RightClick

குங்குமம் தயாரிப்பது எப்படி?

குங்குமத்தில் கூட இன்று கலப்படம் வந்துவிட்டதால் நாமே நமது குலதெய்வம் அல்லது கோயில்களுக்கு குங்குமம் செய்துதரலாமே!
புண்ணியம் செய்தபலன் கிடைக்கும்.நம்மால் தயாரிக்கப்பட்ட குங்குமம் நமது பகுதி மக்கள் பயன்படுத்தின பெருமை நமக்கு கிடைக்கலாம் இல்லையா?

ஒரு வெள்ளிக்கிழமை குங்குமம் செய்யத் துவங்குவது நல்லது.இன்று 31.7.2009 வரலட்சுமி விரதம்.இது போன்ற சுபநாட்களில் துவங்குவது நன்று.தேய்பிறைநாட்களில் துவங்கக் கூடாது.

பெண்கள் மடிசார் கட்டியும், ஆண்கள் பஞ்சகச்சம் அணிந்து தயாரிப்பது நலம்.ஏனென்றால், பூமாதேவிக்கும் மர்மஸ்தானத்திற்கும் தொடர்பானால் முழுமையான இறைசக்தி கிடைக்காது.

புள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று.

எலுமிச்சையை துர்க்கைகாயத்ரி மந்திரம் சொல்லிக்கொண்டு கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்கக்கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்கவேண்டும். நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாகசேர்க்க வேண்டும்.

இக்கலவையினை நிழலில் காய வைக்கவேண்டும். இதுவே குங்குமப்பொடி.இதனைத் தயாரிக்கும்போது லலிதா சகஸ்ரநாமம் அல்லது தேவிமகாத்மியத்திலுள்ள துர்க்காஸ்ப்தசதி ஸ்லோகங்களைப் படித்துக் கொண்டே செய்யவேண்டும்.

குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள்.மாங்கல்ய பலத்தை அதிகரிப்பதே குங்குமத்தின் பொருள்.

அம்பாளின் பரிபூரண அருளைப் பெறுவதற்காக ஆண்கள் குங்குமத்தை அணிந்து கொண்டு அம்பாளை குங்குமத்தால் அர்ச்சித்து பரிபூரணப்பலன்களைப் பெறுகின்றனர்.

.

சுபநாட்களில் கோவில்களிலும்,வீடுகளிலும் குங்குமதானம் செய்பவர்கள் மாங்கல்யப் பிராப்தி அடைகிறார்கள்.திருமணத்தடை விலகும்.

சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள்-4

சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள்-4

கலசப்பாக்கம் மலபீடான் சித்தர் என்ற பூண்டி சித்தரின் ஜீவசமாதி சென்னை அருகில் போரூர்/கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில் உள்ளது.இவர் மாத சிவராத்திரி அன்று திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகிறார்.

ஸ்ரீபெருமானந்த சித்த சாமிகள்(தேனி மலை) அவர்களின் ஜீவசமாதி புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் காரையூர் வழியில் உள்ள தேனி மலையில் இருக்கிறது.ஏராளமானவர்கள் இவரை வழிபட்டுவருகின்றனர்.

வாத்யார் ஐயா ஸ்ரீமுத்துவடுகநாத சித்தர்(சிங்கம்புணரி) ஸ்ரீவராஹி உபாசனையில் அனுபவம் மிக்கவர்.இவரது ஜீவ சமாதி எங்கு இருக்கிறது எனத்தெரியவில்லை; திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீவராஹி தீர்த்தத்திற்கு தினமும் வந்து வழிபடுகிறார்.தவிர தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீவராஹி சன்னதி, கும்பகோணம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வராஹி அம்மன் சன்னதிக்கு தினமும் வந்து வழிபடுகிறார்.இவர் தினமும் இந்தியா முழுக்க சூட்சும ரீதியாகப் பயணிக்கிறார்.இதனால்தான் மாந்திரீகக்கட்டுக்களால் இந்தியா பாதிக்கப்படுவதில்லை.

ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் திருவிசைநல்லூர், திருமா நிலையூர், கரூர், கராச்சி,மானாமதுரை, நெரூரில் ஜீவசமாதி யடைந்துள்ளார்.
சீரியா சிலம்பாக்கினி சித்தர் திருஅண்ணாமலையில் வசிக்கிறார்.இவர் பெயரில் சிலம்பாக்கினி மலை ஒன்று அங்கு உள்ளது.

ஸ்ரீபெத்தநாராயணசித்தர் பல நூற்றாண்டுகளாக திருஅண்ணாமலையில் வாழ்கிறார்.
ஸ்ரீஉண்ணாமுலை சமேத ஸ்ரீஅண்ணாமலை ஈசனே போற்றி என வணங்கி
ஸ்ரீபெத்த நாராயண சித்த சுவாமிக்கு நமஸ்காரம் என கிரிவலம் செய்யும்போது ஜபித்து ஆங்காங்கே பூக்களைத் தூவிக்கொண்டு வந்தால் அவர்களுக்கு ஏராளமான நற்பலன்கள் உண்டு.

இடியாப்பசித்தர் இமயத்தில் அன்னபூரணி சிகரங்களில் உறைந்திருக்கிறார்.

சீனந்தல் சிவப்பெருவாளச்சித்தர் திருஅண்ணாமலையில் பிறந்தவர்.ஆடிமாத சிவராத்திரியன்று கிரிவலம் சென்றால் உணவு சார்ந்த பிரச்னைகள் தீரும்.உணவகம், காய்கறி ,மளிகைப்பொருள் வியாபாரம் செழிக்கும்.வயிறு சார்ந்த நோய்கள் தீரும்.அன்னதுவேஷத்தால் சரியாக சாப்பிடமுடியாதவர்கள் ஆடிமாத சிவராத்திரியன்று கிரிவலம் சென்றால் குணமாகும்.

திருவல்லம் பாம்பணையான் சித்தர் மார்கழிமாத பவுர்ணமி அன்று மனிதவடிவில் கிரிவலம் அண்ணாமலையில் வந்துகொண்டிருக்கிறார்.இவரை நினைத்தாலே பாம்புகளால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.
கணதங்கணான் சித்தர் இவர்தான் மாத சிவராத்திரி மகிமையை பூமிக்கு உணர்த்தியவர்.இங்குதான் வசிக்கிறார்.
ரோகிணி,திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களின் கபாலம் சார்ந்த நோய்கள் குணமாகும்.சிலந்தித் தலைவலி, மைக்ரான் தலைவலி குணமாகும்.
மாதசிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்த ஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவர் தரிசனம் பாக்கியம் உள்ளோருக்கு கிட்டும்.

இடைக்காடர் திருஅண்ணாமலை, திருவிடை மருதூர், இடைக்காட்டூரில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.இவர் கோடி ஆண்டுகளுக்கு கார்த்திகை தீபம் தரிசித்தவர்.
திருஅண்ணாமலைபற்றி பரிபூரண ரகசியம் அறிந்தவர் இவர் மட்டுமே!!!

இந்தத்தகவல்களைத் தந்திருப்பது:சிவமயம் கண்ட சித்தர்கள்,ஆசிரியர்: கானமஞ்சரி சம்பத்குமார்।இந்து பப்ளிகேஷன்ஸ்,சென்னை।விலை ரூ।140/-।மிக அற்புதமான தமிழ் புத்தகம்.

சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள்-3

சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள்-3

கமலமுனி சித்தரின் ஜீவசமாதி மதுரையில் இருக்கிறது.

திருமூலரின் ஜீவசமாதி திருநெல்வேலி நெல்லையப்பர்கோவிலில் ஸ்ரீமூலர் சன்னதியாக இருக்கிறது.

ஸ்ரீபல்குன ருத்ரசித்தர் அவர்கள் தென்னிந்தியாவின் கயா எனப் போற்றப்படும் பூவாளூரில் இன்றும் சூட்சுமமாக வாழ்ந்துவருகிறார்.இந்த ஊர் திருச்சியை அடுத்த லால்குடியின் அருகில் உள்ளது.இந்த பூவாளூரில் பல்குனி நதி இருக்கின்றது.
இங்கு இன்றும் பித்ரு தர்ப்பணம் செய்யலாம்.கடும்பாவம் செய்தால் அல்லது நமது தாத்தா காலத்தில் செய்திருந்தால் அதைத் தீர்க்கும் வரை ஏதாவது ஒரு ரூபத்தில் நாம் கஷ்டப்படவேண்டியதுதான்.அப்படி கஷ்டப்படாமலிருக்க பரிகாரம் அவசியமாகிறது.அந்த பரிகாரங்களுக்கு சாட்சி பூதமாக நின்று பித்ரு சாபங்களிலிருந்து நம்மை இன்றும் நம்மைக் காப்பாற்றுபவர்தான் பல்குனி ருத்ர சித்த மாமுனி!!!

இவருடைய யோக ஜோதி எப்போதும் இத்திருத்தலத்தில் இருந்துகொண்டு சாயா யோக ககன மார்க்கமாக இன்றும் நமக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.
மூப்பு,பிணி,பசி,உறக்கமில்லா தேவநிலை மற்றும் பித்ருக்களின் உத்தம நிலைகளைத் தரவல்லதே பூவாளூர் தலபித்ருபூஜைகளின் பலன்களாகும்.

பொன்முத்திரையர் என்ற சொர்ண பைரவர் சித்தர் அண்ணாமலையில் சூட்சுமமாக வாழ்ந்துவருகிறார்.

சாவளிகே சிவலிங்கேஸ்வர சித்தரின் ஜீவ சமாதி வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ.தூரத்தில் உள்ளது கஸ்பா ஏ என்ற பகுதி. அப்பகுதியில் உள்ள சோமலாபுரம் சாலையில்தான் உள்ளது.
பசுமடத்துக்கோனார் சித்தர் அவர்கள் ஸ்தூல சூட்சும காரண காரிய வடிவங்களில் இவர் மகாசிவராத்திரி அன்று கிரிவலம் வருகிறார்.இருப்பது அங்கே தான்.இவர் அடி அண்ணாமலைக்கு அருகில் உள்ள கோசலைப்பகுதியில் வாழ்கிறார்.இங்கு வந்ததும் இக்கிராமத்து மண்ணை எடுத்து நெற்றியில் திருநீற்றுத் திலகமாக இட்டுக்கொள்கின்றனர்.

மகாசிவராத்திரி அன்று கிரிவலம் செல்லும்போது பசுவின் திருவடி பட்ட மண்ணை சேகரித்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து திருநீறாக இட்டு பசு கன்றுடன் கிரிவலம் வருவது சிறப்பாகும்.இப்படிச்செய்தால், சந்தேகம் கொண்டு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர்.சொத்து, பதவி இழந்தோர் திரும்பபெறுவர்.தொழில், பதவி காரணமாகப் பிரிந்த பெற்றோர்கள்,பிள்ளைகள் மீண்டும் இல்லத்தில் இணைவர்.அடிக்கடி வயிற்றுவலி உடையவர்கள் அவதி நீங்கப்பெறுவர்.சந்ததி விருத்தி உண்டாகும்.

புலத்தியரின் ஜீவசமாதி ஆவுடையார்கோவிலிலும், பொதிகைமலையிலும் இருக்கிறது.

ஸ்ரீபோடோ சித்தர் முனிகளின் ஜீவசமாதி சென்னை பூந்தமல்லி அருகிலுள்ள சித்துக்காடு ஸ்ரீதாந்திரீஸ்வரர் சிவாலயமாகும்.அதிகம் பிரபலமடையாத யோக சக்திகள் நிறைந்த ஸ்தலம் இது.இன்றைய கணிப்பொறித் தொழில் சுனாமிவளர்ச்சியடைவதற்கு இவரே காரணம்(ஆதாரம்::சிவமயம் கண்ட சித்தர்கள் புத்தகம் பக்கம் 216).இவரை வழிபட்டால் எப்பேர்ப்பட்ட சனித் தொந்தரவும் நம்மை அண்டாது.

திருக்கோயிலூர் ஜடாமுனித் தம்பிரான் சித்தர் மிகவும் பாசம் மிக்கவர்.திருஅண்ணாமலையில் வாழ்ந்துவருகிறார்.மாத சிவராத்திரி திருநாளில் ஜடாமுனி சித்தர் அருளிய ஸ்ரீகாயத்ரி கோபுரதரிசன முத்திரை இட்டவாறு கிரிவலம் வருவோர்க்கு எத்தகைய நோய்களுக்கும் தீர்வு பெறுவதற்கான வழிகள் கிட்டும்.

வேப்பிலைக்கட்டிச்சித்தர் அண்ணாமலையில் இருக்கிறார்.
கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தரும் அண்ணாமலையில் வாழ்கிறார்.
பட்டினத்தார் திருவெற்றியூரில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.
சப்தகந்தலிங்க சித்தரும் அண்ணாமலையில்தான் வாழ்கிறார்.
இவர் ஆனி மாத சிவராத்திரியன்று கிரிவலம் வருகிறார்.அப்படி கிரிவலம் வருவோர்,பின்வரும் மந்திரம் ஜபித்தால் கடன் குறையும்.மனக்கவலை அகலும்.தீராத பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு கிட்டும்.

ஓம் சப்தநாதாய வித்மஹே
சப்தவேதாய தீமஹி
தந்நோ சப்தகந்தலிங்க சித்புருஷ ப்ரசோதயாத்

கடுவெளிசித்தரின் ஜீவசமாதி காஞ்சிபுரத்தில் உள்ளது.

சாங்கத்தேவர் சித்தர் கோதாவரி நதிக்கரையில் ஜீவசமாதியாகியுள்ளார்.
ஸ்ரீசந்தனு பீவி கிருஷ்ண மகானு பாவுலு சித்தர் அண்ணாமலையில் வாழ்கிறார்.

சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள்-2

சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள்-2

.

ரோம முனி கும்பகோணத்தை அடுத்த கூத்தனூரில் சமாதியானதாகக் கூறுகிறார்கள்.
காலாங்கிநாதர் சீனாவிலும்,காஞ்சிபுரத்திலும்,சேலம் அருகில் உள்ள கஞ்சமலையிலும் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.(ஒரு சித்தர் ஒரே நேரத்தில் எட்டு இடங்களில் ஜீவசமாதியடையமுடியும் என்பதை ஜனவரி 2009 வலைப்பூவிலேயே கூறியுள்ளோம்)
தமிழ்நாட்டில் உள்ள திருவீழிமழலையில் ஒரு வில்வமரத் தூண் இருக்கிறது.இங்கு காலாங்கிநாதர் ஜோதி ரூபமாக உறைகிறார்.

கொங்கணர் திருப்பதி பாலாஜிசுவாமி மூலஸ்தானத்தின் நேர் கீழே தவம் செய்து கொண்டிருக்கிறார்.

சட்டைமுனி சீர்காழியில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.இவருக்கு அங்குள்ள கோவிலில் சட்டைநாதர் என்று பெயர்.
வாழ்க்கையில் எந்த பிடிப்புமின்றி வாழ்ந்து வருபவர்கள் சட்டைமுனிக்கு தினந்தோறும் சித்தயோகம் மற்றும் அமிர்தயோகம் நேரங்களில் அர்க்கியம் அளிப்பது நன்று.திருவாதிரை,திருவோணம்,புனர்பூசம்,புதன்கிழமை,அமாவாசை,வாஸ்துநாள் போன்ற நாட்களில் குறிப்பாக தமிழ்வருடப்பிறப்பன்று ‘ஸ்ரீசட்டை நாத சித்தமா முனி தர்ப்பயாமி’ என்று 18 முறை சொல்லி கீழ்நோக்கிய் அசின்முத்திரைவடிவில் வலதுகையை தாழ்த்திவைத்து கைகளில் நீரைவார்த்து அர்க்கியம் அளிப்பது நன்று.(இதனால் தீராத பிரச்னைகள் தீரும்)

யாக்கோபு முனி என்ற ராமதேவர் மெக்காவிலும் அழகர்மலையிலும் ஜீவசமாதியடைந்துவிட்டார்.

கோரக்கர் புதுச்சேரி மாநிலத்திலுள்ள கோர்க்காடு என்ற இடத்திலும், தமிழ்நாட்டில் பேரூரிலும் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.

மச்ச முனி திருப்பரங்குன்றத்திலும் திருவானைக்கா(திருச்சி)விலும் சித்தியடைந்திருக்கிறார்.

கருவூரார் கருவூரில் இறைவனிடம் கலந்துவிட்டார்.அங்கு இவருக்கு ஒரு தனி சன்னதி இருக்கிறது.

பிண்ணாக்கீசர் கேரளாவில் உள்ள நாங்கணாச்சேரியில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.
சிவவாக்கியர் கும்பகோணத்தில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.இங்கு இச்சமாதியில் பவுர்ணமி பூஜை நடைபெற்றுவருகிறது.

அகப்பேய் சித்தர் திருவையாறு என்ற இடத்தில் ஜீவசமாதியாகியிருக்கிறார்.

தேரையர் மலையாளநாட்டில் உள்ள தோரண மலையில் தவம் செய்து அங்கேயே ஜீவசமாதியடைந்தார்.

பாம்பாட்டி சித்தர் மருதமலை, துவாரகை,விருத்தாசலம்(பழமலை) யில் ஜீவசமாதியடைந்திருக்கிறார்.மருதமலையில் பாம்பாட்டிசித்தர் குகை,பாம்பாட்டி சுனை இருக்கிறது.

குதம்பைசித்தர் மயிலாடுதுறையில் ஜீவசமாதியடைந்தார்.

புலிப்பாணி பழனிமலையில் இருக்கிறார்.

அழுகணிசித்தரின் ஜீவசமாதி நாகப்பட்டிணத்தில் உள்ள சிவாலயத்தினுள் இருக்கிறது.

மகாபாரதமும் நிஜமே! ஆதாரங்களுடன்


மகாபாரதமும் நிஜமே! ஆதாரங்களுடன்


ராமரால் கட்டப்பட்ட சேது பாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோல மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்ந்த அரசாண்ட துவாரகாபுரியும் 5200 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது.கலியுகம் துவங்கி இப்போது 5100 ஆண்டுகளாகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த வலைப்பூவிற்கான படங்கள்
http://www.deshgujarat.com/ என்ற தளத்திலிருந்து பெறப்பட்டுள்ளன.இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.அந்தபுத்தகத்தின் பெயர் The Lost City of Dwarka.

புராண அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிப்பட்டுள்ளது.இது மகாபாரதக்கதை நிஜத்தில் நிகழ்ந்த நிகழ்வு என்பதை துவாரகை இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.
கி.மு.1500 ஆம் ஆண்டுவாக்கில் தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகில் உள்ள பெட் துவாரகை ஆகிய பகுதிகளில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.

கடற்கரையிலிருந்து சுமார் அரை மைல் தூரம் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் இருந்திருக்கிறது.ஒவ்வொன்றும் 18 மீட்டர் அகலமுள்ள இரண்டு பிரதான சாலைகள்,ஒன்றுக்கொன்ரு தொடர்புடைய ஆறு குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்டமான கட்டடத் தொகுப்புகளைக் கொண்டு துவாரகை விளங்கியிருக்கிறது.

அந்நகரின் சுவர்கல் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைவாய்ந்ததாக இருக்கின்றன.கடலில் மூழ்கிய இந்நகரம், வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது.இப்படி விரிவாக்கமான பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்படுகிறது.இந்த தீவுப்பகுதி கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா மற்றும் ஜாம்பவதிக்கான பொழுதுபோக்குதலமாகவும் அமைந்திருக்கிறது.மேலும் தென்னிந்தியாவின் ஒகமதி என்ற இடம் வரையிலும், கிழக்கு இந்தியாவில் பிந்தாரா பகுதியில் ‘பிந்த்ரா-தாரகா’என்ற இடத்தில் துர்வாசரின் குடில் இருந்ததாக மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
துவாரகையின் நிர்மாணம் பிரமிப்பூட்டக்கூடியது.மேற்குக் கடலிலிருந்து நிலம் பெறப்பட்டு நகரம் திட்டமிடுக் கட்டப்பட்டுள்ளது.

இது கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது.த்வாரமதி,குசஸ்தலை என்றும் துவாரகை அழைக்கப்படது.எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஆறு பகுதிகள்,குடியிருப்புகள்,வியாபார ஸ்தலங்கள்,அகன்ற சாலைகள்,பொது இடங்கள், ‘சுதர்மா சபா’ என்ற பொதுக்கூட்ட அரங்கம் மற்றும் அழகான துறைமுகம் ஆகியவற்றைக்கொண்டு விளங்கியது துவாரகை.

மகாபாரதயுத்தம் முடிந்து 36 ஆண்டுகள் கழித்து துவாரகையைக் கடல் கொண்டது.இதை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர், யாதவர்களை ப்ரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு(தற்போதைய சோம்நாத்) அழைத்துச் சென்று காத்தார்.

இந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பல் மூலமாக எல்லோரும் சென்று பார்ப்பதற்கு இந்திய கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.
நன்றி:ஆன்மீகப்பலன் மாத இதழ் செப்டம்பர் 2007 பக்கம் 4முதல் 7 வரை.

உங்கள் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க


உங்களது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டுமா?

கீழ்க்கண்ட கவுரி மந்திரத்தை அம்பாள் சன்னிதியில் வெள்ளிக்கிழமைதோறும் 18 முறை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதுக்கு ஜபித்துவரவும்.மிகச் சிறந்த வரன் அமையும்.

ஓம் காத்யாயனி மஹாமாயே ஸர்வயோகினி

யதீஸ்வரி நந்தகோப ஸீதம் தேவி

பதிம் மே குருதே நமஹ.

மறுபிறப்பு விஞ்ஞானபூர்வமானதுதான் என்பதை நிரூபிக்கும் புத்தகங்கள்


மறுபிறப்பு,பித்ருதர்ப்பணம் பற்றி மேல்நாட்டினர் ஆராய்ந்து அந்த ஆய்வுகுறிப்புகளை தொகுத்து அவை அனைத்தும் நிஜம்தான் என்பதை புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர்.அந்த புத்தகங்களின் பெயர்கள்:

1.The World Beyond

2.The Wonder of Transmigration of Souls.

குறிப்பு:.இதை எழுதியது யார் ? என்பது இதுவரை கிடைக்கவில்லை.அப்படி கிடைத்தால் உடனே இந்த வலைப்பூ புதுப்பிக்கப்படும்.
மற்ற மதங்களைப்பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் கூறுவது என்ன? என்ற தலைப்பில் இந்த மாத(ஜீலை 2009)த்திலேயே வலைப்பூ ஒன்று நமது ஆன்மீகக்கடலில் எழுதியுள்ளேன்.அதை மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

உங்கள் ஊரில் மழை வரவேண்டுமா?


உங்கள் ஊரில் மழை வரவேண்டுமா?

உங்கள் பகுதியில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் குறைந்தது 10 தாய்மார்கள் காலை அல்லது மாலை நேரத்தில் கீழ்க்காணும் திருப்பாவைப்பாடலை ஒரு நாளுக்கு 9 முறை அல்லது 18 முறை வாய்விட்டுப்பாடவேண்டும்.இப்படி தொடர்ந்து 48 நாட்கள் பாடினால் மழை உங்கள் ஊருக்கு வரும்.இது அனுபவ உண்மை.


(ராமனாதபுரம் மாவட்டமாக இருந்தாலும் சரி, ஆப்ரிக்காவில் உள்ள சகாரா பாலைவனமாக இருந்தாலும் சரி।மேலே கூறிய முறையை நாத்திகவாதிகளும் பின்பற்றிப் பார்க்கலாமே!

மரம்தான் வளர்ப்பதில்லை.திருச்சி காவிரி தண்ணீரை ராமேஸ்வரத்திற்குக் கொண்டுவருகிறீர்கள்.ஆனால் இது தற்காலிக ஏற்பாடு என்பதை ஏன் மறந்து விடுகிறீர்கள்.
எந்தப் பிரச்சனைக்கும் நிரந்தரத் தீர்வு காண்பது அவசியம்।அப்படி நிரந்தரத்தீர்வு காண உதவுவதே நம் முன்னோர்கள் நமக்காக உருவாக்கிச் சென்றுள்ள பாரம்பரிய சொத்துக்கள்:ஆன்மீகம்,ஜோதிடம்,மந்திரஜபம்,வேதம் ஓதுதல்,தியானம்,ஸ்தலவிருட்சம் வளர்த்தல்,பாரம்பரிய முறைகளை பராமரித்தல் மற்றும் போற்றுதல்)
மழையைக் கொண்டு வரும் திருப்பாவைப்பாடல்;

ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
பாழியந் தோளுடைப் பற்பநா பன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ வுலகினில் பெய்திடாய்,நாங்களும்
மார்கழி நீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்।
ஜோதிட சாஸ்திரத்தில் மழை எப்போது வரும் என்பதை துல்லியமாகக்கூற இயலாது।ஆனால்,மனித பக்தியானது மழையைக் கொண்டு வரும்।தண்ணீர் பஞ்சத்தைப் போக்கும்.

சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்கும் இடங்கள்-1

சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள்-1


அகத்தியர் திருவனந்தபுரத்தில்( அனந்த சயனம் ) சமாதியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.ஒரு சிலர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதியடைந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

சித்தர்களின் தலைவரான அகத்தியருக்கு கும்பமுனி என்ற பெயரும் உண்டு.எனவே இவரது ராசி கும்பராசியாக இருக்கலாம்.கும்பராசிக்காரர்களுக்கு இவரது அருளாசி வெகுவிரைவில் கிடைக்கும் எனக்கூறலாம்.கும்பலக்கினத்தில் பிறந்தவர்களுக்கும் இவரது தரிசனம் விரைவில் கிடைக்கலாம்.

இந்த வலைப்பூவில் போன வருடத்தில் சித்தர்களை நேரில் தரிசிப்பது எப்படி? என்பதை விளக்கியுள்ளோம்.அதன்படி பயிற்சி செய்பவர்கள் 45 நாளிலேயே எந்த சித்தரையும் நேரில் தரிசித்து, பேசி அவரின் நேரடி சீடராகக்கூட மாறலாம்.முயற்சி செய்யுங்கள்.நிம்மதியாக வாழ்க வளமுடன்!!!

போகர் பழனி மலைமீது வாழ்ந்துவருகிறார்.பழனி மலைமீது இவரது ஜீவ சமாதி இருக்கிறது.இங்கு தினமும் (பழனிக்காரர்கள்) சில நிமிடங்கள் இவரை நினைத்து நம் கஷ்டங்களை மனதால் கூறினாலே நம் வாழ்க்கை சுபிட்சமாகும்.ஸ்ரீவல்லபசித்தர் என்ற சுந்தரானந்தர் சித்தரின் ஜீவ சமாதி ,மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் சித்தர் சன்னதி என்று பிரசித்திபெற்ற சக்திவாய்ந்த திருச்சன்னதியில் இருக்கிறது.
ஒவ்வொரு திங்கட்கிழமையும்,திருவாதிரை,உத்திரம்,சதயம் நட்சத்திர நாட்களில்(உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகி எந்த நாள் எனக்கேட்கவும்)இச்சித்தர் பெருமான் சன்னதியில் குங்குமப்பூ,முந்திரி,பாதாம்கலந்த பாலால் அபிஷேகம் செய்து இம்மூலிகைக்கலவை நிறைந்த பாலை ஏழைக்குழந்தைகளுக்கு தானமாக அளித்து வந்தால் யோகாசனம்,ஜோதிடம் முதலான நுண்கலைகள் கைகூடும்.அந்தத்துறைகளில் வளரலாம்.
தவிர விபத்து,நீரில் மூழ்குதல்,போர்,வெள்ளம்,துர்மரணமடைந்து உரிய உடல் கிடைக்காமை போன்றவைகளால் ஏற்படும் வேதனை தீர இச்சித்தரை வழிபட்டுவர பெரும் நன்மை உண்டாகும்.

சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருக்கும் இடங்கள்

சித்தர்களின் ஜீவ சமாதி இருக்கும் இடங்கள்

உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.சித்தர்களுக்கு ஒருபோதும் மரணம் கிடையாது.ஆனாலும் கலியுகத்தில் அவர்கள் சூட்சுமமாக வந்து நம்மைக்காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.யார் தொடர்ந்து அதாவது தினமும் சித்தர்களில் எவரையாவது ஒருத்தரை வழிபட்டுக்கொண்டு வருகிறாரோ அவரை ஆபத்துக்காலத்தில் அந்த சித்தர் காப்பாற்றிவருவது அனுபவ உண்மை.

எவருக்கு ஜன்மச்சனி, அஷ்டமச்சனி, ஜன்ம ராகு அல்லது ஜன்ம கேது நடக்கிறதோ அவரே வாழ்க்கையில் மிகப்பெரும் அவமானம் அல்லது ஏமாற்றத்தை சந்திக்கிறார்.அவரைத்தவிர மற்ற அனைவருமே ஆன்மீகம்,ஜோதிடம்,பரிகாரம் பற்றி இழிவாகவே நினைக்கிறார்கள்.

உதாரணமாக செப்டம்பர் 2009 முதல் 30 மாதங்கள்(இரண்டரை வருடங்களுக்கு)சனிபகவான் கன்னி ராசியில் இருக்கப்போகிறார்.இதனால்,கன்னி ராசிக்கு ஜன்மச்சனியும், கும்பராசிக்கு அஷ்டமச்சனியும் ஏற்படுகிறது.இந்த ராசியினருக்கு ஒரு நாள் என்பது ஒரு வருடமாக நீளும்.நாம் எல்லாம் ஏன் உயிர்வாழ வேண்டும் என்ற அளவுக்கு மனவுறுதி குலையும்.
அதே சமயம் விருச்சிகம்,மேஷம்,மகரம்,கடகம் ராசியினருக்கு அசுர வளர்ச்சி உண்டாகும்.
கஷ்டப்படுபவர்கள் சித்தரை வழிபட்டால் பெரும் துன்பத்திலிருந்து தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

நல்ல நிலையிலிருப்பவர்கள் சித்தரை வழிபட்டால் அவர்களின் வளர்ச்சி வேகம் இருமடங்காகும்.
என்னைப் பொருத்தவரையில் கடன்,நோய்,எதிரி,முன்வினை இல்லாமல் ஒருவன் அல்லது ஒருத்தி வாழ்ந்தாலே அவரே கோடீஸ்வரர்.அப்படி வாழ்வதை அவரவர் பிறந்த ஜாதகம் மூலமாக வே உறுதி செய்ய முடியும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சித்தர்களின் ஜீவ சமாதிகள் தமிழ்நாடு முழுக்க உள்ளன.உங்களது ஊருக்கு அருகில் அல்லது ஊரில் உள்ள சித்தரை வழிபடுங்கள்.சந்தோஷமாக வாழுங்கள்.

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

மேஷம் மற்றும் விருச்சிக ராசியில்பிறந்தவர்கள் ஆழ்ந்த பாசத்துடன் இருப்பார்கள்.அதே சமயம் கடும் கோபத்துடன் இருப்பார்கள்.இவர்கள் யாரை நேசிக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே கோபத்தைக்காட்டுவார்கள்.இவர்கள் நிறைய ஜோக் அடிப்பார்கள்.பேச்சில் இவர்களிடம் தோற்றுத்தான் போகவேண்டும்.இவர்களிடம் ரகசியம் சிறிதும் தங்காது.

ரிஷபம் மற்றும் துலாம் ராசியில்பிறந்தவர்கள் தன்னை அழகுபடுத்திக்கொள்வதிலும் தன்னலத்திலும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.எப்போதும் ஜாலியாக இருப்பதை இவர்கள் விரும்புவார்கள்.

மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் பிடிவாதகுணத்துடன் இருப்பார்கள்.இதில் புனர்பூசத்தில் பிறந்தவர்களுக்கு ஓரளவு நற்குணங்கள் இருக்கும்.

கடக ராசியில் பிறந்தவர்கள் இந்த உலகை ஆளப்பிறந்தவர்கள்.இதில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் நாம் ஒவ்வொருவரும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.இவர்களுக்கு ரிஷபராசியின் குணங்கள் நிறைய இருக்கும்.

சிம்மராசியினர் அதிகாரம் செய்வதிலும்,சிறந்த நிர்வாகத்திறமையும் கொண்டவர்கள்.இவர்களுக்கு எப்போதும் மேஷ விருச்சிக கும்ப ராசியினர் பக்க பலமாக இருப்பார்கள்.

கன்னிராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் போல சுயநல சொரூபிகள் இந்த உலகத்திலேயே கிடையாது.மற்ற நட்சத்திரங்களான உத்திரம், சித்திரையில் பிறந்தவர்கள் ஆணெனில் பெண்ணாலும் பெணெனில் ஆணாலும் எப்போதும் நன்மை உண்டு.

தனுசு ராசியில் பிறந்தவர்கள் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கப்பிறந்தவர்கள்.மாநிறமாகவும் ஓரளவு குண்டாகவும் இருப்பார்கள்.சாமர்த்தியமாக பேசுவதில் திறமைசாலிகள்.

மகரம்,கும்பம் ராசியில் பிறந்தவர்கள் தர்மம் நீதி நியாயம் இவற்றிற்காக தன் குடும்பம் , வேலை, தொழில் என அனைத்தையும் இழக்கத்தயாராக இருப்பார்கள்.இவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தை அனுபவிக்கப்பிறந்துள்ளனர்.
உலகின் 100 கோடீஸ்வரர்களில் 80 பேர் மகரராசியில் பிறந்திருப்பர்.
கும்பராசி அகத்தியமகரிஷி பிறந்த ராசியாகும்.கோபுரகலசத்திற்குள் என்ன இருக்கும்? யாருக்கும் தெரியாது.அதுபோல இந்த ராசியினர் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.இவர்கள் மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.இவர்களுக்கு எங்கும் எப்போதும் புகழ் உண்டு.

மீனராசியில் பிறந்தவர்களும் புண்ணியாத்மாக்களே! இவர்களிடம் சிக்கனத்தை எதிர்பார்க்கக்கூடாது.


மேஷத்திற்கும் கன்னிக்கும் ஆகாது.விருச்சிகத்துக்கும் கடகத்துக்கும் ஆகாது.
ரிஷபத்துக்கும் மேஷத்துக்கும் ஒரளவே சரிப்படும்.

கடகத்துக்கும் கன்னிக்கும் சூப்பராக ஒத்துப்போகும்.
இவையெல்லாம் பொதுப்பலன்களே!

பிறந்த ஜாதகம் தான் ஒருவரின் அத்தனை சுபாவத்தையும் விளக்கும்.
ஒரு ஜாதகம் பற்றிய முழுவிபரங்களை திறமையான ஜோதிடரால் கூற 2 மணிநேரம் ஆகும்.நான் எப்போதும் ஒரு ஜாதகத்தின் முழுப்பலனைக்கூற குறைந்தது 2 மணிநேரம் எடுத்துக்கொள்கிறேன்.
சாஸ்திரத்தை வாழ்நாளின் கடைசிவிநாடி வரை அட்சரம் பிசகாமல் பின்பற்றுபவர்கள் நிறைய சாதிக்கிறார்கள்।உதாரணமாக நாயக்கர்கள், பிராம்மணர்கள்,கேரளாவில் நம்பூதிரிகள்,ஈழவா; கர்நாடகத்தில் ஒக்கலிகர்கள்;ராஜஸ்தானில் ஜாட்டுகள்,ராஜபுத்திரர்கள்,ஆந்திராவில் க்ஷ்த்திரியகுல ராஜீக்கள் என சொல்லலாம்.
மற்ற ஜாதிமக்களிடமும் இதுபற்றி தற்காலத்தில் நிறைய விழிப்புணர்ச்சி வந்திருக்கிறது.
ஆனால், ஒரு ஜோதிட யோசனையை கடைசிவரைப் பின்பற்றாமலிருந்து ஜோதிடம் பொய் எனக்கூறும்போது மனசு வலிக்கிறது।

ஒரு திறமையான ஜோதிடர் ஒரு மனிதனுக்கு மந்திரிக்குச் சமம்।
உங்கள் ஆழ்மனச்க்தியைப்பயன்படுத்துங்கள்.நீங்களும் சாதனையாளர் ஆகுங்கள்


உங்கள் ஆழ்மனத்தின் சக்தியை அறிந்துகொள்ளுங்கள்:
அதைப் பயன் படுத்தி உங்களை ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்

அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்பது சித்தர் பாடிய பாடல் வரி.அண்டம் என்பது பிரபஞ்சம்! பிண்டம் என்பது நம் ஒவ்வொருவரின் மனித உடல்!!!

இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள் உள்ளன.அவற்றில், ஒன்று காஸ்மிக் சக்தி.இதைப் பயன்படுத்தி நமது நியாயமான ஆசைகளை நம் ஒவ்வொருவராலும் நிறைவேற்றிக்கொள்ளமுடியும்.இந்த காஸ்மிக் சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.
ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் இருமுறை செய்துவர வேண்டும்.காலையில் எழுந்து குளித்துத் தயாரானதும்,இரவில் தூங்கும் முன்பாகவும் 15 நிமிடம்வரை நாம் தியானம் செய்துவரவேண்டும்.

ஆழ்மனத்தைப்பயன்படுத்தும் தியானத்தை தமிழ்நாட்டில் பலர் கற்றுத்தருகிறார்கள்.அதில் ஒருவர் தான் டாக்டர் விஜயலஷ்மி பந்தையன் அவர்கள்.இந்த டாக்டர் ஆல்பா மைண்டு பவர் என்ற பெயரில் தியானப்பயிற்சிகளை தமிழ்நாடு உள்பட பாரததேசமெங்கும் நடத்திவருகிறார்.இந்த தியானப்பயிற்சியில் நமது ஆழ்மனதின் சக்திகளைப்பற்றி விளக்குகிறார்.அதன்பிறகு அந்த ஆழ்மனதின் சக்தியை எப்படி பயன்படுத்துவது? என்பதைப்பற்றி விளக்குகிறார்.www.alphamindpower.net என்பது இவரது தமிழ் இணையதளமாகும்.

மனக்காட்சியின் மூலம் விரும்புவதை அடைவதுஎப்படி? இதுதான் ஆழ்மனத்தைப்பயன்படுத்தும் சுலப வழிமுறை.இதற்கு ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் விசுவலிசேசன் என்று பெயர்.இதை தமிழில் படக்காட்சியாகக் கற்பனை செய்துபார்த்தல் எனக்கூறலாம்.இதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து நெறிப்படுத்தியவர் ஜோஸ் சில்வா என்ற ஆங்கிலேயர் ஆவார்.
இன்று இதை ஐரோப்பா.அமெரிக்கா கண்டங்களில் எப்படி கற்பனை செய்து பார்ப்பது? என்பதற்கு தனிப்பயிற்சி வகுப்புகள்(workshops)நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.இதனால்தான் மேலை நாட்டினர் பலகோடிரூபாய்கள் சம்பாதித்துக்கொண்டே இருக்கின்றனர்.(நேர்மையான வழிமுறையில்)

இதுபற்றி சில முக்கிய ஆங்கிலபுத்தகங்களை இங்கு பரிந்துரைக்கிறேன்.
1.Mind Power
2.Creative Visuvalization
3.Power of Your Sub conscious Mind
4.Silva Mindpower-written by jose silva
தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது
ஆழ்மனதின் சக்திகள்.
இதுதவிர, அதே கண்ணதாசன் பதிப்பகம் மனம் தரும் பணம் என்ற புத்தகமும் வெளியிட்டுள்ளது.இதில் ஆழ்மனதின் சக்திகள் என்ற பெயரில் ஒரு தனி தலைப்பில் விளக்கம் கொடுத்துள்ளது.இவற்றைப் படித்தாலே, ஆழ்மனதின் சக்தியை ஓரளவு புரிந்துகொள்ளலாம்.

இந்த க்ரியேட்டிவ் விசுவலிசேசனை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு ஒரு பயிற்சி வகுப்பு 16.8.2009 ஞாயிற்றுக்கிழமையன்று ஈரோட்டில் பஸ்நிலையம் எதிர்புறம் உள்ள ஆஸ்கார் ஹோட்டலில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை காட்சிப்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.

ஓம் மந்திரத்தின் விஞ்ஞான விளக்கம்


ஓம்- ஒரு அறிவியல் பூர்வமான நிரூபணம்

அடிப்படைக் குரல் ஒலிகள் மண்ணிலோ ஏதாவது ஒரு திரவத்திலோ அதிர்வடையச்செய்யும்போது, அவை சில அமைப்புக்களை உண்டாக்கும்.இந்த அமைப்பு இயல் அலையியல் (Cymatics) எனப்படும்.

இதனைக் கண்டறிந்து உலகிற்கு உணர்த்தியவர் சுவிஸ்நாட்டின் அறிஞர் டாக்டர் ஹான்ஸ்ஜென்னி(1904 முதல் 1972 வரை).ஒலியின் ஒவ்வொரு அதிர்வும் ஒரு தனித்த அமைப்புடையது.இயற்கை மூலம் இவை திரும்பத் திரும்ப நிகழ்கின்றன.

படைப்பின் அடிப்படை ஒலி ஓம் ஆகும்.

இப்பிரபஞ்சத்தில் எல்லாப் பொருளும் சக்தி அதிர்வால் ஆனவை.ஒவ்வொரு பொருளும் தனக்கென்று தனித்த அதிர்வெண்ணில் அதிர்கிறது.அதிரும் சக்தியை ஒளியாகக் காணலாம்.

இது மனிதர்களையும் உள்ளடக்கியது.நாம் எல்லோரும் அதிரும் ஒளி சக்தியே!!!

பிரபஞ்சத்திலும் பூமியிலும் சில புள்ளிகளில் குவிகிறது.இப்புள்ளிகளை அதிர்புள்ளிகள்(Vortex)என்பர்.

ஹான்ஸ்ஜென்னி ஓம்கார ஒலியை மணலில் அதிரச்செய்தார்.அவ்வாறு செய்த போது ஸ்ரீசக்கரவடிவத்தில் படல் கிடைத்தது.எனவே,ஓம் என்ற பிரணவ ஒலியின் வரிவடிவம்(ஸ்தூல வடிவம்)ஸ்ரீசக்கரம்.

ஆச்சரியமாக இருக்கிறதா?நமது ஆன்மீகம் எவ்வளவு அறிவியல் தன்மைகொண்டது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்।

நன்றி:ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்,பக்கம் १३, பிப்ரவரி 2008

காதல் ஒரு வேதியியல்


கன்னிப்பெண்ணுக்குக் காதல் உருவாகுவது எதனால்?

ஒரு கன்னிப்பெண் யாரைப்பார்த்து காதல் வயப்படுகிறாள்? என்பதை மேல்நாட்டில் ஆராய்ந்தனர்.அவளது அப்பாவின் வியர்வை வாசனை ,எந்த இளைஞனுக்கு வருகிறதோ அவனைப்பார்த்தே காதல் வயப்படுகிறாளாம்.கி.பி.1960 களிலேயே இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துவிட்டன.

காதல் ஒரு வேதியியல்தான்!!!

அமெரிக்காவில் 20,000 கன்னிப்பெண்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்ததில் எந்தப்பெண்ணின் உடலில் சராசரியை விட ஆக்ஸிடோன் என்ற வேதிப்பொருள் சுரக்கிறதோ அவளுக்கு காதல் உணர்வு உருவாகிறது.12 வயது முதல் 45 வயது வரை எல்லாத் தரப்பு பெண்களிடமும் இந்த வேதி சுரக்கிறது.
இன்று நாம் சாப்பிடும் அனைத்து சாக்லெட்களிலும் ஆக்ஸிடோன் கலந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இந்து அதிசயங்கள்

தமிழ்நாட்டில் உள்ள இந்து அதிசயங்கள்

ஆவுடையார்கோவிலில் கொடுங்கையில் பாறாங்கல்லை ஒரு காகிதம் அளவிற்கு செதுக்கியுள்ளனர்.

திருச்சியில் உள்ள கல்லணையை எந்த தொழில்நுட்பத்தின்படி கட்டினார்கள் என்பது நமக்கே இன்னும் தெரியவில்லை?!!!(நீங்கள் கல்லணைக்குப் போயிருக்கிறீர்களா?ஒரு கரையிலிருந்து பார்த்தால் இன்னொரு கரை மிகச்சிறியதாகத் தெரியும்.)
தண்ணீர் பஞ்சம் உள்ள இந்தக் காலத்திலேயே இவ்வளவு வெள்ளம் காவிரியில் வருகிறதே!!! சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு தண்ணீர் வந்திருக்கும்.அப்போது எப்படி இந்த அணையைக் கட்ட முடிந்தது?

போஜராஜமகாராஜா சமராங்கண சூத்திரத்தில் விமானம் கட்டும் கலையை பாடல்களாக எழுதியுள்ளார்.

மனு சாஸ்திரம் எழுதிய மனு பிறந்தது வாழ்ந்தது எல்லாமே நமது தமிழ்நாட்டில் தான்.ஜாதிகள் செய்யும் தொழிலின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டன. பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை.
கலியுகம் முடியும்போது தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் தான் கல்கி அவதாரம் எடுக்கப்போகிறார்।(இலங்கையில் ஒரு திருநெல்வேலி & நாகர்கோவில் உள்ளது)।ஆக, சாஸ்திரங்களை கலிகாலம் முடியும் வரை அச்சுப்பிசகாமல் பின்பற்றி வருவது தமிழ்மக்கள் மட்டுமே!!!

டெல்லி இரும்புத்தூணின் துருப்பிடிக்காததன் ரகசியம் என்ன?டெல்லி குதுப்மினார் அருகில் உள்ள இரும்புத்தூண் பல நூற்றாண்டுகளாக துருப்பிடிக்காமல் இருக்கிறது.அது ஏன் அப்படி என்பதை கி.பி.2001 ஆம் ஆண்டில் ஒரு வார்ப்பட நிபுணர் குழு ஆராய்ந்ததில் ஒரு ரகசியம் வெளிப்பட்டது.
ஆயுர்வேதம் மற்றும் இயந்திரவியல் கலந்து உருவாக்கப்பட்ட அந்த அதிசயம் உலக வரலாற்றின் போக்கையை திருப்பிப்போடப்போகிறது.அது என்னவென்றால்,டெல்லி இரும்புத்தூணினை வார்க்கும்போது அத்துடன் சில மூலிகைக்கலவையையும் அந்த இரும்புத்தூணுடன் கலந்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் ஆராய்ச்சி தொடர்கிறது.விரைவில் துருப்பிடிக்காத குடைகள்,வாளிகள் புழக்கத்துக்கு வரலாம்.
சரி: இவ்வளவு இருந்தும் ஏன் இந்த இரும்புத்தூணை உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை!!!

மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிசங்கராச்சாரியர் கூறுவது என்ன?


மற்ற மதங்களைப்பற்றி காஞ்சிப்பெரியவர் கூறுவது என்ன?

அரூபமான ஒரே பரமாத்மா பல ரூபங்களில் பல தேவதைகளாக வருகிறதென்று சொல்லி, அவற்றுக்காக விக்கிரக ஆராதனையை ஏற்படுத்தியிருப்பது நம் மதத்தின் இன்னொரு பிரத்யேக(ஸ்பெஷல்)அம்சம்.இதனால் அந்நியர்கள் நம்மை பல தெய்வ வழிபாட்டிக்கொள்கையினர்(Poly thesis) என்கிறார்கள்.இப்படிச் சொல்வது சுத்தத்தப்பு. ஒரே தெய்வத்தைப் பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள் இருப்பதாக எண்ணுவதாகாது.அவ்வாறே ‘ஹிந்துக்கள் விக்ரகம்தான் ஸ்வாமி என்று நினைத்து,விக்ரக ஆராதனை(Idolatry)செய்கிறார்கள் என்பதும் முழுப்பிசகு.விக்ரஹம் மட்டும் தான் ஸ்வாமி என்று விஷயமறிந்த ஹிந்து எவனும் நினைக்கமாட்டான்.எங்குமுள்ள ஸ்வாமி இவன் மனசை ஒருமுகப்படுத்தி ஆராதிக்க வசதியாக இந்த விக்ரகத்தில் இருப்பதாகத் தான் நினைத்து ஆராதிக்கிறான்.எந்த மதமானாலும் சின்னங்கள் வைத்துப் பூஜிப்பதையோ,தியானிப்பதையே பார்க்கிறோம்.அப்படி இருக்க, ஹிந்துக்களின் மூர்த்தி பூஜையை மட்டும் உருவவழிபாடு என்பதோ, அதற்காகப் பரிகசிப்பதோ துளிகூட நியாயமற்றதாகும்.

ஹிந்துமதத்தினர்கள் ரொம்பவும் பெருமைப்பட வேண்டிய அம்சம், இந்த மதம் ஒன்றுதான் தன்னை அனுசரிப்பதன்மூலமே ஒரு ஜீவன் உய்வு பெற முடியும் என்று ஒரு தனி உரிமை(exclusive right) கொண்டாடிக் கொள்ளாமலிருப்பதேயாகும்.யார் யார் எந்தெந்த சமய மார்க்கத்தில் போனாலும் கடைசியில் ஒரே பரமாத்மாவிடம் வந்து சேர்வார்கள் என்பதை ஒப்புக்கொள்ளுகிற விசால மனப்பான்மை(catholic outlook) நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது.இதனால் பிறரை ஹிந்துவாக மதமாற்றம் செய்ய நம் சாஸ்திரங்களில் இடம் கொடுக்கவில்லை.

இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களைப் பின்பற்றாதவர்களெல்லாம் நரகத்துக்குத்தான் போவார்கள்;முகமது நபியின் உபதேசத்தை அனுசரிக்காதவர்களுக்கு கதி மோட்சம் கிடையாது என்றெல்லாம்தான் அந்தந்த மதத்தினர்சொல்லுகிறார்கள்.அவர்களிடம் நாம் கோபப்படக்கூடாது. அந்தந்த மதத்தில் இருப்பதால் தங்களுக்குக் கிடைத்திருக்கிற நிறைவைப் பார்த்து(உணர்ந்து), மற்றவர்களுக்கு இத்தனை நிறைவு இருக்கமுடியாது என்று நினைத்து, நல்லெண்ணத்தின் பேரிலேயே மற்றவர்களையும் தங்கள் வழிக்கு மாற்ற ஆசைப்படுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.வெளிப்பார்வைக்கு கெடுதலாகத் தோன்றுகிற வழிகளைக் கடைபிடித்தாவது ஒரு நல்ல லட்சியத்தை சாதிக்கலாம் என்று நினைத்தே அவர்கள் பலவிதமான முறைகளைக் கையாண்டு மற்றவர்களைத் தங்கள் மதத்துக்கு இழுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.அவர்கள் படை எடுத்து, சண்டை போட்டு, வாள் மூலம்கூட மதமாற்றத்தைச் செய்தது இப்படித்தான் என்று வைத்துக்கொள்ளலாம்.இஸ்லாம் பெரும்பாலும் ஆயுதபலத்தாலேயே விஸ்தரிக்கப்பட்டது.கிறிஸ்துவ மதம் பணபலத்தால் விஸ்தரிக்கப்பட்டது என்று சொல்லுவதுமுண்டு.கிறிஸ்துவர்களும் படை எடுப்புகள் செய்தார்கள்.ஆனால் மிஷனரிகள் பரோபகாரப்பணியும் சேர்ந்து கொண்டது. பாலைவனமான அரேபிய தேசத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு இல்லாத பணவசதி வெள்ளைக்காரர்களுக்கு இருந்தது.மிஷனரிகள் பள்ளிக்கூடம்,ஆஸ்பத்திரி என்றெல்லாம் வைத்து,ஏழை எளியவர்களை அழைத்து அப்படியே அவர்களை தங்கள் மதத்தில் தள்ளிக் கொண்டார்கள்.

பலவந்தத்தையோ அல்லது உதவியைக் காட்டி வசியப்படுத்துவதையோ நாம் ஏற்காமலிருக்கலாம்.ஆனால் தங்கள் மதத்தைப்பரப்பினால் எல்லோருக்கும் நன்மை உண்டாகும் என்று அவர்கள் நிஜமாகவே நம்பியிருப்பார்கள் என்பதை நாம் சந்தேகப்படவேண்டாம்.

ஆனால், அவர்கள் நம்பிக்கை சரிதானா?கிறிஸ்துவை,நபியைப் பின்பற்றாவிட்டால் நரகந்தானா? பார்த்தால் இந்த தனியுரிமை செல்லுபடியாகாது என்று தெரிகிறது.ஏனென்றால், கிறிஸ்து வந்து 2000 ஆண்டுகளும்,நபி வந்து 1400 ஆண்டுகளும் தான் ஆகிறது.அதற்கு முன் ஆயிரம், பதினாயிரம்,லட்சம் வருடங்களாகப் பிறந்து செத்துப் போனவர்கள் எல்லோரும் என்ன ஆனார்கள்? இவர்களுடைய சித்தாந்தப்படி அவர்கள் கிறிஸ்து அல்லது நபியைத் தங்கள் ரட்சகராக கொள்ளாததால், சிருஷ்டி தோன்றிய நாளிலிருந்து அன்றுவரை வந்தவர்களெல்லாம் நரகத்துக்குப் போயிருக்கவேண்டும்.இப்போது இந்த மதங்களில் இருக்கிறவர்களின் முன்னோர்கள் இந்த மத ஸ்தாபகர்களின் முன்னோர்கூடத்தான் ஸ்வர்க்கம் போயிருக்க முடியாது.
இவர்கள் ஹிந்துக்களைப்போல பல ஜன்மங்கள் உண்டு என்பதையும் ஒப்புக்கொள்ளவில்லை.அப்படி ஓப்புக்கொண்டாலாவது கிறிஸ்துவுக்கும் நபிக்கும் முற்பட்டவர்கள் மறுபடி மறுபடி இந்த இரண்டு பேருக்கும் பிற்பாடும் ஜன்மா எடுத்து,இவர்களை அனுசரிக்கிற வாய்ப்பு பெற்று கதிமோட்சம் அடடய வழி இருக்கிறது என்று சமாதானம் சொல்லலாம். ஆனால் இந்த மதங்களிலோ ஜீவனுக்கு ஒரே ஆன்மாதான் என்று சொல்லியிருக்கிறது.ஆதலினால், எத்தனையோ ஆயிரம் பல்லாயிரம் தலைமுறைகளாகத் தோன்றிய இத்தனை ஜன்மங்களும் கூண்டோடு நரகத்துக்குத்தான் போயிருக்கவேண்டும் என்றாகிறது.தான் உருவாக்கிய ஜனங்களுக்கு லட்சோப லட்சம் வருடங்களாக வழிகாட்டுகிற ஆச்சாரியார்களையே அனுப்பி வைக்காமல், அவர்களை மீளாத நரகத்தில் போடுபவனாக ஒரு கடவுள் இருக்கிறான் என்றால், அப்படிப்பட்ட இரக்கமே இல்லாத கடவுளை எதற்காக ஆராதிக்கவேண்டும்? எதற்காக அவனை அடைய வேண்டும்? அதாவது கடவுளை அடைவதற்காக ஏற்பட்ட மதமே வேண்டாம் என்று சொல்லிவிடலாம்.
ஆதாரம்:தெய்வத்தின் குரல்,பாகம்-1 ,பக்கம் 185-187

உங்கள் குழந்தையை(எதிர்காலத் தலைமுறையை)முறையாக உருவாக்குவது எப்படி?


நமது குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்?
நன்றி:உளவியலாளர்,டாக்டர் பெர்வீன் தாதாசஞ்சி

உங்கள் குழந்தையை உள்ளபடி ஏற்றுக்கொள்ளுங்கள்.எதையும் திணிக்க வேண்டாம்.

குழந்தையை அணுகும்விதத்தில் ஒரே மாதிரியாக நடந்துகொள்ளுங்கள்.

குழந்தையின் செயலை விமரிசியுங்கள்.
குழந்தையை விமர்சிக்க வேண்டாம்.

ஒரு குடும்பமாக செயல்படுங்கள்.

குழந்தையை ஒப்பிட்டுப் பேசாமல் அவர்களிடையே இணக்கத்தை உருவாக்குங்கள்.

குழந்தையை மிரட்டினால் தொடர்ந்து கவனியுங்கள்.

நீங்கள் குழந்தையுடன் இருப்பதைவிட பெரியபரிசு எதுவும் கிடையாது.

நீங்கள் குழந்தையை அடிப்பது அது மற்றவர்களை அடிக்கத் தூண்டும்.

ஒரு முன்மாதிரியாக இருந்து குழந்தைகளிடம் நல்ல மதிப்பீடுகளை விதையுங்கள்.
ஒரு வேளையாவது குழந்தையோடு சேர்ந்து சாப்பிடுவது பந்தம் உருவாக உதவும்.

குழந்தை பொறுப்புள்ளவனா/ளாக மாறியதும் அவன/ளது சுதந்திரத்தை அதிகப்படுத்துங்கள்.

குழந்தையிடம் நிபந்தனையில்லாத பரிபூரண அன்பு செலுத்துங்கள்.

குழந்தையை விமரிசிப்பதைவிட புகழ்ந்து ஊக்கப்படுத்துங்கள்.

குழ்ந்தையுடன் பேரம் பேசுவது ஒன்றும் உங்கள் பலவீனம் அல்ல.


சில யோசனைகளைச் சொல்லுங்கள்.ஆனால் குழந்தை முடிவு செய்யட்டும்.

குழந்தை முக்கியமாக நினைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கெடுங்கள்.

குறும்புப்பையன், கவனமில்லாதபெண் என்ற வார்த்தைகளை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள்.

வீடியோ, டி.வி.,கணினி விளையாட்டுக்களைக் குறைத்துவிடுங்கள்.
வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் குழந்தையுடன் அதிக நேரம் செலவழியுங்கள்.

வசதிகளால் பின்விளைவுகள் ஏற்படும் என்பதை குழந்தையிடம் சொல்லுங்கள்.

படுக்கையில் இருக்கும்போது பகலில் என்ன நடந்தது என்பதைப் பேசுங்கள்.

குழந்தை வளர்ந்ததும் இருக்கவேண்டிய பண்புகளை நினைத்துப் பாருங்கள்.

முறையான பழக்கவழக்கத்தை ஏற்படுத்தி அதனைக் கண்காணியுங்கள்.

புத்தகங்கள் கொடுத்து அவற்றின்மீதான ஆர்வத்தை வளர்த்தெடுங்கள்.

குழந்தை பாதுகாப்பாக உணர்வதற்கு வரம்புகளை விதியுங்கள்.

குழந்தையின் குறைகளை கேலி செய்வது அதன் சுயமதிப்பை குறையச் செய்யும்.
இந்தக்கருத்துக்கள் உங்கள் குடும்பத்தில் மிகச்சிறந்த அடுத்த தலைமுறையை நிச்சயம் உருவாக்கும்.

உங்கள் பிறந்த தேதி் எட்டு தானா?


8 ஆம் எண்காரர்கள்;
உங்கள் பிறந்த தேதி 8 அல்லது 17 அல்லது 26 ஆக இருக்கிறதா?ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள்.

இங்கு ஆங்கில பிறந்த தேதியைத்தான் கூறுகிறோம்.என்னதான் இந்துதர்மம் என நாம் நம்மைப் புகழ்ந்தாலும் பல விஷயங்களில் ஆங்கில முறையைப் பின்பற்றத்துவங்கி 200 ஆண்டுகளாகிவிட்டன.எனவேதான் ஆங்கில எண்கணித முறை அவசியமாகிறது.

8,17=1+7=8,26=2+6=8 = இம்மூன்றும் சனியின் ஆதிக்கம் நிறைந்த எண்கள்.சனிபகவான் இந்த எண்ணில் பிறந்த மனிதர்களின் நடத்தை மூலமாக இந்த பூமியை ஆட்சி செய்கிறார்.
இந்த எண்ணில் பிறந்தவர்களின் மனதில் எப்போதும் ஒரு தனிமையுணர்ச்சி இருக்கும்.அதாவது தனக்கு என்று யாருமே இல்லை என்ற எண்ணம் தலைதூக்கும்.தற்பெருமையை விரும்புவார்.இவரது ஏதாவது ஒரே ஒரு சுபாவம் அல்லது ஸ்டைலை இவரைச்சுற்றியிருப்பவர்கள் பின்பற்ற ஆரம்பித்து அவர்கள் மளமளவென முன்னேறுவார்கள்.இவர்கள் முன்னேறாமல் இருப்பர்.
தன்னைச் சுற்றியிருப்பவர்களின் விதியையே மாற்றப்பிறந்தவர்கள்.எப்போதும் ஏதாவது ஒரு சோகம் இவர்களை 8 ஆம் எண்ணில் பிறந்தவர்களை சூழ்ந்திருக்கும்.அதே சமயம் கடும் உழைப்பாளிகள்.தன்னை நம்பிவந்தவர்களுக்கு தன் உயிரைக்கூடத் தரத்தயங்காதவர்கள்.
இவர்கள் ஆன்மீகவிஷயங்களில் இறங்கினால் மிகப்பெரும் எதிர்ப்பை சம்பாதிப்பார்கள்.அந்த எதிர்ப்பினாலேயே உலகளவில் பிரபலமடைவார்கள்.இவர்கள் உருவாக்கும் சீர்திருத்தம் குறைந்த பட்சம் 8 தலைமுறையை (சுமார் 240ஆண்டுகள்)நீடிக்கும்.

இந்த எண்ணில் அல்லது தேதியில் பிறந்து உலகின் தலையெழுத்தை மாற்றியவர்கள்,மாற்றிக்கொண்டிருப்பவர்கள்;
கடவுள் இல்லை எனப்பிரச்சாரம் செய்த ஈ.வே.ராமசாமி பிறந்தது 17 ஆம் தேதியில்!!!

சத்துணவுதிட்டத்தை பரவலாக்கிய(அறிமுகப்படுத்தியவர் காமராஜர் அவர்கள்) எம்.ஜி.ராமச்சந்திரன் அட நம்ம வாத்தியார் எம்.ஜி.ஆர். பிறந்தது ஜனவரி 17 ஆம் தேதியில்!!!

உலகத்தமிழர்களின் துருவநட்சத்திரம் பிரபாகரன் அவர்கள் பிறந்தது நவம்பர் 26 ஆம் தேதியில்!!!
இவரது பிறந்த தேதி உலக வரலாற்றில் தனிப்பெரும் முத்திரை பதித்துவிட்டது.

நம்ம பிரம்மாண்டம் இயக்குநர் ஷங்கரின் பிறந்த தேதியும் 26 தான்!!!

நடிகை ரோஜா பிறந்தது நவம்பர் 17 ஆம் தேதியில்!!!

கேரளாவில் பிறந்து ஆலிவுட்டில் நடிக்கத்துடிக்கும் நடிகை அசினின் பிறந்த தேதியும் 8 தான்!!!

இந்த வலைப்பூவை நடத்துபவரின் பிறந்த தேதி மார்ச் 17 தான்!!!

அமெரிக்காவைக் காப்பாற்றும் நமது இந்தியா

உங்களால் நம்ப முடியுமா?

இந்தியர்கள் உலகளவிலான வேலைவாய்ப்பை தட்டிப்பறிக்கிறார்கள் என ஒபாமாவின் அமெரிக்க அரசாங்கம் கூப்பாடு போட்டுவருகிறது.ஆனால் அது வடிகட்டின பொய்!!!

கி।பி.2004 முதல் கி.பி.2007 க்குள் 3,00,000 அமெரிக்கர்களுக்கு இந்திய மென்பொருள்நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கிறது என இந்திய பாராளுமன்றத்தில் ஆனந்தக்குமார் மந்திரி தெரிவித்துள்ளார்.இதன் மூலம் சில லட்சம் டாலர்கள் அமெரிக்கப்பொருளாதரத்திற்குக் கிடைத்துள்ளது.


உலகின் மூத்த இனம் தமிழ் இனம்;மூத்த விஞ்ஞானமொழி தமிழ் மொழி
உலகின் மூத்த இனம் தமிழ் இனம்;மூத்த மொழி தமிழ்மொழி

கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி என்பது வெறும் பழமொழி!

ஆதிகாலத்தில் அதாவது மனித இனம் உருவாகி 5 கோடி ஆண்டுகளாகின்றன.
குரங்கிலிருந்து மனிதனாக நாகரிகத்துடன் பரிணமிக்கத்துவங்கிய கால கட்டம் சுமார் 20,00,000 ஆண்டுகளாகிறது.அப்போதுதான் நம் பாரதத்தில் இராமாயணச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
ராமபிரானுக்கு உதவிய கிஷ்கிந்தையானது குரங்குகளின் தேசம் அல்ல; குரங்கு இனம் மனிதனாக மாறத்துவங்கிய காலகட்டம்.வானரங்கள் அக்காலகட்டத்தில் மனதின் சக்திகளை முழுமையாக அறிந்து வைத்திருந்தனர்.
அஷ்டமாசித்திகள் என்பது மாருதி எனப்படும் அனுமானுக்கு முழுமையாக தெரிந்திருந்தது.
அஷ்டம் என்றால் எட்டு என்று பெயர்.மனித உடலை ஒரு கோவில் கோபுரம் அளவுக்கு சில நிமிடங்களில் பெரிதாக்குவது; மறு நிமிடமே ஒரு பூனையளவிற்கு சுருக்குவது; வானில் எந்த வித கருவியின் துணையுமின்றி பறப்பது முதலானவையே அந்த அஷ்டமாசித்திகள்.
வால்மீகியின் ராமாயணத்தை தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் மொழிபெயர்த்தார்.அதில் இலங்கைக்குச் சென்ற அனுமன் சீதையிடம் இனிய மொழியின் பேசினான் எனக்கூறியுள்ளார்.இனிய மொழி என்பது நம் தமிழ்தான்.
ஆக, நம் தமிழின் வயது குறைந்தது 20 லட்சம் ஆண்டுகள் என நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

ராஜ ராஜ சோழன் காலத்தில் சோழப்பேரரசு வடக்கே ஜப்பான் முதல் தெற்கே ஆஸ்திரேலியாவரை பரவியிருந்தது.அவரது காலத்தில் நம் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.அதுவரை வட்டெழுத்து முறையில் நாம் தமிழ் மொழி எழுதிவந்தோம்;இம்முறை வனவாசிகளாக வாழ்ந்துவந்த சீன ஜப்பான் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.
புதிய தமிழ்மொழி எழுத்து வடிவத்தை ராஜராஜ சோழன் காலத்தில் தூரதேச நிர்வாகத்தில் (சீன ஜப்பான் ஆஸ்திரேலியா மலேசியா சிங்கபூர்) நடைமுறைப்படுத்தவில்லை;அந்த நாடுகளும் ராஜ ராஜ சோழன் காலத்துக்குப்பிறகு சோழசாம்ராஜ்யத்திலிருந்து விடுபட்டன.
இன்று சீன ஜப்பான் மொழிகளை கற்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.அவற்றின் இலக்கணம் அதாங்க கிராமர் நம் தமிழ் இலக்கணமேதான்.
உதாரணமாக ஜப்பான் மொழியின் எழுத்துக்களின் எண்ணிக்கை 30,000.அதை மனப்பாடம் செய்வதுதான் கஷ்டம்.மனப்பாடம் செய்துவிட்டால் ஜப்பான் மொழி தமிழ்மொழியேதான்.(இவற்றை யெல்லாம் ஏன் கருணாநிதி கூறவில்லை?)

ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் தமிழர் பண்பாடு.ஏன் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ வேண்டும்?

கொஞ்சம் செக்ஸ்கலந்து சொல்லவேண்டியிருக்கிறது.மன்னிக்கவும்.ஒவ்வொரு ஆணின் பிறப்புறுப்பு வழியாகவும் சுக்கிலம் என்ற நிறமற்ற திரவம் வெளிவருகிறது(அவன் காமவசப்படும்போது).அதே போல ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக அவள் காம வசப்படும்போது சுரோணிதம் என்ற நிறமற்ற திரவம் வெளிப்படுகிறது.ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் மட்டும் ஒரே ஜோடி உடலுறவு கொண்டு வாழ்ந்து வந்தால் அந்த ஆணின் சுக்கிலம் பெண்ணின் உடலுக்குள்ளும் , அந்த பெண்ணின் சுரோணிதம் அந்த ஆணின் உடலுக்குள்ளும் ஊடுருவுகிறது.
இப்படி ஒரே விதமான(ஒரே ஆண் அல்லது பெண்ணின்)நிறமற்ற திரவம் மாறி மாறிப்பாயும் போது அந்த ஜோடிகளின் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.
விதவிதமான சுக்கிலம் அல்லது சுரோணிதம் பாயும்போது ஆண் அல்லது பெண்ணின் உடல்நலம் கெட்டுப்போகிறது.
இந்த கருத்து உண்மைதான் என்று இன்றைய மருத்துவ உலகம் ஆராய்ந்து கூறியுள்ளது.
ஆக, உலகின் மூத்த இனம் நம் தமிழினம் தான்;
உலகின் மூத்த விஞ்ஞான மொழி நம் தாய் தமிழ் மொழிதான்!!!
நாம் ஏன் இந்த பூமியை ஆளக்கூடாது?
அதுவும் நேரடியாக । । ।

ஒரே தமிழ் மாதத்தில் மூன்று கிரகணங்கள்:உணர்த்துவது என்ன?
வரப்போகும் மூன்று கிரகணங்கள்:குறிப்பால் உணர்த்துவது அழிவுகளையா? யதார்த்தமான நிகழ்வுகளா?

7.7.2009 அன்று சந்திரகிரகணமும்

22.7.2209 அன்று சூரிய கிரகணமும்

6.8.2009 அன்று மீண்டும் இன்னொரு சந்திரகிரகணமும் வரப்போகிறது.

இந்த மாதிரி தொடர்ந்து ஒரே தமிழ் மாதத்தில் தொடர்ச்சியாக மூன்று கிரணங்கள் வந்தால் அதைத் தொடர்ந்து போர், வேகமாக பரவும் நோயால் மனித மரணங்கள்,கடல் சீற்றம் என இதற்கு முன்பு வந்திருக்கிறது.
இதனால் மனித உடல்களிலும் மாற்றம் ஏற்படும்.

கடந்த நூற்றாண்டில் 1913 ஆகஸ்டு 31 ஆம் தேதி முதல் 1946 ஜீன் 29 ஆம் தேதி வரை ஒரே மாதத்தில் மூன்று கிரகணங்கள் என்ற கணக்கில் 18 முறை ஏற்பட்டுள்ளது.

முற்கால இதிகாசங்களில் ஆராய்ந்து பார்த்தால் இந்து இதிகாசமான மகாபாரதத்தில் மட்டும் இது பற்றி குறிப்பு உள்ளது.

ஒரே மாதத்தில் மூன்று கிரகணங்கள் வந்த பின்பே மகாபாரதப்போர் குருஷேத்திரத்தில் துவங்கியிருக்கிறது.

மகாபாரதப்போர் நிகழ்ந்துமுடிந்து 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே மாதத்தில் 3 கிரகணங்கள் வந்ததால் துவாரகா கடல்கோள் ஏற்பட்டு
அழிந்தது.

அதற்கும் முற்காலத்தில் இலங்கைக்கு தெற்கே இருந்த குமரிக்கண்டம் இதனால் தான் அழிந்தது.அப்போது தன் மக்களைக் காப்பாற்ற ஒரு பாண்டிய மன்னன் மிக பெரும் மனித இடப்பெயர்ச்சி செய்தான் என பழங்கால இலக்கியங்கள் கூறுகின்றன.

கூர்ந்து கவனியுங்கள்.1913லும் 1941லும் தொடர்ந்த மூன்று கிரகணங்கள் நிகழ்ந்த பின்பே உலகப்போர்கள் நிகழ்ந்துள்ளன.

இதுபற்றி விரிவாக ‘வரலாறு திரும்புமா?’ என்ற தலைப்பில் டி.கே.ஹரி, ஹேமா ஹரி சென்னைத் தம்பதியினர் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளனர்.
மேலே இருப்பது சூரிய கிரகணம், கீழே இருப்பது சந்திரகிரகணம்.