
சனி என்றாலே எல்லோருக்கும் பயம்தான்.உங்களில் யாரெல்லாம் சிம்மராசியோ, மகர ராசியோ அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.கி.பி.2006 முதல் இன்று வரை அவர்கள் படும் வேதனைகளை சொல்லி மாளாது.
26.9.2009 அன்று சனீஸ்வரன் சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார்.நவம்பர் 2011 வரை அவர் கன்னி ராசியைக் கடக்கிறார்.
இதனால், உத்திரம் நட்சத்திரம் 2,3,4ஆம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதம் இவற்றில் பிறந்தவர்களும்;
கும்பராசியில் ( அவிட்டம் 3,4 ஆம்பாதம்,சதயம், பூரட்டாதி1,2,3 ஆம் பாதம்-இவற்றில் பிறந்தவர்கள்)பிறந்தவர்களும் தன்னையே வெறுக்கும் நிலைக்கு ஆளாவார்கள்.
இந்த இரண்டரை வருடங்களில் இந்த ராசியினர் எந்த புதுத் தொழில் அல்லது வேலையிலும் செல்லாமல் இருக்கும் இடத்தில்/வேலையில் இருப்பது நன்று.எவ்வளவு உழைத்தாலும் மரியாதை/அங்கீகாரம் கிடைக்காது.
நாமெல்லாம் ஏன் உயிர் வாழணும்? என்ற நிலையை அடிக்கடி உருவாக்கும்.
கையிருப்பை தொடாமல் இருப்பது அவசியம்.ஒரு நாள் என்பது ஒரு வருடமாக நீளும்.யாருமே நம்மை மதிப்பதில்லை என்ற நிலை உருவாகும்.கணவன் மனைவி பிரியலாம்.ராகு திசை நடக்கும் ராசிக்காரர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக சித்தரிக்கப்படுவார்கள்.(ராகுவும் சனியும் சேர்ந்து செய்யும் லீலை).எனவே, ராகு திசை நடக்கும் கன்னிராசிக்காரர்கள் எவரது காதல்,கள்ளக்காதல் விஷயத்திலும் தலையிடக்கூடாது.மறைமுகமாகக்கூட உதவி செய்யக்கூடாது.
இவர்கள்(கன்னி,கும்பராசியினர்) சனிக்கிழமைதோறும் யாராவது உடல் ஊனமுற்றோருக்கு ஒரு வேளை அன்னதானம் செய்து வரவும்.அதே சமயம், அசைவம் தவிர்க்கவும்.தினசரி இல்லாவிட்டாலும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது வீட்டிலும் வெளியிலும் அசைவம் தவிர்த்தால் ஓரளவு நிம்மதிக்கு வாய்ப்பு.இல்லாவிட்டால் தேவையற்ற சண்டை சச்சரவுகள் உருவாகும்.
கன்னி ராசி, கும்பராசியினர் இந்த இரண்டரை வருடத்துக்கு மிக சிம்பிளாக டிரஸ்செய்யவும்.
ஆண்கள் மாதம் ஒரு முறை ஷேவிங் செய்தால் போதும். தரையில் படுத்துத் தூங்கவும்.ஒரு நாளுக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பிடவும்.அதையும் ஒரெ ரொட்டீன் நேரத்தில் சாப்பிடாமல் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடவும்.எப்போதும் அலைந்து திரியும் விதமாக வேலையை வைத்துக்கொண்டால் ஓரளவு நிம்மதி
சனீஸ்வரனின் குரு காலபைரவர் ஆவார்.இவரது கோயில் ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகில் உண்ண குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி ஆகும். இங்கு தேய்பிறை அஷ்டமிதிதி யன்று நடக்கும் சிறப்பு வழிபாட்டில் கன்னி,கும்பராசியினர் கலந்து கொண்டு நிம்மதியைப் பெற்றுச்செல்லலாம்.