RightClick

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(உத்திரட்டாதி,ரேவதி)

அபூர்வ செவ்வாய் பெயர்ச்சிப்பலன்கள்

உத்திரட்டாதி :சொல்வாக்கும், செல்வாக்கும் பெற்றவரும்,பக்திமானும்,கல்வியில் சிறந்தவரும், சஞ்சலத்துடன் வாழ்பவரும் ,இழிவான நண்பர்களைக் கொண்டவரும்,நண்பர்களின் வார்த்தைகளை கேட்பவரும்,தாராளமனம் கொண்டவரும்,பாதங்களில் காயத்தழும்பும் மச்சங்களும் கொண்டவருமான தாங்கள். . .

7.10.2009 முதல் 16.11.2009 வரை : எடுத்த முயற்சிகளில் தோல்வியும், தங்கள் பேசிய வார்த்தைகளால் மனக்கசப்பும், வண்டி வாகனங்களில் செல்லும்போது காயங்களும் ஏற்படக்கூடிய காலகட்டமிது.கவனமுடன் செயல்படவேண்டும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை :நண்பர்களால் ஆதாயமும், இருப்பிடத்தில் மாற்றங்களும், மனைவி குழந்தைகளால் மருத்துவச்செலவும்,தந்தையாருக்கு உஷ்ணசம்பந்தப்பட்ட நோய்கள் வருகைதந்து நீங்கும்.தொழிலில் பழைய நிலையை மாற்றி புதிய தொழில் செய்ய நினைப்பீர்கள்.பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை நீங்கி லாபம் அடைவீர்கள்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை : தங்கள் நிலை உயரும்.பதவி உதவி சிலருக்கும், வெளிநாட்டுப்பயணம் சிலருக்கும் கிட்டும்.ஏற்கனவே உடலில் இருந்த நரம்பு சார்ந்த பிரச்னைகளுக்கு முறையான சிகிச்சை பெறுவீர்கள்.குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.சுக்கிர திசை நடப்பவர்களுக்கு பெண்களால் ஆதாயம் கிட்டும்.
குரு மங்கள யோகம், சகட யோகம் உள்ள அன்பர்கள் பூர்வ புண்ணியசாசனம், சானாதிபதி வலுப்பெற்றிருந்தால் (நல்ல நிலையிலிருந்தால்) மிகப்பெரிய தொகை லாபமாக கிடைக்கும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை : வார்த்தையில் நிதானம் தேவை. எவருக்கும் வாக்குறுதி தரக்கூடாது. மூத்த சகோதரத்தால் பிரச்னை தங்களை தேடி வரும் நேரமிது.சரியான உறக்கம் இராது. தங்களை தாங்களே குழப்பிக்கொள்ளக்கூடாது. அமைதியாக இருக்கவும்.அப்படி இல்லாவிட்டால் நீதிமன்றம் போக வேண்டியிருக்கும்.
கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் (ராகு பகவான் ஸ்தலம்) அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவிலுக்கு ஒரு முறை சென்று வருக!!!

ரேவதி :மனைவியிடம் பிரியம் கொண்டவரும்,அழகான தோற்றம் கொண்டவரும்,எளிமையாக வாழ்பவரும்,தன்னைப்பற்றி மேலாக நினைப்பவரும், நேர்மை,சத்தியம், சத்ருக்களை வெல்லும் குணம் கொண்டவரும், முன் ஜாக்கிரதை உள்ளவரும், 28 வயதில் இருமல் சுரம் போன்றவற்றால் பீடிக்கப்பட்டவரும், கணிதத்தில் வல்லவருமாகிய தாங்கள்

7.10.2009 முதல் 16.11.2009 வரை : இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி குழந்தைகள் மூலம் ஏற்பட்ட மருத்துவச்செலவுகள் குறைந்து கடன் தொந்தரவுகள் தீர்ந்து நிம்மதியான சூழ்நிலை உருவாகும்.தந்தையாருக்கு வைத்திய செலவு ஏற்படும்.மனைவி மூலம் தொந்தரவு ஏற்படும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை : விவசாயத்திலும், முகமைத்தொழிலிலும் உள்ளவர்களுக்கு இது பொற்காலமாகும்.மனைவிமூலமாக வருமானம் தேடிவரும்.மனைவி வழியில் பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.அரசு வழியில் ஆதரவு கிடைக்கும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :குடும்பத்தில்
ஏற்பட்டிருந்த பிரச்னைகள் நீங்கி இளைய சகோதரர், சகோதரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.தங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும்.தந்தை , தந்தைவழி ஆதரவும், ஆதாயமும் கிட்டும்.தங்களின் தாய்மாமனார் உடல்நிலையை பாதிக்கும்.தாய்மாமனுக்கு கெட்ட பெயர் உண்டாகும்.தங்கள உடலில் உள்ள ரத்த அழுத்த நோய்களை பரிசீலினை செய்து கொள்ள வேண்டும்.சிலருக்கு பாதங்களில் காயங்கள் அல்லது நோய் உருவாகும்.மூத்த சகோதரத்தால் திடீர் பணவருவாய் ஏற்படும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை : மனைவியின் கருத்தின் அடிப்படையில் ஒரு சில லாபங்கள் கிடைக்கும்.அரசு வழியில் கண்டனங்களும் அபராதங்களும் ஏற்படும்.வெளிநாடு சென்று வருபவர்கள் அபராதம் செலுத்துவார்கள்.மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் ஆலயம் சென்று வழிபட நன்மை உண்டாகும்.
குறிப்பு: இந்த பலன்கள் அனைத்தும் அவரவர் பிறந்த ஜாதகப்படி 80% பொருந்தும்.