RightClick

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிபலன்கள்(அஸ்தம்,சித்திரை,சுவாதி)

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

அஸ்தம் : ஐந்து நட்சத்திரங்களின் சேர்க்கை என்றும் மனோக்காரகனின் முழு ஆசி பெற்ற நட்சத்திரம் அஸ்தம் ஆகும்.எல்லோரிடமும் சுலபமாகப் பழகும் குணமும்,சங்கீதம், நாட்டியம் இவற்றில் ஆர்வம் கொண்டவரும் பெண்கள் மீது மதிப்பு கொண்டவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை:வீடு, நிலம், தாய், மனைவியால் எதிர்பாராத தன லாபம் செவ்வாய் அருளால் தங்களுக்கு கிடைக்கும்.மூத்த சகோதர வழியில் விரையமும்,தொழிலில் மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பும் ஏற்படும்.புதிய தொழில்கள் அமையும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை:தொழில் லாபம் உண்டு. வாழ்க்கைத்துணையால் சிறுசிறு குழப்பமுண்டு.இடமாற்றம் உண்டு.கடனை அடைக்கும் சந்தர்ப்பம் ஏற்படும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை : குழந்தைகள் வழியில் செலவுகள் உண்டு.பிறந்த ஜாதகத்தில் விபரீதராஜ யோகம், சகட யோகம் உள்ளோருக்கு புதையல் போன்ற அதிர்ஷ்டம் கிடைக்கும்.உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை :தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டும்.வாகனப்பயணத்தில் கவனம் தேவை.சுபவிரையச் செலவுகள் ஏற்படும்.
சித்திரை :பிறரது குணமறிந்து நடப்பவர், திறமைசாலி,ஊர் சுற்றுவதில் ஆர்வமிகுதி, தன் காரியத்தில் சுறுசுறுப்பு உடைய சித்திரை நட்சத்திரக்காரர்களே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை :இதுவரை இருந்துவந்த வீடு , நிலம் சார்ந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் மனவெறுப்பு வரும்.பொறுமையாக இருந்தால் நிம்மதியாக வாழ முடியும்.உங்களது உழைப்பின் பலன் உங்களை வந்து சேரும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை : தகப்பனார் வழியில் விரையச்செலவுகள் வந்து சேரும்.செல்வச் சேர்க்கை உண்டு.தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை :எதிர்பாராத இடத்திலிருந்து கடன் உதவி கிடைக்கும்.பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் தீரும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை :விரையங்களை தவிர்க்க முடியாது.வாகனப்பயணத்தில் கவனம்.ரத்தம்,நரம்பு சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்.தொழில்பங்குதாரர்களிடையே கோபத்தை அளவோடு காட்டவும்.1976 முதல் 1979க்குள் பிறந்தவர்கள் ஸ்ரீகாலபைரவரை தினமும் வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

சுவாதி :யாரையும் நம்பும்படி பேசி தன்காரியத்தை செயல்படுத்துபவரும், முன்கோபியும், பல்வேறு யோசனைகள் கொண்டவரும்,பெரியோர்களிடம் மரியாதையும்,தெய்வ வழிபாடுகளில் ஆர்வமும் நிறைய (தூக்கத்தில்) கனவும் காண்பவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை :இழந்த தைரியத்தைப் பெற்று வருமானத்தை பெருக்குவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.வாழ்க்கைத்துணையால் வருமானமும், தந்தை வழியால் செலவும் ஏற்படும்.இளைய சகோதரத்தின் ஆரோக்யம் கெடும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை : வாகனம், மின்சாரம் இவற்றில் மிகுந்த கவனம் தேவை.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாது.செவ்வாய் புக்தி நடப்பவர்கள் வாழ்க்கைத்துணையை பிரிய வேண்டியிருக்கும்.ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவு, வியாபார ஒப்பந்தங்களில் மிகுந்த எச்சரிக்கையும் பலமுறை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை :நண்பர்களிடம் விரோதமும், குழந்தைகளுக்கு வைத்தியச் செலவும்,பொருளாதார சிக்கல்களும் ஏற்படும்.பயணத்தின் போது கவனமாக இல்லாவிட்டால் தலை,முகம் பகுதியில் படுகாயம் ஏற்படலாம்.சிலருக்கு வாய் ,உதடு ,சளி சம்மந்தப்பட்ட நோய் ஏற்படலாம்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை :தொழில், வேலை இவற்றில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரியின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் அல்லது புத்திர பாக்யம் கிட்டிடும்.