RightClick

சில உபயோகமான இணையதளங்கள்

சில உபயோகமான இணைய தளங்கள்

உங்களது கணிப்பொறியில் ஏற்படும் பழுதுகளை நீக்க ஏராளமான குறிப்புகள் அதாங்க டிப்ஸ்கள் தரும் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் இணையதளம்:
www.staysmartonline.gov.au/secure-computer


உங்களுக்கு கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங்கில் அளவற்ற ஆர்வம் உண்டா?ஆம் எனில் நீங்கள் இணையக்குற்றங்களைக் கண்டுபிடிக்கும் புலனாய்வாளராகலாம்.இதற்கான படிப்பு புனேயில் சொல்லித்தருகிறார்கள்.இந்தியா முழுக்க (சென்னையிலும்) கிளை உண்டு. முழுக்க முழுக்க ஹார்டுவேரிலும் நெட்வொர்க்கிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்கே இந்த சைபர் க்ரைம் இன்வெஸ்டிகேட்டர் டிப்ளமோ ஒத்துவரும்.பொருளாதார நிலையில் வசதியானவர்களுக்கு மட்டுமே இந்த கோர்ஸ் சரிப்பட்டுவரும்.இதில் சேர ஏதாவது ஒருபட்டப்படிப்பு இருந்தால் போதும்.இரண்டு ஆண்டுகளுக்குமுன் இதில் சேர ப்ளஸ் டூ போதும் என நிர்ணயித்திருந்தனர்.
www.asianlaws.org


நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.இந்த இணையதளம் சென்று 1 முதல் 52 வரை உள்ள எண்கள் உள்ள 7 வரிசைகள் இருக்கும்.அதில் ஒவ்வொன்றிலும் ஏதாவது 6 எண்ணை தேர்வு செய்ய வேண் டும்.இப்படி 6 முறை தேர்வு செய்ய வேண்டும்.7வது வரிசையில் 7 எண்களைத்தேர்வு செய்யவேண்டும்.
அனைத்து வரிசைகளும் அனைத்து எண்களும் பொருந்தியிருந்தால் 10,00,000 டாலர்கள் ரொக்கப்பரிசு உண்டு.இந்தப்பரிசை கொஞ்சம் கொஞ்சமாக 25 ஆண்டுகளுக்குத்தருவார்கள்.இதைப் பெற இண்டர்நேஷனல் கிரடிட் கார்டு நம்மிடம் இருக்க வேண்டும்.இதில் கலந்துகொள்ள எந்த விதக்கட்டணமும்கிடையாது.ஒரே ஒரு மின் அஞ்சம் முகவரி இருந்தால் போதும்.உங்களை கோடீஸ்வரராக்கும் இணையதள முகவரி:
www.freelotto.com


ஆழ்நிலைதியானம் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? ஒன்று சென்னையில் சொல்லித்தருகிறார்கள்.அது பற்றி ஏற்கனவே இந்த வலைப்பூவில் எழுதிவிட்டோம்.இன்னொரு இடத்தில் கட்டணமின்றிக் கற்றுத்தருகிறார்கள்.காலம் இரண்டு நாட்கள்.இடம்:மைசூர்,கர்நாடகா மாநிலம்
www.meditationguru.com
இந்த தளத்தில் தமிழ்விளக்கமும் இருக்கும்.ஆப்சனைத் தேர்வு செய்யவும்.நமது நியாயமான ஆசைகளை தியானத்தின்மூலம் அடையலாம்.நமது ஆழ்மனத்தைப்பயன் படுத்தி,மூன்றே மாதங்களில் நமது விருப்பங்கள் நிறைவேறத் துவங்கும்.பயிற்சி இந்தியா முழுவதும்.சென்னையில் தி.நகரில் உள்ள ஒரு உணவகத்தில்,மதுரையில்-திருச்சி-சேலம்-கோவை-இங்கெல்லாம் ஒரு உணவகத்தில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் ஆல்பா மைண்டுபவர் தியானம் நடைபெறுகிறது.3 மாதத்திற்கு ஒருமுறை!!! காலம் ஒரு நாள் மட்டுமே.கட்டணம் ரூ.3000/-லிருந்து... ... ஒரு பத்தாம் வகுப்பு மாணவி மாவட்டத்திலேயே இரண்டாம் இடம் பெற்றிருக்கிறாள்.ஆந்திராவில் ஒரு கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்த நபர் இன்று தனியார்பஸ் சர்வீஸ் நடத்தி பெரும் செல்வந்தராகிவிட்டார்.மாமியார் மருமகள் பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.நீண்டகால நோய்கள் குணமடைந்திருக்கின்றன.குடிக்கும் கணவன் குடியைவிட்டிருக்கிறார்.சொத்துப்பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.இன்னும் எத்தனையோ நன்மைகள் விளைந்திருக்கின்றன.
www.alphamindpower.net