RightClick

காலசர்ப்ப தோஷம் என்றால் என்ன? அதிலிருந்து மீள்வது எப்படி?முற்பிறவியில் அதிக புண்ணியம்செய்திருந்தால்,இந்த பிறவியில் நற்செல்வம்,அதிகாரம்,புகழ்,அந்தஸ்து,நற்புத்திரர்,வீடு,வாகன வசதிகள் அமையும்.
முற்பிறவியில் அதிகபாவம் செய்திருந்தால் இப்பிறவியில் போராட்டம், சரியான தருணத்தில் உதவி கிடைக்காமை, ஏழ்மை, வறுமை என வாழ்க்கை உழலும்.
யாராக இருந்தாலும் பாவமே செய்யாமலிருக்க முடியாது.அதில் விலங்குகள்,பறவைகள் இவற்றைத்துன்புறுத்தியிருந்தாலோ, கொன்றிருந்தாலோ அது மிகப்பெரியபாவமாகும்.அதிலும், நாகங்களைக் கொன்றிருந்தால் அதுவே கொடும்பாவமாகக் கருதப்படுகிறது.இது பற்றி கருடபுராணம்,விதுரநீதி,அர்த்தசாஸ்திரம்,சுக்கிரநீதி போன்ற புராணகாலதர்மநூல்கள் நிறைய விளக்கம்கொடுத்துள்ளன.
சிவனின் கழுத்தை அலங்கரிக்கும் பாம்பு/நாகம் விடும் சாபம் நமது ஏழுத்தலைமுறைக்கும்,நமது அடுத்தடுத்த பிறவிக்கும் பெரும்பாதிப்பைத்தரும்.
அனுபவத்தில் தாத்தா,மகன்,பேரன்,கொள்ளுப்பேரன் என வாழையடிவாழையாக காலசர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஜாதகங்களை நிறைய்ய பார்த்துவருகிறோம்.இப்படிப்பட்ட தோஷங்கள் எப்படி ஏற்படுகின்றன?
இரண்டு பாம்புகள் இணைந்திருக்கும் போது (கிராமங்களில்) அவற்றைக் கொல்லமுயலுகின்றனர்.அப்படி முயலும்போது ஒன்றை மட்டும் கொன்றால்(மற்றது தப்பித்துவிட்டால்) அது மிகக்கொடூரமானதாக பாவமுடையதாக இருக்கின்றது.இந்தப்பாவம் செய்தவர்கள்தான் மறுபிறவியில் லக்னத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்கப் பிறக்கின்றனர்.விளைவு? மணவாழ்க்கையில் நிம்மதியின்மை!!!
பாம்புகளால் உங்களுக்கு ஆபத்து என நீங்கள் உணரும்போது மட்டும் அவற்றைத் தாக்கினாலோ,கொன்றாலோ அது பெரிய தோஷம்தராது.
அப்படி அடிக்கும்போது அது உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என்பதைப்போல தனது வாலால் மூன்றுமுறை தரையில் அடித்துச் சத்தியம் செய்யும்.அப்போது அதை உயிரோடு விட்டுவிட்டால் நீங்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து தப்பித்தீர்கள்.(தமிழ் சினிமாவில் தான் நாகங்கள் பழிவாங்கும்.நிஜத்தில் அப்படி நிச்சயம்கிடையாது).இல்லாவிட்டால், அது உங்களின் அடிதாங்காமல் உயிர்விட்டால், சாபம் ஈந்துவிட்டு இறக்கும்.
இந்த சாபமே, 7 தலைமுறைக்கும் பிறந்த ஜாதகத்தில் ராகு,கேது கிரகங்களுக்கு இடையில் மற்ற 7 கிரகங்களும் சிக்கும் விதமாக அதுவும்,கடிகாரச்சுற்றுப்படி கேதுவை நோக்கிச் செல்லும்விதமாக தலைமுறைகள் பிறக்கும்.
கொன்றவரது மறுபிறவிகளிலும் இதே போன்றஜாதக நிலையில்பிறப்பார்.
காலசர்ப்ப தோஷத்தில் பிறந்த ஒருவர் வாழ்வில் 35 வயதுக்குமேல் தான் சம்பாதிக்க ஆரம்பிப்பார்.யாரிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி பழகவேண்டும்?என்ற ஆளுமைத் திறன் 35 வயதுவரை வராது.திருமணம் 30வயதைக்கடக்கும்.கண்பார்வைத்திறன் குறைபாடு,தலைவலி போன்ற உபாதைகள் நிரந்தரமாக இருக்கும்.
நாகம் எனப்படும் பாம்புகளை அடிப்பதே பாவம்.நாம் வழிபடவே அவை உருவாக்கப்பட்டுள்ளன.(மேல்நாடுகளில் பைபிள் கதைகளில் பாம்பு சாத்தானின் வடிவமாக மதிக்கப்படுகிறது.அவர்கள் இப்பிறவியில் அடுத்த பிறவியில் காலசர்ப்ப தோஷத்தால் அவதிப்படுவர்)
எனக்குத் தெரிந்த ஒருவர், அவரது மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது, ஒரு பாம்புப்புற்றை இடித்தும்,கொதிக்கும் தண்ணீர் ஊற்றியும்,அந்தப் புற்றிலிருந்து வெளிவந்த பாம்புகளைக் கொல்லவும் செய்தார்.
அவரது மனைவி பிரசவித்தது முதல் இன்று வரை அவர் படும் மனவேதனைக்கு அளவே இல்லை.ஆம்!அவருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது.அந்தப் பெண் குழந்தையின் முழு உடலும் பாம்பின் மேல் தோல் போல இருந்தது.இப்போது அந்த பெண்குழந்தை பருவமடைந்துவிட்டாள்.சில லட்சரூபாய்களை செலவு செய்தும் அந்தப்பெண்ணை பெண்ணாக ரசிக்கக்கூட அந்த பெற்றோர்களால் முடியவில்லை.
கி.பி.2003 ஆம் வருடம் அந்த வீட்டுக்கு ஜாதகம் பார்க்கப்போயிருந்தேன்.அந்தப்பெண்ணைப் பார்த்ததும் நான் அழுதே விட்டேன்.அவளுக்கு என எப்படி திருமணம் அமையும் ?என நானே கேட்டுக்கொண்டேன்.
நான் சொன்ன பரிகாரம் இதுதான்:சூரியகிரகணமும்,சந்திர கிரகணமும் வரும் நாட்களில் ஆந்திராவிலுள்ள திருக்காளஹஸ்தி கோவிலில் இருங்கள்.முடிந்தால் அங்கேயே ஓராண்டு தங்குங்கள்.திருக்காளஹஸ்தி சிவபெருமானை வழிபடுங்கள்.அங்கேயே அன்னதானம்,வஸ்திரதானம் செய்யுங்கள்.அந்தப்பெண்ணும்,அவளது அப்பாவும் அந்த ஊரில் உள்ள புற்றுக்களில் வெள்ளி,செவ்வாய்க்கிழமைகளில் பால் ஊற்றி மனப்பூர்வமாக மன்னிப்புக்கேளுங்கள்.என்றேன்.
ராகுகாலங்களில் அம்பாள் சன்னதியில் எல்லாநாளும் வரும் ராகுகாலத்தில் எலுமிச்சையில் தாமரைநூலில் நெய்தீபம் ஏற்றிவாருங்கள்.ராகு காலம் முழுக்க அங்கேயே இருந்து மனப்பூர்வமாக மன்னிப்புக்கேளுங்கள்.
சில வருடங்கள் கழிந்தது.இப்போது அந்தப்பெண் குழந்தையின் உடலின் மேல்தோல் சராசரியாகிவிட்டது.இப்போது மகாலட்சுமிபோல இருக்கிறாள்.