RightClick

உலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட நமது சனாதன தர்மம்நமது பாடப்புத்தகங்களில் இருக்கும் வரலாறு நமது நாட்டின் தேசபக்தி நிறைந்த வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்டவையல்ல; நம்மைச் சுரண்டி கொழுத்த இங்கிலாந்துக்காரர்களால் எழுதப்பட்டவை.இதனால்தான், டீன் ஏஜ்ஜை முடிக்கும் இந்திய ஆண் மற்றும் பெண் தன்னம்பிக்கையில்லாமல் இருக்கின்றனர்.கி.பி.2009 மார்ச்சில் வெளிவந்த பத்தாம் வகுப்புப்பொதுத் தேர்வு முடிவுகளால் தமிழ்நாட்டில் பத்தாம்வகுப்பு முடித்தவர்களால் செய்யப்பட்ட தற்கொலை முயற்சி சுமார் 10,000க்கும் கொஞ்சம் அதிகம்.
மேல்நாட்டினர் நம்மையும் நமது இந்துதர்மத்தின் ஆழத்தையும் உணர்ந்து நமது பாடத்திட்டம், கல்வி முறை, பண்பாடு இவற்றைக் கெடுக்கும் வேலைகளில் மிகத்தெளிவாக இறங்கினர்.இதன் விளைவாகத்தான் ஆரியர் திராவிடர் என்ற கட்டுக்கதை கிளம்பியது.காங்கிரஸ், பகுத்தறிவுக்கட்சிகள், கம்யூனிஸ்டுகள் இவை சிந்தனைமுறையில் இந்த நாட்டுக்கும், நமது பண்பாட்டுக்கும் எதிராக செயல்பட்டுவருகின்றனர்.
.
அடிப்படையில், வரலாறு எழுதும் முறையில் உள்ள இந்த வேறுபாடு ஐரோப்பியர்களுக்குத்தெரியவில்லை.நம் நாட்டில் வரலாற்று நூல்கள் ஏதுமில்லை என வாதிட்டனர்.முதலாம் வகுப்பு மாணவன் ஒருவன், பி.எச்.டி., வாங்கிய நிபுணரை “ஒன்றும் அறியாதவர்” என கேலி செய்வதற்கு ஒப்பாகும். ஐரோப்பிய அமெரிக்கரை உயர்வாக மதிக்கும் ஒரு சில நம்மவர்களோ, இதனை நம்பி, நம் முன்னோர்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர்.இந்நிலை இன்றும் தொடர்கிறது.நம்மைக்குறை கூறும் ஐரோப்பியர்களுக்கு, அவர்களது வரலாறு ஓரளவாவது தெரியுமா? 2000 ஆண்டுகளுக்கு முன் அவர்களது கலாச்சாரம் , வேர்கள் என்ன எது என்று தெரியுமா?
John thorn, Head-Master,Rapton school & Rojer Lockyer lecture in History,Goldsmith college,University of London எழுதிய ‘ A History of England’ (England Library Education 1963, பக்கங்கள் 35,36) என்ற நூலில் “கி.பி.எட்டாம் நூற்றாண்டுக்கு(1200 ஆண்டுகள்) முந்தைய இங்கிலாந்தின் வரலாறு என்ன என்பதே தெரியாது.அந்த வரலாற்றை எழுதியதாகக்கூறப்படும் ஆங்கிலேயரான நின்னியஸ், தான் எழுதிய இங்கிலாந்து வரலாறு ஒரு குப்பை என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஏங்க்லோ ஸேக்ஸன்களுகு(ஆங்கிலேயருக்கு) ஒரு வருடமானது எந்த மாதத்தில் எந்த நாளில் துவங்கும் என்பது கி.பி.8 ஆம் நூற்றாண்டில் தெரியாது”என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனல் நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வரலாற்று நூல்களான புராணங்கள், இதிகாசங்கள் எழுதப்பட்டுள்ளன.நாடெங்கும் மக்களுக்கு இவற்றைக் கொண்டு செல்ல சூதர்களும், மகதர்களும் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் தன்னலம் கருதாது, மழைக்காலம் தவிர்த்து ஓராண்டில் எட்டு மாதங்களும் அனைத்து கிராமங்கள், நகரங்களில் தங்கி மக்களுக்கு வரலாற்றினை விவரித்தனர்.மன்னர்களும் வரலாற்றை தினமும் படித்து வந்தனர்.மேலும் வரலாற்று நூல்கள் தெய்வீகமும் புனிதமும் நிறைந்ததாக மதிக்கப்பட்டன.இந்நூல்கள் நாடெங்கும் லட்சக்கணக்கில் வெளிவந்துள்ளன. இவற்றில் எண்ணற்றவை பாரதம் வந்த வெளிநாட்டு யாத்ரீகர்களால் கொண்டு செல்லப்பட்டன.


சீனப்பயணியான யுவான் சுவாங் கி.பி.630 இல் பாரதம் வந்தார்.15 ஆண்டுகள் கழித்து சீனா திரும்பும்போது 657 க்கும் அதிகமான ஓலைச்சுவடி நூல்களை எடுத்துச்சென்றார்.(The Life of Hiuen – Tsiang by Shaman Hwili & Samuel Beal, Munsiram Manoharlal publishers,2003,பக்கங்கள் 11,213,214)பக்தியார் கில்ஜி போன்ற வெளிநாட்டவர் நாலந்தா பல்கலைக்கழக நூல்களை எரித்தது போன்ற செயல்களால் எண்ணற்ற ஓலைச்சுவடிகள் மறைமுகமாக எடுத்துச்செல்லப்பட்டன.
இன்றைக்கும் ஐரோப்பா,வட அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாரத ஓலைச்சுவடிகள் உள்ளன.கடந்த இருநூறு ஆண்டுகளில் நம்மவரே ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்டனர்.கவனிப்பாரற்று கரையான்களுக்கு இரையானவையும் ஏராளம்.அவற்றின் காலமும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும்.மாறாக ஐரோப்பாவில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு வரலாறும் தெரியாது.வரலாற்று நூல்களும் கிடையாது.ஆகவே, நம் முன்னோர்களுக்கு வரலாற்று ஞானம் கிடையாது எனக்கூற அவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.
இந்த உண்மைகளை நமது இந்தியாவின் 4,50,000 கிராமங்களிலும் எல்லா பள்ளி, கல்லூரி,டுடோரியல்களிலும் அடுத்த 1000 ஆண்டுகளுக்குப் போதிக்க வேண்டும் என்பதே எனது ஆசை!!!