RightClick

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(உத்திராடம்,திருவோணம்,அவிட்டம்)

அபூர்வ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

உத்திராடம் : கர்வமும், செல்வ வளமும் கொண்டவரே!வர்த்தக நோக்கமும் சுறுசுறுப்பும் தொடை/முழங்கால்/கால்களில் மச்சமும் கொண்டவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை : கடந்த 40 நாட்களாக மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கோபதாபங்களுடன் பலருடன் சண்டை சச்சரவு ஏற்பட்டிருக்கும்.குறிப்பாக மனைவி,தொழில் பங்குதாரர்கள், உடன்பணிபுரிவோர்- இவர்களிடம் பிரச்னை ஏற்பட்டிருக்கும்.
இந்த காலகட்டத்தில் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து வைத்துக்கொள்வீர்கள். மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமைக்கான வழிகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி கடந்த காலத்தில் இருந்த பணத்தட்டுப்பாடு விலகி சரளமான பணப்புழக்கம் ஏற்படும்.தந்தைவழி மருத்துவச்செலவுகள் குறையும்.கடந்த காலங்களில் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்திருக்கும்.இப்போது அவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை :தொழில் நிலையில் சில மாற்றங்களைக்காண்பீர்கள்.தொழில் அபிவிருத்திக்காக சில இடங்களில் கடன் பெறுவீர்கள். வாகனப்பயணங்களில் எச்சரிக்கை!
முகமைத்தொழிலில் ஈடுபடுவோர் இருமடங்கு வருமானமடைவார்கள்.ராகு திசை நடக்கும் அன்பர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு பெறுவார்கள்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை: விலகியிருந்த , கண்டுகொள்ளாமலிருந்த உறவினர்கள் தேடிவருவர்.விற்பனையாகாமலிருந்த சொத்துக்கள் விற்பனையாகும்.சனிதிசை, சனி புக்தி நடைபெறுபவர்களுக்கு தனலாபம் கிடைக்கும்.
புதன் திசை, புதன் புக்தி நடப்பவர்களுக்கு மிகப்பெரிய மாரக கண்டம் உள்ளது.இவர்கள் வாழும் இடத்தில் உள்ள வடக்குபார்த்து ஆயுதம் ஏந்தி அமர்ந்துள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.சிலருக்கு புதிய மகிழ்ச்சி தொடர்புகள் கிடைக்கும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை : மின்சாரம்,அடுப்பு,நீர்நிலைகள் பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை.கடந்த காலங்களில் உடம்பில் ஏற்பட்ட காய வடு பற்றி மருத்துவரிடம் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை பெற வேண்டும்.இளைய சகோதரத்தால் சச்சரவு ஏற்படும்.

திருவோணம் : தெய்வீக வழிபாடுகளில் பற்றுமிக்கவரும், தர்ம சிந்தனை கொண்டவரும் தனவானும் கர்வமுடன் நடந்து கொள்பவரும்,காம குணம் கொண்டவரும், சிறந்த அறிவாளியும் மந்த சுபாவமுடையவரும் உடைய தாங்கள்...
7.10.2009 முதல் 16.11.2009 வரை :கடந்த காலங்களில் அதிக வேலைப்பளுவால் உடலில் சோர்வும் அசதியும்,எதிலும் பிடிப்பு இல்லாமல் விரக்தி மனப்பான்மையுடனும் இருந்திருப்பீர்கள்.இந்நிலை மாறி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பொங்கும்.தடைபட்ட காரியங்கள் நீங்கி சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.நீதிமன்றத்தில் இழுவையில் உள்ள வழக்குகள் சாதகமாகும்.சுபவிரையம் உண்டு.
16.11.2009 முதல் 23.12.2009 வரை :தந்தையால் விரையம் உண்டு.தொல்லைகளும் ஏற்படும்.தாய், நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது.முறைதவறிய உறவுகள் ஏற்படும்.குடும்பத்தில் வாக்குவாதம் தவிர்க்கவும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.உறவினர், நண்பர்களிடையே மதிப்பு ஏற்படும்.சனிதிசை, சனி புக்தி நடப்பவர்களுக்கு பெரும்தன லாபம் ஏற்படும்.வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.சிலருக்கு லாட்டரி போன்ற பரிசு கிடைக்கும். தந்தைவழி பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து சுமுகமான முறையில் நட்பு ஏற்பட்டு லாபம் உங்களை வந்தடையும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை : தொழில் லாபகரமாக இயங்கும்.இடம்விட்டு இடம் மாற நினைப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.கடன் தொல்லை ஏற்படும்.காதல் வசப்பட்டு தங்களை குழப்பிக்கொள்ளாதீர்கள்.
அவிட்டம்: கோபத்தின் பிரதிநிதிகளே! அவசரபுத்தியும், மனைவியின் பேச்சுக்கு மதிப்புதருபவர்களே! கம்பீரத்தோற்றமும், உடலில் அடர்ந்த ரோமங்கள் உள்ளவரும், செல்வமும் செல்வாக்கு பெற்றவரும், முட்டிக்கால்களில் மச்சமும் கொண்டவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை :கடந்த ஆண்டுகளில் இருந்த நிலையில்லாத தன்மையும், பிறரை நம்பி செயல்பட்ட செயல்களில் வீண் அலைச்சல்களும், விஷமிருகங்கள்-வண்டுகளால் ஏற்பட்ட காயங்கள் மறக்கமுடியாதவை.
கடந்த 40 நாட்களாக தொழிலில் நல்ல வாய்ப்புகளும் பெரிய திட்டங்களும் வழக்குகளில் எதிரியை வென்றிருப்பீர்கள்.
இனி, தாயார், சகோதர சகோதரிகளாலும் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும்.வாக்குறுதி தராதீர் எவருக்கும்! பணம் கொடுக்கல் வாங்கலில் மந்த நிலை ஏற்படும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை :தொழில் வளர்ச்சி உண்டு.கடன்களை திருப்பி செலுத்துவீர்கள்.பூர்வீக சொத்து பிரச்னைகள் நீங்கும்.குழந்தைகள் வழியிலும், ஆடம்பரப்பொருட்கள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :இக்காலம் தங்களுக்கு ஒரு பொற்காலமாகும்!!!
தங்களைக்கண்டு ஓடி ஒளிந்தவர்கள், எதிராக செயல்பட்டவர்கள் தங்களை வணங்கி வாழ்த்துவார்கள். கடன்கள் குறையும்.புதிய நட்புகள் அறிமுகமாகும்.தொழில் வளர்ச்சிக்கு பலர் உதவுவர்.சிலர் தொழில்ஸ்தானங்களை மாற்றியமைப்பீர்கள்.விற்காமலிருந்த நிலம் விற்பனையாகும்.தடைபட்ட திருமணம் நிச்சயமாகும்.தொழில் லாபங்கள் குறையும்.தொழில் அபிவிருத்திக்காக முதலீடு முடக்கும் சூழ்நிலை உண்டாகும்.நரம்பு சார்ந்த நோய்கள்,ரத்த அழுத்த நோய்கள் வந்து நீங்கும்.சிலருக்கு தோல்வியாதி அறிகுறி தென்படும்.
முழுமையான மகிழ்ச்சியான பலன்கள் பெற திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசித்தீர்த்ததில் உள்ள சிவலிங்கத்தை வழிபட சிறப்பான பலன்கள் பெற்று வளமுடன் வாழ்க!!!