RightClick

அபூர்வசெவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(பூசம்,ஆயில்யம்)

பூசம் : இல்லற இன்பத்தில் அளவற்ற ஆர்வமும், பெரியவர்களிடம் நாசூக்காக பழகத் தெரிந்த பூச நட்சத்திரக்காரர்களே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை நீண்ட காலமாக உடலில் இருந்துவந்த நோய்கள் நீங்கும்.வாழ்க்கைத்துணையாலும் நிம்மதி உருவாகும். பூர்விக சொத்துக்கள் மூலமும் குழந்தைகள் மூலமும் லாபமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இதுவரை ஏற்பட்டிருந்த காரியத்தடைகள், முடக்கப்பட்டிருந்த தொழில் வாய்ப்புகள் நீங்கி படு சுறுசுறுப்பாக செயல்படத்துவங்குவீர்கள்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை இளைய சகோதரத்தால் தொந்தரவுகள் உண்டு.வெளிநாட்டு வர்த்தகம் புரிவோர் புதிய வாய்ப்புகள் அடைவர். தாய்வழி, மாமா வழியில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

23.12.2009 முதல் 13.3.2010 வரை பொறுமை மிக அவசியம்.வாகனப்பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.செவ்வாய் திசை, செவ்வாய் புக்தி நடக்கும் பூச நட்சத்திரக்காரர்கள் ஆயுள் ஹோமம் செய்வது அவசியம்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை சனி புக்தி நடப்பவர்களுக்கு இக்காலகட்டத்தில் வம்பு வழக்கு வர வாய்ப்புண்டு. உடலில் தீக்காயங்கள் அல்லது கோபத்தால் மிகப்பெரிய மனிதரைப் பகைக்குமளவுக்கு அனாவசிய கோபம் ஏற்படலாம்.பொறுமை அவசியம். ராகு தசை அல்லது புக்தி நடப்பவர்களுக்கு கடன் தீர வாய்ப்பு.கணவன் மனைவி வாக்குவாதம் தவிர்க்கவும்.


ஆயில்யம் : அழகான வாழ்க்கைத் துணையைக் கொண்டவரே! கல் நெஞ்சக்காரர்களாகவும் அதி புத்திசாலித்தனமாகவும் வாழ்நாள் முழுக்க செயல்படுபவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை சகல செயல்தடுமாற்றங்களும் தீர்ந்து செயல்புயல் ஆகப்போகிறீர்கள். தொழில்வளர்ச்சி விறுவிறுப்பாகும்.வீடு மனையால் அபரித லாபம் உண்டு. சிலருக்கு விரையச்செலவு ஏற்படும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை சுப காரியங்கள் நடக்கும். மனைவி/கணவர் வழியில் செலவுகள் குறையும்.புதிய இன்பம் தரும் நட்பு அமையும்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை பூர்வீக சொத்துக்கள் மற்றும் தொழில் லாபம் சற்றும் எதிர்பாராத அளவுக்கு கிடைக்கும். செவ்வாய் / வியாழ திசை நடப்பவர்களுக்கு மிகப்பெரும் தன வரவு உண்டு.குடும்பப்பிரச்னைகள் நீங்கும்.
மதுரை அருகில் உள்ள திருவாதையூர் சென்று சிறப்பு பிரார்த்தனை செய்ய மிகச்சிறந்த வாழ்க்கையை தினமும் காண்பீர்கள்.இங்கு சாபம் பெற்ற சனிபகவான் சாப நிவர்த்தி அடைந்த சிவாலயம் இருக்கிறது.

13.3.2010 முதல் 15.5.2010 வரை வாகனப்பயணத்தில் எச்சரிக்கை!தாயாரின் உடல் நலனில் அக்கறை அவசியம்.வாக்குறுதி தரக்கூடாது.

IF,YOU LIKE TO SERVICE AT THIRUMALA-THIRUPATHI TEMPLE?READ AND GO TO MONEY GOD TEMPLE


திருமலை-திருப்பதியில் சேவை செய்ய விருப்பமா?

செல்வத்தின் அதிபதி ஸ்ரீவெங்கடாஜலபதியின் இருப்பிடம் நம்ம திருப்பதி.அங்கு குறைந்த பட்சம் திங்கள் முதல் ஞாயிறு வரை தங்கி பக்தர்களுக்கு சேவை செய்ய விருப்பமா? ஒரு நாளுக்கு குறைந்தது 6 மணி நேரம் சேவையில் ஈடுபட வேண்டும்.மேலும் சனிக்கிழமையன்று சேவையில் ஈடுபடுவோருக்கு சிறப்பு தரிசனம் உண்டு.

ஸ்ரீவாரி சேவா உறுப்பினராகுங்கள்.சரி! எப்படி உறுப்பினராவது?

குறைந்தது 10 பேர் கொண்ட குழுவை பின்வரும் முகவரிகளில் ஏதாவது ஒன்றில் பதிய வேண்டும்.அப்படிப் பதிந்தால் திருப்பதியில் நாம் விரும்பும் ஏதாவது 10 நாளுக்கு சேவை செய்யச் செல்லலாம்.இதற்கு கட்டணம் கிடையாது.திருப்பதியில் சாப்பாடு,தங்குமிடம் இலவசம்.அதுவும் தேவஸ்தான ஊழியராக அந்த 10 நாட்களில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.நீங்கள் சேவா ஊழியர் என்பதற்கு அடையாளமே கழுத்தில் காவித் துண்டு அணிந்திருப்பீர்கள்.

ஸ்ரீவாரி சேவா:திரு.கண்ணபிரான் 94431-36763.0431-27822887.
ஸ்ரீவாரி சேவா அமைப்பு:திரு.ஏ.பி.நாகராஜன்
திருப்பதி தேவஸ்தான கோவில்,
வெங்கட்நாராயணா சாலை,தி.நகர்,சென்னை-17.
044-24343535.
ஆங்கில மாதத்தின் முதல் சனி மதியம் 2 முதல் 4 மணிக்கு இங்கு வருக!

ஏ.பி.என். குரூப்
புதிய எண்:16,டி.டி.கே.சாலை,
முதல் கிராஸ் தெரு,ஆழ்வார்பேட்டை,சென்னை-18.
044-24334700,24331776.


சேவா சதர்ன் ஹால்,மேல்திருப்பதியில் பஸ் நிலையம் அருகில் உள்ளது.இங்கும் தொடர்பு கொள்ளலாம்.

PUBLIC RELATION OFFICER,
THIRUMALA THIRUPATHI DEVASTHANAM,
KABILA THEERATHAM ROAD, THIRUPATHI.
0877-226456.

திரு.வி.எஸ்.சுந்தரவரதன் 044-22232526,9444221661.

திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம்
தென்காசி ரோடு,சொக்கர் கோயில் பஸ் ஸ்டாப் அருகில், இராஜபாளையம்.


அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(மிருகசீரிடம்,திருவாதிரை,புனர்பூசம்)

மிருகசீரிடம் : ஒருவரைப் பார்த்த உடனே அவரது எண்ணம் என்ன? என்பதை கண்டறியும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்களே! தாங்கள் கோபத்தைவிட்டுவிட்டால் அற்புதமனிதர்தான்.தங்கள் நட்சத்திரங்களில்தான் பெரும் செல்வந்தர்கள், பக்திமான்கள்,திறமையானவர்கள் பிறக்கிறார்கள்.

7.10.2009 முதல் 16.11.2009 வரை திடீர் பணவரவுகள், பதவி உயர்வு மற்றும் விரும்பிய இட மாற்றங்கள் கிடைக்கும்.குடும்பத்துக்கு ஆடம்பரப்பொருட்கள் வாங்கிக்குவிப்பீர்கள்.குடும்ப வைத்தியச்செலவு குறையும்.மூத்தோரால் ஆதாயம் உண்டு.
16.11.2009 முதல் 23.12.2009 வரை சுபச்செலவு உண்டு.சிலருக்கு ஈமச்சடங்குகள் செய்யும் சந்தர்ப்பம் அமையும்.(குடும்பத்தில் பெரியவர்கள் மறையலாம்).தவறான சகவாசத்தை ஒதுக்கி வைத்தால் தேவையற்ற வம்பு வழக்கு அண்டாது.வீட்டில் பிரச்னை செய்யாதீர்கள்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை தொழில்மாறுதல் மற்றும் இடமாறுதல் உண்டு.சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும்.வாகனத்தில் செல்லும்போது மிகக்கவனம் அவசியம்.தொழில் ரீதியாக வாக்கு தராதீர்கள்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகள் உண்டு.குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். தைரியம் கூடும். வாழ்க்கையில் மிக முக்கிய ஆனால் சிறு மாற்றம் உண்டாகும்.

திருவாதிரை : எவரிடமும் எளிதில் பழகும் குணமுடையவரே! 7.10.2009 முதல் 16.11.2009 வரை இதுவரை இருந்து வந்த பணப்பிரச்னைகள், குடும்பப்பிரச்னைகள் தீரும். தங்களது வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும்.மருத்துவ செலவு குறையும்.தாய் குடியிருக்கும் வீடு இவற்றால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை ஆன்மீகப்பயணங்கள் செல்வீர்கள். புதிய ரகசிய தொடர்புகள் ஏற்படும். வெளிநாட்டுப்பயணமுயற்சி வெற்றி பெறும். மூத்த சகோதரவர்க்கத்தால் லாபம் உண்டு.
23.12.2009 முதல் 13.3.2010 வரை கடன் தொல்லைகள் ஏற்படும். தொழில்துறையினருக்கு முடக்கம் நீங்கும்.வாழ்க்கைத் துணை பிரச்னை நீங்கும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை வார்த்தையில் நிதானம் தேவை.விஷ வண்டுகள் பயம் உண்டு. மனக்குழப்பம் ஏற்படும்.வாக்குறுதி தரக்கூடாது.சிறு பிரச்னைகளில் ஒதுங்கிக் கொள்ளவும்.வீரத்தைக் காட்டக் கூடாது.

புனர்பூசம் : மனதுக்குள் அனைத்தையும் பூட்டி வைத்துக் கொள்பவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை உடல்நலக்குறைவு ஏற்படும்.ரத்த அழுத்த நோய் பாதிப்பைத் தரும்.இளைய சகோதரத்தால் செலவு உண்டு.எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை தொழில் முன்னேற்றம் ஏற்படும்.அப்பா வழியில் உதவிகள் கிடைக்கும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை பூர்வீகசொத்தில் லாபமும், சிலருக்கு புத்திரப்பாக்கியமும் உண்டாகும்.தேங்கிக்கிடந்த பொருட்கள் விற்பனையாகிவிடும். திடீர் அதிர்ஷ்டம் சிலருக்கு உண்டாகும்.(லாட்டரி போல).
13.3.2010 முதல் 15.5.2010 வரை குடியிருக்கும் வீட்டை அழகுபடுத்துவீர்கள்.ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள்.கனவுத் தொல்லை உண்டு.பிதுர்காரியம் செய்வீர்கள்.

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிபலன்கள்(பரணி,கார்த்திகை,ரோகிணி)

பரணி : நற்குணங்களும் நற்செயல்களையும் செய்வதை தனது சுபாவமாக வைத்திருப்பவரே!

எதிரிகளை எளிதில் வெல்பவரே!பிடிவாதத்தால் எதையும் சாதிப்பவரே!
தங்களுக்கு 7.10.2009 முதல் 16.11.2009 வரை நன்மையுண்டு. தாயார் மற்றும் நண்பர்களாலும் இருப்பிடவகையிலும் நன்மைகள் பல உண்டாகும்.வண்டி வாகன லாபமும் உண்டு.

16.11.2009 முதல் 23.12.2009 வரை வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும்.தொழிலில் பல்வேறு நல்மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறி தெரியத்துவங்கும்.தன்னைவிட மூத்தவர்களுடன் தீய சேர்க்கை சேர வாய்ப்பு உண்டாகும். மனைவி/பெண்கள் வழியில் விரையங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.இக்காலகட்டத்தை கவனமாக கடக்கவேண்டும்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை மனைவி வகையில் மருத்துவ செலவு, காயங்கள் ஏற்படுதல் நடக்கும். எச்சரிக்கை.உணர்ச்சிக்கு இடம் தராமல் வாழ்க்கைப் பயணத்தை கொண்டு செலுத்தவும்.யாருக்கும் வாக்குதரக் கூடாது.ஜாமீன் போடக்கூடாது.பலவிதங்களில் விரையங்கள் ஏற்படலாம்.

தினமும் முருக காயத்ரி மந்திரம் ஜபிக்கவும்.


கார்த்திகை :நல்பாக்கியங்களும் கடும் கோபத்தையும் ஆழ்ந்த பாசத்தையும் கொண்டவரே!பலவித திறமைகளால் எங்கும் எப்போதும் முதன்மையாகத் திகழுபவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை உங்கள் குடும்ப மூத்த உறுப்பினரால் வைத்தியச்செலவு உண்டாகும். எதிர்பாராத விரையங்களும், வாகனப்பழுதும் ஏற்படும்.வீட்டில் அதிகம் பேசவேண்டாம்.குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துச் செல்லவும்.

16.11.2009 முதல் 23.11.2009 வரை தொழில் ரீதியாக பிரச்னை ஏற்பட்டு நீங்கும். தொழிலில் லாபம் உண்டாகும். விற்காத பொருட்கள் விற்கும். மேலதிகாரி பாராட்டுவார்.கார்த்திகையன்று திருச்செந்தூரானை நேரில் வழிபடவும். நன்மைகள் பெருகி தீமைகள் குறையும்.

23.11.2009 முதல் 13.3.2010 வரை இல்லத்தில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும்.தொழில் ரீதியாக புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய முதலீடுகள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். தாயார்- மனைவி வழி மருத்துவச் செலவு குறையும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை மூத்த சகோதர்கள், மனைவி வழி உறவுகளால் கசப்பான சம்பவங்கள் நடக்கும்.சனிதிசை புக்தி நடப்பவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆட்படலாம்.விரையச்செலவுகள் ஏற்படும்.வியாழதிசை நடப்பவர்களுக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும்.சுக்கிர திசை நடப்பவர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவமானத்தைச் சந்திக்க வேண்டிவரும்.

ரோகிணி : அழகும் கம்பீரமும் உடையவரே! எல்லோருக்கும் நட்பாகத் திகழுபவரே! தனவந்தர்களிடம் செல்வாக்கு பெற்றவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.சகோதர வகையில் சண்டை ஏற்பட்டு தீரும். பூர்வீக சொத்து சார்ந்த நடவடிக்கை நன்மை தரும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை தங்களது மரியாதை குறையும். குழப்பமாகப் பேசுவீர்கள்.தைரியமும் தன்னம்பிக்கையும் குறையும்.வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதம் கெட்ட பெயரைத் தரும்.வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது.

23.12.2009 முதல் 13.3.2010 வரை குழந்தைகளால் செலவும் குடும்பத்தில் சுபச்செலவும் ஏற்படும்.தொழிலில் நல்ல மற்றும் இட மாற்றம் ஏற்படும்.கேட்ட இடங்களில் பண உதவி கிடைக்கும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை எல்லாச் செயல்களிலும் சர்வ நிதானம் அவசியம்.சில குடும்பங்களில் பாகப்பிரிவினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.நரம்பு சார் பிரச்னைகள் வரலாம்.

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(அசுபதி)

அபூர்வ செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள் ஆரம்பம்


கி.பி.1977க்குப் பிறகு செவ்வாய்க்கிரகமானது தொடர்ந்து 9 மாதங்கள் நீசமாகப்போகிறது. யுத்தகாரகன், ரத்த காரகன், சகோதரக்காரகன் என போற்றப்படும் செவ்வாய் கடகராசியில் 7.10.2009 முதல் 15.5.2010 வரை நீசமாக சஞ்சரிக்கப்போகிறார்.இதனால், ராணுவம், காவல்துறையிலும் கலகம் வரலாம்.சில மாதங்களுக்கு முன்பு வங்காளதேசத்தில் ராணுவம் கலகம் செய்தது ஞாபமிருக்கிறதா? அதுபோல!!!

தவிர, மேஷம், விருச்சிகம் ராசியில் பிறந்த மனிதர்கள், நிறுவனங்கள், மாநிலங்கள், நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறது. செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாடுகளில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கொரியாக்கள்.(அதனால்தான் அங்கே விதவிதமான யுத்தக்கலைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. கராத்தே, குங்பூ,டோக்வாண்டே மற்றும் 100 விதமான சண்டைக்கலைகள்) நம்ம பக்கத்து நாடு இலங்கையின் ராசி விருச்சிகம்.அதன் தற்போதய அதிபர் ராஜபக்ஷேயின் பிறந்த ராசியும் விருச்சிகம். தமிழர்களின் துருவ நட்சத்திரம் பிரபாகரன் அவர்களின் பிறந்த ராசியும் விருச்சிகம்!!! ஆக இலங்கையில் என்னமோ நடக்கப்போகுது. சரி அதை பேப்பரில் பார்த்துக் கொள்ளலாம்.

தனி மனிதர் வாழ்வில் என்ன நடக்கும்? என்பதை பிரபல ஜோதிடர் ஏ।எம்।ஜே। என்பவர் நட்சத்திர வாரியாகக் கணித்திருக்கிறார்।உங்களது பிறந்த நட்சத்திரம் எதுவோ அதன்படி இந்த பலன்கள் உங்கள் வாழ்வில் செயல்படும்। இந்தப் பலன்கள் எண்பது சதவிகிதம் துல்லியமானவை।மீதி இருபது சதவீதம் அவரவர் ஜாதக பூர்வபுண்ணியத்தைப் பொறுத்து மாறுபடும்.


இனி செவ்வாய் பெயர்ச்சி பலன்களைக்காணலாம்:

அசுபதி: தெய்வீக அருளைப் பெற்றவரும், தனவான் சாஸ்திரங்களை அறிந்தவருமாகிய அசுவினி நட்சத்திரக்காரர்களே!

நீங்கள் மற்றவர்களுக்கு நல்ல விஷயங்களை போதிப்பவராகவும் தைரியசாலியாகவும் இருக்கும் தாங்கள் 7.10.2009 முதல் 16.11.2009 வரை இருப்பிடப்பிரச்சனை, தயாரின் உடல்நலத்தில் சீர்கேடு, நண்பர்களிடையே பகை,தொழிலில் மந்தம் அல்லது தொழில் சார்ந்த குளறுபடிகள் ஏற்படும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரையில் இந்த குளறுபடிகள் மாறி எதிர்பாராத தொழில் வளர்ச்சி லாபங்களும் ஏற்படும்.இருப்பிடப்பிரச்னை நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.தங்களுக்கு அல்லது தங்களைச் சார்ந்தவருக்கோ சுபகாரியம் உண்டாகும்.வண்டி வாகன வசதிகள் உருவாகும்.

23.12.2009 முதல் 13.3.2009 வரை மன தைரியம் அதிகரிக்கும்.தங்களது வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவர். முன்கோபமும் பிடிவாதமும் இந்நேரங்களில் தங்களிடம் அதிகம் காணப்படும்.உங்களுக்கு அல்லது உங்களது ரத்த உறவுகளுக்கு ஏற்படும் காயம் அல்லது நோய்க்கு தகுந்த மருத்துவ நிபுணர்(எக்ஸ்பர்ட்)ரிடம் ஆலோசனை கேட்கும் நிலை உருவாகும்.தொழில்நிலை சுமாராகும்.நிலம் சார்ந்த விஷயங்களில் சிறு லாபம் ஏற்படும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை சுப நன்மைகள் உண்டாகும்.இளைய சகோதரத்தாலும் கடனாலும் சில தொல்லைகள் வந்து தீரும்.

இக்காலகட்டத்தில் திருப்பரங்குன்றம் முருகக் கடவுளை அடிக்கடி வழிபட நன்று.

SOME IMPORTENT GAYATHRI MANTHIRAMS

சில முக்கிய காயத்ரி மந்திரங்கள்

குபேரன்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

ஸ்ரீராமர்

ஓம் தாசரதாய விதமஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராமஹ ப்ரசோதயாத்


ஸ்ரீசீதா

ஓம் ஜனக நந்தின்யை ச வித்மஹே
பூமிஜாயை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

மகாவிஷ்ணு

ஓம் நாராயணாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

அய்யப்பன்(சாஸ்தா)-இதை ஜபிக்க தீய சக்தி விலகும்

ஓம் பூதநாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

ஸ்ரீ ஆதிசேஷன்(நாக தோஷம் நீங்கிட ஜபிக்கவும்)

ஓம் ஸகஸ்ய சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

ஸ்ரீஹயக்ரீவர்-குதிரை முக விஷ்ணு(கல்வி வளர)
ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

ஸ்ரீகருடன்

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸீவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருடஹ ப்ரசோதயாத்

ஸ்ரீசரபேஸ்வரர்

ஓம் ஸாலுவே சாய வித்மஹே
பட்சி ராஜாய தீமஹி
தந்நோ சரபஹ ப்ரசோதயாத்

ஸ்ரீ வாராஹ

ஓம் தனுர்தராய வித்மஹே
வக்ரதம்ஸ்ட்ராய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத்


ஸ்ரீஅன்னபூரணி( என்றும் உணவு கிடைக்க)

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

நவக்கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள்
சூரியன்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தந்நோ ஸீர்ய ப்ரசோதயாத்

சந்திரன்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சோமப் ரசோதயாத்

செவ்வாய்(செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் செவ்வாய் திசை நடப்பவர்களும் தினமும் ஜபிக்கவும்)

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தந்நோ பவும ப்ரசோதயாத்

புதன்

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதஹ ப்ரசோதயாத்

குரு

ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்

சுக்கிரன்

ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ரஹ ப்ரசோதயாத்

சனி

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ ப்ரசோதயாத்

ராகு


ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

கேது

ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்

கணபதி மந்திரங்கள்
விநாயகரின் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.

அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.

கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.

கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார்.

உச்சிஷ்ட கணபதி மந்திரம்

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா

வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.


கடன் தீர கணபதி மந்திரம்

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.(நமது நாட்டின் கடன் தீர யாராவது இதைச் செய்யலாமே!!!)

மஹாஹஸ்தி விநாயகர்

பெரிய்ய்ய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.

ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி தக்ஷ்ணேன

வாஞ்சா கல்பலதா கணபதி

நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.

பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
ஐம் கஏஈ லஹ்ரீம்
தத்ஸவிதர் வரேண்யம் கணபதயே
க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு ஸஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத்
ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா


சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்


ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி

ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்


ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி

ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்

ஸ்ரீபதஞ்சலி காயத்ரி

ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி

ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்

ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி

ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி
ப்ரசோதயாத்

ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி

ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்

ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி

ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்

ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் ப்ரசோதயாத்

ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி

ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்

சதுரகிரியில் நிகழ்ந்த ஒரு அதிசய சம்பவம்: கட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர்ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தின் எல்லையில் சதுரகிரிக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.இங்கு ஒரு முறை அமாவாசைக்கு சதுரகிரி மலை ஏறும்போது அத்தி ஊத்து என்னும் இடத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த க.தேவன் என்பவர் தனது நண்பர்களோடு சிறிதுநேரம் தங்கி இளைப்பாறினார்.அப்போது குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க ஒரு பாத்திரத்துடன் நீர்நிலையின் அருகே சென்றார்.ஒரு தொட்டி அளவிற்கு தண்ணீர் பளிச் சென தேங்கி நின்றது.அதில் பாத்திரத்தை குளத்தில் வைக்கச் செல்லும் போது அவருக்கு ஒரு காட்சி பெரும் வியப்பைத் தந்தது.

நமது கட்டைவிரல் அளவில் ஒரு மனிதன் நீரில் விழுவதும் எழுவதுமாக விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தார்.அப்போது அவரது குழுவில் உள்ள ஒருவர் திடீரென இவரைப் பார்த்துக் குரல் கொடுத்தார். அந்தக் குரல் கட்டைவிரல் அளவுள்ள மனிதருக்கும் கேட்டிருக்கும் போல அதே சமயம் தேவனும் அவர் நண்பரும் ஒரு வேட்டியில் அந்த கட்டைவிரல் மனிதரைப் பிடிக்க யத்தனித்தனர். அப்போது அந்த கட்டைவிரல் அளவுள்ள மனிதர் தண்ணீரிலிருந்து மேலே வந்து மறைந்துவிட்டார்.
அப்படி மறையும்போது ஓம் என்ற ஓங்கார ஓசை தேவன் காதுகளில் ஒலித்தது. ‘கட்டைவிரல் மனிதன்’ நீரில் இருந்து வெளியே வரும்போது அபரிதமான ஒலியுடன் கூடிய சபதம் கேட்டது.

அந்த குழுவில் விபரமறிந்தவர் கட்டைவிரல் மனிதர் ஒரு சித்தரேதான் எனக்கூறினார்.
நன்றி:சதுரகிரி ஆன்மீக மாதப் பத்திரிகை(இலவச வெளியீடு)
தனிச்சுற்றுக்கு மட்டும்

பிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ ஒரு ஆன்மீக ஆலோசனைகணவன் மனைவி ஏதோ ஒரு அல்லது பல காரணங்களால் பிரிந்து வாழ்கின்றனர்.இதனால் இரண்டு குடும்பங்கள் பிரிகின்றன.அம்மா அப்பாவின் இணைப்பு இல்லாமல் வாழும் குழந்தைகள் மூர்க்கத்தனமாக வளருகின்றன.இதன்மூலம் நாம் மூர்க்கத்தனமும் ரவுடித்தனமும் நிறைந்த சமுதாயத்தை வளர்க்கிறோம்.இப்படி ஆகாமல் இருக்க, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர ஒரு பரிகாரம் இருக்கின்றது.இதை மனைவிதான் செய்ய வேண்டும்.அதாவது பிரிந்து வாழும் மனைவிதான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும்.அவரது சார்பாக வேறு எவரும் செய்யக்கூடாது.

தட்டு ஒன்றில் குங்குமத்தைப் பரப்பி, அதில் தன் கணவரின் பெயரை எழுதி கீழ்க்காணும் சுலோகத்தை தினமும் 108 முறை ஜபித்துவரவேண்டும்.

த்ரை லோக்ய மோகனா ரங்கே
த்ரை லோக்ய பரி பூஜிதே
த்ரை லோக்ய வஸீதே தேவீ
த்ரை லோக்ய மே வஸம் குருஜபம் முடிந்ததும் அந்த தட்டை பூஜிக்க வேண்டும்.அதாவது தீபாராதனை செய்ய வேண்டும்.பிறகு அந்தகுங்குமத்திலிருந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும்.(பூஜைக்கு முன்பு எப்போதும் போல் குங்குமம் இட்டுக் கொள்ளலாம்)

மறுநாள், இதேபோல் அந்த தட்டில் உள்ள குங்குமத்தில் கணவரின் பெயரை எழுதி, அதே சுலோகத்தை 108 முறை ஜபித்து, அந்தகுங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும்.(மாதவிலக்கு காலத்தில் 4 நாட்கள் வரை பூஜிக்க வேண்டாம்).
சக்தி வாய்ந்த இந்த சுலோகத்தை ஜபித்துவர பலன் நிச்சயம் என்பது அனுபவ உண்மை!!!

கிரேக்கமும் தமிழும்கிரேக்கர்கள் தமிழ்நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்ர்டது கி.மு.5 ஆம் நூற்றாண்டில் தான். இவ்வாணிகத் தொடர்பு மூலமாக தமிழ் வார்த்தைகள் கிரேக்க மொழியில் இடம் பெறத்துவங்கின. சொபோகிளீஸ், அரிஸ்டோ பேனீஸ் முதலிய கிரேக்க அறிஞர்களின் நூல்களில் இவற்றைக் காணலாம்.

‘அரிசி’ என்ற தமிழ் வார்த்தை கிரேக்க மொழியில் ‘அரிஸா’ என உருக்குலைந்தது.(ஆங்கிலத்தில் ‘ரைஸ்’என்றும் உருமாறியது).அம்மொழியில் கருவா(இலவங்கம்) என்னும் தமிழ்ச்சொல் ‘கார்ப்பியன்’ என்றும்,

இஞ்சிவேர் ‘சின்ஙஞிபேராஸ்’ என்றும்
பிப்பாலி ‘பெர்ப்பெரி’ என்றும் உருமாற்றம் அடைந்தது.ஆதாரம்: தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும் என்ற நூலில் இருந்து.இதன் ஆசிரியர் டாக்டர் கே.கே.பிள்ளை.

KARAIKKAL MOTHER,PUTHUCHERY(PONDYCHERRY)


சங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதிபாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி ராஜபாளையம் அருகில் உள்ள சங்கரன்கோவிலில் இருக்கிறது।சங்கரன்கோவில் - திருநெல்வேலி மாவட்டம்,தமிழ்நாடு.

ராம தேவர் அவர்களின் ஜீவ சமாதி


மதுரை அழகர் கோவில் மலைப்பகுதியில் ராமதேவர் சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.ஒவ்வொரு பூரம் நட்சத்திர நாளிலும் ஏராளமான பக்தர்கள் இங்கே வருகை தருகிறார்கள்.

சில அற்புதமான தமிழ் வலைப்பூக்கள்-1சக்தி என்ப்படும் பத்ரகாளி,துர்கை பற்றிய பாடல்களின் தொகுப்பு:www.ammanpattu.blogspot.com

திருஅண்ணாமலை பற்றிய விபரம் மற்றும் அங்குள்ள போலிகள் பற்றி அனுபவத்தை எழுதியுள்ளார் ஒரு அன்பர் http://www.vediceye.blogspot.com/

நிம்மதியாக வாழ யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ? என்பது பற்றி விளக்கியுள்ளார் நமது ஆன்மீகக்கடல்.அட நான் தாம்பா.சில புத்தகங்கள் நமக்கு ஆத்ம நண்பர்களாக இருக்கும்.இந்த வலைப்பூவிற்கான பாஸ்வேர்டு மறந்துவிட்டேன்.அதனால் இதை தொடர்ந்து நிர்வகிக்க முடியவில்லை.ஆனால் அதற்குள் சில அற்புதமான தமிழ் புத்தகங்களைப் பற்றி இதில் எழுதிவிட்டேன்.படியுங்கள் இதில் கூறப்பட்டுள்ள புத்தகங்களை வாங்கி!!! உங்கள் ஆருயிர் நண்பர்களுக்கும் வாங்கி திருமணப்பரிசு அல்லது பிறந்த நாள் பரிசாக தரலாம்.www.geniustamilbooks.blogspot.com

மதங்களுக்கு அப்பாற்பட்டது யோகாசொல்லியிருப்பவர்:பிரோஸ் பக்த் அகமது, இஸ்லாமிய அறிஞர் மற்றும் விமரிசகர்

டேராடூனில் உள்ள அரசு அகாடமியில் பத்ருல் இஸ்லாம் என்பவர் யோகா பயிற்சியாளராக உள்ளார். யோகாவுக்கும், இஸ்லாமுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை ‘சலத்’ என்பதாகும்.
தினந்தோறும் 5 வேளை தொழுவதைத்தான் சலத் குறிப்பிடுகிறது. இந்தத் தொழுகை யோகாசனத்திற்கு ஒப்பானது.சலத் என்ற வார்த்தைக்கு பின்முதுகை வளைத்து வணங்குதல் என்பதுதான் அர்த்தமாகும்.நமாஸ் என்றாலே பின்முதுகை வளைத்து அல்லாவை வழிபடுவதைத்தான் குறிப்பிடுகிறது.
நமாஸ் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் சமஸ்க்ருதத்தில் உள்ள ‘நமஸ்தே’ என்பதாகும்.

உருது அல்லது அரபு நெடுங்கணக்குப் படி ஓம் என்பதற்கு முக்கியத்துவம் உள்ளது.ஆலிஃப், வோ, மீம் இந்த மூன்றின் சேர்க்கைதான் ஓம் என்பதாகும்.

ஆலிஃப் என்றால் அல்லா என்று அர்த்தம். வோ என்பது இரண்டு வார்த்தைகளை இணைக்கும் சொல்லாகும். மீம் என்றால் முகம்மது என்று அர்த்தம்.ஆலிஃப், வோ, மீம் என்றால் அல்லாவும் முகம்மதுவும் என்று அர்த்தமாகும்.

ஹக்கீம் ஜி.எம்.சிஷ்டி ‘சூஃபி ஹீலிங்’ குறித்து புத்தகம் எழுதியுள்ளார். யோகா என்பது மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டதுதான். “தாரிக்கத்-இ-நக் ஷ்பந்தி” என்ற சூஃபி வழிமுறை நூற்றுக்கு நூறு
யோகாவுடன் ஒத்துப்போகிறது.எகிப்தைச் சேர்ந்த அப்துல் பாசித் குயாரி மிகநேர்த்தியாக குரானை ஓதுபவர் ஆவார். யோகாப் பயிற்சி சேர்ந்ததுடான் குரான் ஓதுவதும் என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.பிராணயாமம் குரான் ஓதும்போதும் அப்பியாசம் செய்யப்படுகிறது.

ஈரான், மலேசியா, இந்தோனோசியா என பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் யோகா பின்பட்டப்பட்டுவருகிறது. தாருல்-உலும்-தியோபந்த் என்ற இஸ்லாமிய அமைப்பும் யோகாவுக்கு ஆதரவாக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முஸ்லீம்கள் ஓம் என்பதற்குப் பதிலாக அல்லா என்று உச்சரித்துக்கொள்ளலாம் என சுவாமி ராம்தேவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘நமாஸ், த யோகா ஆஃப் இஸ்லாம்’ என்ற புத்தகத்தை அஷ்ரஃப் எஃப் நிசாமி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை டி.பி.தாராபூர்வாலா வெளியிட்டுள்ளார். அதில் யோகா என்பது சில தொழில்நுட்பங்களின் திரட்டு என்று குறிப்பிட்டுள்ளார். இது மதரீதியானவற்றை அனுசரிக்க உதவுகிறது என்று கூறியுள்ளார்.

சிஜ்ஜிடா என்பது அர்த்த சிரசாசனம் ஆகும். ‘கயாம்’ என்பது வஜ்ராச்னமாகும். ‘ருக்கு’ என்பது பச்சிமோதனாசம் ஆகும். கிறிஸ்தவ யோகா குறித்து ஃபாதர் எம்.டெக்கனல் ஒருபுத்தகம் எழுதியுள்ளார்.ஏசு கிறிஸ்துவின் போதனைப்படி நடப்பதற்கு யோகாசனம் உதவுகிறது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யோகாவின் சாதனை: குண்டுவெடிப்பால் இழந்த கேட்கும் திறன் மீண்டும் கிடைத்தது.மும்பை ரயில் குண்டு வெடிப்பால் காது கேட்கும் திறனை இழந்தார் டாக்டர் காமத் என்பவர்.அவரது வயது 57.இவர் இயற்கை உணவு நிபுணர். 11.6.2006 ஆம் நாளன்று மும்பையில் பயங்கரமான ரயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. குண்டு வெடித்து ஏற்பட்ட பயங்கர சப்தத்தால் காது கேட்கும் திறன் இழந்தார்.

அவர் இயற்கை வைத்தியம் மற்றும் யோகா சிகிச்சையை மேற்கொண்டார்.சில மாதங்களில் அவரது காது கேட்கும் திறன் 80% அளவுக்கு அதிகரித்தது.

மும்பை கூப்பர் மருத்துவமனையின் காது மூக்குத் தொண்டை நிபுணர்களால் இந்த அதிசயத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
ஆதாரம்:தினமலர் ஜீலை 14,2007.

சிறந்த நண்பர்களைப் பெறுவது எப்படி?

முதல் தடவையிலேயே ஒருவரை நமது ஆத்
மிகச்சிறந்த நண்பர்களைப் பெறும் டெக்னிக்குகள் ம நண்பராக்குவது எப்படி என்பதை சென்ற நூற்றாண்டில் ஒருவர் புத்தகமாக எழுதியிருக்கிறார்.
How to win friends and influence people? என்ற புத்தகத்தை Dale Carnegie எழுதியுள்ளார்.
இன்றும் இது நடைமுறைக்குப் பொருத்தமானதாக இருக்கிறது.படியுங்கள்.உலகத்தின் மிகப் பெரிய நட்பு வட்டத்தை உங்களுக்காக உருவாக்குங்கள்

ஏன் அரசமரத்தைச் சுற்றினால் பிள்ளை கிடைக்கும் என்கிறார்கள்?மார்கழி மாதத்தில் அதிகாலையில் குழந்தைபாக்யம் இல்லாத பெண்கள் தினமும் அரசமரத்தைச் சுற்றி வந்தால் நிச்சயமாக குழந்தை கிடைக்கும் என்பது ஐதீகம்.எப்படி? என்பதை மேல்நாடுகள் ஆராய்ந்துவிட்டன.

குளிர்கால வைகறைப் பொழுதில் ஆலமரம் அளவற்ற ஆக்சிஜன் வெளியிடுகிறது.அதே சமயம் ஓசோன் காற்று தரைமுழுக்கப்படருகிறது.ஆக்சிஜன்+ ஓசோன்+ ஆலமரத்து விழுதுகளின் ஈரத்தன்மை இணைந்து செலினியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்கிறது. இந்த செலினியம் டை ஆக்சைடு கருப்பை சார்ந்த கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் உடையதாம்.

ஆக, இந்து தர்ம ஐதீகம் என்பது உலகின் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத் தீர்வு என்பதற்கு இதுவும் ஒரு சான்று.நன்றி:தினமலர்.1994,பிப்ரவரி1.

கன்னி சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
சனி என்றாலே எல்லோருக்கும் பயம்தான்.உங்களில் யாரெல்லாம் சிம்மராசியோ, மகர ராசியோ அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.கி.பி.2006 முதல் இன்று வரை அவர்கள் படும் வேதனைகளை சொல்லி மாளாது.

26.9.2009 அன்று சனீஸ்வரன் சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார்.நவம்பர் 2011 வரை அவர் கன்னி ராசியைக் கடக்கிறார்.

இதனால், உத்திரம் நட்சத்திரம் 2,3,4ஆம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதம் இவற்றில் பிறந்தவர்களும்;
கும்பராசியில் ( அவிட்டம் 3,4 ஆம்பாதம்,சதயம், பூரட்டாதி1,2,3 ஆம் பாதம்-இவற்றில் பிறந்தவர்கள்)பிறந்தவர்களும் தன்னையே வெறுக்கும் நிலைக்கு ஆளாவார்கள்.
இந்த இரண்டரை வருடங்களில் இந்த ராசியினர் எந்த புதுத் தொழில் அல்லது வேலையிலும் செல்லாமல் இருக்கும் இடத்தில்/வேலையில் இருப்பது நன்று.எவ்வளவு உழைத்தாலும் மரியாதை/அங்கீகாரம் கிடைக்காது.
நாமெல்லாம் ஏன் உயிர் வாழணும்? என்ற நிலையை அடிக்கடி உருவாக்கும்.
கையிருப்பை தொடாமல் இருப்பது அவசியம்.ஒரு நாள் என்பது ஒரு வருடமாக நீளும்.யாருமே நம்மை மதிப்பதில்லை என்ற நிலை உருவாகும்.கணவன் மனைவி பிரியலாம்.ராகு திசை நடக்கும் ராசிக்காரர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக சித்தரிக்கப்படுவார்கள்.(ராகுவும் சனியும் சேர்ந்து செய்யும் லீலை).எனவே, ராகு திசை நடக்கும் கன்னிராசிக்காரர்கள் எவரது காதல்,கள்ளக்காதல் விஷயத்திலும் தலையிடக்கூடாது.மறைமுகமாகக்கூட உதவி செய்யக்கூடாது.
இவர்கள்(கன்னி,கும்பராசியினர்) சனிக்கிழமைதோறும் யாராவது உடல் ஊனமுற்றோருக்கு ஒரு வேளை அன்னதானம் செய்து வரவும்.அதே சமயம், அசைவம் தவிர்க்கவும்.தினசரி இல்லாவிட்டாலும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது வீட்டிலும் வெளியிலும் அசைவம் தவிர்த்தால் ஓரளவு நிம்மதிக்கு வாய்ப்பு.இல்லாவிட்டால் தேவையற்ற சண்டை சச்சரவுகள் உருவாகும்.
கன்னி ராசி, கும்பராசியினர் இந்த இரண்டரை வருடத்துக்கு மிக சிம்பிளாக டிரஸ்செய்யவும்.
ஆண்கள் மாதம் ஒரு முறை ஷேவிங் செய்தால் போதும். தரையில் படுத்துத் தூங்கவும்.ஒரு நாளுக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பிடவும்.அதையும் ஒரெ ரொட்டீன் நேரத்தில் சாப்பிடாமல் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடவும்.எப்போதும் அலைந்து திரியும் விதமாக வேலையை வைத்துக்கொண்டால் ஓரளவு நிம்மதி
சனீஸ்வரனின் குரு காலபைரவர் ஆவார்.இவரது கோயில் ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகில் உண்ண குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி ஆகும். இங்கு தேய்பிறை அஷ்டமிதிதி யன்று நடக்கும் சிறப்பு வழிபாட்டில் கன்னி,கும்பராசியினர் கலந்து கொண்டு நிம்மதியைப் பெற்றுச்செல்லலாம்.

மரண பயத்தை நீக்கும் மந்திரம்:உங்களுக்காக
தற்போதைய இயந்திர கதியான வாழ்வில் எல்லாவற்றிலும் வேகம்! சில நேரம் விவேகமில்லாத வேகம் விபத்தில் முடிந்துவிடுகின்றது. வெளியில் சென்றவர் வீடு திரும்புவார் என்பது நிச்சயமற்ற நிலையாக உள்ளது. மரண பயத்தைப் போக்கும் சக்தி சிவனுக்கு உண்டு.

கீழ்க்காணும் மந்திரத்தை தினசரி சொல்வதன்/ஜபிப்பதன் மூலமாக மரண பயத்தை வெல்லலாம்.

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய
நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய
மகாதேவாதே நமக

(விளக்கம்:மரணத்தை வென்றவரே! ருத்ரனே! விஷத்தை உண்டும், மரணத்தை அண்டவிடாதவரே, அம்ருதத்தை உடையவரே! சர்வமும் ஆனவரே! மகாதேவனே உன்னை வணங்குகிறேன்)

நமது பாரதத்தின் இன்னும் இரு பெருமைகள்டாக்கா நகர் மஸ்லீம் துணிகள் உலகப்புகழ் பெற்றவை என நாம் பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம்.
அவ்வளவுதான்.அதென்ன உலகப்புகழ்? எனப்பார்த்தால் அந்த மஸ்லீம் துணி பெரும்பாலும் பெண்கள் அணியும் சேலைதான்.அந்த சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.

தீப்பெட்டி அக்காலத்தில் எவ்வளவு சிறியதாக அல்லது பெரியதாக இருந்தது எனத் தெரியாது நமக்கு.ஆனால் அந்த சேலைகளானது அவ்வளவு மெல்லிசானது என நம்மில் சிலர் கேள்விப்பட்டிருப்போம்.
வியாபாரம் செய்ய வந்த கிறிஸ்தவ ஆங்கிலேயனுக்கு இந்த சேலையின் தரம் எரிச்சலைத் தந்தது. பார்த்தான். இந்த சேலை நெய்பவர்களின் விரல்களை வெட்டிவிட்டான்.
மஸ்லீம் துணிகளுக்கான உலகச்சந்தையை இங்கிலாந்து கைப்பற்றி விட்டது.

இதே போல களரி என்ற வீரக்கலை சேரநாடு எனப் போற்றப்படும் கேரளத்தில் இருந்தது.மிகவும் உன்னதமான கலையாகும்.
எப்படி நம் தமிழ்நாட்டில் சிலம்பம் ஒரு வீரக்கலையோ அந்தளவுக்கு களரி இருந்தது.
களரி பயில 7 வயதில் குரு குலத்தில் சேரவேண்டும். 22 வயதில் தலைசிறந்த களரி ஆசானாக முடியும்.
சுதந்திரத்துக்கு முன்பு, ஒரு ஆங்கிலேயத் தளபதி இதைப் பற்றி அறிய விரும்பினான். அவன் ஒரு களரி குருகுலத்துக்கு வந்தான்.
ஒரு பெரிய மைதானத்தில் வட்டமாக 300 இளைஞர்கள் குனிந்தவாறு நிறுத்தப்பட்டனர். களரி ஆசான் தனது குறுவாளின் முனையில் சுண்ணாம்பைத் தடவி, எம்பிக் குதித்தார். சில விநாடிகளில் 300 பேர்களின் முதுகையும் தனது குறுவாளால் லேசாக தொட்டுவிட்டு தனது இடத்தில் இறங்கினார்.
ஆங்கிலேயத் தளபதி அந்த 300 இளைஞர்களின் முதுகையும் பார்த்தான்.எல்லோரது முதுகிலும் சுண்ணாம்பு முதுகின் மையத்தில் சிறிது பதிந்திருந்தது.
அந்த கிறிஸ்தவ ஆங்கிலேயத் தளபதி களரி ஆசான்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றான்.நாம் மானங்கெட்டுப்போய் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறோம்.

எவையெல்லாம் நமது பெருமைகளோ அவைகளை கிறிஸ்தவ ஆங்கிலேயன் அழித்தான்.எவற்றையெல்லாம் அழிக்க முடியாதோ அவற்றை நாமும் நமது சந்ததியினரும் படிக்க முடியாமல் தடுத்தான். பெருமையும் சிறப்பான வாழ்வும் தரும் நமது பாரம்பரிய வேர்களை இழந்தோம். எதற்கெடுத்தாலும் பயப்படுகிறோம்.
இதை எப்போது நாம் மாற்றப்போகிறோம்?

தமிழ்ப் பண்பாட்டை ஆராய்ச்சி செய்யும் மெக்சிகோ நாட்டு நடிகை
ரெனே லெஃபோரி மெக்சிகோவில் பிறந்து ஹாலிவுட்டில் கலக்கிய ஒரு நடிகை.தவிர சிறந்த ஹெர் டிரஸ்ஸர், ஒளிப்பதிவாளினி, நடன ஆசிரியை, யோகா நிபுணர், இயக்குநர், மேக் அப் உமன், தயாரிப்பாளர்.இவர் தனது பெயரை மாதவி என மாற்றியுள்ளார்.வயது 40.
நமது வாஸ்து நிபுணர் கணபதி ஸ்தபதி அவர்களால் தத்தெடுக்கப்பட்ட வளர்ப்பு மகள்.

இவர் ஏன்சியந்த் சீக்ரெட் ஆப் தி பைபிள் பார்ட்-2 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு குவிந்த விருதுகள் ஏராளம்.
இவர் கூறுவது : 4 வயசுலேயே டான்ஸ் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சாங்க என் அம்மா.அடுத்து யோகா. இப்படி பல திறமைகளோட என்னை வளர்த்தாங்க.ஹாலிவுட்ல மிகப்பெரிய வெற்றிப் படமான ‘செரோனிமா’ படத்துல மேக் அப் உமனா காலடி எடுத்து வைச்சேன்.பல பரிணாமங்களைப் பார்த்தாச்சு.ஆனாலும் மனசு எதையோ தேடிக்கிட்டே இருந்துச்சு.

இந்தியப்பண்பாடு பற்றி சின்ன வயசுலயே படிச்சுருக்கேன்.அதை நேரா பார்த்து தெரிஞ்சுக்கணும்ங்கற ஆர்வம். ஏழு வருஷத்துக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன்.இங்கிருக்கும் கோயில்கள், மக்கள், ஆன்மீகக்குருக்கள், பக்தி எல்லாத்தையும் பார்த்துப் பிரமிச்சுப் போயிட்டேன். இனி நமக்கான களம் ஆன்மீகம்னு உணர்ந்தேன்.தமிழ்நாட்டுல இருக்கிற காலம்தான் என் வாழ்க்கையின் அர்த்ததை புரிய வச்சது- எனப் பரவசப்படும் ரெனே மூன்று குழந்தைகளின் தாய்.

அவர் மேலும் சொல்கிறார்: “ எந்த எதிர்பார்ப்பும் இல்லாம மனம், உடல், எண்ணம் எல்லாத்தையும் ஒருமுகப்படுத்தி கடவுளுக்காக தங்களையே அர்ப்பணிக்கக்கூடிய இந்த மக்களைப் பார்த்தா வியப்பா இருக்கு. இங்கிருக்கும் பழங்காலக் கோயில்கள், சிற்பங்களை அவ்வளவு தத்ரூபமா நுணுக்கமா வடிச்சிருக்காங்க.இதையெல்லாம் அர்ப்பணிப்பு இல்லாம செய்ய முடியாது.பண்பாடு பழக்கவழக்கங்கள் எல்லாமே கடவுள் நம்பிக்கையால் வந்தவை. அதனால்தான் அதெல்லாம் இன்னும் அழியாம இருக்கு.தப்பு செய்தா ‘கடவுள் தண்டிப்பார்’னு பயப்படுறாங்க.நன்மை செய்தாலும்,, இதை கடவுளுக்குச் செய்றோம்னு நினைக்கிறாங்க.இப்படி உன்னதமான மனநிறைவான வாழ்க்கையை இந்த மக்கள் வாழறாங்க” என்று சிலிர்க்கிறார்.

“இவற்றையெல்லாம் உலக நாடுகள் பின்பற்ற ஆரம்பிச்சா, குற்றங்கள் குறைஞ்சு உலகமே அமைதியாகிவிடும்(இதைத் தான் ஆன்மீகக்கடல் வலைப்பூ கொண்டுவர நினைக்கிறது)ங்கற நம்பிக்கை எனக்கு. அதனால தான் அழிந்து போன பழைய மரபுகளைப் பற்றியும் ஆராய்ச்சி செய்துட்டு இருக்கேன். நானோ டெக்னாலஜியை அறிவியலாளர்கள் இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்காங்க.ஆனா, அந்த டெக்னாலஜியை வைச்சுத்தான் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கோயில்கள், சிலைகள் எல்லாம் செய்திருக்காங்க. இதையெல்லாம் ஹாலிவுட்ல படமா எடுத்து உலகம்முழுவதும் பரப்ப இருக்கேன். உலக அமைதியை நிலைநாட்ட கடவுள் அனுப்பிய அஸ்திரம்தான் நான்” என்கிற ரெனேயின் கண்கள் ஒளிர்கின்றன.

இந்துக்கலாச்சாராத்தை மையமாகக் கொண்டே ‘வேனிஷிங்க் ட்ரடிஷன்’ ‘ரிவைவல் அண்ட் சர்வைவல்’ ஆகிய இரு நிகழ்ச்சிகளை டிஸ்கவரிச் சேனலுக்காக தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
நன்றி:குங்குமம் 25.6.2009 ,பக்கம் 74-75.

20.12.2012 க்குப் பிறகும் நம் பூமி வாழும்தென் அமெரிக்காவில் கி.மு.3100 முதல் கி.பி.1600 வரை மயன் நாகரீகம் இருந்தது. அவர்களின் நாட்காட்டி(காலண்டர்) கி.பி.2012 உடன் முடிவதால் அதைப் பற்றி ஒரு தேவையற்ற பயம் உலகம் முழுக்கப் பரவிக்கொண்டிருக்கின்றது.

கி.பி.2012 டிசம்பர் 21 அன்று சூரியனின் நேர்கோட்டுப்பாதையில் பூமி வரப்போகிறது. இதனால் பூமியின் காந்தப்புலன்கள் மாறப்போகின்றன. (இதை இன்றைய புவியியல் வல்லுநர்கள் உண்மை என்கிறார்கள்.ஆனால் எப்போது என்பதை அறுதியிட முடியவில்லை)

இதனால், மலை அளவுக்கு சுமார் 18,000 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்புமாம்.எரிமலைகள் வெடிக்குமாம்.பல கடலோரப்பகுதிகள் மூழ்குமாம்.சரி பார்ப்போம்.இதோ வந்துடும் கி.பி.2012.
இதுபற்றி ஒரு இணையதளம் இருக்கின்றது.ஆங்கிலத்தில்www.endoftime2012.com

வந்தாரை வாழ வைக்கும் ஊரு;இங்கேயே வாழ்வோரைச் சாகடிக்கும் ஊரு!!!

கோவை, ஈரோடு, திருப்பூர், சிவகாசி, மதுரை முதலான மாநகரங்களில் பீகார் மற்றும் உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒரு நாளுக்கு சராசரியாக 1000 பேர் வேலை தேடி வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் ஃபேபிரிக்கேஷன், வெல்டிங் வேலைகளுக்கே வருகின்றனர். இந்த நிலை 1990களில் இருந்தது.

கி.பி.2000 வாக்கில் ராம் தேவ், ஜெயின் கோவில் என்ற பெயரில் சொத்துக்கள், தொழிற்சாலைகள், பண்ணை வீடுகள்,திரைஅரங்குகள், கல்யாண மண்டபங்கள் வாங்கிக்குவித்துக் கொண்டே இருக்கின்றனர். இதைத் தவிர, எந்தத் தொழிலையும் இவர்கள் முறைப்படி செய்வது இல்லை;
தவிர, அப்படி வேலைதேடி வரும் வடநாட்டினருக்கு நம் தமிழ்நாட்டு முதலாளிகள் நம் தமிழ்நாட்டுப் பெண்களை திருமணம் செய்து வைக்கும் கொடுமையும் நடக்கிறது.
இப்படியே போனால், 2010 முதல் 2020 க்குள் தமிழக சட்டசபையில் இவர்கள் எம்.எல்.ஏ.வாக நுழைந்து  சட்ட ஒழுங்கை தன் வசப்படுத்திவிடுவார்கள்.2030க்குள் தமிழ்நாட்டில் தமிழர்களாகிய நாம் சிறுபான்மையினராகிவிடுவோம்.
இது ஓவர் பயம் அல்ல.யதார்த்தம்!!!!
வேண்டுமானால் கோவைத் தொழிலதிபர்களிடம் சர்வே செய்து பார்க்கவும்.

உதாரணமாக 5 டன் இரும்புக்கழிவு அல்லது 20,000 காலண்டர் வாங்குகின்றனர் எனில் அதற்கு பில் இல்லாமல் வாங்கி வட மாநிலங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.இதனால் அரசுக்குப் போக வேண்டிய வரி இழப்பு ஏற்படுகிறது.ஆனால், அதனால் அந்த வடநாட்டினருக்கு மிச்சமாகும் பணம் மட்டும் ஒரு வருடத்துக்கு எத்தனை கோடிகள் தெரியுமா?

கி.பி.2002 இல் பிகார் தலைநகர் பாட்னாவுக்கு ரெயில்வே தேர்வு எழுத நான் போயிருந்தேன்.பாட்னா ரயில் நிலையத்திலேயே என்னை மடக்கி திருப்பி அனுப்பினர் பீகாரிகள்.
தமிழ் தெரிந்தவர்களை வைத்து அவர்கள் சொன்னது:

பரீட்சை எழுதாமல் திரும்பப்போய்விடுங்கள்.மீறிச் சென்றால் பரீட்சை எழுதும் கல்லூரியின் வாசலில் உள்ள எங்கள் ஆட்கள் உங்களை மிரட்டிவிடுவர்.
ஒரு வேளை இந்த பரீட்சையில் பாஸ் ஆகி பீகாருக்கு வந்தால் உன்னைக் கொல்லுவோம்.

நாங்கள் மதராஸிக்கு வந்தால் எங்களை நீ என்ன வேணும் னாலும் செய்துகொள்

ஆகா!!! இந்தியாவில் ஏன் ராஜ்தாக்கரே உருவானார் என இப்போதுதான் புரிகிறது.

போன 2004-2009 மன்மோகனின் காங்கிரஸ் ஆட்சியில் லாலு ரயில் மந்திரியாக இருந்தார் அல்லவா?
அப்போது அவர் செய்த அக்கிரமம் என்ன தெரியுமா?
தகுதியற்ற பீகார்காரர்களை ரெயில்வேயில் தேர்வு மூலமாக ரெயில்வே ஊழியர்களாக்கியதுதான்.
இப்படி தேர்வு செய்வதற்காகவே பீகார் மண்டலத்தின் தேர்வை மும்பையில் நடத்தினார். இதை மோப்பம் பிடித்த ராஜ்தாக்கரே வடநாட்டாரை(பீகாரிகளை) தேர்வு எழுத விடாமல் தடுத்தார்.

எல்லோரும் செல்வந்தர் ஆவது எப்படி?தனி மனிதரின் நிலை உயர்த்தப்பட்டால், அம்மனிதன் பணிபுரியும் நிறுவனத்தின் நிலை உயரும்.
இவ்வாறு நிறுவனங்களின் நிலை உயர்த்தப்பட்டால், நிறுவனங்களின் தாய்நாடு உயரும்.இது சுவாமி விவேகானந்தர் சொன்னது.
தனி மனிதன் செல்வந்தனாக உயர இங்கே யாம் அறிந்த வழிமுறைகளைக் கூற உள்ளோம்.

1.குபேர காயத்ரி மந்திரம் தினமும் ஜபிக்கவும்.

2.லட்சுமி குபேர வழிபாடு வீட்டில் அல்லது அலுவலகத்தில்(உங்கள் நிறுவனமாக இருந்தால்) மாதம் ஒரு வெள்ளியன்று செய்யவும்.(எப்படிச் செய்வது எனக் கேட்கிறீர்களா? இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவின் பழைய தலைப்புக்களில் லட்சுமிபூஜை செய்வது எப்படி? என்பதைத் தேடவும்)

3.காஞ்சிபுரத்தில் குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது.

4.நாகப்பட்டிணத்தின் மையப்பகுதியில் குமரன் கோவிலில் குபேரனுக்கு தனி சன்னதி இருக்கிறது.

5.வீட்டில் குபேரன் படம் வைத்தும் வழிபடலாம்.


அ) தொழிலில் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருப்பவர்களும், தொழில் தொடங்க இருப்பவரும் மேலே கூறியுள்ள குபேரன் கோவிலுக்கு வந்து சிறந்த முறையில் லட்டு நிவேதனம், பிரார்த்தனை அர்ச்சனை செய்து கொண்டு செல்வது அவசியம்.

ஆ) பூச நட்சத்திரமும் வியாழக்கிழமையும் கூடிய நாட்களில் (25.3.2009 காலை மணி 6.50 முதல் அன்று முழுக்க.22.4.2010 மதியம் 1.10வரை) குபேரன் சன்னதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் பூரணமாகச் செய்து சுவர்ணார்ச்சனை 108 அல்லது 1008 கணக்கில் செய்து வரவும்.

இ)செல்வ நிலை தாழாமலிருக்கவும்(சிலரது ஜாதகத்தில் 7 வருடம் அல்லது 22 வருடம் பல கோடிக்கு அதிபதியாக இருப்பர்.திடீரென பரம ஏழையாகிவிடுவர்), திடீர் தன வரவுக்கும் பவுர்ணமி தோறும் குபேரனுக்கு மூல மந்திர அர்ச்சனை செய்து வழிபடலாம்.

ஈ) வணிகம் நன்றாக விருத்தி அடையவேண்டுமெனில் வெள்ளிக்கிழமைகளில் நல்ல நேரத்தில்(காலை 10 முதல் 10.25க்குள்) குபேரனுக்கு பால் அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்களால் குபேரனை அலங்காரம் செய்து வழிபட வேண்டும்.

உ) உடனடியாக பிரார்த்தனை நிறைவேற நெய்தீபம்

ஏன் தினமும் பக்திப்பாடல் பாடவேண்டும்?

அறிவே சக்தி; வலிமையே வாழ்க்கை.

சிறு வயதில் கந்த சஷ்டிக் கவசம், கந்தரலாங்காரம்,பெரியபுராணம் முதலான ஆன்மீகப்பாடல்களை தினமும் பாடுவதை நமது முந்தைய தலைமுறை வரை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தனர்.ஏன்?

யாருக்கெல்லாம் அபார நினைவாற்றல் இருக்கிறதோ அவருக்கு ஒரு போதும் தற்கொலை எண்ணம் வராது என்பதை நவீன மனோதத்துவம் ஆய்வு முடிவாக சொல்லியிருக்கிறது.

ஜோதிடப் பட்டயப்படிப்பின் வரலாறு

ஜோதிடப்பட்டயப்(D.A.,)படிப்பின் வரலாறு
(Diplamo in Astrology)

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் ஜோதிடத்தில் பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தியது.ஆறுமாத பட்டயப்படிப்பு அது.இந்த படிப்பை அறிமுகப்படுத்திய உடனே மதுரையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அனேகமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் என நினைக்கிறேன்.கம்யூனிஸ்டுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பின் அடையாளமாக பெரியாரிலிருந்து பல்கலைக்கழகம்செல்லும் ஒரு நகரப் பேருந்தை(டவுண் பஸ்) எரித்தன!!!
இதைப் பார்த்து எத்தனை மக்கள் சிரித்திருப்பார்கள்.மேற்கு வங்காளத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த மாநில அரசாங்கத்தின் மந்திரிகள் துர்கா பூஜைகளில் திருட்டுத்தனமாக இன்றும் கலந்துகொள்ளுகிறார்கள்.

(சிலரது பிறந்த ஜாதகத்தில் சனியுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் அவர் தெய்வநம்பிக்கையற்றவராகவும், தனது பிறந்த நாட்டின் புராதன சாஸ்திரங்களைக் கிண்டல் செய்பவராகவும் இருப்பார் என ஜோதிடம் சொல்லுகிறது)

அதே சமயம், ஜோதிடப்பட்டயப்படிப்பிற்கு முதல் பேட்ச் மாணவர்களின் எண்ணிக்கை 60,000.இத்தனைக்கும் இது அஞ்சல்வழிப்படிப்பாகும்.

இந்த வருடம் கி.பி.2009! மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் ஜோதிடப் பட்டயப் படிப்பை நிறுத்திக்கொண்டது.
ஆனால்,இந்த பட்டயப்படிப்பு ஒரு ஆண்டுக்கு ரூ.20,00,000/-(இருபது லட்சம் ரூபாய்) வருமானம் பல்கலைக்கழகத்துக்குத் தந்துகொண்டு இருந்தது.ஆதாரம்: தினமலர்,பிப்ரவரி,2009.

அதே சமயம், தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் கற்பகம் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஜோதிடப் பட்டயப்படிப்பை அறிமுகம் செய்துள்ளன.இதில் சாஸ்திரா பட்டயம் முதல் முதுகலை வரை ஜோதிடவியல் பாடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே துவக்கிவிட்டது.

அமெரிக்காவில் வேத ஜோதிடம் (vedic astrology) என்ற பெயரில் நமது இந்து ஜோதிடக்கலையை பல பல்கலைக் கழகங்கள் நடத்திக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் அமெரிக்க வேத ஜோதிட சங்கம்(www.aava.com= American Association of Vedic Astrology),இங்கிலாந்தில் பிரிட்டன் வேத ஜோதிட சங்கம்(British Association of Vedic Astrology = www.bava.org) என அமைப்புக்கள் இயங்கிவருகின்றன.

கி.பி.2002 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்.இங்கிலாந்து அரசு .400 கோடி பவுண்டுகள் செலவழித்து பல யாகங்களை லண்டன் மாநகரத்தில் செய்தது.(ஆதாரம் தினமலர் கி.பி.2002)
இங்கிலாந்து அரசு வேத ஜோதிடர்களைக் கொண்டு தனது நாட்டின் எதிர்காலத்தை கணிக்கச் சொன்னது. அந்த கணிப்பின் படி கி.பி.2012 முதல் 2015க்குள் இங்கிலாந்தின் பெரும் பகுதிகள் கடலுக்குள் மூழ்க இருப்பதைக் கண்டறிந்தது.

கடந்த நூற்றாண்டில் அது உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்தது.அப்போது அதன் நிர்வாகிகளும் இங்கிலாந்து ராணுவமும் பல மதத்தைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்களை இடித்தாலும், ஏராளமான பெண்களை மானபங்கப்படுத்தியதாலும், கற்பழித்ததாலும் இந்த சாபம் உருவானது.

இதை மாற்ற கேரள நம்பூதிரிகளைக் கொண்டு பல யாகங்களைச் செய்தது.