சிவபெருமானை ஏன் பூஜிக்க வேண்டும்?
சும்மாஇருப்பதற்குப் பதில் சிவபெருமானைப் பூஜிக்கலாமே!காலம் கலி(துன்பம்)காலமாக இருக்கிறது.எனவே, இந்த துன்ப(கலி)காலத்தில் இறைநாமஜபம் மட்டுமே நம்மை நிம்மதியாக வாழ வைக்கும்.
சரி! பூஜிப்பதால் என்ன கிட்டும்?
மனதில் நல்லெண்ணங்கள் உருவாகத்துவங்கும்.இதனால்,நேர்மறையான(பாசிட்டிவ்) நன்மைகள் நம்மை வந்தடையும்.
நான் வேலை பார்க்கிறேன்.நான் எப்படி எப்போதும் சிவபூஜை அல்லது சிவ மந்திரம் ஜபிப்பது?
எப்போதும் முடியாதுதான்.தமிழ் மாதப்பிறப்பு(அன்று சூரியன் ஒரு ராசியில்நுழைகிறார்.அதனால், சூரியனது பலம் அன்று அதிகமாக இருக்கும்.நமது மந்திரஜபம் நமக்கு சூரியபலத்தை ஜபத்தால் ஈர்த்துத் தரும்),பவுர்ணமி,அமாவாசை(இருநாட்களிலும் ஆத்மக்காரகன் எனப்படும் சூரியனும்,மனக்காரகன் எனப்படும் சந்திரனும் முழு வலிமையோடு செயல்படுவர்),தமிழ் வருடப்பிறப்பு(சூரியன் உச்சமடையும் முதல் நாள்) = இந்த நாட்களில் குறைந்தது 5 நிமிடங்களாவது ஏதாவது ஒரு கடவுளின் மந்திர ஜபத்தை ஜபித்தாலே நாம் இந்நாள் வரை அறிந்தோ,வேண்டுமென்றேயோ, தெரியாமலேயோ செய்த பாவங்கள்நீங்கும்.
சரி! சிவபெருமானை எதைக்கொண்டு பூஜிப்பது?
வில்வம்,சங்கு,ஆதிரைக்காலி இவற்றால் பூஜிப்பது மிகவும் நல்லது.
எப்படி சிவபெருமானை பூஜிப்பது?
“பானுலிங்காய நமஹ” என சிவனைத் துயிலெழுப்பவேண்டும்.
“சந்த்ரமௌலியாய நமஹ” என சுத்தம் செய்ய வேண்டும்.
“அக்கினி ஹஸ்தாய நமஹ” என அர்க்கியம்(சிவலிங்கம் மீது சுத்தமான நீரைவிடுவது) செய்யவேண்டும்.
“நாட்யலிங்காயநமஹ” என பாதபூஜை செய்ய வேண்டும்.
“தீர்த்தலிங்காய நமஹ” எனதிருவாய் மலரச் செய்ய வேண்டும்.
“ஜம்புலிங்காய நமஹ” என சிவபெருமானை அபிஷேகம் செய்யவேண்டும்.
“ஆத்மலிங்காய நமஹ” என அலங்காரம் செய்ய வேண்டும்.
“சங்கராபரணாய நமஹ” என சிவபெருமானுக்கு ஆபரணம் அணிவிக்க வேண்டும்.
இப்போது ருத்ரசமகம் முதலான வேதப்பகுதியை (திருவாசகம்,தேவாரம் அல்லது ஏதாவது ஒரு சிவஅம்சம் சார்ந்த பாடல் அல்லது புராணம்) பாராயணம் செய்ய வேண்டும்.
“அம்ருதலிங்காய நமஹ” என நைவேத்தியம் செய்ய வேண்டும்.
“சங்கரபில்காய நமஹ” என சங்கநாதம் செய்ய வேண்டும்.
“சக்திலிங்காய நமஹ” என அர்ச்சனை செய்ய வேண்டும்.
“ஸ்வஸ்தி லிங்காய நமஹ” என சிவபெருமானை ஆரத்தி எடுக்க வேண்டும்.
“மகாலிங்காய நமஹ” என ஜபிப்பதால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுக்கு பொறுத்தருளும் படி வேண்ட வேண்டும்.
“அகிலாண்டேச்வரி சமேத ஜம்பு லிங்காய நமஹ” என சரணாகதி யடைய வேண்டும்.
“சமஸ்த்த பரிவார லிங்காய நமஹ”என சிவபூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
“மீனாட்சி சமேத சொக்கலிங்காய நமஹ” என சிவபெருமானை திருப்பள்ளி கொள்ளச் செய்ய வேண்டும்.
“ஹேமலிங்காய நமஹ” என ஜபம்செய்ய வேண்டும்.
“கங்காதராய நமஹ”எனசிவனை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
“சிவலிங்காய நமஹ” என சிவ பெருமானை வேண்டிக்கொள்ள வேண்டும்.