RightClick

தானங்களால் தீரும் பிரச்னைகள்

தானங்களால் ஏற்படும் பலன்கள்
1.ஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.

வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.

2.தேன் தானம்:புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.
3.நெய்தானம்: பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.
4.தீப தானம்:இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.
5.அரிசிதானம்: பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.
6.கம்பளி-பருத்தி தானம்:வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

மகாலட்சுமி பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள்


மகாலட்சுமி பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள்

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றியிருந்தாலும்,தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று(சினிமா- டிவியில் நடித்திருத்தல் அல்லது உலகின் மிகப் பழமையான தொழில் செய்திருத்தல்) பொன் - பொருள் - ஆடைகள் சேர்த்திருந்தாலும்


அவர்கள் இப்பிறவியில் / மறுபிறவிகளில் பாடுபட்டு சேர்த்த பணம்,பொருட்கள்,பூர்வீக சொத்துக்களை பலவழிகளிலும் இழந்து வறுமையில் தவிக்க வேண்டியிருக்கும்.வறுமையால் ஏராளமான துன்பங்ளை அடைவர்.ஆதாரம்:மனு நீதி நூல்,கருட புராணம்.

இத்தகைய பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்.
மகாலட்சுமி பூஜையின் போது நாம் முற்பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி- மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.

பெண்களின் மாங்கல்ய தோஷத்திற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்திவாய்ந்த பரிகாரம் ஆகும்.

எப்படி மகாலட்சுமி பூஜை செய்வது?

அ.வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும்.(இந்த வலைப்பூவின் முகப்பில் உள்ள படம் கூட ஓ.கே!)
ஆ.காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்குகளில் வலம் வரவும்.பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும்.
இ.நெய் தீபம் ஏற்றவும்.
ஈ.மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும்.
உ.நைவேத்தியத்தை பெண்குழந்தைகளுக்கு (பிரசாதமாக) பகிர்ந்து கொடுக்கவும்.
ஊ.இதையே ஆடிமாதம் செய்தால் அதன் பெயர்தான்
வரலட்சுமி விரதம்.
எ.ஆடிமாதம் செய்யும் போது வயதான சுமங்கலிகளை வரவழைத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவது நன்று.கோடீஸ்வரராக ஆவது எப்படி? சில ஆன்மீக வழிகாட்டுதல்கள்

கோடீஸ்வரராவது எப்படி?சில ஆன்மீக யோசனைகள்

1.ஒவ்வொரு தமிழ்மாதத்திலும் ஏதாவது ஒரு திங்கள் கிழமையன்று திருப்பதி சென்று ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும்.அங்கு எப்போது கூட்டமாக இருக்கும் இல்லையா? நீங்கள் திங்கட்கிழமையன்று பெருமாளை தரிசித்துவிட வேண்டும்.இப்படி 12 திங்கட்கிழமைகள் அதாவது ஒருவருடம் வரை ஸ்ரீபாலாஜியை தரிசிக்க வேண்டும்.இப்படி செய்தால் நீங்கள் கோடீஸ்வரராவது உறுதி.
உங்களது பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆவது நிச்சயம் என்பது அனுபவ உண்மை.நீங்களும் ஒருமுறை டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

2.அமிதிஸ்டு என்ற ரத்தினம் அதாங்க ஜெம் நகைக்கடைகளில் கிடைக்கிறது.இந்த ரத்தினத்தின் பூர்வீகம் அமெரிக்கா.இந்தக்கல் இருக்கும் இடத்தில் வீண் செலவுகள் குறையும்.பணம் சேமிக்கும் காந்த அலைகளை இது வெளியிடுகிறது. இது ஒரு காரட் ரூ.100 அல்லது அதைவிடக் குறைவாகத்தான் இருக்கும்.குறைந்தது 10 காரட் வாங்கி பணம் வைக்குமிடத்தில் வைக்கவும்.உங்களது மணிபர்ஸிலும் வைக்கலாம்.நிறைய பணம் மிச்சமாகும்.

3.வீட்டில் மாதம் தோறும் குபேரபூஜை அல்லது மகாலட்சுமி பூஜை செய்து வருக!

இந்து ஜோதிடம்-சில மறைக்கப்பட்ட நிஜங்கள்


சில ஜோதிட உண்மைகள்
ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என ஐரோப்பிய-அமெரிக்க நாட்டு மெடாபிசிக்ஸ் விஞ்ஞானிகள் ஏராளமான ஆய்வுகள் மூலமாக நிரூபித்துவிட்டனர்.

இதனால், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இந்து ஜோதிடத்தை வேத ஜோதிடம் என்ற பெயரில் பட்டப்படிப்பு வைத்துள்ளனர்.
ஜோதிடத்தை பின்பற்றுவோர்,ஜோதிடத்தைத் தொழிலாக பார்ப்போர் அனைவரும் அமெரிக்க வேத ஜோதிட சங்கம் என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டுவருகின்றனர்.
http://www.aava.org/ என்பது இவர்களின் இணைய தளமாகும்.இதே போல இங்கிலாந்தில் http://www.bava.org/ என்ற பெயரில் இயங்கி வருகின்றனர்.

நமது பாரதநாட்டிற்கு சுதந்திரம் தருவதற்கு முன், மவுண்ட்பேட்டன் நாட்டின் பிரபல ஜோதிடர்களை அழைத்தான்.ஒரு குழந்தை பிறந்து 50 வருடங்கள் வரை போராட்டமாகவே வாழவேண்டும் எனில் அந்த குழந்தை எந்த நேரங்களில் பிறக்கும்? என கேட்டான்.அவர்கள் குறிப்பிட்டுத்தந்த நேரங்களில் மிகவும் மோசமான நேரம் 14.8.1947 நள்ளிரவு 11.45 ஆகும்.அந்த நேரத்தில் தான் அவன் நமது நாட்டிற்கு சுதந்திரம் தந்தான்.
(யோசியுங்கள்.ஜோதிடத்தை பொய் எனக்கூறும் மதம் கிறிஸ்தவம்.இங்கிலாந்து ஒரு கிறிஸ்தவ நாடு.நமது நாடு ஜோதிடத்தைக் கண்டுபிடித்த நாடு.நமது மரபுச்செல்வத்தைக் கொண்டே நமது கண்ணைக் குத்திவிட்டான் கிறிஸ்தவன்).

இன்று வரையிலும் அமெரிக்கா தனது சி.ஐ.ஏ.,உளவாளிகளை நமது ஜோதிடத்தின் மூலமாகவே தேர்வு செய்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

நிலாவிற்கு ஆர்ம்ஸ்ட்ராங்,ஆல்ட்ரின் குழுவைத் தேர்ந்தெடுத்தது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா.இவர்களைத் தவிர மேலும் 3 குழுக்களுக்கு பயிற்சியளித்து தயாராக வைத்திருந்தது.ஒரு குழுவில் 3 பேர்வீதம் மொத்தம் 9 பேர் தயாராக இருந்தனர்.இந்த 9 பேரின் பிறந்த நேரம்,பிறந்த தேதி, பிறந்த நகரம்-இவற்றுடன் நாசா நிர்வாகிகள் கேரளாவிற்கு நேரில் வந்து பிரபலமான ஜோதிடர்களிடம் ஜோதிட ஆலோசனை கேட்டறிந்தனர்.அந்த நம்பூதிரி ஜோதிடர்களின் வழிகாட்டுதலின் படி ஆர்ம்ஸ்ட்ராங் குழுவை நிலாவிற்கு அனுப்பினர்.
ஒருவர்- மனித உடலோடு விண்வெளிப்பயணம் சென்று திரும்ப வேண்டுமானால் அவரது பிறந்த ஜாதகத்தில் கேது உச்சமாகவும், உடன் செவ்வாய் ஆட்சியாகவும் இருக்க வேண்டும்.

உலக வரலாற்றில் ஜோதிடத்துறைக்கு என கேபினட் மந்திரி பதவியை உருவாக்கியவர் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் ஆவார்.அவர் தனது ஆஸ்தான ஜோதிடரை தனது மந்திரி சபையில் 2 ஆண்டுகள் வரை மந்திரியாக நியமித்திருந்தார்.
உலக வரலாற்றில் கட்சிஆரம்பித்த வெறும் 9 மாதங்களில் ஆட்சியைப்பிடித்ததும் என்.டி.ராமாராவ் அவர்கள் மட்டுமே!
அதற்கு முழு முதற்காரணங்களில் ஒன்று கட்சியை ஆரம்பித்த நேரமே!


சில ஆன்மீக மரபுகள்-எப்படி சாப்பிடுவது?

சில ஆன்மீக மரபுகள்

ஒருவன் தனது வீட்டில் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் அவனது கல்வி வளரும்.மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு செல்வம் பெருகும்.வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு நோய் வளரும்.தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டுவந்தால் அவனுக்கு அழியாத புகழ் உண்டாகும்.
இது எப்படி சாத்தியம்?
கிழக்கு திசை இந்திரனுக்கு உரியது.மேற்கு செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமிக்கு உரியது.வடக்கு சிவனுக்கு உரியது.தெற்கு யமனுக்கு உரியது.

தனது வீட்டைத்தவிர,ஒருவன் தனது உறவினர் நண்பர்கள் வீட்டில் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால் அந்த நண்பன் அல்லது உறவினர் நட்பு கெட்டு-பகையாகிவிடும்.