்.வால்மீகி ராமாயணத்தில் சொன்ன தகவல்கள் அடிப்படையையும், கிரக நிலைகளையும் வைத்துப் பார்க்கும் போது அவரது பிறந்த தேதி ராம நவமியன்று பிறக்கவில்லை எனத் தெரிகிறது.

ராம நவமிக்கு சில மாதங்கள் முன்பாகத் தான் அவர் பிறந்த நாளைக்கொண்டாட வேண்டும் என்று புஷ்கர் பட்நாகர் என்ற ஜோதிட ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இவர்  ஆர்கனைசர் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

ஆதாரம்:தினமலர்,பக்கம் 7.நாள்:-30.9.2009

.