RightClick

ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா - 2019
ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 


தென்னாடுடைய சிவனே போற்றி !!


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்

மூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ  முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா இந்த ஆண்டு அதாவது விளம்பி  வருடம் பங்குனி மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை திரிதியை திதியும்  பரணி நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் (07.04.19) மாலை 06 மணிக்குத் துவங்குகிறது. இந்த சிறப்புமிக்க கோவில் கடந்த எட்டு வருடங்களாக நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களால் பராமரிக்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக ஓன்பது ஆண்டாக நமது ஆன்மீகக்கடல் குழுமம் இணைந்து வரும் ஆயிரக்கணக்கானப் பக்தர்களுக்கு  அன்னதானமும்ஆடை தானமும்  வழங்க இருக்கிறோம். 
 20 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்,பக்தைகள் விரதம் இருந்து இங்கு  தீ மிதித்து பூ இறங்குவார்கள்.

முன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வரும் ;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் மாலை அணிந்தும்.முளைப்பாரியும் வளர்த்து  தங்களது பிரார்த்தனைகளுக்காக  அம்மனை   வழிபடுவார்கள்.
தொடக்கம்:

கடந்த 50 ஆண்டுகளில் முத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டுவிரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி வருகின்றன;அதனால்,இந்த 51  ஆம் வருடத்தில் சுமாராக 1000 பேர்கள் பூ இறங்க முத்துமாரியம்மனின் அருளைப் பெற இருக்கிறார்கள் இந்த வைபவம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். இதை நமது குருநாதர் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். நமது ஆன்மீகக்கடல் குழுமம் சார்பாக வருகின்ற வியாழக்கிழமை (04.04.19)  அன்னதானம் நடக்க இருக்கிறது. இதில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகிற அன்பர்கள் நமது வலைதள மின்அஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.ஓம்   சிவசிவ   ஓம்!

ஓம்   சிவசிவ   ஓம்!!

ஓம்   சிவசிவ  ஓம்!!!நினைத்ததை நிறைவேற்றும் - மந்திர விபூதி
ஓம் ஹம் கணபதியே நமஹ 

திருநீறு (விபூதி) :


நீறு இல்லாத நெற்றி பாழ், சிவலிங்கம் இல்லாத ஊர் பாழ் என்பது திருநீறு பற்றிய பழமொழி ஆகும் 


மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை எல்லாம் நீறச் செய்து (வலுவிழக்கச் செய்து) வாழ்வில் உயர்நிலை அடையச் செய்வதால் திருநீறு என்று அழைக்கப்படுகிறது. 


திருநீறு நம்மால் விபூதி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானின் அருட்சின்னமாகக் கருதப்படுகிறது. இது எல்லா நலன்களையும் வழங்கக் கூடியது. 

விபூதி தத்துவம்:
எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தைஉணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது 


ஐந்து வகை திருநீறு:

1. இரட்சை 

2. சாரம் 

3. பஸ்மம் 

4. பசிதம் 

5. விபூதி 
இரட்சை:


சுமனை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது ஈசானிய முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது சிவப்பு நிறத்தினை உடையது. இப்பசுவின் சானத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு இரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.சாரம்:


சுசீலை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது தற்புருச முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு சாரம் என்று அழைக்கப்பெறுகிறது.பஸ்மம்:


சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது.பசிதம்:


பத்திரை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது வாமதேவ முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்பெறுகிறது.விபூதி:


தந்தை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். இப்பசுவானது சிவனது சத்தியோசாத முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது கபில நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது. திருநீறினைத் தயார் செய்யும் முறை:
ஆரோக்கியமான பசு சாணத்தை சுத்தமான இடத்தில் வைத்து அதனுடன் பசும் பால், தயிர், நெய், பன்னீர், கோமியம் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து கைகளால் பிசைய வேண்டும். பின் உருண்டைகளாக திரட்டி ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு உருண்டையிலும் சிறிய பள்ளத்தை உண்டாக்க வேண்டும்.இவ்வுருண்டைகளுக்கு முட்டகம் என்று பெயர். பின்னர் வயல்வெளியில் சம்பா நெற்பதரைக் கொட்டி அதனுள் முட்டகங்களை அடுக்கி வைத்து அவற்றின் மேலும் நெற்பதரை பரப்பி நெருப்பு வைக்க வேண்டும். 

இவ்விதம் வைக்கப்பட்ட நெருப்பானது மூண்டு கொண்டே இருக்கும். ஒரு வாரம் சென்ற பார்த்தால் முட்டகங்கள் எல்லாம் நன்றாக வெந்து வெண்மைநிற உருண்டைகளாக இருக்கும். 
பின் வெண்மையாகி விடும், முட்டகங்களை பொடி செய்ய வேண்டும். பொடி செய்யப்பட்ட திருநீறினை சல்லடையில் இட்டு சலித்து பின் அதனை வெள்ளைத் துணியில் போட்டு சலித்து எடுக்க வேண்டும்.இதனை பன்னீர் தெளித்து காற்றாட விடவேண்டும். இத்துடன் உலர்ந்த மல்லிகை, பாதிரி, பிச்சி போன்ற மலர்களைப் போட்டு வைக்கவும். 
 மந்திர விபூதி:

"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். 

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.


 


மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும். இவ்விளவு நன்மை தரும் விபூதியை ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு அதற்குரிய மந்திரத்தை ஜபித்து அதன் சக்திகளை இன்னும் பன்மடங்கு அதிகரித்து தருவது தான் மந்திர விபூதியாகும். இந்த மந்திர விபூதி தான் நம்முடைய குருநாதர் அய்யா சகஸ்கரவடுகர் அவர்களை சந்திக்கும் பொது நமக்கு வழங்கப்படும் மந்திர விபூதியாகும் .இதன் மூலம் நம் குருநாதரை சந்தித்தவர்கள் எல்லாம் வாழ்வில் நல்ல பயனடைந்து வாழ்வில் மூன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இப்படி சக்திவாய்ந்த மந்திர விபூதி நம்மை சந்தித்தவர்களுக்கு மட்டும் அல்லது அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்றும் பயனடைய வேண்டும் நமது குருநாதரின் விருப்பமாகும். மந்திர விபூதி வேண்டும் என்கிற நம் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் நமது வலைதள மின் அஞ்சலுக்கு உங்கள் நட்சத்திரம், முழுமுகவரி மற்றும் தொலை பேசி எண்ணையும் (aanmigakkadal@gmail.com)மின் அஞ்சல் செய்யுங்கள். முந்துங்கள் முதல் சுற்று 27 நட்சத்திரங்களின் மந்திர விபூதி மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. 

பயன்படுத்தும் முறைகள் :


இந்த மந்திர விபூதியை வீட்டில் தாமிர பாத்திரம் அல்லது தட்டு , காந்தமில்லாத வெள்ளி பாத்திரம் அல்லது தட்டில் வைக்கலாம் . 


வெளிஊறு செல்லப்பவர்கள் பட்டுத்துணியில் எடுத்து வைத்து செல்லாம்.

வெளியில் செல்பவர்கள் தங்கள் காரியம் சித்தியடைய மந்திர விபூதியை நெற்றியில் பூசிவிட்டு பின் பட்டர் தாளில் வைத்து எடுத்து செல்லலாம். 

இந்த மந்திர விபூதியை நீங்களும் உங்கள் குடும்பத்தார்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும் , வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது.கிடைக்கும் பலன்கள்:
தங்களின் நேர்மையான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறும் . வேலை இல்லாதார்களுக்கு வேலைகிடைக்கும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும் உங்களின் அனைத்து விதமான நோய்களும் குணமாகும் காரிய சித்தியாகும் தீய சக்திகள் உங்களை நெருங்காது. 
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். 

உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். 

பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். 

இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார். கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே! 


திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும், 

திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. 
ஒரு முறை பாவங்களை செய்த ஒருவன் இறந்துபோனான். அவனுடைய வாசலில் இருந்த சாம்பலில் புரண்டு எழுந்த நாயொன்று அவன் மீது நடந்து சென்றது. அப்போது அந்த நாயின் கால்களிலிருந்த சாம்பாலனது அவனுடைய உடலில் பட்டது. அவன் உடலில் திருநீறு இருப்பதை அறிந்த யமதூதர்கள் விலகினர், அவனுடைய உயிரினை சிவகணங்கள் கையிலாயத்திற்கு எடுத்து சென்றன. இந்த கதையானது திருநீறு அணிவதால் அவனுடைய பாவங்கள் போகின்றன என்பதை மக்களுக்கு கூறுகிறதாகும். 
ஓம் சிவ சிவ ஓம்

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம்

சொர்ணபைரவய நமஹ - சிறப்பாக நிறைவுற்றது கிரிவலம் -2018

  ஓம் சொர்ணகர்ஷ்ண பைரவாய  நமஹ ! 


தென்னாடுடைய சிவனே போற்றி !!


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!


ஓம் திரு அண்ணாமலையாரே போற்றி ! 

      
ஓம் தவத்திரு உண்ணாமலை தாயே போற்றி !இரட்டை விநாயகர் சன்னதி : 

அன்பர்கள் நமது அய்யாவின் வருகையினை எதிர் பார்த்து ' இரட்டை விநாயகர் கோவில்' அருகில் காத்துக்கொண்டு இருந்தனர். அய்யாவின் வந்தவுடன்., எல்லோரையும் வணங்கி விட்டு நமக்காக ஏற்பாடு செய்யப்ட்டிருந்த பூஜையை நடத்தி அந்த திருநீரை அனைவருக்கும் வழங்கிவிட்டு நமது கிரிவலம் தொடங்கியது.


விநாயக பெருமான் ஆசி வாங்கி  தந்ததோடு மட்டும் அல்லாமல் அவர்களும் ஆசிர்வதித்து விபூதி மற்றும் பிரசாதம் வழங்கி "சொர்ண ஆகர்ஷண கிரிவலத்தினை தலைமை பொறுப்பேற்று வைத்தார். இப்படி இனிதே தொடங்கியது நமது கிரிவல நிகழ்ச்சி. 


"ஓம் சிவசிவ ஓம்" என்னும் பிரணவத்துடன் கூடிய லோக சூட்சும மந்திரம்ம் சத்தத்துடன்  கிரிவலம்  தொடங்கியது. அன்பர்கள் இயற்கையின் தன்மைக்கு ஏற்றார் போல தம்மை மாற்றிக்கொண்டு நமது அய்யாவின் திருவடி தொடர  ஆரம்பித்தனர்.


தேரடி முனீஸ்வரர் அய்யா ஆலயம் : 

திரு அண்ணாமலையில் எங்கும் நமது மஞ்சள் நிற வேஷ்டி - சேலைகள் தெரிய ஆரம்பித்தது. மக்கள் நம் கூட்டதை உற்று நோக்க ஆரம்பித்தனர். ஓம் சிவ சிவா ஓம் முழக்கத்துடன் நாங்கள் ஆலயத்தை அடைந்தவுடன் ., அங்கும் நமக்கு சிறப்பு செய்யப்பட்டு நமக்கு திருநீரு வழங்கி நம் கிரிவலத்தை தொடர வைத்தார் நம் குருநாதர்.


இந்திர லிங்கம் :
இந்திர லிங்கத்தில் அய்யா ஆசி வழங்க. நாங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தினோம். எங்களது பயணம் தொடர ஆரம்பித்தது. அக்னி லிங்கம் : 


இங்கு நமக்கு தோன்றும் எதிர்மறை எண்ணங்களை தீயில் போட்டு எரிக்கும் வண்ணம் - அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் நமக்கு அக்னி லிங்க ஆசி வழங்கினார்கள். சில சூட்சுமங்களை நாம் நமது வலைத்தளத்தில் எழுத இயலாது . இருந்தாலும் அய்யா சொல்லிற்கு இனங்கி  இந்த குறிப்பு சொல்லப்பட்டது. வந்தவர்கள் யாவரும் பாக்கியவான்களே. இதன் அர்த்தம் பின் வரும் காலங்களில் கட்டாயம் புரியும் என்பது அய்யாவின் சொல் .    
 "ஓம் சிவசிவ ஓம் !! .குறிப்பு 

நம் குருநாதர் கடந்து சில மாதங்களாக உடல் நல குறைவினால் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்ததது. அதனாலயே நமது வலைத்தளமும்., உங்களுக்கான சரியான தகவலை தெரிவிக்க இயலவில்லை. இது சில தவறான புரிதல்களை தவிர்பதற்காகவும், சரியான தொடர்பு நமக்குள் இல்லாது போனது உண்மை., மன்னிக்கவும். இருப்பினும் உங்கள் அன்பாலும் மற்றும் இறைவன் அருளாலும் நம் குருநாதர் நமக்காக நலம் பெற்று வந்து ., இந்த கிரிவலம் நடந்தது. அதனாலேயே நமது வற்புறுத்தலின் காரணமாகவே நமது அய்யா அக்னி லிங்கத்திலிருந்து ஆட்டோவில் அழைத்து செல்லப்பட்டார். எம லிங்கம் :


நம் மனதில் வரும் வீண் மரண பயம் மற்றும் நம் மனதில் இருக்கும் அர்த்தமற்ற எமன் போன்ற தீவினைகளையும் நீக்கி அருள்வார் இந்த லிங்கபகவான்.

நிருதி லிங்கம் :

கிரிவல பாதையில் உள்ள நான்காம் லிங்கம் ஆகும். நற்பேறு-புகழ் மற்றும் நல்ல உடல் நலம் தருவது என்பதால் இவை யாவும் நாம் பெற  வேண்டும்.

 "யாதும் ஊரே யாவரும் கேளீர்" - என்ற கனியன் பூங்குன்றனார் அவர்களின் கூற்றுப்படி அன்பர்கள் ஒவ்வொருவரும் மற்றவரையும் தம்மை போல எண்ணி செல்லும் பொருட்டு  நம் கிரிவலம் நடந்தது. .வீதிகள் தோறும் சிவ முழக்கங்கள், 

"ஓம் சிவசிவ ஓம்" 

"ஓம் சிவசிவ ஓம்"

"ஓம் சிவசிவ ஓம் " 
வருண லிங்கம் :

ஆத்ம தாகம் தீர்க்கும் வண்ணம் வருணனை வரவழைத்து நம்மை ஆட்கொள்ளும் பண்பின் பிரதிபலிப்புதான் இந்த  லிங்கம். இங்கு உங்கள் வாழ்க்கையும் நிச்சயம் செல்வ மழைவந்து உங்கள் துயர் மறையும். 
அண்ணாமலையாரின் ஆசிகள் பலவாறு செய்து எம்மை ஆட்கொண்டமைக்கு நன்றி - சிவசிவ சிவசிவா


வாயு லிங்கம் : 

வாயு - காற்று ;  நம்மை சுற்றிலும் நிறைத்த அந்த காற்றின் அரசன் தான் இந்த சிவலிங்கம் ;  நமது உடலில் மேலும் சக்திகளை கிரகித்து வைத்துக்கொள்ள காற்றாகிய சிவனின் சொரூபம்தான் இது.


 'நம்பிக்கையே நல்ல மருந்து' - சகஸ்ரவடுகர்


குபேர லிங்கம் :

சொர்ண ஆகர்ஷண கிரிவலம் அல்லது குபேர கிரிவலம் இந்த லிங்கத்திடமே கோரிக்கையாக வைக்கப்பட்டது. இங்கு தான் பல வியப்பூட்டும் அதிசயங்கள் நிகழ்ந்தது ஆம் அன்பர்களே. கிரிவலத்திற்கு வந்தவர்கள் நிச்சயம் பேறு பெற்றவர்கள் தாம். 

ஈஸான்ய லிங்கம் : 


அஷ்ட லிங்கங்களுள் எட்டாவது, ஈசன்யத்தில் அமைத்தது - பற்று அற்ற நிலையினை எய்தும் பொருட்டு இந்த சிவனின் வடிவம் .

அம்மணி அம்மாள் ஜீவசமாதி 


நமது அன்பர்களுள் ஒருவர் "வரலாற்று சிறப்பு பெற்ற மேலும் ஓதுவார்களுக்கு உதவிய பைரவ சன்னதியில் இருந்து நமக்காக அய்யாவின் உத்தரவின் பெயரில் சொர்ண அபிஷேகம் செய்து அந்த சொர்ணங்களை கொண்டு அண்ணாமலைக்கு வந்தார்கள். மேலும் இந்த பைரவ தளம் சைவ சமய நால்வர்களால் போற்றி பாடப்பட்ட இடம் என்பது குறிப்படத்தக்கது. சகஸ்ரவடுகர் அவர்கள் ., ஆலய நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று அங்கு நடக்கவிருந்த நமது குருநாதரின் சிறப்புறை ஈசான லிங்க பெருமானின் அருகில் எதிரே உள்ள அம்மணி அம்மாள் அவர்களின் ஜீவா சமாதியில் நடத்த வேண்டியதாயிற்று.  இங்கு இந்த கிரிவலத்தின் சிறப்பு பற்றியும் நமது அன்பர்களுக்கு நமது விளக்கினார். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார் நம் குருநாதர். இங்கு சித்தர் பெருமாரின் படங்களும், சொர்ண நாணயமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதன் முடிவாக நமது அன்பர்களுக்கு லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது.


பூதநாராயணபெருமாள் சன்னதி 

கிரிவலத்தின் இறுதி பலனாக நமது குருவின் வழிநடத்தின் படி நமது கிரிவலம் பூதநாராயணனின் ஆலய தரிசனத்தோடு நமது கிரிவலம் முடிந்தது. 

நன்றி 


 நமது அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்கள் கூற்று படி குறித்த நாளில் குறித்த நேரத்தில் திரு அண்ணாமலையில் "  அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " சொர்ண ஆகர்ஷண கிரிவலம் (05-12-2018) மிக சிறப்பாக நடைபெற்றது. என்ன வழக்கத்துக்கு மாறாக ஈசனின் சோதனை வருண வடிவில் நம்மை சோதித்தது. குருவுடன் செல்கையில் குரு காட்டிய தெய்வம் நம்மை ஏது செய்ய இயலும்.வருகை தந்து விழாவினை சிறப்பித்த அனைத்து அன்பர்களுக்கும், ஒத்துழைப்பு தந்த காவல்துறை நண்பர்கள் மற்றும் அம்மணி அம்மாள் ஜீவசமாதி நிர்வாகத்தினர் அவர்களுக்கும் , திருவண்ணாமலை ஊர் பொதுமக்கள் மற்றும் இதில் சில அன்பர்களின் பொருள் உதவிக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி  நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்கள் சார்பாகவும், ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீக அரசு சார்பில் நன்றிகள் !!
"ஓம் சிவசிவ ஓம் !  

ஹேவிளம்பி ஆண்டின் சொர்ணாகர்ஷண கிரிவலம்-2018ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ !  தென்னாடுடைய சிவனே போற்றி !!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!அண்ணாமலையுடனமர் உண்ணாமுலையம்மையே போற்றி !!!


அதென்ன சொர்ணாகர்ஷண கிரிவலம்?நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் நமது தினசரி வாழ்க்கைக்கு பணம்  அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது, ஒரு நாளுக்கு 12 மணி நேரம் நாம் உழைத்தாலும்,நமது தேவைகளுக்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் தவிப்பவர்களே நம்மில் அதிகம்;இது போன்ற தெய்வீக ரகசியங்களை ஆன்மீகவாதிகள் அனைவருமே அல்லது பெரும்பாலானவர்கள் வலைப்பூ/இணையதளம் மூலமாக வெளியிடுகிறார்களா?அப்படியே வெளியிட்டாலும்,உரிய தெய்வீக நிகழ்ச்சிகளை தாமே தலைமை தாங்கி நடத்துகிறார்களா?இந்தப் பதிவினை வாசிக்கும்  நாம் ஒவ்வொருவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்;இதனால்,நமக்கு நியாயமான முறையில் வர வேண்டிய சம்பள உயர்வு,பதவி உயர்வு,வராக் கடன்கள்,கிடைக்க வேண்டிய பூர்வீகச் சொத்து,நமது திறமைக்குரிய சம்பளம் தரும் வேலை அல்லது தொழிலில் நாம் எட்ட வேண்டிய  இலக்குகள்,நமது உழைப்புக்குரிய அங்கீகாரம் சித்தர்களின் ஆசியாலும்,அண்ணாமலையாரின் ஆசிர்வாதத்தாலும் நம்மை வந்து சேரும்.

பதினொன்றாமாண்டு 


 நம் குரு ., பதினொன்றாமாண்டு  கிரிவல நிகழ்ச்சியை  நிறைய இடர்களை கடந்து நம்மையும்., தன்னோடு இணைத்துக்கொண்டு     ஏராளமான ஆன்மீகக்கடல்  வாசக,வாசகிகளையும் ஒருசேர வழிநடத்த உள்ளார்கள். ஒவ்வொரு வருடமும், புதியவர்கள் மற்றும் பழையவர்கள் என நம் அன்பர்கள் நம் குரு இடைவிடாது பின் தொடர்ந்து வந்துள்ளார்கள். இப்படிக் கலந்து கொள்வதன்  மூலமாக,ஏராளமான வாசக,வாசகிகள் தமது நெருக்கடியான வாழ்க்கைச் சூழல்களிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர்;விடுபட்டு வருகின்றனர்;இன்று நிம்மதியாகவும்,பொருளாதாரத் தன்னிறைவோடும்,எந்த விதக் குறையின்றியும் வாழ்ந்து வருகிறார்கள்;கிரிவலம்';

கிரிவலம் 05.12.18  புதன்கிழமை  அன்று  சரியாக அதிகாலை 7 மணியளவில் இரட்டை பிள்ளையார் கோவிலில் நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்கள் முன்னிலையில் துவங்கும். நாம் அனைவரும் சரியாக 6.00 am  அளவில் ஒன்று திரள்வோம்.? எதற்காக இந்த சொர்ணாகர்ஷண கிரிவல நாளில் பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும்?அண்ணாமலை கிரிவலம் செல்வதற்கே நமது முன்னோர்களின் ஆசியும்,நமது குல தெய்வத்தின் அருளும் தேவை;ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற ஆடையை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும் என்ற தெய்வீக விதி இருக்கிறது.இந்த மகத்தான நாளில்(05.12.18 புதன்கிழமை., நாம் பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்து நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களின் தலைமையில் கிரிவலம் செல்வதால்,நமது கடுமையான கர்மவினைகள் கரைந்து காணாமல் போய்விடும்;இந்த கர்மவினைகளாலும்,சக ஊழியர்கள்/உடன்பழகுபவர்களின் பொறாமையாலும் பல வருடங்களாக நமது வருமான அளவு அதிகரிக்காமல் இருக்கும்;இந்த தடை நீங்கிவிடும்;பணரீதியான தன்னிறைவை எட்டியவர்கள்,இந்த கிரிவலத்தில் கலந்து கொண்டால்,அவர்கள் தமது ஆன்மீக முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எட்டுவார்கள்;கடந்த ஒன்பது  ஆண்டுகளில் இந்த உண்மையை பல ஆன்மீக வாசக,வாசகிகள் உணர்ந்திருக்கிறார்கள்


? ஏன் முதல் நாளே(04.12.18 செவாய்க்கிழமை ) அண்ணாமலைக்கு வர வேண்டும்?தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருப்பவர்கள் சில மணி நேரங்களில் அண்ணாமலையை வந்தடைய முடியும்;அதே சமயம்,தமிழ்நாட்டின் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரியான நேரத்தில் இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால்,முதல் நாளே வந்து அண்ணாமலையில் தங்கிக் கொள்வது உத்தமம்.உதாரணமாக,திருநெல்வேலி,தேனி,இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலைக்கு வந்தடைய குறைந்தது 16 மணி நேரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.? அண்ணாமலையில் எங்கே தங்குவது? எனது குடும்பத்தில் இருந்து யாரெல்லாம் இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ளலாம்?திரு அண்ணாமலையாரின் கோவில் பல கோடி வருடங்களாக இருந்து வருகிறது.அண்ணாமலையாரின் பெயரிலேயே இந்த ஊரும் இருக்கிறது.தவிர,மாவட்டத் தலைநகரமாகவும் இருக்கிறது.ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சுமாராக ஒரு லட்சம் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலத்துக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்;இதனால்,இந்த ஊர் முழுவதும் மகான்களின் ஆசிரமங்கள்,மடங்கள்,திருமண மண்டபங்கள் என்று அமைக்கப்பட்டிருக்கின்றன;தவிர,தங்கும் விடுதிகளும் கோவிலைச் சுற்றிலும் ஏராளமாக இருக்கின்றன.நாள் வாடகை ரூ.100/-முதல் ரூ.5000/-வரைக்கு லாட்ஜ்களும்,நட்சத்திர விடுதிகளும் இருக்கின்றன; தாய்மார்கள் நான்காம் நாளாக இருந்தாலே கலந்து கொள்ளலாம்.நமது குடும்பத்தில் யாரெல்லாம்  பக்தி உணர்வுடன் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் அழைத்து வரலாம்;நமது இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கலாம்.? இட்லிதானம் செய்வது எப்படி?


இந்த   வருடத்தில், திரயோதசி  திதி மற்றும் சதுர்த்தி  வரும் நாளில் சொர்ணாகர்ஷண கிரிவலநாள் அமைந்திருக்கிறது.இந்த நாளில் நாம் ஒவ்வொருவருமே காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவு ஒருவர் என்று அண்ணாமலையில் அன்னதானம் செய்வது நமது அனைத்து கஷ்டங்களையும் நீக்கிவிடும்;கிரிவலப் பயண நேரம் குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும்;அதிக பட்சம் 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும்காலையிலும்,மதிய நேரத்திலும் கிரிவலப் பாதையில் நம்மால் எத்தனை சாதுக்களுக்கு இட்லி தானம் செய்ய முடியுமோ அத்தனை சாதுக்களுக்கு தானம் செய்வோம்;கூடவே,நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியை ஒவ்வொரு இட்லிதானத்துடனும் சேர்த்தே கொடுப்போம்;கிரிவலப்பாதையிலும் சில உணவகங்கள் இருக்கின்றன;எனவே,மதிய நேரத்திற்கு கிரிவலப் பாதையில் மதிய நேர அன்னதானத்திற்கு உணவு வாங்கிக் கொள்ளலாம்;அல்லது குபேர லிங்கம் வந்ததும்,நம்மில் ஒரு சிலர் ஆட்டோவில் நகருக்குள் பயணித்து உணவுப் பொட்டலங்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு வந்தும் தானம் செய்யலாம்.?எள்ளுப்பொடியைத் தயார் செய்வது எப்படி?

இன்றைய கால கட்டத்தில் மளிகைக்கடைகளில் ரெடிமேடாக எள்ளுப்பொடி கிடைக்கிறது;ஒருவர் ஐந்து இட்லிகள் சாப்பிடும் அளவுக்கு எள்ளுப்பொடியை ஒரு சிறு பையில் நிரப்பி அத்துடன் சுத்தமான நல்லெண்ணெயை கலந்து சிறு கயிற்றால் கட்டிக் கொண்டு வருவோம்;நாம் எத்தனை பேர்களுக்கு இட்லிதானம் செய்ய விரும்புகிறோமோ,அத்தனை பாலிதீன் பைகளில் எள்ளுப்பொடி+நல்லெண்ணெய் நிரப்பிக் கொண்டு வருவது அவசியம்.(நமது ஊர்களில் மதிய உணவுவாங்குவோம் அல்லவா? அதில் மோர் பாக்கெட் எப்படி கட்டப்பட்டிருக்கும்;அதே போல கட்டிக் கொண்டு வரவும்)பாரம்பரியம் மாறாத ஏராளமான குடும்பங்கள் இன்றும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றன;அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிலேயே தயார் செய்து கொண்டு வரலாம்;தனித்து வாழ்ந்து வருபவர்கள்,வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் முதலில் சொன்ன யோசனையை நடைமுறைப்படுத்துவது போதுமானது;(இட்லிப்பொடி என்பது உளுந்துப்பொடி என்பதை நினைவிற் கொள்க)ஏன் இட்லியுடன் எள்+நல்லெண்ணெய் கலந்த கலவையை தானம் செய்ய வேண்டும்?அது தெய்வீக ரகசியம்! நமது கர்மவினைகள் தீரும் ரகசியம் இதனுள் தான் புதைந்திருக்கிறது.நீங்கள் எங்கெல்லாமோ அன்னதானம் செய்திருப்பீர்கள்;அரிசி தானம்,கோதுமை தானம்,பழ தானம்,ஆடை தானம்,ருத்ராட்ச தானம்,விஷய தானம் செய்திருப்பீர்கள்.அதைவிடவும் மிகவும் சக்தி வாய்ந்தது இந்த கலவையுடன் இட்லி தானம் செய்வது!இட்லி தானம் செய்வதற்கு எங்கே வாங்குவது?04.12.18 செவ்வாய்க்கிழமையன்று மாலை நேரத்திற்குள் அண்ணமலைக்கு வந்துவிட்டாலே சரியான உணவகத்தை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.அங்கேயே கூட நாளைக் காலை எனக்கு ஐந்து இட்லிகள் கொண்ட பார்சல்கள் இத்தனை தேவை என்று கூட முன்பதிவு செய்து கொள்ளலாம்;அண்ணாமலையில் ஒரு உணவகத்தில் ஒவ்வொரு வேளையும் சமையல் செய்து முடித்ததும்,அந்த உணவுகளின் முன்பாக சைவ முறைப்படி தேவாரம் முதலான பதிகங்கள் பாடியப்  பின்னரே பரிமாறுகிறார்கள்.இதனால்,அந்த உணவகத்தில் ஒவ்வொரு உணவுப் பொருளும்(இட்லி,தோசை,பொங்கல்,புளியோதரை,மதியம் முழு உணவு) மிகுந்த சுவையுடன் இருக்கிறது.திரயோதசி திதியும்,விசாகம்  நட்சத்திரமும்,சொர்ணாகர்ஷண கிரிவலமும் சேர்ந்து ஒன்றாக வருவதால் நாம் செய்யும் இட்லி தானத்திற்கான பலன்கள் அடுத்த சில நாட்களிலேயே நம்மை வந்து சேரும்;சிலருக்கு மட்டும் சில வாரங்களில் வந்து சேரும்.? நவதானியங்களையும்,டயமண்டு கற்கண்டையும் ஏன் வாங்க வேண்டும்?நவக்கிரகங்களின் கதிர்வீச்சுக்களை ஈர்க்கும் ஆற்றல் நவதானியங்களுக்கு இருக்கின்றன;நமது கைகளால் நவதானியங்களை ஆதிசிவனின் பாதத்தில்  (அண்ணாமலை கிரிவலப் பாதையில்) தூவ வேண்டும்;நமது கைகள் பட்டு தூவுவதால்,அவைகள் நமது ஜாதகப்படி இருக்கும் கிரக தோஷங்களுடன் கிரிவலப்பாதையின் ஓரங்களில் மழை பொழிந்ததும் முளைக்கத் துவங்கும்;அவ்வாறு முளைக்கத் துவங்கியதுமே,நம்மைப் பிடித்திருந்த கிரகதோஷங்களை நாம்  தூவியிருந்த நவதானியங்கள் வாங்கிக்  கொள்ளும்; நாம் தினசரி வாழ்க்கையில் சிக்கல்கள் இன்றியும்,பிரச்னைகள் இல்லாமலும் நிம்மதியாக வாழத் துவங்குவோம்; இயற்கைஇனிப்பு, கற்கண்டு ஆகும்.அதை இன்றைய நவீன காலகட்டத்தில் மோல்டிங் மெஷின்கள் மூலமாகத் தயாரிக்கிறார்கள்;அதனால்,தற்போது கற்கண்டு வைரக்கல் வடிவிற்கு மாறிவிட்டது;இதையே டயமண்டு கற்கண்டு என்று அழைக்கிறோம்.

? நவதானியங்களையும்,டயமண்டு கற்கண்டையும் எங்கே வாங்குவது? எப்படித் தூவுவது?04.12.18 செவ்வாய்க்கிழமை  இரவு 9 மணிக்குள் அண்ணாமலையை நாம் வந்தடைந்து விட்டால்,அண்ணாமலையிலேயே நவதானியங்களையும்,டயமண்டு கற்கண்டுகளையும் வாங்கிக் கொள்ளலாம்.சில பல வேலைகளால்,நம்மால் 05.12.18 புதன் கிழமை காலையில் நேரடியாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்பவர்கள் அவரவர் ஊரிலிருந்தே இவைகளை வாங்கிக் கொண்டு வரவும்.அக்னிலிங்கம் கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் இரண்டாவது லிங்கம் ஆகும்;இதைக் கடந்ததும்,நகர்ப்பகுதி நிறைவடைந்துவிடும்;மலையும் காடும் சூழ்ந்த பகுதி துவங்கும்;இங்கிருந்து எட்டாவது லிங்கமான(தற்போது ஒன்பதாவது! சில ஆண்டுகளுக்கு முன்பு குபேர லிங்கத்திற்கு சற்று முன்பாக ஒரு வயல்வெளியில் சந்திர லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது) ஈசான லிங்கம் வரையிலும் சாலையோரம் அமைந்திருக்கும் முட்புதர்களில் தூவ வேண்டும்;கொட்டக் கூடாது;இரு கைகளால் தூவிக் கொண்டு வருவது நன்று;சிறிது சிறிதாகத் தூவி வருவதே நன்று.? கிரிவலத்தின் போது செருப்பு அணிந்து நடக்கலாமா?செருப்பு அணியாமல் நடப்பதே நன்று.இதில் விதிவிலக்கும் உண்டு.மழைக்காலமாக இருப்பதால்,குடை,ரெயின்கோட்,(வயதானவர்கள்,நோய் உள்ளவர்கள்)உரிய மருந்துகளுடன் பயணிப்பது அவசியம்;


?கிரிவலத்தில் மட்டும் கலந்து கொள்ளலாமா?

கிரிவலம் மதியம் 2 மணிக்குள் நிறைவடைந்துவிடும்;பிறகு,மாலை  அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் வழிபடலாம்,  அதில் கலந்து கொண்டு  ஓம் சிவ சிவ ஓம் என்ற மந்திரங்களை ஜபிப்பது நன்று;கூடவே,நாம் மட்டும் உபதேசம் பெற்ற சிவமந்திரங்களையும் அங்கே ஜபிப்பது அவசியம்.விசாகம்   நட்சத்திரமாக இருப்பதால்,நமது மந்திர ஜபத்தின் பலன்கள் விரைவாக ஆதிசிவனைச் சென்றடையும்;நாம் அமர்ந்திருப்பதே ஆதி சிவனின் பாதத்தில்(அண்ணாமலையாரின் கோவிலில்)! இதனால் விரைவான சிவனருளும்,சொர்ணாகர்ஷணமும் நமக்குக் கிட்டும்;( கிழக்குக்  கோபுர வாசலில் இரவு நேர அன்னதானத்தை முடித்துவிட்டு இரவு 7 மணிக்குள் அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுவிடலாம்;இரவுநேர அன்னதானத்திற்கு சைவ உணவாக நம்மால் முடிந்ததை வாங்கிக் கொடுத்துவிட்டுப் புறப்படலாம்) பிறகு இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் பள்ளியறை பூஜையிலும் கலந்து கொள்வது அவசியம்.இத்துடன் சொர்ணாகர்ஷண கிரிவல நிகழ்ச்சிகள் நிறைவடையும்.வியாழக்கிழமை  இரவு அல்லது வெள்ளி  அதிகாலையில் நேராக நாம் வாழ்ந்து வரும் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.வேறு எந்தக் கோவிலுக்கும்,யார் வீட்டிற்கும் செல்லக் கூடாது.(சிலருக்கு வியாழக்கிழமை இரவே பேருந்து/ரயில் கிட்டாமல் போகலாம்;அவர்கள் அன்று  இரவு அண்ணாமலையில் தங்கிவிட்டுப்போவது நன்று.இதன் மூலமாக பலன்கள் வீணாகாது)

ஓம் சிவ சிவ ஓம்

   

ஓம் சிவசிவ ஓம்ஓம் சிவசிவ ஓம்