RightClick

நமது ஆன்மீக ரகசியங்கள்


மனக் கவலை தீர-திரு.சிவமாரியப்பன் அவர்கள் உபதேசித்தது:தினமும் இரவு உணவிற்குப் பிறகு,ஒரு கரண்டி ரோஜா குல்கந்து சாப்பிட்டுவிட்டு,250 மி.லி.காய்ச்சிய பசும்பாலை சாப்பிட்டு வந்தால் மனக்கவலைகள் தீரும்.
எக்காரணம் கொண்டும் சூரிய அஸ்தமானம் ஆன பின்பு
தயிர் சேர்த்த உணவுகள் சேர்க்கக் கூடாது.அப்படிச் சேர்த்தால் லட்சுமி கடாட்சம் போய்விடும்.
நன்றி:ஜோதிடபூமி மே,2006

வீட்டில் துளசி செடியும்,மல்லிகைச் செடியும் வளர்ப்பது பணவரவை அதிகரிக்கும்.

உணவில் புளி சேர்த்தால் பொறாமை உணர்ச்சி அதிகரிக்கும்.பட்டை சோம்பு பிரிஞ்சா இலை சேர்த்தால் கட்டுக்கடங்காத காமம் கொந்தளிக்கும்.

உப்பு,வெங்காயம்,சிறுகீரையால் செய்த உணவுகள் காமத்தை கூட்டும்.
சிறுகீரைத்தண்டு, பெருங்கீரைத்தண்டு காமத்தைக் குறைக்கும்.

பெண்களின் மாங்கல்ய தோஷத்தைப் போக்குவதற்கு சக்திவாய்ந்த பரிகாரம் மகாலட்சுமி பூஜை செயவதே!

ஒரு கோடி பெண் பிறப்புகளில் ஒரு பெண்ணுக்கு
10 வயதிலேயே மாதத்தில் 20 நாட்கள் தீட்டு வரும்.அதை சரிசெய்யும் மூலிகை 24 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கும். அதுவும் கொல்லிமலைக் காடுகளில் மட்டுமே விளையும்.
கருதோஷ நிவாரண மூலிகை என்று ஒரு மூலிகை உண்டு.இந்த மூலிகை 240 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே முளைக்கும்.இதன் இலையை உற்று நோக்கினால் அதன் நடுப் பகுதியில் ஒரு குழந்தை பெண்கருப்பையில் படுத்திருப்பது போல தோற்றமளிக்கும்.
இதை ஒரு பெண் பாலில் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் அவள் மலட்டுத்தன்மை நீங்கும்.
ஆரோக்கியமான குழந்தைகள் 100 வரை பெறும் வலிமையடைவாள்.50 வருடங்களாக கருத்தரிக்காத பெண் கூட கருத்தரிக்கும் பாக்யம் பெறுவாள்.
ஆண் குழந்தை வேண்டும் என விரும்புபவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையிலும், பெண் குழந்தை வேண்டும் என விரும்புபவர்கள் பவுர்ணமி அன்றும் இம்மூலிகையை பால்/தேனில் கலந்து உண்டு உறவு கொண்டால் போதும்.
ஆண்மை இழந்தவர்கள் மீண்டும் ஆண்மை பெறவும்,அரவாணிகள் தாங்கள் விரும்பும் வகையில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாற குறிப்பிட்ட திதி,நட்சத்திரம் உள்ள நாளில் இந்த் மூலிகையை சாப்பிடவேண்டும்.
நன்றி:அகத்தியர் ஜீவநாடி வழியே அகத்தியர் அவர்கள்

ஒவ்வொருவரும் காப்பாற்ற வேண்டிய ரகசியங்கள்

இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் 9 விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்:
அவை
1.தனது வயது
2.பணம் கொடுக்கல்-வாங்கல்
3.வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு
4.மருந்துகளில் சேர்க்கப்படும் பொருட்கள்(மூலிகைகள்)
5.கணவன் மனைவியின் காம அனுபவங்கள்
6.செய்த தான தருமங்கள்
7.கிடைக்கும் புகழ்
8.சந்தித்த அவமானங்கள்
9.பயன்படுத்திய மந்திரம்

தமிழ்நாடு ஆன்மீக ஜோதிட எழுத்தாளர்கள் பேரவை


தமிழில் ஆன்மீகம்-ஜோதிடம் சார்ந்துள்ள பேச்சாளர்கள்,எழுத்தாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது பல துறவிகள்-மகான்களின் விருப்பமாகும்.எனவே, நீங்கள் ஆன்மீக எழுத்தாளராகவோ-பட்டிமன்றப்பேச்சாளராகவொ
அல்லது ஜோதிட எழுத்தாளராகவோ-பேச்சாளராகவோ
இருந்தால் உங்களைப் பற்றி பின்வரும் முகவரியில் பதிவு செய்து கொள்ளவும்
ஆன்மீக-ஜோதிட எழுத்தாளர் பேரவை
ஞானமணி
கே.ஆர்.எஸ்(பத்திரிகையாளர்)
567,ஹவுசிங் யூனிட்,சிங்காநல்லூர்
கோவை-641005.
செல் எண்:091-98941-76811.
ஆதாரம்:ஜோதிடபூமி-ஆகஸ்டு 2006
மதுரையிலிருந்து வெளிவரும் ஜோதிட மாத இதழ்


மகரிஷி மகேஷ்யோகியின் ஆழ்நிலைதியானம்


மகரிஷி மகேஷ்யோகி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நமது இந்து மதத்திற்குச் சொந்தமான ஆழ்நிலை தியானத்தை உலகம் முழுக்கப் பரப்பிய இந்துத் துறவி.
இன்றைய தினசரி வாழ்வில் நிம்மதியாக வாழ்வது என்பதே-கோடீஸ்வர வாழ்வாகிவிட்டது.இந்த நிலையில் நாம் ஒவ்வொருவரும்-திடீர்-திடீரென டென்ஷன் ஆகிவிடுகிறோம்.இதனால் நாம்-நமது உறவுகள்-நமது நிறுவனம் ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்படைந்து விடுகிறது.அப்படி பாதிப்புகள் வராமல் இருக்க தியானம் அவசியமாகிறது.

தியானத்தில் பல வகைகள் உண்டு.உங்களுக்கு எது பொருந்துமோ அந்த தியானம் செய்யுங்கள்.தினமும் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டியது தியானம் செய்வதற்குத் தான்.
ஆழ்நிலை தியானம் தமிழ்நாட்டில் சில இடங்களில் சொல்லித் தருகிறார்கள்.பல்சுவைநாவல்-டிசம்பர் 2008 இதழில்-எழுத்துச்சித்தர் பாலகுமாரன் இந்த இதழில் ஆழ்நிலைதியானத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கியுள்ளார்.ஆழ்நிலை தியானம் கற்றுத் தரும் இடங்கள்:
1.மகரிஷித் தோட்டம்,எண்:28,டாக்டர் குருசாமி சாலை,சேத்துப்பட்டு,சென்னை-31
2.காந்தி மியூசியம்,மதுரை
இது மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலைதியானப் பயிற்சியகத்தின் தலைமையகமான நெதர்லாந்து நாட்டில் உள்ளது.


ஒருவரி ஆன்மீக உண்மைகள்

ஒரு வரி இந்துமத உண்மைகள்:பகுதி-2

அ. சில வருடங்களுக்கு முன்பு பிள்ளையார் பால் குடித்தார் அல்லவா?
அதற்கு ஆன்மீகப் பெரியோர்கள் கூறுவது என்னவென்றால் இந்தியாவிற்கு வெளியே சுவாமி விவேகானந்தர் பிறந்துள்ளார்.அவர் இந்தியாவை மையமாகக் கொண்டு ஆன்மீகப் பணிசெய்ய உள்ளார்.

ஆ.மறுபிறவி,முன் ஜென்மம்,ஊழ்வினை போன்ற இந்துமத ஆதாரங்களை மேல்நாட்டு ஆய்வாளர்கள் விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து அவை அனைத்தும் உண்மை என்று அறிவித்துவிட்டனர்.

பஞ்சமாபாதகங்களால் செய்த பாவங்கள் தீர...கொலை,கொள்ளை,கற்பழிப்பு,பொய் சொல்லுதல்,ஏமாற்றுதல்-இவை அனைத்தும் பஞ்சமா பாதகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இன்றைய கலிகாலத்தில் இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது சொல்லாமல் வாழ முடியாத அளவிற்கு நமது வாழ்க்கை அமைந்துவிட்டது.இதனால் ஏற்படும் பாவங்கள் தீர கீழ்காணும் சிவ மகாமந்திரத்தை ஒரு சிவன் கோவிலில் பிரதோஷநாளில்-பிரதோஷ நேரத்தில்- கோவிலுக்கு உள்ளே-கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து-108 முறை மனதிற்குள் ஜபிக்கவேண்டும்.
இம்மந்திரம் சிவபுராணத்தில் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.

ஓம் ஆம் கவும் சொள(Ohm aam howm sow)-உச்சரிப்பு ஆங்கிலத்தில்

இதே மந்திரத்தை தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை மற்றும் சனிப்பிரதோஷங்களில் ராமேஸ்வரம் அல்லது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி அல்லது பழமையான சிவாலயங்களில்-ஜபித்தால் நமது முற்பிறவிப்பாவங்களும் நீங்கும்.நமது முன்னோர்கள் பாவங்களும் நீங்கிவிடும்.இது அநுபவ உண்மை!!

விமானத்தைக் கண்டுபிடித்த இந்தியர்
விமானத்தைக் கண்டுபிடித்த இந்து;திரு.தால் படயே,புனே,இந்தியா.
அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் அல்ல.

உலகிலேயே விமானத்தைக் கண்டுபிடித்தது 1903 டிசம்பர் 17ல் அமெரிக்காவில் உள்ள ரைட் சகோதரர்கள் என்று உலக வரலாறு சொல்கிறது.ஆனால்,அது தவறு.
1895 ஆம் வருடத்தில் புனே அருகில் தால் படயே என்பவர் கண்டுபிடித்த விமானம் 10,000 அடிகள் உயரத்தில் பறந்தது.சுமார் 2 கி.மீ.தூரம் வரை பறந்தது.(ஆனால் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில்-14அடிதூரம் வரைதான் பறந்தது)

அடிமை இந்தியா என்பதால்,அன்றைய தினசரிபத்திரிகைகளில் கூட வராமல் பிரிட்டிஷ் அரசு பார்த்துக் கொண்டது.அதன் பிறகு,தால் படயே பிரிட்டிஷ் அரசால் அவரது கண்டுபிடிப்புடன் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டார்.அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை?ஆதாரம்:vedic world heritage,volume VII

அதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு ‘வைமானிகா சாஸ்திரம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.

இன்றும் வைமானிகா சாஸ்திரம் இந்தியா முழுக்கக் கிடைக்கிறது.அவை சமஸ்கிருதப் பாடல்களின் தொகுப்புகளாக கிடைக்கின்றன.யார் எம்.டெக்கில் ஏரோநாட்டிக் என்சியரிங்கும்,சமஸ்கிருதத்தில் எம்.ஏ.,வும் முடிக்கிறார்களோ,அவர் வைமானிகா சாஸ்திரத்தைக் கொண்டு பல புதிய ராக்கெட்டுகள்,விமான தொழில்நுட்பங்கள் கண்டறிந்து கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்.
வைமானிகா சாஸ்திரத்தில் உள்ள விமானத் தொழில்நுட்பத்திங்களில் ஒரே ஒரு விமானத்தொழில்நுட்பம் மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளது.அதுவும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.அது ரேடாரில் சிக்காத விமானம்!!!

பித்ரு பூஜையின் சக்தி

அவர்கள்:1)இறைவன்,2)பித்ரு தேவதைகள்,3)எமதர்மராஜன்,4)பித்ருக்கள்.
பித்ரு பக்திக்கு இணையானது எதுவுமில்லை.பித்ரு பூஜையைப் போல பலன் அளிப்பதும் வேறு எதுவும் இல்லை.
நன்றி;குமுதம் ஜோதிடம்-வார ஜோதிட இதழ் 1.11.2002 பக்கம் 14.
1.பவுர்ணமி அல்லது அமாவாசை அல்லது கிரகண நேரம் அல்லது தமிழ் வருடப் பிறப்பு அன்று ஒரு மந்திரத்தை கடல் அல்லது ஆற்றில் நீராடி-ஈர உடையுடன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று ஒரு முறை ஜபித்தால்-
2 கோடி X 100 கோடி முறை ஜபித்ததற்கான பலன் நமக்கு கிடைக்கும்.
அதாவது,நாம் உள்பட 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் உடனே தீர்ந்துவிடும்.

2.ஆறுதல் சொல்வதும் ஒரு விதபுண்ணியமே!

3.ஜோதிடர்களில் பிராடுகள் உண்டு.ஒரிஜினல் ஜோதிடர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.தட்சினை கொடுக்குறதைக் குடுங்க என்று சொல்லுவார்.அல்லது 200-300 கேட்பார்.

4.ஜோதிடர்களில் கல்யாண ஜோதிடர் என்றும்,தொழில் விருத்தி ஜோதிடர் என்றும்,மரண ஜோதிடர் என்றும் பெயர் எடுத்தவர்கள் உண்டு.விசாரித்துக் கொள்வது நமது பொறுப்பு.

பித்ரு பூஜையின் அவசியம்


பித்ரு பூஜை அசுப காரியம் அல்ல! அவசியம் செய்ய வேண்டிய சுப காரியம்-ஒவ்வொரு மனிதருக்கும்;
கேள்வி:காலம் சென்ற எனது மாமனாருக்கு வருடா வருடம் தவறாமல் திதி கொடுத்து வருகிறார் என் கணவர்.நான் ஒவ்வொரு அமாவாசை அன்றும்,என் மேல் எனது அப்பா போல பாசம் செலுத்திய என் மாமனாருக்காக வீட்டில் அன்னம் வைத்து படையலிட்டு,ஓர் அதிதி(விருந்தாளி)முதலில் உணவளித்துவிட்டு,வ்ஸ்திர தானமும் அளித்து வருகிறேன்.ஒரு சிலர்,சுமங்கலிகள் இவ்வாறு செய்வது தவறு என்று கூறி தடுக்கின்றனர்.என்ன செய்வது?
திருமதி ஜெயலட்சுமி,அடையாறு

பதில்: (திரு.ஏ.எம்.ஆர்.அவர்கள்)பித்ருக்களை பக்தியுடன் பூஜிப்பது பற்றி பலர் பலவிதமாக பேசுவதற்குக் காரணம் பித்ருபூஜை என்பது அசுப காரியம் எனப் பலரும் நினைப்பதுதான்.இது முற்றிலும் தவறான கருத்தாகும்.
இறைவனை பூஜிப்பது எந்த அளவிற்கு புனிதமானதோ,எந்த அளவிற்கு அவசியமானதோ அந்த அளவிற்கு புனிதமான கடமை ஆகும்.பித்ரு பூஜை என்பது!
தன் பிள்ளைக்குத் தங்களை திருமணம் செய்து கெஒண்டதன் மூலம் தங்களுக்கு ‘சுமங்கலி’ என்ற அந்தஸ்த்தினை அளித்தவரே அவர்தான்.ஆதலால்,தாங்கள் அமாவாசை அன்று தங்கள் மாமனாரை நினைத்து செய்துவரும் பூஜையை எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம்.பித்ரு பூஜைக்குப் பிரதியாக நமக்கு ஆசி வழங்கி அனைத்து நன்மைகளையும் அளிப்பவர்கள் நால்வர் எனப் புராதன நூல்களும்,ஸ்ரீமத் மகாபாரதமும்,கருடபுராணமும் விளக்கி உள்ளன.