RightClick

சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள்-3

சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள்-3

கமலமுனி சித்தரின் ஜீவசமாதி மதுரையில் இருக்கிறது.

திருமூலரின் ஜீவசமாதி திருநெல்வேலி நெல்லையப்பர்கோவிலில் ஸ்ரீமூலர் சன்னதியாக இருக்கிறது.

ஸ்ரீபல்குன ருத்ரசித்தர் அவர்கள் தென்னிந்தியாவின் கயா எனப் போற்றப்படும் பூவாளூரில் இன்றும் சூட்சுமமாக வாழ்ந்துவருகிறார்.இந்த ஊர் திருச்சியை அடுத்த லால்குடியின் அருகில் உள்ளது.இந்த பூவாளூரில் பல்குனி நதி இருக்கின்றது.
இங்கு இன்றும் பித்ரு தர்ப்பணம் செய்யலாம்.கடும்பாவம் செய்தால் அல்லது நமது தாத்தா காலத்தில் செய்திருந்தால் அதைத் தீர்க்கும் வரை ஏதாவது ஒரு ரூபத்தில் நாம் கஷ்டப்படவேண்டியதுதான்.அப்படி கஷ்டப்படாமலிருக்க பரிகாரம் அவசியமாகிறது.அந்த பரிகாரங்களுக்கு சாட்சி பூதமாக நின்று பித்ரு சாபங்களிலிருந்து நம்மை இன்றும் நம்மைக் காப்பாற்றுபவர்தான் பல்குனி ருத்ர சித்த மாமுனி!!!

இவருடைய யோக ஜோதி எப்போதும் இத்திருத்தலத்தில் இருந்துகொண்டு சாயா யோக ககன மார்க்கமாக இன்றும் நமக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.
மூப்பு,பிணி,பசி,உறக்கமில்லா தேவநிலை மற்றும் பித்ருக்களின் உத்தம நிலைகளைத் தரவல்லதே பூவாளூர் தலபித்ருபூஜைகளின் பலன்களாகும்.

பொன்முத்திரையர் என்ற சொர்ண பைரவர் சித்தர் அண்ணாமலையில் சூட்சுமமாக வாழ்ந்துவருகிறார்.

சாவளிகே சிவலிங்கேஸ்வர சித்தரின் ஜீவ சமாதி வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ.தூரத்தில் உள்ளது கஸ்பா ஏ என்ற பகுதி. அப்பகுதியில் உள்ள சோமலாபுரம் சாலையில்தான் உள்ளது.
பசுமடத்துக்கோனார் சித்தர் அவர்கள் ஸ்தூல சூட்சும காரண காரிய வடிவங்களில் இவர் மகாசிவராத்திரி அன்று கிரிவலம் வருகிறார்.இருப்பது அங்கே தான்.இவர் அடி அண்ணாமலைக்கு அருகில் உள்ள கோசலைப்பகுதியில் வாழ்கிறார்.இங்கு வந்ததும் இக்கிராமத்து மண்ணை எடுத்து நெற்றியில் திருநீற்றுத் திலகமாக இட்டுக்கொள்கின்றனர்.

மகாசிவராத்திரி அன்று கிரிவலம் செல்லும்போது பசுவின் திருவடி பட்ட மண்ணை சேகரித்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து திருநீறாக இட்டு பசு கன்றுடன் கிரிவலம் வருவது சிறப்பாகும்.இப்படிச்செய்தால், சந்தேகம் கொண்டு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர்.சொத்து, பதவி இழந்தோர் திரும்பபெறுவர்.தொழில், பதவி காரணமாகப் பிரிந்த பெற்றோர்கள்,பிள்ளைகள் மீண்டும் இல்லத்தில் இணைவர்.அடிக்கடி வயிற்றுவலி உடையவர்கள் அவதி நீங்கப்பெறுவர்.சந்ததி விருத்தி உண்டாகும்.

புலத்தியரின் ஜீவசமாதி ஆவுடையார்கோவிலிலும், பொதிகைமலையிலும் இருக்கிறது.

ஸ்ரீபோடோ சித்தர் முனிகளின் ஜீவசமாதி சென்னை பூந்தமல்லி அருகிலுள்ள சித்துக்காடு ஸ்ரீதாந்திரீஸ்வரர் சிவாலயமாகும்.அதிகம் பிரபலமடையாத யோக சக்திகள் நிறைந்த ஸ்தலம் இது.இன்றைய கணிப்பொறித் தொழில் சுனாமிவளர்ச்சியடைவதற்கு இவரே காரணம்(ஆதாரம்::சிவமயம் கண்ட சித்தர்கள் புத்தகம் பக்கம் 216).இவரை வழிபட்டால் எப்பேர்ப்பட்ட சனித் தொந்தரவும் நம்மை அண்டாது.

திருக்கோயிலூர் ஜடாமுனித் தம்பிரான் சித்தர் மிகவும் பாசம் மிக்கவர்.திருஅண்ணாமலையில் வாழ்ந்துவருகிறார்.மாத சிவராத்திரி திருநாளில் ஜடாமுனி சித்தர் அருளிய ஸ்ரீகாயத்ரி கோபுரதரிசன முத்திரை இட்டவாறு கிரிவலம் வருவோர்க்கு எத்தகைய நோய்களுக்கும் தீர்வு பெறுவதற்கான வழிகள் கிட்டும்.

வேப்பிலைக்கட்டிச்சித்தர் அண்ணாமலையில் இருக்கிறார்.
கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தரும் அண்ணாமலையில் வாழ்கிறார்.
பட்டினத்தார் திருவெற்றியூரில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.
சப்தகந்தலிங்க சித்தரும் அண்ணாமலையில்தான் வாழ்கிறார்.
இவர் ஆனி மாத சிவராத்திரியன்று கிரிவலம் வருகிறார்.அப்படி கிரிவலம் வருவோர்,பின்வரும் மந்திரம் ஜபித்தால் கடன் குறையும்.மனக்கவலை அகலும்.தீராத பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு கிட்டும்.

ஓம் சப்தநாதாய வித்மஹே
சப்தவேதாய தீமஹி
தந்நோ சப்தகந்தலிங்க சித்புருஷ ப்ரசோதயாத்

கடுவெளிசித்தரின் ஜீவசமாதி காஞ்சிபுரத்தில் உள்ளது.

சாங்கத்தேவர் சித்தர் கோதாவரி நதிக்கரையில் ஜீவசமாதியாகியுள்ளார்.
ஸ்ரீசந்தனு பீவி கிருஷ்ண மகானு பாவுலு சித்தர் அண்ணாமலையில் வாழ்கிறார்.