RightClick

பசுவை ஏன் வழிபட வேண்டும்?
இந்த உலகில் பசுவின் உடலில் மட்டுமே சகல இந்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளன.
கடுமையான பாவங்களிலிருந்து மீள பசுவிற்கு ஒருமுறை மட்டும் உணவுஇட்டால் போதும் என்பது ஒரு ஜோதிடப்பரிகாரம்.

காசுபோட்டால் பெப்சி,கோலாபானங்கள் குடிக்கலாம் என்பது மாதிரியான தானியங்கி யந்திரங்கள் வெளிநாடுகளில்பிரபலம்.ஆனால்,ஜப்பானில், இத்தகைய இயந்திரங்களில் பசுவின் பால் கிடைக்கிறது.காரணம் அங்கு ஆரோக்கியம் குறித்து ஏற்பட்டுவரும் விழிப்புணர்ச்சி!!!

இந்தோனிஷியாவில் இறந்தவர்களை எரிக்கும்போது ,ஒரு காகிதத்தில் பசுவின் படத்தை வரைந்து அதையும் இறந்தவர் உடலுடன் சேர்த்தே எரிக்கிறார்கள்.பசுவின் உதவியால் அவர் சுவர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கை.

பாலியில் இறந்த பசுக்களை கவுரவமாக இறுதிச்சடங்குடன் எரிக்கிறார்கள்.

கிரேக்க நாட்டு சிக்கந்தர்லோடி(அதாங்க வரலாற்றில் படித்திருப்போமே)பாரதத்தின் மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது,தன்னுடன் சுமார் 1 லட்சம் உயர்ஜாதிப்பசுக்களையும் ஓட்டிச்சென்றுவிட்டான்.காரணம்,அந்நாட்டின் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு.

பசுவின் சிறுநீர் போன்ற கிருமிநாசினியை நம்மால் விஞ்ஞானரீதியாக உருவாக்கிடமுடியாது.அதன்மறுபெயர் கோமூத்திரம் ஆகும்.கோமூத்திரத்தை சிறிதுதலையில் தெளித்துக் கொள்வதே கங்கையில் குளித்தபலன் ஆகும்.

பசுவைப் பூஜித்தால் மும்மூர்த்தி தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு,சிவன் இம்மூவரையும் பூஜித்தபலன் கிடைக்கும்.
கி.பி.1947 ஆம் வருடம் 1000 மனிதர்களுக்கு 450 கால்நடைகள் நமது பாரதத்தில் இருந்தன.இது தற்போது கி.பி.2009இல் 1000:50 ஆகக் குறைந்துவிட்டது.அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் இது 1000:20 ஆகக்குறைந்துபோகக்கூடும்.

பசுவுக்கு ஒரே ஒரு முறை அகத்திக்கீரை தானம் செய்தாலே நாம் இப்பிறவியில் செய்த கடும் பாவங்கள் தீர்ந்துவிடும்.

பசுவை ஒரு முறை வலம் வந்தால் இந்த உலகை ஒரு முறை வலம் வந்ததற்குச் சமம்.

பசுவசிக்கும் மாட்டுத்தொழுவத்தில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபிக்கும் மந்திரங்கள் மற்றும் தர்மகாரியங்கள் நூறுபங்கு பலன்களைத் தரும்.

இன்னும் சில ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு ஏற்படப்போகும் நாகரீக வளர்ச்சியால் சில இயற்கை மாறுதல் ஏற்படும்.இதனால்,இந்த உலகம் முழுவதும் சில விபரீதங்கள் ஏற்படும்போது பசுக்கள் இருக்குமிடம் மட்டும் எந்த ஒரு பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் வெளியிட்டுள்ள ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை தெரிவிக்கின்றது.
பசுவைக் காப்போம்;ஒரு பசுமடம் அமைத்தால்,அதில் நான்கு பங்கு லாபம் கிடைக்கும்.அதாவது,ஒரு பசுவை பராமரிக்க ஒரு மாதத்துக்கு ரூ.20,000/-செலவாகும் எனில்,அதே மாதத்திலிருந்து ஒரு மாதத்துக்கு ரூ.1,00,000/-சம்பாதிக்கமுடியும் மிக சுலபமாக!!!
இதுபற்றி சென்னையில் சேத்துப்பட்டுபகுதியில் கோசாலா என்ற அமைப்பினர் பயிற்சியளித்துவருகின்றனர்.

ஊருக்கு ஒரு கோசாலை அமைப்போம்;வருமானத்தோடு,புண்ணியத்தையும் சேர்ப்போம்.