RightClick

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிபலன்கள்(விசாகம்,அனுசம்,கேட்டை)

செவ்வாய் பெயர்ச்சிப்பலன்கள்:


விசாகம் : கல்வி கற்பதில் ஊக்கம் உள்ளவரும், தகுதிக்கு மீறிய காரியங்களை சாதிக்க விரும்புபவரும், குள்ளமானவரும், சண்டைப்பிரியரும், செல்வந்தரும், சாமர்த்தியமாகப்பேசுவதில் திறமையும் கொண்டவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை : இதுவரை தங்களைக் கண்டும் காணாமல் இருந்து வந்த தங்கள் உறவினர்களும் நண்பர்களும் தங்களைத் தேடி வருவர். தொழில் முடக்கம் நீங்கும்.மனபயம் நீங்கும். சில புதிய முடிவுகள் எடுப்பீர்கள்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை :தந்தைவழியில் மனக்குழப்பங்களும் மருத்துவச்செலவுகளும் வரும்.விரையச்செலவுகள் தவிர்க்க முடியாதவை.பெண்களால் அவப்பெயர் ஏற்படும். சிலருக்கு மூத்த சகோதர வகையில் பணவரவு உண்டு.

23.12.2009 முதல் 13.3.2010 வரை : உங்களின் பிறந்த ஜாதகத்தில் விபரீத ராஜ யோகம் உள்ளவர்களுக்கும், சனி திசை அல்லது புக்தி நடப்பவர்களுக்கும் எதிர்பாராத வகையில் வருமானமும் பதவிகளும் கிடைக்கும்.எவருக்கும் வாக்குறுதி வழங்கக்கூடாது.சிலருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.எதிரிகள் செய்யும் காரியங்களால் உங்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை : குடும்பத்தில் அமைதியற்ற நிலை உருவாகும்.பலருடைய கண்டனத்திற்கும், விமரிசனத்துக்கும் ஆளாவீர்கள்.குழந்தைகள் மற்றும் மனைவி வழியில் விரையங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
அனுஷம் :படிப்பதில் ஆர்வமும், உங்களுக்கு தீங்கு செய்தவருக்கும் நன்மைகள் மட்டுமே செய்ய விரும்பும் தாங்கள்,மேன்மையான பதவி அந்தஸ்தில் வாழ்வீர்கள்.பிறர் மனம் கோணாமல் நடப்பவர்கள்.தர்ம சிந்தனையும் ஊர் சுற்றுவதில் பிரியமும் அதிக புத்திர சந்தானமும் உடையவ்ர்கள் தாங்கள்!!!

7.10.2009 முதல் 16.11.2009 வரை :தங்களுடைய செயல்பாடு சுறுசுறுப்பற்ற நிலையும் மந்தமான உடல் நிலையும் கொண்டிருப்பீர்கள்.இளைய சகோதரத்தால் கருத்துவேறுபாடு ஏற்படும்.தம்பதியரிடையே தவறாகப்புரிந்து கொள்ளுதல் ஏற்பட்டு கருத்துவேறுபாடு உருவாகலாம்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை : எதிர்பாராத பணவரவும் புதிய நட்பும் ஏற்படும்.குழந்தைகளால் கல்வி சார்ந்த சுபச்செலவு ஏற்படும்.தந்தை வழியில் துக்ககரமான செய்தி அல்லது சம்பவம் நடக்கும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை : இடமாற்றம் உண்டு.கணுக்காலில் ரத்தகாயம் ஏற்படும்.கவனம் தேவை.உயரமான கட்டிடங்களில் வேலை செய்வோர்களும், மின்சாரம் சார்ந்த பணியாளர்களும் மிகக்கவனமாக இருப்பது அவசியம்.சுக்கிர திசை நடப்பவர்களுக்கு மர்மஸ்தானத்தில் நோய் ஏற்படலாம். இக்காலகட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வணங்கிவர பாதிப்புகள் குறையும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை :கடன்களை அடைத்துவிடுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கும்.விற்காமல் இருந்த வீடு, மனை நல்ல விலைக்கு விற்பனையாகும்.இரும்பு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.சட்டம் நீதித்துறையில் இருப்பவர்கள் ஒரு சில சிரமங்களை சந்தித்தாலும் பதவி உயர்வை அடைவர்.பாராட்டுக்களும் கிடைக்கும்.

கேட்டை:தர்ம குணமும் முன்கோபமும் , குறும்புத்தனமும் கொண்டவரே! அழகாகப்பேசக்கூடியவரும், கலகம் குறுக்குபுத்தி + பிறந்த வீட்டைப்பெருமையாகப்பேசுபவரும்,கணிதத்தில் வல்லமைமிக்கவரும், தாமதத்திருமணயோகமும் கொண்டவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை : பூர்வீக சொத்துக்களாலும் மூத்த சகோதரர்களாலும் தனவரவு பெறுவீர்கள்.மனைவி மூலமாக மகிழ்ச்சியும் லாபமும் கிடைக்கும். தேவைப்படும் உதவிகள் எல்லாப்பக்கத்திலிருந்தும் கிடைக்கும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை:இதயம், வயிறு மார்புப்பகுதி நோயால் பாதிக்கப்படலாம். தகுந்த மருத்துவசிகிச்சை செய்யவும்.உண்ணும் உணவில் கவனம் தேவை.இதுவரை இருந்து வந்த முழங்கால் வலி, கால்களிலிருந்து வந்த எரிச்சல் குணமடையும்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை :குடியிருக்கும் இல்லத்தில் பிரச்னைகள் உண்டாகும்.தாய் வழியில் கசப்புகள் ஏற்படலாம்.இளைய சகோதரத்தால் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.அனுசரித்துச்செல்க!
அளவோடு பேசவும்.அல்லது மவுனமே உங்களை காக்கும்.தமிழ்நாட்டில் தேனி அருகில் உள்ள உத்தம பாளையத்தில் 1000 ஆண்டு பழமையான சிவாலயம் செண்று வழிபட்டால் மேற்கண்ட பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.வருமுன் காப்பதும் நன்று!
13.3.2010 முதல் 15.5.2010 வரை :இதுவரை இருந்துவந்த மந்த நிலை மாறி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.தந்தைவழி ஏற்பட்டிருந்த மனக்கசப்பு நீங்கும்.குழந்தைகளால் ஏற்பட்ட வைத்தியச்செலவு குறையும்.சிலருக்கு புதிய ஆடம்பரப்பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.சிலருக்கு நல்ல உயர்ந்த இடத்தில் மகிழ்ச்சியான சூழலில் திருமணம் நடக்கும்.பிறந்த இடத்திலிருந்து 100 கி.மீ.தூரத்தில் திருமணம் நடைபெறும்.
எந்த சூழ்நிலையிலும் தங்களைத்தாங்களே குழப்பிக்கொள்ளக்கூடாது.தங்கள் சக்திக்கு உட்பட்ட காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும்.இப்படிச்செய்தால் வெற்றியும் புகழும் ஏற்படும்.