RightClick

மேஷ-விருச்சிகராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை


மேஷ-விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை

நீங்கள் அல்லது உங்களுக்கு வேண்டியவர் மேஷ-விருச்சிக ராசிக்காரர்களா? நீங்கள் செய்ய வேண்டியது உடனே ஒரு பவள மோதிரம் வாங்கி-உங்களது மோதிர விரல் அளவிற்குப் பார்த்து வாங்கவும்.வாங்கி 15.5.2010 வரை அணிந்து கொள்ளவும்.
ஏன்?
மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகள் செவ்வாய்க்கிரகத்திற்குச் சொந்தமானவை.மேஷ ராசியில் அசுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் நட்சத்திரங்கள் வருகின்றன.விருச்சிக ராசியில் விசாகம் 4 ஆம் பாதம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்கள் வருகின்றன. இந்த நட்சத்திரக்காரர்கள் (பிறந்த ஆண்கள்/பெண்கள் மட்டும்.ருதுவான நட்சத்திரம் வராது) கட்டாயம் செவ்வாயின் குணங்களோடு இருப்பார்கள்.

அது என்ன செவ்வாயின் குணங்கள்:முன்கோபம், தீவிரமாக தன்னைச் சுற்றியிருப்பவர்களை நேசிப்பது அல்லது எதிர்ப்பது, எல்லோரிடமும் தான் சரியாக நடந்துகொண்டு அவர்களை-அதே போல சரியாக நடந்து கொள்ளும்படி வற்புறுத்துவது,வள-வள வெனப் பேசுவது, ரகசியங்களை காப்பாற்றாமல் எல்லோரிடமும் உளறிக்கொண்டே இருப்பது, நிறைய ஜோக் அடிப்பது, பிறரை மிகக்கேவலமாக நக்கல்-கிண்டல் செய்வது,காரம் உள்ள உணவுகளையும், உப்புகலந்த பதார்த்தங்களையும்,சூடான உணவுகளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது.தன்னைப்பற்றியும், தனது உடலைப்பற்றியும் அதிகம் கவலைப்படாமல் இருப்பது.

ஜோதிடப்படி ஏன் மோதிரம் அணிய வேண்டும்?
ஒரு ராசியை செவ்வாய் கடக்க 45 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. கடக ராசியில் வரும் 7.10.2009 அன்று நுழைகிறது.ஆனால்,இந்த முறை செவ்வாய் 45 நாட்கள் கடகராசியில் நிற்பதற்குப்பதிலாக 270 நாட்கள்(9மாதங்கள்)வரை கடக்க எடுத்துக்கொள்கிறது.கடக ராசியை செவ்வாய் கடக்கும் 45 நாளும் நீசமாகிவிடுகிறது.அதாவது செவ்வாய் பலமிழந்து விடுகிறது.
ஒவ்வொரு தமிழ்வருடமும் செவ்வாய் கடகராசியைக் கடக்கும் 45 நாளும் நீசமடைவதால்-அந்த 45 நாட்களுக்கு உலகம் முழுவதும் வாழும் மேஷ-விருச்சிக ராசிக்காரகள் அப்போது அவமானம் அடைகிறார்கள்.இது அனுபவ உண்மை.
மேஷ-விருச்சிகராசிக்காரர்கள் அந்த 45 நாட்களில் என்ன செய்தாலும் அவர்கள் சுய கவுரவத்தை இழந்தே ஆக வேண்டும்.இது விதி!!!
இந்த முறை சுமார் 9 மாதங்கள் எனில்,
மேஷ-விருச்சிகராசிக்காரர்கள் அளவற்ற அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இந்த அவமானங்கள் சுமார் 50% அளவிற்கு குறைய செவ்வாய்க் கோளின் ரத்தினமான பவளத்தை வெள்ளி மோதிரத்தில் பதித்து-பவளத்தின் ஒரு பக்கம் நமது விரலில் பதியும்விதமாக இன்றே அணிந்து கொண்டால் ஓரளவு அவமானங்களை தவிர்க்கலாம்.
செவ்வாய் வாக்கியகணித முறைப்படி7.10.2009 முதல் 15.5.2010 வரையிலும்,
திருக்கணிதப்படி 1.7.2009 முதல் 10.4.2010 வரையிலும் கடக ராசியில் நீசமாகிறது.எனவே, இந்த வலைப்பூவில் காட்டப்பட்டுள்ளதுபோல ஒரு பவள மோதிரம் வாங்கி அணிந்துகொண்டு நிம்மதியாக வாழுங்கள்.
இப்படி நீண்டகாலம் செவ்வாய் நீசமாகப்போவதால், உலக அளவில் காவல்,ராணுவத்துறை மனிதர்கள் மிகப்பெரிய போராட்டத்தை சந்திப்பார்கள்.உலகின் பல பாகங்களில் பூகம்பம் வரலாம்.ரியல் எஸ்டேட் விலை படுபாதாளத்தில் விழும்.ஏராளமான அழிவுகள் ஏற்படலாம். 18.5.2009 அன்று இரவு 11 மணிக்கு எனக்கு ஒரு குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) யாரோ ஒருவரிடமிருந்து வந்தது.அதில் இன்று இரவு 12.30 முதல் 3.30 வரை செவ்வாய்க்கிரகத்திலிருந்து புறப்பட்ட காஸ்மிக் அலைகள் பூமியை வந்தடைகின்றன.எனவே,உங்களது செல்போனை அணைத்துவைக்கவும்.ஆதாரம்:அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மற்றும் பி.பி.சி.நியூஸ்.