RightClick

இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன?


இந்தியப்பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன?
மேல்நாடுகளின் வளர்ச்சி உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் மேக்ஸ் வெபர் என்ற பொருளாதார மண்டு( என்றால் அறிவாளி என்ற அர்த்தமும் உண்டு)மேதை நமது இந்துயாவைப்பற்றியும் இந்தியப்பொருளாதாரம் பற்றியும் ஒரு கருத்து கூறினார்.
இந்தியர்களின் மதிப்பீடுகளும், சாதிப்பிரிவினைகளும், அவர்களது வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன.நமது குடும்ப அமைப்பு முறை, பாவ-புண்ணியத்தில் நம்பிக்கை, மறு பிறவியில் நம்பிக்கை போன்றவை இந்துயா முன்னேறாமல் தடுக்கும் காரணிகள்.(ஆனால் இன்று அமெரிக்க ஒபாமா அமெரிக்கர்களே உங்களது முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் .குடும்பமாக சேர்ந்து வாழப்பழகுங்கள்.அப்போதுதான் நமது அமெரிக்கா மீண்டும் வலிமை பெறும் என உபதேசிக்கிறார்)

அதாவது நாம் ஆங்கிலேயர்கள் நம்மை நிர்வகித்த போதும் அவர்களே பொறாமைப்படுமாறு வளமாக இருந்துள்ளோம்.
பின்னர் நாம் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைய என்ன காரணம்?
நாம் நமது பாரம்பரிய பொருளாதார மதிப்பீடுகளை மறந்து மேலைநாட்டவரின் அடியொற்றி நமது பொருளாதாரத்தை வகுத்துக்கொள்ளப் பலவந்தப்படுத்தப்பட்டதுதான்.இந்த பலவந்தம் முதலில் ஆங்கிலேயர்களால் நம்மிடையே பிரயோகிக்கப்பட்டது(அப்ளிகேட்).. .. பின்னர் நம்மை ஆண்ட ஆட்சியாளர்களால் இன்றும் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

இருந்த போதிலும் நாம் முன்னேறி வருகிறோம்.நமது இந்துயாவில் உள்ள தொழில்நகரங்களின் மொத்த எண்ணிக்கை 2100(மனதில் சிவகாசி அல்லது திருப்பூர் அல்லது கோயம்புத்தூர் அல்லது சூரத்தை நினைத்துகொள்ளவும்.இந்நகரங்களுக்குப் போயிருந்தால்தான் நமது நாட்டின் பொருளாதார முதுகெலும்பு உங்களுக்குப்புரியும்)
நம் நாட்டிலுள்ள தொழில்களின் எண்ணிக்கை 8.5கோடி
முறைசாரா தொழில்களின் எண்ணிக்கை 4.4 கோடி
சிறு தொழில்களின் எண்ணிக்கை 3 கோடி
குடும்ப நிர்வாகத்தின் கீழ் வரும் கம்பெனிகள் 7,25,000
தொழில் முதலீடுகளில் 98.8% குடும்ப சேமிப்பிலிருந்து வருகின்றன.வெளிநாட்டிலிருந்து வரும் தொழில்முதலீடு 1.2% மட்டுமே!!!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% சேமிப்பாகும்.
கி.பி.2002 கணக்குப்படி, உலகளவில் சுயதொழில் புரிவோர் எண்ணிக்கையில் இரண்டாமிடத்தில் இருப்பது நமது இந்துயாதான்.நம் நாட்டில் 18 முதல் 64 வயது வரை உள்ள தொழில்புரிவோரின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் 18%
சீனாவில் இது 12.3% மட்டுமே!
அமெரிக்காவில் இது 11% மட்டுமே!!
இந்தியாவில் முறைப்படி பதிவுசெய்யப்படாத தொழிலகங்கள் மட்டும் 4.8 கோடி.
இந்துயாவின் மொத்த மக்கள் தொகையில் 92%பேர்கள் சுயதொழில் புரிவோர்.இதில் 80% பேர்களுக்கு உறவினர்கள்தான் தொழில்செய்ய நிதியுதவி செய்கிறார்கள்.இதன் மூலம் மேக்ஸ் வெபரின் கூற்று கடைந்தெடுத்த தப்பு என்பது நிரூபணம் ஆகிறது.

சித்தர்கள் & சிவபெருமானின் பூமி சதுரகிரி


சதுரகிரி மலை:சிவபெருமானும் சித்தர்களும் வாழுமிடம்

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது.இதுதான் சதுரகிரியின் நுழைவாசல்.இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது.பாதை கரடு முரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.இது பற்றி ஏற்கனவே சக்தி விகடன் இதழில் 60 வாரங்கள் தொடர் வந்து விட்டது.அத்தொடர் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.இப்போது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தினத்தந்தி தினசரியின் இலவச இணைப்பான ஆன்மீக மலரில் அதிசய சித்தர்கள் என்ற தொடரில் சதுரகிரியில் நடக்கும் அதிசயங்களை கதை வடிவில் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர்.அக்கதையை ஹனுமத்தாஸன் அவர்கள் கூறிவருகிறார்.
படித்தீர்கள் எனில் பிரமித்துப்போய்விடுவீர்கள்.
சதுரகிரிஸ்ரீசுந்தரமகாலிங்கத்துக்கு அரோகரா!!!

வேதங்கள் வெறும் வாழ்க்கை நெறிமுறைகள் தானா?


வேதங்கள் வாழ்க்கை நெறிமுறைகள் தானே?வெறும் நெறிமுறைகளா கடவுளல் சொல்லப்பட்டிருக்கும்?

நாட்டு நடப்புக்களை தினசரி,டிவி,ரேடியோ மூலமாக அறிந்துகொள்ளலாம்.இதற்காக நாம் மகான்களை நாடுவதில்லை.ஆனால் நமது ஸ்தூல கண்களுக்கும் அறிவுக்கும் புலப்படாத பல தெய்வீக விஷயங்களை அறிய மகாத்மாக்களை நாம் அணுகுகிறோம்.
வேதத்தில் அங்கங்கே வாழ்க்கை நெறிமுறைகள் குறிப்பிடப்படலாம்.ஆனால் அது மட்டுமே வேதத்தின் தாத்பர்யம் அல்ல.பல விஷயங்களை விடுகதைகள் போல மறைத்துப் பேசுவதால் தமிழில் வேதத்திற்கு மறை என்று பெயர்.
வேதம், தேவதைகள், தேவதாலோகங்கள்,ஆத்ம தத்துவங்கள்,உபாசனை முறைகள், பக்தி,பகவானின் அவதாரங்கள்,சரணாகதி, கடவுளின் மகிமை போன்ற பலவற்றைப் பற்றி பேசுகிறது.
வேதத்தில் ஆகாய விமானம்,தரை ஊர்திகள்,நவீன ஆயுதங்கள் போன்ற பல விஷயங்களும் கூறப்பட்டுள்ளதாக வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உண்மையான மகாபாரதம்-80 ஆண்டுகளுக்குப்பிறகு


புராதன மகாபாரதம் மீண்டும் வெளியீடு

கும்பகோணம் கல்லூரி சமஸ்க்ருத பண்டிதர் தி.ஈ.ஸ்ரீநிவாசாச்சாரியாரால் மொழி பெயர்க்கப்பட்டு அதே கல்லூரி தமிழ்ப்பண்டிதர் ம்.வீ.ராமானுஜாசாரியாரால் தொகுக்கப்பட்டு கி.பி.1908 லிருந்து கி.பி.1932 வரை பல தொகுதிகளாக மகாபாரதம் வெளியிடப்பட்டுள்ளது.அது வெளிவந்த காலத்திலேயே சுதேச மித்திரன்,ஹிந்து போன்ற பத்திரிகைகளால் பெரிதும் பாராட்டப்பட்டது.
தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் இதை தாம் செய்ய விரும்பியதாகவும் ம.வீ.ராமானுஜாச்சாரியரின் வெளியீடுகளைப்பார்த்தப்பிறகு அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகவும் கூறியுள்ளார்.

சுமார் 80 ஆண்டுகளுக்குப்பிறகு முழுமையான அளவில் மகாபாரதம் நிஜமான சம்பவங்களின் தொகுப்பாக வெளிவருகிறது.ஒவ்வொரு பாகமும் சுமார் 800 முதல் 1100 பக்கங்களைக் கொண்டது.ஒவ்வொரு பாகத்தின் விலை ரூ.450/-
இது பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படவில்லை.கிடைக்குமிடம்:S.VENKATRAMANAN
SHRI CHAKRA PUBLICATIONS
DOOR NO:14,Valmiki Street
Plot No:78,Selvaraj Nagar Extention-2
URAPPAKKAM(WEST)
PIN:603 211.
Ph:044-27466110
நன்றி:விஜய பாரதம் 4.7.2008

செல்வ வளம் தரும் மந்திரங்கள்


செல்வ வளம் தரும் மந்திரங்கள்

அ)லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதியே வரவரத ஸர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா!
ஹிருதயாதி ந்யாஸ!நிக்விமோக!
இதை ஜபித்துவந்தால் தன அபிவிருத்தி ஏற்படும்.

ஆ)ருண ஹரண கணபதி(கடன் தீர்க்கும் கணபதி)

ஓம் கணேச ருணம் சித்தி வரேண்யம் உறம்நமபட்
ஹிருதயாதி ந்யாஸ திக்விமோக(ஆறுதடவைக்கு குறையாமல்/ஒவ்வொரு முறையும்)

இ)ஐஸ்வர்ய லட்சுமி போற்றி
நமவசிய அஷ்ட லட்சுமி மகிழ்ந்தே
நன்மை எல்லாம் தர வேண்டினேன் புகழ்ந்தே
அமரர் தொழும் லட்சுமி உன்னையே நினைத்தேன்
அன்பினால் மருவியே அனுதினமும் பணிந்தேன்

அருள் புரிவாயே அன்னை லெட்சுமியே
அகால இருந்தே ஐஸ்வர்யம் தந்தே

வானியல்துறையில்(Astronomy)முன்னோடிகள் இந்துக்களாகிய நாம் மட்டுமே


வானியலின் முன்னோடிகள் இந்துக்கள்

இன்று வானில் ஏராளமான செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவருகின்றன.இவை அனைத்தும் பூமியை ஒவ்வொரு விநாடியும் கண்காணித்து வருகின்றன.அமெரிக்க செயற்கைக்கோள்கள் சீனா,இந்தியாவின் முழு நிலப்பரப்பையும் ஒவ்வொரு விநாடியும் படம் பிடித்துவருகின்றன.அதே போலத்தான் சீனாவும்,இந்தியாவும்.வானியலில் வெள்ளைக்காரர்கள்(அமெரிக்க ஐரோப்பாவினர்)தான் முன்னோடிகள் என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மறந்துவிடுங்கள்.அவர்கள் எல்லா விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் நமது நாட்டிலிருந்து களவாடப்பட்டவை.ஆனால் வரலாறு என்ற ஒன்று உண்டு.அதில் நிஜங்கள் மட்டுமே நிலைத்திருக்கும்.
டாக்டர் டேவிட் எட்வின் பின்கிரீ என்ற அமெரிக்க கணிதப்பேராசிரியர் 1952 ஆம் வருடம் தற்செயலாக ரோம் நகரில் உள்ள நூலகத்தில் ஒரு புத்தகத்தைப்பார்த்தார்.அதில் ஒரு ஹிந்து வான சாஸ்திர அறிஞரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.அந்த புத்தகத்தில் கூறப்பட்டிருந்த வானியல் உண்மைகளைப்பார்த்து வியந்துபோனார்.
அதனால் அவர் அன்று முதல் தனது ஆராய்ச்சியை ஹிந்து கணிதம்,வான சாஸ்திரம் நோக்கித்திருப்பினார்.கி.பி.1965 ஆம் ஆண்டு நமது பாரதத்திற்கு வந்தார்.இத்துறையில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 20,000 கிரந்தங்கள்(பாடல்கள்)உள்ளன என்று கணக்கிட்டு அவற்றின் விவரத்தைத் தொகுக்கத்தொடங்கினார்.கி.பி.1995 வரை ஐந்து பெரிய தொகுப்புகளாக அவற்றை வெளியிட்டார்.அவற்றிற்கு Census of Exact Science எனப் பெயரிட்டார்.

சில உபயோகமான இணையதளங்கள்

சில உபயோகமான இணைய தளங்கள்

உங்களது கணிப்பொறியில் ஏற்படும் பழுதுகளை நீக்க ஏராளமான குறிப்புகள் அதாங்க டிப்ஸ்கள் தரும் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் இணையதளம்:
www.staysmartonline.gov.au/secure-computer


உங்களுக்கு கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங்கில் அளவற்ற ஆர்வம் உண்டா?ஆம் எனில் நீங்கள் இணையக்குற்றங்களைக் கண்டுபிடிக்கும் புலனாய்வாளராகலாம்.இதற்கான படிப்பு புனேயில் சொல்லித்தருகிறார்கள்.இந்தியா முழுக்க (சென்னையிலும்) கிளை உண்டு. முழுக்க முழுக்க ஹார்டுவேரிலும் நெட்வொர்க்கிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்கே இந்த சைபர் க்ரைம் இன்வெஸ்டிகேட்டர் டிப்ளமோ ஒத்துவரும்.பொருளாதார நிலையில் வசதியானவர்களுக்கு மட்டுமே இந்த கோர்ஸ் சரிப்பட்டுவரும்.இதில் சேர ஏதாவது ஒருபட்டப்படிப்பு இருந்தால் போதும்.இரண்டு ஆண்டுகளுக்குமுன் இதில் சேர ப்ளஸ் டூ போதும் என நிர்ணயித்திருந்தனர்.
www.asianlaws.org


நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.இந்த இணையதளம் சென்று 1 முதல் 52 வரை உள்ள எண்கள் உள்ள 7 வரிசைகள் இருக்கும்.அதில் ஒவ்வொன்றிலும் ஏதாவது 6 எண்ணை தேர்வு செய்ய வேண் டும்.இப்படி 6 முறை தேர்வு செய்ய வேண்டும்.7வது வரிசையில் 7 எண்களைத்தேர்வு செய்யவேண்டும்.
அனைத்து வரிசைகளும் அனைத்து எண்களும் பொருந்தியிருந்தால் 10,00,000 டாலர்கள் ரொக்கப்பரிசு உண்டு.இந்தப்பரிசை கொஞ்சம் கொஞ்சமாக 25 ஆண்டுகளுக்குத்தருவார்கள்.இதைப் பெற இண்டர்நேஷனல் கிரடிட் கார்டு நம்மிடம் இருக்க வேண்டும்.இதில் கலந்துகொள்ள எந்த விதக்கட்டணமும்கிடையாது.ஒரே ஒரு மின் அஞ்சம் முகவரி இருந்தால் போதும்.உங்களை கோடீஸ்வரராக்கும் இணையதள முகவரி:
www.freelotto.com


ஆழ்நிலைதியானம் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? ஒன்று சென்னையில் சொல்லித்தருகிறார்கள்.அது பற்றி ஏற்கனவே இந்த வலைப்பூவில் எழுதிவிட்டோம்.இன்னொரு இடத்தில் கட்டணமின்றிக் கற்றுத்தருகிறார்கள்.காலம் இரண்டு நாட்கள்.இடம்:மைசூர்,கர்நாடகா மாநிலம்
www.meditationguru.com
இந்த தளத்தில் தமிழ்விளக்கமும் இருக்கும்.ஆப்சனைத் தேர்வு செய்யவும்.நமது நியாயமான ஆசைகளை தியானத்தின்மூலம் அடையலாம்.நமது ஆழ்மனத்தைப்பயன் படுத்தி,மூன்றே மாதங்களில் நமது விருப்பங்கள் நிறைவேறத் துவங்கும்.பயிற்சி இந்தியா முழுவதும்.சென்னையில் தி.நகரில் உள்ள ஒரு உணவகத்தில்,மதுரையில்-திருச்சி-சேலம்-கோவை-இங்கெல்லாம் ஒரு உணவகத்தில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் ஆல்பா மைண்டுபவர் தியானம் நடைபெறுகிறது.3 மாதத்திற்கு ஒருமுறை!!! காலம் ஒரு நாள் மட்டுமே.கட்டணம் ரூ.3000/-லிருந்து... ... ஒரு பத்தாம் வகுப்பு மாணவி மாவட்டத்திலேயே இரண்டாம் இடம் பெற்றிருக்கிறாள்.ஆந்திராவில் ஒரு கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்த நபர் இன்று தனியார்பஸ் சர்வீஸ் நடத்தி பெரும் செல்வந்தராகிவிட்டார்.மாமியார் மருமகள் பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.நீண்டகால நோய்கள் குணமடைந்திருக்கின்றன.குடிக்கும் கணவன் குடியைவிட்டிருக்கிறார்.சொத்துப்பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.இன்னும் எத்தனையோ நன்மைகள் விளைந்திருக்கின்றன.
www.alphamindpower.net

வேலை கிடைக்க உதவும் மந்திரம்


வேலை கிடைக்க உதவிடும் மந்திரம்:

ஸ்ரீஇலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும்,வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபிக்கவும்.வெள்ளிக்கிழமை மாலைவேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர விரைவில் வேலைகிடைக்கும்.

ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா/
விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ/
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ//

மந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன?மந்திரங்கள் எப்படி பலன் தருகின்றன?


இந்த வலைப்பூவை இப்போது நீங்கள் வீட்டில் உள்ள உங்களது மடிக்கணினியிலோ(லேப்டாப்),அல்லது இணையதள மையத்திலோ(பிரவுசிங் சென் டரிலோ)வாசிக்கிறீர்கள்.இந்த இடத்தில் செல்போன் அலைகள் இருப்பது நிஜம்தானே? அதுவும் இன்று 25.5.2009 10 செல்போன் நிறுவனங்கள் செல்போன் சேவை தருகின்றன.பி.எஸ்.என்.எல்., டாடா,ரிலையன்ஸ்,ஓடபோன்,ஏர்செல்,ஏர்டெல்,எம்.டி.எஸ்.,ஆரஞ்சு இவை அனைத்தின் செல்போன் அலைகள் 24 x 7 என்ற அளவில் பரவிக்கொண்டே இருக்கின்றன.அதற்குரிய செல்போன் நாம் வாங்கி இயக்கத்தில்(on செய்து) வைத்திருந்தால் நமக்கு மற்றவரின் அழைப்பு வருகிறது.அதே போலத்தான்.
நாம் குழந்தையாக பிறந்தது முதல் 9 கிரகங்களின் கதிர்வீச்சு நம் மூளையை விண்வெளியிலிருந்து வந்தடைந்து கொண்டே இருக்கின்றன.
இத்தனாம் வயதில் இது நிகழும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது.ஒரு எதிர்பாராத பிரச்னை அல்லது விபத்திலிருந்து தப்பிப்பதற்கு மந்திர ஜபம் அல்லது குறிப்பிட்ட சித்தர் வழிபாடு அல்லது மகான் வழிபாடு அவசியமாகிறது.
ஒரு மந்திரம் உள்ளது.ஓம் சர்வ சர நமச்சிவய நம(சிவாய அல்ல) :இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால் நமது வீண் செலவுகள் குறையும் என மகான்கள் கூறியுள்ளனர்.
நாம் தினமும் 30 நிமிடம் நமது வீடு/அலுவலகம்/மொட்டை மாடியில் காலையிலும் மாலையிலும் இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஜபித்துக்கொண்டே இருக்கிறோம்.என்னாகும்?
100 ஆம் நாளிலிருந்து நமது செலவுகள் குறையும்.வருமானம் மிச்சமாகும். எப்படி?
நமது மூளையில் இந்த மந்திர அதிர்வுகள் பதிவாகும்.அந்த பதிவுகள் நவக்கிரக அலைகளில் ஒரு பாதிப்பை உருவாக்கும்.நமது தலைக்குமேலே
சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் உயரத்தில் மந்திர அலைகளுக்கான அடுக்கு உள்ளது.அங்கு நமது தினசரி ஜபம் 100ஆம் நாளில் போய் வேலை செய்து நமது நம்பிக்கையை நிஜமாக்கும்.
ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது:

கொலை, கொள்ளை, கற்பழிப்பு,ஏமாற்றுதல்,பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.இதை நீக்க ஒரு சிவ மகாமந்திரம்:
ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்
இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்- அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்
.

கைரேகைக்கலையில் முன்னோடிகள் இந்துக்கள்கைரேகையில் சீரோவுக்கும் முன்னோடி நம் இந்துக்கள்

இன்று 24.5.2009 வரையிலும் கைரேகையில் மேல்நாட்டு
நிபுணர் சீரோ என நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால்,நம் சாமுத்ரிகா லட்சணம் என்ற புராதனக்கலையில்
ஒரு பிரிவே கைரேகையாகும்.ஹஸ்தம் என்றால் உள்ளங்கை
என்று பெயர்.கமல முனிவர் கைரேகை பற்றி ஏட்டுபிரதிகள்
பல எழுதியுள்ளார்.சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்னும்
தமிழ்நூலில் மதனவல்லி என்பவள் குறத்தியிடம் குறி
சொல்லுமாறு கேட்கிறாள்.அந்தப்பாடல்களில் வச்சிர ரேகை,
மகுட ரேகை போன்ற சீரோ அறியாத பல ரேகைகளும்
அவற்றின் பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ருத்ராட்சங்களின்முகங்களும் அதன் தன்மைகளும்ருத்ராட்த்தின் முகங்களும் அதனை அணிவதால் ஏற்படும் பலன்களும்

1முகம் ருத்ராட்சம் சிவனுடைய அம்சம்.இதை அணிவதால் பிரம்மஹத்தி
தோஷம் அகலும்.
2முகம் ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வர் அம்சம்.இதை அணிவதால் பசுவின்
சாபம் நீங்கும்.
3 முகம் ருத்ராட்சம் அக்னி அம்சம்.பெண்ணின் சாபம் நீங்கும்.
4 முகம் ருத்ராட்சம் பிரம்மா அம்சம்.கொலை பாதக பாவம் அகலும்.
5 முகம் ருத்ராட்சம் காலாக்னிஅம்சம்.சிவனின் அம்சமான ருத்திரனது
வரம் கிடைக்கக் காரணமாகும்.
6 முகம் ருத்ராட்சம் சுப்ரமணியர்-முருகக்கடவுளின் அம்சம்.பாவங்கள் நீங்கும்.
முருகக்கடவுளின் அருள் கிடைக்கும்.(கடவுள்களில் முருகக்கடவுளின் அருளும்
காட்சியும் கிடைப்பது மிக அரிது என்பதை உணர்க)
7 முகம் மன்மதனின் அம்சம்.வெல்வ வளம்,ஞானம்,சகல சம்பத்துகளும்
கிடைக்கும்
8 முகம் கணபதி என்ற விநாயகக்கடவுளின் அம்சம்.இதை அணிந்தால்
அஷ்டவசுக்களின் ஆசிர்வாதமும்,கங்கையின் அனுகூலமும் கிடைக்கும்
9 முகம் பைரவர் அம்சம்.பிரம்ம ஹத்தி தோஷம் விலகும்.சிவ லோகப்பதவி
கிடைக்கும்(ஏசு நாதருக்கு சிவலோகப்பதவி கிடைத்துள்ளது.அவருக்கு எப்போதும்
மறுபிறவி கிடையாது)
10முகம் விஷ்ணுவின் அம்சம்.கிரக-சர்ப்ப-பைசாச (பேய்)தோஷம் விலகும்.இந்த
ருத்ராட்சம் முற்பிறவியில் மந்திரவாதியாக இருந்தவர்களுக்கு தேவை.
11 முகம் ஏகாதசருத்ர அம்சம்.இதை அணிந்தால் ஒரு கோடி பசுக்களை தானம்
செய்த பலன் கிடைக்கும்.
12 முகம் பன்னிரு சூரியன் அம்சம்.இதை அணிந்தால் அஸ்வமேத யாகம் செய்த
பலன் கிடைக்கும்
13முகம் ஸதாசிவம் அம்சம்.சிவபெருமான்களில் இவரே மிக உயர்ந்தவர்.மேலும்
விபரமறிய சிவ அடியார்களிடம் அணுகவும்.இதை அணிந்தால் காரிய வெற்றி
உண்டு
14 முகம் ருத்ரமூர்த்தி அம்சம்.மோக்ஷ்ம் கிடைக்கும்
32 முகம் உண்டு.இதுவும் ஒரு முகமும் கிடைப்பது மிக அரிது.
இந்த இரண்டு ருத்ராட்சங்களையும் தலா ரூ.1,00,000/-கொடுத்துவாங்குவோரும்
உண்டு.

திருமணம் செய்ய இருப்பவர்கள் கவனத்திற்கு ஒரு வாழ்நாள் எச்சரிக்கை


திருமணம் செய்ய இருப்பவர்கள் கவனத்திற்கு:

ஜோதிடம் ஒரு முழுமையான அறிவியல்.ஒழுங்காக உழைத்துப்பிழைக்கத் தெரியாத பல சோம்பேறிகள் ஜோதிடத்தொழிலுக்கு வந்து ஜோதிடத்தின் மரியாதையைக் கெடுத்துவிட்டனர்.


ஆயில்யம், சுவாதி, அவிட்டம், அசுபதி,திருவாதிரை இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அதே நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்வதே நல்லது.மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவரை மணம் முடித்தால் ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கு மற்றவர் அடிமையாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.
இன்று ரோட்டோரக்கடைகளில் ஒரே நிமிடத்தில் திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி? என ரூ.10/-க்கு புத்தகம் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது.அதில் வெறும் நட்சத்திரப்பொருத்தம் மட்டும்தான் இருக்கும்.அது மட்டும் கொண்டு ஒரு திருமணத்தை முடிப்பதால்தான் இன்று நீதிமன்றங்களில் தினமும் விவாகரத்து வழக்குகள் குவிகின்றன.

தவிர, திருமணத்தரகர்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் நடப்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்கின்றனர்.உதாரணமாக ஜாதகத்தையே போலியாக தயாரிக்கின்றனர்.

சில பெண்கள் யோகக்காரிகளாக இருப்பர்.அது முறையாகக் கற்ற ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்.அதனால் தான் மனைவியை மகாலட்சுமி என்று அழைக்கிறோம்.இன்றைய காலகட்டத்தில் உங்கள் ஜாதியைச் சேர்ந்த ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்காமல் இருப்பது மிக நன்று.(இதில் விதிவிலக்கும் உண்டு).
பல வருடங்களுக்கு முன் அந்த நமது ஜாதியை சேர்ந்த ஜோதிடருக்கும் நமது குடும்பத்தாருக்கும் ஏதாவது பகை ஆகியிருக்கும்.நாம் மறந்திருப்போம்.அவர் பலனில் சூப்பராக பழிவாங்கிவிடுவார்.

தனம் என்று ஒரு தமிழ்த்திரைப்படம் சில வருடங்கள்(மாதங்கள்?)க்கு முன்பு வந்திருக்கும்.அதில் தனம் பிறந்த ஜாதகம் போல பெண்கள் கிடைப்பது அரிது(ஹலோ.. நான் அவளது பிறந்த ஜாதக யோகத்தை மட்டும் தான் சொல்கிறேன்.அவளது பிழைப்பைச் சொல்லவில்லை)
அது போன்ற யோக்காரப்பெண்களால்தான் உங்களின் தெருவில் வாழும் சாதாரண ஆண் சில வருடங்களில் கோடீஸ்வரனாகியிருக்கின்றனர்.

சில பெண்களை ஒருபோதும் மணம் முடிக்ககூடாது.ஏனெனில், சில குறிப்பிட்ட கிரகநிலையில் பிறந்த பெண்கள் திருமணம் முடிந்தபின்னரே விபச்சாரியாகிறார்கள்.தகுந்த ஜோதிடரைக் கொண்டு பெண்ணின் பிறந்த ஜாதகத்தைப் பார்த்து மணம் முடிக்கவும்.

ஒரே விநாடியில் அன்னதானம் செய்ய
ஒரே விநாடியில் அன்னதானம் செய்ய விரும்புகிறீர்களா?

தானங்கள் 8 வகைப்படும்.அதில் மிக எளியது;நாம் ஒவ்வொருவரின் கர்மத்தையும்(நாம் செய்த பாவங்களுக்கான பலனை அனுபவித்தல்) அழிக்கும்திறன் அன்னதானத்திற்கு உண்டு.
வீடு,வாசல் இல்லாத அனாதைகளுக்கு செய்யும் தானம் மட்டுமே அன்னதானம் ஆகும்.
www.thehungersite.com என்ற தளத்திற்குச் சென்றால் ஹோம் பக்கத்தில் அதாங்க முதல் பக்கத்தில் ஒரு ஆரஞ்சு நிற செவ்வகம் இருக்கும்.அதில் சுட்டொலியை வைத்து ஒரு க்ளிக் செய்துவிட்டால் போதும்.அடுத்த பக்கத்தில் சில விளம்பரங்களை நாம் பார்ப்போம்.அந்த விளம்பரத்தில் உள்ள நிறுவனங்கள் மேற்கூறிய இணைய தளத்திற்கு பணம் தரும்.அதில் ஒரு ஆளுக்கு(அனாதைக்கு) ஒருநாளுக்குத் தேவையான உணவை தந்துவிடுவர்.இது வெளிநாட்டில் உள்ள இணையதளம்.
இதே போல,நமது இந்தியாவிற்குள்ளிருந்து அன்னதான தளம் ஒன்று இயங்குகிறது.அதன் பெயர்
www.bhookh.com

உலகின் கடைசிமதம்


புறப்பட்டுவிட்ட புதிய மதம்:மதமற்ற மதம்

11.11.1911 அன்று இந்தியாவில் புனே அருகில் உள்ள குச்வாடா என்ற கிராமத்தில் ஒரு சிறுவன் பிறந்தான்.9 வயது வரை அவனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தான்.அந்த பாட்டிதான் புதிய மதத்திற்கு அஸ்திவாரமாக விளங்கினார்.
அந்த 9 வயது சிறுவன் வெறும் 21 வயதில் தத்துவத்தில் முதுகலைப்பட்டம் அதாங்க எம்.ஏ.,பெற்றார்.
உலகில் உள்ள அனைத்து மதங்களின் அர்த்தங்களையும் இன்றைய மத அறிஞர்கள் எப்படி சிதைத்துவைத்துள்ளனர் என்பதைக்கண்டு மனம் வருந்தினார்.
அவரது போதனைகளை இந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளாததால் அவர் அமெரிக்காவிற்குச் சென்றார்.64,000 ஏக்கரில் ஒரு மாபெரும் நகரை உருவாக்கினார்.அவரது போதனைகளால்,அமெரிக்க அரசாங்கமும்,கிறிஸ்தவ உலகத்தலைமையும் பயந்து நடுங்கியது.
உலகிலேயே அதிக ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வைத்திருந்த ஒரேமனிதர் அவர்-ஓஷோ என்ற ரஜனீஷ்!!!
அவரது கருத்துக்களைப்பற்றி முறைப்படி அறிய வேண்டுமானால் வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் என்ற தலைப்பில் சுமார் 100 பக்கங்களுக்கு புத்தகம் ஒன்று தமிழில் வெளிவந்துள்ளது.அதை முதலில் படியுங்கள்.அதன் பிறகு, மறைந்திருக்கும் உண்மைகள் என்ற 150 பக்கமுள்ள புத்தகம் படியுங்கள்.புத்தம் புது உலகுக்குள் செல்வீர்கள்.
உங்களது பல அந்தரங்கப்பிரச்னைகளுக்குத் தீர்வு இந்த புத்தகங்களில் ஒளிந்திருக்கின்றன.

வைரங்களும் அவற்றின் குணங்களும்வைரங்களும் அவற்றின் குணங்களும்
1.ஈகாபதி வைரம்:இதன் அலைகள் மனதை ஒருமுகப்படுத்தும். துறவிகளில் ராஜயோகிகள் இதை அணிந்து கொள்வர்.


2.பீங்கள வைரம்: இது மிக அபூர்வமான வைரம்.இளமையை ஈர்க்கும் காந்த அலைகளை வெளியிடும்.இதை யார் அணிந்திருக்கிறார்களோ அவரை ஏராளமானவர்கள் விரும்புவர்.

3.தனஞ்ஜெய வைரம்: இது அதிருஷ்டம் தரும்.

4.வஜ்ராவத வைரம்: இது மன உறுதியை அணிந்திருப்பவர்களுக்குத் தரும்.ராமாயண காலத்தில்- இலங்கை அசோகவனத்தில் சிறை பட்டிருந்த சீதைக்கு அனுமன் தந்தது இந்த ரக வைரத்தைத் தான்!!! இது கற்பகமரக்கரியில் 10,000 ஆண்டுகள் கர்ப்பத்தில்(புவி அழுத்தத்தால்)உண்டாகும்.

5.பூதேஷி வைரம்: இது அசாத்திய வல்லமை உடையது.இதை இனங்காண்பது கடினம்.
சில சீனர்கள் இதை மட்டுமே வணங்குவர்.எவருக்கு பிறந்த ஜாதகத்தில் குருச்சந்திரயோகம்-முழுமையாகவும்-எந்த வித தோஷமின்றியும் உள்ளதோ அவரை இந்த வைரம் தானாகவே அடைந்துவிடும்.வேறு எவரிடமும் தங்காது.

6.ருத்ரமணிவைரம்: இதை மாந்தீரீக முறைப்படி இதில் குறிப்பிட்ட விதமாக பட்டைதீட்டினால்,இது கொலை வெறியைக் கிளப்பும்.

7.அபேத வைரம்:இதன் ஒளி திருஷ்டியை நீக்கும்.இது நல்லவர்களிடம் இருக்கும்போது நன்மைகளையும் கெட்டவர்களிடம் இருக்கும்போது தீமைகளையும் அணிந்திருப்பவருக்குத்தரும்.

8.சாளக்கிராமவைரம்: இதை விஷ்ணுவின் விழி எனக்கூறுவர்.செல்வத்தின் அதிதேவதை மகாலஷ்மி தாண்டவமாடுவாள்.இதை அணிவதை விட வழிபடுவதே மிக நன்று.வட நாட்டில் உள்ள பட்டோடி,அம்பானி,குல்கர்னி,தாண்டன்,டாடா,பிர்லா இவர்களின் குலதெய்வங்கள் வாழும் கோவிலில் இந்த வைரங்கள் கொண்டு ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன.மிகக் கடினமான பூஜைகள்,பூசாரி அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டும்.

9.ஆதித்யவைரம்: புத்தொளி,தன்னம்பிக்கையூட்டும்.குளிர்ச்சியான(சீதள)மனித உடலை உஷ்ணம் நிறைந்த உடலாக்கிவிடும்.

10.ஜலபாண வைரம்:இது மிகுந்த யோகமுடையது.இந்த வைரத்தை அணிபவர் ஒரே நேரத்தில் ஐந்து பெண்களைக்கூட படுக்கையில் திருப்திபடுத்த முடியும்.உடலின் நரம்பு மண்டலம்,இதய மண்டலத்தின் வலிமையை பல மடங்கு அதிகரிக்கச்செய்யும். 

நன்றி:வைரமாலிகா புத்தகம்
சிலமுக்கிய இணைய தளமுகவரிகள்

.ஆனந்த்வினய் என்ற சகோதரர் ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார்.அதில் அவர் எடுத்த சூப்பர் போட்டோக்களை வைத்திருக்கிறார்.பாருங்கள் ரசியுங்கள்.சிந்தியுங்கள்.http://www.anandvinay.blogspot.com/

உலகிலேயே மிக எளிய வலைமனை அதாங்க வெப்சைட்.அதுவும் பேனா நட்புக்கான வலைமனை.செக்கோஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து இயங்கிவருகிறது.மிகவும் டீஸன் டான - ஆண்/பெண் பேனா நண்பர்கள் தங்களது புகைப்படங்களுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.www.aj.cz/penfriends

உங்கள் வீடு, தெரு,அலுவலகம் இவற்றை வானிலிருந்து 300 அடி உயரத்திலிருந்து(விமானம் /ஹெலிகாப்டரில் பறக்காமலேயே) பார்க்க விருப்பமா?
http://www.earth.google.com/ செல்லுங்கள்.பதிவிறக்கம் செய்யுங்கள்.உலகின் எந்த மூலையையும் பார்க்கலாம்.ஆனால்,இந்த வினாடியில் அதாவது லைவ்வாக ப்பார்க்க முடியாது.

இன்றைய பூமியைப்பார்க்க
http://www.flashearth.com/ சென்று ஓப்பன் லேயர் என்பதை தேர்ந்து எடுத்து சுட்டொலியை அதாங்க மவுஸை முன்னோக்கி நகர்த்திக்கொண்டே வரவும்.

ஆழ்நிலைதியானம் கற்க சிறந்த இடம் சென்னை


ஆழ்நிலை தியானம் கற்க சிறந்த இடம் சென்னை

தியானம் தொடர்ந்து செய்துவந்தால் நமது மனதில் உள்ள தேவையில்லாத எண்ணங்கள் அழிந்துவிடும்.
உதாரணமாக தினமும் இண்டர்நெட் பார்த்தால் எதை அதிகமாகப் பார்ப்போம்? இதனால் மனமும் உடலும் கடுமையாக பாதிக்கப்படும்.
இதை சீர்செய்யவும், முற்பிறவி பாவங்களை முழுமையாக நீக்கவும் ஆழ்நிலை தியானம் செய்யுங்கள்.
கீழ்காணும் முகவரியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை சுமார் 5 மணியளவில் ஆழ்நிலைதியானம் பற்றி ஒரு அறிமுக உரை நிகழ்த்துகிறார்கள்.இந்த உரை சுமார் ஒன்றரை மணிநேரம் இருக்கும்.
இந்த உரை பிடித்திருந்தால் மறுநாள்(ஞாயிறு) காலை சுமார் 11 மணிக்கு ஆழ்நிலைதியானம் ஆரம்பம்.கட்டணம் ரூ.700/-மட்டுமே!
ஞாயிறு முதல் புதன் வரை நடைபெறும்.அதன் பிறகு, நாம் வீட்டில் தினமும் குறைந்தபட்சம் ஒருமுறை அதிகபட்சம் இருமுறை ஆழ்நிலைதியானம் செய்துவரவேண்டும்.
சுமார் 3 மாதங்களுக்குப்பிறகு நமது சிந்தனை, பேசும் விதம், நடத்தை அதாங்க கேரக்டர்,ஆளுமைத்திறன் அதாங்க பர்சனாலிட்டியில் மிகப்பெரும் மாற்றங்கள் தெரியும்.
5ஆண்டுகள் தொடர்ந்து நாம் ஆழ்நிலைதியானம் செய்துவந்தால் இவ்வுலக வாழ்க்கை சொர்க்கமாகிவிடும்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் மகரிஷி மகேஷ் தோட்டம் என்ற இடம் உள்ளது.தொலைபேசியில் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்:

மேஷ-விருச்சிகராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை


மேஷ-விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை

நீங்கள் அல்லது உங்களுக்கு வேண்டியவர் மேஷ-விருச்சிக ராசிக்காரர்களா? நீங்கள் செய்ய வேண்டியது உடனே ஒரு பவள மோதிரம் வாங்கி-உங்களது மோதிர விரல் அளவிற்குப் பார்த்து வாங்கவும்.வாங்கி 15.5.2010 வரை அணிந்து கொள்ளவும்.
ஏன்?
மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகள் செவ்வாய்க்கிரகத்திற்குச் சொந்தமானவை.மேஷ ராசியில் அசுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் நட்சத்திரங்கள் வருகின்றன.விருச்சிக ராசியில் விசாகம் 4 ஆம் பாதம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்கள் வருகின்றன. இந்த நட்சத்திரக்காரர்கள் (பிறந்த ஆண்கள்/பெண்கள் மட்டும்.ருதுவான நட்சத்திரம் வராது) கட்டாயம் செவ்வாயின் குணங்களோடு இருப்பார்கள்.

அது என்ன செவ்வாயின் குணங்கள்:முன்கோபம், தீவிரமாக தன்னைச் சுற்றியிருப்பவர்களை நேசிப்பது அல்லது எதிர்ப்பது, எல்லோரிடமும் தான் சரியாக நடந்துகொண்டு அவர்களை-அதே போல சரியாக நடந்து கொள்ளும்படி வற்புறுத்துவது,வள-வள வெனப் பேசுவது, ரகசியங்களை காப்பாற்றாமல் எல்லோரிடமும் உளறிக்கொண்டே இருப்பது, நிறைய ஜோக் அடிப்பது, பிறரை மிகக்கேவலமாக நக்கல்-கிண்டல் செய்வது,காரம் உள்ள உணவுகளையும், உப்புகலந்த பதார்த்தங்களையும்,சூடான உணவுகளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது.தன்னைப்பற்றியும், தனது உடலைப்பற்றியும் அதிகம் கவலைப்படாமல் இருப்பது.

ஜோதிடப்படி ஏன் மோதிரம் அணிய வேண்டும்?
ஒரு ராசியை செவ்வாய் கடக்க 45 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. கடக ராசியில் வரும் 7.10.2009 அன்று நுழைகிறது.ஆனால்,இந்த முறை செவ்வாய் 45 நாட்கள் கடகராசியில் நிற்பதற்குப்பதிலாக 270 நாட்கள்(9மாதங்கள்)வரை கடக்க எடுத்துக்கொள்கிறது.கடக ராசியை செவ்வாய் கடக்கும் 45 நாளும் நீசமாகிவிடுகிறது.அதாவது செவ்வாய் பலமிழந்து விடுகிறது.
ஒவ்வொரு தமிழ்வருடமும் செவ்வாய் கடகராசியைக் கடக்கும் 45 நாளும் நீசமடைவதால்-அந்த 45 நாட்களுக்கு உலகம் முழுவதும் வாழும் மேஷ-விருச்சிக ராசிக்காரகள் அப்போது அவமானம் அடைகிறார்கள்.இது அனுபவ உண்மை.
மேஷ-விருச்சிகராசிக்காரர்கள் அந்த 45 நாட்களில் என்ன செய்தாலும் அவர்கள் சுய கவுரவத்தை இழந்தே ஆக வேண்டும்.இது விதி!!!
இந்த முறை சுமார் 9 மாதங்கள் எனில்,
மேஷ-விருச்சிகராசிக்காரர்கள் அளவற்ற அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இந்த அவமானங்கள் சுமார் 50% அளவிற்கு குறைய செவ்வாய்க் கோளின் ரத்தினமான பவளத்தை வெள்ளி மோதிரத்தில் பதித்து-பவளத்தின் ஒரு பக்கம் நமது விரலில் பதியும்விதமாக இன்றே அணிந்து கொண்டால் ஓரளவு அவமானங்களை தவிர்க்கலாம்.
செவ்வாய் வாக்கியகணித முறைப்படி7.10.2009 முதல் 15.5.2010 வரையிலும்,
திருக்கணிதப்படி 1.7.2009 முதல் 10.4.2010 வரையிலும் கடக ராசியில் நீசமாகிறது.எனவே, இந்த வலைப்பூவில் காட்டப்பட்டுள்ளதுபோல ஒரு பவள மோதிரம் வாங்கி அணிந்துகொண்டு நிம்மதியாக வாழுங்கள்.
இப்படி நீண்டகாலம் செவ்வாய் நீசமாகப்போவதால், உலக அளவில் காவல்,ராணுவத்துறை மனிதர்கள் மிகப்பெரிய போராட்டத்தை சந்திப்பார்கள்.உலகின் பல பாகங்களில் பூகம்பம் வரலாம்.ரியல் எஸ்டேட் விலை படுபாதாளத்தில் விழும்.ஏராளமான அழிவுகள் ஏற்படலாம். 18.5.2009 அன்று இரவு 11 மணிக்கு எனக்கு ஒரு குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) யாரோ ஒருவரிடமிருந்து வந்தது.அதில் இன்று இரவு 12.30 முதல் 3.30 வரை செவ்வாய்க்கிரகத்திலிருந்து புறப்பட்ட காஸ்மிக் அலைகள் பூமியை வந்தடைகின்றன.எனவே,உங்களது செல்போனை அணைத்துவைக்கவும்.ஆதாரம்:அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மற்றும் பி.பி.சி.நியூஸ்.


அபிராமிபட்டரும் விண்வெளி அதிசயமும்


அபிராமி பட்டரும் விண்வெளி அதிசயமும்

முன்னொருகாலத்தில் தஞ்சாவூரில்- திருக்கடையூர் என்ற கோவில் இருந்தது.அங்கு அபிராமி பட்டர் என்பவர் அந்தக்கோவிலில் உதவியாளராக இருந்தார். அவருக்கு அந்த கோவில் தெய்வமான அபிராமிஅம்மன் மீது அளவற்ற பக்தி.
அது எந்த அளவுக்கு எனப்பார்த்தால், இன்றைய குணா சினிமாவில் எப்படி கமல் அந்த சேட் பெண்மீது ஆழமான காதலாக இருப்பாரோ அது போல !!!
ஒரு நாள். . .
அப்பகுதியை ஆண்ட மன்னன் அந்தக்கோவிலுக்கு வந்தான்.அன்று அமாவாசை.
அந்த மன்னன் யதார்த்தமாக அபிராமி பட்டரிடம் இன்று என்ன தேதி(திதி)? என்று கேட்டான்.அவர் எப்போதும் அன்னை அபிராமியம்மன் நினைவாகவே இருந்ததால் அன்று அமாவாசை என்பதை மறந்து பவுர்ணமி எனக்கூறிவிட்டார்.
மன்னன் தன்னுடன் வந்த காவலர்களிடம் இன்று இரவு முழுநிலவு வந்தால் நீங்கள் அரண்மனைக்கு வந்துவிடுங்கள்.அப்படி முழுநிலவு வராவிட்டால் இவரை சிரச்சேதம்(தலையை வெட்டிவிடுதல்) செய்துவிடுங்கள் என உத்தரவிட்டுப்போய்விட்டார்.

மன்னன் போனதும் அருகில் இருந்தவர்கள் அபிராமிபட்டரிடம் நிகழ்ந்த சம்பவத்தை உணரவைத்தனர்.அவருக்கு உயிர்பயம் வந்துவிட்டது.
அபிராமி பட்டர் அபிராமி அம்மனைச் சரணைடந்து அவளை நினைத்து கண்ணீர் பெருகப் பாடினார். இரவு வந்தது. பௌர்ணமி வந்தது. மன்னன் அலறியடித்து ஓடி வந்து அபிராமிபட்டரிடம் மன்னிப்புக் கேட்டான்.அபிராமி பட்டர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார். அபிராமி அம்மனுக்கு நன்றி கூறினார்.
இன்றைய நவீன வானியல் ஆய்வுகள் கூறுவது என்னவென்றால்,25,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக மூன்று பவுர்ணமிகள் வரும்.அதாவது, பவுர்ணமி-அமாவாசை-பவுர்ணமி என்ற சுழற்சி ஒருமுறை மட்டும் உடையும்.
இதன்மூலம் நமது தமிழ் தமிழர் பண்பாட்டின் தொன்மை அதாங்க பழமையை அறியலாம்.

ஏன் வடக்கு நோக்கி தூங்க்கூடாது?


ஏன் வடக்கு நோக்கி தலைவைத்துப்படுக்கக்கூடாது?

பூமியின் காந்தப்புலம் மிகவும் சக்தி வாய்ந்தது. 24 மணி நேரமும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி காந்த அலைகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொரு மனித உடலிலும் சிறு அளவில் காந்த புலம் உள்ளது.நாம் தினமும் வடக்கு நோக்கித் தூங்கும்போது மனித காந்த புலத்திற்கும் பூமியின் காந்தபுலத்திற்கும் மோதல் உருவாகி மனித ஆரோக்கியத்தை சீர்குலைக்கலாம் என நமது முன்னோர்கள் நம்பினர்.
இன்றைய மருத்துவத்துறை ஏராளமான ஆய்வுகள் செய்து சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.
அதன்படி, நீண்ட நாட்களாக ஒரு மனிதன் வடக்கு நோக்கி தூங்கினால் அவனுக்கு ஹிஸ்டீரியா-மன நோய் பாதிப்பு நிச்சயம் ஏற்படும் என கண்டறிந்துள்ளனர்.

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன? சிறு எளிய விளக்கம்

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?

14 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை அல்லது பவுர்ணமி வருகிறது.இந்த இருநாட்களிலும் சூரியனும் சந்திரனும் முழுவலிமையடைகின்றன.இந்து ஜோதிடப்படி சூரியன் ஆத்மாக்காரகன் எனவும் சந்திரன் மனக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறது.

பூமியில் பிறக்கும் மனிதன் 14 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிறக்கிறான்.அது வளர்பிறை பிரதமை என வைத்துக்கொள்வோம்.அவனது பிறந்த நட்சத்திரம் அசுவினி என வைத்துக்கொள்வோம்.அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி அவனது பட்சி ஆந்தை வருகிறது.
ஆந்தையின் குணம் என்ன?
அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே இரவில்தான் கிடைக்கும்.தனது பட்சி ஆந்தை என அவன் அறிந்தால்,அவன் ஒருவரிடம் உதவி கேட்டுச்செல்ல வேண்டிய நேரம் இரவு மட்டுமே! பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது.
அவனுக்குஒரு மாதத்தில் (தமிழ்மாதத்தில்) வளர்பிறைகாலமான 14 நாட்களில் காரியங்கள் வெற்றியடையும்.அந்த 14 நாளில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் அவனது பறவை(பட்சி)யான ஆந்தைக்கு மரணபட்சிநாளாக அமைகிறது.அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாரியமும் படுதோல்வியடையும்.மீதி 13 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் 1 1/2 மணி நேரம் அரசபட்சி நேரமாகிறது.அந்த நேரத்தில் அவன் ஒரு சர்வாதிகாரியை சந்தித்தாலும் காரிய வெற்றி உண்டாகிறது.
இந்த பஞ்சபட்சி நேரத்தைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.அவர்களது அரசபட்சிநேரம் பல சமயங்களில் ராகுகாலத்திலோ, எமகண்டத்திலோ யதார்த்தமாக அமைந்துவிடுகிறது.இதைத் தான் அந்த அரசியல்வாதிகள் “நான் ராகு காலத்தில் மனுத்தாக்கல் செய்தேன்” என பகுத்தறிவு பகலவன்கள் போல பீற்றிக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை பகுதியில் வாழும் ஜோதிடர்கள் பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நிபுணர்களாக இருக்கிறார்கள்.

வெள்ளைக்காரர்களை ஆச்சரியப்படவைக்கும் இந்து நுண்கலைகள்


வெள்ளைக்காரர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்து நுண்கலைகள்

உங்களுக்குத் தெரியுமா? உலகில் பல நாடுகள் நமது இந்துயாவின் புராதனம்,பழமையான கலைகள்,அவற்றில் புதைந்துள்ள அதிமேதாவித்தனம் கண்டு மிரண்டுபோயிருக்கின்றன.அவை எவையென்றால்,ஜோதிடம்,வாஸ்து,பஞ்சபட்சி சாஸ்திரம்,சாமுத்ரிகா லட்சணம்,மாந்திரீகம்,சகுனம் என்ற நிமித்திகம் இவைகள்தான்.இவற்றில் ஏராளமான நன்மைகள் (மனிதகுலத்திற்குத் தேவையானவை) நிரம்பியுள்ளன.இதனால இவற்றைப்பற்றி ஆராய சுவிடசர்லாந்தில் வேதிக் ஸயன்ஸ் என்ற பெயரில் 20 ஐரோப்பியநாடுகள் ஒன்று சேர்ந்து ஆண்டுக்கு 100 கோடி யூரோக்கள் கொடுத்து இக்கலைகளை ஆராய்ந்து வருகின்றன.கி.பி.1700 முதல் இன்று வரை ஜெர்மனி,இங்கிலாந்து,அமெரிக்கா,சுவிட்சர்லாந்து நாடுகள் இவற்றை ஆராய்ந்து கொண்டே இருக்கின்றன.நாம் சுதந்திரம் அடைவதற்கு சில காலம் முன்பு,தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள சரபோஜி நூலகத்திலிருந்து சில லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகளை இங்கிலாந்து தனி கப்பலில் தனது நாட்டிற்குக் கொண்டுசென்றது.
சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களை(இக்காலத்தில் புரபசர்) இங்கிருந்து இங்கிலாந்திற்கு நிரந்தரக் குடியுரிமை கொடுத்து அழைத்துச் சென்றுவிட்டனர்.
அந்த ஓலைச்சுவடிகளில் இருப்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வேறொரு நிபுணர்குழு மூலமாக மொழிபெயர்ப்பை சரிசெய்கின்றனர்.துல்லியமாக மொழி பெயர்த்திருந்தால் மூலப்பிரதியான ஓலைச்சுவடியை எரித்துவிடுகின்றனர்.இதுதான் இன்றுவரை நடைபெறுகிறது.
இப்படி நமது அறிவுச்செல்வங்களை இங்கிலாந்து களவாடி உருவாக்கப்பட்டவையே எண்ஜோதிடம் எனப்படும் நியூமராலஜி, ரேடாரில் சிக்காத விமானம் மற்றும் பல.

ஒரு மனிதன் பிறந்த நேரத்தில்-பிறக்கும் இடத்தைப் பொருத்து அவனை நவக்கிரகங்கள் ஆட்சி செலுத்துகின்றன.மனிதனுக்கும் நவக்கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை விவரிப்பது ஜோதிடம்.
ஒருவனது பிறந்த ஜாதகத்தில் எந்தக்கிரகம் வலிமையாக இருக்கிறதோ அதைக்கண்டறிந்து அந்த மனிதன் சில குறிப்பிட்ட கிழமை,நவரத்தினக்கல்,நிறமுள்ள ஆடைகளைப் பயன்படுத்தி வாழ்வில் ஜெயிக்க வழிகாட்டுவது தந்திரா சாஸ்திரம்.
ஒருவன்/ள் பிறந்திருப்பது வளர்பிறை அல்லது தேய்பிறை என்பதைக் கண்டறிந்து, 15 நாட்களில் குறிப்பிட்ட நேரத்தைப்பயன்படுத்தி ஜெயிக்க உதவும் சூட்சுமக் கலையே பஞ்சபட்சி சாஸ்திரம்!!!
ஒருவன் பிறந்த நட்சத்திரத்தைக்கண்டறிந்து அவனுக்கு குறிப்பிட்ட நட்சத்திரம் நிற்கும் நாளில் தியானம் சொல்லிக்கொடுத்து அவனது பாவங்களை அழித்து அவனை வாழ்வின் எந்த துறையிலும் அல்லது அவன் விரும்பும் துறையில் ஜெயிக்கவைக்க வழிகாட்டுவது சரக்கலை!!!
சரக்கலைக்கு மிஞ்சியகலை இவ்வுலகில் கிடையாது.
இக்கலைகளில் முழுத்திறமைவாய்ந்தவர்களே ரோமரிஷியும், அகத்தியரும்.,காகபுசுண்டரும்.
அதனால்தான் இவர்கள் பல லட்சம் ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்துவருகிறார்கள்.

உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்

 • உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்

  உங்கள் சிந்தனைக்கு சில நிமிடங்கள்:ஆப்பிள் ஏன் கீழ் நோக்கி விழவேண்டும்? என ஒரு இளைஞன் சிந்தித்தான்.புவியீர்ப்பு விசையின் முக்கியத்துவம் இந்த அறிவியல் உலகம் அறிந்து கொண்டது.
  “சுமார் 20,000 ஆண்டுகள் கொண்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது நமது நாடு.மிகவும் திறமையான வீரர்கள், மிகவும் நுண்ணறிவுடைய அரசியல் சாணக்கியர்கள்,அனுபவம் நிறைந்த ஆட்சியாளர்கள்(மன்னர்கள்),பஞ்சமே இல்லாத நாடு என எல்லாத்துறைகளிலும் உச்சத்தைத் தொட்ட ஒரேநாடு நமது நாடு மட்டுமே!
  இருந்த போதிலும் ஏன் 18 கோடி மக்கள் வெறும் 300 ஆங்கிலேயர்களுக்கு அடிமையானோம்?”- இப்படி ஒருவர் சிந்தித்தார்.(நமது நாட்டின் பெருமைகளை ஓரளவு அறிய கார்டூனிஸ்ட் மதன் எழுதி,ஆனந்தவிகடன் குழுமம் வெளியிட்டுள்ள ‘வந்தார்கள்,வென்றார்கள்’என்ற புத்தகத்தைப்படிக்கவும்)அவர் கி.பி.1920-களில் எம்.பி.பி.எஸ்., படித்து முடித்தவர்.நாக்பூரில் பிறந்தவர்.இவரது சிந்தனையின் விளைவாக பிறந்ததே ஒரு மாபெரும் இயக்கம் !!!
  அது தான் ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம் !!!

 • ஒரு மகாராஜா இருந்தார்.நமது நாட்டில் கோவாப்பகுதியில்.அவர் அப்பகுதி ஆங்கிலேயத்தளபதிக்கு நண்பராக இருந்தார்.இருவரும் ஒருநாள் கோவா கடலோரம் அமர்ந்திருந்தனர்.நமது மகாராஜா அந்த ஆங்கிலேயத்தளபதியிடம் கேட்டார்.
  “ஏன் தளபதி? உங்களுக்கு எங்கள் பண்பாடு தெரியாது.எங்கள் மொழி தெரியாது.எங்கள் சுபாவம் தெரியாது.இருந்து எப்படி 6000 மைல்கள் கடந்துவந்து எங்கள் நாட்டைக்
  கைப்பற்றினீர்கள்?”
  ஆங்கிலேயத்தளபதி புன்னகைத்தான்.பிறகு கூறினான்.
  “உங்கள் படைவீரர்கள் 10 பேரை கடலை நோக்கி அணிவகுத்து நிற்கச்சொல்லுங்கள்”என்றான்.அதே போல ஆங்கிலேயத்தளபதியும் தனது ஆங்கிலேயப்படைவீரர்கள் 10 பேரை நமது இந்துவீரர்களுக்குச் சமமாக கடலை நோக்கி நிற்க வைத்தான்.இரு அணியையும் கடலைநோக்கி ராணுவ மிடுக்குடன் ந்டக்க உத்தரவிட்டான்.
  நமது வீரர்களில் முதல் வீரன் தனதுகணுக்காலில் கடல் அலைபட்டதும் மேலே நகரவில்லை.ஆனால்,ஆங்கிலேய வீரர்கள் கழுத்தளவுவரை(அதாவது தனது ஆங்கிலேயத்தளபதி ஸ்டாப் மார்ச் எனக்கூறும்வரை கவாத்து போய்க்கொண்டே)இருந்தனர்.
  பிறகு சொன்னான் அந்த ஆங்கிலேயத்தளபதி,
  ‘இதுதான் காரணம்” என்று.
  ஒரு முட்டாள் தனது தலைவனாக இருந்தாலும் அவனது உத்தரவுக்குக் கீழ்ப்படிவது ஆங்கிலேயனது குணம்.
  ஒரு சர்வ வல்லமைதாங்கிய மகாராஜா சொன்னாலும் நமக்கு நம் உயிர் வெல்லக்கட்டி.

வாழ்க்கையில் சுயபரிசோதனை செய்வது எப்படி?

சுய பரிசோதனை என்றால் என்ன?

ஒரு மனோதத்துவ அறிஞர் சொன்னது:”ஒருவன் சரியான பாதையில் செல்ல , அடிக்கடி தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.அதற்கு சில கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொள்வது அவசியம்”.
1.தொழிலிலோ, குடும்ப முன்னேற்றத்திலோ நாம் நிர்ணயித்த இலக்கை முழுமையாக எட்ட முடிந்ததா?
2.நம்மால் சகவாழ்வில் மற்றவர்களோடு ஒத்துப்போக முடிந்ததா?
3.நமது தொழிலின் முன்னேற்றம், தரம் எப்படி இருந்தது?
4.நமக்கு மற்றவர்கள் போதிய ஒத்துழைப்பு தந்தார்களா?
5.மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றுவதில் ஏதேனும் இடர்ப்பாடு இருந்ததா? அப்படியென்றால் அதற்கு யார் காரணம்?
6.நம்மிடம் யாராவது பொறுப்பை ஒப்படைத்திருந்தால் அவர்கள் திருப்தியடையும்படி நடந்துகொண்டோமா?
7.அதேபோல் நாம் பொறுப்பை ஒப்படைத்தவர்களும் சரியாக நடந்துகொண்டார்களா?
8.யாரிடமாவது கடுமையாக நடந்துகொள்ளும்படி இருந்ததா? ஏன்? யார் காரணம்?

அசிங்கமான விளம்பரங்களை நிறுத்த

டி.வி., தெரு விளம்பரங்களில் முகம் சுளிக்க வைக்கும் விளம்பரங்கள் வந்தால் அவற்றை நிறுத்தவும்,அதைப் பற்றிய முழு விபரங்களையும்,எதிர்ப்புகளையும்,எதிர்ப்புக்கான காரணங்களையும் தபால் கார்டு அல்லது இன்லேண்டு லட்டரில் எழுதி அனுப்பினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.CONSUMER EDUCATION AND SOCIETY
‘SURAKSHA SANKOOL’
THALTEJ,SARKHEJ-GANDHI NAGAR HIGH WAY,
AHEMEDABAD-380054.
PH; 079-7489945,46.
FAX:079-7489947
e-mail:cerc@wilnetonline.net

உங்கள் அமெரிக்க மாப்பிள்ளை எப்படிப்பட்டவர்?


உங்கள் மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளை பார்த்திருக்கிறீர்களா?
அவர் எப்படிப்பட்டவர்? அவரது சுபாவம், குணம், பழக்கவழக்கம் பற்றிய முழு விபரம் தெரிய வேண்டுமா?
அல்லது உங்கள் மகள் அமெரிக்காவில் தனது கணவனுடன் எப்படி வாழ்கிறாள்? நிஜமாகவே நிம்மதியாக வாழ்கிறாளா? என்பதை அறிய $300 கட்டணம்!!! தொடர்புக்கு:kavithar@aol.com

2 நிமிடத்தில் மூட்டு வலி குணமாக


உங்களது மூட்டுவலி,முதுகுவலி 2 நிமிடத்தில் குணமடைய வேண்டுமா?

அனுபவமிக்க வர்மக்கலை ஆசான் & வர்ம வைத்தியர் திரு.சுப்பிரமணியம் , கோவை அவர்களைத் தொடர்புகொள்ளவும்.பல லட்சம் மக்கள் முன்பாக நடக்க சிரமப்பட்டவர்களை 2 நிமிட வர்ம மசாஜால் நடக்கவைத்தவர்.ஆதாரம் முன்னாள் திரைப்பட இயக்குனர் விசு அவர்களின் அரட்டை அரங்கம்.,ஜெயா டிவி.3.4.2009
வர்ம வைத்தியர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் அலைபேசி எண்:0-99 94 72 41 23.

அக்கால சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்


அக்கால சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

நமது இந்துமதத்தின் அடிப்படை ஆதாரங்கள்: பசு, விவசாயம், பெண்.நமது நாட்டில் 15.8.1947 வரை இவைப்போற்றப்பட்டன.
மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்தன.வளர்ந்தன.சுயச்சார்புள்ள கிராமங்கள் இருந்தன.15.8.1947 வரை 6 லட்சம் கிராமங்கள் இருந்தன.
இன்று,4.5.2009 நமது நாடு முழுவதும் 3 1/2 லட்சம் கிராமங்களே உள்ளன.நகர்மயமாதலால் ஏராளமான பிரச்னைகள்.பொறுப்பற்ற பசியை சிறிதும் அறியாத நமது அரசியல்தலைவர்களால் விவசாயம் செத்துக்கொண்டிருக்கிறது.
அக்காலத்தில் கோவில்களைக்கொண்டே குடியிருப்புகள் உருவாகின.கடவுள் பக்தியிருந்ததால் பொய் சொல்லுதல், கொலை செய்தல்,திருட்டு,பிச்சையெடுத்தல் சிறிதும் இல்லாமலிருந்தன. உதாரணமாக, மும்பாதேவியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு மும்பை நகரம் உருவானது.டாக்கீஸ்வரியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு டாக்கா(இன்றைய பங்களாதேஷின் தலைநகரம்) பிறந்தது.காமாட்சியம்மனின் அருளால் காஞ்சிபுரம் தோன்றியது.கி.பி.1900 வரை 1800 கோவில்கள் காஞ்சிபுரம் நகர்முழுக்க இருந்தது.இந்த கோவில் நகரங்கள் சிறப்புப் பொருளாதார மையங்களாக செயல்பட்டு வந்தன.யாரும் யாருக்கும் கெடுதல் செய்யாமல் எந்த சிறிய சச்சரவு கூட இல்லாமல் நமது பாரதம் வளர்ந்தது.கலைகள்,தொழில்நுட்பம் வளர்ந்தன.
கி.பி.1940 வரையிலும் நமது பாரதம் நாடுமுழுக்க உணவு,தண்ணீர்,கல்வி இம்மூன்றும் விற்பனை செய்வது பெரும்பாவம் என கருதப்பட்டது.இன்றோ இவைதான் கொழுத்த லாபம் தரும் தொழில்கள்!!!
ஒரு போதும் இவை இனி இலவசமாக மாறாது.மேலும் விபரமறிய http://www.swadeshitn.org/ என்ற இணையதளம் செல்லவும்.
.

அக்கால பிரம்மாஸ்திரமே இக்கால அணுகுண்டு
அக்கால பிரம்மாஸ்திரமே இக்கால அணுகுண்டு

இந்த பூமியில் உள்ள அனைத்து மனித குல முன்னேற்றங்களும் நமது இந்து தர்மத்திலிருந்தே பிறந்தன என்பதற்கு பல்லாயிரம் ஆதாரங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஓலைச்சுவடிகளாகப்பதிவு செய்யப்பட்டு இருந்தன.அவற்றை நாம் சுதந்திரம் வாங்கும் முன்பே இங்கிலாந்து நாட்டினர் ஒரு கப்பல் முழுக்க
இன்றைய தஞ்சை சரபோஜி நூலகத்திலிருந்து கொண்டு போய்விட்டனர். இங்கிலாந்தும் ஜெர்மனியும் இவற்றை இன்று வரை ஆராய்ந்து கொண்டே இருக்கின்றன.
குந்தம் குன்னாச்சாரி என்பவர் பிரம்மாஸ்திரம் பற்றி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூலை ஆங்கிலத்தில் 1920கள் வாக்கில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்த புத்தகமே இன்றைய அணுகுண்டு கண்டுபிடிக்கக்காரணமாகி விட்டது.ஆங்கில மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சிறு தவறால்,அணுகுண்டு இவ்வளவு கோரவடிவம் எடுத்துவிட்டது.
அக்கால பிரம்மாஸ்திரம் யாரை நோக்கி ஏவப்படுகிறதோ அவரை மட்டும் சாம்பலாக்கும்.அருகில் உள்ள மனிதன், தாவரங்கள்,பொருட்களை எதுவும் எந்த பாதிப்பும் செய்யாது.
இக்கால அணுகுண்டு ஏவப்பட்டது வானில் ஒரு கோடி சூரியன் அளவு பிரகாசம் தரும்.பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் இதைப் பார்ப்பவர்களுக்கு பார்வை பறிபோகும்.மேலும் விபரமறிய மகாபாரதம் படியுங்கள்.அல்லது ராமாயணம் படியுங்கள்.ராவணன் மகன் இந்திரஜித் ஆஞ்சனேயர் மீது பிரம்மாஸ்திரம் ஏவுவான்.அப்போது என்ன நடக்கும் என்பதை விரிவான இராமாயணம் படித்துப்பார்க்கவும்.அணுகுண்டின் சக்தியை அறிய இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் எழுச்சி என்ற பாகத்தில் வந்துள்ள புத்தகங்களைப்படித்துப் பாருங்கள்.

செர்னோபில் அணுமின்நிலைய விபத்தும் இந்துமத உதவியும்


செர்னொபில் அணுமின்நிலைய விபத்தும் இந்துமதத் தீர்வும்

நமது பழைய பங்காளி சோவியத் ருஷ்யாவில் 1990 வாக்கில் செர்நோபில் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு டாங்க் வெடித்துச் சிதறி உடனே பல ஆயிரம் பேர்கள் இறந்தனர்.
இச்சம்பவம் நடந்த உடனே ரஷ்ய விமானங்கள் நமது நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் அடிக்கடி பறந்தன. அவை நமது நாட்டுக்கு வந்து டன் கணக்கில் உப்புகலந்த பசுஞ்சாணத்தை அள்ளிக்கொண்டு போய் செர்நோபில் பகுதி முழுவதும் வீசின. இதனால் அணுக்கதிர் வீச்சு பெருமளவு பரவாமல் தடுக்கப்பட்டது.
இப்போது சொல்லுங்கள்.பசுக்களையும் நமது கால்நடைகளையும் நாம் பெருமளவு வளர்ப்பது அவசியமா? இல்லை மாட்டுஇறைச்சியாக்கி வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி டாலர்கள் சம்பாதித்தால் மட்டும் போதுமா?

விஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்-ஆதாரம் 1


விஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்:ஆதாரம் 1
இன்றைய நவீன யுகத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுக்க பரப்பப்பட்டுவரும் எந்தவொரு நவீன தொழில்நுட்பமும் நன்மைகளைத் தருவதைவிட தீமைகளையே அதிகம் தருகிறது.உதாரணமாக, செல்போன் தொழில்நுட்பம்,இணையம் அதாங்க இண்டர்நெட்,எம்.எல்.எம் எனப்படும் பல்நிலை வர்த்தகம், கோலா எனப்படும் குளிர்பானங்கள் இந்த நவீன விஞ்ஞான வளர்ச்சியின் பக்கவிளைவுகளை சரிசெய்ய இந்து தர்மத்தால் மட்டுமே முடியும்.அதற்குரிய ஆதாரங்களை மேல்நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து “உலக அமைதிக்கும், மனித குல வளர்ச்சிக்கும்,போர்-இனவெறி இல்லாத உலகிற்கும் இந்துமதம் மட்டுமே காரணமாக இருக்கிறது.எதிர்காலத்தில் இந்துமதம் உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியம் தேவைப்படும்” என கூறிவிட்டனர்.
இதற்கு ஆதாரமாக இரு உதாரணச்சம்பவங்களைப்பார்ப்போம்:
போபால் விஷவாயு விபத்து:அமெரிக்காவின் வேதிப்பொருள் உற்பத்தி நிறுவனமான யூனியன் கார்பைடு தனது தொழிற்சாலையை நமது இந்துயாவில் மத்தியபிரதேச மாநிலத்தலைநகரான போபாலில் 1980 வாக்கில் நிறுவியது.உலகளவில் ஆபத்தான வேதித்தொழிற்சாலைகள் பெருநகரங்களில்நிறுவக்கூடாது என்பது சட்டம்.இந்த யூனியன் கார்பைடு ஒரு மாநிலத்தலைநகரத்திலேயே நிறுவப்பட்டது.
04.12.1984யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் கழிவுவாயு கலன்கள் வெடித்துச்சிதறியது.விஷவாயு போபால் நகரம் முழுவதும் பரவ உடனே 12,000 பேர்கள் மரணம்.இன்று 2009 !!! 25 ஆண்டுகள் ஆன பின்னரும் அந்த விஷவாயுப்பரவலால் கோரமான குழந்தைகள் பிறந்து கொண்டேஇருக்கின்றன. அந்த அமெரிக்க பிராடு கம்பெனி யூனியன் கார்பைடு முதலாளி வேறுஒரு கம்பெனிக்கு தனது யூனியன் கார்பைடை விற்றுவிட்டான்.இன்னும் பாதிக்கப்பட்ட நமது இந்திய சகோதர குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.என்ன கொடுமை?
சை போகட்டும்.நமது விஷயத்திற்கு வருவோம்.போபாலில் விஷவாயு பரவிய அந்த 4.12.1984 அன்று ஒரே ஒரு போபால் தெருவில் மட்டும் வாழும் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் உண்டாகவில்லை.ஏன்? எப்படி?
அந்தத்தெருவில் வாழ்ந்து வரும் ஒருவர் 1972 முதல் 12 வருடங்களாக அக்னிஹோத்திரம் என்ற சிறு அளவிலான ஹோமம் தினமும் வளர்த்து வந்திருந்தார்.காலையில் 30 நிமிடங்களும் மாலையில் 30 நிமிடங்களும் சூரிய உதயமாகும் நேரங்களிலும்,சூரிய அஸ்தமானமாகும் நேரங்களிலும் அக்னி ஹோத்திரம் செய்துவந்தார்.விஷவாயு பரவ ஆரம்பித்ததும் தனதுவீட்டில் அக்னிஹோத்திரம் செய்யத்துவங்கினார். இதனால் அவரது தெருமக்கள் சிறு உடல்பாதிப்பு இல்லாமல் இன்று வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.இந்த சம்பவம் அன்றைய தினசரிகளிலும் ,தி ஹிந்து, இண்டியன் எக்ஸ்பிரசிலும் வெளிவந்தது.

அதன்பிறகு உலக அளவில் அக்னிஹோத்ரம் பற்றி ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டன.காற்றில் ஏற்படும் கடுமையான நச்சை முறிக்கும் தன்மை அக்னி ஹோத்திரத்திற்கு உண்டு என அறியப்பட்டது.வீட்டில் தினமும் அக்னி ஹோத்ரம் செய்து வந்தால் உடல் உபாதைகள் நீங்குகின்றன.மாணவர்கள் கல்வியில் சாதனைபடைக்கின்றனர்.பெண்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றனர்.மன நோயாளிகள் விரைவில் குணமடைகின்றனர். எந்த நோயாக இருந்தாலும் விரைவில் மனிதனைவிட்டு நீங்குகின்றன.
இன்று நாம் ஒவ்வொருவரும் நமது வீடுகளில் அக்னிஹோத்ரம் செய்யமுடியும்.விபரமறிய அருகில் உள்ள கதர்கடைகள், காதிபவன்கள்,காந்தியக்கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகள்,இந்துத்துவ அமைப்புகள்,இந்து மத சங்கங்களைத்தொடர்பு கொள்ளவும்.
http://www.hinduveda.org/ என்ற இணைய தளத்தைத் தொடர்புகொள்ளவும்.அல்லது கூகுளில் அக்னிஹோத்ரம் என்ற வார்த்தையைக் கொடுத்துத் தேடவும்.

ருத்ராட்சத்தின் மகிமைகள்


ருத்ராட்சம்:இதுவரை நான் அறிந்தவை

சிவபெருமானின் அம்சமாக ருத்ராட்சம் இருக்கிறது.
இவை பெரும்பாலும் நேபாளத்தில் கிடைக்கிறது.
ஒருமுகம் கொண்ட ருத்ராட்சம் உண்டு.இதை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குபவர்கள் உண்டு.
ஒரு முகம் கொண்ட ருத்ராட்சத்தை குருமுகமாக மட்டுமே அணிவது அவசியம்.
நேபாளம் தவிர அடர்ந்த மலைப்பகுதிகள் முழுவதும் (இந்தியாவெங்கும்) விளைகின்றன.இது தன்னைச்சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளைக் கொண்டிருக்கிறது.எனவே, இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.

ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் அதைச் சுற்றி உண்டாகும் ஒளி சக்திவட்டம் தூய்மையடைகிறது.இந்த ஒளி அவரவர் உடல்நிலை மற்றும் மன நிலையைப் பொறுத்து மாறும்.

நீங்கள் புது இடத்திற்குச் செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது.ஆனால்,ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும்.சக்திவட்டம் நம்மை கவசம் போல பாதுகாக்கும்.
32 முக ருத்ராட்சமும் உண்டு.இதுவும் அபூர்வமான ருத்ராட்சமே!
ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும்.ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம்.இது ரத்த அழுத்தத்தை சீராக்கி,மன அமைதியையும்,சுறுசுறுப்பையும் தரும்.

ஆறு முகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம்.
நன்றி:ஆன்மீகமலர்,பக்கம் 2. தினமலர் 25.4.2009

சில சிவ மந்திரங்கள்


சில பயனுள்ள சிவ மந்திரங்கள்
மனதைத் திடப்படுத்துவது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும்.உரு(எண்ணிக்கை) ஏற திரு ஏறும் என திருமூலர் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்கும் நன்மையைப் பற்றிக் கூறுகிறார்.திரு என்றால் பிரகாசமான என்று அர்த்தம்.எல்லோரையும் கவரும் காந்தசக்தி என்றும் கூறலாம்.வாழ்க வளமுடன் என்பதும் ஒரு சக்திவாய்ந்த மந்திரமே!
நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு;
அதை விட திருமந்திரம்,பெரிய புராணம்,கந்த சஷ்டிகவசம்,கந்தரலங்காரம்,திருப்பாவை முதலான தமிழ் ஆன்மீகப்படைப்புகளுக்கு நாம் அவற்றை பாடும் போதும் மனதிற்குள் ஜபிக்கும் போதும் சக்தி அதிகம்.
இதற்குச் சம்மான சக்தி கொண்டவையே சமஸ்கிருத மந்திரங்கள்.அவற்றில் பெரும்பாலான மந்திரங்களுக்கு அர்த்தம் கிடையாது.ஆனால், அவற்றை முறையாக உச்சரிக்கும்போது அது மனிதநலத்தை அதிகப்படுத்துகிறது.இது தொடர்பாக ஒலியியல் விஞ்ஞானம் என்ற புதிய அறிவியல்துறை உருவாக்கப்பட்டு இந்துக்களின் வேதமந்திரங்களுக்கு மனித கஷ்டங்களை நீக்கும் அல்லது மாற்றும் வலிமை உண்டு என கண்டறியப்பட்டுவிட்டது.மேலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.இத்தகு ஆராய்ச்சிகள் ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,இங்கிலாந்து நாடுகளில் நடைபெறுகின்றன.வேதிக் ரிசர்ச் ரிசல்ட்ஸ் என்ற பெயரில் கூகுளில் தேடிப்பார்க்கவும்.
சில சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும்.மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.
மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி
சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி

திருக்கையிலாயமலையை தரிசிக்க...


திருக்கைலாயமலை பயணம் திருக்காட்சியை இலவசமாக திரைப்படமாக பார்க்க:
திரு.கயிலை மணி மனோகர் என்பவரைத் தொடர்புகொள்ளவும்.
இவரிடம் திருக்கையிலாயமலை பயணம் பற்றி திரைப்படத்தொகுப்பு வைத்திருக்கிறார்.இவர் நேரில் வந்து திரையிடுவார்.இவர் வருவதற்கு ஒரே நிபந்தனை: திரையிடப்படும் இடம் சிவாலயமாக இருக்க வேண்டும். பேருந்துக்கட்டணம் நீங்கள் தர வேண்டும். அவ்வளவுதான்.இந்தச் செயலை அவர் ஒரு புண்ணியகாரியமாக நினைக்கிறார்.
தொடர்புக்கு;போன்:0424-2223580,2216019,2253207
0-98430-98898

புத்தகம் வெளியிடுவது எப்படி?

புத்தகம் வெளியிடுவது எப்படி?
நீங்கள் எந்தத்துறையில் வல்லுநராக இருந்தாலும் அந்தத் துறையில் உங்களது அனுபவம் எழுத்துக்களாக பதிவு செய்யப்பட்டால் பல தலைமுறைக்கு உங்களது அனுபவம் ஏராளமானவர்களுக்கு உதவும்.அப்படி புத்தகமாக எழுதி வெளியிட மிகச் சுலபமான வழிமுறைகள் இந்தியாவில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஒரு புத்தகம் எழுதி வெளியிட்ட 3 மாதங்களுக்குள் பின்வரும் முகவரிகளுக்கு உங்கள் புத்தகத்தின் பிரதியை அனுப்பிவைக்க வேண்டும். பதிப்பகம் , அரசின் அனுமதி பெறாமலேயே யாரும் புத்தகம் எழுதி வெளியிடலாம்.
1.பதிவாளர்,சென்னை நூலகத்துறை,சென்னை-2 பிரதிகள்
2.கன்னிமரா நூலகம், சென்னை-1 பிரதி
3.பம்பாய் மத்திய நூலகம், பம்பாய்-1 பிரதி
4.தேசிய நூலகம்,கொல்கத்தா-1பிரதி
5.மத்திய நூலகம்,அண்ணா சாலை,சென்னை-1பிரதி
6.தேசிய நூலகம், புது டெல்லி-1 பிரதி

சனி தோஷம் விலக சுலப பரிகாரம்

சனி தோஷம் விலக ஒரு சுலப பரிகாரம்

ஒரு வெள்ளிக்கிழமையன்று 8 வெற்றிலை, 8 பாக்கு உடன் சிறிது எள் கலந்து தலைமாட்டில் வைத்து படுத்து தூங்கவும்.மறுநாள் காலையில் அதிலிருந்து சிறிது எள் எடுத்து அருகில் உள்ள கோவிலில் தீபம் ஏற்றவும். மீதி எள்ளை எடுத்து அதைக்கொண்டு சாதம் சமைக்கவும்(அரிசி கலந்துதான்).அப்படி சமைத்த சாதத்தை காக்கைக்கு வைத்து,மீதியை மீதி சாதத்தைச் சாப்பிட்டால் சனி தோஷம் விலகும்..சொன்னது ஜெயா டிவியில் 31.5.2003 அன்று!!!

நாத்திகம் எந்த அளவிற்கு உண்மை?


நாத்திகம் எந்த அளவுக்கு உண்மை?
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இந்த கேள்வி வெகுகாலமாக இருந்து வருகிறது.பதில் பலரிடம் இல்லை என நாத்திகவாதிகள் நம்புகிறார்கள்.இதனால் பல ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள் நாத்திகவாதிகளான கதைகள் ஏராளமாக 1970களில் உருவாகின.
கிழக்குக் கடற்கரைச் சாலை என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் பேசுவது- பேசும் கருத்து நிஜம். கடவுள் இருப்பது 101 சதவிகிதம் நிஜம்.எப்படி என நிருபி என கேட்கும் நாத்திகவாதிகளுக்கு சில கேள்விகள். . .
இதோ இந்த வலைப்பூ கட்டுரையை நீங்கள் வாசிக்கிறீர்கள்.இந்த இடத்தில்(தமிழ்நாடு அல்லது இந்தியா எனில்) டாடா இண்டிகாம்,ரிலையன்ஸ்,ஓடபோன்,ஏர்செல்,ஏர்டெல் மற்றும் புதிதாக வரவுள்ள செல்போன் சேவை நிறுவனங்களின் செல்போன் அலைகள் பரவியிருப்பது நிஜம் தானே! அதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் உங்கள் பகுத்தறிவு கடவுளை ஏற்க மறுப்பது ஏன்?
கடவுளை உணர்வுகளால் மட்டுமே உணர முடியும்.

நாத்திகவாதிகளே! உங்களால் எனது கண்ணுக்கு செல்போன் அலைகளைக் காட்ட முடிந்தால் ,என்னால் மட்டும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கடவுளை நேரில் காட்டமுடியும்.
அல்வாவில் இனிப்பு மறைந்திருப்பது போலவும், மிளகாயில் காரம் மறைந்திருப்பது போலவும்,பூமி முழுவதும் காற்று பரவியிருப்பது போலவும் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்.
நீங்கள் உங்கள் வழிகாட்டி ஈ.வே.ராமசாமியின் “நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற புத்தகத்தைப் படித்ததுண்டா?அதில் ராமசாமி அய்யா என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?
எனக்கு வெளிநாட்டுமதங்களைப் பற்றிக் கவலையில்லை.எனது இந்து மதத்தில் கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை முழுமையாக அழிப்பதுதான் எனது லட்சியம்.அதற்காகத்தான் நான் கடவுளையே எதிர்க்கிறேன்.இதன் மூலமாக எனது இந்து மதத்தை நான் சீர்திருத்துகிறேன்.

தீபம் ஏற்றும் முறையும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்


முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும்
2வது வடக்கு நோக்கி ஒரு திரியும்
3வது மேற்கு நோக்கிஇரு திரியும் ஏற்ற வேண்டும்.தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.

குளிர்விக்கும் போது,
முதலில் மேற்கே உள்ள திரிகளையும்
2வது வடக்கே உள்ள திரியையும்
3வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.ஊதி அணைக்கக் கூடாது.அப்படி அணைப்பது சாவுச் சடங்கிற்குச் சமமானது.(நாம் பிறந்த நாள் விழாக்களில் என்ன செய்கிறோம்? என்பதை இப்போது நினைவு கூரவும்.அது மிகவும் தவறான அணுகுமுறை)

மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில்- தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி- எரிய விடுவது நமது வீட்டில் உள்ள
வாஸ்து குற்றங்களை சரி செய்யும்.குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும்.
எனது அனுபவத்தில் பிரிந்தவர்கள்- ஒரு போதும் சேரவே வாய்ப்பு இல்லை என நம்பியிருந்தேன்.அவர்கள் இந்த பரிகாரத்தால் ஒன்றிணைந்தனர்.ஆமாம்!!!பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்ந்தனர்.
தீபம் ஏற்றுங்கள்!!! வளமுடன் வாழுங்கள்!!!