RightClick

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிபலன்கள்(பரணி,கார்த்திகை,ரோகிணி)

பரணி : நற்குணங்களும் நற்செயல்களையும் செய்வதை தனது சுபாவமாக வைத்திருப்பவரே!

எதிரிகளை எளிதில் வெல்பவரே!பிடிவாதத்தால் எதையும் சாதிப்பவரே!
தங்களுக்கு 7.10.2009 முதல் 16.11.2009 வரை நன்மையுண்டு. தாயார் மற்றும் நண்பர்களாலும் இருப்பிடவகையிலும் நன்மைகள் பல உண்டாகும்.வண்டி வாகன லாபமும் உண்டு.

16.11.2009 முதல் 23.12.2009 வரை வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும்.தொழிலில் பல்வேறு நல்மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறி தெரியத்துவங்கும்.தன்னைவிட மூத்தவர்களுடன் தீய சேர்க்கை சேர வாய்ப்பு உண்டாகும். மனைவி/பெண்கள் வழியில் விரையங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.இக்காலகட்டத்தை கவனமாக கடக்கவேண்டும்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை மனைவி வகையில் மருத்துவ செலவு, காயங்கள் ஏற்படுதல் நடக்கும். எச்சரிக்கை.உணர்ச்சிக்கு இடம் தராமல் வாழ்க்கைப் பயணத்தை கொண்டு செலுத்தவும்.யாருக்கும் வாக்குதரக் கூடாது.ஜாமீன் போடக்கூடாது.பலவிதங்களில் விரையங்கள் ஏற்படலாம்.

தினமும் முருக காயத்ரி மந்திரம் ஜபிக்கவும்.


கார்த்திகை :நல்பாக்கியங்களும் கடும் கோபத்தையும் ஆழ்ந்த பாசத்தையும் கொண்டவரே!பலவித திறமைகளால் எங்கும் எப்போதும் முதன்மையாகத் திகழுபவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை உங்கள் குடும்ப மூத்த உறுப்பினரால் வைத்தியச்செலவு உண்டாகும். எதிர்பாராத விரையங்களும், வாகனப்பழுதும் ஏற்படும்.வீட்டில் அதிகம் பேசவேண்டாம்.குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும்.

16.11.2009 முதல் 23.11.2009 வரை தொழில் ரீதியாக பிரச்னை ஏற்பட்டு நீங்கும். தொழிலில் லாபம் உண்டாகும். விற்காத பொருட்கள் விற்கும். மேலதிகாரி பாராட்டுவார்.கார்த்திகையன்று திருச்செந்தூரானை நேரில் வழிபடவும். நன்மைகள் பெருகி தீமைகள் குறையும்.

23.11.2009 முதல் 13.3.2010 வரை இல்லத்தில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும்.தொழில் ரீதியாக புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய முதலீடுகள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். தாயார்- மனைவி வழி மருத்துவச் செலவு குறையும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை மூத்த சகோதர்கள், மனைவி வழி உறவுகளால் கசப்பான சம்பவங்கள் நடக்கும்.சனிதிசை புக்தி நடப்பவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆட்படலாம்.விரையச்செலவுகள் ஏற்படும்.வியாழதிசை நடப்பவர்களுக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும்.சுக்கிர திசை நடப்பவர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவமானத்தைச் சந்திக்க வேண்டிவரும்.

ரோகிணி : அழகும் கம்பீரமும் உடையவரே! எல்லோருக்கும் நட்பாகத் திகழுபவரே! தனவந்தர்களிடம் செல்வாக்கு பெற்றவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.சகோதர வகையில் சண்டை ஏற்பட்டு தீரும். பூர்வீக சொத்து சார்ந்த நடவடிக்கை நன்மை தரும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை தங்களது மரியாதை குறையும். குழப்பமாகப் பேசுவீர்கள்.தைரியமும் தன்னம்பிக்கையும் குறையும்.வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதம் கெட்ட பெயரைத் தரும்.வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது.

23.12.2009 முதல் 13.3.2010 வரை குழந்தைகளால் செலவும் குடும்பத்தில் சுபச்செலவும் ஏற்படும்.தொழிலில் நல்ல மற்றும் இட மாற்றம் ஏற்படும்.கேட்ட இடங்களில் பண உதவி கிடைக்கும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை எல்லாச் செயல்களிலும் சர்வ நிதானம் அவசியம்.சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.நரம்பு சார் பிரச்னைகள் வரலாம்.